சீன அதிபராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றதையடுத்து ஜி ஜின்பிங்கை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்தியிருக்கிறார். இது மேலும் இரு நாடுகளுக்கு இடையே உண்டான உறவுகளை வலுப்படுத்தும் என்று அவர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கிச்சூட்டை நடத்திய குற்றவாளி உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தாய்லாந்தில் முன்பில்லாத அளவுக்குக் காற்று மாசுபாடு அதிகரித்து, மக்கள் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துவருகிறது. தாய்லாந்தில் சுமார் 1.32 மில்லியன் மக்கள் இந்த ஆண்டு காற்று மாசுபாட்டால் நோய்வாய்ப்பட்டனர் என்று கூறப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மதானா ராஜ் சிங் என்ற வாலிபர், அங்கு வங்கி ஊழல் மற்றும் மோசடி வழக்கில் கைதாகியிருக்கிறார்.
பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ், அவருடைய தம்பியான இளவரசர் எட்வர்டுகு 'டியூக் ஆஃப் எடின்பர்க்' பட்டத்தை வழங்கினார் . இதற்கு முன்னதாக இந்தப் பட்டத்தைப் பெற்றிருந்த மறைந்த இளவரசர் பிலிப், அவரின் மனைவியான எலிசபெத் மகாராணியின் ஆசையின்படி இந்தப் பட்டம் எட்வர்டுக்கு வழங்கப்பட்டது.
பிரேசிலிலுள்ள ஒரு பெண் தன் பக்கத்து வீட்டாரின் 'நீனா' என்ற நாய் தொடர்ந்து குரைத்துவந்ததால் அதை உயிருடன் புதைத்திருக்கிறார். பிளானுரா முனிசிபாலிட்டியில் நடந்த இந்தச் சம்பவத்தின் குற்றவாளியான 82 வயது பெண் இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நியூயார்க்கில் ராப் பாடகி GloRilla -வின் இசை நிகழ்ச்சி ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்திருக்கிறது.
ஐரோப்பா, அமெரிக்காவைத் தொடர்ந்து பெல்ஜியம், அரசு ஊழியர்களின் தொலைபேசிகளிலிருந்து டிக் டாக் செயலியை அகற்ற முடிவுசெய்திருக்கிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், 63 வயதான லி கியாங்கை, சீனாவின் நாடாளுமன்ற வருடாந்தரக் கூட்டத்தில் பிரதமராக நியமித்திருக்கிறார்.
குடியேற்றச் சட்டத்தின்கீழ் ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்களை முறையாகப் பயன்படுத்த இரு கட்சி மசோதா, அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
http://dlvr.it/Sklppr
Sunday, 12 March 2023
Home »
» சீன அதிபருக்கு புதின் சொன்ன வாழ்த்து... டிக் டாக் செயலிக்கு செக் வைத்த பெல்ஜியம் | உலகச் செய்திகள்







0 comments:
Post a Comment