திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கோலர் தங்க வயல் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தை ஆஸ்கர், கேன்ஸ் உள்ளிட்ட திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு, பெரும் பொருள்செலவில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை, இந்தாண்டு இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விக்ரமின் அசுர நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்நிவையில், தங்கலான் திரைப்படத்தை ஆஸ்கர், கேன்ஸ் உள்ளிட்ட 8 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/2zSgqr8 https://ift.tt/e74MKwk
via
IFTTT
0 comments:
Post a Comment