இந்தியா - சீனா எல்லையில் அமைந்திருக்கும் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை, சீனா உரிமைக் கொண்டாடி வருகிறது. சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட சேலா சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் வருகைக்கு சீன அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதை இந்திய அரசும் கண்டித்திருந்தது.மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
அதைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் மார்ச் 9-ம் தேதியன்று, ``அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பிரதேசமாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது, சீன ராணுவமோ அல்லது அந்நாட்டு மக்களோ.... அத்துமீறல்கள் மூலம் பிராந்திய உரிமைகோரல்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை, நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த மார்ச் 23-ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ``அருணாச்சலப் பிரதேசத்துக்கு உரிமைக் கொண்டாடும் சீனா... இது புதிய பிரச்னை அல்ல. அந்நாடு தனது கோரிக்கையை தற்போது விரிவுபடுத்தியுள்ளது. ஆனால், அது முற்றிலும் நகைப்புக்குரியதாக இருக்கிறது. எனவே, நாங்கள் இதில் மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.அருணாச்சலப் பிரதேசம்
இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை சீனாவின் மாண்டரின் மொழியிலும், திபெத்திய மொழியிலும் மாற்றியிருக்கும் சீன அரசு, அதைத் தனது அமைச்சகத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்னர் மூன்று முறை இது போன்ற பெயர்மாற்ற நடவடிக்கையில் சீனா ஈடுபட்டிருக்கிறது.
2017-ம் ஆண்டில் ஜாங்னானில் உள்ள ஆறு இடங்களின் பெயர்களின் முதல் பட்டியலையும், 2021-ம் ஆண்டு 15 இடங்களின் இரண்டாவது பட்டியலையும், 2023-ல் 11 இடங்களுக்கான பெயர் மாற்றப் பட்டியலையும், சீனா வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் 4-வது பட்டியலை தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்தப் பெயர் பட்டியல் மே 1 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அருணாச்சலப் பிரதேசம்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 2 பேர் பலி
http://dlvr.it/T4vqL2
Monday, 1 April 2024
Home »
» அருணாச்சலப் பிரதேசம்: 4-வது முறை; 30 இடங்களுக்கு பெயர் மாற்ற அறிவிப்பு; தொடரும் சீனாவின் அத்துமீறல்!







0 comments:
Post a Comment