ஐ.டி ரெய்டு... சிக்கலில் அமைச்சர் செந்தில் பாலாஜி - டெல்லி 'ஆட்டம்' ஆரம்பமா?!
செந்தில் பாலாஜி, ஐ.டி ரெய்டு
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 40-க்கும் அதிகமான இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பா.ஜ.க அரசு அரசியல்ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கையாக இது போன்ற ரெய்டுகளை நடத்துவதாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
தி.மு.க அமைச்சரவையில் செந்தில் பாலாஜி பவர்ஃபுல் அமைச்சராக வலம் வருகிறார். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் திமுக-வை பலப்படுத்துவதற்கான பொறுப்பு செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்தே அவர் மீது பா.ஜ.க ஒரு கண் வைக்கத் தொடங்கியது.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவ்வப்போது கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில், இந்த 'ரெய்டு நடவடிக்கை 'டெல்லி 'ஆட்டம்' ஆரம்பமா..?' என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
இன்றைய ரெய்டு குறித்த முழுமையான பின்னணி தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...
IT ரெய்டு: அதிகாரிகளுடன் திமுக-வினர் வாக்குவாதம்... பரபரப்பு... முழு அப்டேட்!
ரெய்டுக்கு வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம்
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்வதற்காகச் சென்ற வருமான வரித் துறை அதிகாரிகளை, அமைச்சரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு, அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறி ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அதிகாரிகளின் காரையும் ஓரிடத்தில் உடைத்துச் சேதப்படுத்தினர். அதன் காரணமாக அதிகாரிகள் சில இடங்களில் சோதனை நடத்த முடியாமல் திரும்பவும் நேர்ந்தது.
இந்த நிலையில், இந்த ரெய்டு குறித்து செந்தில் பாலாஜி தெரிவித்த பதில் உள்பட இது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
------------------------
மேலும்,
அன்று வேலுமணியின் நிழல்; இன்று செந்தில் பாலாஜியின் வலதுகரம் - ஐ.டி ரேடாரில் செந்தில் கார்த்திகேயன்!
படிக்க இங்கே க்ளிக் செய்க...
வருமான வரித்துறையினர் வருவது திமுக-வுக்கு தெரியும்போது காவல்துறைக்கு தெரியாதா?!" - அண்ணாமலை
படிக்க இங்கே க்ளிக் செய்க...அண்ணாமலை
"ஸ்டாலின் இல்லாத நேரம்... செந்தில் பாலாஜியை முடக்க கேவலமான அரசியல் செய்கிறது பாஜக!" - ஆர்.எஸ்.பாரதி
படிக்க இங்கே க்ளிக் செய்க...
"வருமான வரி சோதனை எல்லாம் கண்துடைப்பு!" - பேரம் நடப்பதாக சீமான் காட்டம்
படிக்க இங்கே க்ளிக் செய்க...
'உப்பைத் தின்றவன் தண்ணீரைக் குடித்துதான் ஆக வேண்டும்!' - செந்தில் பாலாஜியைச் சாடும் செம்மலை
படிக்க இங்கே க்ளிக் செய்க...
கருணாநிதி பிறந்தநாள் விழா... ரத்தான குடியரசுத் தலைவர் வருகை!
திரௌபதி முர்மு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட தி.மு.க அரசு பெரும் முயற்சிகளை எடுத்துவருகிறது.
இந்த நிலையில், கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறந்துவைக்க இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வரும் ஜூன் 5-ம் தேதி திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவிலும் அவர் கலந்து கொள்வதாக இருந்தது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணி தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...
எப்படி தயாராகின்றன வந்தே பாரத் ரயில்கள்? - சென்னை ICF ஸ்பாட் விசிட் | Photo Story
ICF விசிட்
வந்தே பாரத் ரயில்கள் எப்படி தயாராகின்றன என்பது குறித்த விகடன் புகைப்பட கலைஞரின் ஸ்பாட் விசிட் படங்களின் தொகுப்பை பார்க்க இங்கே க்ளிக் செய்க...
சீனாவில் பரவும் புதிய கொரோனா... அச்சத்தில் உலக நாடுகள்!
கோவிட் வைரஸ்
சீனாவில், ஓமிக்ரான் துணை வகை XBB வைரஸ் மூலம் மீண்டும் கொரோனா விரைவாகப் பரவி வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் புதியவகை கொரோனா அலை, ஜூன் மாத இறுதிக்குள் சீனாவில் உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்த தகவலால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
இனி எல்லாம் AI - புதிய தொடர்...
இனி எல்லாம் AI
ChatGPT 3.5 தொழில்நுட்பம் வெளிவந்த சில மாதங்களிலேயே ஜெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்திருக்கிறது.
அதென்ன GPT? எதற்காக 3.5? என்றெல்லாம் எழும் கேள்விகளுக்கு மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவுத் தளம் நடந்து வந்த பாதை, சமகால வெளியீடுகள் மற்றும் தாக்கங்கள் என்பவற்றையெல்லாம் ஆழமாக அலசும் 'இனி எல்லாம் AI' என்ற புதிய தொடர் இந்த வார ஆனந்த விகடன் இதழில் ஆரம்பம்...
விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமான அன்டன் பிரகாஷ்தான் இதனை எழுதுகிறார்.
படிக்க இங்கே க்ளிக் செய்க...
'கழுவேத்தி மூர்க்கன்' - விமர்சனம்
கழுவேத்தி மூர்க்கன்
க்ரைம் த்ரில்லர் ஜானர் படங்கள், நகர்ப்புறத்தை மையமாகக் கொண்ட கதைக்களமெனத் தொடர்ந்து வித்தியாசமாக நடித்து வந்த அருள்நிதி, இதில் கமர்ஷியல் ரூட்டில் கிராமத்து இளைஞன் மூர்க்கனாக மீசையுடன் வலம் வருகிறார்.
கிராமத்துப் படம் என்றதும் வழக்கம்போல ரயிலில் ஆட்களை ஏற்றுவது போலக் கதாபாத்திரங்களை ஏற்றாமல், ஷேர் ஆட்டோ அளவுக்கு மட்டும் கதாபாத்திரங்களைக் கையாண்டு இருப்பதே பெரிய ஆறுதல்.
சரியான அரசியல் பேசும் கிராமத்து ஆக்ஷன் படம்தான். ஆனால் திரைக்கதை?
விமர்சனத்தை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...
http://dlvr.it/SpgYN1
Friday, 26 May 2023
Home »
» செந்தில் பாலாஜி: IT ரெய்டு..டெல்லி 'ஆட்டம்' ஆரம்பமா? - ரத்தான ஜனாதிபதி வருகை -சீனாவில் புதிய கொரோனா







0 comments:
Post a Comment