அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் 1990-களில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் டிரஸ்ஸிங் அறையில் அமெரிக்க எழுத்தாளர் ஈ ஜீன் கரோல் என்பவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், நீதிமன்றம் டொனால்டு ட்ரம்ப் மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண் எழுத்தாளர் ஈ ஜீன் கரோலுக்கு ரூ.41 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்தது.இ.ஜீன் கரோல் - டொனால்டு ட்ரம்ப்
இந்தத் தீர்ப்பை வரவேற்ற எழுத்தாளர் ஈ ஜீன் கரோல் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "இன்று, உலகம் இறுதியாக உண்மையை அறிந்திருக்கிறது. இந்த வெற்றி எனக்கு மட்டுமல்ல, அவரால் பாதிக்கப்பட்டு, நம்பப்படாமல் அவதிப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து டொனால்டு ட்ரம்ப்பின் செய்தித் தொடர்பாளர், "ட்ரம்ப் மீதான இந்தத் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்வோம். அதுவரை நஷ்டஈடு வழங்க மாட்டோம்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், டொனால்டு ட்ரம்ப் தனியார் செய்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்திருக்கிறார். அதில்,"என்மீது குற்றம்சாட்டிய பெண், யாரென்றே எனக்குத் தெரியாது. நான் அவரைச் சந்தித்ததே இல்லை. என் குழந்தைகள்மீது சத்தியம் செய்கிறேன்.டொனால்ட் ட்ரம்ப்
நான் ஒருபோதும் அந்தப் பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்யவில்லை. என்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஒரு போலிக் கதை. உருவாக்கப்பட்ட கதை. என் வழக்கை விசாரித்த நீதிபதி எங்கள் தரப்பு கருத்தைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் அனுமதித்தார்" எனத் தெரிவித்திருக்கிறார்.களத்தில் டொனால்ட் ட்ரம்ப்... `2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார்’ என அறிவிப்பு!
http://dlvr.it/SntBsv
Thursday, 11 May 2023
Home »
» ``என் குழந்தைகள்மீது சத்தியமாக...!'' - பாலியல் புகார் குறித்து மனம் திறந்த டொனால்டு ட்ரம்ப்!






0 comments:
Post a Comment