பல பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சினிமாத் தயாரிப்பு நிறுவனங்கள், செய்தி இணையதளங்கள் என ஊடகத்துறையின் ஜாம்பவானாக விளங்குபவர் ருபெர்ட் முர்டாச்.
ஆஸ்திரேலியாவில் பிறந்து, அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ருபெர்ட்டுக்கு பரம்பரைத் தொழிலே பத்திரிகைதான். தன் தந்தையின் மறைவுக்குப் பின்னர் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார் முர்டாச். ஆஸ்திரேலியாவில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த தனது பத்திரிகையை இங்கிலாந்து, அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகளுக்கு அவர் விரிவுபடுத்தினார். அதிரடி செய்திகள் மூலம் அவரது பத்திரிகைகள் பிரபலமாகின. குறிப்பாக பிரபல நடிகர் - நடிகைகள், ராணுவ வீரர்கள் எனப் பிரபலங்களின் தொலைபேசி உரையாடல்கள் வெளியாகின.ருபெர்ட் முர்டாச்
தனது 22 வயதில் ஊடகத்துறையில் நுழைந்த முர்டாச், ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 120க்கும் அதிகமான பத்திரிகைகளை வெற்றிகரமாக நடத்திவருகிறார். பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளரான இவர் 1956-ம் ஆண்டு விமானப் பணிப்பெண் ஒருவரை மணந்தார். ஆனால், 1967-ம் ஆண்டு இருவரும் விவாகரத்தில் பிரிந்தனர்.
பின்னர் பத்திரிகையாளர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட முர்டாச், 1999-ம் ஆண்டு அவரையும் பிரிந்து மூன்றாவதாக சீனாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். அவருடன் 14 ஆண்டுகள் வாழ்ந்து, 2013-ம் ஆண்டு அவரையும் பிரிந்தார். தொடர்ந்து நான்காவதாக மாடல் மற்றும் நடிகையான ஜெர்ரி ஹாலை 2016-ல் திருமணம் செய்துகொண்ட அவர், அவரையும் விவகாரத்து செய்துவிட்டார்.
தற்போது ருபெர்ட் முர்டாச் தனது 92 வயதில் 5ஆவது திருமணம் செய்துகொள்ள உள்ளார். இதுகுறித்து அவர் தனது சொந்த செய்தித்தாளான நியூயார்க் போஸ்டில் பேட்டி அளித்துள்ளார். அதில், “நான் மிகப் பதற்றமாக உணர்ந்தேன். நான் மீண்டும் காதலிக்க பயந்தேன். ஆனால், இதுவே என் கடைசிக் காதல் என்று எனக்குத் தெரியும். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.ருபெர்ட் முர்டாச்
நாட்டுப்புற பாடகராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகியுமாக இருந்த 66 வயதுடைய Ann lesley smith என்பவரை ருபெர்ட் முர்டாச் ஐந்தாவதாகத் திருமணம் செய்துகொள்ள உள்ளார். இவர்கள் இருவருக்கும் கோடைக்காலத்தில் திருமணம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையின் இரண்டாம் பாதியை ஒன்றாகக் கழிக்க எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்" என ருபெர்ட் முர்டாச் தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/SlHCQq
Wednesday, 22 March 2023
Home »
» `இதுவே என் கடைசி காதல்'- 92 வயதில் 5-வது திருமணம் செய்யவுள்ள ஊடகத்துறை ஜாம்பவான் ருபெர்ட் முர்டாச்






0 comments:
Post a Comment