Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, 31 May 2024

இஸ்ரேல் தாக்குதலை `இனப்படுகொலை' என்று கூறிய இஸ்லாமிய செவிலியர்; டிஸ்மிஸ் செய்த அமெரிக்க மருத்துவமனை!

பாலஸ்தீனத்தின் (Palestine) ஹமாஸ் (Hamas) குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் (Israel) மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 250-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் குழுவினர் பணயக்கைதிகளாக கடத்திச் சென்றதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. இதற்கு எதிர் தாக்குதல் என்ற பெயரில் அக்டோபர் 8-ம் தேதி அமெரிக்காவின் நிதி மற்றும் ஆயுத உதவியுடன் பாலஸ்தீனத்தின் காஸா (Gaza) பகுதியில் போர்தொடுத்த இஸ்ரேல் இன்றுவரைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.All Eyes On Rafah

ஓயாமல் நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேலின் இந்த 8 மாத தாக்குதலில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், மனிதாபிமான உதவிகளைச் செய்துவருபவர்கள் என கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 81,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். சமீபத்தில் ஐந்து நாள்களுக்கு முன்பு, பொதுமக்கள் தஞ்சமடைந்திருக்கும் பாதுகாப்பு முகாம்கள் நிறைந்த ராஃபாவில் (Rafah) தாக்குதல் நடத்தக்கூடாது என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட... இரண்டாவது நாளிலேயே அங்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு, பொதுமக்களில் கிட்டத்தட்ட 45 பேர் பலியாகினர்.

உலகநாடுகள் பலவும் இஸ்ரேலைக் கண்டித்தன. சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கானவர்கள் `All Eyes On Rafah' என்ற புகைப்படத்தைப் பதிவிட்டுவந்தனர். இதற்கும் எதிராகப் பலர், ஹமாஸ் செய்தது மட்டும் நியாயமா என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இஸ்ரேலும், `அக்டோபர் 7-ம் தேதி உங்கள் கண்கள் எங்கிருந்தது? (Where Were Your Eyes On October 7?)' என கேள்வியெழுப்பியது.ராஃபா - இஸ்ரேல்

இதற்கிடையில், ஆரம்பத்திலிருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துவரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூட, அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டங்களைக் கண்டு, இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதைக் கருத்தில்கொண்டு இஸ்ரேலை போர் நிறுத்துமாறு கூறிவருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவில் செவிலியராகப் பணியாற்றிவரும் பாலஸ்தீனிய-அமெரிக்க இஸ்லாமிய பெண், இஸ்ரேல் தாக்குதலை இனப்படுகொலை என்று கூறியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

முன்னதாக, அவர் பணியாற்றும் NYU லாங்கோன் ஹெல்த் மருத்துவமனையானது, கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது குழந்தைகளை இழந்த தாய்மார்களுடன் பணிபுரிந்ததற்காக பிரசவ செவிலியர் ஹெசென் ஜாபருக்கு (Hesen Jabr) மே 7-ம் தேதி விருது வழங்கியது. அந்த நிகழ்ச்சியில், தான் விருது வாங்கியது மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் முன்னிலையில் உரையாற்றியது தொடர்பான வீடியோவை சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்திருந்தார்.செவிலியர் பணிநீக்கம்

அந்த வீடியோவில், `காஸாவில் தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கும் இனப்படுகொலையில், எனது நாட்டைச் சேர்ந்த பெண்கள் நினைத்துப் பார்க்க முடியாத இழப்புகளைச் சந்தித்து வருவது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது" என்று ஹெசென் ஜாபர் பேசியிருக்கிறார்.

அதற்கு எதிர்வினையாக, மருத்துவமனை நிர்வாகம் தற்போது அவரை பணிநீக்கம் செய்திருக்கிறது. இந்த நடவடிக்கை குறித்து நேற்று பேசிய மருத்துவமனை செய்தித் தொடர்பாளர், ``இந்தப் பிரச்னையில் தனது சொந்த கருத்தை பணியிடத்தில் கொண்டுவர வேண்டாம் என ஏற்கெனவே ஒருமுறை எச்சரிக்கப்பட்டது. அப்படியிருந்தும் சமீபத்தில் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இவ்வாறு கூறியிருக்கிறார். இதனால், ஊழியர்கள் பலர் வருத்தமடைந்தனர். இதன் விளைவாக, இனி அவர் இங்கு செவிலியர் அல்ல" என்றார்.All Eyes On Rafah: பற்றி எரிகிறது மனிதநேயம்; அப்பாவி மக்கள் மீது எல்லை மீறும் இஸ்ரேலும் எதிர்ப்பும்!


http://dlvr.it/T7dyNw

Thursday, 30 May 2024

Trump: 34 குற்றச்சாட்டுகளில் `குற்றவாளி' எனத் தீர்ப்பு... `தான் அப்பாவி’ எனக் குமுறும் ட்ரம்ப்!

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் அமெரிக்கத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிபராக வெள்ளை மாளிகைக்குள் நுழையலாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறார்.டொனால்ட் டிரம்ப்

முன்னதாக ஸ்டோர்மி டேனியல்ஸ் (Stormy Daniels), முன்னாள் அதிபர் ட்ரம்ப் 2006-ல் தன்னுடன் உடலுறவு கொண்டதாகவும், 2016 அமெரிக்கத் தேர்தலில் அவர் போட்டியிடும்போது இதைப்பற்றி வெளியில் கூறாமலிருக்க தனக்கு 1,30,000 டாலர் கொடுத்ததாகவும் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.ஸ்டோர்மி டேனியல்ஸ் - டொனால்ட் டிரம்ப்

பின்னர், இதில் ட்ரம்ப் தனது முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு அவர் பணம் கொடுத்திருப்பது தெரியவந்தது. அமெரிக்காவில், நடிகைக்கு அவர் பணம் கொடுத்தது சட்டப்படி தவறு இல்லை என்றாலும், தன்னுடைய தேர்தல் பிரசாரத்துக்கு உதவும் வகையில் அந்தச் செலவை சட்ட செலவுகள் என தேர்தலில் ஆவணங்களைத் தாக்கல்செய்தது பெடரல் பிரசார நிதிச் சட்டத்தை மீறிய செயல் என்று அரசு தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பொய்யான வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்ததாக டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் பதிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில், நியூயார்க் நடுவர் மன்றம் ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளில் அவரைக் குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்தது. இதன்மூலம், அமெரிக்காவில் குற்றச்செயலில் தண்டனை பெற்ற முதல் அமெரிக்க முன்னாள் அதிபரானார் ட்ரம்ப். மேலும், அமெரிக்காவில் பொய்யான வணிகப் பரிவர்த்தனை பதிவுகளுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று கூறப்படும் நிலையில், தண்டனை விவரங்கள் ஜூலை 11-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.டொனால்ட் டிரம்ப்

இருப்பினும், ட்ரம்ப் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வார் என்று கூறப்படுகிறது. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்துக்கு வெளியே பேசிய டிரம்ப், ``நான் மிகவும் அப்பாவி. இந்த நாட்டுக்காகவும், அரசியலமைப்புக்காகவும் நான் போராடுகிறேன். இங்கு என்ன நடந்தது என்பதை அனைவருமே அறிவர். இதுவொரு மோசமான விசாரணை. உண்மையான தீர்ப்பு நவம்பர் 5-ம் தேதி மக்கள் அளிப்பார்கள்" என்று கூறினார். இன்னொருபக்கம், நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பை வரவேற்ற அதிபர் ஜோ பைடன் தரப்பு, `சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்பதை நியூயார்க் நீதிமன்றத்தில் நாங்கள் இன்று கண்டோம்' என்று தெரிவித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88`மகாத்மா காந்தி குறித்த மோடியின் கருத்து... வெடித்தெழுந்த காங்கிரஸ் தலைவர்கள்!' - என்ன நடந்தது?


http://dlvr.it/T7ddSw

Tuesday, 28 May 2024

Tug of War: இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான போட்டியில் வென்ற இந்திய வீரர்கள்! | Viral Video

2005 - ம் ஆண்டு சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திற்கும் இடையிலான விரிவான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் பிரதிபலிப்பாக, சூடானில் உள்ள ஐ.நா தூதரகம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் பாதுகாப்பு பணியில், ஐ.நா சபையில் இருக்கும் உறுப்பு நாடுகள் தங்கள் ராணுவ வீரர்களை ஈடுபடுத்தி வருகிறது. இந்த நிலையில், சூடானில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு மத்தியில் அவ்வப்போது நல்லிணக்க விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.

#WATCH | Indian troops won a Tug of War that took place between them and Chinese troops during deployment in Sudan, Africa under a UN Peacekeeping mission: Army officials

(Viral video confirmed by Indian Army officials) pic.twitter.com/EpnGKURPa3— ANI (@ANI) May 28, 2024




அதன் அடிப்படையில், இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா ராணுவம் வெற்றி பெற்றிருக்கிறது. அந்தப் போட்டி நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த வீடியோவை ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது ஒரு நட்புரீதியான, உற்சாகமான போட்டி எனவும் குறிப்பிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88`ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின்போது வராத மோடி, இன்றைக்கு ஓட்டு கேட்க வருகிறார்!' - ஆ.ராசா ஆவேசம்


http://dlvr.it/T7Xb4p

Sunday, 26 May 2024

கடும் நீரிழிவு நோய்; அழுகிப்போன பற்கள்... 4 வயது மகளின் இறப்புக்குக் காரணமான தாய்க்குச் சிறை!

அமெரிக்காவின் ஓஹியோ பகுதியைச் சேர்ந்த பெண், தமரா பேங்க்ஸ். இவருடைய 4 வயது மகள் 2022 ஜனவரி மாதம் உயிரிழந்தார். அவரது மருத்துவ சோதனையில், கடுமையான நீரிழிவு நோயால் அந்த குழந்தை பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் சிறுமியின் உடலைப் பிரேத பரிசோதனை செய்ததில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பல பற்கள் அவள் இறக்கும்போது அழுகியிருந்தன. எனவே, இது கொலையாக இருக்கலாம் என சந்தேகித்த மருத்துவர்கள், காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். தமரா பேங்க்ஸ்

அதன் அடிப்படையில், சிறுமியின் பெற்றோர் தமரா பேங்க்ஸ் - கிறிஸ்டோபர் ஹோப் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையில், தமரா பேங்க்ஸ் - கிறிஸ்டோபர் ஹோப் தம்பதிக்கு இருந்த ஒரு மகன் மிக மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார். மேலும், அவர் கண்டறியப்படாத நீரிழிவு நோயால் 4 வயதில் கோமாவில் விழுந்தார். தற்போது அவர்களின் இன்னொரு மகள் 4 வயதில் நீரிழிவு நோயால் இறந்திருக்கிறார்.

முறையான மருத்துவ பராமரிப்பு இல்லாததே சிறுமியின் மரணத்திற்குக் காரணம். சிறுமிக்கு 24 கிராமுக்கும் குறைவான சர்க்கரையே கொடுக்க வேண்டும். ஆனால், நியான்-கிரீன் சர்க்கரை கலந்த பேபி ஃபார்முலா பாட்டில்களை அடிக்கடி கொடுத்திருக்கிறார். அதில் ஒரு பாட்டிலில் 77 கிராம் சர்க்கரை உள்ளது. ஜனவரி 2022- ல் சிறுமி தீவிரமான மருத்துவப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, நாள்கள் செல்லச் செல்ல சிறுமியின் நோய் மோசமடைந்திருக்கிறது.மகளுடன் தமரா பேங்க்ஸ்

மூச்சு விடுவதைச் சிறுமி நிறுத்திய பிறகே மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கிறார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு, நீரிழிவு நோய் இருக்கும் மகளுக்கு மவுன்டைன் டியூ சோடாவை அதிக அளவில் கொடுத்ததால்தான் சிறுமியின் உடல் நிலை மோசமாகியிருக்கிறது. இந்தக் கொலைக்காக தமரா பேங்க்ஸ்க்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இன்னும் சில திங்களில் கிறிஸ்டோபர் ஹோப்க்கும் தண்டனை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppb'என்ன குழந்தை?' - பாலினம் அறிய 8 மாத கர்ப்பிணி மனைவியின் வயிற்றை வெட்டிய கணவனுக்கு ஆயுள் தண்டனை!


http://dlvr.it/T7Q4pV

Friday, 24 May 2024

தைவானைச் சுற்றி வட்டமடிக்கும் சீன ராணுவம்... உச்சக்கட்ட பரபரப்பின் பின்னணி!

கிழக்கு ஆசியாவில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடு தைவான். சீனாவின் தென் கிழக்கு கடற்கரையிலிருந்து சுமார் 110 மைல் தொலைவில் தைவான் அமைந்திருக்கிறது. தைவானை தன்னிடமிருந்து பிரிந்துசென்ற ஒரு மாகாணமாகவே சீனா பார்த்துவருகிறது. எனவே, தைவானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று சீனா நினைக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங்

சமீபத்தில் தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்றார். அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, தைவானைச் சுற்றி சீனா ராணுவப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தது. இது, அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தைவான் தனது ஆளுகைக்கு உள்பட்ட பகுதி என்று சீனா உரிமை கோருவதற்கு நீண்ட வரலாற்று பின்னணி இருக்கிறது. ஜப்பானின் பிடியில் இருந்த தைவான், இரண்டாம் உலகப் போரில் சீனாவால் ஜப்பான் தோற்கடிக்கப்பட்ட பிறகு, தைவானிலிருந்து ஜப்பான் வெளியேறியது. சீனக் கொடியும், தைவான் கொடியும்

அதன் பிறகு, சீனக் குடியரசின் அதிகாரப்பூர்வ பகுதியாக தைவான் மாறியது. அடுத்த சில ஆண்டுகளில், சீனாவில் உள்நாட்டுப் போர் மூண்டது. அப்போது சீனாவின் ராணுவத் தளபதியான சாங் காய் ஷேக்கின் ராணுவம், புரட்சியாளர் மா சே துங் தலைமையிலான கம்யூனிஸ்ட் ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டது.

அதன் பிறகு, சாங் காய் ஷேக்கும், அவருடைய ஆதரவாளர்கள் சுமார் 15 லட்சம் பேரும் சீனாவை விட்டு வெளியேறி தைவானில் குடியேறினர். அங்கு, சர்வாதிகார ஆட்சியை சாங் காய் ஷேக் நடத்தினார். அவரது மறைவுக்குப் பிறகு, தைவானில் ஜனநாயகம் திரும்பியது. அங்கு முதன் முறையாக 1996-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.மாசேதுங்

தற்போது தைவானை 12 நாடுகள் மட்டுமே அங்கீகரித்திருக்கின்றன. தைவானை அங்கீகரிக்கக் கூடாது என்று சீனா உள்ளிட்ட நாடுகள் ராஜாங்க ரீதியில் அழுத்தங்களைக் கொடுத்துவருகின்றன. ஆனாலும், தைவானுக்கென்று தனி அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. தைவானுக்கு சொந்த ராணுவம் இருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்ற சூழலில், அங்கு ராணுவ நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டிருக்கிறது. மே 23-ம் தேதி நடைபெற்ற அந்த ராணுவ நடவடிக்கைகள் ஒரு தாக்குதல் போன்ற சூழலை உருவாக்கியிருக்கிறது என்று தைவான் ராணுவத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். போர்க் கப்பல்

போர் விமானங்களையும், கப்பல்களையும் சீனா அனுப்பியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. தைவானிடமிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான திறன் குறித்த சோதனையாகவே இந்த ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக சீன ராணுவம் கூறியிருக்கிறது. மேலும், ’பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கான தண்டனைதான் இது’ என்று சீனா கூறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.பிரசாந்த் கிஷோரை கேள்விகளால் தண்ணீர் குடிக்க வைத்த கரண் தாப்பர்?! - பேட்டியும் பின்புலமும்!

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான உறவு சமீபகாலமாக மிகவும் மோசமாகியிருக்கிறது. தற்போது, தைவான், அதன் அருகில் இருக்கும் சில தீவுப்பகுதிகளில் சீனாவின் ராணுவம், விமானப்படை, கப்பற்படை, ராக்கெட் படை ஆகியவற்றை பயிற்சியில் ஈடுபடுத்தியதால், நிலைமை மேலும் மோசடைந்திருக்கிறது. போர் கப்பல்

சீனாவின் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்க தைவானும் தனது ராணுவப்படைகளை இறக்கிவிட்டதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்திருக்கிறது. மேலும், அந்தப் பிராந்தியத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சீனா செயல்படுவதாகவும் தைவான் குற்றம்சாட்டியிருக்கிறது. ‘வில்லியம் லாய் ஒரு பிரிவினைவாதி’ என்று விமர்சிக்கும் சீனா, அவர் தைவானின் அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டதை விரும்பவில்லை என்பதன் வெளிப்பாடு தான் இந்த போர் ஒத்திகை.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />

http://dlvr.it/T7Mg8y

Tuesday, 21 May 2024

Israel: நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரன்ட் கோரும் ICC வழக்கறிஞர்; எதிர்ப்பு தெரிவிக்கும் பைடன்!

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஏழு மாதங்களாகப் போர் நடத்திவருகிறது. போரின் தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு நிதியுதவி, ஆயுத உதவிகளை அமெரிக்கா செய்துவந்தது. இருப்பினும், சமீபத்தில், ஐ.நாவில் இஸ்ரேலுக்கு எதிராக போர்நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அமெரிக்க தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை எதிர்க்காததற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அமெரிக்காவை விமர்சித்திருந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் (Joe Biden) சமீப காலமாகத் தொடர்ந்து போர்நிறுத்தம் கோரிக்கை விடுத்துவருகிறார்.பைடன் - நெதன்யாகு

ஜோ பைடனின் இந்த திடீர் மாற்றம்கூட இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்காவில் தேர்தல் அதிபர் தேர்தல் வருவதாலும், அங்கு பாலஸ்தீன ஆதரவு பெருகிவருவதாலும்தான் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், போர் குற்றங்களுக்காக நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞர் கரீம் கான் (Karim Khan) கைது வாரண்ட் கோரியிருப்பதை ஜோ பைடன் எதிர்த்திருக்கிறார்.

முன்னதாக, ஐ.சி.சி-யின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான், காஸாவில் போர் மூலம் பொதுமக்களை பட்டினி போட்டது, வேண்டுமென்றே அவர்கள்மீது தாக்குதல் நடத்தியது மற்றும் கொலை என உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர்மீது கைது வாரண்ட் கோரியிருந்தார். குறிப்பாக, ``இஸ்ரேலுக்கு தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. ஆனால், சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு இணங்க வேண்டிய கடமையிலிருந்து இஸ்ரேல் தப்ப முடியாது" என்று கரீம் கான் தெரிவித்திருந்தார்.ஜோ பைடன்

அதேசமயம், கொலை, பிணைக்கைதிகளைப் பிடித்துவைத்தல், பாலியல் வன்கொடுமை, உள்ளிட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் உடன்பட ஹமாஸின் மூன்று முக்கிய தலைவர்களுக்கு எதிராகவும் கரீம் கான் கைது வாரண்ட் கூறியிருக்கிறார். இப்படியிருக்க அமெரிக்க வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற யூத அமெரிக்க பாரம்பர்ய நிகழ்வில் பேசிய ஜோ பைடன், ``இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிரான கைது வாரண்டுகளுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விண்ணப்பத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையில் எந்தவொரு ஒற்றுமையும் இல்லை" என்று கூறினார்.நெதன்யாகு

கரீம் கானின் இந்த கைது வாரண்ட் கோரிக்கைக்கு இஸ்ரேல், ஹமாஸ் என இரு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்திருக்கிறது. இதில் ஹமாஸ், `ஏழு மாதங்களாக இஸ்ரேல் ஆயிரக்கணக்கான குற்றங்களை இழைத்த பிறகு அவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் கோரிக்கை வந்திருக்கிறது' என்று விமர்சித்திருக்கிறது. அதேபோல் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, `இது தார்மீக மீறல். யூதர்கள் மீது இனப்படுகொலை நடத்திவரும் ஹமாஸுக்கு எதிராக நியாயமான போரை இஸ்ரேல் நடத்துகிறது. இக்கால யூத எதிர்ப்பாளர்களில் கரீம் கானும் ஒருவர்' என்று கூறியிருக்கிறார்.

பாலஸ்தீனத்தில் நடப்பது இனப்படுகொலை என சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா தொடர்ந்த வழக்கையும் இஸ்ரேல் எதிர்கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbஇரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் திடீர் மறைவு... மத்திய கிழக்கில் ஏற்படப்போகும் தாக்கங்கள் என்னென்ன?


http://dlvr.it/T7BNwt

HIV: தனக்கு ஹெச்.ஐ.வி இருப்பதை அறிந்தே பெண் செய்த செயல்... 200-க்கும் மேற்பட்டோரை தேடும் அதிகாரிகள்!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த பாலியல் தொழில் செய்துவரும் பெண் ஒருவர், தனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை அறிந்த பின்னரும், 211 பேருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதாகும் அந்தப் பெண், கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை, அந்தப் பெண் மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிந்திருக்கிறார். எனினும் அதை அலட்சியப்படுத்திய அந்தப் பெண், கடந்த இரண்டு ஆண்டுகளில் 211 ஆண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளார். மேற்கு வர்ஜீனியா எல்லைக்கு அருகிலுள்ள தென்கிழக்கு ஓஹியோவில் உள்ள சிறிய நகரமான மரியெட்டாவின் மார்க்கெட் தெருவில் அந்தப் பெண் இத்தகைய தொழிலில் ஈடுபட்டு, பலருடன் பாலியல் உறவு வைத்து வந்திருக்கிறார். HIV

இதனால் ஃப்ளோரிடா முதல் ஓஹியோ வரையிலான கிழக்கு கடற்கரை முழுவதும், ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகச் சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்டவர்களின் நிலைமையைக் கண்டறிய, அதிகாரிகள் அவர்களைத் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளனர். 

"இந்தப் பிரச்னை புளோரிடாவில் இருந்து கிழக்கு கடற்கரை வரை எங்கும் எங்கும் நீடிக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்ட  நபர்களை நாங்கள் அணுகுவோம். அவர்கள் யாரும் சிக்கலில் இல்லை, இது ஒரு பொதுச் சுகாதார விழிப்புணர்வு.  இது மோசடி அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று வாஷிங்டன் ஷெரிஃப் அலுவலகத்தின் துணை தலைமை அதிகாரி மார்க் வார்டன் கூறியுள்ளார். HIV

இது பற்றி விளக்கமளித்த சுகாதாரத் துறை நிர்வாகி பார்பரா பிராட்லி, "சுகாதாரத்துறை என்பது முழு ரகசியத்தன்மையுடன் கூடிய தண்டனை இல்லாத பகுதி.  அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட அனைவரும் அதிகாரிகளுடன்  நேர்மையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களுடைய ரகசியம் காக்கப்படும்.  வாடிக்கையாளர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் உடலுறவு கொண்ட எவரும் இந்த கொடிய நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது" எனவும் தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbPorsche: 200 கி.மீ வேகம்... விபத்தை ஏற்படுத்திய சிறுவன்; இருவர் பலி - தந்தையை கைது செய்த காவல்துறை!


http://dlvr.it/T79yd0

Monday, 20 May 2024

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் திடீர் மறைவு... மத்திய கிழக்கில் ஏற்படப்போகும் தாக்கங்கள் என்னென்ன?

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருக்கும் சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ரைசியின் இந்த மரணம் இஸ்லாமியப் பிராந்தியமான மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான அரசியல் தாக்கத்திற்கு வழிவகுத்திருக்கிறது. அதேநேரம் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் காலநிலை என்று சொல்லப்பட்டாலும்கூட, இதன் பின்னணியில் இஸ்ரேல் - அமெரிக்க உளவு அமைப்புகளின் சதிவேலைகள் இருக்கலாம் என்றகோணத்திலும் சந்தேக அலைகள் வீசத்தொடங்கியிருக்கின்றன.இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி - அஜர்பைஜான் அதிபர்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஆட்சியில்...

கடந்த 2021-ம் ஆண்டு முதல் இரானின் வலிமை மிக்க அதிபராக இப்ராஹிம் ரைசி இருந்துவந்தார். நாட்டின் உச்சத் தலைவரும் மதகுருவுமான அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்ததாக அந்தப் பொறுப்பை இப்ராஹிம் ரெய்சியே கவனிக்கும் நிலையில் இருந்தார். ஷியா பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மை பெற்ற இரான் நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் கூட இரான் நாட்டில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்ற போது, நூற்றுக்கணக்கானோர் மீது அந்நாட்டின் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டத்தை ஒடுக்கியது. அப்போதே, `இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம் நாட்டை சீர்குலைப்பதும், வளர்ச்சியை தடுப்பதும்தான்; இதன்பின்னணியில் வெளிநாட்டு சதி இருக்கிறது' எனக் குற்றம்சாட்டினார் அதிபர் இப்ராஹிம் ரைசி.

இரானுக்கு எதிராகத் தொடர்ந்த தாக்குதல்கள்:

அந்த நிலையில், கடந்த 2024 ஜனவரி 3-ம் தேதி இரானில் மிகப்பெரிய இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோன் தாக்குதலில் 2020-ம் ஆண்டு உயிரிழந்த இரானின் உயர்மட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி, தென்கிழக்கு இரானின் கெர்மன் நகரிலுள்ள சுலைமானி நினைவிடத்தை நோக்கி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஊர்வலமாகச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக நடைபெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருக்கின்றனர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கோர சம்பவத்துக்கு, தங்களின் எதிரி நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல் போன்றவை சம்மந்தப்பட்டிருக்கிறது என இரான் சந்தேகித்தது. மேலும், இரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனி, `இரானின் எதிரிகள் மீண்டும் ஒரு பேரழிவை உருவாக்கியிருக்கின்றனர். இந்த அப்பாவி மக்களின் உயிர்த் தியாகத்துக்கு மோசமான பதிலடி நிச்சயம் உண்டு!' என எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேலில் தாக்குதலுக்குள்ளான இரான் தூதரகம், சிரியா

இரான் தூதரகம் மீதான தாக்குதல்:

இந்த நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருக்கும் இரானை எச்சரிக்கும் விதமாக, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள இரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில், தூதரகத்தில் தங்கியிருந்த இரானின் முக்கிய ராணுவ கமாண்டர் உள்பட 12 தூதரக அதிகாரிகள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக, ஏப்ரல் 13-ம் தேதி இஸ்ரேல் மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி வான்வழித் தாக்குதலை நடத்தியது இரான். இருப்பினும், இஸ்ரேல் தனது `அயர்ன்-டோம்' பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் இரான் ஏவிய 99% ஏவுகணைகளை தனது நாட்டின் எல்லையைத் தொடும் முன்பே வழிமறித்து தாக்கி அழித்தது.

அந்த தாக்குதல் குறித்து அப்போது பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ``இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இரான் தயாராகியிருக்கிறது. அதேசமயம் நாங்களும் எங்களின் தற்காப்புக்காக எல்லாவிதமான பதிலடிக்கும் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு கெடுதல் செய்பவர்களுக்கு நாங்களும் கெடுதல் செய்வோம். எங்களுக்கு ஆதரவாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் துணை நிற்கின்றன" எனத் தெரிவித்தார்.

அதேசமயம், இரான் ராணுவத் தளபதி முகமது பாகேரி, ``இஸ்ரேல் மீதான எங்களின் தாக்குதல் என்பது, சிரியாவில் இரான் தூதரகம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கான பதிலடியே. எங்களின் தற்காப்புக்காக நாங்களும் தாக்குதல் நடத்தினோம். இந்தத் தாக்குதலை நாங்கள் இனியும் நீட்டிக்க விரும்பவில்லை. ஆனால், இஸ்ரேல் எங்களை மீண்டும் தாக்கினால் அதற்காக நாங்கள் கொடுக்கும் பதிலடி இதைவிடப் பெரிதாக இருக்கும். இஸ்ரேலுக்கு ஆதரவாக குறுக்கே அமெரிக்கா வந்தாலும் அவர்களுக்கான பதிலடியைக் கொடுப்போம்!" என எச்சரிக்கை விடுத்தார்.இரான் - சீனா - சவுதி அரேபியா

சவுதி அரேபியாவுடன் புதுப்பிக்கப்பட்ட நட்பு:

போர்களுக்கிடையே தனது பழைய பங்காளிகளுடன் இருந்த மோதல்போக்கை கைவிட்டு, நட்பை புதுப்பிக்கும் முயற்சியிலும் இப்ராஹிம் ரைசி தலைமையிலான இரான் அரசாங்கம் முன்னிறங்கியது. இரானுக்கு எதிரணி முகாமில் அமெரிக்காவுடன் கைகோர்த்திருந்த சவுதி அரேபியாவின் பகைமையை முடித்துக்கொண்டு, சீனாவின் முயற்சியுடன் திடீர் நட்பு பாராட்டியது இரான். இதன்விளைவாக, ஏழாண்டுகளாக முறித்துக்கொள்ளப்பட்டிருந்த இரான் - சவுதி அரேபியாவின் தூதரக உறவு கடந்த மார்ச் மாதம் மீண்டும் மலர்ந்து, இருநாடுகளிலும் தூதரகங்கள் திறக்கப்பட்டன. இந்த சம்பவங்களெல்லாம் இரானின் பரம எதிரிகளான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தின என்கிறார்கள் சர்வதேச் அரசியல் நோக்கர்கள். ஹெலிகாப்டர் விபத்து

விமான விபத்தில் மரணமும், கிளம்பும் சந்தேகங்களும்:

இந்த நிலையில்தான், இரான் - அஜர்பைஜான் எல்லையில் இருக்கும் கிஸ் கலாசி, கோடாஃபரின் ஆகிய அணைகளைத் திறக்கும் விழாவில் அஜர்பைஜான் அதிபருடன் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும் கலந்துகொண்டார். நேற்று நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் இரானின் வர்செகான் நகருக்கு அருகே விபத்துக்குள்ளானது. இதில், இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் சேர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமிர் அப்துல்லாயன், அரசு அதிகாரிகள், பாதுகாப்பு படைவீரர்கள், விமானிகள் உள்ளிட்ட அனைவரும் உயிரிழந்ததாக இரான் அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடுமையான பனிமூட்டம் காரணமாக விபத்து நடந்திருக்கும் என கூறப்படும் நிலையில், வேறு புறக் காரணிகளும் இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறது இரான். இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்கான பின்னணியில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் ஈடுபட்டிருக்கக்கூடும் என பல்வேறு சர்வதேச ஊடகங்களும் பூடகமாக விவாதித்து வருகின்றன.

மத்திய கிழக்கில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும்?

மத்திய கிழக்கைப் பொறுத்தவரையில், அங்கிருக்கும் இஸ்லாமிய நாடுகள் இரண்டு முக்கியக் காரணிகளால் இரண்டுபட்டு நிற்கின்றன. ஒன்று அமெரிக்கா ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடு மற்றொன்று ஷியா - சன்னி மதப் பிரிவு. குறிப்பாக, சவுதி அரேபியா, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹரைன் போன்ற நாடுகள் அமெரிக்காவின் நட்பு நாடுகளாகவும், பரஸ்பர பெட்ரோலிய ஒப்பந்தங்களை பேணிவரும் நாடுகளாகவும் இருக்கின்றன. அதேபோல, சிரியா, லெபனான், குவைத், இராக், கத்தார் போன்ற நாடுகள் இரான் பக்கமும் நிற்கின்றன. மற்ற நாடுகள் இருதரப்பிலும் சமமான உறவில் இருந்துவருகின்றன. இரான் ஷியா பிரிவை பின்பற்றும் இஸ்லாமியர்களின் நாடு என்பதால் சன்னி பிரிவை பின்பற்றும் பிற இஸ்லாமிய நாடுகளுடன் உரசல்போக்கையும் கையாண்டு வருகிறது. எனவே, இந்தப் பிரிவுகளை வைத்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மத்திய கிழக்கில் தங்களின் எண்ணெய் அரசியலை கச்சிதமாக செய்துகொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகள்

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பல்லாண்டு காலமாக மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சிம்ம சொப்பனமாக முன்னணியில் இருந்துவரும் நாடாக இரான் உள்ளது. செறிவூட்டப்பட்ட யூரேனியம் தயாரிப்பு, அணுஆயுதங்கள், டாலரில் பெட்ரோலிய வர்த்தகத்தை செய்யாதது என அமெரிக்காவுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுத்துவருகிறது. மேலும், அரபு நாடுகளில் இருக்கும் அமெரிக்க, இஸ்ரேலிய எதிர்ப்பு கிளர்ச்சி குழுக்களுக்கு ஆயுத உதவி, பண உதவியையும் கொடுத்து மறைமுகமாகப் பயிற்றுவித்து வருகிறது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரில் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கும் ஹமாஸ் போராளிக் குழுக்களுக்கும், ஹைதி போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கும் இரான் பக்கபலமாக இருந்துவருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீனத்தை தாக்கினால், இரான் இஸ்ரேலைத் தாக்கும் என பகிரங்கமாக எச்சரித்தது. எனவே இரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை இரான் மீது சுமத்தியிருக்கிறது. தவிர, காசிம் சுலைமானி போன்ற இரான் பல்வேறு முக்கியத் தலைவர்களைக் குறிவைத்தும் கொன்றிருக்கிறது.(இருப்பினும், சீனா, இந்தியாவுக்கு மிக அதிகளவில் பெட்ரோலிய ஏற்றுமதியை செய்யும் நாடாக இன்றுவரையிலும் இரான் இருந்து வருகிறது.) இந்த நிலையில்தான், அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணம் பெரும் சந்தேகத்தைக் கிளப்பிருக்கிறது. அதற்கேற்ப அமெரிக்காவின் தலைவர்களும் இரான் அதிபரின் மரணத்தை வரவேற்று பேசி வருவது பெரும் சர்ச்சையை ஏற்பத்தியிருக்கிறது.இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி

மேலும், மத்திய இரானுக்கு மிகப்பெரிய பின்னடைவாகவும் பலவீனமாகவும் அமையும், அதேநேரம் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சாதகமான வாய்ப்பையும் உருவாக்கும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பாலஸ்தீனம் - இஸ்ரேல் போரில் இஸ்ரேலின் கை ஓங்கும். சவுதி அரேபியா இரான் உறவில் மீண்டும் விரிசல் விழலாம். சில நாடுகள் அணிமாறலாம். பெட்ரோலிய ஏற்றுமதியில் சிக்கல் எழலாம். கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரிக்கலாம். ஒருவேளை இப்ராஹிம் ரைசியில் மரணத்தில் அமெரிக்க, இஸ்ரேலின் கைரேகைகள் இருக்கிறது என்ற சந்தேகம் உறுதியானால் அந்த நாடுகளின் மீது இரான் பதிலடி போர்த் தொடுக்கலாம்' என பல்வேறு தாக்கங்கள் எதிர்காலத்தில் நிகழும் வாய்ப்பிருப்பதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />

http://dlvr.it/T77sNs

இரான் அதிபர் மரணம்: `இது சதித்திட்டமா?’ ட்ரெண்டாகும் இஸ்ரேல் உளவுப்பிரிவான Mossad - பின்னணி தகவல்கள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் (IRNA) செய்தி வெளியிட்டுள்ளது. அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக விவரிக்கிறது அந்த ஊடகம்.  ஹெலிகாப்டரில் இருந்த இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்பட மேலும் பலர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

இது விபத்துதான் என்கிறது அமெரிக்கா. அந்நாட்டின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர் சக் ஷுமர், "இந்த விபத்தில் எந்த சதித்திட்டமும் இருப்பதாக தெரியவில்லை,” என குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதே நேரம், நிலைமையை தொடர்ந்து கண்காணிப்போம், விசாரணையை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி

ஆனால், இதில் இஸ்ரேலின் கரங்கள் இருக்கிறது.  இப்ராஹிம் ரைசி இஸ்ரேலுக்கு எதிராக கடும்போக்கு கொண்டவர். அதனால், இது விபத்தாக இருக்காது என இணைய சதிகோட்பாட்டாளர்கள் சந்தேகம் கிளம்ப்புகின்றனர். ஆனால், எந்த சர்வதேச நாடுகளும் இது குறித்து இப்படியான கருத்தை தெரிவிக்கவில்லை. இஸ்ரேல் பெயர் அடிப்பட்ட உடன் இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொஸாத் (Mossad) பெயர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. சரி `மொஸாத்’ என்றால் என்ன... இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்படுவது ஏன்? விரிவாக விவரிக்கிறது இந்தக் குறு கட்டுரை.

`மொஸாத்’



 இஸ்ரேல் என்றதும் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது `மொஸாத்' (Mossad). அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனத்துக்கு அடுத்ததாக உலகின் சிறந்த உளவு நிறுவனமாகக் கருதப்படுவது. இதைத் தவிரவும் அவர்களிடம் இன்னும் இரண்டு உளவு நிறுவனங்கள் உண்டு. அவை, ராணுவத்தின் உளவுப் பிரிவான அமான் (Aman). உள்நாட்டு உளவுப்பிரிவான ஷபாக் (Shabak). இது Shin Bet என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

7 ஆயிரம் பேரும்... கொலைகளும், கடத்தல்களும் 



இஸ்ரேலின் தேசிய உளவுப்பிரிவான மொஸாத் உலகெங்கும் அறிமுகமான ஒன்று தான். சுமார் 7,000 பேர் பணிபுரியும் இது, உலகின் பெரிய உளவு நிறுவனங்களில் ஒன்று.

உலகத்தின் பல நாடுகளுக்கும் சென்று கொலைகள் செய்யும், குண்டுவைத்து கட்டடங்களை நொறுக்கும், விமானங்கள் உள்ளிட்ட எதையும் கடத்தும் ஓர் அமைப்பை பொதுவாக என்னவென்று சொல்வார்கள்? 'தீவிரவாத அமைப்பு' என்று கட்டம் கட்டி தடை செய்வார்கள். Mossad | மொஸாத்

மொஸாத் அந்த வேலையைத்தான் அன்டார்ட்டிகா தவிர்த்து அத்தனை கண்டங்களிலும் செய்துகொண்டிருக்கிறது. உளவு பார்ப்பது, ரகசிய ஆபரேஷன்கள் செய்வது, தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்று இதன் பணிகள் ஏராளம். 

மொஸாத் அமைப்புக்காக ஆண்டுக்கு இந்திய மதிப்பில் 22 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவழிக்கிறது இஸ்ரேல். இதில் யார் யார் பணியாற்றுகிறார்கள் என்பதெல்லாம் தேசிய ரகசியம். மொஸாத்தின் இயக்குநர் நேரடியாக இஸ்ரேல் பிரதமருக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவர் என்பதால், வேறு எவரும் அவரைக் கேள்விகள் கேட்க முடியாது.இரான் அதிபர் மரணம்: என்ன நடந்தது, ஏன் ஹெலிகாப்டரில் பயணம் செய்தார், இது விபத்தா சதித் திட்டமா?!

மொஸாத் - நான்கு பிரிவுகள் 



மொஸாத்தில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. `Tzomet’ என்பது அவற்றில் மிகப்பெரிய பிரிவு. வெளிநாடுகளில் தூதரக அதிகாரிகள் போர்வையிலும், வியாபாரிகள் போலவும் இந்தப் பிரிவினர் இருப்பார்கள். சில நாடுகளில் உள்ளூர் ஆட்களையும் உளவாளியாக மாற்றி பணியில் சேர்ப்பார்கள். இஸ்ரேலுக்காக உளவு பார்ப்பது இவர்களின் பணி.

`Caesarea’ என்பது ஸ்பெஷல் ஆபரேஷன்களைச் செய்யும் பிரிவு. எதிரி நாடுகளில் குண்டுகள் வைப்பது, வேதிப்பொருட்கள் செலுத்திக் கொலை செய்வது போன்ற பணிகளை இந்தப் பிரிவினர் செய்வார்கள். இதிலேயே `Kidon’ என்ற துணைப்பிரிவு இருக்கிறது. இவர்கள் கொலைப்படையினர். இலக்கை மட்டும் இவர்களிடம் சொன்னால் போதும். போய் ஆளை சுட்டுக்கொன்றுவிட்டு வந்துவிடுவார்கள்.

`Keshet’ என்ற பிரிவு தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தது. ஒட்டுக் கேட்பது, எதிரி நாடுகளின் இணையதள நெட்வொர்க்கை முடக்குவது, எலெக்ட்ரானிக் உபகரணங்களைப் பயன்படுத்தி கண்காணிப்பது போன்ற பணிகளில் இந்தப் பிரிவினர் நிபுணர்கள்.

`Metsada’ என்ற படு ரகசியமான பிரிவும் ஒன்று இருக்கிறது. எதிரி நாடுகளில் அரசுக்கு எதிரான கலக அமைப்புகளை உருவாக்கிக் குழப்பம் ஏற்படுத்துவது இவர்களின் வேலை.

எப்படி இவர்கள் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள்?



மொஸாத் அமைப்பு ஏன் வெற்றிகரமான உளவு அமைப்பாகச் செயல்படுகிறது? 

அந்த அமைப்புக்காக வேலை செய்பவர்களின் பட்டியலைப் பார்த்தால் இது புரியும். மொஸாத்தில் பணிபுரியும் உளவாளிகள் எல்லோரும் `Katsa’ என்று அழைக்கப்படுகிறார்கள். 

மொஸாத்துக்காக கொலைகள் மட்டுமே செய்யும் `Kidon’ பிரிவில் இருப்பவர்கள் யார் யார் என்று மொஸாத்தில் இருக்கும் சீனியர் அதிகாரிகள் பலருக்கே தெரியாது. இவர்கள் இரண்டு ஆண்டுகள் தீவிரப் பயிற்சிக்குப் பிறகே பணியில் இணைகிறார்கள்.

யூதர்களுக்காக இஸ்ரேல் என்ற நாடு புதிதாக உருவெடுத்தது என்பதால், உலகெங்கும் இஸ்ரேலை நேசிக்கும் யூதர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டுபிடித்து மொஸாத் உளவாளிகள் தங்களுக்கு உதவி செய்ய வைக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் படங்களில், அவர் எந்த நாட்டுக்குப் போனாலும் அங்கு யாரோ ஒருவர் கார் கொண்டுவந்து கொடுப்பார், துப்பாக்கி கொடுப்பார், ரகசியமான இடங்களுக்கும் கூட்டிப் போவார். அப்படி மொஸாத் உளவாளிகளுக்கு நிஜமாக இவர்கள் உதவுகிறார்கள். இஸ்ரேல் தூதர்களிடம் மொஸாத் குறித்து உரையாடும் பிரதமர்

Sayanim என்று அழைக்கப்படும் இவர்களின் உதவியால்தான் மொஸாத் இயங்குகிறது. அமெரிக்காவில் சுமார் 20 ஆயிரம் சயானிம்களும், பிரிட்டனில் 5,000 சயானிம்களும் இருக்கிறார்கள் என்றால் மொஸாத்தின் பலத்தைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். 

இவர்களைத் தவிர, இஸ்ரேலில் வந்து உயர்கல்வி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாடுகளில் படிக்கப் போகும் இஸ்ரேல் மாணவர்கள் என்று பலரையும் தங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது மொஸாத். இதனால், நாம் நினைத்தே பார்க்க முடியாத இடத்தில், நினைத்தே பார்க்க முடியாத மனிதர்கள் மொஸாத்தின் ஏஜென்ட்களாக இருப்பார்கள். 

தமிழ்நாட்டில் ஏதோ ஒரு சிறிய நகரத்தில் மொஸாத் ஆசாமிகள் இருந்தால்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவர்கள் நெட்வொர்க் அந்த அளவு விரிவானது.!

நன்றி : தி. முருகன் |
https://bit.ly/3V5NVMp />
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />

http://dlvr.it/T77rwH

இரான் அதிபர் மரணம்: என்ன நடந்தது, ஏன் ஹெலிகாப்டரில் பயணம் செய்தார், இது விபத்தா சதித் திட்டமா?!

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் (IRNA) செய்தி வெளியிட்டுள்ளது. அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக அந்த செய்தி விவரிக்கிறது.  ஹெலிகாப்டரில் இருந்த இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்பட மேலும் பலர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர் அஜர்பைஜானில் இருந்து திரும்பும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது.இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவ்

ஏன் அஜர்பைஜான் சென்றார்?



இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி,  அரஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை திறப்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்ட ஒரு குழுவுடன் அஜர்பைஜான் நாட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையே மனகசப்புகள் நிலவுகிறது. 2023 ஆம் ஆண்டு தெஹ்ரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அஜர்பைஜான், இஸ்ரேலுடன் ராஜாங்க உறவுக் கொண்டுள்ளது. ஆனால், இரான்  இஸ்ரேலை தனது முக்கிய எதிரியாக கருதுகிறது.

இருந்த போதிலும் அரஸ் நதியில் கட்டப்படும் இந்த மூன்றாவது அணையின் திறப்பு நிகழ்விற்காக இரான் அதிபர் சென்றார். இந்த அணை இரண்டு நாடுகளும் சேர்ந்து திட்டமிட்டு கட்டிய அணையாகும்.

இரண்டு நாடுகளுக்கும் சில கருத்து வேற்றுமைகள் நிலவினாலும், இந்த அணை திட்டமானது 'நட்பின் சின்னம்' என்று இரான் அரசு ஊடகம் குறிப்பிடுகிறது.

இந்த அணை ஞாயிற்றுக்கிழமை விபத்து நடப்பதற்கு ஒரு சில மணி நேரங்கள் முன்பு திறக்கப்பட்டது.

என்ன நடந்தது?



அணை திறப்பு நிகழ்வு முடிந்து இரான் திரும்பும் வழியில் தான் இந்த விபத்து நடந்துள்ளது. அஜர்பைஜான், இரான் எல்லை பகுதியானது காடுகளும், மலைகளும் நிரம்பிய பகுதி. அந்தப் பகுதியில் பயங்கர பனிமூட்டம் நிலவியதாக கூறப்படுகிறது.  இப்படியான சூழலில், இரானின் தப்ரிஸுக்குச் சென்று கொண்டிருந்த போது 50 கி.மீ. முன்னதாக வர்செகான் நகருக்கு அருகே அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையில் மோதியுள்ளது. 

உடனடியாக அந்தப் பகுதிக்கு மீட்புக் குழு ஒன்று அனுப்பப்பட்டது. துருக்கியும் ஆள் இல்லா விமானத்தை தேடுதல் பணிக்காக அனுப்பியது. ரஷ்யாவும் ஒரு மீட்புக் குழுவை அனுப்பியது. 

நீண்ட தேடுதல் முயற்சிக்கு பின்பு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்த இடத்தை தேடுதல் குழுக்கள் கண்டுபிடித்தன. ‘அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை,’ என முதலில் இரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.  பின்னர் இரான் அரசு அதிகாரபூர்வமாக அதிபர் இப்ராஹிம் ரைசி இறந்ததை உறுதி செய்தது. இரான் மீதான பல்வேறு நாடுகளின் பொருளாதார தடை காரணமாக, அந்நாட்டில் விமான போக்குவரத்து பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த இப்ராஹிம் ரைசி?



இப்ராஹிம் ரைசி புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் மதக் கல்வியை பயின்றவர். அதுமட்டுமல்லாமல் அக்கால முஸ்லிம் அறிஞர்கள் பலரிடம் இஸ்லாமிய இறையியல் கல்வியை பயின்றார்.

தனது 20ஆவது வயதில் வழக்குரைஞராக பயிற்சியை தொடங்கிய அவர், 25 வயதில் இரான் தலைநகர் தெஹ்ரானில் துணை வழக்கறிஞரானார்.

1988 ஆம் ஆண்டு அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இதனை மேற்பார்வை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு குழுவில் இப்ராஹிம் ரைசி இருந்தார். இதன் காரணமாக அவரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அமெரிக்காவும் அவர் மீது பொருளாதார தடை விதித்தது.

இப்ராஹிம் ரைசி தீவிர பழமைவாத அரசியல் கருத்துகளைக் கொண்ட கடுமையான மத குருவாக இரானில் கருதப்படுகிறார்.  2017-ம் ஆண்டில் முதல் முறையாக அதிபர் பதவிக்கு ஹஸன் ரௌஹானிக்கு எதிராக போட்டியிட்டு அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.

அந்த தேர்தலில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.  ஹஸன் ரௌஹானி இரானுக்குள் ஒரு மிதவாத தலைவராக கருதப்பட்டார்.  2015ம் ஆண்டு இரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இடையில் அணு ஒப்பந்தம் போடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 2016 காலகட்டத்தில் இரான் மீதான சர்வதேச தடைகள் நீக்கப்பட்டன. இதில் ரெளஹானிக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. 

இரான் சட்டப்படி ஒருவர்  இரண்டு முறை மட்டுமே அதிபர் தேர்தலுக்கு போட்டி போட முடியும்.

இதன் காரணமாக 2021 தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.  இப்ராஹிம் ரைசி இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வென்றார். அவர் பெற்ற வாக்குகள் 62 சதவீதம். ஆனால்,  2021 தேர்தலில் மொத்தமே 48.8 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. மிதவாதிகளும், சீர்திருத்தவாதிகளும் அந்தத் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கப்பட்டதே இதற்கு காரணமாக கூறப்பட்டது.

2021 தேர்தலில் வென்ற அவர் தன்னை இரானின் ஒரு சக்திவாய்ந்த தலைவராக நிலை நிறுத்திக் கொண்டார்.

விபத்திற்கு சதித்திட்டம் காரணமா?



இரான் அதிபர் மரணத்திற்கு தங்களது அஞ்சலியை அஜர்பைஜான், இந்தியா, பாகிஸ்தான், வெனிசுலா, அரபு அமீரகம், ரஷ்யா உள்ளிட்ட பல உலக நாடுகள் பகிர தொடங்கி உள்ளன. ஆனால், அதே சமயம் இது விபத்தா அல்லது திட்டமிட்ட சதித்திட்டமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர் சக் ஷுமர், "இந்த விபத்தில் எந்த சதித்திட்டமும் இருப்பதாக தெரியவில்லை,” என குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதே நேரம், நிலைமையைத் தொடர்ந்து கண்காணிப்போம், விசாரணையை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுக் கட்சி தலைவரான மைக்கேல் வால்ட்ஸ் "இது நல்லதே" என்று கூறியுள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ள பகிர்வு ஒன்றில், "ரைசி அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்னும் பின்னும் மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"ரைசி இறந்துவிட்டால், உலகம் பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாகத் திகழும்" என்று புளோரிடாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர் ரிக் ஸ்காட் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.

இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் பாதுகாப்பானதா?



ரைசி பயணித்த ஹெலிகாப்டர் ஒரு அமெரிக்கத் தயாரிப்பாகும். அமெரிக்க ராணுவ தரவுகளின்படி, இந்த விமானம் 1971 ஆன் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, அமெரிக்கா மற்றும் கனடா உடனே பயன்படுத்தத் தொடங்கின. 

இந்த ஹெலிகாப்டர் தீயணைப்பு படை வீரர்கள் பயன்படுத்தவும் மற்றும் சரக்கு போக்குவரத்துக்காகவுமே பெரிதும் பயன்படுத்தப்பட்டது. விபத்துக்கு உள்ளான இந்த குறிப்பிட்ட ஹெலிகாப்டர் 15 பேர் பயணிக்கும் வண்ணம் மறு வடிவம் செய்யப்பட்டது. 

இரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளால், அந்நாட்டு வானூர்திகளுக்கான உதிரிப்பாகங்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுகிறது. இதனால் அங்கு அவ்வப்போது விமான விபத்துகளும் நடக்கின்றன.

இந்தியப் பிரதமர் மோடி கூறுவது என்ன?



இந்தியப் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பகிர்வில், ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இரான் உறவை வலுப்படுத்தியதில் அவரது பங்களிப்பிற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

Deeply saddened and shocked by the tragic demise of Dr. Seyed Ebrahim Raisi, President of the Islamic Republic of Iran. His contribution to strengthening India-Iran bilateral relationship will always be remembered. My heartfelt condolences to his family and the people of Iran.…— Narendra Modi (@narendramodi) May 20, 2024


http://dlvr.it/T77SCt

Iran: அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து... `உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை’ - நடந்தது என்ன?!

அஜர்பைஜான் மாகாணத்தில் ஒரு அணையைத் திறக்க இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்றிருக்கிறார். அப்போது அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர், 12 மணி நேரத்திற்கும் மேலாக தேடி, விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்களை முற்றிலும் எரிந்த நிலையில் கண்டுபிடித்தனர். இரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில், அஜர்பைஜான் எல்லையில் ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த விபத்து நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இப்ராஹிம் ரைசி

உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, ஹெலிகாப்டரில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி, இமாம் முகமது அலி அலெஹாஷேம், விமானி, பாதுகாப்பு மெய்க்காப்பாளர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. செஞ்சிலுவைச் சங்கத் தலைவர்,``ஹெலிகாப்டரில் பயணித்தவர்களில் யாரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88திண்டிவனம்: எதிர்ப்பு தெரிவித்த விசிக; ஹெச்.ராஜா, வேலூர் இப்ராஹிம், பாஜக-வினர் கைது - நடந்தது என்ன?!


http://dlvr.it/T776rZ

Sunday, 19 May 2024

இரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது... வெளியான அதிர்ச்சித் தகவல்

பாலஸ்தீன் நாட்டின்மீது கடந்த அரை வருடமாகப் போர் நடத்திவரும் இஸ்ரேலைக் கடுமையாக இரான் எதிர்த்துவருகிறது. இந்த நிலையில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் இன்று விபத்துக்குள்ளானதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படும் ஹெலிகாப்டரில் இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனும் (Hossein Amir-Abdollahian) உடனிருந்தாகக் கூறப்படுகிறது.இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி

இருப்பினும், இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டரில் அவருடன் யார் யார் பயணித்தனர் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. முன்னதாக, கிஸ்-கலாசி அணையைத் திறப்பதற்காக இப்ராஹிம் ரைசி கிழக்கு அஜர்பைஜானை இன்று காலை வந்தடைந்தார். தற்போது ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதாக வெளியாகும் தகவலில், இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டருடன் பறந்த மற்ற ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக இலக்கை அடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, இரான் அரசு தொலைக்காட்சி, இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டரை மீட்புக் குழுவினர் தேடிவருவதாகத் தெரிவித்திருக்கிறது. அதேசமயம், இது அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்ட பிறகே விபத்தா தாக்குதலா என்று தெரியவரும்.இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன்

இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகாப்டரில் இருந்ததாகக் கூறப்படும் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கடந்த ஜனவரியில், ``இஸ்ரேலின் இனப்படுகொலை போரில், போர் தளவாடங்கள், ஆயுதங்கள், அரசியல், ஊடக ஆதரவை அமெரிக்கா இன்று நிறுத்தினால், நெதன்யாகு 10 நிமிடங்கள் கூட உயிருடன் இருக்க மாட்டார் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேல் - இரான் மோதல்... மூன்றாம் உலகப் போர் வெடிக்குமா?


http://dlvr.it/T7625x

Costly Dress: உலகின் விலையுயர்ந்த துணி: எந்த விலங்கில் இருந்து கிடைக்கிறது தெரியுமா?!

நல்ல உடை அணிவது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். தங்களை அழகாகக் காட்டிக் கொள்ள பல கடைகள் ஏறி இறங்கி உடைகளைப் பலரும் தேர்வு செய்வதுண்டு. நமது பட்ஜெட்டுக்கு ஏற்றபடி ஆயிரம் ரூபாய் முதல் கோடிகள் வரை துணியும் கிடைக்கும். ஆனால், உலகின் மிக விலையுயர்ந்த ஆடையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?!Dress (Representational Image)

`விக்குனா துணி' (Vicuña) உலகின் மிக விலையுயர்ந்த துணியாக கருதப்படுகிறது. தென் அமெரிக்க ஆண்டிஸ் மலையில் (Andes Mountains) வாழும் ஒட்டகமான விக்குனா என்ற விலங்கின் தோலில் இருந்து ஆடையைத் தயாரிக்கின்றனர். இதனால் விக்குனா துணி என்ற பெயர் வந்தது.

மலையின் குளிர்ச்சியான காலநிலையில் இருந்து தற்காத்துக் கொள்ள இதன் அடர்த்தியான ரோமங்கள் உதவுகிறது. அதன் ரோமத்தில் இருந்து தயாரிக்கப்படும் உடைகள் மென்மையானதாக இருக்கும். 

பெரும்பாலும் இந்த உடைகள் செல்வந்தர்களாலும், அரச குடும்பத்தினராலும் அணியப்பட்டது. இவர்கள் அல்லாமல் வேறு யாரேனும் விக்குனாவால் செய்யப்பட்ட ஆடை அணிந்து பிடிபட்டால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இன்கான் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் இந்த விலங்கினங்கள் அதன் ரோமங்களுக்காக அதிகம் வேட்டையாடப்பட்டது. இதுவே உயிரினத்தின் அழிவு நிலைக்கும் இட்டுச் சென்றது.  

தற்போது உலகம் முழுவதும் 3,50,000 விக்குனாக்கள் மட்டுமே வாழ்வதாக கூறப்படுகிறது. இன்றளவும் சிறப்புச் சடங்குகள் மற்றும் கருவுறுதல் சடங்குகளில் இந்த ஆடைகள் பயன்படுத்தப்படுகிறது. விக்குனா விலங்கு பெருவின் அதிகாரப்பூர்வமற்ற தேசிய விலங்காகக் கருதப்படுகிறது. Vicuna துணி ஹூக்கில் ஸ்பை கேமரா... ``இது கவனத்தை ஈர்க்காது" - அமேசானின் விற்பனை விளம்பர வன்மம்..!

பெருவியன் சட்டங்களால் தற்போது இவை பாதுகாக்கப்படுகின்றன. இருந்தாலும் சில நிறுவனங்கள் அதன் ரோமங்களிலிருந்து ஸ்வெட்டர்கள், சூட்கள், கோட்டுகள் மற்றும் பிற ஆடைகளை உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக ஒரு கோட் செய்வதற்கு 35 விக்குனாக்களின் தோலை நீக்க வேண்டியிருக்கும். லோரோ பியானா (Loro Piana) நிறுவனம் விக்குனாவால் செய்யப்பட்ட ஒரு செட் காலுறைகளை 80,000 ரூபாய்க்கும், ஒரு சட்டையை 4.23 லட்ச ரூபாய்க்கும் விற்கிறது.   


http://dlvr.it/T75DSG

Thursday, 16 May 2024

'சிங்கப்பூரின் பிரதமரான லாரன்ஸ் வோங்' - 59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?

கடந்த 1965-ம் ஆண்டு சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றது. இதையடுத்து மக்கள் செயல் கட்சியை சேர்ந்த லீ குவான் யூ பிரதமரானார். அவர் எடுத்த முன்னெடுப்புகள் அந்த நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றது. இதையடுத்து லீ குவான் யூ நவீன சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்பட்டார். பிறகு கடந்த 1984-ம் ஆண்டு வாக்கில் தனது மகன் லீ சியென் லூங்யை பின்வரிசை உறுப்பினராக அரசியலில் கொண்டுவந்தார். படிப்படியாக வளர்ந்து 2004-ம் ஆண்டு தலைமை பொறுப்புக்கு வந்தார். அப்போது, 'லீ குடும்பத்தினர் குடும்ப அரசியல் செய்கிறார்கள்' என்கிற குற்றச்சாட்டு நாடுமுழுவதும் வெடித்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றார்.லாரன்ஸ் வோங்

முன்னதாக கடந்த வாரம் லீ சியென் லூங் அளித்த பேட்டியில், "இதுநாள் வரை எனக்கு ஆதரவு வழங்கி வந்த சிங்கப்பூர் மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மற்ற எல்லோரையும் முந்த வேண்டும் என நான் முயற்சிக்கவில்லை. மாறாக அனைவரையும் என்னுடன் சேர்ந்து ஓட வைக்க முயற்சித்தேன். இதன் மூலம் நாங்கள் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம். எனது தந்தை, அவருக்கு முன் பிரதமராக இருந்த கோ சோக் டோங்க் ஆகியோரது செயல்முறையிலிருந்து விலகி, எனது பாணியில் காரியங்களை செய்ய முயன்றேன்" என்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் நோக்கர்கள், "லீ சியென் லூங் பதவியேற்ற சமையத்தில் அவரை பலரும் குடும்ப அரசியல் செய்வதாக கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இருப்பினும் 20 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் நீடித்து வந்தார். இதற்கு சிங்கப்பூரின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகள் தான் முக்கிய காரணம். இதனால் அந்த நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரு மடங்குக்குக் மேல் அதிகரித்துள்ளது. மேலும் சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் சிங்கப்பூர் மாறியது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்றின் போது உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின. ஆனால் சிங்கப்பூரை பெரிய பிரச்னையில் சிக்கிவிடாமல் லீ பார்த்துக்கொண்டார்.லீ சியென் லூங்

அதேநேரத்தில் இவரது ஆட்சியில் பல்வேறு விமர்சனங்களும் இருக்கின்றன. குறிப்பாக மக்களின் பேச்சு சுதந்திரம் தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்ட சமயங்களில் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இது சிங்கப்பூர் மக்களை அதிருப்திக்கு உள்ளாகியது. இந்த அதிருப்தியில் காரணமாக லீ மீதான மக்கள் செல்வாக்கு குறைந்தது. இதன் விளைவு கடந்த 2011, 2020-ல் நடந்த தேர்தல்களில் மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தை மட்டுமே லீ கட்சியால் பெற முடிந்தது. இதேபோல் அந்த நாட்டில் மக்கள் பொது வீட்டுக் கட்டடங்களில் தான் வசித்து வருகிறார்கள். வாங்கும் போது மதிப்பு அதிகமாக இருப்பதும், நாளடைவில் குறைந்து விடுவதும் மக்களிடத்தில் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.`கமலாலயம்’ இடம் மாறும் விவகாரம் - சக்கரவர்த்தி Vs கரு.நாகராஜன் மோதல்?! - பின்னணி என்ன?

இதற்கும் மேலாக லீ சியென் லூங்கிற்கும் அவரின் சகோதரர்களுக்கும் இடையில் மோதல் நிலவி வந்தது. ஒருகட்டத்தில் தங்களை லீ கடுமையாக துன்புறுத்தி விட்டார். தனது அரசியல் லாபத்துக்காக தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி கொண்டார். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார். அரசின் நிர்வாக அமைப்புகளை குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்' என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்ததுடன் வெளிநாடுகளுக்கு சென்று வசித்து வருகிறார்கள். இதை லீ மறுத்தாலும் மக்கள் மனநிலை அவருக்கு எதிராக மாறியது. இதையடுத்துதான் தனது பதவியை லாரன்ஸ் வோங்யிடம் ஒப்படைக்க உள்ளார்" என்றனர்.சிங்கப்பூர்

தொடர்ந்து பேசியவர்கள், "சிங்கப்பூர் மக்களிடத்தில் லீ அதீத செல்வாக்கு மிகுந்தவராக இருந்தார். 45 ஆண்டுகாலமாக லீ குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் சிங்கப்பூரை ஆட்சி செய்து வந்தார்கள். ஆனால் குடும்ப பிரச்னை, புலம்பெயர்ந்தோரை அளவுக்கு அதிகமாக அனுமதித்தது போன்றவை தான் சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து முன்னாள் பொருளாதார நிபுணரும் அரசு ஊழியருமான லாரன்ஸ் வோங்யிடம் தனது பதவியை ஒப்படைத்துள்ளார். வோங் ஒரு காலத்தில் லீயின் முதன்மை தனிச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். லீ-க்கு பிறகு மூத்த அமைச்சரான ஹெங் ஸ்வீ கீட் தலைமை பொறுப்புக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வயது முதிர்வு காரணமாக வோங் தலைமை பொறுப்புக்கு வந்து இருக்கிறார். இவர் கோவிட் காலத்தில் சிறப்பாக செயல்பட்டதால் மக்களிடத்தில் நன்கு பரிச்சயமானவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்த்தவர். உள்ளூர் பள்ளியில் படித்தவர் என்பதும் அவருக்கு கூடுதல் சிறப்பாக இருக்கிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லாரென்ஸ் வோங், "சிங்கப்பூர் மக்களுக்கு நான் என்றும் உறுதுணையாக இருப்பேன். குறிப்பாக மூத்த குடிமக்கள், ஏழைகளின் வசதிக்கு பாடுபடுவேன். அமெரிக்க-சீனா உறவுமுறையில் தற்போதிருக்கும் நிலையே தொடரும்" என்றார்.சிங்கப்பூர்

இதையடுத்து வோங் சந்திக்க இருக்கும் சவால்கள் குறித்து பேசிய சர்வதேச அரசியல் நோக்கர்கள், "லீ சிங்கப்பூரை சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாற்றினார். அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த இரண்டு தசாப்தங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக உள்ளது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், நாட்டிற்கு புதிய சவால்கள் உருவாகியுள்ளன. அதிக வாழ்க்கைச் செலவுகள் குறித்து சிங்கப்பூர் மக்களிடையே அதிருப்தி உள்ளது. சிங்கப்பூர் உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களில் ஒன்றாகும். நாட்டில் குறைந்தபட்ச ஊதியம் இல்லை. வீட்டுச் செலவுகள் உயர்ந்துள்ளன.

குடியேற்றமும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. சிங்கப்பூரின் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் மக்களில் 40% பேர் அந்நாட்டின் குடிமக்கள் அல்ல. இது இனவெறி மற்றும் மதவெறியின் மிக மோசமான வடிவத்திற்கு வழிவகுத்தது என எண்ணுகிறார்கள். மற்றொரு பிரச்னை கடுமையாக இருக்கும் கருத்துச் சுதந்திரம். அமெரிக்க-சீனா உறவுமுறையில் தற்போதிருக்கும் நிலையே தொடரும் என தெரிவித்து இருந்தாலும் அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. சிங்கப்பூரின் மிகப்பெரிய வர்த்தகப் கூட்டாளியாக சீனா இருந்தாலும், சிங்கப்பூரில் உள்ள அனைத்து அந்நிய நேரடி முதலீட்டில் 20%க்கும் அதிகமான பங்கை அமெரிக்கா கொண்டுள்ளது. சிங்கப்பூர் அமெரிக்காவுடன் இராணுவ உறவுகளையும் கொண்டுள்ளது. எனவே இதில் யாருக்கு எதிராக செயல்பட்டாலும் சிக்கல் ஏற்படும்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88`கமலாலயம்’ இடம் மாறும் விவகாரம் - சக்கரவர்த்தி Vs கரு.நாகராஜன் மோதல்?! - பின்னணி என்ன?


http://dlvr.it/T70Nq6

Wednesday, 15 May 2024

``எங்களுக்கு உதவும் சீனாவின் உண்மையான விருப்பத்தை பாராட்டுகிறேன்"- சீனாவில் ரஷ்யா அதிபர் புதின்

2022-ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. இந்த நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்திருக்கிறது. ரஷ்யாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்து எதிர்வினையாற்றியது. ரஷ்யா - உக்ரைன் என இரு நாடுகளுக்கும் ஆதரவு தராத சீனா, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் சீனா சென்றிருக்கிறார். 5வது முறையாக பதவி ஏற்ற பிறகு மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இது.அதிபர் புதின்

அவரை சீன அதிகாரிகள் விமான நிலையத்திலிருந்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, இந்த சந்திப்பின் மூலம், இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு, சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின், சீன பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,``உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்க ரஷ்யாவுக்கு உதவும் சீனாவின் உண்மையான விருப்பத்தை பாராட்டுகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88'ரேபரேலி தொகுதியும் நேரு குடும்பமும்’ - ரேபரேலியை ராகுல் தேர்ந்தெடுத்த பின்னணியும் களநிலவரமும்!


http://dlvr.it/T6xxFK

Tuesday, 14 May 2024

``இரானுடன் வணிக ஒப்பந்தம் செய்யும் யாராக இருந்தாலும்..." - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா!

எரிசக்தி வளம் மிக்க இரானின் தெற்கு கடற்கரையின், ஓமன் வளைகுடாவில் சபஹர் துறைமுகம் இருக்கிறது. கடல்வழி, தரைவழி, ரயில் வழி எனச் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கான நுழைவாயிலாக சபஹர் துறைமுகம் விளங்குகிறது.துறைமுகம்

இந்த துறைமுகத்தை 2018-ம் ஆண்டு முதல் இந்தியா குத்தகை அடிப்படையில் நிர்வகித்து வருகிறது. இந்த குத்தகை ஓராண்டுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு கையெழுத்தாகும். இந்த நிலையில், சபஹர் துறைமுகத்தை இந்தியா தொடர்ந்து 10 ஆண்டுகள் நிர்வகிக்க ஒப்பந்தமிட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் இரானின் தெஹ்ரானில் இந்திய போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் (IPGL) - இரானின் போர்ட் & கடல்சார் அமைப்பு (PMO) ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தானது.

மேலும், இந்தியாவின் கூடுதல் நிதியுதவியுடன் துறைமுகத்தைச் சீர்படுத்துவதிலும், இயக்குவதிலும் IPGL கணிசமான முதலீட்டைச் செய்திருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் செய்தியாளர்களிடம், ``சபஹர் துறைமுக ஒப்பந்தம் மற்றும் இரானுடனான இருதரப்பு உறவுகள் விஷயத்தில், இந்திய அரசு தனது வெளியுறவுக் கொள்கைகளைத் தெரிவிக்கும்படி கேட்போம். இரான் மீதான அமெரிக்கத் தடைகள் நடைமுறையில் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்.தெஹ்ரானில் IPGL

இரானுடன் வணிக ஒப்பந்தம் செய்யும் எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், தனிநபராக இருந்தாலும், அரசாக இருந்தாலும், அது இந்தியாவாக இருந்தாலும் அமெரிக்க பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்குச் சாத்தியம் இருப்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இதை நாங்கள் பல நிகழ்வுகளில் கூறியிருக்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppb`இந்திய பொதுத் தேர்தலில் நாங்கள் தலையிடுகிறோமா?' - ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா பதில்!


http://dlvr.it/T6sKlZ

Monday, 13 May 2024

North Korea: சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை, மீறினால் கடுமையான தண்டனை!

சிவப்பு என்பது வறுமையின் நிறம், கம்யூனிசத்தின் நிறம் என்று சொல்லப்படுவதுண்டு. இன்னொரு பக்கம், இது அழகுசார்ந்து ஈர்க்கும் நிறமாகவும் உள்ளது. இந்நிலையில், வட கொரியாவில் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

ஏன்? வட கொரியா சொல்லும் காரணம் இதுதான். சிவப்பு நிற லிப்ஸ்டிக்கானது முதலாளித்துவத்தின் (Capitalism) அடையாளமாவும், மேற்கத்திய நாடுகளின் ஆளுமையின் அடையாளமாகவும் பார்க்கப்படுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு கூறுகிறது.

ஒரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்திய நாடுகள் அங்கிருந்து சென்றாலும், அவர்களின் கலாசாரம் மற்றும் சிந்தனைகளை விதைத்துவிட்டுச் செல்கிறார்கள். இப்படித்தான், மேற்கத்திய கலாசாரம் மக்களின் வாழ்வில் பிரதிபலிக்கத் தொடங்கின. 

உண்மையில், அதிக மேக்கப் செய்வது மேற்கத்திய கலாசாரமாகப் பார்க்கப்படுகிறது. எனவே, வட கொரியாவில் அதிக மேக்கப் செய்து கொள்வது வெறுக்கப்படுகிறது. சட்டத்தின்படி, பெண்கள் அங்கு குறைந்த மேக்கப் மட்டுமே செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். 

மேலும், ’சிவப்பு நிற லிப்ஸ்டிக் போடும் பெண்கள் தங்களை அதிக கவர்ச்சியாகக் காட்டலாம், அவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் எதிர்ப்பதாகக் கருதப்படலாம்’ என்று கூறி சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடை விதித்துள்ளது வட கொரியா.  

எதற்கெல்லாம் தடை?!

சமீபத்திய ஆண்டுகளில், வட கொரியாவை ஆளும் கிம் ஜாங் அன் (Kim Jong Un) ஆட்சியானது முதலாளித்துவ சித்தாந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல பொருள்களையும் தடை செய்துள்ளது.

தோளோடு ஒட்டியிருக்கும் ஒல்லியான, அல்லது நீல நிற ஜீன்ஸ் அணிவது, காது தவிர உடலின் பிற பாகங்களில் அணிகலன்கள் அணிவது (body piercings), பெண்கள் நீண்ட முடி மற்றும் குறிப்பிட்ட சில சிகை அலங்காரங்கள் (mullets) செய்து கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆண்களுக்கும் பெண்களுக்கும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிகை அலங்காரங்கள் மட்டுமே செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Kim Jong-unலிப்ஸ்டிக் பூசும் போது... செய்யவேண்டியவை; தவிர்க்க வேண்டியவை! #VikatanPhotoCards

இதுவும் காரணமா..?  

இந்தத் தடைகள் பலவும் தனி நபர்களின் ஒப்பனைகளை மையப்படுத்தி இருக்கிறது. ஜாங் உன் பயன்படுத்தும் கறுப்பு ட்ரெஞ்ச் கோட்டுகள் மற்றும் அவரது சிகை அலங்காரம் போன்ற ஃபேஷன் ஸ்டைல்களை மக்கள் காபி அடிக்கக் கூடாது என்பதற்காக  தடை விதிக்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  

அதோடு, மக்கள் இந்த விதிகளைப் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிசெய்ய ஃபேஷன் போலீஸ்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை, தடையை மீறி ஒருவர் நீல நிற ஜீன்ஸ் அணிந்தால் அவர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அவர் தண்டிக்கப்படலாம், அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது பொது இடங்களில் நிறுத்தப்படலாம், மேலும் அவர்களின் ஆடைகள் மீண்டும் பயன்படுத்தப்படாத வண்ணம் கிழிக்கப்படலாம். 

சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்... கமென்டில் சொல்லுங்கள்!


http://dlvr.it/T6q7XQ

Kidney Transplant: பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதல் மனிதன்... 2 மாதங்களில் உயிரிழந்தது ஏன்?

உலகில் முதன்முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பெற்ற மனிதன் சில மாதங்களிலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் 62 வயதான ரிக் ஸ்லேமேன் என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் மாற்றி வைத்தனர். 

இவர் பல ஆண்டுகளாக நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், 2018-ல் மனித நன்கொடையாளரிடமிருந்து சிறுநீரகத்தைப் பெற்றார். ஆனால், அந்தச் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிய நிலையில், 2023-ல் டயாலிசிஸ் செய்யத் தொடங்கியுள்ளார். அதற்கு பிறகு அவர் இறுதி நிலை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. pig kidney AI : தினமும் 150 மாதிரிகளை பரிசோதிக்கலாம்... பயிர்களின் தரத்தை அறிய உதவும் கருவி!

இறுதியாக அவரின் விருப்பத்தின்படி, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் மாற்றி வைத்தனர். இந்தச் சிறுநீரகம் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். 

ஆனால், பன்றியின் சிறுநீரகம் மாற்றப்பட்ட இரண்டு மாதங்களிலேயே அவர் இறந்திருக்கிறார். இவரின் இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பன்றியின் சிறுநீரகம் மாற்றப்பட்டது தான் காரணமா என பலர் அச்சப்பட தொடங்கியுள்ளனர்.

இதற்கு முன்பு பன்றியின் சிறுநீரகம், மூளை சாவடைந்த இருவருக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டது. பன்றியின் இதயமும் இருவருக்குப் பொருத்தப்பட்டது. சிகிச்சை பெற்ற சில மாதங்களிலேயே அவர்களும் இறந்துள்ளனர். 

இந்நிலையில் இவரின் இறப்புக்கான காரணம் குறித்து மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்றியின் சிறுநீரகத்தை மாற்றி வைத்த காரணத்தால் அவர் இறந்ததாக எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஸ்லேமேனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளது. 

விலங்குகளின் செல், திசு அல்லது உறுப்புகளை நோயாளிகளுக்கு மாற்றிக் குணப்படுத்தும் முறை `xenotransplant’ என அழைக்கப்படுகிறது. இந்தச் செயல்முறையின் மூலம் ரிக் ஸ்லேமேனுடன் கூடுதலாக ஏழு வாரங்கள் இருந்து மறக்க முடியா நினைவுகளை உருவாக்க முடிந்ததற்காக குடும்பத்தினர் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Representation Image`ஒரே ஒரு சிறுநீரகத்தோடு பிறந்த பாடிபில்டர்' மாற்று சிறுநீரகத்துக்காகக் காத்திருந்து உயிரிழப்பு!

``xenotransplant-ல் உள்ள சிக்கல் என்னவெனில் மனிதரின் நோயெதிர்ப்பு அமைப்பு விலங்கின் திசுக்களை உடனடியாக அழிக்கத் தொடங்குகிறது. இதுபோல விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு உறுப்புகளை மாற்றும் முயற்சிகள் நீண்ட காலமாகத் தோல்வியடைந்திருக்கின்றன. ஆனால், சமீபத்திய முயற்சிகளில் பன்றியின் சிறுநீரகம் மனிதனைப் போலவே உள்ளதால் அவற்றின் உறுப்புகள் மாற்றி வைக்கப்படுகின்றன'' என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். 

அமெரிக்காவில் 100,000க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகத் தேசிய காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறுநீரக நோயாளிகளாக உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் இவர்களில் ஆயிரக்கணக்கானோர் தங்களது சிகிச்சைக்கான முறை வருவதற்கு முன்பே இறக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.  


http://dlvr.it/T6q7D8

Rolls Royce: போலீஸுக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார்; கடன் வாங்கி சொகுசு காரில் வரும் அமெரிக்கக் காவல்துறை!

சாதாரண காவல்துறை ஓட்டுநரைப் பார்த்து, அவர் நண்பர் ஒருவர் இப்படி கமென்ட் செய்து கொண்டிருந்தார். ‛‛உனக்கென்னப்பா கவர்மென்ட்டு காரு இருக்கு’’ என்று நக்கல் செய்து கொண்டிருந்தார். ஆனால், அவர் ஓட்டியது பழைய மாருதி சுஸூகி ஜிப்ஸி ஜீப் டைப் கார்.

இன்னும் சில காவல்துறை அதிகாரிகள் - பழைய பொலேரோவில், பின் பக்கம் கார்கோ ஸ்பேஸில் ஒரு வாட்டர் கேன் வைத்துக்கொண்டு வலம் வருவதைப் பார்த்திருப்போம். கொஞ்சம் கிரேடு கூடிய அதிகாரிகள் என்றால், அதிகபட்சமாக டொயோட்டா இனோவா க்ரிஸ்ட்டா, ஹூண்டாய் க்ரெட்டா போன்ற வாகனங்களில் வலம் வருகிறார்கள். Stalin Convoy

கொஞ்ச நாட்களுக்கு முன்பு துபாய் காவல்துறை சார்பாக - பென்ஸ் SLS AMG, ஆஸ்ட்டன் மார்ட்டின், புகாட்டி வேரான், நிஸான் ஜிடி-ஆர், லம்போகினி அவென்டடார், ஃபெராரி FF, பென்ட்லி கான்டினென்ட்டல் GT, மெக்லாரன் போன்ற சூப்பர் கார்களெல்லாம் பர்ச்சேஸ் செய்யப்பட்டன. ஒரு துபாய் போலீஸ்காரரைப் பார்த்து இப்படிக் கேட்கலாம்: "உனக்கென்னப்பா, ஃபெராரியில வர்ற!’’ இதுவே அமெரிக்காவில் "உனக்கென்னப்பா, ரோல்ஸ்ராய்ஸ் கார்ல வர்ற’’ என்று கமென்ட் அடிக்கலாம். ஆம், அமெரிக்காவில் உள்ள மியாமி பீச் காவல்துறை சார்பாக, 2,50,000 டாலர் மதிப்பில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் சொகுசு கார் ஒன்று பர்ச்சேஸ் செய்யப்பட்டிருக்கிறது. உலகின் முதல் Cop Rolls Royce என்கிறது மியாமி காவல்துறை.

Braman Motors எனும் டீலர்ஷிப்பில் இருந்து இந்த காரை வாங்கியிருக்கிறதாம் மியாமி பீச் காவல்துறை. "எங்கள் டிபார்ட்மென்ட்டின் புது வரவான இந்த ரோல்ஸ்ராய்ஸ் காரை அறிமுகப்படுத்துவதில் பரவசமடைகிறோம்!’’ என்று ட்விட்டர் எக்ஸ் வலைதளத்தில், ஃப்ளாஷ் லைட்டுகளுடனும் சைரன்களுடனும் டாலடிக்கும் இந்த ரோல்ஸ்ராய்ஸ் காரின் புகைப்படத்தை MBPD (Miami Beach Police Department) பதிவிட, செம வைரலாகி வருகிறது இந்த போலீஸ் ரோல்ஸ்ராய்ஸ் கார். Dubai Police Bugatti and Ferrari

மியாமி போலீஸில் சேர்ந்திருக்கும் இந்த கார், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் முதல் ஜெனரேஷன் மாடலான 2012 கோஸ்ட் எனும் மாடல் கார். பிஎம்டபிள்யூவின் F01 BMW 7 சீரிஸ் ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கிறது இந்த கோஸ்ட். ஆம், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் பாகங்கள் 20% இந்த கோஸ்ட்டில் இருக்கின்றன. 3,290 மிமீ வீல்பேஸ் கொண்ட இந்த ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட், பார்ப்பதற்குப் பெரிய ஆலப்புழா படகுபோல் இருக்கும். தனித்துவமான ரூஃப், உயர்தரமான ஏர் சஸ்பென்ஷன், FlexRay எனும் எலெக்ட்ரானிக் சிஸ்டம் என்று ஏகப்பட்ட தொழில்நுட்பங்களுடன் இருக்கிறது இந்த கோஸ்ட். 

இதில் இருப்பது 6.75 லிட்டர் ட்வின் ர்போ சார்ஜ்டு V12 பெட்ரோல் இன்ஜின். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இதில் உண்டு. இதன் பவர் 571bhp மற்றும் டார்க் 850Nm. எப்படிப்பட்ட திருடர்களையும் ‛விருட்’டென சிங்கிள் பிக்-அப்பில் பிடித்து விடலாம் போங்கள்! சும்மாவா பின்னே - வெறும் 4.3 விநாடிகளில் 100 கிமீ-யையும், 10.4 விநாடிகளில் 160 கிமீ வேகத்தையும் இந்த கோஸ்ட், பேய் வேகத்தில் கடக்குமாம். இதன் டாப் ஸ்பீடு 250 கிமீ."புதிய ஆட்சேர்ப்புக்கு இந்த ரோல்ஸ்ராய்ஸ் கார் ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும்!’’ என்று மியாமி போலீஸ் தலைவர் வெய்ன் ஜோன்ஸ் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். 

MBPD and professional staff exemplify the highest standards of dedication and quality policing in our unparalleled commitment to the residents and visitors we serve. We are thrilled to introduce this stunning addition to the MBPD recruitment team—courtesy of @bramanmotors ! pic.twitter.com/I27NUAgsge— Miami Beach Police (@MiamiBeachPD) May 9, 2024




காவல்துறையினர் இந்த காரில் ரோந்து வந்து, அந்த வீடியோவை ட்விட்டர் வலைதளத்தில் பதிவிட, அது பலரைக் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், "ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்குற அளவுக்கு மியாமி பீச் போலீஸுக்கு எங்கே இருந்து காசு வந்துச்சு!’’ என்று கமென்ட் செய்து வருகிறார்கள். 

அதற்கும் பதில் இருக்கிறது MBPD-யிடம். ஆம், மியாமியில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரரான நார்மன் பிரமன் என்பவருக்குச் சொந்தமான பிரமன் மோட்டார்ஸில்தான் இது பர்ச்சேஸ் செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் கடனில்தானாம். எதிர்காலத்தில் இந்த கோஸ்ட் திருப்பித் தரப்பட்டு விடும் என்று தெரிவித்திருக்கிறார்கள். பெட்ரோல், சர்வீஸ் போன்ற செலவுகள் எல்லாமே பிரமன் பார்த்துக் கொள்வாராம். ஆனால், தனிப்பட்ட விபத்துகளால் ஏற்படும் சேதாரங்களுக்கு காவல்துறைதான் பொறுப்பாம்.ஹலோ, நம் ஊர் கோடீஸ்வரர்களெல்லாம் ஒரு பென்ஸ் காராச்சும் காவல்துறைக்குக் கடன் தரக் கூடாதா?


http://dlvr.it/T6phck

Sunday, 12 May 2024

`என் அனுமதி இல்லாமல் என்னை பெற்றெடுத்திருக்கிறார்கள்...' - பெற்றோர்மீது வழக்கு தொடர்ந்த பெண்!

அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த பெண் தியாஸ். சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் இவர், தன் அனுமதியின்றி தன்னைப் பெற்றெடுத்ததற்காக அவரது பெற்றோர் மீது வழக்குத் தொடுத்திருக்கிறார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாகியிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக ஒரு வீடியோவில் பேசிய தியாஸ், ``நான் உண்மையில் இங்கு இருக்க விரும்புகிறேனா என்று நான் பிறப்பதற்கு முன்பு என் பெற்றோர் எப்படியும் என்னை தொடர்புகொண்டு கேட்டிருக்க வேண்டும். அதற்காக முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் முயற்சிக்கவில்லை.தியாஸ்

எனது விருப்பத்திற்கு எதிராக என்னை பெற்ற பெற்றோருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்கிறேன். என்னுடைய குழந்தைகளை நான் கருத்தரித்து பெற்றெடுக்கவில்லை. அவர்களை நான் தத்தெடுத்திருக்கிறேன். அவர்கள் இங்கே இருப்பது என் தவறல்ல. ஒரு நல்ல மனிதனாக இருக்கவும் அவர்களுக்கு உதவவும் முயற்சிக்கிறேன். நீங்கள் இப்போது கர்ப்பமாக இருந்தால், ஒரு மனநல மருத்துவரை சந்தித்து, அந்த குழந்தைகள் உண்மையில் இங்கே பிறக்க விரும்புகிறார்களா என்று கேட்க வேண்டும். என்னிடம் அப்படி கேட்காததால் என் பெற்றோர் மீது நான் வழக்கு தொடர்ந்தேன்.

என்னை கருத்தரிக்க பங்களித்து, என்னைப் பெற்றெடுத்த என் அம்மாவால்தான் நான் இங்கே இருக்கிறேன். குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோருக்கு எதிராக வழக்குத் தொடர கற்றுக்கொடுப்பதை எனது வாழ்க்கைப் பணியாக செய்கிறேன். எனவே, விருப்பமில்லாத இடத்தில் வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் இனி குழந்தைகளுக்கு இருக்காது." எனப் பேசியிருக்கிறார். அந்த பதிவுக்கு கீழ் சமூக வலைதளவாசிகள் காரசாரமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbAllu Arjun: தேர்தலில் நண்பனுக்கு ஆதரவு, குவிந்த ரசிகர்கள், அல்லு அர்ஜூன் மீது பாய்ந்த வழக்கு!


http://dlvr.it/T6mXQn

``எங்கள் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால்.." - இஸ்ரேலுக்கு அணுகுண்டு எச்சரிக்கை விடுத்த இரான்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்த தாக்குதலில் இரான் ராணுவம் பாலஸ்தீனத்துக்கு ஆதரவளித்து வந்தது. இதனால் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரக வளாகத்தில் இரான் ராணுவ அதிகாரிகள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் இரான் ராணுவ உயர் அதிகாரிகள் 2 பேர் உட்பட 16 பேர் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என இரான் கூறியிருந்தது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்தது. இதற்கிடையே இரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர், கமல் கர்ராசி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.இஸ்ரேலின் தாக்குதலுக்குள்ளான இரான் தூதரகம், சிரியா

அப்போது,``அணுக்குண்டை உருவாக்கும் திட்டம் எதுவும் இப்போது எங்களிடம் இல்லை.. ஆனால் இரானின் இருப்புக்கு ஒருவேளை அச்சுறுத்தல் ஏற்பட்டால், அணு ஆயுத விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இஸ்ரேலால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்றால்.. யார் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற இரானின் அணு ஆயுத நிலைப்பாட்டை மாற்ற வேண்டி இருக்கும்." என இஸ்ரேலை எச்சரித்திருக்கிறார். இது பதற்றத்தை இன்னும் அதிகரித்திருக்கிறது.இஸ்ரேல் - இரான் மோதல்... மூன்றாம் உலகப் போர் வெடிக்குமா?


http://dlvr.it/T6mH5C

Friday, 10 May 2024

America: நடுரோட்டில் பாலியல் கொடுமை செய்யப்பட்ட பெண்; அதிர்ச்சி வீடியோ -குற்றவாளியைத் தேடும் போலீஸ்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் பிராங்க்ஸ் பகுதியில் மே 1-ம் தேதி அதிகாலை 3 மணியளவில், சாலை ஓரத்தில் முகமூடி அணிந்த 45 வயதுடைய நபர் ஒருவர், ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார். சில நிமிடங்களில் அந்தப் பெண் அங்கிருந்து நகர்ந்தபோது, அந்த நபர் பெல்ட்டால் செய்யப்பட்ட ஒரு வளையத்தை அந்தப் பெண்ணின் கழுத்தில் போட்டு, இழுத்தார். பின் அந்தப் பெண்ணை, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு இடையில் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.காவல்துறை

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நியூயார்க் நகரிலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, குற்றவாளியைத் தேடி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோ, வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.ஆஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட இந்திய மாணவர் - ஹரியானாவை சேர்ந்த சகோதரர்களை கைது செய்த காவல்துறை!


http://dlvr.it/T6k1Ts

27 வருடம் பெண்ணாக வாழ்ந்தவர்; திருமணத்திற்கு முன் ஆண் என அறிந்ததால் அதிர்ச்சி... என்ன பிரச்னை?!

27 வருடங்களாகப் பெண்ணாக வாழ்ந்து வந்த சீனாவைச் சேர்ந்த லி யுவான் என்பவர், திருமணத்திற்கு முன்னர் ஆண் என்பதை அறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சீனாவில் வசித்து வரும் லி யுவான் என்ற பெண், சீரற்ற மாதவிடாய் சுழற்சி, பருவமடைந்ததிலிருந்து தாமதமான மார்பக வளர்ச்சி போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளார். இதனால் 18 வயதிலிருந்தே அவர் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். 

முதலில் ஹார்மோன் அளவுகள் அசாதாரணமாக இருப்பதும் கருப்பை செயலிழப்பும் கண்டறியப்பட்டன. அதனை தொடர்ந்து மருத்துவர்கள் குரோமோசோம் பரிசோதனையைப் பரிந்துரைத்தனர். அந்தச் சமயத்தில் யுவானும் அவரின் குடும்பத்தினரும் மருத்துவர்களின் அறிவுரையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. Doctor வெப்பம் குளிர் மழை விமர்சனம்: மகப்பேறு பிரச்னை குறித்த விழிப்புணர்வு ஓகே; ஆனால் இப்படிச் செய்யலாமா?

சில வருடங்கள் கழித்து மூத்த மகப்பேறு மருத்துவ நிபுணரான டுவான் ஜீ, யுவானின் திருமணத்திற்கு முன்பு முழுமையான பரிசோதனையைச் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். 

பரிசோதனைகளைச் செய்து கொண்டவருக்கு congenital adrenal hyperplasia (CAH) என்ற அரிய கோளாறு இருப்பது தெரிந்தது. அவருக்கு ஆண் பாலின குரோமோசோம்கள் இருப்பதைச் சோதனை முடிவுகள் உறுதிப்படுத்தின. ஆணுக்குரிய பிறப்புறுப்பு அடிவயிற்றின் உள்ளே இருந்தது. ஆனால், அவர் பெண்ணாகத் தெரிந்தார். 

50,000 பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்தக் குறைபாடு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

யுவானுக்கு இது அதிர்ச்சியூட்டும் அடியாக இருந்தது, உண்மையை ஏற்றுக்கொள்வது அவருக்குச் சவாலாக இருந்தது. `மேலும் சமூக ரீதியாக, லி ஒரு பெண். ஆனால், குரோமோசோமில் அவர் ஆண்தான்' என மருத்துவர் டுவான் கூறினார்.


http://dlvr.it/T6hWZp

ஆப்ரிக்க அமெரிக்கரான விமானப்படை அதிகாரியை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீஸ் - நடந்தது என்ன?!

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கார் விபத்து ஒன்றில் சந்தேகத்தின் பேரில் ஆப்ரிக்க அமெரிக்க நபரைப் பிடிக்கச் சென்ற போலீஸ் அதிகாரிகள் தாக்கியதில், அந்த ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்த நிலையில், அதே அமெரிக்காவில் தவறான அடுக்குமாடிக்குள் புகுந்த புளோரிடா ஷெரிப்பின் துணை போலீஸ் அதிகாரி, அமெரிக்க விமானப்படையில் பணியாற்றும் 23 வயது ஆப்ரிக்க அமெரிக்க அதிகாரியைச் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.அமெரிக்க விமானப்படை அதிகாரி ஃபோர்ட்சன்

மே 3-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் பெயர் ஃபோர்ட்சன் (Fortson). இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, போலீஸ் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் உரிமைகள் வழக்கறிஞர் பென் க்ரம்ப் (Ben Crump), வெளிப்படையான விசாரணைக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மேலும், அன்று நடந்த சம்பவத்தை விளக்கிய பென் க்ரம்ப், ``சம்பவம் நடந்த அன்று ஃபோர்ட்சன் தனது குடியிருப்பில் ஃபேஸ்டைம் (FaceTime) வீடியோகால் செயலில் தன் காதலியுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது, கதவை யாரோ பலமாகத் தட்டவே, ஃபோர்ட்சனின் காதலி யாரென்று கேட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து, ஃபோர்ட்சன் யாரென்று குரலெழுப்பியபோது எந்தப் பதிலும் வரவில்லை. கதவின் துளை வழியாகப் பார்த்தபோதும் வெளியில் யாரும் தெரியவில்லை.அமெரிக்க விமானப்படை அதிகாரி ஃபோர்ட்சன்

பின்னர், ஃபோர்ட்சன் தன்னுடைய பதிவுசெய்யப்பட்ட துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்தபோது, புளோரிடா ஷெரிப்பின் துணை போலீஸ் அதிகாரி துப்பாக்கியுடன் முன்வர, அந்த இளைஞன் அப்படியே பின்வாக்கில் நகர்ந்தார். அதுவரையிலும் வீடியோகால் செயலியில் இணைப்பில் இருந்த அவரின் காதலிக்கு ஆறு முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. இறுதியில், ஃபோர்ட்சன் உயிரிழந்து கிடந்தார். இந்த வழக்கில், ஒரு நல்ல மனிதருக்கான நீதி கிடைக்க வெளிப்படையான விசாரணை வேண்டும்'' என்றார்.துப்பாக்கி சூடு

இருப்பினும், ஒகலூசா கவுண்டி (Okaloosa County) ஷெரிப் அலுவலகத்தின் ஷெரிஃப் எரிக் ஏடன் (Eric Aden), `அந்த இளைஞன் துப்பாக்கியுடன் இருந்ததால் போலீஸ் அதிகாரியால் பதில் தாக்குதல் நடத்த வேண்டியதாயிற்று. இதில், காயமடைந்த அந்த அதிகாரி இளைஞரைச் சுட்டார்" என்று தெரிவித்திருக்கிறார். இதனால், புளோரிடா சட்ட அமலாக்கத்துறை மற்றும் மாநில வழக்கறிஞர் அலுவலகம் இதில் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’


http://dlvr.it/T6h7Js

Tornado: நொறுங்கி, சிதறிய கட்டடங்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்! | Photo Album

அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்


http://dlvr.it/T6h6vf

`இந்திய பொதுத் தேர்தலில் நாங்கள் தலையிடுகிறோமா?' - ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா பதில்!

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்துவரும் சூழலில், அமெரிக்காவில் கடந்த ஆண்டு காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்லும் சதித் திட்டத்தில் இந்தியாவின் RAW ஏஜென்சி ஈடுபட்டிருப்பதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் சமீபத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்வினையாற்றிய ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா (Maria Zakharova), ``இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறது. இந்தியா மட்டுமல்லாது பிற நாடுகள்மீது அமெரிக்கா இவ்வாறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்துவதை நாங்கள் காண்கிறோம்.மரியா ஜாகரோவா - ரஷ்யா வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்

இது இந்தியாவுக்கு அவமரியாதை. மேலும், இது இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சிக்கலாக்கும் வகையில் இந்தியாவின் உள் அரசியல் சூழ்நிலையைச் சீர்குலைக்கும் அமெரிக்காவின் முயற்சி. அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் உள்விவகாரங்களில் அவர்கள் தலையிடுவதன் ஒரு பகுதி இது" என்று மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதோடு, காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீதான கொலை முயற்சி குறித்து பேசுகையில், ``குற்றப்பத்திரிகையில் உண்மையாக இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், நீதிமன்றத்தில் அவை நிரூபிக்கப்படும் வரை அவை வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே. மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்து நான் எதுவும் பேசமுடியாது" என்று தெரிவித்தார்.அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்

இந்த நிலையில், ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில், இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் தலையிடவில்லை என அமெரிக்க தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் (Matthew Miller), ``நிச்சயமாக இல்லை... மற்ற நாடுகளின் தேர்தல்களில் நாங்கள் தலையிடாததைப்போலவே, இந்தியாவின் தேர்தலிலும் தலையிடவில்லை. இது இந்திய மக்கள் எடுக்க வேண்டிய முடிவு" என்று கூறினார்.`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’


http://dlvr.it/T6gnT6