நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 9-ம் வகுப்பு பயின்றுவந்த இரண்டு மாணவிகள் கடந்த வாரம் திடீரென மாயமானதாகச் சிறுமிகளின் பெற்றோர் ஊட்டி காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இந்த நிலையில், மாயமான சிறுமிகள் இருவரும் கோவையில் இருப்பதைக் கண்டறிந்த காவல்துறையினர், இருவரையும் மீட்டு விசாரித்திருக்கின்றனர். மாயமான காரணத்தைச் சிறுமிகள் தெரிவித்ததைக் கேட்ட, காவல்துறையினர் திகைப்பில் ஆழ்ந்திருக்கின்றனர்.போலீஸ் விசாரணை
இது குறித்து நம்மிடம் பகிர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர், " இரண்டு சிறுமிகளின் பெற்றோரும் கூலித் தொழிலாளர்கள்தான். சிறுமிகள் இருவருமே நடனக் கலையில் அளவுக்கு அதிகமாக நாட்டம் கொண்டிருக்கின்றனர். இணையத்தில் நடன நிகழ்ச்சிகள், நடனப் பயிற்சிகளை அதிகமாகப் பார்த்துவந்திருக்கின்றனர். பி.டி.எஸ் என்ற பிரபல தென்கொரிய ஆல்பம் நிகழ்ச்சிகளை செல்போனில் தொடர்ந்து பார்த்துவந்த மாணவிகள் இருவரும் தென்கொரியா சென்று இதேபோல் நடனம் கற்றுக்கொண்டு, மீண்டும் நீலகிரிக்குத் திரும்ப நினைத்திருக்கின்றனர்.
ஜெராக்ஸ் எடுக்கச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு கிளம்பிய இரண்டு மாணவிகளும் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு சென்னை சென்றிருக்கின்றனர். இருவரிடமும் இரண்டாயிரம் மட்டுமே இருந்ததால், தங்களிடமிருந்த நகைகளை வைத்து 20,000 ரூபாய் பெற்றிருக்கின்றனர். வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் இருப்பதை சென்னை சென்ற பிறகே அறிந்திருக்கின்றனர்.மீட்கப்பட்ட சிறுமிகள்
மீண்டும் வீடு திரும்ப பயந்த சிறுமிகள் பாட்டி வீட்டுக்குச் செல்ல முடிவுசெய்து, மீண்டும் கோவை வந்திருக்கின்றனர். பாட்டியிடம் பேசுவதற்காக ஒரு மாணவி செல்போனை ஆன் செய்திருக்கிறார். செல்போன் சிக்னல் மூலம் அவர்கள் இருக்கும் இடம் உடனடியாக எங்களுக்குத் தெரியவந்தது. இருவரையும் மீட்டு அறிவுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தோம்" என்றார்.கோவை: கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய கார் - சைக்கிள் ஓட்டி விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!
http://dlvr.it/SjNdCg
Tuesday, 14 February 2023
Home »
» நடனத்தில் அதீத நாட்டம்; யூடியூபைப் பார்த்து தென்கொரியா செல்ல முயன்ற ஊட்டி சிறுமிகள்!







0 comments:
Post a Comment