ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அய்வறிக்கை வெளியாகிய நாளிலிருந்தே அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இந்த சரிவினால் அதானி குழுமத்தின் மீது எவ்வளவு பார்வை திரும்பியதோ, அதே அளவு பார்வை எல்.ஐ.சி நிறுவனத்தின் மீதும் திரும்பியது.எல்.ஐ.சிடாப் 20 உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்ட அதானி!
அதானி குழுமத்தின் பங்குகளில் அதன் நிறுவனருக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவிலான பங்குகளில் எல்.ஐ.சி நிறுவனம் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் அதானி குழும நிறுவனத்தின் மீதான எல்.ஐ.சி முதலீடுகள் குறித்த கேள்விகள் பெருமளவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தன. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக எல்.ஐ.சி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் கடைசியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், "கடந்த ஆண்டுகளில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில், எல்ஐசி நிறுவனம் ரூ.30,127 கோடியை முதலீடு செய்துள்ளது. கடந்த ஜனவரி 27-ம் தேதி நிலவரப்படி, அந்த முதலீடுகளின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.56,142 கோடியாக உயர்ந்துள்ளது.அதானி குழுமம்அதிர்ச்சி கொடுத்த ஹிண்டன்பர்க்... ஆட்டம் கண்ட அதானி... பங்குச் சந்தை
பாதுகாப்பாகத்தான் இருக்கிறதா?!
இதுவரை எல்.ஐ.சி நிறுவனம் நிர்வாகித்து வரும் ஒட்டுமொத்த பங்குகளில், அதானி குழுமத்தின் பங்குகள் 0.975 சதவீதம் மட்டுமே ஆகும். மேலும் அதானி குழுமத்தின் கடன் பத்திரங்கள் அனைத்திருக்கும் ‘‘ஏஏ’’ மற்றும் அதற்கும் மேலான தர மதிப்பீடுகளே வழங்கப்பட்டுள்ளன. எனவே, இந்த முதலீடுகள் அனைத்தும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) வழிகாட்டுதல்கள்படி தான் உள்ளது" என்று விளக்கம் அளித்திருந்தது.
ஆனாலும் அதானி குழும விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன. மத்திய அரசு அதானி விவகாரம் குறித்து பேசவில்லை. ஆனால் தொடர்ந்து அதானி குழுமம் அடுத்தடுத்து சரிவை சந்தித்தன. பல நிறுவனங்கள் பின்வாங்கின. இந்த சூழலில் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. இந்நிலையில், இவ்விவகாரம்குறித்து அதானி குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக எல்.ஐ.சி., தெரிவித்துள்ளது.எல்.ஐ.சி., தலைவர் எம்.ஆர்.குமார் அமெரிக்க சந்தை குறியீட்டிலிருந்து அதானி நிறுவனம் நீக்கம்: LIC முதலீடு குறித்து நிதியமைச்சரின் பதில்?
இது குறித்து, எல்.ஐ.சி., தலைவர் எம்.ஆர்.குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"நாங்கள் சந்தை மற்றும் அதானி குழுமத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறோம். எங்கள் முதலீட்டாளர் குழு, ஏற்கனவே அதானி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருந்தது. காலாண்டு முடிவுகளை தயாரிப்பதில் நாங்கள் தீவிரமாக இருந்ததால், எங்களால் அதானி குழுமத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. விரைவில் அவர்களை வரவழைத்து விளக்கங்கள் கேட்க உள்ளோம். அதானி குழுமம் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து விளக்கம் கேட்கப்படும். அதை அவர்கள் எவ்வாறு நிர்வகிக்கிறார்கள், இந்த சிக்கல்களை அவர்கள் எவ்வாறு கையாளப்போகிறார்கள் என்பதையும் கேட்டறிவோம். பின்னர் அது குறித்து விளக்கப்படும். எல்ஐசி மற்றும் அதானி குழும அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு குறித்த காலக்கெடுவை இப்போது கூற முடியாது, விரைவில் சந்தித்து விளக்கம் கேட்போம்" என்று தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/SjFry0
Saturday, 11 February 2023
Home »
» பங்குகள் தொடர் வீழ்ச்சி; அதானி குழுமத்தில் என்ன நடக்கிறது… விரைவில் எல்.ஐ.சி விசாரணை!







0 comments:
Post a Comment