அமெரிக்காவில் 65 வயது முதியவர் தன்னுடைய விசித்திர ஆசைக்காக, வங்கியொன்றில் வெறும் ஒரு டாலரைக் கொள்ளையடிக்கச் சென்ற சம்பவம் பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.முதியவர்
டொனால்ட் சான்டாக்ரோஸ் (Donald Santacroce) என்ற 65 வயது முதியவர், கடந்த திங்களன்று சால்ட் லேக் சிட்டியில் (Salt Lake City) இருக்கும் வெல்ஸ் ஃபார்கோ வங்கியில் (Wells Fargo Bank) நுழைந்திருக்கிறார். பிறகு அங்கிருக்கும் வங்கி ஊழியர்களிடம் கடிதம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
அதில், ``இவ்வாறு செய்வதற்காக என்னை மன்னியுங்கள். ஆனாலும் இதுவொரு கொள்ளைதான். எனவே, தயவுசெய்து ஒரு டாலரை எனக்குக் கொடுங்கள். மிக்க நன்றி" என டொனால்ட் சான்டாக்ரோஸ் எழுதியிருக்கிறார். வங்கி ஊழியர்களும் அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவரின் கொள்ளை நிறைவேறியதும், வங்கியிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார்கள். ஆனால், அந்த நபர் வெளியேறாமல், போலீஸை அழைக்குமாறு ஊழியர்களிடம் கூறியிருக்கிறார். என்னவென்று புரியாமல் நின்ற ஊழியர்கள் அவ்வாறே போலீஸை அழைத்திருக்கிறார்கள்.கைது
பின்னர் தாமதமாக வந்த போலீஸார், அந்த நபரைக் கைதுசெய்தனர். அதைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை போலீஸிடம் விளக்கிய அந்த நபர், ``மத்திய சிறைக்குச் செல்ல வேண்டும் என்று எனக்கு ஆசை. அதனால்தான் இவ்வாறு செய்தேன்" எனக் கூறினார்.
மேலும் இது குறித்துப் பேசிய போலீஸார், ``போலீஸ் வருவதற்கு தாமதமானது. அதோடு தன்னிடம் துப்பாக்கியில்லாததால் வங்கி ஊழியர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என டொனால்ட் கூறினார்" என்று தெரிவித்தனர்.ரூ.80,000 செலவு; ஜாக்குவார் காரில் வந்து ரூ.1,000 கொள்ளை! - காசியாபாத்தில் சிக்கிய கும்பல்
http://dlvr.it/SkfwL4
Friday, 10 March 2023
Home »
» ஒரு டாலருக்காக வங்கிக்குள் கொள்ளையடிக்கச் சென்ற 65 வயது முதியவர்; காரணம் என்ன?







0 comments:
Post a Comment