அமெரிக்காவுக்கு இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதில் அமெரிக்காவுக்கான தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அமெரிக்காவின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர், ``அமெரிக்கா, இந்தியா இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த, வளர்ந்துவரும் தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் அதிபர் பைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தங்களது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு அளித்த வழிகாட்டுதலின்படியே செயல்பட்டுவருகிறது.
இரு நாடுகளுக்குள்ளான இந்த நட்புறவு அத்தியாவசியம் வாய்ந்தது. உலகம் எதிர்கொள்ளக்கூடிய பெரிய சவால்களான உணவு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட நெருக்கடியான விஷயங்களைப் பற்றிப் பேசும்போது, அமெரிக்கா, இந்தியாவின் நட்புறவு இல்லாமல் தீர்வு என்பது முடியாதது.மோடி, பைடன்
ஜப்பானின் டோக்கியோவில் இரு நாடுகளுக்கான நட்புறவு பற்றி பிரதமர் மோடி கூறும்போதும் நம்பிக்கை, சர்வதேச அமைதி, நிலைத்தன்மைக்கான ஒரு நல்ல சக்திக்கான கூட்டுறவு இது என விவரித்திருக்கிறார். இந்தியா ஒரு சர்வதேச சக்தியாக உருவெடுப்பதற்கு ஆதரவு அளிப்பதே உண்மையில் எங்கள் செயல்திட்டமாகும்" என்று தெரிவித்திருக்கிறார்.தன்பாலின திருமணச் சட்டத்தில் கையெழுத்திட்ட பைடன்|பெருவில் வெடித்த கலவரம்- உலகச் செய்திகள் ரவுண்ட்அப்
http://dlvr.it/Shpz0j
Thursday, 2 February 2023
Home »
» "இந்தியா சர்வதேச சக்தியாக உயர ஆதரவளிப்பதே எங்கள் விருப்பம்" - அமெரிக்கா திட்டவட்டம்!







0 comments:
Post a Comment