அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்திலுள்ள டேட் கவுன்ட்டியில் இருக்கும் அர்கபுட்லா அணை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. மொத்தம் ஆறு பேர் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சுடும் சத்தத்தைக் கேட்ட சிலர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இந்தத் தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் சோதனை செய்த காவல்துறையினர், சந்தேகத்துக்குரிய நபரைக் கைதுசெய்தனர். இந்த நிகழ்வு அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``இந்த வருடம் தொடங்கி 48 நாள்கள்தான் ஆகின்றன. அதற்குள் 73 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று, ஏராளமானோர் இறந்திருக்கின்றனர்.துப்பாக்கிச்சூடு
அதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணமும், பிரார்த்தனைகளும் மட்டும் போதாது. துப்பாக்கி வன்முறை ஒரு தொற்றுநோய். நாடாளுமன்றம் இப்போது இதற்கு எதிராகச் செயல்பட வேண்டும். தற்போது நமக்குத் தேவையானது காமன்சென்ஸ் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்கள்தான்” எனத் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டில் துப்பாக்கி தொடர்பான வன்முறையில் 44,000 பேர் உயிரிழந்தனர் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.'கோவையில் துப்பாக்கி கலாசாரம், சினிமா பாணியைப்போல தலைதூக்குகிறது!' - வானதி சீனிவாசன்
http://dlvr.it/Sjf77d
Sunday, 19 February 2023
Home »
» அமெரிக்கா: `இந்த ஆண்டு மட்டும் 73 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்; போதும்..!' - ஜோ பைடன்







0 comments:
Post a Comment