Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, 30 September 2023

கோழிக்கோடு கடற்கரையில் இறந்து ஒதுங்கிய திமிங்கிலம்!

கோழிக்கோடு: கோழிக்கோட்டில் தெற்குக் கடற்கரையில் இன்று செப். 30 காலையில் இறந்த நிலையில் நீலத் திமிங்கிலம் கரையொதுங்கியது.

கோழிக்கோட்டில் நல்ல மழை பெய்துவரும் நிலையில், கடலும் கொந்தளிப்பாகக் காணப்பட்டது.

காலையில் 10.15 மணியளவில் கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒதுங்கியிருப்பதை மீனவர் ஒருவர் பார்த்திருக்கிறார். மீன் அழுகத் தொடங்கிவிட்டது. உயிரிழந்து இரண்டு நாள்கள் இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க- தாயை இழந்த குட்டிகளைத் தத்தெடுக்கும் திமிங்கிலங்கள்!

திமிங்கிலம் ஒதுங்கிய தகவல் பரவியதும் ஏராளமான மக்களும் குழந்தைகளும் கடற்கரையில் திரண்டுவிட்டனர்.

இறந்த திமிங்கிலத்தைக் கூறாய்வுக்குப் பிறகு கடற்கரைப் பகுதியிலேயே புதைக்கப்பட்டது. உயிரிழக்கக் காரணத்தை அறிவதற்காக திமிங்கில உடலின் பகுதிகள் போபாலிலுள்ள தேசிய ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.



from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/PgX8DtR https://ift.tt/ZxYGosj
via IFTTT

"பேச்சு சுதந்திரம்; மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை" - அமைச்சர் ஜெய்சங்கர்

கனடாவில் நிகழ்ந்த காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் கனடா இந்தியா இடையே பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு 5 நாள் பயணமாகச் சென்றிருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர் சந்திப்பில் இந்த விவகாரம் தொடர்பான கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.இந்தியா- கனடா

அவர் செய்தியாளர் சந்திப்பில், "இந்தியா ஒரு ஜனநாயக நாடு. பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாங்கள் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. பேச்சு சுதந்திரம் என்பது வன்முறையைத் தூண்டும் வரை நீட்டிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பளிக்கிறது. அதற்குப் பெயர் சுதந்திரத்தைப் பாதுகாப்பதல்ல.

இந்தியத் தூதரகங்கள் தாக்கப்படுகின்றன. ஒருவேளை நீங்கள் எங்கள் நிலையிலிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்... உங்கள் தூதரகங்கள்... உங்கள் அரசியல் பிரமுகர்கள்... உங்கள் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும்? அதுபோலத்தான் இந்தியாவும் செயல்படுகிறது. கனடா அவர்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவலைப் எங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருந்தால், நாங்கள் அதைப்பற்றிப் பேசத் தயாராக இருக்கிறோம்.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ஆனால், தூதரகத்தின் முன் புகைக் குண்டுகள், வன்முறை, இந்தியாவுக்கு எதிரான சுவரொட்டிகள் என நாங்கள் பார்க்க விரும்பாத சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. இதைச் சாதாரண விஷயமாகக் கருதுகிறீர்களா? வேறு எந்த நாட்டைச் சேர்ந்த தூதரகங்களாவது பாதிக்கப்பட்டிருந்தால், அந்த நாட்டு அரசின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

எனவே, எதையும் சாதாரணமாக்க வேண்டாம். கனடாவில் என்ன நடக்கிறது என்பதை அந்த நாட்டு அரசு வெளியே கூறுவது முக்கியம். கனட அரசு பகிரங்கமாக மிரட்டப்படுகிறது. அதன் காரணமாகத்தான் கனடா விசா நடவடிக்கைகள் கூட தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மிக முக்கியமாக, கனடாவில் இந்தியத் தூதரகப் பணியாளர்களும் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

இன்றளவும் அவர்கள் தங்கள் பணியைத் தொடர்வது பாதுகாப்பான சூழலில் இல்லை. கனடா அரசுடன் சில வருடங்களாகத் தொடர்ந்து பிரச்னை இருக்கிறது. பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு கனடா அனுமதி வழங்குவதைச் சுற்றியே தற்போதைய பிரச்னைகளும் சுழல்கிறது" என காட்டமாக குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
காலிஸ்தான்: கனடா - இந்தியா இடையிலான பிரச்னையில் ‘புகுந்த’ அமெரிக்கா - என்ன நடக்கிறது?!


http://dlvr.it/SwpRBR

India at Asian Games - Day 7 Live: 34-வது பதக்கத்தை வென்ற இந்தியா!

மணிகா பத்ரா தோல்வி!



மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸின் காலிறுதி ஆட்டத்தில் சீனா வீராங்கனை யிடி வாங்கிற்கு எதிராக 2-4 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார் இந்தியாவின் மணிகா பத்ரா!

இந்திய மகளிர் வாலிபால் அணி தோல்வி!



மகளிர் வாலிபால் ஆட்டத்தில் வடகொரியா அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவியது இந்திய அணி. முதல் செட்டை வென்ற போதும் அடுத்த மூன்று செட்களையும் இழந்து 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது!

துப்பாக்கிச் சுடுதல்: இந்திய இணைக்கு வெள்ளி!



கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் - திவ்யா தடிகோல் இணை வெள்ளிப்பதக்கம் வென்றது!

Long Jump: இறுதிப்போட்டியில் முரளி ஸ்ரீசங்கர், ஜெஸ்வின் ஆல்ட்ரின்



ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர் மற்றும் ஜெஸ்வின்ஆல்ட்ரின் இருவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். ஜெஸ்வின் ஆல்ட்ரின் மூன்றாவது முயற்சியில் 7.67 மீட்டர் தாண்டி இறுதிப்போட்டிக்குத் தகுதிப் பெற்றார்.

முரளி ஸ்ரீசங்கர் தனது முதல் முயற்சியிலேயே 7.97 மீட்டர் தாண்டி, நேரடி கட் ஆஃப்பான 7.90 மீட்டர் தூரத்தைத் தாண்டியதால் நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று அசத்தினார்!

Kurash: காலிறுதியில் பின்கி பல்ஹரா!



மகளிருக்கான (52 கிலோ பிரிவு) குராஷ் போட்டியின் 'ரவுண்ட் 16' சுற்றில் தென்கொரிய வீராங்கனையை 5-3 என்ற புள்ளிகள் பெற்று வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப்பெற்றார் இந்தியாவின் பின்கி பல்ஹரா!

நான்காவது இடத்தில் இந்தியா!

Medal Tally

ஆறாவது நாள் முடிவில் 8 தங்கப்பதக்கங்கள் உட்பட 33 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது இந்தியா!


http://dlvr.it/Swp8q8

Friday, 29 September 2023

காலிஸ்தான்: கனடா - இந்தியா இடையிலான பிரச்னையில் ‘புகுந்த’ அமெரிக்கா - என்ன நடக்கிறது?!

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரம் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளே புகுந்திருக்கிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

‘காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை விவகாரத்தில் இந்தியா, கனடா ஆகிய நாடுகளுடனும் அமெரிக்கா தொடர்பில் இருக்கிறது. கனடாவின் குற்றச்சாட்டுகளை உன்னிப்பாக கவனித்துவருகிறோம்’ என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவன் கூறியிருக்கிறார்

கனடாவில் சர்ரே நகரிலுள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை முகமூடி அணிந்த நபர்கள் கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொன்றனர். கொலையாளிகளை இன்றுவரை கண்டறிய முடியவில்லை. மர்மம் நிறைந்த இந்த கொலை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் இந்தப் பிரச்னை எதிரொலிக்கிறது. டொரன்டோ, லண்டன், மெல்போர்ன், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட இடங்களில் இந்திய அரசை எதிர்த்து சீக்கிய பிரிவினைவாதிகள் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். கனடாவில் சீக்கியர்கள் போராட்டம்

நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நிஜ்ஜாரின் மரணத்துக்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கனடா தரப்பு கூறியிருக்கிறது. ஆனால், நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்று இந்திய அரசு மறுத்திருக்கிறது.

கனடா - இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளே நுழைந்திருப்பது விவாதங்களை எற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து பேசியிருக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ‘காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலையில் நீதியின் முன்பாக குற்றவாளிகள் நிறுத்தப்பட வேண்டும். இந்தப் பிரச்னையில் நேரடியாக பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோ பைடன் பேசுவாரா என்பது தெரியாது. ஆனால், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன’ என்று அவர் கூறியிருக்கிறார்.காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

இதற்கிடையில், காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருக்கிறது. இந்தியாவில் ஏழு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 53 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியிருக்கிறது. இந்த சோதனைகளில் கைத்துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள், டிஜிட்டல் கருவிகள் ஆகியவற்றை என்.ஐ.ஏ பறிமுதல் செய்திருக்கிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட், டெல்லி, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது.Manipur: பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட மணிப்பூர்! - இனி வரும் நாள்கள் எப்படி இருக்கும்?

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின், ‘இந்தப் பிரச்னையில் யாருக்கு ஆதரவு என்று முடிவெடுக்க வேண்டிய நிலை வந்தால், இந்தியாவுக்குதான் அமெரிக்கா ஆதரவு அளிக்கும். கனடாவின் குற்றச்சாட்டு, இந்தியாவை விட கனடாவுக்குத்தான் அதிக ஆபத்தை உண்டாக்கியிருக்கிறது. இந்தியாவுடனான உறவு எங்களுக்கு முக்கியமானது. கனடா, இந்தியாவோடு சச்சரவில் ஈடுபடுவது, யானையுடன் எறும்பு சண்டையிடுவதைப் போன்றது. வாஷிங்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கலள்

தனது குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரத்தை அளிக்க ஜஸ்டின் ட்ரூடோவால் முடியவில்லை. இந்தியாவால் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்ட ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தது எதற்காக என்பது குறித்து கனடா விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />

http://dlvr.it/Swnx5h

Thursday, 28 September 2023

Joe Biden: 11-வது முறையாக பாதுகாப்பு அதிகாரிகளைக் கடித்த பைடனின் வளர்ப்பு நாய்!

ஜோ பைடனின் வளர்ப்பு நாயான `கமாண்டர்' 11-வது முறையாக பாதுகாப்பு அதிகாரியைக் கடித்திருக்கிறது.

வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் சீருடை அணிந்த அதிகாரியை கமாண்டர் கடித்திருக்கிறது. மருத்துவ பணியாளர்கள் உடனடியாக அந்த அதிகாரிக்குச் சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்று அறிவித்துள்ளனர்.வளர்ப்பு நாய்... தேர்வு முதல் இனச்சேர்க்கை வரை... செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!

ஜோ பைடனின் வளர்ப்பு நாயான கமாண்டர் இது போல பணியில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரியைக் கடிப்பது முதல் முறையல்ல. தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் இருக்கும் பல அதிகாரிகளைக் கடித்து இருக்கிறது.

வெள்ளை மாளிகையில் இருக்கும் அதிபர், அவரின் குடும்பத்தினர் மற்றும் பிற அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுபவர்களே `சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள்' (Secret Service employee) . இவர்கள் வெள்ளை மாளிகையின் பல இடங்களிலும் காவலுக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தான், `கமாண்டர்' ஓர் அதிகாரியைக் கடித்திருக்கிறது.

பைடனை பொறுத்தமட்டில் அவரின் வளர்ப்பு நாயை குடும்ப உறுப்பினராகவே கருதுகிறார். 

இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தகவல் தொடர்பு இயக்குநரான எலிஸபெத் அலெக்சாண்டர் கூறுகையில், ``செல்லப்பிராணிகளுக்கு மன அழுத்தமான சூழல் உள்ள இடமாக வெள்ளை மாளிகை உள்ளது. வளர்ப்பு நாயான கமாண்டர் 2022 அக்டோபர் முதல் ஜனவரிக்கு இடைப்பட்ட காலத்தில் 10 அதிகாரிகளைக் கடித்திருக்கிறது. வெள்ளை மாளிகை `நாய் வளர்ப்பவர்கள் மாநகராட்சியில் பதிவு செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா'?

2021-ல் பைடனின் சகோதரர் ஜேம்ஸ், கமாண்டரை பைடனுக்கு பரிசாகக் கொடுத்தார். பைடனின் குடும்பத்தில் `வில்லோ' என்ற பூனையும் இருக்கிறது.

வெள்ளை மாளிகை ஊழியர்களைக் கடித்து ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் பைடனின் இரண்டாவது வளர்ப்பு நாய் கமாண்டர். இதே போல அதிகாரிகளைக் கடித்து ஆக்ரோஷமாக நடந்து கொண்ட `மேஜர்' என்ற ஜெர்மன் ஷெப்பர்டு நாய் நண்பர்களுடன் டெலாவேரில் வாழ அனுப்பி வைக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.


http://dlvr.it/Swjzm2

Wednesday, 27 September 2023

அதிகாரியைக் கடித்த அமெரிக்க அதிபரின் நாய்!

அமெரிக்க ரகசிய சேவை அதிகாரி ஒருவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நாய் கமாண்டர் கடித்தது.

வெள்ளை மாளிகையில் அதிபரால் வளர்க்கப்படும் ஜெர்மன்  ஷெப்பர்டு வகை  நாயால் கடிபட்ட சீருடை அதிகாரியான அவருக்கு அங்கே மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.

வளர்ப்புப் பிராணிகளுக்கு வெள்ளை மாளிகைச் சூழல் அழுத்தமானதாக இருக்கலாம், அவற்றுக்கு உதவும் முயற்சிகளில் அதிபர் குடும்பத்தினர் ஆர்வம் கொண்டிருக்கின்றனர் என்று அதிபர் மனைவியின் தகவல் தொடர்பு இயக்குநர் எலிசபெத் அலெக்சாந்தர் தெரிவித்தார்.

2022 அக்டோபரில் தொடங்கி ஜனவரி வரை சுமார் 10 முறை ரகசிய சேவைத் துறையினரை இந்த கமாண்டர் நாய் கடித்துள்ளது அல்லது தாக்கியிருக்கிறது. ஒரு முறை நாயால் தாக்கப்பட்ட சட்ட அமல் அலுவலர் ஒருவர்  சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லவும் நேரிட்டது.

அதிபர் மாளிகையில் பணிபுரிவோரிடம் ஆக்ரோஷமாக இருக்கும் அதிபரின் நாய்களில், ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயான இரண்டாவது கமாண்டர் ஏற்கெனவே ஒரு முறை,  ஒருவரைக் கடித்திருக்கிறது. பின்னர், நண்பர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டது.  

அதிபர் மற்றும் அவர் குடும்பத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை, அதிபர் மாளிகை வளாகத்திலேயே  தங்கி ரகசிய காவல் துறையினர் கவனித்துக் கொள்கின்றனர்.

 



from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/tMl2bdK https://ift.tt/Ci1hdRV
via IFTTT

Tuesday, 26 September 2023

அதிநீள அமெரிக்க தேசிய வரலாற்றுப் பூங்காவில் ஒரு சைக்கிள் சவாரி! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் நண்பர்களோடு இணைந்து C&O Canal Towpath Trail-இல் மிதிவண்டிப் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இது உலகப் புகழ்பெற்ற சைக்கிள் ஓடுபாதை ஆகும். அமெரிக்காவின் பிற மாகாணங்களிருந்தும் மற்றும் ஐரோப்பாவிலிருந்தும் ஏராளமான சைக்கிள் ஓட்டிகள் வந்து சைக்கிள் இங்கு ஓட்டுகிறார்கள். இந்த சைக்கிள் பாதையின் வரலாற்றைச் சற்று ஆராய்ந்து பார்த்தேன்.

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள செசபீக் விரி குடாவை ஓகாயோவில் உள்ள ஓகாயோ நதியுடன் இணைக்கும் கால்வாய் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மேற்கு எல்லை துவங்கி கிழக்கு எல்லை வரை சந்தைப் பொருட்கள் மற்றும் கனிம வளங்களுக்கான வேகமான போக்குவரத்து வழியாக செசபீக் & ஓகாயோ இழுவைப் பாதை (Chesapeake & Ohio Canal Towpath) செயல்பாட்டிலிருந்தது.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, அமெரிக்கா தங்கள் அனைத்து மாகாணங்களுக்கும் எளிதில் செல்ல, வாகனப் போக்குவரத்தை அதிகப்படுத்தப் பல நெடுஞ்சாலைகள் அமைக்கத் திட்டமிட்டுப் பல ஊர்களில் நிலம், ஆறு, ஏரி, காடு என ஆக்கிரமிப்பு செய்தது. சைக்கிள் சவாரி

அந்த முயற்சியில் இக்கால்வாயை வாஷிங்டன் DC முதல் பென்சில் வேனியா பிட்ஸ்பர்க்கு நகருடன் இணைக்கும் ஒரு திட்டத்தை உருவாக்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி வில்லியம் ஓ. டக்ளஸ், ஒரு தீவிர சுற்றுச்சூழல் ஆர்வலர், C&O கால்வாயைக் காப்பாற்றினார்.

நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்ட கால்வாய், நதியைப் போலவே, அழகு, வரலாறு, வனவிலங்குகள் மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகள் ஆகியவற்றால் நிறைந்ததாக நீதிபதி டக்ளஸ் உணர்ந்தார். அவர் நடைப் பயணமாக வாஷிங்டன் DC முதல் பென்சில் வேனியா பிட்ஸ்பர்க்கு வரை நடந்து சென்று அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடினார். பின்னர் இக்கால்வாயை ஒரு பொழுதுபோக்குப் பாதையாக மாற்றி தேசிய வரலாற்றுப் பூங்காவாக அரசு அறிவித்தது. C&O Canal Towpath Trail

இந்த கால்வாய் ஓடு பாதையில் காட்டு விலங்குகள் மான், கரடி, பல பறவை இனங்கள், ஊர்வன பாம்பு, ஆமை போன்றவற்றைப் பார்த்து மகிழலாம். இன்று, C&O கால்வாய் தேசிய வரலாற்றுப் பூங்காவிற்குக் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட மக்கள் வருகை தருகின்றனர்.

பூங்காவின் முக்கிய பயன்பாடானது கால்வாய் இழுவைப் பாதையில் சைக்கிள் ஓட்டுவதுதான். வாஷிங்டன், DC க்கு அருகில் இழுவைப் பாதையில் சைக்கிள் பயணிகளுக்குப் பெருமளவில் சேவை செய்கிறது. வாஷிங்டன் நகரின் உற்சாகம் மங்கி, 1900களின் முற்பகுதியில் சைக்கிள் ஓட்டுவது போல் உணர முடியும். கால்வாயின் முழு நீளத்தையும் கடந்து செல்லும் சைக்கிள் ஓட்டிகள் 19 ஆம் நூற்றாண்டில் இக்கால்வாயில் கோவேறு கழுதைகள் இழுப்பதை விட மிகவும் அழகான காட்சியாக இருக்கின்றன.C&O Canal Towpath Trail

இப்பாதையின் சைக்கிள் சவாரி இயற்கை, பறவைகள், வனவிலங்குகள் என நமக்கு இடையே ஒரு பிணைப்பை உருவாக்குகிறது. இயற்கை நமக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது. குறிப்பாக எப்படி திட்டமிடுவது, ஆபத்தை எப்படி அணுகுவது மற்றும் எல்லா சூழ்நிலைகளிலும் நாம் எப்படி வாழவேண்டும் எனச் சிந்திக்க வைக்கிறது.

இது நீதிபதி வில்லியம் ஓ. டக்ளஸ் ஒரு நபரின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரே அமெரிக்கத் தேசிய பூங்காவாகும். நீதிபதி வில்லியம் ஓ. டக்ளஸ், C&O Canal Towpath பற்றிய அவரது கருத்தை இன்றைய சுற்றுச் சூழல் போராளிகள் பின்பற்ற வேண்டும். கடந்த வார இறுதியில் நாங்கள் C&O Canal Towpath-இல் சைக்கிள் செய்த பயணப் படங்களை கண்டுகளியுங்கள்.

- முருகவேலு வைத்தியநாதன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...



உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.


http://dlvr.it/SwcPwh

Monday, 25 September 2023

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது ஏன்?

 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக இன்று மாலை (செப்.25) அறிவித்தது.   

தமிழ்நாட்டில் கால்பதிக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவுடன் பயணித்துவந்த பாஜகவின் பயணம் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பின் மூலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அதிமுக தலைமை செயலா்கள், மாவட்டச் செயலா்கள், கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை 3.45 மணிக்குத் தொடங்கியது. 

இக்கூட்டத்தின் தொடக்கம்தான் பாஜக உடனான கூட்டணி முறிவுக்கு ஆரம்பமாய்  இருந்தது. கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனையின் இறுதியில், பாஜகவுடன் கூட்டணி இல்லை, கூட்டணி இல்லை, கூட்டணி இல்லை என்று 3 முறைக்கூறி தனது முடிவை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்தார். 

மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி அறிவித்துள்ளார். பாஜகவுக்கு இது பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. 

இதற்கெல்லாம் ஆரம்பமாய் இருந்தது என்ன என்று யோசித்தால், தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவரான அண்ணாதுரை, ஜெயலலலிதா குறித்து, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துகள்தான். அதற்கான அவர் வருத்தம்கூட தெரிவிக்காததுதான். 

கூட்டணி முறிவு: காரணங்கள்

வடக்கிலிருந்து வந்த பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததிலிருந்தே இரு கட்சிகளிடையேயும் சில முரண்கள் இருந்து வந்தன. கொள்கைகள் வேறுவேறாக இருந்தாலும் வாக்குகளுக்காக இரு கட்சிகளும் இணைந்து பயணிக்க ஆரமித்தன. ஆனால், தலைமையிலிருந்து கட்சியின் தொண்டர்கள் வரை இரு கட்சிகளிடையேயும் மோதல்போக்குகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. அதன் முடிவுதான் இன்றைய கூட்டணி முறிவு.

செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையில் பேசிய அண்ணாமலை, அறிஞர் அண்ணா குறித்து பேசியிருந்தார். 1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக சாடியதாக அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். 

மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று அண்ணாவை எச்சரித்ததாகவும் அதற்கு பயந்து அண்ணாவும், பிடி ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர் என்றும் கூறியிருந்தார்.

இது திமுகவை மட்டுமின்றி அதிமுகவையும் கொந்தளிக்கச் செய்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலரும் அண்ணாமலையின் செயலுக்கு கடும் கண்டனங்களை வெளிப்படையாகத் தெரிவித்தனர். 

அதிமுக முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜு, அண்ணா குறித்து தரக்குறைவாக பேசியவரின் நாக்கு துண்டாக்கப்படும் என்றார். இனி பாஜக கூட்டணியை அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அப்போதே தெரிவித்திருந்தார். 

இவ்வாறு அதிமுகவினர் கண்டனங்களைத் தெரிவித்தபோதும், அண்ணா குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என அண்ணாமலை அடாவடியாக இருந்தார். இது அதிமுகவினரை மேலும் காயப்படுத்தியது.

அண்ணா உருவாக்கிய திராவிடத்தின் பின்னணியில் எழுந்த அதிமுக தொண்டர்கள் அண்ணாமலையின் இந்த பேச்சால் கடும் அதிருப்தி அடைந்தனர். அதனை ஆங்காங்கே அதிமுக தொண்டர்களின் சுவரொட்டிகள் (போஸ்டர்கள்) மூலம் காண முடிந்தது. 

அதிமுகவின் திராவிடத் தகுதியை பாஜக குலைத்துவிடும் என்ற அச்சம் அதிமுகவில் அனைத்துத்தரப்பிலும் எழுந்தது.

இதுமட்டுமின்றி இதற்கு முன்பு ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துகளும் அதிமுகவுக்கு ஏற்புடையதாக இல்லை.  

ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்திருந்த அண்ணாமலை, ஜெயலலிதா என்ற பெயரைக் குறிப்பிடாமல்,  1991-96 காலத்தில் தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடியதாகக் குறிப்பிட்டிருந்தார். ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன் எனவும் தெரிவித்தார். 

அதிமுகவின் தவிர்க்க முடியாத தலைவரான ஜெயலலிதா குறித்து பேசிய கருத்துகளும் இக்கூட்டணி முறிவுக்கு காரணம். அப்போதே அண்ணாமலையை கண்டித்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.  

கூட்டணி கடந்துவந்த பாதை

தமிழகத்தில் கூட்டணி வாயிலாக வாக்குகளைப் பெற பாஜகவுக்கு அதிமுக உதவியிருந்தாலும், சநாதனம், நீட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றில் இரு கட்சிகளுக்கும் முரண்பாடுகள் இருந்தன. இவை தமிழக மக்களின் நிலைப்பாடுக்கு எதிராக இருப்பதாக அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது.

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. இதில் அதிமுக 20 தொகுதிகளிலும் பாஜக 5 தொகுதிகளிலும் போட்டியிட்டது. பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் இக்கூட்டணி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.

2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக தொடர்ந்தது. ஆனால், மக்கள் ஆதரவை இக்கூட்டணி பெறவில்லை. இதனால், திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியால் பாஜக உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டது. 

இந்த கட்டாயமும், பாஜக மாநில தலைவரின் அடுத்தடுத்த செயல்பாடுகளும் இப்போது கூட்டணி முறிவுக்கு வித்திட்டுள்ளன. 

தமிழகத்தில் தேர்தல் களத்தில் நுழைய பாஜகவுக்கு அதிமுக உதவியிருந்தாலும், இனி தனித்து பாஜக நிலைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

பாஜக வெறுப்பு அரசியலை சாதகமாக்கிக்கொண்ட திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் இனி போட்டி.



from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/KD7idIp https://ift.tt/Qo9hHa1
via IFTTT

எதிர்காலத்தில் இன்னொரு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் - எச்சரிக்கும் சீனாவின் பேட்வுமன்!

சீனாவில், வைரஸ்கள் குறித்து ஆய்வில் மிகவும் பிரபலமாக அறியப்படும் ஷி ஜெங்லி (Shi Zhengli), `எதிர்காலத்தில் மற்றொரு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்துகள் உள்ளதாக எச்சரித்து இருக்கிறார். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறார், ஷி ஜெங்லி. அதிலும் குறிப்பாக வௌவால்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களைக் குறித்து ஆய்வு செய்து கவனம் பெற்றதால், இவர் `பேட்வுமன்' என்றும் பிரபலமாக அறியப்படுகிறார்.வௌவால் இவர் சமீபத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களோடு இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். 40 வகையான வெவ்வேறு கொரோனா வைரஸ்கள் மனிதர்களில் பரவுவதற்கான அபாயத்தைக் குறித்து இக்குழு ஆய்வு செய்தது. இந்த வைரஸ்களில் பாதி, `மிகவும் ஆபத்தானவை' (highly risky) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஆய்வின் சங்கடமான முடிவே இவரை மற்றொரு கொரோனா பாதிப்பை குறித்து எச்சரிக்கத் தூண்டி இருக்கிறது. இக்குழு ஆய்வு செய்த கொரோனா வைரஸ்களில் ஏற்கெனவே ஆறு வைரஸ்கள் மனிதர்களைப் பாதித்துள்ளன. மூன்று வகையான கொரோனா வைரஸ்கள் விலங்குகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. எனவே, எதிர்காலத்தில் மற்றொரு கொரோனா வைரஸ் தொடர்பான பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக, இவரது ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவித்துள்ளன.  இது குறித்து ஷி ஜெங்லி எச்சரிக்கையில், ``முன்பு ஒரு கொரோனா வைரஸ் பாதிப்பு தோன்றினால், அது எதிர்காலத்திலும் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார உள்கட்டமைப்புகள் உலகளாவிய நிலையில் தயாராக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்து இருக்கிறார். கொரோனா`மனிதத்தன்மையற்ற செயல்'- கொரோனா சிகிச்சை செலவை வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனம்; கண்டித்த நீதிமன்றம் இந்த ஆய்வு குறித்த முடிவுகள், ஆங்கில பத்திரிக்கையான எமர்ஜிங் மைக்ரோப்ஸ் அண்ட் இன்ஃபெக்ஷன்ஸ் இதழின் 2023 ஜூன் மாத பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  ஏற்கெனவே கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் மீண்டிருக்கும் நிலையில், இந்த ஆய்வு குறித்தான எச்சரிக்கை கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
http://dlvr.it/SwZRW5

`காற்று மாசுபாட்டால் அதிகரித்துள்ள மார்பகப் புற்றுநோய்' - எச்சரிக்கும் ஆய்வு தகவல்..!

அதிகரிக்கும் காற்று மாசுபட்டால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக, அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் (NIH) -ன் ஒரு பகுதியான தேசிய சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் நிறுவனம் (NIEHS)  மற்றும் அமெரிக்காவின் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் (NCI) ஆகியவற்றின் விஞ்ஞானிகளால் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.காற்று மாசு ஆராய்ச்சி முடிவுகள், அமெரிக்க நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் இதழில் வெளியாகி உள்ளன. அதில், ``அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டுக்கும், பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கும்  இடையேஉள்ள தொடர்புகள் குறித்து அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள், ஸ்பேடியோடெம்போரல் மாதிரியைப் பயன்படுத்தி ஆய்வு செய்தனர். காற்று மாசு அளவு பி.எம்.2 அளவு குறைவாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுடன் ஒப்பிடும்போது, அதிக நுண்துகள் அளவு (பி.எம்.2.5) இருக்கும் பகுதியில் வாழும் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. மோட்டார் வாகன வெளியேற்றம்,  எண்ணெய், நிலக்கரி, மரம், தாவரங்கள் ஆகியவற்றை எரிப்பதன் மூலமும், தொழிற்சாலை உமிழ்வுகள் போன்றவற்றின் மூலமும் புகையில் வெளிவரும் நுண்துகள்கள் சுவாசத்தின் மூலமாக எளிதில் நுரையீரலுக்குள் செல்கின்றன. இதனால் 10 முதல் 15 ஆண்டுக்கால இடைவெளியில், பி.எம்.2.5 அதிகரிப்பால், மார்பகப் புற்றுநோய் அபாயம் 8 சதவிகிதம் அதிகரிக்கிறது. இது மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது" என்று குறிபிட்டுள்ளது.காற்று மாசுஅதிகரிக்கும் மின்சார வாகனங்கள் எண்ணிக்கை... குறையுமா காற்று மாசு? ஓர் அலசல்! காற்றில் இருக்கும் நுண்துகள்களைக் கொண்டே காற்றின் தரத்தை அளவிட்டுக் கூறுகின்றனர். காற்று மாசுபாட்டால் நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா என  பல்வேறு  நோய்களால் பாதிப்பை சந்திக்கும் நாடுகளின்  பட்டியலில் இந்தியாவும் உள்ளது. சீனா மற்றும் இந்தியாவில் தான் அதிகளவு காற்று மாசுபாடு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனா, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இதே நிலை நீடித்தால், இங்கு வாழும் மனிதனின் ஆயுள் 5 ஆண்டுகள் குறைவதோடு பல்வேறு நோய்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது. காற்று மாசுபட பல்வேறு காரணங்கள் இருந்தாலும்,  மாசுபாட்டை குறைக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
http://dlvr.it/SwZ4sj

`நீங்கள் ஓர் இந்தியர்... முட்டாள்!' - பெண் பயணியைத் திட்டிய சீன டாக்ஸி டிரைவர்! - என்ன நடந்தது?

சிங்கப்பூரில், சீனாவைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் ஒருவர், தனது காரில் மகளுடன் பயணம் செய்த பெண்ணை `இந்தியர்’ என நினைத்து `முட்டாள்' என்று திட்டிய சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, கடந்த சனிக்கிழமையன்று ஜனெல்லே ஹோடன் (Janelle Hoeden) என்ற 46 வயது பெண், மதியம் 2 மணியளவில் தடா (TADA) பகுதியிலுள்ள ரைடு-ஹைலிங் பிளாட்ஃபார்மில் (Ride-Hailing Platform) டாக்ஸி ஒன்றை முன்பதிவு செய்திருக்கிறார்.டாக்ஸி பின்னர் அங்கு வந்த டாக்ஸியில் ஜனெல்லே ஹோடன், தன் ஒன்பது வயது மகளுடன் ஏறினார். டாக்ஸி சென்றுகொண்டிருக்கும்போதே, செல்லுமிடம் குறித்து ஜனெல்லே ஹோடன் தவறான தகவல் கூறியதாக டிரைவர் அவரைத் திட்ட ஆரம்பித்திருக்கிறார். இருவருக்குமிடையில் வாக்குவாதம் முற்றவே, ஜனெல்லே ஹோடன் தன்னுடைய மகளிடம் செல்போனில் வீடியோ எடுக்குமாறு கூறியிருக்கிறார். அப்போது, ஜனெல்லே ஹோடனைப் பார்த்து டிரைவர், ``நான் சீனாவைச் சேர்ந்தவன். நீங்கள் ஓர் இந்தியர், நீங்கள் முட்டாள்" என்று திட்ட, ``நான் இந்தியர் அல்ல, சிங்கப்பூர் யூரேசியன்" என்று ஜனெல்லே ஹோடன் கூறியிருக்கிறார். இது வீடியோவில் பதிவாகவே, ஜனெல்லே ஹோடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதைப் பதிவிட்டிருக்கிறார். இது குறித்து ஜனெல்லே ஹோடன், ``நான் இந்தியராகவே இருந்தாலும், அவர் அவ்வாறு கூறியது தவறு. அதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார். இன்னொரு பக்கம், ஜனெல்லே ஹோடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வீடியோ, `Wake Up Singapore' என்ற ஊடக தளத்திலும் பகிரப்பட்டிருக்கிறது.டாக்ஸி இதை கவனித்த தடா சிங்கப்பூர் நிர்வாகம், இந்த விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட டிரைவரிடம் விசாரணை நடத்திவருவதாகத் தெரிவித்தது. இது பற்றி தடா செய்தித் தொடர்பாளர், ``இன வேறுபாடுகளைத் தூண்டும் கருத்துகள் நேரடியாக தடா சமூக வழிகாட்டுதல்களை மீறுகின்றன. இந்த விவகாரத்தில் நாங்கள் விசாரணையைத் தொடங்கியிருக்கிறோம். அதனடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். எத்தகைய சூழலிலும் இனவாதக் கருத்துகளை மன்னிக்க முடியாது" என்று தெரிவித்தார். யூரேசியர்கள் இந்தியர்களைப் போன்ற நிறமுடையவர்கள் என்றும், அவர்கள் இந்தியர்களைப் போன்று தோற்றமளிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.``தமிழகத்தில் பைக் டாக்ஸி அங்கீகரிக்கப்படவில்லை..!" - அமைச்சர் சிவசங்கர் தகவல்
http://dlvr.it/SwZ4rJ

Saturday, 23 September 2023

உடைந்த பாலத்துக்கு வழிகாட்டிய Google Map; ஃபாலோ செய்து நீரில் மூழ்கி பலியான நபர்... என்ன நடந்தது?

இதுவரை போகாத இடங்களுக்குக்கூட `கூகுள் மேப்' (Google Map) இருக்கும் தைரியத்தில் தங்களது பயணத்தைத் தொடங்குபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், கூகுள் மேப்பை நம்பி ஒருவரின் உயிரே பறிபோன சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர் பிலிப் பாக்ஸன். இவர் அமெரிக்கக் கடற்படை வீரராகவும், மருத்துவ சாதனங்களை விற்பனை செய்பவராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். birthday (Representational Image) கடந்தாண்டில் ஒருநாள் மழைக்கால இரவில், தன் மகளின் ஒன்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நண்பனின் வீட்டிற்குச் சென்றுள்ளார். நண்பனின் மகளுக்கும், இவரின் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் என்பதால், இருவரின் பிறந்தநாளையும் ஒன்றாக கொண்டாடத் திட்டமிட்டு இருக்கின்றனர். தனது வீட்டில் இருந்து நண்பனின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். பார்ட்டி முடிந்ததும் பாக்ஸனின் மனைவி, அவரின் மகள்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு முன்னதாகவே சென்று சேர்ந்துள்ளார். பார்ட்டி நடைபெற்ற இடத்தைச் சுத்தம் செய்வதற்காக பாக்ஸன் அந்த இடத்திலேயே சிறிது நேரம் தங்கி பணியை முடித்து கிளம்பி இருக்கிறார். அந்த இடத்தில் இருந்து பாக்ஸன் கிளம்புகையில் மழையும் இருளும் வழியை புலப்படாமல் மறைக்கவே, கூகுள்மேப் சொல்லும் தகவலை வைத்து தனது காரை இயக்கி இருக்கிறார். அப்போத் கூகுள் மேப், பாலத்தின் மீது செல்லும்படி வழியைக் காட்டவே, அப்படியே சென்றவர் அந்தப் பாலத்தில் இருந்து 20 அடிக்குக் கீழே விழுந்து நீரில் மூழ்கி இறந்துள்ளார். ஏற்கெனவே இடிந்து விழுந்த அந்தப் பாலம், தடை ஏதும் போடப்படாமல் இருந்திருக்கிறது. அந்த வழியாகவே கூகுள்மேப் வழிகாட்டவே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது.google mapsHow to: கூகுள் மேப் லொகேஷன் ஹிஸ்டரியை அழிப்பது எப்படி? I How To Clear Google Map Location History? இது குறித்து வழக்கு பதிவு செய்த பாக்ஸனின் மனைவி அலிசியா, ``கூகுள் மேப் பல ஆண்டுகளாக இடிந்து விழுந்த பாலத்தைப் பயன்படுத்த ஓட்டுநர்களுக்கு வழிகாட்டுகிறது. `பாலம் பயன்படுத்த முடியாதது’ என விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் மற்றொருவர் கூகுள் மேப்பில் உள்ள எடிட் அம்சத்தைப் பயன்படுத்தி பலமுறை எச்சரித்தார்.  இருந்தபோதும் 2020-ம் ஆண்டுக்குப் பின்னர் கூகுள் மேப்ஸில் உள்ள திசைகளை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என் கணவர் இறந்த ஆறு மாதங்களுக்குப் பின்னரும், அந்தப் பாலம் செல்லக்கூடிய பாதையாகவே காட்டப்பட்டது’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.   இது குறித்து கூகுளின் செய்தி தொடர்பாளர் ஜோஸ் காஸ்டநேடா கூறுகையில், ``பாக்ஸன் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். வரைபடத்தில் துல்லியமான வழியை வழங்குவதே எங்களது குறிக்கோள். நாங்கள் இந்த வழக்கை மதிப்பாய்வு செய்கிறோம்’’ என்று அறிவித்துள்ளார்.  கூகுள் மேப்பை ஃபாலோ செய்து நீங்கள் வழிதவறிப் போன அனுபவம் நிகழ்ந்திருக்கிறதா?! கமென்டில் பதிவிடுங்கள்...
http://dlvr.it/SwVkYV

Thursday, 21 September 2023

Asian Games 2023: மூன்று முறை சாம்பியன் தென்கொரியாவை வீழ்த்தியது இந்திய வாலிபால் அணி!

சீனாவின் ஹாங்சோவ் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. அதற்கு முன்பாக கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் போன்ற சில விளையாட்டுகளின் தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதில் வாலிபாலில் நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றுச் சாதித்திருக்கிறது இந்திய ஆண்கள் அணி.19th Asian Games -Hangzhou, China முதல் போட்டியில் கம்போடியா அணியை 3-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் நேற்று தென்கொரிய அணியை எதிர்கொண்டது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கம் வென்ற அணி தென்கொரியா. கடைசியாக நடந்த 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை பங்கேற்ற 14 முறையும் ஏதேனும் ஒரு பதக்கத்தை தென்கொரியா வென்றிருக்கிறது. இப்படியான வலுவான அணியை எதிர்கொண்ட இந்திய அணி, மனம் தளராமல் போராடி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. ஐந்து செட்கள் நீண்ட பரபரப்பான போட்டியில் 25-27, 29-27, 25-22, 20-25, 17-15 என்று இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் Pool C-ல் முதலிடம் பிடித்து ரவுண்டு ஆஃப் 12-க்கு நேரடியாகத் தகுதிபெற்றது.India v South Korea, Volleyball, Asian Games உலகத் தரவரிசையில் 73-வது இடத்தில் இருக்கும் இந்தியா, 27-வது இடத்தில் இருக்கும் தென்கொரியாவை வென்றது வாலிபால் ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. கடைசியாக தென்கொரியாவுடன் மோதிய ஐந்து போட்டிகளிலும் இந்தியா தோல்வியையே தழுவியிருந்தது.கடைசியாக 1986-ல் சியோலில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் (வெண்கலம்) வென்றிருந்தது இந்திய அணி. 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதிக்குமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்!
http://dlvr.it/SwQX6J

Wednesday, 20 September 2023

2024 தேர்தல்: ``ட்ரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார்!" - தனது வயது குறித்து ஜோ பைடன்

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77 வயது) மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (80 வயது) ஆகியோர் ரேஸில் இருக்கின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவில் அவ்வப்போது நடத்தப்படும் கருத்து கணிப்புகளில் ஜோ பைடனின் வயது குறித்தும், அதனால் அவரால் மீண்டும் அதிபராக திறம்பட செயல்பட முடியுமா என்பது குறித்தும் அதிக அளவு கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அமெரிக்கா வரலாற்றிலேயே 80 வயதில் ஒருவர் அதிபராகப் பதவிவகிப்பது இதுவே முதல் முறை. இந்த நிலையில், இது குறித்து மனம் திறந்துப் பேசிய ஜோ பைடன், ``மக்கள் என்னுடைய வயதில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றனர். அது எனக்குத் தெரியும். என்னுடைய வயது அனைவரைவிடவும் அதிகம்தான். ஆனால் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. அதனால்தான் நான் ஓடிக்கொண்டு இருக்கிறேன்.டொனால்டு ட்ரம்ப் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் குடியரசுக் கட்சியினர் அமெரிக்க ஜனநாயகத்தை அழிக்க விரும்புகின்றனர். அதனால்தான் நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் கோவிட் தொற்றுநோய் போன்ற நெருக்கடிகளைச் சமாளிக்க என்னுடைய அனுபவம் உதவியது'' என்றார். ஜோ பைடன் இளைஞராக இருந்தபோது அவருக்கு வாய் திணறும் பிரச்னை இருந்திருக்கிறது. இதனால் பல்வேறு கேலி, கிண்டல்களைச் சந்தித்து வந்திருக்கிறார். ஆனால் தற்போது உலக அரங்கில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. அதோடு அவர் தன்னுடைய வீட்டுப் பகுதியில் அடிக்கடி சைக்கிளில் செல்வதையும் காணலாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு,``ஜோ பைடன் மிகவும் வயதானவராகிவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் அந்தப் பதவிக்கு திறனில்லாதவர். அதுதான் மிக பெரிய பிரச்னை என நான் நினைக்கிறேன்'' என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY`கைதி எண் PO1135809, உயரம் 6.25 அடி' ; சிறை சென்ற 20 நிமிடங்களில் வெளிவந்த ட்ரம்ப் - நடந்தது என்ன?
http://dlvr.it/SwND7z

கூடங்குளத்தில் இழுபறியில் மிதவைக் கப்பல்! என்ன நடந்துகொண்டிருக்கிறது?

  கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நீராவி எந்திரங்களை ஏற்றிவந்த  மிதவைக் கப்பலை மீட்கும்  முயற்சி தொடர்ந்து தோல்வியுற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு பற்றி எச்சரித்திருக்கிறார் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சுப. உதயகுமார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "இந்தியாவின் தென்கோடியில் இன்னொரு விரயச் செயல் அரங்கேறியுள்ளது. கணக்கு வழக்கின்றி இந்திய மக்களின் வரிப்பணத்தை ரஷியாவுக்கு வாரிவாரி வழங்கும் கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு ரஷியாவிலிருந்து இரண்டு நீராவி உற்பத்தி இயந்திரங்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாகக் கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து கூடங்குளத்துக்கு கடல் வழியாக அவற்றை இழுத்துவந்தபோது, அந்த மிதவைக் கப்பல் அணுமின் துறைமுகத்தில் தரைதட்டி கடலில் சிக்கிக் கொண்டது. ஒரு சாதாரண சரக்குக் கப்பலைக் கையாள முடியாமல் இந்திய அரசின் அணுசக்தித் துறை திணறியது. பின்னர் மும்பையிலிருந்தும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் “நிபுணர்கள்” வந்தார்கள், சென்றார்கள். அதன் பிறகு இலங்கையிலிருந்து ஓர் இழுவைக் கப்பலைக் கொண்டுவந்து மிதவைக் கப்பலை இழுத்தார்கள். அதன் இழுதிறன் குறைவாக இருந்ததால் இன்னொரு இழுவைக் கப்பலையும் இலங்கையிலிருந்து கொண்டு வந்தார்களாம். எதுவும் நடக்காத நிலையில், ஏறத்தாழ 670 கோடி ரூபாய் விலையுள்ள சரக்கை அப்படியே விட்டுவிட முடியாமல், கடலில் ஹைவே போட முடிவெடுத்தார்கள். யாரிடமும் கணக்குக் காட்ட வேண்டியதில்லை. நாடாளுமன்றத்தில்கூட எந்த விவாதமும் கிடையாது. தேசியப் பாதுகாப்பு விஷயம் என்று சொல்லிவிட்டால், எதிர்க்கட்சிகள்கூட எதுவும் பேசமாட்டார்கள். யாருக்கும் எந்த விதத்திலும் எந்த பதிலும் சொல்ல வேண்டிய தேவை இல்லாததால், நிறுவனம் ஒன்றுக்கு கடலில் ரோடு போட அனுமதி கொடுத்தார்கள். நிறுவனம் சொல்வதுதான் செலவுக்  கணக்கு. கடல் ஹைவே வேலைகள் தொடங்கியிருக்கின்றன. ஆனால், இது வெறுமனே கடலில் கல்லையும் மண்ணையும் போட்டு நிரப்பும் சாதாரண சாலை அல்ல. ‘ஆக்சில் டிரக்’ எனப்படும் சுமார் நூறு டன் எடைகொண்ட, ஐம்பது, அறுபது சக்கரங்களுடைய, மிக நீண்ட கனரக வாகனம் செல்லும் சாலை. சுமார் 300 டன் எடையுள்ள சரக்கை ஏற்றிச்செல்வதற்கு பயன்படுத்தப்படும் மிகவும்  உறுதியான சாலையாக இது இருக்க வேண்டும். சுப. உதயகுமார் கடலில் கிடக்கும் ரஷிய சரக்கைத் தூக்கி ‘டிரக்’கில் ஏற்றுவதற்கு கிரேன் ஏற்பாடு செய்ய வேண்டும். கூடங்குளம் வளாகத்தில் இருக்கும் கிரேன் ஒன்றைப் பிரித்து கூடங்குளம் மினி துறைமுகத்தில் போடப்படும் கடல் ஹைவே பகுதியில் நிறுவுவதற்கு பதினைந்து நாட்கள் வரை ஆகுமாம். இதற்கிடையே மிதவைக் கப்பலில் உள்ள சுமார் இருபது உள்ளறைகளில் எட்டு அறைகள் உடைந்து, கப்பல் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தரைதட்டிய அன்று இரண்டு அறைகள் மட்டுமே உடைந்தன. கூடங்குளம்  நிபுணர்கள் அவற்றைப் பற்றவைத்து பழுதுநீக்கி விடலாம் என்று நினைத்த கதை நடக்கவில்லை. ஒருவேளை இவ்விரண்டு நீராவி உற்பத்தி இயந்திரங்களும் கடலுக்குள் விழுந்து மூழ்கிப் போனாலும் கவலை இல்லை, காப்பீட்டு நிறுவனம் இழப்பீடுக் கொடுத்துவிடும் என்று கூறப்படுகிறது. எந்த கம்பெனியில் எவ்வளவு தொகைக்குக் காப்பீடு செய்திருக்கிறார்கள், அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகள் என்னென்ன என்றெல்லாம் யாரும் கேள்விகள் கேட்க முடியாது. அப்படியாக கடல் ஹைவே திட்டமும் தோல்வியுற்றால் மேற்படி இரண்டு நீராவி உற்பத்தி இயந்திரங்களையும் மீண்டும் தயாரிக்க ரஷியாவுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுமாம். அப்படியானால் கூடங்குளம் 5 - 6 அணுஉலைகள் கட்டுமானத்தில் இரண்டு ஆண்டுகள் கூடுதலாக தாமதம் நிகழுமாம். இதனாலென்ன, தொடர்புடைய அனைவரும் இன்னும் இரண்டு ஆண்டுகள்  கழிக்கலாம். இந்திய மக்களின் பணம் படும் பாடு புரிகிறதா? பணவிரயம் என்பதன் இன்னொரு பெயர்தான் அணுசக்தி. இந்திய அணுசக்தித் துறைக்கும் வெளிப்படைத் தன்மைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மூடிமறைப்பதும், சிக்கலான நேரங்களில் எதையாவது அரைகுறையாகச் சொல்வதும் இந்தத் துறையின் கலாசாரமாக இருந்து வருகிறது. இப்போதும் அப்படித்தான் நடக்கிறது. இதுவரை கூடங்குளம் மிதவைக் கப்பல் விவகாரம் பற்றி யாரும், எதுவும் முழு உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கவில்லை. நாளை கூடங்குளத்தில் ஏதாவது அசம்பாவிதம் சம்பவித்தால் என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்பதை அனைவரும் அறிந்துகொள்வதற்காக இயற்கை  அனுப்பியிருக்கும் சமிக்ஞைதான் இந்த இழுவைக் கப்பல் இழுபறி. இவர்களின் “உலகத்தரம் வாய்ந்த” கூடங்குளம் அணுஉலை எவ்வளவு திறம்பட இயங்குகிறது, அங்கே அணுக்கழிவுகள் எப்படி கவனமாகக் கையாளப்படும் என்பதெல்லாம் இப்போது மக்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார் சுப. உதயகுமார்.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/2cGx7mL https://ift.tt/zE3cK5f
via IFTTT

Monday, 18 September 2023

ரஷ்யாவுடன் ஆயுதப் பேச்சுவார்த்தை, பரிசுகளுடன் நாடு திரும்பிய கிம் - சர்வதேச அரசியலில் புது `புயல்!'

அரசு முறை பயணமாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்யாவுக்கு கடந்த 13-ம் தேதி சென்றார். தனது குண்டு துளைக்காத ரயிலில் அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோம் விண்வெளி நிலையத்தை அடைந்தார். அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய கிம், "உங்களது பரபரப்பான வேலைகளுக்கு இடையில் எங்களை அழைத்தமைக்கு நன்றி" என்றார்.வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதற்கு பதிலளித்த புதின், "நான் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்" என்றார். பிறகு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷெய்குவை நேரில் சந்தித்தார் கிம். அப்போது ரஷ்யாவின் அணுசக்தி ஆயுதங்கள் குறித்து கேட்டறிந்தார். அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணை, Tu-160, Tu-95, Tu-22M3 விமானங்கள், அணுசக்தி திறன்கொண்ட குண்டுகளை வீசக்கூடிய விமானங்கள் போன்றவற்றையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து கடந்த 17-ம் தேதி தனது பயணத்தை முடித்துக்கொண்டு வடகொரியாவுக்குத் திரும்பினார், கிம். அப்போது அவருக்கு சில ட்ரோன்கள், அதிநவீன குண்டு துளைக்காத உடைகள் உள்ளிட்டவை பரிசாக அளிக்கப்பட்டன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான இந்த சந்திப்பு, அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதாவது ஐக்கிய நாடுகள் விதித்திருக்கும் பல்வேறு பொருளாதார தடைகளால் உணவு, எரிபொருளுக்கு வடகொரியாவில் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது.புதின் மறுபுறம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ராணுவ உதவி செய்து வருவதால், போர் முடிவுக்கு வரவில்லை. இதனால் ரஷ்யாவுக்கு பெரும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. எனவே இருவருக்கும் பொது எதிரியாக அமெரிக்கா இருக்கிறது. இதற்கிடையில் இரு தலைவர்களுக்கும் இடையில் நடந்திருக்கும் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சர்வதேச அரசியல் நோக்கர்கள், "கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ரஷ்யாவுக்குச் சென்ற கிம்-மின் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தச் சந்திப்பின்போது ஆயுத ஒப்பந்தங்கள் முடிவாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஆனால் ரஷ்யாவும், வடகொரியாவும் இதை ஒப்புக்கொள்ளவில்லை. இரு நாடுகளும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளால் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன.அமெரிக்கா எனவே வரும் காலத்தில் ஆயுத பரிமாற்றம் செய்து கொள்வது குறித்தும், ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் பேசியிருக்கிறார்கள். குறிப்பாக செயற்கைக்கோள்களை ஏவும் முயற்சியில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது, வடகொரியா. எனவே தங்களுக்கு அந்த விஷயத்தில் ரஷ்யா உதவ வேண்டும் என விரும்புகிறது அந்த நாடு. பதிலுக்கு அதிக அளவில் தங்களிடம் இருக்கும் ஏராளமான அணு ஆயுதங்களும், வெடி மருந்துகளும் ரஷ்யாவுக்கு வழங்க முடியும் என வடகொரியா நம்புகிறது. இதை கிம்மின் பேச்சின் மூலமாகவே நாம் அறிந்து கொள்ள முடியும். அவர், `ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் கூட்டாக இருப்போம். ரஷ்யாவின் இறையாண்மையை பாதுகாக்க ஆதிக்க சக்திகளுக்கு எதிரான புனிதப்போரை ரஷ்யா முன்னெடுத்துள்ளது. புதினின் அனைத்து முடிவுகளையும் வடகொரியா ஆதரிக்கிறது' எனத் தெரிவித்திருக்கிறார். பதிலுக்கு ரஷ்யா, `வடகொரியா மீது ஐக்கிய நாடுகளின் தடைகள் இருந்தாலும், அவை ரஷ்யா-வடகொரியா இடையிலான உறவை எந்த வகையிலும் தடுக்காது" எனத் தெரிவித்திருக்கிறது. இது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கிடையில் இந்த சந்திப்புக்கு தென்கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.ரஷ்யா - உக்ரைன் போர் இதுகுறித்து அந்த நாடு, `ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் இது குறித்து முறையிடவிருக்கிறோம். சட்டவிரோதமாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் பல்வேறு தீர்மானங்கள், பொருளாதார தடைகள் ஆகியவற்றை மீறி ராணுவ ஒத்துழைப்புக்கு இரண்டு நாடுகளும் முடிவு செய்திருக்கின்றன. இது குறித்து ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் விவாதிக்கப்படும். ரஷ்யாவுடன் இணைந்து வடகொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா உரிய பதிலடி கொடுக்கும். இதற்கான முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பிறகு, உரிய நடவடிக்கை எடுப்போம். வடகொரியா விடுக்கும் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த விவகாரம் மட்டுமல்ல சர்வதேச அளவில் முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் சீனா பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறது.சீனா ஏற்கெனவே அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்தப்போவதாக வடகொரியா அச்சுறுத்தி வருகிறது. இதற்கிடையில்தான் கிம்-புதின் இடையேயான சந்திப்பு நடந்திருக்கிறது. இதில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ராணுவ ஒத்துழைப்புக்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் ரஷ்யாவுக்குச் செல்லும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரை அடுத்த வாரம் சந்திக்கிறார். இது மேலும் பரபரப்புக்கு வித்திட்டிருக்கிறது. இது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது" என்றனர்.'அமெரிக்கா - தென்கொரியா போர் ஒத்திகை' - ஏவுகணையை ஏவிய வடகொரியா; என்னதான் நடக்கிறது?!
http://dlvr.it/SwJNYx

பொது வெளியில் தென்படாத சீன பாதுகாப்புத்துறை அமைச்சர்... வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா?

சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷாங்ஃபு (Li Shangfu) கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பொது வெளியில் காணப்படவில்லை. இதனால், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா எனக் கேள்விகள் எழுந்திருக்கின்றன. ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் ரஹ்ம் இமானுவேல் (Rahm Emanuel) வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ஷேக்ஸ்பியரின் வாசகத்தை மேற்கோள் காட்டி, ``சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷாங்ஃபுவை கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாகப் பார்க்க முடியவில்லை. ஏற்கெனவே திட்டமிட்டபடி வியட்நாம் நாட்டுக்கும் செல்லவில்லை. இதற்கு அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதே காரணமா?'' எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில், மத்திய ராணுவ கமிஷன் கூட்டம் (Central Military Commission) (CMC) நடந்தது. இது மிக முக்கியக் கூட்டமாகக் கருதப்படுகிறது. இதில், ராணுவ அமைச்சர் லி ஷாங்ஃபு பங்கேற்கவில்லை. கூட்டம் தொடர்பான வீடியோ வெளியான நிலையில், அவர் அதில் தென்படவில்லை. அதோடு அரசுத் தரப்பிலிருந்தும் இதற்கான எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. லி ஷாங்ஃபு, இது போன்ற முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்காதது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே, கடந்த செப்., 7, 8-ம் தேதிகளில் வியட்நாம் ராணுவ உயரதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் லி ஷாங்ஃபு கலந்துகொள்ளவில்லை. அவர் இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே எந்தப் பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, ராணுவ அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக லி ஷாங்ஃபு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கடைசியாக அவர் ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதியன்று ஆப்பிரிக்க நாடுகளுடனான பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் உரையாற்றியிருந்தார். இதற்கிடையே, `லி ஷாங்ஃபு விசாரணைக்கு உட்பட்டிருக்கலாம் என அமெரிக்க அரசு நம்புகிறது' என, ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷாங்ஃபு ஏற்கெனவே, இதேபோலத்தான் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கின் காங் (Qin Kong) தொடர்ந்து சில வாரங்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். அதற்கான விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து கின் காங்  பதவியிலிருந்து அகற்றப்பட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாயின. பின்னர் கின் காங்குக்கு பதிலாக கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார ஆணையத்தின் இயக்குநராக இருந்த வாங் யீ (Wang Yi) வெளியுறவுத்துறை அமைச்சராக்கப்பட்டார். இந்த நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷாங்ஃபும் சில வாரங்களாக பொது நிகழ்ச்சிகளில் தோன்றாமல் இருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYஇறங்குமுகத்தில் சீனா, ஏறுமுகத்தில் இந்தியா... எழுச்சி பெறும் துறைகள், ஏற்றம் தரும் பங்குகள்!
http://dlvr.it/SwG9cB

Sunday, 17 September 2023

Masuleh: `வீட்டுக்கு மேல் ரோடா இல்ல ரோட்டுக்கு மேல் வீடா?!' - ஓர் ஆச்சர்ய கிராமம்

வடக்கு ஈரான் பகுதியில், அல்போர்ஸ் மலைத்தொடரிலுள்ள கிலான் என்ற ஊரில் தான் மசூலேஹ் என்கிற இந்த கிராமம் அமைந்திருக்கிறது. இங்குள்ள ஊர்களையெல்லாம் விட்டுவிட்டு, ஈரானிலுள்ள ஒரு ஊரைப் பற்றி எதற்குப் பேச வேண்டும்? அப்படி என்ன அந்த ஊரில் அதிசயம்? நம் ஊரிலெல்லாம், ரோடு இருக்கும், அதற்கு இருபுறமும் வீடுகள் அமைந்திருக்கும். ஆனால், இவ்வூரில் ஒரு வீட்டின் கூரை, அதற்கு மேலே உள்ள தெருவின் சாலையாக அமைந்துள்ளது. அதாவது முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? என்பதைப் போல, வீட்டுக்கு மேல் ரோடா? அல்லது ரோட்டுக்கு மேல் வீடா? என்கிற ஒரு ‘இல்யூஷன்’ நமக்கு ஏற்பட்டுவிடும். இதோ இந்த ஊரின் வழியே ஒரு பயணம். வடக்கு ஈரானிலுள்ள இந்த மசூலேஹ் என்கிற கிராமம், கிட்டதட்ட 1000 வருட கால வரலாற்றைத் தாங்கி நிற்கிறது. கி. பி. 1006- ல் இருந்து அங்கு மனிதர்கள் வந்து குடியேறத் தொடங்கி, இப்போது ஈரானின் முக்கிய கலாசாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களுள் ஒன்றாக இது திகழ்கிறது. இன்று மசூலேஹ் கிராமத்திலிருந்து 6 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள ஒரு இடத்திலிருந்து தான் இக்கிராமத்தின் வரலாற்றை நம்மால் அறிய முடிகிறது. அது தற்போது ‘பழைய மசூலே’ என்றழைக்கப்படுகிறது. வரலாற்றில் ‘சில்க் ரூட்’ என்றழைக்கப்படும், பட்டுச்சாலை ஒரு முக்கிய வணிகப் பாதையாக இருந்தது. சீனாவிலிருந்து ஐரோப்பா வரை ஒரு லாபகரமான பட்டு வணிகம் இவ்வழியின் மூலம் நடைபெற்று வந்தது. கிலான் அந்த வழியில் ஒரு முக்கிய இடமாகத் திகழ்ந்தது. காலப்போக்கில், அது ஒரு இரும்புச் சுரங்கமாக மாறி, ஒரு முக்கிய வர்த்தக இடமாக மாறிப்போனது. பின்னர் இரும்பை மூலப் பொருளாகக் கொண்ட தொழிற்சாலைகள் அவ்வூரைச் சுற்றி அதிகளவில் வரத்தொடங்கின. கி.பி 1320- ல் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் பஞ்சம் போன்ற இயற்கை சீற்றங்களாலும், சில நோய்த்தொற்றுகளாலும் மக்கள் அவ்விடத்திலிருந்து இப்போதுள்ள மசூலேஹ் இடத்திற்குக் குடிபெயர்ந்தனர்.  மசூலேஹ் வீடுகளின் அமைப்பும், மக்களின் வாழ்வாதாரமும்: மேற்கூறிய படியே, ஒரு வீட்டின் கூரை மற்றொரு வீட்டின் வாசலாகவோ அல்லது அந்த தெருவின் சாலையாகவோ அமைந்துள்ளது. எதற்காக இப்படி கட்ட வேண்டும்? மலைச்சரிவில் அமைந்துள்ள இந்த வீடுகள், நிலையாக இருப்பதற்காக, இயற்கையாய் அமைந்த பாறை கீழ்ப்பகுதியாகவும், வீட்டின் பின்புறம் இருக்கும் மலையின் சுவர் அங்குள்ள வீடுகளுக்குப் பாதுகாப்பாக அமையும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு இருப்பதால் இது, வீடுகளை நிலநடுக்கத்திலிருந்து பாதுகாத்து வருகிறது. இது எந்தவொரு கட்டிடக்கலை நிபுணராலும் திட்டமிடப்பட்டுக் கட்டப்படவில்லை மாறாக அங்குள்ள மக்களே திட்டமிட்டுக் கட்டியுள்ளனர் என்றால் ஆச்சரியமாகத்தான் உள்ளது. இதுமட்டுமல்லாமல், மசூலேவில் எந்த அளவு வெப்பம் இருக்கிறதோ, அதை விட அதிகமாகப் பனிப்பொழிவு காணப்படும்.  சமவெளியில் கட்டியிருந்தால் வெள்ளத்தில் சிக்கக்கூடிய அபாயமும், ஈரானிய குளிரினால் பாதிப்புகளும் ஏற்படக்கூடும். ஆனால், இப்பொழுது அமைந்துள்ள மசூலேஹ் பகுதியில் உகந்த சூரிய வெளிச்சம், வெப்பநிலை இருப்பதால் அங்குள்ள  வீடுகளுக்கு இது பாதுகாப்பாக அமைந்துள்ளது. இங்கு இயற்கை மட்டுமல்ல, அதனுடன் சேர்ந்து வீடுகளின் கட்டிடக்கலை மற்றும் சமூகமும் இணைந்து வளர்ந்துகொண்டே வருகிறது. இங்குள்ள மக்கள், இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் பேசக்கூடிய மொழி ‘டலேஷி’ மொழி என்றழைக்கப்படுகிறது. முஹரம் போன்ற இஸ்லாமியப் பண்டிகைகளை இவர்கள் கொண்டாடுவதுண்டு. இவர்களுடைய வருமானம் குறித்துப் பார்த்தால், முன்பு உலோகம் மற்றும் மர வேலைப்பாடுகள் சார்ந்து இருந்தாகவும், தற்போது அவை அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் சுற்றுலாத் துறையினால் வரக்கூடிய வருமானம் தான் மசூலேவின் பொருளாதாரத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. வழிப்போக்கர்கள் மற்றும் வணிக வியாபாரிகள் வந்து தங்கிக் கொள்வதற்காகச் சத்திரம் போன்ற 8 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன்மூலம், இங்கிருந்த மக்கள் வணிகத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்றும் நம்மால் நன்கு அறியமுடிகிறது. இதற்கு மற்றொரு ஆதாரமாக, ஊரின் நடுவே ‘பஜார்’ அமைந்துள்ளது. பழங்காலந்தொட்டு வியாபாரிகள் தங்கள் பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பது வழக்கமாக உள்ளது. இதுபோக இவர்களின் மர கைவினைப்பொருட்கள் மிகவும் நேர்த்தியாகவும் கலைத்தன்மையுடனுன் காணப்படுகின்றன. இங்குள்ள வீடுகளின் ஜன்னல்கள் முதற்கொண்டு, மரத்தினால் மிக அழகாகச் செய்யப்பட்டிருக்கும்.  இப்படி வரலாறு,  இயற்கை மற்றும் கலாசாரம் என அனைத்திலும் மிகச்சிறந்து காணப்படும் இவ்வூரில் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு  முற்றிலும் அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மக்கள் சாதாரணமாகத் தெருக்களில் நடமாடிக்கொள்ளலாம். அங்குள்ள மக்கள் இயற்கையோடு இணைந்தும், இயற்கையைப் பாதுகாத்துக் கொண்டும் வாழ்ந்துவருகின்றனர். விரைவில் இதை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நாடாக அறிவிப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன.
http://dlvr.it/SwFcJW

Saturday, 16 September 2023

மியாமி விமான நிலையம்: பயணிகளின் பணத்தைத் திருடும் அதிகாரிகள் - சிக்கியது எப்படி? | Video

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகள் (Transportation Security Administration ) (TSA), பயணிகளின் பைகளிலிருந்து பணம் மற்றும் மதிப்புமிக்க பிற பொருள்களைத் திருடும் அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் பரவிவருகிறது. இந்த விமான நிலையத்தின் திருட்டு பற்றிய புகார்களை சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரித்த பின்னர், 20 வயதான ஜோசு கோன்சலேஸ், 33 வயதான லாபரியஸ் வில்லியம்ஸ் என்ற இரண்டு ஊழியர்களைக் கடந்த ஜூலை மாதம் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ கடந்த ஜூன் 29-ம் தேதி எடுக்கப்பட்டிருந்தாலும், தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில், பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்ய எக்ஸ்ரே இயந்திரத்தில் வைக்கும்போது, அதை இருவரும் சோதனை செய்கின்றனர். அப்போது ஒவ்வொரு பையிலிருந்து கிடைக்கும் பணத்தைத் திருடி, தங்களது பைகளில் வைத்துக்கொள்கின்றனர். அதோடு கையில் கிடைத்த சில பொருள்களையும் திருடிவைத்துக்கொள்கின்றனர். TSA Agents caught on surveillance video stealing hundreds of dollars in cash from passengers’ bags at Miami airport. pic.twitter.com/LhFW9yNRNV— Mike Sington (@MikeSington) September 13, 2023 இந்தத் திருட்டின்போது இருவரும் சேர்ந்து பயணிகளிடம் குறைந்தது $600 டாலர் ரொக்கம் மற்றும் பிற பொருள்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது. மேலும் விசாரணையில், இவர்கள் இருவரும் பணியில் இருக்கும்போது ஒரு நாளைக்குச் சராசரியாக $1,000 டாலர் வரை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.  விசாரணை மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் முடிவடையும் வரை ஸ்க்ரீனிங் பணிகளிலிருந்து அதிகாரிகள் நீக்கப்பட்டிருக்கின்றனர். பொதுவாக விமான நிலையங்களில் பயணிகளை கவனிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகளே இது போன்ற செயலில் ஈடுபட்டது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYமணிப்பூர்: துப்பாக்கிச்சூடு... தீவைப்பு... மணிப்பூர் - மியான்மர் எல்லையில் பதற்றம்!
http://dlvr.it/SwBnCw

Friday, 15 September 2023

பயனர்களின் அனுமதியின்றி கண்காணிக்கப்படும் லொகேஷன்? - கூகுளுக்கு ரூ.7,000 கோடி அபராதம் விதிப்பு!

உலகின் பிரபலமான வலைதளங்களில் குறிப்பிடத்தக்கது கூகுள். ஒவ்வொரு நாளும் அதன் பயன்பாடு அதிகரித்துவருவது நாம் அறிந்ததே. இந்த நிலையில், பயனர்களுக்குத் தெரியாமல், அவர்களின் லொகேஷன் குறித்த விவரங்களை கூகுள் சேகரிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் சாண்டா கிளாரா கவுண்டி உயர் நீதிமன்றத்தில், அட்டர்னி ஜெனரல் ராப் போன்டா, வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து, இது தொடர்பான விசாரணையை கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கையிலெடுத்தது.Google கூகுள் இந்த நிலையில், நேற்று இந்த விசாரணை குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ``எங்கள் விசாரணையில் கூகுள் நிறுவனம் தனது பயனர்களிடம் 'பயனர்கள் தங்கள் பயன்பாட்டை நிறுத்தியவுடன், அவர்களின் இருப்பிடம் (Location) கண்காணிக்கப்படுவது நிறுத்தப்படும்' என்ற உத்தரவாதத்தை வழங்குகிறது. ஆனால், அதன் செயல்பாடு, அதற்கு நேர்மாறாக, தனது சொந்த வணிக லாபத்துக்காக பயனர்களின் நகர்வுகளைத் தொடர்ந்து கண்காணிக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து நீதிமன்றம், ``கூகுளின் இத்தகைய செயல், ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கான தீர்வுக்கு கூகுள் பொறுப்பேற்க வேண்டும். இனி இருப்பிடம் தொடர்பான அமைப்புகளை இயக்கும்போது, பயனர்களுக்கு கூடுதல் தகவலைக் காண்பிக்க வேண்டும். இருப்பிட கண்காணிப்பு குறித்தும் பயனர்களிடம் அதிக வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்.தீர்ப்பு இதுவரை நிகழ்ந்த தவற்றுக்காக கூகுள் நிறுவனத்துக்கு 93 மில்லியன் டாலர் (ரூ.7,000 கோடி) அபராதம் விதிக்கப்படுகிறது" எனத் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசிய கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், ``சமீபத்திய ஆண்டுகளில் நாங்கள் செய்த அப்டேட் தொடர்பான மேம்பாடுகளுக்கு இணங்க, பல ஆண்டுகளுக்கு முன்பு மாற்றிய காலாவதியான கொள்கைகளின் அடிப்படையில் இந்த வழக்கை அணுகி, முடித்திருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.‘‘அபராதம் விதித்து, வருமானத்தைப் பெருக்காதீர்கள்...’’ வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ எச்சரிக்கை!
http://dlvr.it/Sw85rD

Thursday, 14 September 2023

`எங்கள் நாட்டுக்கு நீங்கள் வருகை தர வேண்டும்!' - புதினை வடகொரியாவுக்கு அழைத்த கிம் ஜாங் உன்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சமீபத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டது உலகளவில் கவனம் பெற்றது. அவர்களின் சந்திப்பின்போது, அமெரிக்கா குறித்து இரு நாடுகளுக்கும் இருக்கும் தனித்தனி மோதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாக, ரஷ்யா - வடகொரியா நாடுகளின்மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளில் தளர்வு மற்றும் ஆயுத வளர்ச்சிக்கு இரண்டு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுதல் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.கிம் ஜாங் உன் வட கொரிய அதிபர், ``மேலாதிக்க சக்திகளுக்கு எதிராக ஒரு புனிதமான போராட்டத்தை ரஷ்யா நடத்திவருகிறது. ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இனி ஒன்றாகப் போராடுவோம். புதின் மற்றும் ரஷ்ய தலைமையின் முடிவுகளை நாங்கள் எப்போதும் ஆதரிப்போம்" எனத் தெரிவித்திருந்ததும் பெரும் பேசுபொருளானது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை வடகொரியாவுக்கு வருமாறு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து வடகொரிய அரசின் KCNA செய்தி நிறுவனம், ``ரஷ்ய அதிபர் புதினிடம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு புதினை அழைத்திருக்கிறார். ரஷ்ய அதிபரும் இந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.புதின் ரஷ்யா- வடகொரியாவுக்கு இடையேயான நட்பின் வரலாறு மற்றும் பாரம்பர்யத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான தங்களின் விருப்பத்தை இரு நாடுகளின் தலைவர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்" எனக் குறிப்பிட்டிருக்கிறது. இரண்டு நாடுகளின் நெருக்கம் அவர்களை எதிர்க்கும் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறிவருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYகைது வாரன்ட்டுக்குப் பிறகு ரஷ்ய எல்லையைத் தாண்டாத புதின்... சீனாவுக்குச் செல்ல ஒப்புக்கொண்டது ஏன்?!
http://dlvr.it/Sw5wtC

பிற நாட்டினர் அமெரிக்கா வருவது குறைந்து விட்டது ஏன்? - தமிழரின் அனுபவ பகிர்வு| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் வளர்ந்த நாடுகளை நோக்கிப் பொருள் தேடிப் புறப்படும் வழக்கம்   பண்டைக் காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் நமக்கு வாழ்வை மேம்படுத்த வகுத்துக் கொடுத்த ஒரு வழி என்று கருதி பெரும்பாலான மக்கள் பிறந்த நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்குச் செல்வது இயல்பு. அறிவியல் வளர்ச்சி, ஊடகம் மற்றும் செய்தி தொலைத்தொடர்பு வாயிலாக உலகில் உள்ள பல நாடுகளை பற்றி நன்கு அறிந்து பின்னர் நாம் எந்த நாட்டிற்குச் சென்று குடியேறினால் நம் வாழ்வும் நம் சந்ததியினர் வாழ்வும் சிறக்கும் என்பதை இப்போது எளிதில் அறியமுடியும். அந்த வழியில் பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில்  குடியேறிய பலரில் நானும் ஒருவன். அமெரிக்காவின் அண்டை நாடுகளான கனடா எல்லையை நான் பலமுறை கடந்து இருக்கிறேன். ஒரு சில முறை மெக்சிகோ எல்லையையும் கடந்து இருக்கிறேன். ஆனாலும் கனடா-அமெரிக்கா இரு நாட்டு எல்லையைக் கடக்கும் பொழுது பெரிதாக வளர்ச்சி மற்றும் வாழ்வியல் மாற்றம் ஏதும் எனக்குத் தெரியாது.அமெரிக்கா-மெக்சிகோ எல்லை சென்ற வாரம் விடுமுறையின் போது அமெரிக்கா-மெக்சிகோ எல்லையை நடந்து கடக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் சில ஆண்டுகளுக்கு முன்னும் அமெரிக்கா - மெக்சிகோ எல்லையை நடந்து கடந்திருக்கிறேன், இப்போது நான் கவிதை, கட்டுரைகள் எழுதத் துவங்கியவனாக சென்றதால் என் எண்ண ஓட்டங்கள், இந்த எல்லையைப் பற்றி மேலும் சிந்திக்க வைத்தன. முதல் உலகநாடு தன் எல்லையை மூன்றாம் உலக நாட்டோடு பகிர்கின்றது. நீண்ட தூரம் தடுப்புச் சுவரை எழுப்பி, மலை கடல் என எல்லையை சுவர் தொடர்வதைக் காண முடிந்தது. என்ன கடலில் எல்லைச் சுவரா? ஆம்! கடலிலும் சுவர் எழுப்பி இரு நாட்டு எல்லைகளையும் பாதுகாத்து வருகின்றனர். 1,954 மைல்கள் மெக்சிகோ-அமெரிக்கா எல்லையானது 3,145 கிலோமீட்டர்கள் (1,954 மைல்கள்), பசிபிக் பெருங்கடலுக்குள் 29 கிமீ (18 மைல்) கடல் எல்லைகள் மற்றும் 19 கிமீ (12 மைல்) மெக்சிகோ வளைகுடா வரை நீண்டுள்ளது.அமெரிக்கா-மெக்சிகோ எல்லை மெக்சிகோவில், அமெரிக்க எல்லையை ஒட்டியுள்ள நெடுஞ்சாலையில் நாங்கள் வாகனத்தில் பயணித்து, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் மக்களின் கலாச்சாரத்தையும் அலச ஆரம்பித்தோம். எல்லை சுவரையொட்டி பல கதைகள், வரலாறு, வணிகம், வஞ்சம், போதைப் பொருள் கடத்தல், கொலை கொள்ளை எனப் பல சம்பவங்களைக் கேட்டறிந்தோம். இந்த எல்லையைக் கடக்கச் சட்டவிரோத ஏஜென்சிகள் உதவுவதாகப் பலர் தெரிவித்தனர். எல்லையைக் கடந்தவர்ளும் பலர் அந்த முயற்சியில் இறந்தவர்களும் பலர். மக்கள் எதற்காக  இப்படி எல்லையைக்  கடக்க வேண்டும்? யார் இவர்கள்? அவர்கள் எந்த நம்பிக்கையில் இப்படி சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கிறார்கள்? இதுபோன்ற பல கேள்விகளுக்கு  விடை தேட முற்பட்டு அங்கு உள்ளவர்களிடம் வினவத்  துவங்கினேன். மத்திய அமெரிக்க நாடுகளான  குவாத்தமாலா, பெலிஸ்,  எல்சல்வடார், ஹோண்டுரஸ், நிகரகுவா போன்ற மக்களும் மேலும் விசா மறுக்கப்பட்ட மற்ற நாட்டினரும் இப்படி சட்ட விரோதமாக எல்லையைக் கடக்கும்  முயற்சியில் ஈடுபடுவதாகவும்,  இருந்தாலும் இப்போது அதுபோல் கடப்பது குறைந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதைப்போன்றே H1-B விசாவில் பிற நாட்டினர் அமெரிக்கா வருவது குறைந்து விட்டதாகவும்  அறிந்து, அமெரிக்க குடியேற்றம் பற்றி மேலும் படிக்க ஆவலானேன். 2016- ஆம் ஆண்டு உச்சத்திலிருந்த  குடியேற்றம் பின்னர் வெகுவாக குறைய ஆரம்பித்துள்ளது.Representational Image முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப்  நிர்வாகத்தின் கொள்கைகள் இடம்பெயர்வு குறைவதற்குப் பங்களித்திருக்கலாம் எனப் பலர் நம்புகின்றனர். அதிபர்  டிரம்ப்  நிர்வாகத்தின் கொள்கை மாற்றங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பேச்சுக்கள் பலரை அமெரிக்காவிற்கு வரவிடாமல் தடுத்திருக்கலாம். ஆனால் அவை மட்டுமே காரணிகளாக இல்லை. சீனா, இந்தியா, மெக்சிகோ மற்றும் பல நாடுகளின் உள் நாட்டு வளர்ச்சியும் காரணமாகக் கூடும். கோவிட்-19 தொற்றுநோயால் குடியேற்ற அமைப்பில் பின்னடைவுகள் அதிகரித்தன. கோவிட்-19 தொற்றுநோய் போன்ற உலகளாவிய நிகழ்வுகள் இடம்பெயர்வு முறைகளைச் சீர்குலைத்து, பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக விசா வழங்குவதில் தடை நீண்ட இடைவெளி ஏற்பட்டது. அமெரிக்காவில் வழங்கப்படும் H-1B விசாக்களின் எண்ணிக்கை பல்வேறு காரணங்களுக்காக ஏற்ற இறக்கமாக மாறின. அமெரிக்க குடியேற்றக் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் H-1B விசாக்களை வழங்குவதை நேரடியாகப் பாதித்தது. H-1B விசாக்களில் கடுமையான கொள்கைகள் மற்றும் புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்காவிற்குள் நுழையும் திறமையான தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வழிவகுத்தது. Migration graph H-1B திட்டத்தில் மோசடி மற்றும் தவறான முறையில் பயன்படுத்துவதை முறியடிப்பதற்கான முயற்சிகள் விசா விண்ணப்பங்களின் அதிக ஆய்வுக்கு உட்பட்டு ஒப்புதல்கள் குறைக்கப்பட்டது. அமெரிக்காவில் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) கல்வி மற்றும் பயிற்சியை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் உள் நாட்டில் திறமையான தொழிலாளர்கள் கிடைக்க அமெரிக்கா பல உத்திகளைக் கையாள்கிறது. பல திறமையான தொழிலாளர்கள் இன்று அமெரிக்காவிலேயே கிடைக்கிறார்கள். அமெரிக்காவில் ஆவணமற்ற அல்லது சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் எண்ணிக்கை பல்வேறு காரணங்களுக்காக இறக்கமாக மாறின. மேலும் இது ஒரு சிக்கலான மற்றும் அடிக்கடி சர்ச்சைக்குரிய பிரச்சினை என்பதைக் கவனத்தில் கொண்டு அமெரிக்க அரசு அண்டை நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன், போதை மற்றும் கடத்தல் ஆகியவற்றைக் கட்டுப் படுத்தி அவரவர் நாட்டிலேயே வாழ ஏற்பாடு செய்கிறது. குடியேற்றக் கொள்கைகள் மற்றும் அமலாக்க நடைமுறைகளில் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியது. உதாரணமாக, அதிகரித்த எல்லைப் பாதுகாப்பு, கடுமையான விசா தேவைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நாடுகடத்தல் முயற்சிகள் ஆகியவை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய அல்லது தங்குவதற்கு முயல்வதில் இருந்து மக்களைத் தடுக்கிறது.Mexico அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் உள்ள பொருளாதார நிலைமைகள் ஆவணமற்ற குடியேற்ற வாசிகளின் ஓட்டத்தைப் பாதித்தது. ஒரு வலுவான அமெரிக்கப் பொருளாதாரம் வேலை தேடும் அதிக ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை ஈர்க்கக்கூடும், அதே நேரத்தில் பலவீனமான பொருளாதாரம் குறைவான வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் மற்றும் தஞ்சமடைய வருபவரின் ஊக்கத்தொகைகளைக் குறைக்கலாம். தஞ்சமடைய வருபவரின் எண்ணிக்கையும் ஒப்புதலும் குறைய ஆரம்பித்திருக்கிறது. ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது அவர்களின் எண்ணிக்கையை குறைத்தது. அமெரிக்க அரசாங்கம் அவ்வப்போது குடிவரவு அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் நாடு கடத்தல்களை நடத்துகிறது. இதன் விளைவாக நாட்டிலிருந்து பல ஆவணமற்ற நபர்கள் அகற்றப்பட்டனர். ஆவணமற்ற குடியேற்றம் என்பது அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. மேலும் அது எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொண்டு அந்தந்த நாடுகளின் அதிபர்கள் செயல் படவேண்டும்.Representational Image அமெரிக்கா என்னும் காந்த விசை மற்ற நாடுகளுக்கும் பரவுவதாகவே நான் உணர்கிறேன். ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் அண்டை நாடுகளுக்கும் முழுவதும் நீடிக்க வேண்டும். அமெரிக்கா இன்றும் பல நாட்டினரை ஈர்க்கும் விசையாகவும் சிறந்த உள்நாட்டுக் கொள்கைகளையும் கொண்ட பெரிய ஜனநாயக நாடாக உள்ளது என்பதில் ஐயம் ஏதுமில்லை. ஆக்கம்- முருகவேலு வைத்தியநாதன். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
http://dlvr.it/Sw5T4L

இந்திய மாணவி கார் ஏற்றி கொலை... கிண்டலடித்த அமெரிக்கா போலீஸ்; விசாரணை நடத்த இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்காவில் முதுகலை படித்துவந்த இந்தியா மாணவியொருவர், போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்ததை ஒரு போலீஸ் கிண்டலடித்த வீடியோ சமூக வலைதங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு அமெரிக்காவை இந்தியா வலியுறுத்தியிருக்கிறது.ஜாஹ்னவி கந்துலா - டேனியல் ஆடரர் (அமெரிக்க போலீஸ்) இது குறித்து வெளியான தகவலின்படி, உயிரிழந்த மாணவியின் பெயர் ஜாஹ்னவி கந்துலா (23) என்று தெரியவந்திருக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்தவரான இவர், Northeastern பல்கலைக்கழக்தில் முதுகலை படிப்பு படித்துவந்திருக்கிறார். இப்படியிருக்க, கடந்த ஜனவரி மாதம், கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி போதையில் 120 கி.மீ வேகத்தில் ஓட்டிச் சென்ற போலீஸ் வாகனம், ஜாஹ்னவி கந்துலா மீது மோதியது. இதில், மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில், விபத்து நடந்த பிறகு போலீஸாரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்த வீடியோவை கடந்த திங்களன்று, சியாட்டில் (Seattle) காவல் துறை ட்விட்டரில் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில், சியாட்டில் போலீஸ் அதிகாரிகள் குழுவின் துணைத் தலைவர் டேனியல் ஆடரர், குழு தலைவரிடம் ``அவர் இறந்துவிட்டார். அவருக்கு ஒரு 26 வயது இருக்கும். 11,000 டாலர் காசோலை எழுதுங்கள். அவருக்கு குறைந்த மதிப்பே இருந்தது'' என்று மாணவியை கேலிசெய்து சிரித்தார். Justice for #JaahnaviKandula pic.twitter.com/95zJrH9928— Desidudewithsign (@Nikhilsingh21_) September 13, 2023 இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரவே, இணையதளவாசிகள் பலரும், ஜாஹ்னவி கந்துலாவுக்கு நீதி வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் (San Francisco) உள்ள இந்திய துணைத் தூதரகம் தற்போது, மாணவியின் இறப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அரசை வலியுறுத்தியிருக்கிறது. மேலும், மாணவியின் உறவினர் ஒருவர், ``இந்த மரணம் தொடர்பாக மாணவியின் குடும்பத்தினர் கூறுவதற்கு என்ன இருக்கிறது. வாழ்க்கை என்பது வாழ்க்கை தானே" என்று இணையத்தில் பதிவிட்டிருந்தார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYஅமெரிக்கா: திருடியதாக குற்றச்சாட்டு; போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்ட கறுப்பின கர்ப்பிணி- என்ன நடந்தது?
http://dlvr.it/Sw51yl

Wednesday, 13 September 2023

``ரஷ்யாவின் புனிதப் போருக்கு ஆதரவளிப்போம்!'' - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உறுதி

டெல்லியில் உலக நாடுகள் பங்கேற்ற G20 மாநாட்டுக்குப் பிறகு, இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்துப் பேசிய விவகாரம் உலகளவில் கவனம் பெற்றிருக்கிறது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சென்ற ரயில் நேற்று ரஷ்யா - வடகொரியா எல்லையான காசானில் நிறுத்தப்பட்டது. அங்கு வடகொரிய அதிபரை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.ரஷ்ய அதிபர் - வடகொரிய அதிபர் அமைச்சர் அலெக்சாண்டர் கோஸ்லோவ் மற்றும் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் வடகொரிய அதிபரை வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் கிழக்கு காஸ்மோட்ரோவில் ரஷ்ய அதிபரும், வடகொரிய அதிபரும் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பில், அமெரிக்கா குறித்து இரு நாடுகளுக்கும் இருக்கும் தனித்தனி மோதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், ரஷ்யா - வடகொரியா நாடுகளின் சந்திப்பை பொறுத்தவரை, தங்கள் நாட்டின்மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளில் தளர்வு மற்றும் ஆயுத வளர்ச்சிக்கு இரண்டு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய அதிபர் புதின் அதைத் தொடர்ந்து, வடகொரிய அதிபர் தெரிவித்ததாக அவரது மொழிப்பெயர்ப்பாளர் மூலம் வெளியான தகவலில், ``ரஷ்யா தனது இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலாதிக்க சக்திகளுக்கு எதிராக ஒரு புனிதமான போராட்டத்தை நடத்திவருகிறது. எனவே, இரு நாடுகளும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஒன்றாகப் போராடும். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ரஷ்ய தலைமையின் முடிவுகளை நாங்கள் எப்போதும் ஆதரிப்போம். ரஷ்ய அதிபரின் வேலைப்பளு அதிகம் இருந்தாலும், என்னைச் சந்திக்க வந்ததில் மகிழ்ச்சி. அவரின் வருகைக்கு நன்றி" எனக் கூறியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ``வடகொரியாவின் செயற்கைக்கோள் தொழில்நுட்ப திறனை மேம்படுத்த ரஷ்யா உதவும்" என்று புதின் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYகலிபோர்னியாவில் உணரப்பட்ட நிலநடுக்கம் | பஞ்சத்தால் இறக்கும் வடகொரிய மக்கள் - உலகச் செய்திகள்
http://dlvr.it/Sw2lbJ

`சுடச்சுட' பரிமாறப்படும் ஐஸ்கட்டிகள்... சீனாவில் டிரெண்ட் ஆன Grilled Ice Cubes!

சீனா என்றாலே விநோதமான உணவுகளுக்குப் பெயர்போன நாடு என்பது நமக்குத் தெரியும். பாம்பு, பல்லி, கரப்பான்பூச்சி என்று எதையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை; அவற்றைக் கொண்டு வித்தியாசமான, சுவையான உணவுகளைத் தயாரித்து ருசிக்கின்றனர். குறிப்பாக விதவிதமான தெரு உணவுகள் பலவும் சீனாவில் பிரபலம். அந்த வகையில் தற்போது Grilled Ice Cube எனப்படும் தீயில் வாட்டப்பட்ட ஐஸ் க்யூப்ஸ் , அங்கு பிரபலமாகி இருக்கிறது. ஜியாங்சி மாகாணத்தின், நான்சாங்கில் உள்ள தெரு உணவுக்கடை ஒன்றில் Grilled Ice Cube செய்யும் வீடியோ வைரலாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், பெரிய ஐஸ் துண்டுகளைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டுள்ளது.Grilled Ice Cube அதனை சமைப்பவர், ஐஸ் கட்டிகளை தீயில் காட்டி சூடாக்கி வாட்டி, அதன் மீது சாஸ் மற்றும் மசாலாவை ஊற்றுகிறார். அதாவது, சூடான தீயில் கிரில் பிளேட்டின் மீது பெரிய பனிக்கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து நீர்த்துளிகள் உருகி தீ ஜுவாலையில் சொட்டுகின்றன. அப்போது, ஒரு பிரஷ்ஷின் மூலம் எண்ணெயை ஐஸ் மீது விடுகிறார். இதற்குப் பிறகு, பல்வேறு வகையான மசாலாப் பொருள்கள், சாஸ்கள் மற்றும் இறுதியாக எள் உள்ளிட்டவை தூவப்படுகின்றன. அத்துடன், ஐஸ் துண்டுகளின் மீது நறுக்கிய பச்சை மிளகாயை வைத்து பரிமாறப்படுகிறது. இந்த உணவை, உருகத் தொடங்கும் முன்புவரை சூடாகவும், உருகத் தொடங்கியதும் ஜில்லென குளிர்ந்த பதார்த்தமாகவும் சாப்பிடலாம். இருப்பினும், இந்தச் சிற்றுண்டியை எப்படி சாப்பிடுகின்றனர் என்பது அந்த வீடியோவில் காட்டப்படவில்லை. இது கோடையில் மிகவும் பிரபலமாக உள்ளது, இது இலவச விருந்தாக வழங்கப்படுகிறது. Grilled ice cubes are now the most popular street food in Nanchang, China. pic.twitter.com/zKFNlmHeHb— Yup That Exists (@yupthtexists) September 4, 2023 சீனாவில் வாடகை அப்பாக்கள் அறிமுகம்: Bath House-க்கு ஆண் குழந்தையோடு வரும் அம்மாக்களுக்கு உதவ திட்டம் சீனாவில் இதுபோன்ற விநோதமான உணவு வகைகள் தயாரித்து பரிமாறப்படுவது முதல்முறை அல்ல. முன்னதாக, சீனாவில் இரவுச்சந்தை ஒன்றில் உள்ள உணவுக்கடை ஒன்றில், கிளறி வறுத்த கூழாங்கற்கள் விற்கப்படுவதாக, இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது, சீன சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அந்த வீடியோ, மத்திய சீன மாகாணமான ஹுனானில் ஒரு விற்பனையாளர் மிளகாய், பூண்டு, ரோஸ்மேரியுடன் வறுத்த கூழாங்கற்களை விற்பதைக் காட்டியது. அப்போது அந்த உணவு இந்திய மதிப்பில் ரூ. 184-க்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Sw1vPq

Tuesday, 12 September 2023

North Korea to Russia: கிம் ஜாங் உன்னின் `அச்சமும்' மணிக்கு 59 கி.மீ தாண்டாத கவச ரயில் பயண கதையும்!

உலக அளவில் தங்களுடைய அணு ஆயுத சக்திகளால் அமெரிக்காவை அச்சுறுத்தும் நாடுகளில் ஒன்றாக வடகொரியா இருந்து வருகிறது. அதிலும், எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் திடீர் திடீரென அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்வது என தன்னுடைய அடுத்தகட்ட நகர்வுகள், பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை ரகசியமாக வைத்திருத்தல் போன்றவற்றில் அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) கவனமாக இருந்துவருகிறார்.கிம் ஜாங் உன் தன்னைப் பற்றிய தகவல்கள், பாதுகாப்பு வசதிகள் போன்றவற்றில் எவ்வளவு ரகசியமாக இருக்கிறாரோ, அதைவிடவும் சின்ன சின்ன தவறுகளுக்கும் கடுமையான தண்டனைகளை விதித்து மக்களை எப்போதும் ஒருவித அச்சத்திலேயே வைத்திருப்பார் கிம் ஜாங் உன். இத்தகைய சூழலில், ஆயுதப் பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய அதிபர் புதினை, கிம் ஜாங் உன் இந்த மாதம் சந்திக்கவிருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார். அதற்கேற்றவாறே, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக, ரஷ்யாவுக்குச் சென்று அதிபர் புதினை சந்திக்கவிருக்கிறார் கிம் ஜாங் உன். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் வடகொரியாவிலிருந்து ரஷ்யா வரை சுமார் 1,180 கிமீ தொலைவை, மணிக்கு 59 கி.மீ வேகத்துக்கு மேல் செல்ல முடியாத கனமான, அதிக பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய சொகுசு ரயிலில் சுமார் 20 மணிநேர பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார் கிம் ஜாங் உன். மேலும், ரயில் முழுவதும் ராணுவ அதிகாரிகள் படை சூழ பாதுகாப்புடன் கிம் ஜாங் உன் சென்றிருக்கிறார்.கிம் ஜாங் உன் - புதின் மணிக்கு 300 கி.மீ மேல் செல்லும் புல்லட் ரயில், உலகின் எந்த நாடுகளுக்கும் செல்லும் விமான வசதி போன்றவை வந்துவிட்ட இந்த காலத்தில், மணிக்கு 59 கி.மீ கூட தாண்டாத ரயிலில் கிம் ஜாங் உன் சென்றது ஏன், அவ்வளவு அச்சமா என்ற கேள்வி எழுவதில் ஆச்சர்யமில்லை. ஆனால் கிம் ஜாங் உன், விமான பயணத்தை விரும்பாமல், ரயில் பயணத்தை விரும்புவதற்குப் பின்னால் இருக்கும் கதைகளும், அதற்கான காரணிகளும் சற்று ஆச்சர்யமானவையே. கிம் ஜாங் உன்னின் தந்தையான கிம் ஜாங் இல் (Kim Jong Il) மற்றும் தாத்தா கிம் இல் சுங் (Kim Il Sung) ஆகியோர், வானில் பறக்க அச்சப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி தென்கொரிய ஊடகங்கள், சோதனை ஓட்டத்தின் போது தங்கள் ஜெட் வெடித்ததைக் கண்டதிலிருந்து கிம் ஜாங் இல்லுக்கும், கிம் இல் சுங்குக்கும் அந்த பயம் தொற்றிக்கொண்டதாக முன்பு தெரிவித்திருக்கின்றன. அதேபோல், அந்த சம்பவத்துக்குப் பிறகு, 1986-ல் கிம் இல் சுங் சோவியத் யூனியனுக்குப் விமானத்தில் சென்றதே, கடந்த மூன்று தசாப்தங்களில், வடகொரிய தலைவர் ஒருவர் வெளிப்படையாக மேற்கொண்ட விமானம் பயணம் என்று சொல்லப்படுகிறது. மேலும், கடந்த 2001-ல் புதினை சந்திக்கும் விதமாக ரஷ்யாவுக்குச் செல்ல 10 நாள்கள் ரயில் பயணம் மேற்கொண்டார் கிம் ஜாங் இல்.கிம் ஜாங் உன் இருப்பினும் கிம் ஜாங் உன், சுவிட்சர்லாந்தில் தனது பள்ளி நாட்களின்போது அடிக்கடி விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், கடந்த 2011-ல் வடகொரியாவின் அதிபராகப் பதவியேற்றுக்கொண்ட கிம் ஜாங் உன், 2018-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சிங்கப்பூரில் சந்திப்பது உட்பட சில சமயங்களில் விமான பயணத்தை அவர் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறதே தவிர அதிகாரபூர்வமாக விமான பயணம் குறித்த அறிக்கைகள் எதுவுமில்லை. தற்போது ரஷ்யாவுக்கு விமானத்தில் செல்லாமல், ரயிலிலேயே சென்ற கிம் ஜாங் உன்னுக்குப் பின்னால், அவரின் தந்தை, தாத்தா ஆகியோர்களின் விமான வழி பயண அச்சங்களே காரணங்களே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் சர்வதேச எல்லைகளை கடக்கும் நிலை ஏற்படுவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக விமான போக்குவரத்தை அவர் விரும்புவதில்லை என்கிறார்கள். கிம் ஜாங் உன் பயணித்த ரயிலின் சிறப்பம்சங்கள் என்ன? கிம் ஜாங் உன் பயணித்த இந்த பச்சை நிற ரயில் மொத்தமாக 90 பெட்டிகள் கொண்டது என்கிறார்கள். அனைத்து பெட்டிகளுமே குண்டு துளைக்க முடியாதவை. ரயிலினுள் யார் யார் இருக்கிறார்கள் என்பது வெளியில் தெரியாத வகையில் ரயிலின் ஜன்னல்களுக்கு வண்ணமடிக்கப்பட்டிருக்கின்றன.கிம் ஜாங் உன் மேலும் ரயிலுக்குள் இருப்பவர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, விலையுயர்ந்த பிரெஞ்ச் ஒயின், இரால் மற்றும் பன்றி இறைச்சி பார்பிக்யூவைக் கொண்டு செல்லும் உணவகமும் இருக்கிறது. இவை தவிர, ஆலோசனை நடத்துவதற்கான அறை, படுக்கையறை, செயற்கைக்கோள் தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் போன்றவையும் ரயிலில் இருக்கின்றன. ரயிலின் எடையும் மிக மிக அதிகம். கிம் ஜாங் உன் மணிக்கு 59 கி.மீ வேகத்தில் மட்டுமே இந்த ரயில் நகரும். அதேபோல் ரயிலினுள் இருக்கும் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் மிகவும் தீவிரமானவர்கள். இவர்கள், தாங்கள் பயணிக்கும் வழித்தடங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றில் வெடிகுண்டுகள் இருக்கின்றனவா என்பவற்றை ஸ்கேன் செய்கின்றனர். இந்த ரயில் எந்த அளவுக்குப் பாதுகாப்பானதோ, அதே அளவுக்கு சொகுசானதும் கூட. விமானத்தை விட கவச ரயில் அதிக பாதுகாப்பையும் ஆடம்பரத்தையும் வழங்குகிறது என்று கிம் ஜாங் உன் நம்புகிறார்.10 வயது மகளை முன்னிறுத்தும் கிம் ஜாங் உன்! - வடகொரியாவின் அடுத்த அரசியல் வாரிசா? மேலும், மொத்தம் மூன்று ரயில்கள் பயணிப்பதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. முதல் ரயில், பாதையில் எந்த தடையும் இல்லை என்பதை உறுதி செய்யும் எனவும் மூன்றாவது ரயிலில் பாதுகாப்பு வீரர்கள் குழு பயணிக்கும் எனவும் ஒரு தகவல் இருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY
http://dlvr.it/SvzB79

Monday, 11 September 2023

``ஜி20 மாநாட்டை அரசியலாக்கும் முயற்சிகள் தடுக்கப்பட்டன'' - இந்தியாவைப் பாராட்டிய ரஷ்ய அமைச்சர்!

டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு ஒரு மைல்கல் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவைப் பாராட்டியிருக்கிறார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து சுமார் ஒன்றரை வருடங்களைக் கடந்துவிட்டன. இன்னும் சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைன், ரஷ்யாவிலுள்ள பல்வேறு இடங்களில் இயல்பு நிலை திரும்பாமல் இருக்கிறது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய எதிர்ப்புகளைப் பதிவுசெய்து வருகின்றன. இந்தச் சூழலில், உக்ரைன், ரஷ்யா என இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பேணிகாத்துவரும் இந்தியா, தற்போது ஜி20 நாடுகளுக்கு தலைமை வகித்து வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. அதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். ஜி20-யில் உறுப்பினராக இருக்கும் ரஷ்ய அதிபர் புதின் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்துகொண்டார். ஜி20 மாநாட்டில் டெல்லி பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்தப் பிரகடனத்தில், உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவின் பெயரைக் குறிப்பிட்டு அந்த நாட்டுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. ஆனால், போர் குறித்து இந்தியா சார்பில் கண்டிப்புடன் அறிவுரை மட்டுமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், `` டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு ஒரு மைல்கல். இது ஒரு திருப்புமுனை உச்சிமாநாடு, இது பல முக்கியத் துறைகளில் முன்னேற ஒரு வழியை வழங்குகிறது. ஜி20 மாநாட்டை அரசியலாக்கும் முயற்சிகள் தடுக்கப்பட்டன. உக்ரைனில் நடந்த போர் பற்றி ஜி20 நிகழ்ச்சி நிரலில் எடுத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்படவில்லை. உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலை உக்ரைன்மயமாக்கும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிகளை எங்களால் தடுக்க முடிந்தது. ரஷ்ய வெளியுறவுதுறை அமைச்சர் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க, வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 100 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்குவதாக அளித்த வாக்குறுதியில், மேற்கு நாடுகள் எதையும் செய்யவில்லை. எல்லோரும் அமைதியை விரும்புகிறார்கள். சுமார் 18 மாதங்களுக்கு முன்பு, இந்த மோதலைத் தீர்ப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாங்கள் ஒப்புக்கொண்டோம். அதன் பிறகு, ஆங்கிலோ-சாக்சன்கள் உத்தரவின்படி ஜெலென்ஸ்கி அதற்கு உடன்படவில்லை. இப்போது உக்ரேனிய அதிகாரிகள் ரஷ்யர்களை உடல்ரீதியாக துன்புறுத்துவதாக அச்சுறுத்துகின்றனர்'' எனத் தெரிவித்திருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYஇன்ஸ்டா மோகம்: ராணுவ வீரர்களின் கல்லறைமீது நடனம்; 2 பெண்களுக்கு சிறை - உக்ரைன் அரசு நடவடிக்கை
http://dlvr.it/SvwZBg

``மனித உரிமை மீறல், பத்திரிகைச் சுதந்திரம் குறித்து மோடியிடம் பேசினேன்" - ஜோ பைடன்

டெல்லியில் நடந்து முடிந்த G20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். G20 மாநாட்டின் இறுதியில் பிரதமர் மோடி, G20 அமைப்பின் அடுத்த தலைமைப் பதவிக்கான அடையாளக் குறியீடை (தலைமை பொறுப்பை) பிரேசில் அதிபரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.G20 அதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியட்நாமின் ஹனோயில் செய்தியாளர் சந்தித்துப் பேசினார். அப்போது, "இந்தியப் பிரதமர் G20 மாநாட்டை நடத்தியதற்கும், அவரது விருந்தோம்பலுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியப் பிரதமர் அமெரிக்கா வந்தபோது இந்திய - அமெரிக்க கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தோம். தற்போது நான் இந்தியா சென்றபோது, மனித உரிமைகளைப் பேணுவதின் முக்கியத்துவம் குறித்தும், ஊடகங்களின் சுதந்திரம் ஒரு நாட்டை எப்படி வளமாக்கும் என்பது குறித்தும் எடுத்துரைத்தேன். சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், பன்மைத்துவம், மற்றும் அனைத்துக் குடிமக்களுக்கும் சம வாய்ப்புகள் போன்ற பொதுவான மதிப்புகள் நமது நாடுகளின் முன்னேற்றத்துக்கு முக்கியமானவை என்றும், இந்த மதிப்புகள் நமது உறவை வலுப்படுத்துவதாகவும் G20 மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து நாடுகளின் தலைவர்களும் வலியுறுத்தினர். உலகெங்கிலும் இருக்கும் மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சவால்களைத் தீர்ப்பதற்காக அமெரிக்கா தலைமையையும் எங்கள் அர்ப்பணிப்பையும் நிரூபிக்கவும், நிலையான வளர்ச்சியில் முதலீடு செய்தல்,அதிபர் ஜோ பைடன் பருவநிலை நெருக்கடியை நிவர்த்தி செய்தல், உணவுப் பாதுகாப்பு, கல்வியை வலுப்படுத்துதல், உலகளாவிய சுகாதாரம், சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல் என அமெரிக்கா உலகுக்கு நேர்மறையான பார்வையுடன் இருப்பதை உணர்த்தியிருக்கிறோம். மேலும், இந்த G20 மாநாட்டில், உக்ரைனில் சட்ட விரோதப் போர் குறித்தும் விவாதிக்கப்பட்டது. உக்ரைனுக்குத் தேவைப்படும் நியாயமான அமைதி குறித்தும் விவாதித்தோம். வியட்நாம், பிற ஆசிய நாடுகளுடன் அமெரிக்காவின் உறவுகளை கட்டியெழுப்புவதன் மூலம் உலகம் முழுவதும் உறுதித்தன்மையை வழங்குவதே எங்கள் குறிக்கோள்" எனக் குறிப்பிட்டார்.ஜி20 மாநாடு: அதிபர் ஜோ பைடன் வருகையால் இந்த பொருள்களுக்கான கூடுதல் வரி நீக்கம்!
http://dlvr.it/SvwZ83