Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, 31 March 2023

``உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனா பங்களிப்பு 50% இருக்கும்...” ஆய்வறிக்கை சொல்வதென்ன?

நடப்பு 2023-ம் ஆண்டில், உலக வளர்ச்சியில் இந்தியா மற்றும் சீனாவின் பங்களிப்பு பாதிஅளவுக்கு இருக்கும் என்று, சீனாவை சேர்ந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள போவா என்ற இடத்தில், செவ்வாய்க்கிழமை தொடங்கிய நான்கு நாள் வருடாந்திர அமர்வின்போது, பெய்ஜிங்கை சேர்ந்த அதிகாரபூர்வ சிந்தனைக்குழுவான Boao Forum for Asia (BFA), ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.Boao யு.பி.ஐ மூலம் பணம் அனுப்ப கட்டணம் விதிக்கவில்லை..! மத்திய அரசு நிறுவனம் விளக்கம்! அந்த அறிக்கையில், `உலகப் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் ஆசியா, ஒரு முக்கியமான வளர்ச்சி இயந்திரமாக, 4.5 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜிடிபி) இருக்கும். அதுமட்டுமில்லாமல், இந்த ஆண்டின் உலக வளர்ச்சியில் பாதியளவு பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் கொண்டிருக்கும். நடப்பு 2023-ம் ஆண்டில், ஒட்டுமொத்த பொருளாதார மீட்சியின் வேகத்தை, ஆசியப் பொருளாதாரமானது விரைவுபடுத்துகிறது. உலகப் பொருளாதார மந்தநிலையில் ஆசியப் பொருளாதாரம் தனிச்சிறப்புமிக்கதாக இருக்கும்' என்று `ஆசியப் பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் ஒருங்கிணைப்பு முன்னேற்றம்' என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Boao Forum for Asia Annual Conference 2023 (BFA 2023)மாறிவரும் இந்தியப் பொருளாதாரம்... வளர்ச்சிக்கு வழிவகுக்கும் 3 வணிகத் துறைகள்..! இந்த ஆண்டு உலக வளர்ச்சியில் பாதி பங்களிப்பை சீனாவும் இந்தியாவும் மட்டுமே வழங்கும் எனவும், சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு 1 சதவிகித அதிகரிப்பும் ஆசியாவின் மற்ற பகுதிகளுக்கான உற்பத்தியில் தோராயமாக 0.3 சதவீதம் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். ஆசியாவின் பிற பகுதிகளும் உலக வளர்ச்சியில் கால் பங்கு அளவுக்கு பங்களிப்பு செய்யக்கூடும் என்று, வாஷிங்டனை சேர்ந்த சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/SlmK0f

Thursday, 30 March 2023

மக்கள் போராட்டம்; பைடனின் கருத்துக்கு `கறார்' பதிலளித்த பிரதமர்! - என்ன நடக்கிறது இஸ்ரேலில்?!

இஸ்ரேலில் நீதித்துறை சீர்திருத்தங்களை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்த விவகாரம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவரும் நிலையில், இஸ்ரேல் போராட்டம் குறித்தும், அந்த நாட்டு பிரதமரின் செயல்பாடுகள் குறித்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்திருக்கிறார். பைடனின் இத்தகைய கருத்து சர்வதேச அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. இருப்பினும், ஜோ பைடனின் கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பதிலடி கொடுத்திருப்பதுதான் `டாக் அஃப் தி டவுன்'. நீதித்துறையில் சீர்திருத்தம் - நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யவோ, நீக்கவோ செய்யலாம். - நீதிபதிகளைத் தேர்வுசெய்யும் குழுவில் அரசுப் பிரதிநிதிகளை அதிகப்படுத்திக்கொள்ளலாம். - அரசு தலைமை வழக்கறிஞரின் அதிகாரங்கள் குறைக்கப்படும். மேற்கண்ட சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதால், இஸ்ரேல் அரசு விரும்பும் நபர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறாகச் சில மாற்றங்களைக் கொண்டுவரப்போவதாக இஸ்ரேல் அரசு அறிவித்திருந்தது. அதில் அரசு வழக்கறிஞர் அதிகார குறைப்பு நடவடிக்கை அமலுக்கே வந்துவிட்டது. இதற்கு, சாமான்ய மக்கள் முதல் இஸ்ரேலின் மேல்மட்டத் தலைவர்கள் வரை கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக இஸ்ரேல் ராணுவ மந்திரியே இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். எதிர்ப்பு தெரிவித்த அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டார் இஸ்ரேல் பிரதமர்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் வலியுறுத்தும் அதிபர் - போராடும் மக்கள் மக்களுக்கு இதில் ஏற்பில்லை என்பதால் நீதித்துறை சீர்திருத்தங்களைக் கைவிட வலியுறுத்தியிருக்கிறார் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்ஸாக். மக்கள் கடந்த ஜனவரி மாதம் முதலே தொடர்ந்து போராடி வருகின்றனர். நாட்டு மக்களைப் பொறுத்தவரை நீதித்துறையின் அதிகாரங்களைக் குறைப்பதோடு, இது ஜனநாயகத்தை நசுக்கிவிடும் எனக் கருதுகிறார்கள். தலைநகர் டெல் அவிவ்வில் போராடத் தொடங்கிய மக்கள், தற்போது இஸ்ரேல் முழுக்க தங்கள் போராட்டத்தை விரிவுபடுத்தியிருக்கின்றனர். உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில் நாடாளுமன்ற வாயிலில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில், சுமார் 10 லட்சம் பேர் திரண்டனர். `பிரதமர் பதவி விலக வேண்டும், நீதித்துறை சீர்திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும்' என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராடும் மக்களை, காவல்துறையைவைத்து அரசு அடக்க நினைத்தாலும், போராட்டம் அடங்குவதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் சிலரும் போராட்டத்துக்கு ஆதரவாகக் கிளம்பவே, தற்போதைக்கு நீதித்துறை சட்ட திருத்தங்களை ஒத்திவைப்பதாக தெரிவித்திருக்கிறார் நெதன்யாஹு. ஆனால், முழுமையாகக் கைவிடுவதாக அவர் அறிவிக்கவில்லை. ஜோ பைடன் கருத்து - பெஞ்சமின் நெதன்யாஹு எதிர்ப்பு அமெரிக்காவும், இஸ்ரேலும் பல தசாப்தங்களாக நட்பு நாடுகளாக விளங்கிவருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் கொண்டுவரவிருக்கும் நீதித்துறை சட்டத்திருத்தம் குறித்தும் மக்களின் போராட்டம் குறித்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கருத்து கேட்டபோது, ``இஸ்ரேலில் நடப்பவை வருத்தமளிப்பதாக இருக்கின்றன. இஸ்ரேல் பிரதமர் அவரது முடிவை மாற்றிக்கொள்வார் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு இஸ்ரேல் பிரதமர் “இது எங்கள் நாட்டு விவகாரம், இஸ்ரேல் ஓர் இறையாண்மை கொண்ட நாடு, அது அதன் மக்களின் விருப்பப்படி முடிவுகளை எடுக்கிறதே தவிர வெளிநாட்டிலிருந்து வரும் அழுத்தங்களின் அடிப்படையில் அல்ல" எனப் பதில் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.பூதாகரமாக வெடித்த மக்கள் போராட்டம்; வழியில்லாமல் பணிந்த பிரதமர்! - என்ன நடக்கிறது இஸ்ரேலில்?இஸ்ரேல் போராட்டம் எதிர்க்கட்சிகள் விமர்சனம் இந்தப் பிரச்னையைத் தீர்க்க அமெரிக்கா அமைதியான முறையில் முயன்றதாகவும், அனால் எந்தவித பயனையும் அளிக்கவில்லை என்பதால் ஜோ பைடன் பொதுவெளியில் இப்படி பேசியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இஸ்ரேல் நாட்டு உள்விவகாரங்களில் அமெரிக்க அதிபர் தலையிடுவது இதுவே முதன் முறை. மேலும் ஜோ பைடனின் கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்மீது, எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றன. `பல தசாப்தங்களாக நெருங்கிய நாடுகளாக இருக்கின்றன இஸ்ரேலும், அமெரிக்காவும். அதில், பெஞ்சமின் பிளவை ஏற்படுத்தி வருகிறார்' என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. இஸ்ரேலில் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், நாடே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. அரசு ஊழியர்கள், ராணுவ ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் குதித்திருப்பதால் இஸ்ரேல் அதிபரும் இந்தச் சீர்திருத்தங்களைக் கைவிடக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்திருப்பதால் இந்த விவகாரத்தில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
http://dlvr.it/SljHht

மீண்டும் வெளிவந்த ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை... சரியும் பிளாக் நிறுவனம்; பதற்றத்தில் பங்குச்சந்தை..!

கடந்த ஜனவரி மாத இறுதி வாரத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் நிறுவனம் அதானி குழும நிறுவனங்களைப் பற்றி நீண்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்து இருந்தது. அதானி குழும நிறுவனங்கள் பல்வேறு மோசடியான வழிகளில் தமது நிறுவனப் பங்குகளின் விலையை உயர்த்தியுள்ளதாகவும், பெரும்பாலான அதானி குழும நிறுவன பங்குகளின் விலை ஜனவரி மாதத்தில் இருந்த விலையோடு ஒப்பிட்டால் உண்மையில் 85% குறைவாக உள்ளதாகவும் தரவுகளுடன் அந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.சரிவில் அதானி 'அதானிக்கு அதிர்ச்சி வைத்தியம்' - 'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' அறிக்கை சொல்வது என்ன?! அதானி குழும பங்கு விலை சரிவு..! இந்த ஆய்வறிக்கை அதானி குழும நிறுவனங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஹிண்டர்பர்கின் ஆய்வறிக்கை உண்மை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சில அதானி நிறுவன பங்குகள் 85% வரை அந்த ஆய்வறிக்கைக்குப் பிறகு சரிந்தது. குறிப்பாக அதானி கிரீன், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி எண்டர்பிரைசஸ், அதானி  பவர் போன்ற நிறுவனப் பங்குகள் விலை மிக அதிக அளவிலான இறக்கத்தை சந்தித்தது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தொடர் பங்கு வெளியீடு தோல்வியில் முடிவடைந்தது. இது தனிப்பட்ட அதானி நிறுவனத்தில் மட்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தாமல் ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் மிகப்பெரிய பேசுபொருள் ஆகியுள்ளது. நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகத் தவறான கருத்துகளை பேசியதற்காக குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.ஹிண்டன்பர்க் அதிர்ச்சி கொடுத்த ஹிண்டன்பர்க்... ஆட்டம் கண்ட அதானி... பங்குச் சந்தை பாதுகாப்பாகத்தான் இருக்கிறதா?! இந்தத் தீர்ப்பு காரணமாக அவர் வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி அதானி குழும நிறுவனங்களின் ஊழல் பற்றி பேசியதன் காரணமாக சர்வாதிகாரப் போக்கில் அவருடைய மக்களவை உறுப்பினர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது. என்றாலும், ராகுல் காந்தி மக்கள் மன்றத்தில் அதானி குழும நிறுவன மோசடி பற்றி தொடர்ந்து பேசுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. அந்த அளவுக்கு ஹிண்டர்பர்கின் ஆய்வறிக்கை பல்வேறு அதிர்வலைகளை நமது நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்ற வாரம் ஹிண்டர்பர்க் நிறுவனம் மற்றொரு நிறுவனத்தின் மோசடி குறித்து நீண்ட ஆய்வறிக்கை வெளியிட இருப்பதாக தமது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. இந்தச் செய்திக்குப் பிறகு, பங்குச் சந்தைகளில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த வாரங்களில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி மற்றும் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூஸ் வங்கி திவால் ஆனதை தொடர்ந்து ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கை ஒரு இந்திய வங்கியைப் பற்றியோ, ஒட்டுமொத்த வங்கிகளின் நிலை குறித்தோ இருக்கும் என்று வதந்தி பரவியது.பிளாக் நிறுவனம்அதானி - ஹிண்டன்பர்க்... பரபர சம்பவங்கள் 8! பிளாக் நிறுவனத்தின் நிதி மோசடி... இந்த நிலையில் ஹிண்டர்பர்க் நிறுவனம் ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சியின் பிளாக் நிறுவனத்தின் நிதி மோசடி குறித்த நீண்ட ஆய்வறிக் கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை இந்திய நிறுவனங்களைப் பற்றி இல்லாத காரணத்தால் சந்தையில் நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிளாக் நிறுவனம் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் முதலில் தொடங்கப்பட்டபோது அது ஸ்கொயர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சிறிய மற்றும் கைக்கு அடக்கமான கிரெடிட் கார்டு ரீடரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதற்கு அமெரிக்க வியாபாரிகளிடம் மிகப்பெரிய ஆதரவு இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த நிறுவனம் 2015-ம் ஆண்டு அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியல் இடப்பட்டது. யு.பி.ஐ பேமெண்ட் வளர்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து இந்த நிறுவனம் இந்தத் துறையில் கால் பதித்தது. இதைத் தொடர்ந்து நிறுவனத்தின் பெயரையும் 2021-ம் ஆண்டு பிளாக் என்று மாற்றியது. மாதத்துக்கு தற்போது  51 மில்லியன்  யுபிஐ பரிவர்த்தனைகள் இந்த நிறுவனம் மூலம் மேற்கொள்ளப் படுகிறது. இந்த நிறுவனத்தின் செயலியைப் பயன்படுத்தி வியாபாரிகள் மற்றும் தனி நபர்களுக்கு இடையே பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்த நிறுவனம் போலியாக பலர் இந்த செயலியை உபயோகிப்பதாக கணக்கை உயர்த்தி காட்டியும், நிறுவனத்தின் செலவினங்களை குறைத்து அதிக லாபம் ஈட்டியதாகவும் போலியான கணக்குகளைத் தயாரித்துள்ளதாக ஹிண்டர்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.பிளாக் நிறுவனம்``அதானியும், ஹிண்டன்பர்க் அறிக்கையும்... பிரச்னைக்கு காரணம் இதுதான்!" - Explainer Video இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கவனித்து வந்ததாகவும், இந்த நிறுவனத்தின் போலி கணக்காளர்களில் பலரை தொடர்புகொண்டு இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு போலியாக நிறுவனத்தின் பங்கு விலையை ஏற்றி ஜாக் டோர்சி ஒரு பில்லியன் டாலர் ( இந்திய பண மதிப்பில் 800 கோடி ரூபாய்) மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை பிளாக் நிறுவனம் முழுவதுமாக மறுத்துள்ளது. அதானி குழும நிறுவனங்களும் தற்போது வரை இந்த ஆய்வறிக்கையை மறுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட பிறகு பிளாக் நிறுவனத்தின் பங்கு விலை வெகுவாகக் குறைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மிக அதிகபட்சமாக 100 பில்லியன் டாலர் அளவுக்கு இருந்தது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 38 பில்லியன் டாலர் அளவுக்கு சரிந்துள்ளது.
http://dlvr.it/SljHW8

Wednesday, 29 March 2023

`இதற்கெல்லாம் லாக்டெளனா..?' - கிம் ஜாங் உன், குறிப்பிட்ட நகரத்துக்கு மட்டும் உத்தரவு போட்டது ஏன்?

உலக அளவில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி எச்சரிக்கை விடும்விதமாக, வல்லரசு நாடுகளையெல்லாம் தன்பக்கம் கவனம் ஈர்க்கச் செய்யும் நாடு வடகொரியா. அதேபோல சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, அதை மீறுபவர்களுக்குச் சில நேரங்களில் மரண தண்டனைகூட விதிக்க உத்தரவிடுபவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.மகளுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உதாரணமாக அதிபர் கிம் ஜாங் உன், தன்னுடைய தந்தையின் நினைவுநாளையொட்டி ஒரு வாரத்துக்கு யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது என உத்தரவிட்டார். அதேபோல சமீபத்தில், தன்னுடைய மகளின் பெயரை யாரும் வைத்திருக்கக் கூடாது என்றும், அப்படி யாரேனும் வைத்திருந்தால் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஹைசான் (Hyesan) நகரத்துக்கு மட்டும் லாக்டௌன் அறிவித்திருக்கிறார் கிம் ஜாங் உன். கடந்த பிப்ரவரி 25 முதல் மார்ச் 10-ம் தேதிக்கு இடையில், ஹைசான் நகரத்திலிருந்து ராணுவம் முழுமையாக வெளியேறியபோது, மார்ச் 7-ம் தேதியன்று 653 தோட்டாக்கள் தொலைந்ததாகக் கூறப்படுகிறது.வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் அதைத் தொடர்ந்து, அதிபர் கிம் ஜாம் உன், தொலைந்த தோட்டாக்களைக் கண்டுபிடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். மேலும் அந்த உத்தரவில், 653 தோட்டங்களும் கண்டுபிடிக்கப்படும் வரை, நகரத்தில் லாக்டெளன் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால் அதிகாரிகளும், காணாமல்போன தோட்டாக்களை வீடு வீடாகத் தேடிவருகின்றனர்.`என் மகளின் பெயரை வேறு யாரும் வைத்திருக்கக்கூடாது' - வடகொரிய அதிபரின் சர்வாதிகாரம்
http://dlvr.it/SlfK0N

Tuesday, 28 March 2023

அமெரிக்கா: குருத்வாராவில் துப்பாக்கிச்சூடு; இருவர் படுகாயம் - தீவிர விசாரணையில் போலீஸ்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், சாக்ரமென்டோ கவுன்டியிலுள்ள குருத்வாராவில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கீர்த்தனை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நூற்றுக்கணக்காக சீக்கியர்கள் கலந்துகொண்டனர். அப்போது இரு நபர்களுக்கு மத்தியில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அது சண்டையாக மாறி, இருவரும் மாறி மாறி சுட்டுக்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வு குறித்துப் பேசிய சாக்ரமென்டோ கவுன்டி ஷெரிப் அலுவலகச் செய்தித் தொடர்பாளர் சார்ஜென்ட் (Sacramento County Sheriff’s Office spokesman Sgt. Amar Gandhi), "குருத்வாரா கோயில் வளாகத்தில் இரு ஆண்களுக்கிடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. அது துப்பாக்கிச்சூடு வரை சென்றிருக்கிறது. இதில், ஒருவரை ஒருவர் மாறி மாறி சுட்டுக்கொண்டனர். சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய காவல்துறை, "துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்திருக்கின்றனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தச் சம்பவம் தனிப்பட்ட இருவரின் சண்டையால் ஏற்பட்டிருக்கிறது என முதல்கட்ட தகவலில் தெரியவந்திருக்கிறது. எனவே, இந்தச் சம்பவத்துக்கு வெறுப்புணர்ச்சி காரணமல்ல என்பதும் தெரியவந்திருக்கிறது" என விளக்கமளித்திருக்கிறது.துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் இந்த விவகாரம் குறித்து பேசிய அமெரிக்க வாழ் சீக்கிய சமூகம், "நகர் கீர்த்தனை அணிவகுப்பைச் சிதைக்க, சிலர் முயன்றது துரதிர்ஷ்டவசமானது. குற்றவாளி முழுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.பாகிஸ்தான்: முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் மர்வியா மாலிக் மீது துப்பாக்கி சூடு; காரணம் என்ன?
http://dlvr.it/SlbKCy

அமெரிக்க வங்கித்துறை சரிவு..!பின்வாங்கும் முதலீட்டாளர்கள்... எச்சரிக்கும் பங்குச்சந்தை நிலவரம்!

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் மாதாந்தர கூட்டம் அண்மையில் நடைபெற்றது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்தது. மேலும், கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அமெரிக்க மக்களுக்கு அதிக அளவிலான நிதி உதவிகள் வழங்கப்பட்டன. அமெரிக்க தேர்தலை மனதில் வைத்து அதிக அளவான பணம் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டும் உள்ளது. இவையெல்லாம் சேர்த்து முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் பணவீக்கம் உயர்ந்தது.ஃபெடரல் வங்கிஅமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித உயர்வு: இந்திய பங்குச் சந்தையைப் பாதிக்குமா? தொடர்ந்து வட்டி உயர்வு..! இதன் காரணமாகக் கடந்த எட்டு மாதங்களாக அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் மாதத்துக்கு 0.75% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. தற்போது ஒன்பதாவது முறையாக 0.25% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் வட்டி விகிதம் 5% ஆக உள்ளது. அமெரிக்க ஃபெடரல் வங்கி பணவீக்க விகிதத்தை 2% என்ற அளவுக்கு கீழ் குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. எட்டு முறை உயர்த்தப்பட்டபோதும் வட்டி விகிதங்கள் எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை. தற்போது பிப்ரவரி மாத நிலவரப்படி பணவீக்க விகிதம் 6% என்று அளவில் உள்ளது. இது ஃபெடரல் வங்கியின் இலக்கைவிட மூன்று மடங்கு அதிகமாகும். ஆனால், அதிகரித்த வட்டி விகிதம் காரணமாக அமெரிக்க வங்கி துறை அதிக பாதிப்படைந்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் முன்னணி வங்கிகளான சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகிய வங்கிகள் திவால் ஆகின. இதன் காரணமாக ஃபெடரல் வங்கி திட்டமிட்டபடி வட்டி விகிதங்களை அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது வட்டி விகிதங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டதன் மூலம் அந்த எதிர்பார்ப்புக்கு விடை அளிக்கப்பட்டுள்ளது.ஃபெடரல் வங்கியின் கவர்னர் ஜெரோம் பவல் வெள்ளத்திலிருந்து சென்னையைக் காப்பாற்றுமா ஸ்பாஞ்ச் பார்க் திட்டம்?! ஃபெடரல் வங்கியின் கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ஃபெடரல் வங்கியின் கவர்னர் ஜெரோம் பவல் அமெரிக்கா வங்கிகள் ஸ்திர தன்மையுடன் இருப்பதாகவும் தேவையான பணப்புழக்கம் அமெரிக்க வங்கிகளுக்கு கிடைப்பதற்கு ஃபெடரல் வங்கி எப்போதும் துணை நிற்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார். தற்போது சந்தை வல்லுநர்களின் கணிப்பின்படி இன்னும் ஒரு முறை மட்டும் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதன் பிறகு நீண்ட காலத்துக்கு வட்டி விகிதம் 5.25% நிர்ணயம் செய்யப்படும். பணவீக்க விகிதம் ஃபெடரல் வங்கி எதிர்பார்த்த அளவுக்கு குறைந்தால் மட்டுமே வட்டி விகிதம் மீண்டும் குறைக்கப்படும். பிரிட்டனிலும் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% சென்ற வாரத்தில் உயர்த்தப்பட்டது. நமது நாட்டிலும் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. பண வீக்கத்துக்கு எதிரான போர் நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதைத் தொடர்ந்து அதிகரிக்கும் வட்டி விகித உயர்வு நமக்கு உணர்த்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது பங்குச் சந்தையும் ஏற்றத்தை சந்திக்கவில்லை. பங்குச் சந்தைகளில் கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்த காரணத்தால் பலர் புதிய டீமேட் கணக்குகளைத் தொடங்கி தமது முதலீட்டை மேற்கொண்டனர். உணவுப் பஞ்சம், பொருளாதார நெருக்கடி... தவிக்கும் பாகிஸ்தான்; எச்சரிக்கும் உலக வங்கி! அவ்வாறு முதலீடு செய்தவர்களுக்கு முதல் ஆண்டு மிகப்பெரிய லாபம் கிடைத்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான காலகட்டத்தை அவர்கள் பார்த்து வருகிறார்கள். இந்தக் காலகட்டங்களில் பங்குச் சந்தையில் ஈடுபட்ட பலர் பலத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாகத் தமது முதலீடுகளைத் திரும்பப் பெற்று டீமேட் கணக்குகளை மூடி வரும் தனி நபர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. பண வீக்க பிரச்னைக்கு முடிவு கிடைக்காமல் இதே நிலைதான் சந்தையில் தொடரும் என்பதால் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
http://dlvr.it/SlbJzg

Monday, 27 March 2023

“சிவாஜி கணேசன் இல்லைன்னா நான் இல்ல” - ‘முதல் மரியாதை’ ரீ-ரிலீஸில் பாரதிராஜா நெகிழ்ச்சி

“'முதல் மரியாதை'  போன்ற ஒரு படைப்பை நான் நினைத்தாலும் மறுபடியும் எடுக்க முடியாது” என்று கூறியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. இயக்குநர் பாரதிராஜா இயக்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை ராதா, சத்யராஜ், தீபன் நடித்து, இசைஞானி இளையராஜா இசையிலும் கவிஞர் வைரமுத்து வரிகளிலும் 1985ஆம் ஆண்டு வெளியானது 'முதல் மரியாதை' திரைப்படம். இப்படம் வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 67 திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் இப்படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 12 திரையரங்குகளில் முதல் மரியாதை திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதனைக் காண படத்தின் இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் திரையரங்கிற்கு நேற்று சென்றார். படத்தை காணும் முன் இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சினிமாவில் நுழைந்தவர்கள் எல்லாம் ஜெயித்து விட முடியாது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இல்லை என்றால் இந்த பாரதிராஜா இல்லை. சிவாஜி போட்ட பிச்சை தான், இதுவரையில் நான் நடிக்க காரணம். இதுபோன்ற ஒரு படைப்பை நானே நினைத்தாலும் மறுபடியும் எடுக்க முடியாது. படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் ராதா, சத்யராஜ், தீபன் உள்ளிட்டோர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். ஒளிப்பதிவாளர் கண்ணன், இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் இந்த படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்” என்றார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் தரப்பிலிருந்து பாரதிராஜாவிடம் ‘முதல் மரியாதை திரைப்படத்தில் நடிகை ராதா கதாபாத்திரம் பரிசல் ஓட்டும் பெண்ணாக இருப்பார். அதே வேலை செய்யும் கதாபாத்திரத்தில் பொன்னியின் செல்வனில் பூங்குழலி இருக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த இயக்குநர் பாரதிராஜா, “இரண்டு கதாபாத்திரங்களும் வேறு வேறு. இரண்டையும் கலந்து பார்ப்பது தவறு. ஒரு கலைஞனின் படைப்பு மிகவும் முக்கியமானது. நான் இயக்குநர் மணிரத்னம் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன்'' என்றார்.
http://dlvr.it/SlXN8l

Sunday, 26 March 2023

‘பிரேக்-அப்’பிலிருந்து இளைஞர்களை மீட்க புதிய திட்டம் | கனடாவில் காந்தி சிலை சேதம் - உலகச் செய்திகள்

காதல் பிரேக்-அப்களில் சிக்கித்தவிக்கும் இளைஞர்களை மனதளவில் மேம்படுத்த 'லவ் பெட்டர்' (Love Better) என்ற புதிய பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறது நியூசிலாந்து. இந்தத் திட்டத்துக்காக 4 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் - ரஷ்யப் போரை நிறுத்த, அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை நடத்த சீனா, ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த, பெற்றோர்களின் ஒப்புதலைக் கட்டாயமாக்கியிருக்கிறது அந்த அரசு. இந்தச் சட்டம் மார்ச் 2024-லிருந்து நடைமுறைக்கு வருகிறது. மன்னரான பின்பு முதன்முறையாக பிரான்ஸுக்குப் பயணம் செய்தார் சார்லஸ். இந்த நிலையில், பிரான்ஸில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் பணி ஓய்வு வயது நீட்டிப்பு தொடர்பான மசோதாவை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்கள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. கனடாவின் ஒன்டாரியோவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் அங்கிருக்கும் காந்தி சிலை சிதைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைனின் சுமி பகுதியில், ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்கு எதிராக முதன்முறையாக டி-20 போட்டிகளில் வெற்றி\பெற்று சாதனை புரிந்திருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. ஒட்டாவாவில் அமெரிக்க அதிபர் பைடனும், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் சந்தித்த நிலையில், இரண்டு நாடுகளுக்குமிடையேயுள்ள இடப்பெயர்வு, பாதுகாப்புச் சிக்கல்கள் ஆகியவை பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கிலாந்தில் வசித்துவரும் ஒரு பெண், திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைப்பாட்டால், ஒரு வருடத்துக்கும் மேலாகச் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டுவருகிறார். இந்தக் குறைபாடு தன் வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப்போட்டுவிட்டதாக வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.
http://dlvr.it/SlVFYv

Saturday, 25 March 2023

ஐபிஎல் கோப்பையை வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? அணியின் நிலை என்ன?

இன்னும் ஒரே வாரத்தில் 16வது ஐபிஎல் திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்கான பயிற்சியில் 10 அணி வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலை குறித்து இங்கு அறிவோம். இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இந்த வருட சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. கடந்த 2008 ஐபிஎல் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற 15வது சீசனில் தோனியுன் முழு ஆதரவுடன் கேப்டனாகப் பொறுப்பேற்ற ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தொடக்க போட்டிகளில் சிறப்பாகச் செயல்படாததையடுத்து தன் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து பிற்பகுதி ஆட்டங்களுக்காக மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றார், தோனி. ஆனாலும், கடந்த சீசன் சென்னை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2022 சீசனில், 10 அணிகள் கொண்ட போட்டியில் வெறும் எட்டு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தை மட்டுமே சென்னை அணி பிடித்தது. தொடக்க போட்டிகளின் தோல்வியே இந்த நிலையை எட்டுவதற்குக் காரணமாக அமைந்தது. ஆனால், இந்த முறை எப்படியும் கோப்பையை வெல்லும் முனைப்பில் சென்னை அணி உள்ளது. மேலும், இந்த தொடரே தோனிக்கு கடைசியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்தக் கோப்பையை வென்றுதரும் முயற்சியில் தோனி தீவிரமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது சென்னையில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த சீசனில், சென்னை அணி, டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தொடக்க பேட்டர்களாய் களமிறக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இவர் முக்கிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மேட்ச் வின்னர். இவர், சென்னை அணியுடன் இணைந்திருப்பதால் அது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று சொல்லப்படுகிறது. தவிர, 4வது வரிசையில் களம் இறக்கப்படலாம் என்று தெரிகிறது. நடுவரிசையில் ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். இதற்கிடையே நம்பிக்கை நட்சத்திரமாக கேப்டன் தோனி உள்ளார். ஆகையால் இந்த முறை சென்னை அணி, ஓர் சிறந்த படையை வைத்திருப்பதாகவும், 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணியாக இருக்கும் எனவும் கிரிக்கெட் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. அதுபோல் பந்துவீச்சிலும் சிறந்த வீரர்களை சென்னை அணி கொண்டுள்ளது. தீபக் சாஹர் அணிக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார். முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா ஆகியோரும் சிறந்த பங்களிப்பைக் கொடுக்கக்கூடியவர்கள். கடந்த சீசனில் சென்னை அணியின் பந்துவீச்சு சுமாராகவே இருந்தது. ஆனால், இந்த முறை அதை ஈடுகட்டும் எனத் தெரிகிறது. மேலும், தமிழக ரசிகர்களால் ’தல’ என அன்புடன் அழைக்கப்படும் தோனி, முதல் சீசனிலிருந்து சென்னையை மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். அவர் சென்னைக்காக 4 கோப்பைகளை (2010, 2011, 2018, 2021) வென்று கொடுத்து ஐபிஎல்லின் 2வது வெற்றிகரமான அணியாக திகழ்வதற்கு முக்கிய காரணமாகச் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 13 சீசன்களில் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதே வீறுநடை இப்போதும் சென்னை அணியிடம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு அட்டவணை: 1. மார்ச் 31, இரவு 7.30 : குஜராத் டைட்டன்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத் 2. ஏப்ரல் 3, இரவு 7.30 : சென்னை சூப்பர் கிங்ஸ் V லக்னோ சூப்பர் ஜெயின்ஸ், சென்னை 3. ஏப்ரல் 8, இரவு 7.30: மும்பை இந்தியன்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை 4. ஏப்ரல் 12, இரவு 7.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை 5. ஏப்ரல் 17, இரவு 7.30: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு 6. ஏப்ரல் 21, இரவு 7.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை 7. ஏப்ரல் 23, இரவு 7.30: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா 8. ஏப்ரல் 27, இரவு 7.30: ராஜஸ்தான் ராயல்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், ஜெய்ப்பூர் 9. ஏப்ரல் 30, மதியம் 3.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V பஞ்சாப் கிங்ஸ், சென்னை 10. மே 4, மதியம் 3.30: லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ 11. மே 6, மதியம் 3.30: சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ், சென்னை 12. மே 10, இரவு 7.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை 13. மே 14, இரவு 7.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை 14. மே 10, மதியம் 3.30: டெல்லி கேப்பிட்டல்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி சென்னை அணி வீரர்கள் எம்எஸ் தோனி (கேப்டன்), டேவோன் கான்வே, ருதுராஜ் கைக்வாட், அம்படி ராயுடு, சுபிரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் , டிவைன் பிரிடோரிஸ், மிட்செல் சாண்ட்னெர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி, மதீஷா பதிரானா, சிமர்ஜீத் சிங், தீபக் சஹர், பிரஷாந்த் சோலங்கி, மஹீஸ் தீக்ஷனா, அஜிங்க்ய ரகானே, பென் ஸ்டோக்ஸ், ஷைக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன் , அஜய் மண்டல், பகத் வர்மா. - ஜெ.பிரகாஷ்
http://dlvr.it/SlS5km

Friday, 24 March 2023

கார் விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர் | புதினை விமர்சித்த ரஷ்ய பாப் பாடகர் மரணம் - உலகச் செய்திகள்

இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்து, உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், முதல் தவணையாக 333 மில்லியன் டாலரை இலங்கை பெற்றிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வில், ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதல்களில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். உலகின் 26 சதவிகிதம் மக்கள் தூய்மையான குடிநீர் வசதிகளின்றி தவிப்பதாக ஐ.நா-வின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், 46 சதவிகிதம் மக்கள் ஒழுங்கான சுகாதார வசதிகளின்றி இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அலுவலகம் அதிர்ந்தபோதும், செய்தி வாசிப்பாளர் ஒருவர் தொடர்ந்து செய்தி வாசிக்கும் வீடியோ வைரலாகிவருகிறது.புதின் `புதினைக் கைதுசெய்ய முயல்வதைப் போர் அறிவிப்பாகவே பார்க்கப்படும்’ என ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் (Dmitry Medvedev) தெரிவித்திருக்கிறார். ரஷ்ய பாப் பாடகர் டிமா நோவா (Dima Nova) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ரஷ்ய- உக்ரைன் போரைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புதினைக் கடுமையாக விமர்சித்த இவர், பனிக்கட்டியில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. கலிஃபோர்னியா மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், சூறாவளிக் காற்றினால் மரங்கள் சாய்ந்ததில், இருவர் உயிரிழந்தனர். லெபனானின் கடுமையான பொருளாதார நெருக்கடியால், ஆயிரக்கணக்கான மக்கள் பிய்ருட் (Beirut) -ல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களைக் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசி அந்த நாட்டுக் காவல்துறை கட்டுப்படுத்தி வருகிறது. ஹாலிவுட் நடிகர் Dick Van Dyke கலிஃபோர்னியாவில் கார் விபத்தில் சிக்கி, காயங்களுடன் உயிர் தப்பினார். 97 வயதான இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பூஞ்சைத்தொற்று ஒன்று அமெரிக்காவில் அதிகமாகப் பரவி வருவதாக நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையங்கள் (Centers for Disease Control and Prevention) தெரிவித்திருக்கிறது. கேண்டிடா ஆரிஸ் (Candida auris) என்ற இந்தத் தொற்று பரவிய நபர்களின் எண்ணிக்கை ஓராண்டில் 1,471 ஆக உயர்ந்திருக்கிறது.
http://dlvr.it/SlPDC5

Thursday, 23 March 2023

``தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைவு; தொடர்ந்து விலை குறைய வாய்ப்பில்லை!"

இந்த மாதம் ஆரம்பத்திலிருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த சில தினங்களாக ஏறிக்கொண்டே வந்தது. இந்நிலையில், தங்கம் விலை சட்டென்று ரூ.800 குறைந்து மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.தங்கம் விலைஇலங்கைக்கு ரூ.24,600 கோடி கடனுதவி... சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளுடன் ஒப்புதல்! மார்ச் 1-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,235-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.41,880-க்கும் விற்பனை ஆகியது. அதன் பின்னர் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை மார்ச் 14-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,390-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.43,120-க்கும் விற்பனை ஆகி தங்கத்தின் விலை ரூ.43,000-க்கு வந்தது. அடுத்த மூன்று நாள்களிலேயே தங்கத்தின் விலை ரூ.44,000-த்தை தொட்டு ஒரு பவுன் தங்கம் ரூ.44,480-க்கு விற்பனை ஆனது. மூன்று நாள்களுக்குப் பின்னர், தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.5,470 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.43,760 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.800 குறைந்துள்ளது வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்`ஸ்டார்பக்ஸ்' புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளி லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம்! இதுக்குறித்து கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர் கூறுகையில், ``அமெரிக்க பெடரல் வங்கி பணவீக்கத்தைக் குறைப்பதற்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த வாரம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை 50 - 80 டாலர் அதிகரித்தது. அதிலிருந்து தற்போது 20 - 25 டாலர் குறையும்போது, அந்த விலை மாற்றம் நமது சந்தையிலும் பிரதிபலிக்கிறது. ஆனாலும், தங்கம் விலை தொடர்ந்து குறையும் என்று கூற முடியாது. தங்கம் விலை அதிகரிக்கத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளன. 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தது. அதே மாதிரியான போக்குதான் தற்போது காணப்படுகிறது'' என்றார்.
http://dlvr.it/SlLD0w

Wednesday, 22 March 2023

`இதுவே என் கடைசி காதல்'- 92 வயதில் 5-வது திருமணம் செய்யவுள்ள ஊடகத்துறை ஜாம்பவான் ருபெர்ட் முர்டாச்

பல பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சினிமாத் தயாரிப்பு நிறுவனங்கள், செய்தி இணையதளங்கள் என ஊடகத்துறையின் ஜாம்பவானாக விளங்குபவர் ருபெர்ட் முர்டாச். ஆஸ்திரேலியாவில் பிறந்து, அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ருபெர்ட்டுக்கு பரம்பரைத் தொழிலே பத்திரிகைதான். தன் தந்தையின் மறைவுக்குப் பின்னர் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார் முர்டாச்.   ஆஸ்திரேலியாவில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த தனது பத்திரிகையை இங்கிலாந்து, அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகளுக்கு அவர் விரிவுபடுத்தினார். அதிரடி செய்திகள் மூலம் அவரது பத்திரிகைகள் பிரபலமாகின. குறிப்பாக பிரபல நடிகர் - நடிகைகள், ராணுவ வீரர்கள் எனப் பிரபலங்களின் தொலைபேசி உரையாடல்கள் வெளியாகின.ருபெர்ட் முர்டாச் தனது 22 வயதில் ஊடகத்துறையில் நுழைந்த முர்டாச், ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 120க்கும் அதிகமான பத்திரிகைகளை வெற்றிகரமாக நடத்திவருகிறார். பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளரான இவர் 1956-ம் ஆண்டு விமானப் பணிப்பெண் ஒருவரை மணந்தார். ஆனால், 1967-ம் ஆண்டு இருவரும் விவாகரத்தில் பிரிந்தனர். பின்னர் பத்திரிகையாளர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட முர்டாச், 1999-ம் ஆண்டு அவரையும் பிரிந்து மூன்றாவதாக சீனாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். அவருடன் 14 ஆண்டுகள் வாழ்ந்து, 2013-ம் ஆண்டு அவரையும் பிரிந்தார். தொடர்ந்து நான்காவதாக மாடல் மற்றும் நடிகையான ஜெர்ரி ஹாலை 2016-ல்  திருமணம் செய்துகொண்ட அவர், அவரையும் விவகாரத்து செய்துவிட்டார். தற்போது  ருபெர்ட் முர்டாச்  தனது  92 வயதில் 5ஆவது திருமணம் செய்துகொள்ள உள்ளார். இதுகுறித்து அவர் தனது சொந்த செய்தித்தாளான நியூயார்க் போஸ்டில் பேட்டி அளித்துள்ளார். அதில், “நான் மிகப் பதற்றமாக உணர்ந்தேன்.  நான் மீண்டும் காதலிக்க பயந்தேன். ஆனால், இதுவே என் கடைசிக் காதல் என்று எனக்குத் தெரியும். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.ருபெர்ட் முர்டாச் நாட்டுப்புற பாடகராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகியுமாக இருந்த 66 வயதுடைய Ann lesley smith என்பவரை ருபெர்ட் முர்டாச் ஐந்தாவதாகத் திருமணம் செய்துகொள்ள உள்ளார். இவர்கள் இருவருக்கும் கோடைக்காலத்தில் திருமணம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையின் இரண்டாம் பாதியை ஒன்றாகக் கழிக்க எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்" என ருபெர்ட் முர்டாச் தெரிவித்துள்ளார். 
http://dlvr.it/SlHCQq

Tuesday, 21 March 2023

`ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான எதிரி சொத்துகள்!' - விற்பனை நடைமுறையைத் தொடங்கியிருக்கும் மத்திய அரசு

ஏராளமானோர் இந்தியாவிலிருந்து பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கும், போருக்குப் பிறகு சீனாவுக்கும் சென்று அந்த நாடுகளில் குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு சென்றவர்கள் ரூ.1 கோடி முதல் ரூ.100 கோடி வரையிலான தங்களது சொத்துகளை இந்தியாவிலேயே விட்டுச் சென்றிருக்கிறார்கள். இதை இந்திய எதிரி சொத்து பாதுகாவலர் (சி.இ.பி.ஐ) பாதுகாத்து வருகிறார். இதற்காக எதிரி சொத்து பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தச் சொத்துகளை விற்கும் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் தொடங்கியிருக்கிறது.இந்தியா - பாகிஸ்தான் இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், ``எதிரி சொத்துகளை அப்புறப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. இதன் கீழ் எதிரி சொத்துகளை அகற்றுவதற்கான செயல்முறை, இப்போது சொத்துகளை விற்கும் முன்பு மாவட்ட மாஜிஸ்திரேட் அல்லது துணை ஆணையர் உதவியுடன் தொடங்கப்படும். ரூ.1 கோடிக்குக் குறைவான மதிப்புள்ள எதிரி சொத்துகளில், பாதுகாவலர் முதலில் குடியிருப்பாளரிடம் வாங்குவதற்கு முன்வருவார். வாங்குவதற்கான வாய்ப்பைக் குடியிருப்பாளர் மறுத்தால், எதிரி சொத்துகள் வழிகாட்டுதல்களில் குறிப்பிட்ட நடைமுறையின்படி விற்பனை செய்யப்படும். மேலும், ரூ.1 கோடி முதல் ரூ.100 கோடி வரை மதிப்பு கொண்ட எதிரி சொத்துகள், மத்திய அரசால் தீர்மானிக்கப்படும். எதிரி சொத்து ஒழிப்புக் குழுவால் தீர்மானிக்கப்படும் விகிதத்தில், மின்னணு ஏலத்தின் மூலமாக விற்பனை செய்யப்படும். இதை பப்ளிக் என்டர்பிரைஸ் மெட்டல் ஸ்க்ராப் ட்ரேடு கார்ப்பரேஷன் என்ற மின்-ஏல தளம் மேற்கொள்ளும். முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு 20 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ள எதிரி சொத்துகள் பற்றிய தேசிய கணக்கெடுப்பை மத்திய அரசு தொடங்கியது. அவை கண்டறியப்பட்ட பிறகு, அவற்றைப் பணமாக்குவது குறித்து மார்ச் 4-ம் தேதி அறிக்கை அளித்தது. இதன்படி நாட்டில் மொத்தம் 12,611 எதிரி நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2021-22-ம் ஆண்டு அறிக்கையின்படி எதிரிகளின் சொத்துகள், பெரும்பாலும் பங்குகள் மற்றும் தங்கம் போன்ற அசையும் சொத்துகளை விற்றதன் மூலம் அரசு ரூ.3,400 கோடிக்கு மேல் சம்பாதித்திருக்கிறது. ஆனால், எதிரியின் அசையா சொத்துகள் எதுவும் இதுவரை விற்கப்படவில்லை. எதிரி சொத்துகளை பணமாக்குவதை மேற்பார்வையிட உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைச்சர்கள் குழுவை உள்துறை அமைச்சகம் 2020-ல் அமைத்தது. CEPI வசமுள்ள 12,611 சொத்துகளில், 12,485 பாகிஸ்தானியர்களுக்கும், 126 சீனக் குடிமக்களுக்கும் சொந்தமானவை.அமித் ஷாதொடரும் ஷெபாஸ் ஷெரீஃப் - இம்ரான் கான் மோதல்; பஞ்சத்தில் மக்கள்... என்னதான் நடக்கிறது பாகிஸ்தானில்?! அதிக எண்ணிக்கையிலான எதிரி சொத்துகள் உத்தரப்பிரதேசத்தில் (6,255) இருக்கின்றன. அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் (4,088), டெல்லியில் (659), கோவாவில் (295), மகாராஷ்டிராவில் (208), தெலங்கானாவில் (158), குஜராத்தில் (151), திரிபுராவில் (105), பீகாரில் (94), மத்தியப் பிரதேசத்தில் (94), சத்தீஸ்கரில் (78), ஹரியானாவில் (71), கேரளாவில் (71), உத்தரகாண்டில் (69), தமிழ்நாட்டில் (67), மேகாலயாவில் (57), அஸ்ஸாமில் (29), கர்நாடகாவில் (24), ராஜஸ்தானில் (22), ஜார்க்கண்டில் (10), டாமன், டையூவில் (4), ஆந்திரா, அந்தமானில் தலா ஒரு எதிரி சொத்துகள் இருக்கின்றன.
http://dlvr.it/SlD8FK

Monday, 20 March 2023

அணு ஆயுதக் கிடங்கில் கதிரியக்க நீர் கசிவு | மெக்ஸிகோ அதிபரின் விந்தைப் பேச்சு - உலகச் செய்திகள்

மெக்ஸிகோவின் அதிபர் Andrés Manuel López Obrador, மருந்துகள் ஓவர்டோஸ் இறப்புகள் பற்றிப் பேசும்போது, `மக்களிடையே கட்டிப் பிடிக்கும் வழக்கம் குறைந்துவிட்டதால், இது போன்ற பிரச்னைகள் வருகின்றன' எனக் கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 2023-ம் ஆண்டில் பாகிஸ்தானின் முதல் போலியோ தொற்று பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அந்த நாட்டைச் சேர்ந்த மூன்று வயது சிறுவனுக்கு, போலியோ உறுதிசெய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. 6.8 புள்ளி ரிக்டர் அளவில் ஈகுவடார் நாட்டில் நிலநடுக்கம் பதிவானது. இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கூகுள், மெக்ஸிகன் வேதியியலாளரான மரியோ மோலினாவின் 80-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் டூடுல் வெளியிட்டிருக்கிறது. மரியோ மோலினா, ஓசோன் படலத்தைக் காக்கும் வகையில் பல பங்களிப்புகளைச் செய்து, நோபல் பரிசு பெற்றிருக்கிறார். வட கொரியாவில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக 8,00,000 மக்கள் ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அமெரிக்காவிலுள்ள வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம் ஒன்று, தனித்துவமான முறையில் வேலை வாய்ப்புக்கான தேவையை வெளிப்படுத்தியிருக்கிறது. அதாவது, `ப்ரொஃபெஷனலாக கரடிகளைக் கட்டிப் பிடிப்பவர்கள் வேண்டும்' என்று அந்த நிறுவனம் தெரிவித்திருப்பது, மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது. இங்கிலாந்தின் புதிய குடியேற்ற மசோதாவுக்கு எதிராக லண்டனில் கடுமையானப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் இனவெறிக்கு எதிரான பதாகைகளை ஏந்தி, போராடி வருகின்றனர். ரஷ்யா-உக்ரைன் போர் ஓராண்டைக் கடந்திருக்கும் நிலையில், கிரிமியா பகுதியை ரஷ்ய அதிபர் புதின் பார்வையிட்டார். அமெரிக்காவில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில், கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள மின்னெஸோட்டா (minnesota) அணு ஆயுதக் கிடங்கில், சுமார் நான்கு லட்சம் கேலன்கள் கதிரியக்க நீர் கசிந்தது. நவம்பரிலிருந்து கசிந்து வருவது இப்போதுதான் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
http://dlvr.it/Sl99M1

Sunday, 19 March 2023

`சாகும்வரை உணவு, தண்ணீர் கிடையாது' 1,000 நாய்களை கொடூரமாகக் கொன்ற முதியவர்!

கிட்டத்தட்ட ஆயிரம் நாய்களை வீட்டில் அடைத்து வைத்து அவை இறக்கும் வரை உணவு தண்ணீர் என எதுவும் அளிக்காமல் கொடுமைப்படுத்திய தென்கொரியாவைச் சேர்ந்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன் வீட்டில் இருந்த நாயைக் காணவில்லை என அப்பகுதியில் இருந்த ஒருவன் தேடிய பொழுது இந்த கோர சம்பவத்தை கண்டுபிடித்துள்ளார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாய்கள் சித்திரவதை |தென் கொரியா``நாய் எங்கள் வாழ்வில் கலந்த ஒன்று" குடும்பத்தோடு நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய அரசு அதிகாரி! தென் கொரியாவின்‌ வடமேற்கு பகுதியில் உள்ளது கியாங்கி எனும் மாகாணம். இங்குள்ள யாங் பியாங்க் எனும் பகுதியில் வசித்து வந்த ஒருவர் தனது நாயைக் காணவில்லை என புகார் அளித்திருந்தார்.  இந்நிலையில் தனது நாயை வீடு வீடாக தேடிச் சென்ற பொழுது முதியவரின் இந்த கொடூர செயலைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார். 60 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர் நாய்கள் பராமரிப்பு மையம் என்ற பெயரில் கடந்த 2020 முதல் நாய்களை பராமரித்து வருவதாக வெளி உலகத்திற்கு சொல்லிவிட்டு,  வீட்டினுள் ஏராளமான நாய்களை சுமார் மூன்று ஆண்டுகளாக கிட்டத்தட்ட 1000 நாய்களை உணவு, தண்ணீர் என‌ எதுவும் வழங்காமல் கூண்டில் அடைத்து கொடுமைப்படுத்திய வந்துள்ளார். இதில் அந்த நாய்களைப் பராமரிப்பதற்காக அதன் உரிமையாளர்களிடமிருந்தும் கணிசமான தொகையையும் பெற்றுள்ளார். மூன்று ஆண்டுகளாக கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில், ஏராளமான நாய்கள் இறந்து அழுகிய நிலையிலும்‌  அதனை அப்புறப்படுத்தாமல் விட்டதால், அதன் மேலேயே மேலும் பல நாய்கள் இறந்து பல அடுக்குகளாக நாய்களின் சடலம் இருந்ததாகக் கூறப்படுகிறது.  மேலும் பல நாய்கள்‌ கூண்டிலேயே அழுகி மட்கத் தொடங்கிவிட்டது.நாய்கள் சித்திரவதை |தென் கொரியாஆசையாக வாங்கிய திபெத்திய மாஸ்திஃப் நாய்... உரிமையாளருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! மேலும், ரப்பர் பெட்டிகள், இரும்புக் கூண்டுகள், மற்றும் சாக்குப்‌பைகளில் ‌நாய்களை அடைத்து வைத்து பட்டினி போட்டு அதனை இறக்கும் நிலைக்கு கொண்டு ‌சென்றிருக்கிறார்.  சில நாய்கள் அழுகிய நிலையில் ரப்பர் பெட்டிகள் மற்றும் சாக்குப்‌பைகளிலும் இருந்திருக்கின்றன. தொடர்ந்து 3 வருடங்களாக இப்படிச் செய்து வந்திருப்பதால், சில நாய்கள் எழுந்து நடக்கக் கூட முடியாமல் எலும்புக்கூடாய்த் தேய்ந்துள்ளது.  இதனைப் பார்த்து மிகவும் அதிர்ந்து போன அந்த நபர் உடனடியாக விலங்குகள் நல ஆர்வலர்களிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி அங்கு இறந்த நாய்களின் சடலங்கள் அகற்றப்பட்டன. மேலும் உயிருக்குப் போராடிக் கொண்டு மிகவும் மோசமான‌ நிலையில் இருந்த 4 நாய்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் 2 நாய்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சட்டப்படி அந்த நபர்‌ மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.நாய்கள் சித்திரவதை |தென் கொரியாதெரு நாய்கள் தொல்லை: 85 வயதில் நாய் போலக் குறைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சந்தானம்! தென் கொரியாவில் விலங்குகளைக் கொடுமைப் படுத்துபவர்களுக்கு, சுமார் ‌3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் வசூலிக்கப்படும்.  கடந்த 2010 முதல் 2019 வரை 9 ஆண்டுகளாக தென் கொரியாவில் இது போன்ற விலங்குகளுக்கு நடக்கும் கொடுமைகள் அதிகரித்துள்ளன. இது போன்ற கொடுமை சம்பவங்கள் கிட்டத்தட்ட 69 லிருந்து 914 ஆக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Sl70xp

Saturday, 18 March 2023

பெண் கொலை; உருளைக்கிழங்குடன் சமைக்கப்பட்ட மனித `இதயம்' - அடுத்த கொலை... நடு நடுங்கச் செய்த கொடூரன்!

அமெரிக்காவின் ஒக்லஹோமாவைச் சேர்ந்தவர் 44 வயதான லாரன்ஸ் பவுல் ஆன்டர்சன். இவருக்கு 2017-ம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், ஓக்லஹோமாவின் கவர்னர் கெவின் ஸ்டிட் 2019-ல் இவரின் தண்டனைக் காலத்தை ஒன்பது ஆண்டுகளாகக் குறைத்தார். ஆனால், லாரன்ஸ் மூன்று ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார்.சிறை இந்த நிலையில், சிறையிலிருந்து விடுதலையான லாரன்ஸ், ஒரு சில வாரங்களிலேயே மூன்று கொலைகளைச் செய்திருக்கிறார். அதாவது 2021-ம் ஆண்டு ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப் எனும் பெண்மணியின் இதயத்தை வெட்டி அவரைக் கொடூரமாகக் கொன்றிருக்கிறார். அதோடு லியோன் பை (67), அவரின் 4 வயது பேத்தியையும் கொன்றிருக்கிறார். லாரன்ஸ் தற்போது இந்தக் குற்றங்களை ஏற்றுக்கொண்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து வழக்கறிஞர்கள் தரப்பில், ``லாரன்ஸ், கடந்த 2021-ம் ஆண்டு ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப் எனும் 41 வயது பெண்மணியைக் கொன்றிருக்கிறார். பின்னர், இறந்த பெண்ணின் உடலிலிருந்து இதயத்தை வெட்டி எடுத்து, இறந்தவரின் மாமாவான, லியோன் பை வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு, இதயத்தை உருளைக்கிழங்குகளுடன் சேர்த்து சமைத்திருக்கிறார். பின்னர் லியோன் பை, அவரின் பேத்தியான கேயோஸ் யேட்ஸையும் கொல்வதற்கு முன்பு, சமைத்த அந்த இதயத்தை அவருடைய அத்தை டெல்சி பைக்கும், மாமாவுக்கும் பரிமாற முயன்றிருக்கிறார்" என்று கூறப்பட்டிருக்கிறது.கொலை மேலும், இதுபற்றி மாவட்ட வழக்கறிஞர் ஜேசன் ஹிக்ஸ் பேசுகையில், ``ஓக்லஹோமா மாநில புலனாய்வுப் பணியகத்தின் ஆதாரங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. நான் அதை மதிப்பாய்வு செய்த பிறகு, வாரக்கணக்கில் இரவில் விழித்திருந்தேன். இந்த வழக்கில் லாரன்ஸ் சிறையிலிருந்து வெளியே வரமாட்டார் என்பதை உறுதி செய்யும்விதமாக உத்தரவு வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இந்த உத்தரவு யாராலும் மாற்ற முடியாது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.நீதிமன்ற உத்தரவு இது எனது அலுவலகத்துக்கு மட்டுமல்ல, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. இந்தக் குடும்பங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டன" என்று கூறினார். பறக்கும் தட்டுகள், ஏலியன்கள் நடமாட்டம்; உளவு பார்ப்பது ஏலியன்களா?! - அமெரிக்கா விளக்கம்
http://dlvr.it/Sl4sP6

Friday, 17 March 2023

கூகுளில் கிம் ஜாங் உன் குறித்துத் தேடிய உளவுத்துறை அதிகாரி: மரண தண்டனை விதித்த வடகொரிய அதிபர்!

வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங்-உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுவருகிறது. அரசு கூறுவதை அந்த நாட்டு மக்கள் எந்தக் கேள்வியுமின்றி அப்படியே செய்ய வேண்டும். மீறினால் கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற சூழல் உருவாகியிருக்கிறது. மேலும், அந்த நாட்டில் குடிமக்கள் வெளி உலகத்தைப் பற்றி அறிந்துகொள்வதைத் தடுக்க இணைய அணுகலைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. பொதுமக்கள் இணையதளம் பயன்படுத்தவும் தடைசெய்யப்பட்டிருக்கிறது.வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் ராணுவ உயர் அதிகாரிகளும், உளவுத்துறையினரும் மட்டுமே இணையதளத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும், அவர்கள் இணையத்தில் என்னென்ன தேடுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க அரசு குழு ஒன்றை நியமித்திருக்கிறது. அந்தக் குழு 10 துறைகளுக்கு இணைய அணுகலை வழங்கியிருக்கிறது. மேலும், முகவர்கள் தங்கள் தேடல், சொல், பதிவு ஆகியவற்றை முடக்கி, இணையத்தில் வடகொரியா விரும்பும் அளவுக்கு மட்டுமே தேட அனுமதிக்கிறது. இந்த நிலையில், உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் அதிபர் கிங் ஜான் உன் குறித்து சாதாரணமாகக் கூகுளில் தேடிப் பார்த்திருக்கிறார். இந்தத் தகவலை இணையக்கட்டுப்பாட்டு அறை, அதிபர் கிம் ஜாங்-உன்-யிடம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருக்கிறது. உடனே அவர் ,"என்னைப் பற்றி எப்படி இணையத்தில் தேடலாம்" எனக் கொந்தளித்து, உடனடியாக அந்த உளவுத்துறை அதிகாரிக்கு துப்பாக்கிப் படையினரால் மரண தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டிருக்கிறார். இது குறித்து வடகொரியாவிலுள்ள மனித உரிமைகளுக்கான குழுவின் இயக்குநர் கிரெக் ஸ்கார்லடோய் (Greg Scarlatoiu), "அதிபர் கிம் ஜாங்-உன் ஆட்சியில் தகவல் பரிமாற்றம் வீழ்ச்சியடைந்துவருகிறது.வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் கிம் ஆட்சியில் மிகவும் நம்பகமான முகவர்கள்கூட இப்போது வெளி உலகத்திலிருந்து தகவல்களை அணுக முயல்கின்றனர். கிம் குடும்ப ஆட்சி பெரும் வற்புறுத்தல், தண்டனை, கண்காணிப்பு, தகவல் கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் அதிகாரத்தைப் பலப்படுத்துகிறது. வெளியுலகிலிருந்து நாட்டுக்குள் வரும் மிகக் குறைந்த தகவல்களும், அதிகாரத்தின் மீதான பிடிக்கு பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.``2025 வரை குறைவாக உணவு சாப்பிடுங்கள்!'’ வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி! - என்ன பிரச்னை?
http://dlvr.it/Sl20jq

Thursday, 16 March 2023

கருங்கடலில் பதற்றம்: அமெரிக்க டிரோன்மீது ரஷ்யப் போர் விமானம் தாக்குதல் - என்ன நடந்தது?

ரஷ்ய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று கருங்கடல் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்தது. அப்போது ரஷ்யப் போர் விமானம், அமெரிக்காவுக்குச் சொந்தமான டிரோன்மீது மோதியிருக்கிறது, இந்தச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த திடீர்த் தாக்குதல் காரணமாக கருங்கடலில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து அமெரிக்க ஐரோப்பிய கட்டுப்பாட்டு அறை அளித்த தகவலில், இரண்டு ரஷ்ய Su-27 போர் விமானங்கள் சர்வதேசக் கடல்வழியில், ஆளில்லா MQ-9 ரீப்பர் விமானத்தின் மீது மோதி அதன் புரொப்பல்லரை (Propeller) சேதப்படுத்தியதாகத் தெரிவித்திருக்கிறது. ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளாக்கப்பட்டது என்பதை ரஷ்யா மறுத்துவிட்டது. மேலும், ஆளில்லா போர் விமானம் கட்டுப்பாடற்ற வகையில் பறந்தது. MQ-9 விமானத்தை இயக்கியவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள ஒதுங்கியபோது, அந்த ஆளில்லா விமானம் கட்டுப்பாட்டை இழந்து நீரில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது" என ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்திருக்கிறது.ஆளில்லா விமானம் இது குறித்துப் பேசிய வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி பின்னர், "ரஷ்யர்களின் மறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், விழுந்த ஆளில்லா விமானம் தவறான நபர்களிடம் செல்வதைத் தடுக்க அமெரிக்கா முயல்கிறது. இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பதால், எங்களைப் பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.'அடுத்த வாரம் ரஷ்யா செல்லும் ஜி ஜின்பிங்?' - உலக நாடுகள் உற்றுநோக்கும் பயணம், ஏன்?!
http://dlvr.it/SkyxxZ

Wednesday, 15 March 2023

தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு சரஸ்வதி சம்மான் விருது!

தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு 2022ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிய வம்சம் நினைவலைகள் என்ற புத்தகத்துக்காக சிவசங்கரிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு 2022 ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான்  விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ல் வெளியான சூரிய வம்சம் - நினைவலைகள் என்ற இவருடைய நூலுக்காக  சிவசங்கரிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு முதல் கே.கே. பிர்லா நிறுவனத்தால் சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் உயரிய இலக்கிய  விருதுகளில் ஒன்றான இந்த விருதினைப் பெறுபவர்களுக்கு ரூ. 15 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்தியாவின் 22 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நூலுக்கு - சிறந்த உரைநடை அல்லது கவிதை இலக்கியப் படைப்புக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. தமிழில் ஏற்கெனவே, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, அ.அ. மணவாளன் ஆகியோர் இந்த விருதினைப் பெற்றிருக்கின்றனர்.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/rOmkTg0 https://ift.tt/JMSlFgY
via IFTTT

பிரஸ் மீட்: கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர்கள்; பாதியில் வெளியேறிய அமெரிக்க அதிபர் - என்ன நடந்தது?

அமெரிக்காவில் வங்கிகளின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துவருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வார இறுதியில் இரண்டு பெரிய அமெரிக்க வங்கிகளின் சரிவு தொடர்பான தன் இறுதி அறிக்கையை வாசித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஜோ பைடனிடம் "வங்கிகள் சரிவைச் சந்திருக்கின்றன... நீங்கள் என்ன செய்கிறீர்கள்... என்ன நடந்தது என்பது குறித்து தற்போது விளக்கமாகக் கூறமுடியுமா... இதனால் எந்த விளைவும் ஏற்படாது என அமெரிக்கர்களுக்கு உங்களால் உறுதியளிக்க முடியுமா?" எனக் கேள்வியெழுப்பினார்.ஜோ பைடன் இந்தக் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், மௌனமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார். இடையில் மற்றொரு பத்திரிகையாளர் "மற்ற வங்கிகள் சரிவைச் சந்திக்குமா?’’ எனக் கேள்வி எழுப்பியபோதும் அவர் திரும்பிக்கூட பார்க்காமல் அறையை விட்டே வெளியேறினார். ஜோ பைடன் பத்திரிகையாளர் சந்திப்பின்போது வெளியேறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவிப்பவர்களின், கருத்துகள் முடக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் இதுபோல பத்திரிகையாளர்களின் சந்திப்பிலிருந்து பாதியில் வெளியேறுவது இது முதல்முறையல்ல. சீனாவின் உளவு பலூன் சம்பவம் குறித்து அறிக்கையை வெளியிட்ட பிறகு, பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் பாதியிலேயே வெளியேறினார். "Can you assure Americans that there won't be a ripple effect? Do you expect other banks to fail?" BIDEN: *shuts door* pic.twitter.com/CNuUhPbJAi— RNC Research (@RNCResearch) March 13, 2023 கடந்த ஆண்டு, கொலம்பிய ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சிரித்துவிட்டுச் சென்ற வீடியோவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனா: சீனாவைக் குற்றம்சாட்டும் அமெரிக்கா | வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை! - உலகச் செய்திகள்
http://dlvr.it/SkvvDZ

Tuesday, 14 March 2023

"சேப்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி ஸ்டேண்ட்... இதான் காரணம்!”-கிரிக். சங்க தலைவர் விளக்கம்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக புணரமைக்கப்பட்டுள்ள இரண்டு பெவிலியன் ஸ்டேன்ட்களில், ஒன்றிற்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படவிருக்கிறது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அவர் பேசுகையில், “கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவராக மட்டும் இல்லாமல் முதன் முதலில் மைதானம் கட்ட 15 லட்சம் ரூபாய் நிதி வழங்கியதும் கலைஞர் கருணாநிதி தான்” என்று தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த அண்ணா பெவிலியன் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் ஆகிய இரண்டு பெவிலியன்களும் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அதன் திறப்பு விழா, வருகின்ற 17ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. மைதானம் கட்ட தொடங்கிய நேரத்தில் நிதியுதவி அளித்து பெரிதும் பங்காற்றியவர் கலைஞர்! இதில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒரு ஸ்டான்ட்டிற்கு மட்டும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட உள்ளது. கலைஞர் கருணாநிதி கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அதையும் தாண்டி முதன்முதலில் சேப்பாக்கம் மைதானம் கட்ட துவங்கிய நேரத்தில், 15 லட்சம் நிதியாக வழங்கினார் அவர். எனவே தான் அவர் பெயரை சூட்டியுள்ளோம். தமிழகத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் குறைவாக உள்ளனர்! அதற்கான தேர்வு நடைபெற்றுவருகிறது! தமிழ்நாடு கிரிக்கெட் அணி ரஞ்சி கோப்பையில் மிக அருகில் சென்று தோல்வி அடைந்துள்ளது. இதனை மாற்றி தமிழ்நாடு கிரிக்கெட்டை மேலும் முன்னேற்றும் நோக்கில் புதிய பயிற்சியாளரை நியமனம் செய்துள்ளோம். தமிழகத்தில் வேகப்பந்து வீரர்கள் குறைவாக உள்ளதால் அவர்களை கண்டறிவதற்கான தேர்வுகள் அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது. ஏராளமான நபர்கள் இதில் பங்கேற்று உள்ளனர். விரைவில் மகளிருக்கான கிரிக்கெட் தொடர்கள் துவங்கப்படும்! தமிழகத்தில் முன்பை விட தற்போது பெரிய அளவில் மகளிர் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலும் பெண்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் அதிகரித்திருப்பதை ஊக்குவிக்கும் வகையில், நிச்சயம் அவர்களுக்கும் தனியாக கிரிக்கெட் தொடர்கள் துவங்கப்படும். எப்போதும் மக்கள் வந்துசெல்லும் வகையில் மைதானத்தில் அருங்காட்சியகம் இடம்பெறும்! சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக இரண்டு அருங்காட்சியகம் அமைக்கவும், மைதானத்தை பொதுமக்கள் வந்து சுற்றி பார்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மைதானம் என்றால் பெரிதாக மக்கள் நினைத்து வரும் நிலையில், வெளிநாடுகளை போலவே போட்டி நடைபெறாத நேரங்களில் மைதானத்தை சுற்றி பார்க்கும் வசதி, இந்தியாவில் முதன் முதலில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளும் போட்டியை நேரில் பார்க்க கூடுதல் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.
http://dlvr.it/Skrqz5

Monday, 13 March 2023

அடுத்தடுத்து 6 முறை மாரடைப்பு! ஆசிரியரை போராடி உயிர்பிழைக்க வைத்த அரசு மருத்துவர்கள்!

அடுத்தடுத்து 6 முறை மாரடைப்பு ஏற்பட்ட நபரை காப்பாற்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மனம் தளராத போராட்டத்தால் தவிர்க்கப்பட்ட மரணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். விழுப்புரம் மாவட்டம் அரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். 36 வயதான இவர் சென்னை மடுவங்கரையில் உள்ள சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன் ராஜேஷ் பள்ளிக்கு சென்றபோது , லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நொடியும் தாமதிக்காமல் ராஜேஷை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுதியானது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இதயத் துடிப்பு முற்றிலும் நின்று, ராஜேஷ் நிலை குலைந்துள்ளார். அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்களும், நெஞ்சுவலி சிகிச்சை மைய மருத்துவர்களும் இணைந்து நோயாளி மீண்டும் உயிர்பெறத் தேவையான சிகிச்சையையும், DEFIBRILLATORS மூலம் சிறிது இடைவெளிகளில் 5 முறை ஷாக்கும் கொடுத்துள்ளனர். இதனிடையே சிபிஆர் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. 6 முறை மாரடைப்பு ஏற்பட்டும் மருத்துவர்கள் மனம் தளராமல் போராடி ராஜேஷின் உயிரை காப்பாற்றியுள்ளனர். இளையோருக்கு மாரடைப்புகள் அதிகரித்து விட்டதால், சிறிது நெஞ்சுவலி ஏற்பட்டால் கூட இதய பரிசோதனைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் ராஜேஷுக்கு சிகிச்சை அளித்த இதயவியல் நிபுணர் பிரதாப்.  புள்ளி விவரங்களின்படி இதுவரை 3 முறை மாரடைப்பு ஏற்பட்டோர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பதால் ராஜீவ் காந்தி மருத்துவர்கள் செய்ததை புதிய ஆய்வுக் கட்டுரையாக வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் தேரணிராஜன் கூறினார். GOLDEN HOUR என்று சொல்லப்படும் குறிப்பிட்ட நேரத்திற்குள் இதயவியல் நிபுணர்களை அணுகினால் போதும், மாரடைப்பிலிருந்து மீண்டு விடலாம் என்பதே மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை.
http://dlvr.it/Skns5j

Sunday, 12 March 2023

சீன அதிபருக்கு புதின் சொன்ன வாழ்த்து... டிக் டாக் செயலிக்கு செக் வைத்த பெல்ஜியம் | உலகச் செய்திகள்

சீன அதிபராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றதையடுத்து ஜி ஜின்பிங்கை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்தியிருக்கிறார். இது மேலும் இரு நாடுகளுக்கு இடையே உண்டான உறவுகளை வலுப்படுத்தும் என்று அவர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கிச்சூட்டை நடத்திய குற்றவாளி உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தாய்லாந்தில் முன்பில்லாத அளவுக்குக் காற்று மாசுபாடு அதிகரித்து, மக்கள் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துவருகிறது. தாய்லாந்தில் சுமார் 1.32 மில்லியன் மக்கள் இந்த ஆண்டு காற்று மாசுபாட்டால் நோய்வாய்ப்பட்டனர் என்று கூறப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மதானா ராஜ் சிங் என்ற வாலிபர், அங்கு வங்கி ஊழல் மற்றும் மோசடி வழக்கில் கைதாகியிருக்கிறார். பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ், அவருடைய தம்பியான இளவரசர் எட்வர்டுகு 'டியூக் ஆஃப் எடின்பர்க்' பட்டத்தை வழங்கினார் . இதற்கு முன்னதாக இந்தப் பட்டத்தைப் பெற்றிருந்த மறைந்த இளவரசர் பிலிப், அவரின் மனைவியான எலிசபெத் மகாராணியின் ஆசையின்படி இந்தப் பட்டம் எட்வர்டுக்கு வழங்கப்பட்டது. பிரேசிலிலுள்ள ஒரு பெண் தன் பக்கத்து வீட்டாரின் 'நீனா' என்ற நாய் தொடர்ந்து குரைத்துவந்ததால் அதை உயிருடன் புதைத்திருக்கிறார். பிளானுரா முனிசிபாலிட்டியில் நடந்த இந்தச் சம்பவத்தின் குற்றவாளியான 82 வயது பெண் இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். நியூயார்க்கில் ராப் பாடகி GloRilla -வின் இசை நிகழ்ச்சி ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்திருக்கிறது. ஐரோப்பா, அமெரிக்காவைத் தொடர்ந்து பெல்ஜியம், அரசு ஊழியர்களின் தொலைபேசிகளிலிருந்து டிக் டாக் செயலியை அகற்ற முடிவுசெய்திருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங், 63 வயதான லி கியாங்கை, சீனாவின் நாடாளுமன்ற வருடாந்தரக் கூட்டத்தில் பிரதமராக நியமித்திருக்கிறார். குடியேற்றச் சட்டத்தின்கீழ் ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்களை முறையாகப் பயன்படுத்த இரு கட்சி மசோதா, அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
http://dlvr.it/Sklppr

Saturday, 11 March 2023

காஷ்மீர் பத்திரிகை சுதந்திரம் குறித்த நியூயார்க் டைம்ஸ் கட்டுரை; அனுராக் தாகூர் கடும் கண்டனம்!

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ், சமீபத்தில் காஷ்மீர் பத்திரிகை சுதந்திரம் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, காஷ்மீர் ஊடக நிறுவனங்களை மிரட்டுதல் போன்ற செயல்பாடுகளால் ஜம்மு - காஷ்மீரில் தகவல் வெற்றிடத்தை உருவாக்குகிறது.America காஷ்மீரில் பயன்படுத்தப்படும் தகவல் கட்டுப்பாட்டு முறையை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தி அதில் வெற்றி பெற்றால், பத்திரிகை சுதந்திரம் மட்டுமல்ல, இந்திய ஜனநாயகமே ஆபத்தில் இருக்கும் சூழல் உருவாகும்" என்று குறிப்பிட்டிருந்தது. இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தன் ட்விட்டர் பதிவில், "இந்தியா மீதும், நம் பிரதமர் மோடி மீதும் வெறுப்பை வளர்க்கும் சில வெளிநாட்டு ஊடகங்கள், நமது ஜனநாயகம் குறித்து, நீண்ட காலமாக திட்டமிட்டு பொய்களைப் பரப்ப முயன்றுவருகின்றன. இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் மற்ற அடிப்படை உரிமைகளைப் போலவே புனிதமானது.மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இந்தியாவில் ஜனநாயகமும், மக்களாகிய நாமும் மிகவும் முதிர்ச்சியடைந்திருக்கிறோம். இது போன்ற ஒருபக்கம் சார்ந்த ஊடகங்களிலிருந்து ஜனநாயகத்தின் இலக்கணத்தைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் குறித்து நியூயார்க் டைம்ஸ் பரப்பும் அப்பட்டமான பொய்கள் கண்டிக்கத்தக்கது. இந்திய மண்ணில் அவர்களின் தீர்க்கமான நிகழ்ச்சிநிரலை இயக்க இந்தியர்கள் அனுமதிக்க மாட்டார்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.``அனுராக் தாக்கூர் பெரிய அமைச்சர்; நாங்கள் சிறிய மனிதர்கள்” - ப.சிதம்பரம் பதில்
http://dlvr.it/SkjlMR

Friday, 10 March 2023

ஒரு டாலருக்காக வங்கிக்குள் கொள்ளையடிக்கச் சென்ற 65 வயது முதியவர்; காரணம் என்ன?

அமெரிக்காவில் 65 வயது முதியவர் தன்னுடைய விசித்திர ஆசைக்காக, வங்கியொன்றில் வெறும் ஒரு டாலரைக் கொள்ளையடிக்கச் சென்ற சம்பவம் பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.முதியவர் டொனால்ட் சான்டாக்ரோஸ் (Donald Santacroce) என்ற 65 வயது முதியவர், கடந்த திங்களன்று சால்ட் லேக் சிட்டியில் (Salt Lake City) இருக்கும் வெல்ஸ் ஃபார்கோ வங்கியில் (Wells Fargo Bank) நுழைந்திருக்கிறார். பிறகு அங்கிருக்கும் வங்கி ஊழியர்களிடம் கடிதம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில், ``இவ்வாறு செய்வதற்காக என்னை மன்னியுங்கள். ஆனாலும் இதுவொரு கொள்ளைதான். எனவே, தயவுசெய்து ஒரு டாலரை எனக்குக் கொடுங்கள். மிக்க நன்றி" என டொனால்ட் சான்டாக்ரோஸ் எழுதியிருக்கிறார். வங்கி ஊழியர்களும் அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவரின் கொள்ளை நிறைவேறியதும், வங்கியிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார்கள். ஆனால், அந்த நபர் வெளியேறாமல், போலீஸை அழைக்குமாறு ஊழியர்களிடம் கூறியிருக்கிறார். என்னவென்று புரியாமல் நின்ற ஊழியர்கள் அவ்வாறே போலீஸை அழைத்திருக்கிறார்கள்.கைது பின்னர் தாமதமாக வந்த போலீஸார், அந்த நபரைக் கைதுசெய்தனர். அதைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை போலீஸிடம் விளக்கிய அந்த நபர், ``மத்திய சிறைக்குச் செல்ல வேண்டும் என்று எனக்கு ஆசை. அதனால்தான் இவ்வாறு செய்தேன்" எனக் கூறினார். மேலும் இது குறித்துப் பேசிய போலீஸார், ``போலீஸ் வருவதற்கு தாமதமானது. அதோடு தன்னிடம் துப்பாக்கியில்லாததால் வங்கி ஊழியர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என டொனால்ட் கூறினார்" என்று தெரிவித்தனர்.ரூ.80,000 செலவு; ஜாக்குவார் காரில் வந்து ரூ.1,000 கொள்ளை! - காசியாபாத்தில் சிக்கிய கும்பல்
http://dlvr.it/SkfwL4

Thursday, 9 March 2023

1,000 நாய்களைக் கொடூரமாகக் கொன்ற முதியவர்! - போலீஸில் சொன்ன அதிர்ச்சிக் காரணம் என்ன தெரியுமா?

தென் கொரியா நாட்டில், 60 வயது முதியவர் ஒருவர் 1,000 நாய்களைக் கொன்ற கொடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, தென் கொரியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட ஜியோங்கி (Gyeonggi) மாகாணத்தின், யாங்பியோங் (Yangpyeong) பகுதியில் உள்ளூர்வாசி ஒருவர் தன்னுடைய நாயைத் தேடிக்கொண்டிருந்தபோது, இத்தகைய திகில் சம்பவத்தைக் கண்டிருக்கிறார்.நாய்கள் குறிப்பிட்ட இடத்தில் இறந்த நாய்களின் சிதைந்த உடல்கள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பல அடுக்குகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. கூடவே, இன்னும் பல நாய்கள் சாக்குப்பைகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்திருக்கின்றன. இதைக் கண்டு அதிர்ந்து போனவர், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்த விலங்குகள் வன்கொடுமை வழக்கை விசாரித்த போலீஸார், 60 வயதான முதியவர் ஒருவரைக் கைதுசெய்தனர். அந்த முதியவர் போலீஸ் விசாரணையில், `நாய் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட இந்த நாய்களை, சாகும்வரை பட்டினி போட்டுக் கொன்றேன்' என அதிர்ச்சி வாக்குமூலம் அளித்திருக்கிறார். அந்த முதியவரை கைதுசெய்த போலீஸார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய விலங்குகள் உரிமைகள் குழு பிரதிநிதி ஒருவர், ``குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர், இனப்பெருக்க வயதைக் கடந்த அல்லது வணிகரீதியில் கவர்ச்சிகரமானதாக இல்லாத நாய்களை ஒழிப்பதற்காக, அந்த நாய்களின் உரிமையாளர்கள் மூலம் பணம் பெற்றிருக்கிறார்.நாய் 2020-ம் ஆண்டு முதல், அத்தகைய நாய்களைக் கவனித்துக்கொள்ள, ஒரு நாய்க்கு 10,000 வான் (won - தென் கொரிய நாணய மதிப்பு) பெற்றிருக்கிறார். பின்னர் அவற்றைச் சாகும் வரை பட்டினி போட்டுக் கொன்றிருக்கிறார்" எனக் கூறியிருக்கிறார். கடுமையான விலங்குகள் பாதுகாப்புச் சட்டங்கள் அமலிலுள்ள தென் கொரியாவில், விலங்குகளுக்கு வேண்டுமென்றே உணவோ, தண்ணீரோ அளிக்காமல் கொலைசெய்பவர்களுக்கு, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 30 மில்லியன் வான் அபராதமாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியிருந்தும், 2010 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் விலங்குகள் வன்கொடுமை வழக்குகள், 69-லிருந்து 914 ஆக அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.ஆசையாக வாங்கிய திபெத்திய மாஸ்திஃப் நாய்... உரிமையாளருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!
http://dlvr.it/Skbw3x

Wednesday, 8 March 2023

இரான்: பள்ளி மாணவிகள் மீது விஷவாயு தாக்குதல், பொதுமக்களின் கோபத்தை தொடர்ந்து மதகுரு அறிக்கை!

இரானின் கொம் நகரில் பள்ளி செல்லும் சிறுமிகளுக்குச் சிலர் விஷம் கொடுத்ததாக சில நாள்களுக்கு முன்னர் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்நாட்டில் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்பதைத் தடுக்கவும், பெண்களுக்கான பள்ளிகளை மூட வலியுறுத்தியும் இது போன்று சிலர் செயல்படுவதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியது. இந்த நிகழ்வை கண்டித்து இரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல நகரங்களில் மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரான் தற்போது, பள்ளி மாணவிகள் மீது மீண்டும் விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டதாக மற்றொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகும் மாணவிகளுக்குத் தலைவலி, படபடப்பு, உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. குளோரின் போன்ற சுத்திகரிப்பு திரவத்தின் மணத்தை உணர்ந்ததாக மாணவர்களில் சிலர் கூறியுள்ளனர். இரானில் நவம்பர் மாதம் வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே இருக்கும், அதனால் பள்ளிகளின் வகுப்பறைகள் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி வெப்பப்படுத்தப்படுகின்றன. அந்த இயந்திரத்தில் இருந்து வெளியேறிய கார்பன் மோனாக்ஸைடு வாயுவால் மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. டெஹ்ரான், கோம் போன்ற நகரங்களில் இத்தகைய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து இரானின் நுண்ணறிவு அமைச்சகம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.இரான் மாணவிபெண் கல்வியைத் தடுக்க மாணவிகளுக்கு விஷம்?! - இரான் அமைச்சர் அதிர்ச்சித் தகவல் பொதுமக்கள் கோபம் கொண்டு போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதன்முறையாக தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார் இரானின் மூத்த மதகுரு தலைவரான அயதுல்லா கமேனி. இது பற்றி அவர் கூறும் போது, ``நாட்டின் பல்வேறு நகரங்களில் பள்ளி மாணவிகள் மீது நச்சு வாயுத் தாக்குதல் நடத்தப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். இந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் இதில் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது துளியும் இரக்கம் காட்டப்பட மாட்டாது” எனத் தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/SkXv46

ஹோலி கொண்டாடிய இந்து மாணவர்கள்மீது தாக்குதல் |ஜப்பானில் குறையும் பிறப்பு விகிதம் - உலகச் செய்திகள்

ஜப்பானின் H3 ராக்கெட் விண்ணில் செலுத்திய பிறகு தோல்வியடைந்தது. இதன் காரணமாக ஜப்பானின் விண்வெளி நிலையம் இதை அழிப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறது. அமெரிக்காவில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்திலிருந்த அவசரக்கால கதவைத் திறக்க முயன்றிருக்கிறார். இதைத் தடுத்த, விமான ஊழியர்களைக் கத்தியால் குத்தியதால், அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஸ்பெயினில் 1.7 மில்லியன் மதிப்பிலான 45 ஒயின் பாட்டில்களை நட்சத்திர விடுதியிலிருந்து கடத்திய தம்பதி கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அத்துமீறி நுழைந்து திருடிய குற்றத்துக்காக கணவருக்கு நான்கரை ஆண்டுகளும், மனைவிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்பெயினில் பாலியல் சமத்துவத்தை முன்னெடுக்கும் வகையில், நிறுவனங்களில் இருக்கும் இயக்குநர் குழுமத்தில் 40 விழுக்காடு பெண்களை நியமிக்கச் சட்டம் இயற்றப்படுகிறது. ஜப்பானில் பிறப்பு விகிதம் வேகமாகக் குறைந்துவருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், ஜப்பான் காணாமல்போகும் நிலை ஏற்படக்கூடும் எனப் பிரதமரின் ஆலோசகர்கள் தெரிவித்திருக்கின்றனர். பாகிஸ்தானில், பஞ்சாப் பல்கலைக்கழக வளாகத்தில் ஹோலி கொண்டாடிய இந்து மாணவர்கள்மீது சில இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்த மாணவர்கள் நடத்திய தாக்குதலில் 15 மாணவர்கள் காயமடைந்தனர். இந்தோனேசியாவில் பெய்துவரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், பலரைத் தேடும்பணி நடைபெற்று வருகிறது. எகிப்தில் தொல்லியல் ஆய்வுப் பகுதியில் முகத்தில் புன்னகையுடனும், கன்னக்குழியுடனும் Sphinx வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பாகிஸ்தானில், கச்சி மாவட்டத்தில் காவல்துறையினர் பயணம் செய்த ட்ரக் மீது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் ஒன்பது காவலர்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிதானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, அங்கிருக்கும் 25 சதவிகித பெண்கள் அவர்கள் செய்யும் வேலைகளை இழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://dlvr.it/SkXtwn

Tuesday, 7 March 2023

EV: லித்தியம் பேட்டரிதான் எரியுது, சோடியம் பேட்டரி எப்படி? உலகின் முதல் Na-Ion பேட்டரி சீனா கார்!

‘தசாவதாரம்’ படத்தில், ‘உலகையே அழிக்கும் வைரஸை அழிக்க அவ்ளோ சோடியத்துக்கு எங்கே போறது’ என்று கமல் யோசிக்கும்போது, சட்டென அவரது மூளையில் கடலலைச் சத்தம் அலையடிக்கும். ‘சோடியம்னா உப்பு… கடலைவிட உப்பு அதிகமா இருக்கிற இடம் எங்கே இருக்கு!’ என்று சமுத்திரத்தை நோக்கிப் போவார். அதேபோன்றதொரு ஐடியா இப்போது நிஜமாகவே எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் நடக்கப் போகிறது. எலெக்ட்ரிக் கார் ‘Made in China-வா?’ என்று நக்கலாகச் சொல்கிறோம். ஆனால், இப்போது ‘Started in China' ஆகத்தான் தொழில்நுட்பம் உலகளவில் வளர்ந்து கொண்டு இருக்கிறது. ஆம், சோடியம் மூலம் தயாரிக்கப்படும் பேட்டரியை ஷோகேஸ் செய்திருக்கிறது, சீனாவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன நிறுவனமான JAC Auto. சீனாவின் பீஜிங்கைச் சேர்ந்த ஸ்டார்ட்–அப் நிறுவனமான Hina Battery Technologies எனும் நிறுவனம்தான், உலகின் இந்த முதல் சோடியம் அயன் பேட்டரியைத் தயார் செய்திருக்கிறது. இந்த பேட்டரியைத்தான் தனது வாகனங்களில் பொருத்தி சீனாவில் ஷோகேஸ் செய்திருக்கிறது JAC ஆட்டோ. எலெக்ட்ரிக் வாகனங்கள் வந்தபோது, முதலில் லெட் ஆசிட் (Lead Acid) பேட்டரி பயன்படுத்தினார்கள். அப்புறம், அதற்கும் ஒரு படி மேலே லித்தியம் அயன் (Li Ion) பேட்டரி வந்தது. இப்போது லித்தியம் அயனுக்கும் பல படி மேலே வந்திருக்கிறது இந்த சோடியம் அயன் (Na-Ion) பேட்டரி. Li Ion பேட்டரியுடன் ஒப்பிடும்போது, நிக்கல் – மேங்கனீஸ் – கோபால்ட் - கிராஃபைட் போன்ற ரா–மெட்டீரியல்களுக்கு அலையத் தேவையில்லை. சோடியம் என்றால் உப்பு. உப்பு கடலிலேயே கிடைக்கும். எனவே, விலை குறைந்த ரா மெட்டீரியல்களில் இந்த Na-Ion பேட்டரி தயார் செய்யப்படுவதால், இது லித்தியம் அயன் பேட்டரியைவிட சுமார் 10% விலை குறைகிறது. அதனால், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் கணிசமாகக் குறையும்.Na-Ion பேட்டரி இப்போது எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள பெரிய சிக்கலே – அதன் விலைதான். காரணம், பேட்டரி. ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 1 லட்ச ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதில் 65%–க்கு மேலே பேட்டரிக்கான செலவுதான் இருக்கும். அதாவது, பேட்டரிக்கு மட்டுமே 65,000 ரூபாய் நீங்கள் கொடுக்கிறீர்கள். லேட்டஸ்ட்டாக, ஓலா ஸ்கூட்டர் உரிமையாளர் ஒருவர், 3 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பேட்டரியை ரீப்ளேஸ்மென்ட் செய்ய ஆர்டர் போட்டிருக்கிறார். ஓலா எஸ்1 ப்ரோவின் அந்த பேட்டரியின் விலை எவ்வளவு தெரியுமா? 87,000 ரூபாய்க்கு மேலே வந்தது. ஆனால், 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அந்த ஸ்கூட்டரை வாங்கியது 1.30 லட்சத்துக்குத்தான். Ola Scooter: செலவு கம்மியாகுதேனு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினால் இப்படி ஓர் ஆப்பா?! லித்தியம் அயனில் பெர்ஃபாமன்ஸ்தான் மிகப்பெரிய பலம். அதற்கும் பங்கம் வராதபடி இந்த சோடியம் அயன் பேட்டரியைத் தயாரித்திருக்கிறது ஹீனா பேட்டரி டெக்னாலஜி நிறுவனம். இது லித்தியத்தைவிட குறைந்த அழுத்தம் கொண்டிருப்பதால், லோ டெம்பரேச்சரிலும் பெர்ஃபாமன்ஸ், சார்ஜிங்கிலும் வேகம் என்று எல்லாவற்றிலுமே பெஸ்ட் என்று சொல்லப்படுகிறது. முக்கியமாக, இந்த Na-Ion பேட்டரிகள், Non-Flammable என்றும் சொல்கிறார்கள். JAC காட்சிப்படுத்திய வாகனத்தில் 25kWh சக்தி கொண்ட பேட்டரி பொருத்தி இருக்கிறார்கள். இது சிங்கிள் சார்ஜுக்கு 250 கிமீ தூரம் போகுமாம்.Blade Battery லேட்டஸ்ட்டாக நம் நாட்டுக்குள் நுழைந்த உலகின் பெரிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான சீனாவைச் சேர்ந்த BYD, அமெரிக்காவின் டெஸ்லாவை முந்த வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டிருப்பது நமக்குத் தெரியும். ‘பிளேடு பேட்டரி’ எனும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட பேட்டரியைக் கொண்டு வந்தது இந்த BYDதான். இப்போது சீனாவின் JAC ஆட்டோ நிறுவனம், அடுத்த அடியை நோக்கிக் களமிறங்கி இருக்கிறது.எந்த பேட்டரி வேணாலும் பண்ணுங்க; ஆனா எரியாத பேட்டரியா பண்ணுங்க சீனாக்கார்!
http://dlvr.it/SkTnKn

Monday, 6 March 2023

`விஷத்துக்குப் பிறகு விஷவாயு?’ - இரானில் பள்ளி செல்லும் மாணவிகள்மீது தொடரும் தாக்குதல்?

இரான் கொம் நகரில் பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு சிலர் விஷம் கொடுத்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இரானில் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்பதைத் தடுக்கவும், பெண்களுக்கான பள்ளிகளை மூட வலியுறுத்தியும் இது போன்று சிலர் செயல்படுவதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியது. அதையடுத்து இரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் மாணவிகளின் பெற்றோர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பள்ளி மாணவிகள்மீது தற்போது விஷவாயு செலுத்தப்பட்டதாக மற்றொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. ஜான்ஜென், மேற்கு அஜர்பை ஜான், பார்ஸ் உள்ளிட்ட 10 மாகாணங்களில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலுள்ள மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெண்கள் பள்ளிகள்மீது ரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி இந்தச் சம்பவம் தொடர்பாக இரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி கூறும்போது, "நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சதித் திட்டம் இது. இதன் மூலம் நமது அதிகாரிகள், பெற்றோர், மாணவர்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் இரானில் மீண்டும் பதற்றத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.ஈரான் பெண்களுக்கு ஆதரவாக உலகம் முழுக்க தலைமுடியை வெட்டும் பெண்கள்... வலுக்கும் எதிர்ப்பு!
http://dlvr.it/SkQn2f

Sunday, 5 March 2023

குழாய் நீரில் முகம் கழுவிய நபர் மரணம்: `மூளையை உண்ணும் அமீபா காரணமா?’ - மருத்துவர்கள் விளக்கம்!

அமெரிக்காவின், ஃபுளோரிடாவின் சார்லோட் கவுன்ட்டியில் குழாய் நீரில் தனது முகத்தையும் மூக்கையும் கழுவிய நபருக்கு, சில நாள்களில் தலைவலி ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரைச் சோதித்ததில் அவரை `Naegleria fowleri’ எனும் அமீபா தாக்கியிருப்பது தெரியவந்தது. உடனே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.முகம் கழுவுதல் ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அதைத் தொடர்ந்து, அவர் குழாய் நீரில் முகத்தையும் மூக்கையும் கழுவியதால், மூளையை உண்ணும் Naegleria fowleri எனும் அமீபாவின் தாக்குதலால்தான் அவர் மரணமடைந்திருக்கிறார் என்பதை ஃபுளோரிடா சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும், இந்த அமீபா குறித்து ஃபுளோரிடோ வழங்கிய எச்சரிக்கையில், "இந்த அமீபா மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து, மூளையை நோக்கிப் பயணிக்கும். பின்னர் மூளைத் திசுக்களை அழித்து, அவற்றை உண்ணத் தொடங்கும். இது, முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் எனப்படும் சேதப்படுத்தும் தொற்றுநோயை ஏற்படுத்தும். இந்தத் தொற்று பெரும்பாலும் ஆபத்தானது. இந்த அமீபாவால், தாக்கப்பட்டவர்களுக்கான ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, சமநிலை இழப்பு, வலிப்பு மற்றும் கடினமான கழுத்துவலி ஆகியவை அடங்கும். இந்த நோய் தீவிரமடைந்தால், மாறுபட்ட சமநிலையற்ற மனநிலை, பிரமை பிடித்தல், கோமாவுக்குக்கூட வழிவகுக்கும். 1962 - 2021-க்கு இடையில் இந்த அமீபா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 97 சதவிகிதம் பேர் இறந்துவிட்டனர். 154 பேரில் நான்கு நோயாளிகள் மட்டுமே அமெரிக்காவில் தொற்றுநோயிலிருந்து தப்பியதாகவும் பதிவுகள் கூறுகின்றன.மரணம் எனவே, ஃபுளோரிடோவில் வாழும் குடிமக்கள் குழாய் நீரில் முகத்தைக் கழுவுவதைத் தவிர்க்க வேண்டும்" எனவும் அறிவுறுத்தியிருக்கிறது. இந்த நோய் குறித்துப் பேசிய டாக்டர் மொபீன் ரத்தோர், "தற்போது இருக்கும் சூழலில் குழாய் நீரில் நேரடியாக முகத்தைக் கழுவுவதைத் தவிருங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், குடியிருப்பாளர்கள் தண்ணீரை முதலில் கொதிக்கவைத்து பின்னர் அதைப் பயன்படுத்துங்கள்" எனக் கேட்டுக்கொண்டார்.விழுப்புரம்: இளைஞர் மர்ம மரணம்?; சாலைமறியலில் ஈடுபட முயன்ற உறவினர்கள் - விசாரணையில் போலீஸ்!
http://dlvr.it/SkNf6J

Saturday, 4 March 2023

ஆசையாக வாங்கிய திபெத்திய மாஸ்திஃப் நாய்... உரிமையாளருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் சு யுன் என்ற பெண், 2016-ம் ஆண்டு விடுமுறையில் இருந்தபோது திபெத்திய மாஸ்டிஃப் நாய்க்குட்டி என்று நம்பி, ஒரு குட்டியை வாங்கி வந்துள்ளார். அடர்த்தியான முடியுடன் அழகாக இருந்த அந்தக்குட்டி,  இரண்டு வருடங்கள் கழித்து சுமார் 250 பவுண்டுகள் (தோராயமாக 114 கிலோ) எடையுடன் இரண்டு கால்களில் நடக்க ஆரம்பித்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அது அழிந்து வரும் வகையைச் சேர்ந்த ஆசிய கறுப்புக்கரடி (Asiatic Black Bear) என்பதைக் கண்டறிந்துள்ளனர்.திபெத்திய மாஸ்டிஃப் நாய்வினோத பழக்கம்; டயப்பர் அணியும் தந்தை; குழந்தைகளைப் பார்க்க தடை விதித்த நீதிமன்றம்! திபெத்திய மாஸ்டிஃப் வகை நாய்கள் ஆசிய கறுப்புக் கரடியைப் போலவே கறுப்பு - பழுப்புநிற கோடுகளுடன் கூடிய பெரிய நாய்கள். அவை 150 பவுண்டுகள் எடை வரை அதாவது தோராயமாக 69 கிலோ இருக்கும். திருமதி யுன், சீன செய்தி நிறுவனத்திடம் அளித்துள்ள பேட்டியில் தனது நாய்க்குட்டி தீராத பசியுடன் இருக்கும்போது தான் தாக்கப்பட்டதாகவும், அது தினமும் இரண்டு கூடை பழங்கள் மற்றும் இரண்டு பக்கெட் நூடுல்ஸை உணவாக உண்டதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகே, தான் வளர்ப்பது விநோத விலங்கு எனச் சந்தேகித்ததுடன், அது ஆசியக் கறுப்புக்கரடி என்பதைக் கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார். காட்டு விலங்குகளைத் தனிப்பட்ட முறையில் வீடுகளில் வளர்ப்பது சட்ட விரோதமானது என்பதை உணர்ந்த அவர், உடனடியாக அதிகாரிகளை அணுகி நடந்ததைக் கூறியுள்ளார். பின்னர் அதிகாரிகளால் அரியவகை கரடியாக கண்டுபிடிக்கப்பட்டுப் பாதுகாப்பான முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.ஆசிய கருப்பு கரடி நியூயார்க் போஸ்ட் செய்தியின்படி, தாங்கள் கைப்பற்றியபோது கரடி 400 பவுண்டுகளுக்கு மேல் எடை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விநோதமானக் கதை, முதன்முதலில் 2018-ல் வெளியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் மீண்டும் வைரலாகியுள்ளது.
http://dlvr.it/SkLWWP

Friday, 3 March 2023

3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல்அவுட்: ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்கள் இலக்கு

இந்தூர்: 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக புஜாரா 59 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லியோன் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
http://dlvr.it/SkHhMh

Thursday, 2 March 2023

சீன ஆய்வகத்தில் இருந்தே கோவிட் தொற்று பரவியிருக்க வாய்ப்பு - அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு!

சீனாவின் வூஹான் மாகாண ஆய்வகத்தில் இருந்தே கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, அமெரிக்க புலனாய்வுத் துறை (எஃப்.பி.ஐ.) இயக்குநர் கிறிஸ்டோபர் ரே தெரிவித்துள்ளார். சீனாவில் உள்ள வூஹான் நகரில் இருந்துதான் முதல்முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில், உலக நாடுகள் பலவற்றிலும் பரவி, மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. பல லட்சம் பேர் உயிரிழந்ததோடு, பல நாடுகளில் கடும் பொருளாதாரத் தாக்கங்களை கொரோனா ஏற்படுத்தியது. ஒமிக்ரான் அத்துடன் ஆல்பா, டெல்டா, ஒமிக்ரான் என வைரஸின் வேரியன்ட்டுகள் ஏற்படுத்திய அடுத்தடுத்த அலைகள் உலக நாடுகளை அச்சுறுத்தின. இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி, தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் பலனாக, தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா தொற்றினை சீனாதான் பரப்பியதாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் உள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கசிந்தது என்று, அமெரிக்க புலனாய்வு அமைப்பு (FBI) தலைவர் கிறிஸ்டோபர் ரே தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், "கோவிட்-19 தோற்றம் குறித்து பலகட்ட ஆய்வுகளை நடத்தினோம். இந்தத் தொற்றானது, சீனாவின் வூஹான் ஆய்வகப் பரிசோதனைகளின் போது தோன்றியிருக்கவே வாய்ப்புகள் அதிகம்" என்றார். அமெரிக்கா - சீனா கொரோனா பரவல் தொடங்கிய சீனாவின் வூஹான் தற்போது எப்படி இருக்கிறது? இதே கருத்தினை அமெரிக்க எரிசக்தி அமைப்பும் தெரிவித்துள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டினை சீனா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. கொரோனா தொற்று பரவியது அறிவியல் தொடர்பானது. இதை அரசியலாக மாற்ற முயலக்கூடாது என்று சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/SkDbvZ

Wednesday, 1 March 2023

முகக்கவசம் இனி கட்டாயமில்லை... 945 நாள்களுக்கு பிறகு ஹாங்காங் மக்களுக்கு விடுதலை!

ஊரடங்கு, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், தனிமைப்படுத்திக் கொள்ளுதல், வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை, கட்டாய முகக்கவசம் என கொரோனா தொற்றுப்பரவலின் போது, பல நாடுகளும் பல்வேறு கட்டுப்பாட்டுகளைத் தீவிரப்படுத்தின. கொரோனா கொரோனா தொற்றின் பாதிப்பு குறைகையில், பல நாடுகளும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தளர்த்திக் கொண்டன. ஆனால் ஹாங்காங்கில் மட்டும் தொடர்ந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நீடித்தன. ஹாங்காங்கில் 2022-ல் கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் சற்று தளர்த்திய போதும், முகக்கவசம் அணிவதில் மட்டும் எந்தத் தளர்வும் ஏற்படுத்தப்படவில்லை. 2020-ல் இருந்தே சுமார் 945 நாள்கள் ஹாங்காங் மக்கள் முகக்கவசத்தோடே வாழ்ந்து வந்தனர்.`பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களின் கவனத்துக்கு... இனி அபராதம், 500 ரூபாய்!’ - தமிழக அரசு இந்நிலையில், மார்ச் 1 புதன்கிழமையன்று முகக்கவசம் அணியும் விதியை அந்நாட்டு அரசு தளர்த்தி அறிவித்து இருக்கிறது. இது குறித்து தலைமை நிர்வாகி ஜான் லீ கூறுகையில், ``மார்ச் 1 முதல் நாங்கள் முற்றிலும் இயல்பு நிலைக்குத் திரும்புவோம். கட்டாய முகக்கவசம் அணியும் ஆணையை நீக்குவது, ஹாங்காங் இயல்பு நிலைக்குத் திரும்புவதைக் காட்டும் தெளிவான ஒரு செய்தி’’ எனக் கூறியுள்ளார்.
http://dlvr.it/SkBd5z