அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆண்ட்ரே தாமஸ் என்பவர் குடும்பத்துடன் வசித்துவந்திருக்கிறார். இவருக்கு ஒரு மகனும், வளர்ப்பு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த 2004-ம் ஆண்டு அவர், தன் மனைவி, மகன், வளர்ப்பு மகளைக் கொலைசெய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நடந்துவருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்வு தொடர்பாக அவரின் வழக்கறிஞர் மவுரி லெவின், ``ஆண்ட்ரே தாமஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதைப் பலமுறை தெரிவித்துவிட்டேன். கொலை நடப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, தாமஸ் தற்கொலைசெய்ய முயன்று, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையிலிருந்து தப்பிய ஆண்ட்ரோ தாமஸ், அதன் பிறகே தங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கொலைசெய்திருக்கிறார். குற்றம் நடந்த ஐந்து நாள்களுக்குப் பிறகு, கைதுசெய்யப்பட்டபோது, அவர் தன் வலது கண்ணைப் பிடுங்கி, பைபிளின் கட்டளையைப் பின்பற்றுவதாகக் தெரிவித்திருந்தார். நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறது. இந்த நிலையில், அவரின் மரண தண்டனையை நிறுத்தக் கோரிவருகிறேன்.சிறை
கருணையின் அடிப்படையில் ஒருவரை விடுதலை செய்வதென்றால், அதற்கு முதல் தகுதியான நபராக ஆண்ட்ரோ இருப்பார். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் அவர் தன் இன்னொரு கண்ணையும் பிடுங்கி விழுங்கியிருக்கிறார். அவரின் இந்தச் செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அவர் விடுதலை செய்யப்பட வேண்டும். அதோடு அவருக்கு உரிய சிகிச்சை வழங்க உதவிசெய்ய வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.ஊழல், மோசடி வழக்கில் பாஜக எம்எல்ஏ-க்கள் இருவருக்குச் சிறை, அபராதம்! - கர்நாடக அரசியலில் பரபரப்பு!
http://dlvr.it/SjYPTC
Friday, 17 February 2023
Home »
» குடும்ப உறுப்பினர்களைக் கொலைசெய்த வழக்கு; சிறையில் தன் கண்ணையே பிடுங்கி விழுங்கிய கைதி!







0 comments:
Post a Comment