2024-ம் ஆண்டில் உலகில் செல்வாக்கு மிக்க பெண்கள் 100 பேர் பட்டியலை டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், இந்தியாவில் இருந்து இரண்டு பெண்கள் இடம் பிடித்துள்ளனர். நடிகை ஆலியா பட், மற்றும் மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக்.
பட்டியலில் இடம்பெற்றுள்ள பாலிவுட் நடிகை ஆலியா பட், இந்தி மட்டிமல்லாது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்த ’கங்குபாய் கத்தியாவாடி’ படத்திற்காகப் பல விருதுகளை பெற்றார். ’ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ என்ற ஆங்கிலப்படத்தில் ஆலியா பட் நடித்துள்ளார்.ஆலியா பட் - ரன்பீர்Doctor Vikatan: பின்னோக்கி நடக்கும் retro-walking; எல்லோரும் முயற்சி செய்யலாமா...அதனால் என்ன நன்மை?
’ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ படத்தை இயக்கிய டோம் ஹார்பர், உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் ஆலியா பட் இடம் பெற்று இருப்பது குறித்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டு, ஆலியா பட்டை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். அவர் தனது பதிவில், ’ஆலியா பட் உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பணியாற்றியதற்காகப் பாராட்டப்படுகிறார்.
அவர் ஒரு பெண் தொழிலதிபர்’ என்று பாராட்டியுள்ளார்.
நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டுள்ள ஆலியா பட்டிற்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. குழந்தை பிறந்த சில மாதங்களில் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கிறார்.
100 பேர் பட்டியலில் இடம்பிடித்துள்ள மற்றொரு இந்தியப் பெண், மல்யுத்த வீரர் சால்ஷி மாலிக். சாக்ஷி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூசன் மல்யுத்த வீரர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவரை பதவி நீக்கம் செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் டெல்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி ஒட்டுமொத்த இந்தியாவை தன்பக்கம் பார்க்க வைத்தவர்.மல்யுத்த வீரர் சால்ஷி மாலிக்Summer: டீ முதல் மாம்பழம் வரை... கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!
இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்றொரு பெண், சமீபத்தில் மறைந்த, ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸின் மனைவி யுலியா. தன் கணவர் விட்டுச்சென்ற பணியை தான் முன்னெடுத்துச்செல்லப்போவதாக கூறி இருக்கும் யுலியா, தொடர்ந்து புடின் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்.
இந்தியாவைச் சேர்ந்த பிரியம்வேதா நடராஜன், அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வானியல் துறை பேராசிரியராக இருக்கிறார். இவரும் 100 பெண்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். அமெரிக்க இயக்குநர் தெல்மா கோல்டன், பிரிட்டன் நடிகை நியோமி வாட்ஸ் உட்பட பல பெண்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
http://dlvr.it/T5g8Qf
Thursday, 18 April 2024
Home »
» உலகின் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில்... நடிகை ஆலியா பட், மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக்!







0 comments:
Post a Comment