கிட்டத்தட்ட ஆயிரம் நாய்களை வீட்டில் அடைத்து வைத்து அவை இறக்கும் வரை உணவு தண்ணீர் என எதுவும் அளிக்காமல் கொடுமைப்படுத்திய தென்கொரியாவைச் சேர்ந்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன் வீட்டில் இருந்த நாயைக் காணவில்லை என அப்பகுதியில் இருந்த ஒருவன் தேடிய பொழுது இந்த கோர சம்பவத்தை கண்டுபிடித்துள்ளார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாய்கள் சித்திரவதை |தென் கொரியா``நாய் எங்கள் வாழ்வில் கலந்த ஒன்று" குடும்பத்தோடு நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய அரசு அதிகாரி!
தென் கொரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது கியாங்கி எனும் மாகாணம். இங்குள்ள யாங் பியாங்க் எனும் பகுதியில் வசித்து வந்த ஒருவர் தனது நாயைக் காணவில்லை என புகார் அளித்திருந்தார். இந்நிலையில் தனது நாயை வீடு வீடாக தேடிச் சென்ற பொழுது முதியவரின் இந்த கொடூர செயலைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்.
60 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர் நாய்கள் பராமரிப்பு மையம் என்ற பெயரில் கடந்த 2020 முதல் நாய்களை பராமரித்து வருவதாக வெளி உலகத்திற்கு சொல்லிவிட்டு, வீட்டினுள் ஏராளமான நாய்களை சுமார் மூன்று ஆண்டுகளாக கிட்டத்தட்ட 1000 நாய்களை உணவு, தண்ணீர் என எதுவும் வழங்காமல் கூண்டில் அடைத்து கொடுமைப்படுத்திய வந்துள்ளார். இதில் அந்த நாய்களைப் பராமரிப்பதற்காக அதன் உரிமையாளர்களிடமிருந்தும் கணிசமான தொகையையும் பெற்றுள்ளார்.
மூன்று ஆண்டுகளாக கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில், ஏராளமான நாய்கள் இறந்து அழுகிய நிலையிலும் அதனை அப்புறப்படுத்தாமல் விட்டதால், அதன் மேலேயே மேலும் பல நாய்கள் இறந்து பல அடுக்குகளாக நாய்களின் சடலம் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பல நாய்கள் கூண்டிலேயே அழுகி மட்கத் தொடங்கிவிட்டது.நாய்கள் சித்திரவதை |தென் கொரியாஆசையாக வாங்கிய திபெத்திய மாஸ்திஃப் நாய்... உரிமையாளருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!
மேலும், ரப்பர் பெட்டிகள், இரும்புக் கூண்டுகள், மற்றும் சாக்குப்பைகளில் நாய்களை அடைத்து வைத்து பட்டினி போட்டு அதனை இறக்கும் நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார். சில நாய்கள் அழுகிய நிலையில் ரப்பர் பெட்டிகள் மற்றும் சாக்குப்பைகளிலும் இருந்திருக்கின்றன. தொடர்ந்து 3 வருடங்களாக இப்படிச் செய்து வந்திருப்பதால், சில நாய்கள் எழுந்து நடக்கக் கூட முடியாமல் எலும்புக்கூடாய்த் தேய்ந்துள்ளது.
இதனைப் பார்த்து மிகவும் அதிர்ந்து போன அந்த நபர் உடனடியாக விலங்குகள் நல ஆர்வலர்களிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி அங்கு இறந்த நாய்களின் சடலங்கள் அகற்றப்பட்டன. மேலும் உயிருக்குப் போராடிக் கொண்டு மிகவும் மோசமான நிலையில் இருந்த 4 நாய்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் 2 நாய்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சட்டப்படி அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.நாய்கள் சித்திரவதை |தென் கொரியாதெரு நாய்கள் தொல்லை: 85 வயதில் நாய் போலக் குறைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சந்தானம்!
தென் கொரியாவில் விலங்குகளைக் கொடுமைப் படுத்துபவர்களுக்கு, சுமார் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் வசூலிக்கப்படும். கடந்த 2010 முதல் 2019 வரை 9 ஆண்டுகளாக தென் கொரியாவில் இது போன்ற விலங்குகளுக்கு நடக்கும் கொடுமைகள் அதிகரித்துள்ளன. இது போன்ற கொடுமை சம்பவங்கள் கிட்டத்தட்ட 69 லிருந்து 914 ஆக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Sl70xp
Sunday, 19 March 2023
Home »
» `சாகும்வரை உணவு, தண்ணீர் கிடையாது' 1,000 நாய்களை கொடூரமாகக் கொன்ற முதியவர்!







0 comments:
Post a Comment