உக்ரைனின் பாக்முட்டில் 20,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் வாக்னர் படைத் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவில் கறுப்பினத்திலே பிறந்து மிகப்பெரிய பாடகியாக விளங்கிய டினா டர்னர் (Tina Turner) தன்னுடைய 83-ம் வயதில் காலமானார்.
அமெரிக்காவுக்கான புதிய தூதரை சீனா நியமித்திருக்கிறது. Xie Feng என்ற புதிய தூதரின் வருகை இரு நாடுகளின் உறவுகளிலும் மாற்றங்களைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபுளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ், 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். இது ட்ரம்ப்புக்கு சவால்விடும் வகையில் அமைந்திருக்கிறது. இவரின் பங்கேற்பு குடியரசுக் கட்சியின் பங்கை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதன்முறையாக பல்கேரியாவைச் சேர்ந்த எழுத்தாளரான Georgi Gospodinov இந்த ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசைப் பெற்றிருக்கிறார். 'டைம் ஷெல்டர்' என்ற அவருடைய காமிக் நாவலுக்காக இந்த விருதைப் பெற்றிருக்கிறார்.
வடகொரியா தற்போது புதிய செயற்கைக்கோள் தளத்தை உருவாக்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
பிரிட்டனைச் சேர்ந்த 36 வயதான McDonald என்பவர், ஏழு நாள்களில் ஏழு உலக அதிசயங்களையும் பார்வையிட்டு கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.
WWE புகழ் Billy Graham அவருடைய 79-ம் வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் இழப்புக்காக சக வீரர்கள் இரங்கல்களைப் பதிவு செய்துவருகின்றனர்.
18-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள், லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் 140 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.
http://dlvr.it/SpcV2y
Thursday, 25 May 2023
Home »
» `Booker Prize' பெற்ற பல்கேரிய எழுத்தாளர்| 140 கோடி ரூபாய்க்கு ஏலம்போன வாள் - உலகச் செய்திகள்







0 comments:
Post a Comment