சிவப்பு என்பது வறுமையின் நிறம், கம்யூனிசத்தின் நிறம் என்று சொல்லப்படுவதுண்டு. இன்னொரு பக்கம், இது அழகுசார்ந்து ஈர்க்கும் நிறமாகவும் உள்ளது. இந்நிலையில், வட கொரியாவில் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏன்? வட கொரியா சொல்லும் காரணம் இதுதான். சிவப்பு நிற லிப்ஸ்டிக்கானது முதலாளித்துவத்தின் (Capitalism) அடையாளமாவும், மேற்கத்திய நாடுகளின் ஆளுமையின் அடையாளமாகவும் பார்க்கப்படுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு கூறுகிறது.
ஒரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்திய நாடுகள் அங்கிருந்து சென்றாலும், அவர்களின் கலாசாரம் மற்றும் சிந்தனைகளை விதைத்துவிட்டுச் செல்கிறார்கள். இப்படித்தான், மேற்கத்திய கலாசாரம் மக்களின் வாழ்வில் பிரதிபலிக்கத் தொடங்கின.
உண்மையில், அதிக மேக்கப் செய்வது மேற்கத்திய கலாசாரமாகப் பார்க்கப்படுகிறது. எனவே, வட கொரியாவில் அதிக மேக்கப் செய்து கொள்வது வெறுக்கப்படுகிறது. சட்டத்தின்படி, பெண்கள் அங்கு குறைந்த மேக்கப் மட்டுமே செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும், ’சிவப்பு நிற லிப்ஸ்டிக் போடும் பெண்கள் தங்களை அதிக கவர்ச்சியாகக் காட்டலாம், அவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் எதிர்ப்பதாகக் கருதப்படலாம்’ என்று கூறி சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடை விதித்துள்ளது வட கொரியா.
எதற்கெல்லாம் தடை?!
சமீபத்திய ஆண்டுகளில், வட கொரியாவை ஆளும் கிம் ஜாங் அன் (Kim Jong Un) ஆட்சியானது முதலாளித்துவ சித்தாந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல பொருள்களையும் தடை செய்துள்ளது.
தோளோடு ஒட்டியிருக்கும் ஒல்லியான, அல்லது நீல நிற ஜீன்ஸ் அணிவது, காது தவிர உடலின் பிற பாகங்களில் அணிகலன்கள் அணிவது (body piercings), பெண்கள் நீண்ட முடி மற்றும் குறிப்பிட்ட சில சிகை அலங்காரங்கள் (mullets) செய்து கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிகை அலங்காரங்கள் மட்டுமே செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Kim Jong-unலிப்ஸ்டிக் பூசும் போது... செய்யவேண்டியவை; தவிர்க்க வேண்டியவை! #VikatanPhotoCards
இதுவும் காரணமா..?
இந்தத் தடைகள் பலவும் தனி நபர்களின் ஒப்பனைகளை மையப்படுத்தி இருக்கிறது. ஜாங் உன் பயன்படுத்தும் கறுப்பு ட்ரெஞ்ச் கோட்டுகள் மற்றும் அவரது சிகை அலங்காரம் போன்ற ஃபேஷன் ஸ்டைல்களை மக்கள் காபி அடிக்கக் கூடாது என்பதற்காக தடை விதிக்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதோடு, மக்கள் இந்த விதிகளைப் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிசெய்ய ஃபேஷன் போலீஸ்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை, தடையை மீறி ஒருவர் நீல நிற ஜீன்ஸ் அணிந்தால் அவர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அவர் தண்டிக்கப்படலாம், அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது பொது இடங்களில் நிறுத்தப்படலாம், மேலும் அவர்களின் ஆடைகள் மீண்டும் பயன்படுத்தப்படாத வண்ணம் கிழிக்கப்படலாம்.
சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்... கமென்டில் சொல்லுங்கள்!
http://dlvr.it/T6q7XQ
Monday, 13 May 2024
Home »
» North Korea: சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை, மீறினால் கடுமையான தண்டனை!







0 comments:
Post a Comment