சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் சு யுன் என்ற பெண், 2016-ம் ஆண்டு விடுமுறையில் இருந்தபோது திபெத்திய மாஸ்டிஃப் நாய்க்குட்டி என்று நம்பி, ஒரு குட்டியை வாங்கி வந்துள்ளார். அடர்த்தியான முடியுடன் அழகாக இருந்த அந்தக்குட்டி, இரண்டு வருடங்கள் கழித்து சுமார் 250 பவுண்டுகள் (தோராயமாக 114 கிலோ) எடையுடன் இரண்டு கால்களில் நடக்க ஆரம்பித்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அது அழிந்து வரும் வகையைச் சேர்ந்த ஆசிய கறுப்புக்கரடி (Asiatic Black Bear) என்பதைக் கண்டறிந்துள்ளனர்.திபெத்திய மாஸ்டிஃப் நாய்வினோத பழக்கம்; டயப்பர் அணியும் தந்தை; குழந்தைகளைப் பார்க்க தடை விதித்த நீதிமன்றம்!
திபெத்திய மாஸ்டிஃப் வகை நாய்கள் ஆசிய கறுப்புக் கரடியைப் போலவே கறுப்பு - பழுப்புநிற கோடுகளுடன் கூடிய பெரிய நாய்கள். அவை 150 பவுண்டுகள் எடை வரை அதாவது தோராயமாக 69 கிலோ இருக்கும். திருமதி யுன், சீன செய்தி நிறுவனத்திடம் அளித்துள்ள பேட்டியில் தனது நாய்க்குட்டி தீராத பசியுடன் இருக்கும்போது தான் தாக்கப்பட்டதாகவும், அது தினமும் இரண்டு கூடை பழங்கள் மற்றும் இரண்டு பக்கெட் நூடுல்ஸை உணவாக உண்டதாகவும் கூறியுள்ளார்.
அதன் பிறகே, தான் வளர்ப்பது விநோத விலங்கு எனச் சந்தேகித்ததுடன், அது ஆசியக் கறுப்புக்கரடி என்பதைக் கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார். காட்டு விலங்குகளைத் தனிப்பட்ட முறையில் வீடுகளில் வளர்ப்பது சட்ட விரோதமானது என்பதை உணர்ந்த அவர், உடனடியாக அதிகாரிகளை அணுகி நடந்ததைக் கூறியுள்ளார். பின்னர் அதிகாரிகளால் அரியவகை கரடியாக கண்டுபிடிக்கப்பட்டுப் பாதுகாப்பான முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.ஆசிய கருப்பு கரடி
நியூயார்க் போஸ்ட் செய்தியின்படி, தாங்கள் கைப்பற்றியபோது கரடி 400 பவுண்டுகளுக்கு மேல் எடை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விநோதமானக் கதை, முதன்முதலில் 2018-ல் வெளியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் மீண்டும் வைரலாகியுள்ளது.
http://dlvr.it/SkLWWP
Saturday, 4 March 2023
Home »
» ஆசையாக வாங்கிய திபெத்திய மாஸ்திஃப் நாய்... உரிமையாளருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!







0 comments:
Post a Comment