அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ், சமீபத்தில் காஷ்மீர் பத்திரிகை சுதந்திரம் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, காஷ்மீர் ஊடக நிறுவனங்களை மிரட்டுதல் போன்ற செயல்பாடுகளால் ஜம்மு - காஷ்மீரில் தகவல் வெற்றிடத்தை உருவாக்குகிறது.America
காஷ்மீரில் பயன்படுத்தப்படும் தகவல் கட்டுப்பாட்டு முறையை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தி அதில் வெற்றி பெற்றால், பத்திரிகை சுதந்திரம் மட்டுமல்ல, இந்திய ஜனநாயகமே ஆபத்தில் இருக்கும் சூழல் உருவாகும்" என்று குறிப்பிட்டிருந்தது.
இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தன் ட்விட்டர் பதிவில், "இந்தியா மீதும், நம் பிரதமர் மோடி மீதும் வெறுப்பை வளர்க்கும் சில வெளிநாட்டு ஊடகங்கள், நமது ஜனநாயகம் குறித்து, நீண்ட காலமாக திட்டமிட்டு பொய்களைப் பரப்ப முயன்றுவருகின்றன. இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் மற்ற அடிப்படை உரிமைகளைப் போலவே புனிதமானது.மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்
இந்தியாவில் ஜனநாயகமும், மக்களாகிய நாமும் மிகவும் முதிர்ச்சியடைந்திருக்கிறோம். இது போன்ற ஒருபக்கம் சார்ந்த ஊடகங்களிலிருந்து ஜனநாயகத்தின் இலக்கணத்தைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் குறித்து நியூயார்க் டைம்ஸ் பரப்பும் அப்பட்டமான பொய்கள் கண்டிக்கத்தக்கது. இந்திய மண்ணில் அவர்களின் தீர்க்கமான நிகழ்ச்சிநிரலை இயக்க இந்தியர்கள் அனுமதிக்க மாட்டார்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.``அனுராக் தாக்கூர் பெரிய அமைச்சர்; நாங்கள் சிறிய மனிதர்கள்” - ப.சிதம்பரம் பதில்
http://dlvr.it/SkjlMR
Saturday, 11 March 2023
Home »
» காஷ்மீர் பத்திரிகை சுதந்திரம் குறித்த நியூயார்க் டைம்ஸ் கட்டுரை; அனுராக் தாகூர் கடும் கண்டனம்!






0 comments:
Post a Comment