வாடகை வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு வீட்டில் ஆணி அடிக்கக்கூடாது, முறை வாசல் செய்ய வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது உண்டு. இன்னும் சொல்லப்போனால் இரண்டு நாள்கள் உறவினர்கள் வந்து தங்கினாலே, அதற்கும் ஒரு சார்ஜ் போட்டு காசு வசூலிப்பது குறித்து கேள்விப்பட்டிருப்போம்… வாடகை...
இதற்கு ஒருபடி மேலே போய், வாடகை வீட்டில் மீன் வளர்க்க 12,000 ரூபாய் வரை கட்டணம் வசூலித்த சம்பவம், மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த நிக் என்ற பெண், சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில், தங்க மீனை (கோல்டன் ஃபிஷ்) வீட்டில் வளர்ப்பதற்கு ஒரு முறை கட்டணமாக, 200 அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் 12,000 ரூபாய்) மற்றும் மாத கட்டணமாக 15 அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் 1,240 ரூபாய்) கேட்டதாக, கட்டண ரசீதை ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் பதிவிட்டு இருக்கிறார். ரசீது``எல்லா சொந்தமும் இருந்தும் வாடகை வீட்டுல தனியாதான் வாழுறேன்!" - Actress 'Dubbing' Janaki Emotional
இவரின் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, `என்னதான் இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா’ என்பது போல மக்கள் ரியாக்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் வாடகை வீட்டில் தேவையே இல்லாமல் வசூலித்த கட்டணங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நீங்கள் வாடகை வீட்டில் வசிப்பவராயின், உங்களிடம் வாங்கப்பட்ட கட்டணத்தில் தேவையே இல்லாதது என நீங்கள் நினைப்பது என்ன?
http://dlvr.it/Sj31hS
Tuesday, 7 February 2023
Home »
» வாடகை வீட்டில் மீன் வளர்க்க 12,000 ரூபாய் கட்டணம் வசூலித்த உரிமையாளர்... வைரலாகும் பதிவு!







0 comments:
Post a Comment