இரானின் கொம் நகரில் பள்ளி செல்லும் சிறுமிகளுக்குச் சிலர் விஷம் கொடுத்ததாக சில நாள்களுக்கு முன்னர் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்நாட்டில் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்பதைத் தடுக்கவும், பெண்களுக்கான பள்ளிகளை மூட வலியுறுத்தியும் இது போன்று சிலர் செயல்படுவதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியது.
இந்த நிகழ்வை கண்டித்து இரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல நகரங்களில் மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரான்
தற்போது, பள்ளி மாணவிகள் மீது மீண்டும் விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டதாக மற்றொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகும் மாணவிகளுக்குத் தலைவலி, படபடப்பு, உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. குளோரின் போன்ற சுத்திகரிப்பு திரவத்தின் மணத்தை உணர்ந்ததாக மாணவர்களில் சிலர் கூறியுள்ளனர்.
இரானில் நவம்பர் மாதம் வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே இருக்கும், அதனால் பள்ளிகளின் வகுப்பறைகள் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி வெப்பப்படுத்தப்படுகின்றன. அந்த இயந்திரத்தில் இருந்து வெளியேறிய கார்பன் மோனாக்ஸைடு வாயுவால் மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. டெஹ்ரான், கோம் போன்ற நகரங்களில் இத்தகைய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து இரானின் நுண்ணறிவு அமைச்சகம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.இரான் மாணவிபெண் கல்வியைத் தடுக்க மாணவிகளுக்கு விஷம்?! - இரான் அமைச்சர் அதிர்ச்சித் தகவல்
பொதுமக்கள் கோபம் கொண்டு போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதன்முறையாக தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார் இரானின் மூத்த மதகுரு தலைவரான அயதுல்லா கமேனி.
இது பற்றி அவர் கூறும் போது, ``நாட்டின் பல்வேறு நகரங்களில் பள்ளி மாணவிகள் மீது நச்சு வாயுத் தாக்குதல் நடத்தப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். இந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் இதில் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது துளியும் இரக்கம் காட்டப்பட மாட்டாது” எனத் தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/SkXv46
Wednesday, 8 March 2023
Home »
» இரான்: பள்ளி மாணவிகள் மீது விஷவாயு தாக்குதல், பொதுமக்களின் கோபத்தை தொடர்ந்து மதகுரு அறிக்கை!






0 comments:
Post a Comment