அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த பாலியல் தொழில் செய்துவரும் பெண் ஒருவர், தனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை அறிந்த பின்னரும், 211 பேருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதாகும் அந்தப் பெண், கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை, அந்தப் பெண் மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிந்திருக்கிறார். எனினும் அதை அலட்சியப்படுத்திய அந்தப் பெண், கடந்த இரண்டு ஆண்டுகளில் 211 ஆண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளார். மேற்கு வர்ஜீனியா எல்லைக்கு அருகிலுள்ள தென்கிழக்கு ஓஹியோவில் உள்ள சிறிய நகரமான மரியெட்டாவின் மார்க்கெட் தெருவில் அந்தப் பெண் இத்தகைய தொழிலில் ஈடுபட்டு, பலருடன் பாலியல் உறவு வைத்து வந்திருக்கிறார். HIV
இதனால் ஃப்ளோரிடா முதல் ஓஹியோ வரையிலான கிழக்கு கடற்கரை முழுவதும், ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகச் சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்டவர்களின் நிலைமையைக் கண்டறிய, அதிகாரிகள் அவர்களைத் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
"இந்தப் பிரச்னை புளோரிடாவில் இருந்து கிழக்கு கடற்கரை வரை எங்கும் எங்கும் நீடிக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்ட நபர்களை நாங்கள் அணுகுவோம். அவர்கள் யாரும் சிக்கலில் இல்லை, இது ஒரு பொதுச் சுகாதார விழிப்புணர்வு. இது மோசடி அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று வாஷிங்டன் ஷெரிஃப் அலுவலகத்தின் துணை தலைமை அதிகாரி மார்க் வார்டன் கூறியுள்ளார். HIV
இது பற்றி விளக்கமளித்த சுகாதாரத் துறை நிர்வாகி பார்பரா பிராட்லி, "சுகாதாரத்துறை என்பது முழு ரகசியத்தன்மையுடன் கூடிய தண்டனை இல்லாத பகுதி. அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட அனைவரும் அதிகாரிகளுடன் நேர்மையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களுடைய ரகசியம் காக்கப்படும். வாடிக்கையாளர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் உடலுறவு கொண்ட எவரும் இந்த கொடிய நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது" எனவும் தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbPorsche: 200 கி.மீ வேகம்... விபத்தை ஏற்படுத்திய சிறுவன்; இருவர் பலி - தந்தையை கைது செய்த காவல்துறை!
http://dlvr.it/T79yd0
Tuesday, 21 May 2024
Home »
» HIV: தனக்கு ஹெச்.ஐ.வி இருப்பதை அறிந்தே பெண் செய்த செயல்... 200-க்கும் மேற்பட்டோரை தேடும் அதிகாரிகள்!






0 comments:
Post a Comment