இங்கிலாந்தில் டாமியன் ஜான்சன் என்பவர் பென்ஷன் பணத்துக்காக, 71 வயது முதியவரை கொலைசெய்து, அவரின் உடலை இரண்டு ஆண்டுகளாக ஃப்ரீசரில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
துருக்கி நாட்டில் சிரிய எல்லைக்கு அருகே ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில், உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்க மெக்சிகோ மீட்புப் படை உதவியது. அந்த மீட்புப் பணியின்போது, மெக்சிகோ படையின் நாய் இறந்துபோனது. அதைத் தொடர்ந்து துருக்கி அரசு, மெக்சிகோவின் ராணுவத்துக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசளித்திருக்கிறது.
உக்ரைனின் கெர்சன் பகுதி மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில், 21 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 48 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.
பிரேசிலின் முன்னாள் அதிபர் போல்சனேரோவின் வீட்டில் போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அவரின் தொலைப்பேசி உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
உக்ரைனுக்கு உதவும் வகையில் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இதுவரை 35.7 பில்லியன் டாலர் வரை அமெரிக்கா உதவி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க இந்தியரான அஜய் பாங்கா (Ajay Banga), உலக வங்கியின் அடுத்த தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 14-வது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார்.
ரவாண்டாவில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வெள்ளத்தால் இதுவரை 109 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த வாரம் பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு, நாடு முழுவதும் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
ரஷ்ய அதிபர் புதினை குறிவைத்த இரண்டு உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா அறிவித்த நிலையில், ரஷ்யா மீது அங்கீகரிக்கப்படாத ட்ரோன் விமானங்கள் செல்வதற்கு ரஷ்யா மேயர் தடை விதித்திருக்கிறார்.
மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளாததற்காக, அதிபர் ஜோ பைடனை, டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்திருக்கிறார்.
http://dlvr.it/SnX0N5
Thursday, 4 May 2023
Home »
» மெக்சிகோவுக்கு நாயைப் பரிசளித்த துருக்கி | உலக வங்கியின் தலைவரான இந்திய வம்சாவளி - உலகச் செய்திகள்







0 comments:
Post a Comment