இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் 2023-ம் ஆண்டுக்கான 65வது `கிராமி விருதுகள்' வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் பிப்ரவரி 5, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இசைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு, இந்த விழாவில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.கிராமி விருதுகள்
கிராமி விருதுகளுக்கு இந்திய பாடகரும், இசைக்கலைஞருமான அனெட் பிலிப் (Annette Philip) பரிந்துரைக்கப்பட்டு இருந்தார். இவர் அமெரிக்காவில் உள்ள பெர்க்லீ இசைக் கல்லூரியில் மாணவர்களுக்கு இசை கற்பித்து வருகிறார்.
இவர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது, அனைவரின் கண்களும் அவர் மீது பதிந்திருந்தன. காரணம் பாரம்பர்ய முறைப்படி, பொட்டு வைத்து, நெற்றிச்சூடி அணிந்து, சேலை கட்டி வந்ததுதான். அனெட் பிலிப் `சிறந்த கைத்தறி நெசவாளர்' - தேசிய விருதைத் தட்டிச்சென்றார் காஞ்சிபுரம் மகேஸ்வரி
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்கள் அப்போது அவரிடம் ஆடை குறித்து விசாரித்தனர். அதற்கு பதிலளித்தவர், `இது இந்தியாவின் பாரம்பர்ய காஞ்சிபுரம் சேலை. இது எங்களுடைய நாட்டில் உள்ள நெசவாளர்களால் தயாரிக்கப்பட்டது. எனது நாட்டின் கலாசாரத்தை அணிவதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
பெர்க்லீ இசைக் கல்லூரியில், `Berklee Indian Ensemble' எனத் தொடங்கிய இசைக் குழுமத்தின் முதல் ஆல்பம், 2023-ம் ஆண்டுக்கான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/SjCFTJ
Friday, 10 February 2023
Home »
» கிராமி விருதில் காஞ்சிபுரம் புடவை; `இது இந்தியாவின் பாரம்பர்யம்' என பெருமிதம்!







0 comments:
Post a Comment