உலகில் முதன்முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பெற்ற மனிதன் சில மாதங்களிலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் 62 வயதான ரிக் ஸ்லேமேன் என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் மாற்றி வைத்தனர்.
இவர் பல ஆண்டுகளாக நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், 2018-ல் மனித நன்கொடையாளரிடமிருந்து சிறுநீரகத்தைப் பெற்றார். ஆனால், அந்தச் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிய நிலையில், 2023-ல் டயாலிசிஸ் செய்யத் தொடங்கியுள்ளார். அதற்கு பிறகு அவர் இறுதி நிலை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. pig kidney AI : தினமும் 150 மாதிரிகளை பரிசோதிக்கலாம்... பயிர்களின் தரத்தை அறிய உதவும் கருவி!
இறுதியாக அவரின் விருப்பத்தின்படி, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் மாற்றி வைத்தனர். இந்தச் சிறுநீரகம் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், பன்றியின் சிறுநீரகம் மாற்றப்பட்ட இரண்டு மாதங்களிலேயே அவர் இறந்திருக்கிறார். இவரின் இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பன்றியின் சிறுநீரகம் மாற்றப்பட்டது தான் காரணமா என பலர் அச்சப்பட தொடங்கியுள்ளனர்.
இதற்கு முன்பு பன்றியின் சிறுநீரகம், மூளை சாவடைந்த இருவருக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டது. பன்றியின் இதயமும் இருவருக்குப் பொருத்தப்பட்டது. சிகிச்சை பெற்ற சில மாதங்களிலேயே அவர்களும் இறந்துள்ளனர்.
இந்நிலையில் இவரின் இறப்புக்கான காரணம் குறித்து மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்றியின் சிறுநீரகத்தை மாற்றி வைத்த காரணத்தால் அவர் இறந்ததாக எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஸ்லேமேனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளது.
விலங்குகளின் செல், திசு அல்லது உறுப்புகளை நோயாளிகளுக்கு மாற்றிக் குணப்படுத்தும் முறை `xenotransplant’ என அழைக்கப்படுகிறது. இந்தச் செயல்முறையின் மூலம் ரிக் ஸ்லேமேனுடன் கூடுதலாக ஏழு வாரங்கள் இருந்து மறக்க முடியா நினைவுகளை உருவாக்க முடிந்ததற்காக குடும்பத்தினர் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Representation Image`ஒரே ஒரு சிறுநீரகத்தோடு பிறந்த பாடிபில்டர்' மாற்று சிறுநீரகத்துக்காகக் காத்திருந்து உயிரிழப்பு!
``xenotransplant-ல் உள்ள சிக்கல் என்னவெனில் மனிதரின் நோயெதிர்ப்பு அமைப்பு விலங்கின் திசுக்களை உடனடியாக அழிக்கத் தொடங்குகிறது. இதுபோல விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு உறுப்புகளை மாற்றும் முயற்சிகள் நீண்ட காலமாகத் தோல்வியடைந்திருக்கின்றன. ஆனால், சமீபத்திய முயற்சிகளில் பன்றியின் சிறுநீரகம் மனிதனைப் போலவே உள்ளதால் அவற்றின் உறுப்புகள் மாற்றி வைக்கப்படுகின்றன'' என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் 100,000க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகத் தேசிய காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறுநீரக நோயாளிகளாக உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் இவர்களில் ஆயிரக்கணக்கானோர் தங்களது சிகிச்சைக்கான முறை வருவதற்கு முன்பே இறக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
http://dlvr.it/T6q7D8
Monday, 13 May 2024
Home »
» Kidney Transplant: பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதல் மனிதன்... 2 மாதங்களில் உயிரிழந்தது ஏன்?







0 comments:
Post a Comment