அதிர்ஷ்டம் என்று ஒன்று இல்லையென்றாலும்கூட, நாம் எதிர்பாராத ஒன்று எதிர்பாராத நேரத்தில் நமக்குக் கிடைக்கும்போது, அதை நாமே அதிர்ஷ்டம் என்று கூறிக்கொள்கிறோம். பலருக்கும் அப்படிப்பட்ட ஒருவகையான அதிர்ஷ்டம்தான் லாட்டரி. ஆனால், லாட்டரியில் அதிர்ஷ்டம் அடித்த பல பேர் அந்தப் பணத்தை வைத்து தங்கள் குடும்பத்துக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கையில், சிலர் மட்டும் அதற்கு நேரெதிராக பிறருக்கு எவ்வாறு உதவலாம் என்று யோசிக்கும்போது அதன் மதிப்பு இன்னும் அதிகமாகிவிடுகிறது.லாட்டரியில் ரூ.82 லட்சம் வென்ற சோலிமேனே சனா
அதுபோலத்தான், அமெரிக்காவில் ரூ.82 லட்சத்தை லாட்டரியில் வென்ற ஆப்பிரிக்க நபர் ஒருவர் செய்திருக்கும் செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. ஆப்பிரிக்காவின் மாலியை பூர்வீகமாகக் கொண்டவர் சோலிமேனே சனா (Souleymane Sana). அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் (north carolina) நியூ பெர்ன் (New Bern) பகுதியில் வசிக்கும் சோலிமேனே சனா ஒரு நடன பயிற்றுவிப்பாளர். இவர் கொஞ்ச நாள்களுக்கு முன்னர் 30 மில்லியனர் மேக்கர் ($30 Millionaire Maker) லாட்டரி டிக்கெட்டை வாங்கினார். இந்த நிலையில் கடந்த 16-ம் தேதியன்று இவருக்கு ஒரு லட்சம் டாலர் (ரூ. 82 லட்சம்) லாட்டரி அடித்திருக்கிறது.
அதைத் தொடர்ந்து அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள லாட்டரி தலைமையகத்துக்குச் சென்ற சோலிமேனே சனா, மாநில மற்றும் கூட்டாட்சி வரி (state and federal tax) போக 71,259 டாலரைப் பெற்றுக்கொண்டார் (இந்திய மதிப்பில் ரூ.58,93,083.67). பின்னர் அந்தப் பணத்தில் அடுத்த என்ன செய்யப்போகிறார் என்பது குறித்துப் பேசிய சோலிமேனே சனா, ``இந்தப் பணத்தைக் கொண்டு மாலியிலுள்ள குழந்தைகளுக்கு நிறைய வகுப்பறைகளைக் கட்டித்தர என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்யப்போகிறேன். உண்மையில் அது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தரும்.லாட்டரியில் ரூ.82 லட்சம் வென்ற சோலிமேனே சனா
இது என்னுடைய கனவு. நான் அந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. இதன்மூலம் அவர்களுக்குத் தொடர்ந்து உதவ முடியும். அதுமட்டுமல்லாமல், எனக்கு நடனமாடுவது மிகவும் பிடிக்கும். மாலியிலுள்ள குழந்தைகளுக்கும் அதை கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். மேலும், நீங்கள் அவர்களுக்குக் கல்வி மற்றும் கலாசாரம் பற்றி பேசினால், அவர்கள் இரண்டிலும் ஒன்றாகச் செல்வர். என்னுடைய கனவு கொஞ்சம் கொஞ்சமாக நனவாகி வருகிறது. அது தொடரும் என்று நம்புகிறேன்" என்றார். சோலிமேனே சனாவின் இத்தகைய செயல் பலரிடமிருந்து பாராட்டுகளைக் குவித்துவருகிறது.ரூ.457 கோடி சொத்துகள் முடக்கம் - லாட்டரி மார்ட்டினின் பின்னணி!
http://dlvr.it/SpXtxf
Wednesday, 24 May 2023
Home »
» Lottery-ல் விழுந்த ரூ.82 லட்சம்; தன் செயலால் மக்களை நெகிழவைத்த இளைஞர்! - அப்படி என்ன செய்தார்?







0 comments:
Post a Comment