Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, 31 May 2023

40 சூயிங்கம் விழுங்கிய 5 வயது சிறுவன்... பதறிய பெற்றோர்; எச்சரிக்கும் மருத்துவர்கள்!

பெரியவர்கள் சூயிங்கத்தை பயன்படுத்தும்போது சரியாக அதனை மென்று, சுவை போன பின் துப்பிவிடுவதுண்டு. அதுவே குழந்தைகள் பயன்படுத்தும்போது தவறுதலாக அதனை விழுங்கிவிடும் அபாயம் இருக்கிறது.  சாதாரணமாக இப்படி விழுங்கும்பட்சத்தில், நம்முடைய செரிமான பாதையில் இருந்து அவை மலக்குடல் வழியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் வெளியேறிவிடும். அப்படி வெளியேறவில்லை எனில் பிரச்னை தான். treatment இந்நிலையில், அமெரிக்காவின் ஒஹியோ நகரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன், 40 சூயிங்கத்தை ஒரே நேரத்தில் மென்று விழுங்கி உள்ளான். இதனால் சிறுவனுக்கு வயிற்றுப்போக்கு, வலி எனத் தொடர் வயிற்று உபாதைகள் ஏற்பட்டிருக்கின்றன. கவலையடைந்த அவனின் பெற்றோர், அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  மருத்துவர் சிசைட் இஹியோனுனெக்வு (Chizite Iheonunekwu), சிறுவனைப் பரிசோதனை செய்தார். சூயிங்கம் அனைத்தும் வயிற்றில் ஒன்றாகச் சேர்ந்து கட்டியாக மாறியிருந்தன. சிறுவனின் தொண்டைக்குள் மெட்டல் டியூபை (esophagoscope) விட்டு சூயிங்கத்தை வெளியே எடுத்து இருக்கின்றனர். பலமுறை இவ்வாறு செய்து சூயிங்கத்தை அகற்ற வேண்டி இருந்ததால் சிறுவனுக்குத் தொண்டை வலி ஏற்பட்டுள்ளது.  சிகிச்சை முடிவில் தற்போது சிறுவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சூயிங்கம், ஏழு ஆண்டுகளாக உடலில் சிக்கியிருக்கும் என முன்பெல்லாம் எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், இதனை மருத்துவர்கள் மறுத்துள்ளனர். அரிதான நிகழ்வுகளில் மட்டுமே இப்படி நிகழும் என விளக்கமளித்துள்ளனர். Representational ImageDoctor Vikatan: மலம் கழிக்கும்போது ரத்தக்கசிவு... மூலநோயா, புற்றுநோயின் அறிகுறியா? இது குறித்து உணவியல் நிபுணர் பெத் செர்வோனி கூறுகையில், ``நீங்கள் ஒரு சூயிங்கத்தை விழுங்கியிருந்தால், அது 40 மணி நேரம் கழித்து உங்கள் மலம் வழியே வெளியேறும். ஏனெனில் அதனைச் செரிக்க முடியாததால், அது முழுவதுமாக வெளியேறுகிறது.  ஆனால், சிறிதளவு சூயிங்கத்தை அவ்வப்போது விழுங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது. இதனை ஜீரணிக்க முடியாததால் குடலில் பிரச்னை ஏற்படும். இதைத் தினமும் அல்லது பல முறை செய்தால், குடல் அடைப்பு ஏற்படலாம். அதன் பிறகு நீங்கள் சாப்பிடும் எதையும் வெளியேற்ற முடியாது. இது வலி மற்றும் அழுத்தத்திற்கு வழிவகுக்கும்’’ என்று தெரிவித்துள்ளார். உங்கள் குழந்தைகளுக்கு சூயிங்கம் வாங்கிக்கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!
http://dlvr.it/SpvWnw

Tuesday, 30 May 2023

சொகுசு பங்களா, கார், ஆடம்பர வசதிகள் இலவசம்... சீனாவின் சூப்பர் வில்லேஜ்!

சீனாவில் உள்ள Huaxi என்ற கிராமம், `கிராமப்புறம் என்றால் இப்படித்தான் இருக்கும்' என்று நீண்ட காலமாக நிலவி வந்த பழைமையான கற்பனைகளைத் தகர்த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. சீனாவின் ஷாங்காய் பகுதியில் இருந்து இரண்டு மணி நேர பயணத்தில் உள்ளது Huaxi கிராமம். இது 1960-ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டியின் முன்னாள் செயலாளரான வு ரென்பாவோ என்ற தலைவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்தக் கிராமத்து மக்கள் மிகவும் எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்துள்ளனர். ஆனால், தற்போது இவர்கள் இலவச மருத்துவம், கல்வி, ஆடம்பர வீடுகள் மற்றும் கார் போன்ற வசதிகளுடன் வாழ்கின்றனர்.சீனாவின் Huaxi கிராமம் ஜெர்மனியில் பொருளாதார மந்தநிலை தொடர்வது ஏன்? உலக நாடுகளை பாதிக்குமா? இந்த ஆடம்பரங்கள் அனைத்தும் இவர்களுக்கு எளிதாகக் கிடைக்கவில்லை. இவ்வளவு ஆடம்பரங்கள் இருந்தும் இவர்கள் உழைக்காமல் இருக்க முடியாது. குடியிருப்பாளர்கள் அனைவரும் வாரத்தின் 7 நாள்களும் வேலை செய்ய வேண்டும். Huaxi கிராம மக்களின் பாரம்பர்ய தொழில் விவசாயம். இம்மக்கள் உற்பத்தி துறையில் இருந்து மட்டும் 8 பில்லியன் டாலர் வருவாயைக் கொண்டு வரும் 60 நிறுவனங்களை வைத்துள்ளனர். கிழக்கு சீனாவில் உள்ள கிராமம் தற்போது சுற்றுலாத்துறையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இங்குள்ள மக்களுக்கு அரசே இலவசமாக வீடு மற்றும் கார் ஆகியவற்றை வழங்குகிறது. பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே இந்த ஆடம்பரமான வாழ்க்கை முறையைப் பெற முடியும். இங்கு புதிதாக வருபவர்களுக்கு அந்த மாதிரியான ஆடம்பரங்கள் வழங்கப்படுவதில்லை. இங்கு புதிதாக வருபவர்களுக்கு நிலையான ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இங்கு பூர்வீகமாக இருக்கும் மக்களும் Huaxi-யை விட்டு வெளியேற முடியாது. அப்படி ஒருவேளை இந்த கிராமத்தைவிட்டுச் செல்ல நினைத்தால் அவர்கள் தங்களின் குடியிருப்பு மற்றும் இதர ஆடம்பர வசதிகள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைத்துவிட்டே செல்ல வேண்டும்.சீனாவின் Huaxi கிராமம் லாபம் கொழிக்கும் சீனர்களின் கரப்பான் பூச்சி பண்ணைகள்... இந்தியாவில் சாத்தியமா? இந்தக் கிராமத்து மக்களின் வாழ்க்கை தரம் நகர மக்களைப் போலவே இருக்கும். இந்தக் கிராமத்தில் ஹெலிபேட் மைதானங்கள், தீம் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன. இங்குள்ள மக்கள் சொந்தமாக பங்களா, கார் ஆகியவற்றை வாங்குவது மிகவும் சாதாரணமான ஒரு விஷயம். இங்குள்ள மக்கள் சிலர் தங்களுக்கென தனியாக ஹெலிகாப்டரும் வைத்துள்ளார்களாம், இதனால் சீனா முழுவதும் இதை’ சூப்பர் வில்லேஜ் என்றே அழைக்கின்றனர். இதுதான் சீனாவிலேயே மிகவும் பணக்கார கிராமமாக அறியப்படுகிறது.
http://dlvr.it/SprWsF

Monday, 29 May 2023

`Full-Time Daughter, மனநிறைவாக உணர்கிறேன்'- முழுநேர மகளாக இருக்க மாதம் ரூ.47,000 சம்பளம் பெறும் பெண்

சீனாவில் தன்னுடைய பெற்றோருக்கு முழுநேர மகளாக இருக்க 4,000 யுவான் பெறுவதாக சமூக வலைதளங்களில் ஒரு பெண் பதிவிட்டிருக்கிறார். இது குறித்து வெளியான செய்தியில், ``சீனாவைச் சேர்ந்த நியானன் என்ற 40 வயதுப் பெண் ஒரு செய்தி நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிவந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு அவரின் பணியில் சில மாற்றங்கள் நடந்ததால், அவரால் பணியைச் சிறப்பாக மேற்கொள்ள முடியவில்லை. அதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்.வயதானப் பெற்றோர் இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு உதவ அவரின் வயதான பெற்றோர் முடிவுசெய்திருக்கின்றனர். இது குறித்து தன்னுடைய மகளிடம், `நீ உன் வேலையை விட்டுவிடலாமே... எங்களுக்குத் துணையாக இரு... நாங்கள் உன்னைப் பொருளாதாரரீதியில் கவனித்துக்கொள்கிறோம். மாதம் 4,000 யுவான் (ரூ.47,000) தருகிறோம். உனக்குப் பொருத்தமான வேலை கிடைத்தால், நீ அதற்குச் செல்லலாம். உனக்கு வேலை செய்ய விருப்பமில்லையென்றால், வீட்டிலேயே எங்களுடன் நேரத்தைச் செலவிடு' எனக் கூறியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, அவர்களின் மகளும் அவர் செய்துவந்த பணியை விட்டுவிட்டு பெற்றோருக்கு உதவியாக இருந்துவருகிறார். இது குறித்து அந்தப் பெண், `நான் செய்துவந்த பணியை விட்டுவிட என் பெற்றோர் வலியுறுத்தினர். மேலும், அவர்களுக்கு உதவியாக இருந்தால் அவர்களுக்கு வரும் உதவித்தொகையான 10,000 யுவானிலிருந்து மாதம் 4,000 யுவான் எனக்குச் சம்பளமாகத் தருவதாகவும், வேறு வேலைக்குச் செல்ல வேண்டுமென விரும்பினால் சென்றுகொள் எனவும் கூறினார்கள். இந்தப் பணியை ஏற்றுக்கொண்டு தினமும் காலையில் என்னுடைய பெற்றோருடன் ஒரு மணி நேரம் நடனமாடுகிறேன்.வயதான பெற்றோர் ஷாப்பிங் செல்ல விரும்பினால் அவர்களுடன் செல்கிறேன். மாலையில், என்னுடைய தந்தையுடன் சேர்ந்து இரவு உணவு சமைக்கிறேன். எலெக்ட்ரானிக் தொடர்பான அனைத்துப் பணிகளையும் நிர்வகிக்கிறேன். டிரைவராகவும் இருக்கிறேன். மாதாந்தரப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்கிறேன். என்னுடைய பெற்றோருடன் இருப்பதை நான் மனநிறைவாக உணர்கிறேன். என்னுடைய பணியின்போது அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைதான் எனக்கு மிகப்பெரிய மன அழுத்தமாக இருந்தது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.பாம்புத் தீண்டி குழந்தை பலி; 10 கி.மீ தூரம் உடலை சுமந்துசென்ற தாய்; வேலூர் மலைக் கிராமத்தில் சோகம்!
http://dlvr.it/Spp6gk

Sunday, 28 May 2023

4 ஆண்டுகளுக்கு முன் புதைத்த கன்னியாஸ்திரி உடல்... அப்படியே இருந்த அதிசயம்! - படையெடுக்கும் மக்கள்!

அமெரிக்காவின் மிசோரி (Missouri) நகரில் இருக்கும் ஒரு தேவாலயத்தில் சேவையாற்றி வந்த சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர் (Sister Wilhelmina Lancaster) மே 29, 2019 அன்று 95 வயதில் இறந்தார். அவரை ஒரு மர சவப்பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்திருக்கின்றனர். இந்த நிலையில், தேவாலய வழக்கப்படி அவரது உடலை தேவாலயத்துக்குள் புதைக்க மே 18, 2023 அன்று தோண்டி எடுக்கப்பட்டது.சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர் அப்போது சவப்பெட்டியில் விழுந்த சிறு துளையால் இறந்த கன்னியாஸ்திரியின் கால்பகுதி தெரிந்திருக்கிறது. அதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது கால்பகுதி அப்படியே இருந்திருக்கிறது. அதன்பிறகு சவப்பெட்டியை திறந்து பார்த்திருக்கின்றனர். அவர் புதைக்கப்பட்டபோது எப்படி இருந்தாரோ அப்படியே 4 ஆண்டுகளுக்குப் பிறகும் இருந்திருக்கிறார். உடனே இந்த செய்தி நகரம் முழுவதும் பரவியிருக்கிறது. இது குறித்து மிசோரி தேவாலய மற்றொரு கன்னியாஸ்திரி, "அவரது உடல் இருக்கும் சவப்பெட்டியை தோண்டி எடுக்கும்போதே, அந்தப் பெட்டியில் எதுவும் இருக்காது. வெறும் எலும்புகள் மட்டும்தான் இருக்கும் எனக் கூறினார்கள். ஆனால் முழு உடலும் இருந்தது ஆச்சர்யமாக இருக்கிறது. மண் விழுந்ததால் அவரது ஒரு கண் பகுதி மட்டும் சற்று அழுகியிருக்கிறது. மற்ற உடல் பாகங்கள் அப்படியே இருக்கின்றன" எனத் தெரிவித்திருக்கிறார்.சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர் இந்த செய்தி பரவியைதையடுத்து மிசோரி தேவாலயத்துக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். நீண்ட வரிசையில் நின்று சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர் உடலை பார்த்துச் செல்கின்றனர். இது குறித்து வெஸ்டர்ன் கரோலினா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும், தடயவியல் மானுடவியல் இயக்குநருமான நிக்கோலஸ் வி பாசலாக்வா (Nicholas V Passalacqua) பேசுகையில், “அடக்கம் செய்யப்பட்ட பிறகு உடல்கள் அரிதாகவே தோண்டி எடுக்கப்படுவதால் இது எந்த அளவு பொதுவானது என்று சொல்வது கடினம்.நீண்ட வரிசையில் மக்கள் மேலும், பல ஆண்டுகளுக்குப் பிறகும் சேதமடையாத மனித உடல்கள் பல கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வேண்டுமென்றே பாதுகாக்கப்பட்ட எகிப்திய மம்மிகள் போன்ற விஷயங்கள் மட்டுமல்லாமல், ஐரோப்பாவின் போக் பாடிகள் போன்றவையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன. எனவே, குறைந்த ஆக்ஸிஜன் கொண்ட சூழலில் இருக்கும் உடல்கள் பாக்டீரியா வளர்ச்சியையும் அதன் அணுகளையும் கட்டுப்படுத்தும்" எனத் தெரிவித்திருக்கிறார். சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர்-ன் உடல் மே 29 ஆம் தேதி வரை மக்கள் பார்வைக்கு வைக்கப்படும், பின்னர் அது தேவாலயத்தில் கண்ணாடியில் பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.திருமணம் மீறிய உறவு; பெண்ணைக் கொன்று பிறப்புறுப்பில் தீ வைத்த மேஸ்திரி - போலீஸ் விசாரணையில் `பகீர்'
http://dlvr.it/SpnkNC

Great Grand Father: `5,000 ஆண்டுகள் பழைமையான மரம்' ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

மரங்கள் பல ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. ஆனால், காலங்கள் கடந்து 5,000 ஆண்டுகள் வரை ஒரு சைப்ரஸ் வகை மரம் நிலைத்து நிற்கிறது. ஆராய்ச்சியாளர்கள் இதற்கு கிரேட் கிராண்டு ஃபாதர் (Great Grand father) எனப் பெயர் வைத்துள்ளனர்.  தென் அமெரிக்காவின் சிலி சாண்டியாகோவில் உள்ள காட்டில்,  5,000 வருட பழமையான மரம் இருக்கிறது. காலநிலைமாற்றம், பேரழிவுகள் மற்றும் உலக மாற்றங்களைக் கண்ட ஒரு மரம் இன்றுவரை நிலைத்து நிற்கிறது.Methuselah ``மண் வளம் பெருகும்; மகசூல் கூடும்” - ஆட்டுக்கிடை அமைக்க ஆர்வம் காட்டும் டெல்டா விவசாயிகள்! உலகின் மிகவும் பழமையான மரமாகக் கருதப்படும் மெதுசெலா (Methuselah) 4,850 வருடங்களை கண்டுள்ளது. இது அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் இருக்கிறது. இன்றும் இதை அமெரிக்கர்கள் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், இம்மரத்தின் சாதனையை முந்தி கிரேட் கிராண்ட்ஃபாதர் மரம் மிகவும் பழமையான மரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மரம் 4 மீட்டர் (13 அடி) அளவில் தண்டின் விட்டத்தையும், 28 மீட்டர் உயரத்தையும் கொண்டுள்ளது. காலநிலை மாற்றத்திற்கு தக்கவாறு இந்த கிரகம் எவ்வாறு தன்னை மாற்றியமைத்துக் கொண்டது போன்ற அறிவியல் பூர்வ தகவல்களை இந்த மரம் வெளிப்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.  சமீப காலங்களில், இந்த மரத்தினை குறித்து அறிந்தவர்கள் இந்த காட்டிற்குச் சென்று மரத்தைக் கண்டறிந்து, அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அதிகரித்து வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையால், இம்மரத்திற்குப் பாதுகாப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.  1972-ம் ஆண்டு காட்டில் ரோந்து சென்றபோது இம்மரத்தைப் பூங்காவின் வார்டன் அனிபால் ஹென்ரிக்யூஸ் கண்டுபிடித்தார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அதே காட்டில் குதிரையில் ரோந்து சென்றபோது மாரடைப்பால் இறந்தார்.  அது மிகவும் மதிப்புமிக்கது என்று அவர் அறிந்திருந்ததால், மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அம்மரம் எங்கிருக்கிறது என்பதை அறிவிக்க அவர் விரும்பவில்லை என அவரது மகள் நான்சி ஹென்ரிக்யூஸ் கூறியுள்ளார்.Great Grandfather tree பறவைகள் வருகையால் நல்ல மகசூல்! ஓர் அதிசய கிராமத்தின் கதை! | காடும் கற்பனைகளும் - 6 ஹென்ரிக்யூஸின் மருமகன் ஜொனாதன் பேரிச்சிவிச் அம்மரத்தின் அருகிலேயே விளையாடி வளர்ந்தவர். தற்போது அம்மரத்தை ஆய்வு செய்பவர்களில் இவரும் ஒருவர். 2020-ம் ஆண்டு பேரிச்சிவிச் மற்றும் லாரா ஆகியோர் அம்மரத்தில் இருந்து ட்ரில் செய்து மாதிரியை எடுத்து சோதனை செய்தனர். இம்மரம் 2,400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று கணித்தனர். சாத்தியமான வகையில் இது 80 சதவிகித மரம் 5,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் எனவும், விரைவில் ஆய்வு குறித்த முடிவுகள் வெளியாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார், பேரிச்சிவிச்.
http://dlvr.it/SplQmP

Saturday, 27 May 2023

வடகொரியா: பைபிள் வைத்திருந்த குடும்பமே கைது; 2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை - அமெரிக்கா பகீர் தகவல்

கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வரும் வட கொரியாவில் அடிக்கடி மரண தண்டனை, ஆளுள் தண்டனை வழங்கப்படுவது சர்வ சாதரண நிகழ்வாகிவிட்டது. இந்த நிலையில், வட கொரியாவில் பைபிளுடன் பிடிபட்ட கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் 2 வயதுக் குழந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. பைபிள் இந்த நிலையில், சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், ``வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 70,000 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சிறைக்கு அனுப்பப்பட்டவர்களில் இரண்டு வயது ஆண் குழந்தையும் இருந்தது. அந்தக் குழந்தையின் பெற்றோரிடம் பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்தச் சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மதப் பழக்கவழக்கங்கள், பைபிளை வைத்திருந்ததற்காக அந்தக் குடும்பம் கைதுசெய்யப்பட்டிருக்கிறது. அந்த குழந்தை உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் 2009-ம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனை பெற்று அரசியல் சிறை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் தாங்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும், பல்வேறு வகையான உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர். இந்த முகாம்களில் நடந்தேறும் 90% மனித உரிமை மீறல்களுக்கு அந்த நாட்டின் மாநில பாதுகாப்பு அமைச்சகம் தான் பொறுப்பேற்க வேண்டும்” எனக் குற்றம்சாட்டப்பட்டியிருக்கிறது. கொரியா ஃபியூச்சர் (Korea Future) என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்த அமைப்பானது கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வட கொரியாவில் பெண்களுக்கு மறுக்கப்படும் மத சுதந்திரத்தை மேற்கோள் காட்டும் வகையில், இதனால் துன்புறுத்தல்களை அனுபவித்த 151 பெண்களின் நேர்காணல்களை வெளியிட்டது.வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த நிலையில் `கொரியா ஃபியூச்சர் ' எனும் அமைப்பின் இந்த பதிவை மேற்கோள் காட்டிய வெளியுறவுத்துறை, "வட கொரியாவில் மதம் சார்ந்த பொருள்கள் வைத்திருப்பவர்கள், மத வழிபாடு நடத்துபவர்கள், மதகுருக்களை சந்திப்பவர்கள் மேல்  வழக்கு பதிவுசெய்யப்படலாம்.  இதனால் அவர்கள் கைதுசெய்யப்படலாம், உழைப்பு சுரண்டல் செய்யப்படலாம், துன்புறுத்தல் நடத்தப்படலாம், வாழ்வுரிமை பறிக்கப்படலாம், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகலாம்" என தெரிவித்திருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் வட கொரியாவில் அத்துமீறும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து ஐ.நா சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. வட கொரியா அதிபர் மக்களுக்கு எச்சரிக்கை| Youtube-ன் புதிய சிஇஓ-வாக இந்தியர் நியமனம் - உலகச் செய்திகள்
http://dlvr.it/SpjpDN

Friday, 26 May 2023

செந்தில் பாலாஜி: IT ரெய்டு..டெல்லி 'ஆட்டம்' ஆரம்பமா? - ரத்தான ஜனாதிபதி வருகை -சீனாவில் புதிய கொரோனா

ஐ.டி ரெய்டு... சிக்கலில் அமைச்சர் செந்தில் பாலாஜி - டெல்லி 'ஆட்டம்' ஆரம்பமா?! செந்தில் பாலாஜி, ஐ.டி ரெய்டு தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 40-க்கும் அதிகமான இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பா.ஜ.க அரசு அரசியல்ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கையாக இது போன்ற ரெய்டுகளை நடத்துவதாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. தி.மு.க அமைச்சரவையில் செந்தில் பாலாஜி பவர்ஃபுல் அமைச்சராக வலம் வருகிறார். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் திமுக-வை பலப்படுத்துவதற்கான பொறுப்பு செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்தே அவர் மீது பா.ஜ.க ஒரு கண் வைக்கத் தொடங்கியது. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவ்வப்போது கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில், இந்த 'ரெய்டு நடவடிக்கை 'டெல்லி 'ஆட்டம்' ஆரம்பமா..?' என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. இன்றைய ரெய்டு குறித்த முழுமையான பின்னணி தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க... IT ரெய்டு: அதிகாரிகளுடன் திமுக-வினர்  வாக்குவாதம்... பரபரப்பு... முழு அப்டேட்!  ரெய்டுக்கு வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்வதற்காகச் சென்ற வருமான வரித் துறை அதிகாரிகளை, அமைச்சரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு, அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறி ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகளின் காரையும் ஓரிடத்தில் உடைத்துச் சேதப்படுத்தினர். அதன் காரணமாக அதிகாரிகள் சில இடங்களில் சோதனை நடத்த முடியாமல் திரும்பவும் நேர்ந்தது. இந்த நிலையில், இந்த ரெய்டு குறித்து செந்தில் பாலாஜி தெரிவித்த பதில் உள்பட இது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க... ------------------------ மேலும், அன்று வேலுமணியின் நிழல்; இன்று செந்தில் பாலாஜியின் வலதுகரம் - ஐ.டி ரேடாரில் செந்தில் கார்த்திகேயன்! படிக்க இங்கே க்ளிக் செய்க... வருமான வரித்துறையினர் வருவது திமுக-வுக்கு தெரியும்போது காவல்துறைக்கு தெரியாதா?!" - அண்ணாமலை படிக்க இங்கே க்ளிக் செய்க...அண்ணாமலை "ஸ்டாலின் இல்லாத நேரம்... செந்தில் பாலாஜியை முடக்க கேவலமான அரசியல் செய்கிறது பாஜக!" - ஆர்.எஸ்.பாரதி படிக்க இங்கே க்ளிக் செய்க... "வருமான வரி சோதனை எல்லாம் கண்துடைப்பு!" - பேரம் நடப்பதாக சீமான் காட்டம் படிக்க இங்கே க்ளிக் செய்க... 'உப்பைத் தின்றவன் தண்ணீரைக் குடித்துதான் ஆக வேண்டும்!' - செந்தில் பாலாஜியைச் சாடும் செம்மலை படிக்க இங்கே க்ளிக் செய்க... கருணாநிதி பிறந்தநாள் விழா... ரத்தான குடியரசுத் தலைவர் வருகை!   திரௌபதி முர்மு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட தி.மு.க அரசு பெரும் முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்த நிலையில், கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறந்துவைக்க இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வரும் ஜூன் 5-ம் தேதி திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவிலும் அவர் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணி தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க... எப்படி தயாராகின்றன வந்தே பாரத் ரயில்கள்? - சென்னை ICF ஸ்பாட் விசிட் | Photo Story ICF விசிட் வந்தே பாரத் ரயில்கள் எப்படி தயாராகின்றன என்பது குறித்த விகடன் புகைப்பட கலைஞரின் ஸ்பாட் விசிட் படங்களின் தொகுப்பை பார்க்க இங்கே க்ளிக் செய்க... சீனாவில் பரவும் புதிய கொரோனா...  அச்சத்தில் உலக நாடுகள்!  கோவிட் வைரஸ் சீனாவில், ஓமிக்ரான் துணை வகை XBB வைரஸ் மூலம் மீண்டும் கொரோனா விரைவாகப் பரவி வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் புதியவகை கொரோனா அலை, ஜூன் மாத இறுதிக்குள் சீனாவில் உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்த தகவலால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. இது தொடர்பான விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க... இனி எல்லாம் AI - புதிய தொடர்... இனி எல்லாம் AI ChatGPT 3.5 தொழில்நுட்பம் வெளிவந்த சில மாதங்களிலேயே ஜெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்திருக்கிறது. அதென்ன GPT? எதற்காக 3.5? என்றெல்லாம் எழும் கேள்விகளுக்கு மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவுத் தளம் நடந்து வந்த பாதை, சமகால வெளியீடுகள் மற்றும் தாக்கங்கள் என்பவற்றையெல்லாம் ஆழமாக அலசும் 'இனி எல்லாம் AI' என்ற புதிய தொடர் இந்த வார ஆனந்த விகடன் இதழில் ஆரம்பம்... விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமான அன்டன் பிரகாஷ்தான் இதனை எழுதுகிறார். படிக்க இங்கே க்ளிக் செய்க... 'கழுவேத்தி மூர்க்கன்' - விமர்சனம் கழுவேத்தி மூர்க்கன் க்ரைம் த்ரில்லர் ஜானர் படங்கள், நகர்ப்புறத்தை மையமாகக் கொண்ட கதைக்களமெனத் தொடர்ந்து வித்தியாசமாக நடித்து வந்த அருள்நிதி, இதில் கமர்ஷியல் ரூட்டில் கிராமத்து இளைஞன் மூர்க்கனாக மீசையுடன் வலம் வருகிறார். கிராமத்துப் படம் என்றதும் வழக்கம்போல ரயிலில் ஆட்களை ஏற்றுவது போலக் கதாபாத்திரங்களை ஏற்றாமல், ஷேர் ஆட்டோ அளவுக்கு மட்டும் கதாபாத்திரங்களைக் கையாண்டு இருப்பதே பெரிய ஆறுதல். சரியான அரசியல் பேசும் கிராமத்து ஆக்‌ஷன் படம்தான். ஆனால் திரைக்கதை? விமர்சனத்தை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...
http://dlvr.it/SpgYN1

சீனாவில் பரவும் புதியவகை கொரோனா... `மறுபடியும் மொதல்லேருந்தா...'- அச்சத்தில் உலக நாடுகள்!

சீனாவில், ஓமிக்ரான் துணை வகை XBB வைரஸ் மூலம் மீண்டும் கொரோனா விரைவாகப் பரவி வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் புதியவகை கொரோனா அலை, ஜூன் மாத இறுதிக்குள் சீனாவில் உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு புதிய கோவிட் தடுப்பூசிகளை சீனா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. கடந்த மே 22-ம் தேதி சீனாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், சுவாச நோய்க்கான சீன தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான நிஜாங் நன்ஷான், ``ஓமிக்ரான் துணை வகை XBB வைரஸ் விரைவாகப் பரவுவதால் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது உலகின் பிற பகுதிகளையும் பாதிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.சீனாவில் பரவும் புதியவகை கொரோனாDoctor Vikatan: கட்டுப்பாடில்லாத ரத்தச் சர்க்கரை... உடல் முழுவதும் அரிப்பு... தீர்வு என்ன? சீன கம்யூனிஸ்ட் கட்சியின் குவாங்டாங் மாகாணக் குழுவின் அதிகாரபூர்வ செய்தித்தாளான Nanfang Daily , இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. சீனாவில் இருந்து உருவான கொரோனா, உலகம் முழுவதும் பல நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இந்தச் செய்தி உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 76 வது உலக சுகாதார மாநாட்டில், ``கொரோனாவைவிட பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும்" என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறியுள்ள நிலையில், சீனாவில் வேகமெடுக்கும் புதியவகை கொரானா உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
http://dlvr.it/Spfbln

Thursday, 25 May 2023

`Booker Prize' பெற்ற பல்கேரிய எழுத்தாளர்| 140 கோடி ரூபாய்க்கு ஏலம்போன வாள் - உலகச் செய்திகள்

உக்ரைனின் பாக்முட்டில் 20,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் வாக்னர் படைத் தலைவர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் கறுப்பினத்திலே பிறந்து மிகப்பெரிய பாடகியாக விளங்கிய டினா டர்னர் (Tina Turner) தன்னுடைய 83-ம் வயதில் காலமானார். அமெரிக்காவுக்கான புதிய தூதரை சீனா நியமித்திருக்கிறது. Xie Feng என்ற புதிய தூதரின் வருகை இரு நாடுகளின் உறவுகளிலும் மாற்றங்களைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபுளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ், 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். இது ட்ரம்ப்புக்கு சவால்விடும் வகையில் அமைந்திருக்கிறது. இவரின் பங்கேற்பு குடியரசுக் கட்சியின் பங்கை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக பல்கேரியாவைச் சேர்ந்த எழுத்தாளரான Georgi Gospodinov இந்த ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசைப் பெற்றிருக்கிறார். 'டைம் ஷெல்டர்' என்ற அவருடைய காமிக் நாவலுக்காக இந்த விருதைப் பெற்றிருக்கிறார். வடகொரியா தற்போது புதிய செயற்கைக்கோள் தளத்தை உருவாக்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பிரிட்டனைச் சேர்ந்த 36 வயதான McDonald என்பவர், ஏழு நாள்களில் ஏழு உலக அதிசயங்களையும் பார்வையிட்டு கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். WWE புகழ் Billy Graham அவருடைய 79-ம் வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் இழப்புக்காக சக வீரர்கள் இரங்கல்களைப் பதிவு செய்துவருகின்றனர். 18-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள், லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் 140 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.
http://dlvr.it/SpcV2y

இளமையாக இருக்க பிளாஸ்மா சிகிச்சை; வருடத்திற்கு 2 மில்லியன் டாலர் செலவு செய்யும் நபர்!

வயதானவர்கள் மீண்டும் தங்களது இளமையைப் பெற இளையவர்களின் ரத்தத்தைக் குடிப்பது அல்லது அதில் குளிப்பது போன்ற விஷயங்களைச் செய்வதாக புராணக் கதைகளில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்படிச் செய்வதால் இளமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா?! கதைகளைத் தாண்டி நிஜத்தில் ஒருவர் இப்படிச் செய்தால், எப்படியிருக்கும்..? கேட்பதற்கே வியப்பாக இருக்கிறதல்லவா… அமெரிக்காவைச் சேர்ந்த டெக் தொழில்முனைவோர் தான் 45 வயதான பிரையன் ஜான்சன் (Bryan Johnson). இவருக்கு 70 வயதில் ரிச்சர்டு என்ற தந்தையும், 17 வயதில் டால்மேஜ் என்ற மகனும் இருக்கின்றனர்.Blood (Representational Image) இவர்கள் மூவரும் ஏப்ரல் 3 அன்று டல்லாஸில் உள்ள கிளினிக் ஒன்றுக்குச் சென்றுள்ளனர். முதலில் அவரின் மகன் டால்மேஜிடம் இருந்து லிட்டர் அளவில் ரத்தம் எடுக்கப்பட்டு, எந்திரத்தின் உதவியுடன் திரவ பிளாஸ்மா, சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளேட்லெட் போன்றவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. அடுத்ததாக பிரையனிடமிருந்தும் ரத்தம் பெறப்பட்டு இதே செயல்முறை நிகழ்த்தப்பட்டது. இவருக்குக் கூடுதலாக மகனின் பிளாஸ்மா செலுத்தப்பட்டது. அதன்பிறகு இவரின் தந்தை ரிச்சர்டும் இதே செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டார். இவருக்கு பிரையனின் பிளாஸ்மா செலுத்தப்பட்டு, நீண்ட நேரத்திற்குப் பின் மகன், தந்தை, தாத்தா என மூன்று தலைமுறையினர் தங்களது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை மாற்றிக் கொண்டனர். இது போல 18 முறை இவர்கள் செய்துள்ளனர். ஏன் இப்படிச் செய்கிறார்கள், இதனால் என்ன பயன் என்ற கேள்வி எழலாம். ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்மா செலுத்துவதை ஒரு புத்துணர்ச்சி சிகிச்சையின் சோதனையாகச் செய்துள்ளனர். இதற்காக வயதான எலிகளில், இளைய எலிகளின் பிளாஸ்மாவை செலுத்திப் பரிசோதித்ததில், வயதான எலிகளின் அறிவாற்றல், வளர்சிதை மாற்றம் மற்றும் எலும்பு அமைப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக ரத்த தானம் செய்கையில் உடலானது பழையதை நீக்கி புதிய செல் மற்றும் திரவங்களை உற்பத்தி செய்வதற்கான சான்றுகளும் இருக்கின்றன. கோவிட் தொற்று சமயத்தில், கோவிட் நோயாளிகள் சிலருக்கு கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் பிளாஸ்மா கொடுக்கப்பட்டது. இது அவர்களின் உடலில் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்து நோயில் இருந்து குணமடைய வழிவகுத்தது. ஆனால், 2021-ல் உலக சுகாதார அமைப்பு இந்தச் செயல்முறையை எதிர்த்தது.Plasma treatmentமூட்டுவலிக்கு தீர்வு அறுவை சிகிச்சை இல்லாத 'பிளாஸ்மா தெரபி! ஜான்சன் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மட்டுமல்லாமல், சரியான உடல் எடை, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் முன்பின் தெரியாத நபர்களிடமிருந்தும் பிளாஸ்மாவை பெற்றிருக்கிறார். வயதாகும் செயல்முறையை மெதுவாக்குவது அல்லது ரிவர்ஸ் செய்வதற்காக இவர் வருடத்திற்கு 2 மில்லியன் டாலர்கள் வரை செலவு செய்கிறார். இவரை கண்காணிக்க மருத்துவர் குழு ஒன்றும் இருக்கிறது. ஜான்சனின் மருத்துவக் குழு, அறிவாற்றல் குறைபாடு மற்றும் பார்கின்சன் நோய் மற்றும் அல்சைமர் நோயைத் தடுப்பதற்கான சாத்தியமான சிகிச்சையாக இந்தச் செயல்முறையை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.      
http://dlvr.it/Spbzb2

Wednesday, 24 May 2023

`அதிபர் பைடனைக் கொல்ல வேண்டும்!' - இந்திய வம்சாவளி இளைஞரால் வெள்ளை மாளிகையில் பரபரப்பு

அமெரிக்காவில் 19 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதிபர் ஜோ பைடனைக் கொன்று ஆட்சியைப் பிடிக்கப்போவதாக வெள்ளை மாளிகை தடுப்புச்சுவரில் ஹிட்லர் கொடி தாங்கிய ட்ரக்கால் (Truck) மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, திங்கள்கிழமை இரவு 10 மணியளவில், சாய் வர்ஷித் கந்துலா (Sai Varshith Kandula) எனும் இளைஞர், வெள்ளை மாளிகையிலுள்ள லாஃபாயெட் பூங்காவின் (Lafayette Park) வடக்குப் பகுதியிலுள்ள நடைபாதையில் பாதுகாப்புத் தடைகள்மீது ட்ரக்கில் மோதியிருக்கிறார்.அமெரிக்கா இது குறித்து தகவலிருந்த போலீஸார் சாய் வர்ஷித் கந்துலாவைக் கைதுசெய்தனர். இதையடுத்து நடைபாதை மூடப்பட்டது. மேலும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் சாய் வர்ஷித் கந்துலா மீது கிரிமினல் புகார் அளிக்கப்பட்டு, வாஷிங்டன்னிலுள்ள நீதிமன்றத்தில் அவருக்கெதிராக ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆவணத்தின்படி, திங்கள்கிழமை இரவன்று செயின்ட் லூயிஸிலிருந்து டல்லஸ் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய சாய் வர்ஷித் கந்துலா, ட்ரக் ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார். அன்றிரவே வெள்ளை மாளிகை அருகே நடைபாதையில் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சாய் வர்ஷித் கந்துலா. அதன் பின்னர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட சாய் வர்ஷித் கந்துலா, வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சியில் அமர்வதே தன்னுடைய இலக்கு என்று விசாரணையில் தெரிவித்திருக்கிறார். மேலும் இதில் அதிபரைக் கொல்வேன் என்றும், அதற்குக் குறுக்கே யார் வந்தாலும் அவர்களையும் தாக்குவேன் என்றும் கூறியிருக்கிறார்.சாய் வர்ஷித் கந்துலா (இந்திய வம்சாவளி) அதுமட்டுமல்லாமல் ஹிட்லரின் பெருமை பேசும் இவர், ஆன்லைனில் நாஜிக்களின் சின்னம்கொண்ட கொடியை வாங்கியதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, சாய் வர்ஷித் கந்துலாவின் நண்பர்கள் பலரும் அவரைப் பற்றி, மிக அமைதியானவர் என்றெல்லாம் கூறிவருகின்றனர். இன்னொருபக்கம், அவரின் மனநலன் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்றும் புலனாய்வாளர்கள் ஆராய்ந்துவருகின்றனர்.`ஸ்டார்பக்ஸ்' புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளி லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம்!
http://dlvr.it/SpYR2y

Lottery-ல் விழுந்த ரூ.82 லட்சம்; தன் செயலால் மக்களை நெகிழவைத்த இளைஞர்! - அப்படி என்ன செய்தார்?

அதிர்ஷ்டம் என்று ஒன்று இல்லையென்றாலும்கூட, நாம் எதிர்பாராத ஒன்று எதிர்பாராத நேரத்தில் நமக்குக் கிடைக்கும்போது, அதை நாமே அதிர்ஷ்டம் என்று கூறிக்கொள்கிறோம். பலருக்கும் அப்படிப்பட்ட ஒருவகையான அதிர்ஷ்டம்தான் லாட்டரி. ஆனால், லாட்டரியில் அதிர்ஷ்டம் அடித்த பல பேர் அந்தப் பணத்தை வைத்து தங்கள் குடும்பத்துக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கையில், சிலர் மட்டும் அதற்கு நேரெதிராக பிறருக்கு எவ்வாறு உதவலாம் என்று யோசிக்கும்போது அதன் மதிப்பு இன்னும் அதிகமாகிவிடுகிறது.லாட்டரியில் ரூ.82 லட்சம் வென்ற சோலிமேனே சனா அதுபோலத்தான், அமெரிக்காவில் ரூ.82 லட்சத்தை லாட்டரியில் வென்ற ஆப்பிரிக்க நபர் ஒருவர் செய்திருக்கும் செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. ஆப்பிரிக்காவின் மாலியை பூர்வீகமாகக் கொண்டவர் சோலிமேனே சனா (Souleymane Sana). அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் (north carolina) நியூ பெர்ன் (New Bern) பகுதியில் வசிக்கும் சோலிமேனே சனா ஒரு நடன பயிற்றுவிப்பாளர். இவர் கொஞ்ச நாள்களுக்கு முன்னர் 30 மில்லியனர் மேக்கர் ($30 Millionaire Maker) லாட்டரி டிக்கெட்டை வாங்கினார். இந்த நிலையில் கடந்த 16-ம் தேதியன்று இவருக்கு ஒரு லட்சம் டாலர் (ரூ. 82 லட்சம்) லாட்டரி அடித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள லாட்டரி தலைமையகத்துக்குச் சென்ற சோலிமேனே சனா, மாநில மற்றும் கூட்டாட்சி வரி (state and federal tax) போக 71,259 டாலரைப் பெற்றுக்கொண்டார் (இந்திய மதிப்பில் ரூ.58,93,083.67). பின்னர் அந்தப் பணத்தில் அடுத்த என்ன செய்யப்போகிறார் என்பது குறித்துப் பேசிய சோலிமேனே சனா, ``இந்தப் பணத்தைக் கொண்டு மாலியிலுள்ள குழந்தைகளுக்கு நிறைய வகுப்பறைகளைக் கட்டித்தர என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்யப்போகிறேன். உண்மையில் அது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தரும்.லாட்டரியில் ரூ.82 லட்சம் வென்ற சோலிமேனே சனா இது என்னுடைய கனவு. நான் அந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. இதன்மூலம் அவர்களுக்குத் தொடர்ந்து உதவ முடியும். அதுமட்டுமல்லாமல், எனக்கு நடனமாடுவது மிகவும் பிடிக்கும். மாலியிலுள்ள குழந்தைகளுக்கும் அதை கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். மேலும், நீங்கள் அவர்களுக்குக் கல்வி மற்றும் கலாசாரம் பற்றி பேசினால், அவர்கள் இரண்டிலும் ஒன்றாகச் செல்வர். என்னுடைய கனவு கொஞ்சம் கொஞ்சமாக நனவாகி வருகிறது. அது தொடரும் என்று நம்புகிறேன்" என்றார். சோலிமேனே சனாவின் இத்தகைய செயல் பலரிடமிருந்து பாராட்டுகளைக் குவித்துவருகிறது.ரூ.457 கோடி சொத்துகள் முடக்கம் - லாட்டரி மார்ட்டினின் பின்னணி!
http://dlvr.it/SpXtxf

அமெரிக்கா: வாத்துகள் சாலையைக் கடக்க உதவியவர் கார் மோதி பலியான சோகம்!

அமெரிக்காவின், கலிஃபோர்னியா மாகாணத்தில் ராக்லின் பகுதியைச் சேர்ந்தவர் கேசி ரிவாரா (41). இவர் தன்னுடைய குழந்தைகளுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சில வாத்துகள் கூட்டமாகச் சாலையைக் கடக்க முயன்றிருக்கின்றன. இதை கவனித்த கேசி ரிவாரா, உடனே காரை நிறுத்தியிருக்கிறார். அதோடு அந்த வாத்துகள் வேகமாகவும் பாதுகாப்பாகவும் சாலையைக் கடக்க உதவிக்கொண்டிருந்தார்.அமெரிக்கா கேசி ரிவாரா இதைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் அவரின் செயலைப் பாராட்டி, தங்கள் வாகனங்களை நிறுத்தி அவருக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றனர். இதற்கிடையே எங்கிருந்தோ வந்த கார் ஒன்று அவர்மீது மோதியதில், குழந்தைகளின் கண்முன்னே தூக்கிவீசப்பட்டார் கேசி ரிவாரா. உடனே அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸை அழைத்திருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், கேசி ரிவாரா இறந்துவிட்டதை உறுதிசெய்தனர். வாத்துகளுக்காக இறங்கி வழி ஏற்படுத்திக்கொடுத்தவர் மரணித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரின் புகைப்படத்துக்கு மலர்களையும், சிறு வாத்து பொம்மைகளையும் வைத்து அந்தப் பகுதி மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.கேசி ரிவாரா பிள்ளைகள் இதற்கிடையே அவரின் சகோதரி இறந்தவரின் குழந்தைகளுக்காக gofundme.com இணையப் பக்கத்தின் மூலம் நிதி திரட்டிவருகிறார். மேலும், விபத்தை ஏற்படுத்திய காரை 17 வயது சிறுவன் ஓட்டிவந்ததும், அது தற்செயலாக நடந்த விபத்துதான், திட்டமிட்டுச் செய்யப்படவில்லை எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன."கலைஞர் இதைச் செய்திருக்க மாட்டார்!"- சாலை பெயர் மாற்றத்தால் வருந்தும் `அவ்வை சண்முகம்' குடும்பம்
http://dlvr.it/SpXPMx

Tuesday, 23 May 2023

BGMI: தடை நீக்கம், மீண்டும் களமிறங்கும் PUBG-க்கான மாற்று கேமிங் ஆப்; பின்னணி என்ன?

2020-ல் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனக் கூறி 200-க்கும் மேற்பட்ட சீன செயலிகளைத் தடை செய்தது மத்திய அரசு. அதில் இந்தியாவில் பிரபலமாகப் பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்த டிக்டாக், பப்ஜி, ஹலோ, வீசாட், யூசி ப்ரௌசர் போன்ற பல செயலிகள் தடை செய்யப்பட்டன. இதையடுத்து தடை செய்யப்பட்ட செயலிகள் செயலிகளில் பலவும் மீண்டும் வேறு பெயரில் ரீபிராண்டிங் செய்யப்பட்டு மீண்டும் இந்தியாவில்  வெளியிடப்பட்டன. பலர் இந்தத் தடை செய்யப்பட்ட செயலிகளை 'VPN' போன்ற வழிமுறைகளின் மூலம் பயன்படுத்தி வந்தனர்.Battlegrounds Mobile India (BGMI) அதில் குறிப்பாக 'PUBG' எனும் விளையாட்டுச் செயலி பலராலும் பதிவிறக்கம் செய்யப்பட்டு விளையாடப்பட்டு வந்தது. மத்திய அரசின் தடைக்குப் பிறகு, இதே போன்ற செயலி ரீபிராண்டிங் செய்யப்பட்டு வேறு பெயரில் 'BGMI' எனப் பிரபலமாக அறியப்படும் 'Battlegrounds Mobile India' என்று வெளியிடப்பட்டது. ஆக்‌ஷன், போர்க்களம், துப்பாக்கிகள் என ஆக்ரோஷமான விளையாட்டுச் செயலியான இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர், இந்தச் செயலியும் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. இதன் பிறகு வெவ்வேறு வகையில் 'VPN' மூலம் பலரும் இதை விளையாடி வந்தனர். நாளடைவில் இதன் மீதான தாக்கம் குறைந்து ஏராளமானோர் இதை விளையாடுவதைக் கைவிட்டனர். இந்நிலையில் சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு தடை நீக்கப்பட்டு மீண்டும் ஆப் ஸ்டோர்களுக்குத் திரும்புகிறது இந்த 'BGMI'. கடந்த வெள்ளிக்கிழமை 'BGMI'-யின் கேம் டெவலப்பர் நிறுவனமான 'Krafton' இது தொடர்பாக, "விரைவில் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் இரண்டிலும் 'BGMI'-யின் ஆப் பயனர்களுக்குக் கிடைக்கப் பெறும்" எனக் கூறியுள்ளது. இருப்பினும், iOS சாதனங்களில் இதை இன்னும் காண முடியவில்லை. 'BGMI'-யின் அதிகாரபூர்வ பக்கங்களின் மூலம் ஆண்டிராய்டில் இவை கிடைப்பதாகவும் ஆனால், பயன்படுத்துவதில் பிரச்னைகள் இருப்பதாகவும் பலர் கூறிவந்தனர். இதையடுத்து விரைவில் இந்தப் பிரச்னைகள் சரி செய்யப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. Battlegrounds Mobile India (BGMI) போர், துப்பாக்கி என இளைஞர்களைத் தவறான போக்கிற்கும், ஆக்ரோஷமான மன நிலைக்கும் தள்ளுவதாக இந்த வகையான விளையாட்டுச் செயலிகள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேசமயம், இது சாதாரண விளையாட்டு செயலிதான். இதை நாம்தான் சரியாகக் கையாளக் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். போர், துப்பாக்கிகள் நிறைந்த இதுபோன்ற ஆக்ரோஷமான விளையாட்டுச் செயலிகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வருவது குறித்த உங்களின் கருத்தை கமென்ட்டில் பதிவிடவும்.
http://dlvr.it/SpTpTM

Sunday, 21 May 2023

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேரளம் வருகை

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், 2 நாள் பயணமாக கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். திருவனந்தபுரத்தின் சங்குமுகம் பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்தில், தனது மனைவி சுதேஷ் தன்கருடன் வந்திறங்கிய அவரை, ஆளுநா் ஆரிஃப் முகமது கான், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆன்டனி ராஜு ஆகியோா் வரவேற்றனா். இதையடுத்து, புகழ்பெற்ற பத்பநாபசுவாமி கோயிலுக்கு ஜகதீப் தன்கா், தனது மனைவியுடன் சென்று வழிபட்டாா். கேரள பாரம்பரிய வழக்கப்படி வேஷ்டி அணிந்து சென்று வழிபாடு மேற்கொண்ட அவருக்கு கோயில் அதிகாரிகள் நினைவுப் பரிசு வழங்கினா். கேரள சட்டப் பேரவை கட்டடத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் திங்கள்கிழமை பங்கேற்கும் ஜகதீப் தன்கா், கண்ணூா் மாவட்டம், ஏழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாதெமிக்கு வருகை தரவிருக்கிறாா். இப்பயணத்தின் மூலம், இந்த அகாதெமிக்கு வருகை தரும் முதல் குடியரசு துணைத் தலைவா் என்ற பெருமை தன்கருக்கு சொந்தமாகவுள்ளது. மேலும், தலச்சேரியில் வசிக்கும் தனது ஆசிரியை ரத்னா நாயரையும் நிமித்தமாக ஜகதீப் தன்கா் சந்திக்கவுள்ளாா். சித்தோா்கரில் உள்ள உறைவிடப் பள்ளியான சைனிக் பள்ளியில் தன்கா் படித்தபோது, அங்கு ஆசிரியையாக ரத்னா நாயா் பணியாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/WIYjh8T https://ift.tt/RE7nB8c
via IFTTT

Friday, 19 May 2023

சீன ராணுவத்தைக் கிண்டல் செய்த ஸ்டாண்டப் காமெடியன்; அதிரடி கைது... ரூ.16 கோடி அபராதம்!

சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள ஷாங்காய் சியாகுவோ என்ற நிறுவனம் கடந்த சனிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில், ஸ்டாண்டப் காமெடியரான லி ஹாயோஷி-யின் (Li Haoshi) நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது. அதில் லி ஹாயோஷி தன்னுடைய நாய்களின் நடத்தையை, ராணுவத்துடன் ஒப்பிட்டு நகைச்சுவையாகப் பேசினார். அவர் பேசியது, சீன ராணுவத்துடன் தொடர்புடைய, அதிபர் ஜி ஜின்பிங் சொன்ன முழக்கத்தின் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது.சீன ராணுவம் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் அரசாங்கம், காமெடியர் லி ஹாயோஷிக்கு எதிராக அறிக்கை வெளியிட்டது. இதற்கிடையே, "என்னுடைய நோக்கம் அரசை அவமானப்படுத்துவதல்ல, நகைச்சுவையாக மட்டுமே பேசினேன். என்னுடைய பேச்சுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், மன்னிப்பையும் கோருகிறேன்" என காமெடியரான லி ஹாயோஷி தெரிவித்திருந்தார். ஆனாலும், அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த  ஷாங்காய் சியாகுவோ  நிறுவனத்துக்கு 2 மில்லியன் (ரூ.16 கோடி) அபராதம்  விதிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, ஸ்டாண்டப் காமெடியன் லி ஹாயோஷி கைதுசெய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.சீன ராணுவம் சீனாவின் கலாசார அமைச்சகத்தின் பெய்ஜிங் பிரிவு, ``ராணுவத்துடன் தொடர்புடைய புகழ்பெற்ற முழக்கத்தை அவதூறாகப் பேசுவதற்கு எந்தவொரு நிறுவனமும் அல்லது தனிநபரும் சீன ராணுவத்தை ஒரு மேடைக்காகப் பயன்படுத்துவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்று  தெரிவித்திருக்கிறது.அமெரிக்கா, சீனா, ஐக்கிய அமீரகம்... இந்திய வர்த்தகத்தில் முதலிடத்தைப் பிடிக்கும் நாடு எது?
http://dlvr.it/SpHYB8

Thursday, 18 May 2023

ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது: அன்புமணி

ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்றும் நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்ச நீதிமன்றம்  தடை விதித்ததை தொடர்ந்து அப் போட்டிகளுக்கு அனுமதி அளித்து கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும் ; தமிழ்நாடு அரசின் இந்த கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்று நீதியரசர் கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு பல்வேறு வகைகளில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழ்நாட்டு இளைஞர்களின் வீர விளையாட்டு என்பதைக் கடந்து தமிழ்நாட்டு உள்ளூர் இன காளைகளின் நலனையும், மரபு வழியையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பண்பாட்டுடன் பின்னிப்பிணைந்தது என்ற தமிழ்நாட்டு அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளின் பண்பாட்டுச் சிறப்பு என்பது நூற்றாண்டுகளைக் கடந்தது என்ற நிலையில் அது குறித்து ஆய்வு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் சரியான அமைப்பு இல்லை என்றும் இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை எடுத்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்வதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளின் பண்பாட்டு சிறப்பு குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்ட நிலையில், விலங்குகள் நல அமைப்பு என்ற போர்வையில் செயல்படும் எந்த அமைப்பும் இனி இது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் வரலாற்று சிறப்புமிக்க இன்னொரு அம்சம் ஜல்லிக்கட்டு போட்டிகள் போன்ற பொதுப் பட்டியலில் உள்ள பொருட்கள் குறித்து சட்டம் இயற்றுவதற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை உள்ளிட்ட அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் அதிகாரம் உண்டு என்பதாகும். இதன் மூலம் மத்திய பட்டியலில் உள்ள பொருட்கள் தவிர்த்து மீதம் உள்ள அனைத்து பொருட்கள் குறித்தும் சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு எவ்வாறு அதிகாரம் உண்டோ அதேபோல் நீட் விலக்கு குறித்து சட்டம் இயற்றவும் தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் உண்டு. ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டின் பண்பாட்டுடன் தொடர்புடையது என்ற அடிப்படையில் தான் அதற்கான சட்டம் இயற்றப்பட்டது. அதேபோல் நுழைவுத் தேர்வுகளிலிருந்து தமிழ்நாட்டின் மருத்துவம் மற்றும் தொழில் படிப்பு கல்வி நிறுவனங்களுக்கு காலம்காலமாக விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. அதைப் பாதுகாக்கும் நோக்குடன் தான் நீட் விலக்கு சட்டம் இயற்றப்பட்டது என்பதால் அதற்கு குடியரசு தலைவர் வழியாக மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/2s4N0WQ https://ift.tt/zGeZkMs
via IFTTT

குழந்தைகளைக் கல்லூரிகளில் சேர்க்க நகைகளை விற்கும் பெற்றோர்!

  கோவை: குழந்தைகளைக் கல்லுரியில் சேர்ப்பதற்காக நாளொன்றுக்கு 10 முதல் 12 கிலோ பழைய தங்க நகைகள் பெற்றோர்களால் விற்பனை செய்யப்படுவதாகவும், ஒரே வாரத்தில் ரூ.5 முதல் 6 கோடி வரை பழைய நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.  நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் முதலீட்டில் முக்கியத்துமான தங்கம். மண்ணுல போட்டதும், பொன்னுல போட்டதும் என்றைக்கும் வீணாப்போகாது என்று சொல்வார்கள். அப்படி நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பெரும் சேமிப்பாக பார்க்கப்படுவது தங்கம். அவர்கள் தங்களின் அவசர பொருளாதார தேவைக்காக முதலில் கையில் இருக்கும் தங்கத்தையே அடகு வைப்பார்கள் அல்லது விற்று செலவு செய்வார்கள்.  பிள்ளைகளின் கல்விக்காக நகைகளை விற்கும் பெற்றோர்கள் இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நகைக் கடைகளுக்கு பழைய நகைகள் விற்பனை செய்வது  அதிகரித்திருக்கின்றன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் உயர் கல்விக்காக மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர்.  இந்த நிலையில் கல்லூரிகளில் நன்கொடை,  கல்விக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் தங்களிடம் உள்ள நகைகளை நகைக்கடைகளில் விற்று வருகின்றனர். அடகு வைத்தால் வட்டி உள்ளிட்ட நிதி நெருக்கடியில் தள்ளப்படுவோம் என்பதால், நகைகளை விற்று பணத்தை பெற்றுச்செல்கின்றனர்.  அந்த வகையில் கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கல்லூரிகளில் சேர்க்கை நடந்து வரும் நிலையில், நகைக் கடைகளில் பெற்றோர்கள் பழைய நகைகளை விற்பனை செய்வது அதிகரித்து வருக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 10 முதல் 12 கிலோ அளவிலான தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மதிப்பு ரூ.5 கோடி முதல் 6 கோடி வரை இருக்கும் என தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.  மே மாதங்களில் தங்களது பிள்ளைகளை கல்லூரிகளில் சேர்ப்பதற்காக பெற்றோர் தங்களிடம் இருக்கும் தங்க நகைகளை விற்பனை செய்து பணத்தை பெற்றுக்கொண்டு கல்லூரிகளில் சேர்த்து வருவது வழக்கமானதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த ஆண்டும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் தங்க நகைகளை விற்பனை செய்து பணத்தைப் பெற்று தங்கள் குழந்தைகளின் கல்லூரி கட்டணத்தை செலுத்தி வருவதாக கூறுகின்றனர். 

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/2s4N0WQ https://ift.tt/XSyxTRG
via IFTTT

40 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டநாதா் சுவாமி கோயில் மேற்கு கோபுர வாசலை திறந்து வைத்தார் தருமபுரம் ஆதீனம்!

40 ஆண்டுகளுக்குப் பிறகு சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் மேற்கு கோபுர வாசலை தருமபுரம் ஆதீனம் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் பயன்பாட்டுடிற்காக திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் செய்து நிறைவடைந்துள்ளது.  இந்நிலையில், சட்டை நாதர் சுவாமி கோயிலில் உள்ள நான்கு கோபுர வாசல் வழிகளில் மேற்கு கோபுர வாசல் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிய வைக்கப்பட்டு இருந்தது. மற்ற கோபுர வாசல்கள் வழியாக  மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை மேற்கு கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.  தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முன்னதாக பசு, யானை, ஒட்டகம், குதிரை ஆகியவைகளும் ஊர்வலமாக வந்தது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மேற்கு கோபுர வாசலை வந்தடைந்து சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டு மேற்கு கோபுர வாசல் திறக்கப்பட்டது.  திறக்கப்பட்ட உடன்  முதலாவதாக  பசு, குதிரை, ஒட்டகம், யானை ஆகியவை அதன் வழியே உள்ளே சென்றன. அதன் பின்னர் மேள, தாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம்,  பக்தர்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே சென்றனர் .  40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த மேற்கு கோபுர வாசல் தற்போது பக்தர்கள் வந்து செல்வதற்கு எதுவாக திறக்கப்பட்டுள்ளது. சீர்காழி பகுதி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த மாதம் கும்பாபிஷேக யாகசாலை பணிக்காக மேற்கு கோபுர வாசல் அருகே உள்ள நந்தவனத்தில் பள்ளம் வெட்டிய போது  சுவாமி ஐம்பொன் சிலைகள், தேவாரப் பதிகங்கள் தாங்கிய செப்பேடுகள் அதிகளவில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/2s4N0WQ https://ift.tt/384KloL
via IFTTT

ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புது தில்லி: ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடையில்லை என்று ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை (மே 18) தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்தது. வழக்குத் தொடுத்த மனுதாரர்கள் தரப்பில் முதலில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் தரப்பிலும், மத்திய அரசின் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், அரசியல் சாசன அமர்வு முன் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி இறுதி வாதம் நடைபெற்றது.  அப்போது, விலங்குகள் நல அமைப்பான பீட்டா உள்ளிட்ட பல்வேறு மனுதாரர்கள் தரப்பில் எதிர்வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, வாதங்கள் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு வியாழக்கிழமை (மே 18) ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்று தீர்ப்பு அளித்துள்ளது.  சென்னை மெரீனாவில் நடைபெற்ற போராட்டங்களை சுட்டிக்காட்டி நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தனர். நீதிபதிகள் தீர்ப்பில், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வலையில் உள்ளன.  ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாசாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்ற தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொள்கிறோம். கலாசாரம் என்றாலும் கூட துன்புறுத்தலை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு கலாசார அடையாளம் என மாநில சட்டப்பேரவை சட்டம் இயற்றும் போது நீதிமன்றத்தால் மறுக்க இயலாது.  ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தம் செல்லும். அதனை ஏற்றுக் கொள்கிறோம். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எங்களுக்கு அனுப்பப்பட்ட 5 கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாரக தமிழ்நாடு அரசின் சட்டம் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை.  எனவே, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்று  நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. 

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/2s4N0WQ https://ift.tt/9Ez7VAO
via IFTTT

Wednesday, 17 May 2023

மும்பைத் தாக்குதல்: சிறையிலிருக்கும் குற்றவாளியை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதியன்று மும்பையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு நிகழ்த்திய தாக்குதலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. தானியங்கித் துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் மும்பையில் இறங்கிய 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டல், டிரிடெண்ட் ஹோட்டல், சி.எஸ்.டி ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் கண்ணில் படும் அப்பாவி மக்களையெல்லாம் சுட்டுத்தள்ளினர்.மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் சற்றும் எதிர்பாராத இந்தத் தீவிரவாதத் தாக்குதலை எதிர்த்துப் போராடிய தேசிய பாதுகாப்புப் படை, மும்பை போலீஸார் மூன்று நாள்களில் தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதியும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இந்த நிலையில், மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டு அமெரிக்கச் சிறையிலிருக்கும் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக்கொண்ட கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. முன்னதாக இந்தத் தீவிரவாதத் தாக்குதலில் அவருக்குத் தொடர்பிருப்பதாக இந்தியா முன்வைத்த கோரிக்கையின் பேரில் அமெரிக்காவில் அவர் கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில், தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு கடந்த 16-ம் தேதி கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, ``ராணாவின் சிறுவயது நண்பர் பாகிஸ்தானிய-அமெரிக்கரான டேவிட் கோல்மன் ஹெட்லி லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புகொண்டிருந்ததையும், ஹெட்லிக்கு உதவுவதன் மூலமும், அவரது நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பதன் மூலமும், அவர் பயங்கரவாத அமைப்பு மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு ஆதரவளிப்பதை ராணா அறிந்திருந்தார்.தஹாவூர் ராணா ஹெட்லியின் சந்திப்புகள், அதில் பேசப்பட்டது என்ன, தாக்குதல்களின் திட்டமிடல் ஆகியவை ராணாவுக்குத் தெரியும். சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக ராணா இருந்திருக்கிறார். எனவே, பயங்கரவாதச் செயலில் முக்கியக் குற்றத்தை அவர் செய்ததற்கான சாத்தியமான காரணங்கள் இருக்கிறது" என்று அரசு வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆனால், ராணாவின் வழக்கறிஞர் இதற்கு மறுப்பு தெரிவித்தார். இறுதியில் நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன் (Jacqueline Chooljian), ``மேற்கூறிய வாதங்களின் அடிப்படையில், ராணா மீது முன்வைக்கப்பட்ட குற்றங்களுக்காக அவர் நாடு கடத்தப்படுவார் என்று நீதிமன்றம் முடிவுசெய்கிறது" என்று உத்தரவிட்டார்.'26/11' உலகை உலுக்கிய மும்பை தாக்குதல்: 13 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம்!
http://dlvr.it/SpCpHV

மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்: சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம்

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்று இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிரண் ரிஜிஜுவுக்கு பதிலாக அர்ஜூன் ராம் மேக்வால் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின்படி,  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சரவையில்  அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய சட்ட அமைச்சராக இருந்த  கிரண் ரிஜிஜு மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராகவும், கலாசாரத் துறை அமைச்சராக இருந்த அர்ஜுன் ராம் மேக்வால் சட்ட  அமைச்சராகவும் நியமிக்கப்ட்டுள்ளார். புவி அறிவியல் அமைச்சகத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/2s4N0WQ https://ift.tt/IkU9biJ
via IFTTT

பேச்சுப் போட்டியில் வெற்றி; அமெரிக்கா செல்லும் அரசுப் பள்ளி மாணவி சாதனா!

திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது, கல்யாண மகாதேவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சாதனா, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்பட்ட இலக்கிய மன்ற விழாவில் பேச்சுப் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்று, தற்போது அமெரிக்க செல்வதற்குத் தேர்வாகியுள்ளார். பூந்தாலங்குடி என்னும் குக்கிராமத்திலிருந்து அமெரிக்கா வரை செல்ல இருக்கும் அந்த மாணவிக்கு, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு அரசியல் தலைவர்களும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.அம்மாவுடன் மாணவி சாதனா. சர்வதேச வாள் சண்டை போட்டிக்குத் தேர்வான அரசுப்பள்ளி மாணவி - குவியும் பாராட்டு! ``ஊரில் கருவகாட்டையும், களத்து மேட்டையும் மட்டுமே பார்த்து வளர்ந்த எனக்கு, அமெரிக்கா செல்கிற வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது நான் படிக்கும் அரசுப் பள்ளிதான்" என்று ஆரம்பித்த சாதனா, இன்னும் சில தினங்களில் அமெரிக்க செல்லவிருக்கும் பூரிப்பில் இருந்தார். ``நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே பூந்தாலங்குடி கிராமம். எங்க அப்பா, அம்மா விவசாயம் பாக்குறாங்க. எங்க ஊருக்குப் பக்கத்துல இருக்குற கல்யாண மகாதேவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில எட்டாம் வகுப்புப் படிக்கிறேன். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால நடத்தப்பட்ட இலக்கிய மன்ற விழாவுல ஜெயிச்சி, மாநில அளவுல பேச்சுப் போட்டில சிறப்பிடம் பெற்று, இப்போ அமெரிக்கா போற வாய்ப்பைப் பெற்றிருக்கேன்.பாராட்டு சான்றிதழ், கேடங்கள் கடந்த மார்ச் மாசம் நடந்த இலக்கிய மன்ற விழாவுல நான் பேச்சுப் போட்டியில கலந்துக்கிட்டு திருவாரூர் மாவட்ட அளவுல முதலிடம் வந்தேன். அதனால என்னை சென்னைக்கு அழைச்சிட்டு போனாங்க. அதுதான் என் வாழ்க்கையிலேயே முதல் முறையா நான் சென்னைக்குப் போனது. அங்க தமிழ்நாட்டின் பல மாவட்டத்திலேர்ந்து நிறைய மாணவர்கள், என்னை மாதிரியே தேர்வாகி வந்திருந்தாங்க, அவங்க கூட பேசிப் பழகுறதுக்கு நிறைய வாய்ப்புக் கிடைச்சிது. சென்னையில நிறைய இடத்துக்கு கல்வி சுற்றுலா போனோம். சட்டசபைக்குள்ள அழைச்சிட்டுப் போனாங்க. அங்க சட்டமன்ற உறுப்பினர்களையும், முதல்வரையும் நேர்ல பார்த்தது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. கிட்டத்தட்ட ஒரு வாரமா எங்களுக்கே தெரியாம எங்களை கவனிச்சுட்டு வந்த, அங்க இருந்த ஆசிரியர்கள், எங்களுடைய திறமையையும் பண்பையும் வச்சு எங்களுக்கு மதிப்பெண் போட்டாங்க. அவங்க கொடுத்த மதிப்பெண் அடிப்படையில, நான் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றிருக்கேன். அதனாலதான் இப்போ எனக்கு அமெரிக்கா போறதுக்கு வாய்ப்புக் கிடைச்சிருக்கு. எங்க கிராமத்துக்கு பஸ் வர்றதே அப்பப்போதான். நான் விமானத்துல அமெரிக்காவுக்குப் போகப் போறேன்னு நினைக்கும்போதே பரவசமா இருக்கு. கல்யாண மகாதேவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள்.`நான் இதுவரை கரூரைக்கூட தாண்டினதில்ல; ஆனா, இப்போ இஸ்ரோ போறேன்!' - நெகிழும் அரசுப் பள்ளி மாணவி எங்க அம்மா வயல் வேலை பார்த்துதான் என்னைப் படிக்கவைக்கிறாங்க. எங்க சொந்தக்காரங்க சிலர், கவர்மென்ட்டு ஸ்கூல்லயா உங்க புள்ள படிக்குதுனு எங்களை இறக்கித்தான் பார்ப்பாங்க. ஆனா, அரசுப் பள்ளியில படிச்சதனால தான் இப்போ நான் அமெரிக்கா போகப்போறேன். திருவாரூர் மாவட்டத்துல பல விழாக்கள்ல ஆசிரியர்கள் என்னை மேடை ஏற்றியும் பொன்னாடை போர்த்தியும் பெருமையா சொல்றாங்க. இந்த அரிய வாய்ப்ப ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து 12-ம் வகுப்பு வரைக்கும் அரசுப் பள்ளியிலேயே படிச்சி, அநீதிக்கு எதிரா போராடுற நேர்மையான வழக்கறிஞரா ஆகணும் என்பதுதான் என் கனவு’’ என்றார் உற்சாகமாக. கல்யாண மகாதேவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளித் தலைமை ஆசிரியர் வனிதாவிடம் பேசினோம். ``எங்க அரசுப் பள்ளியில 150க்கும் மேல மாணவர்கள் படிக்கிறாங்க. 2011-ம் வருசம் இந்தப் பள்ளிக்கூடத்துக்கு பணி உயர்வு பெற்று தலைமை ஆசிரியரா வந்தேன். மாணவர்களோட திறமைகள வெளி உலகத்துக்குக் கொண்டு வரணும்னு நிறைய முயற்சிகள நானும் இங்க இருக்குற ஆசிரியர்களும் முன்னெடுத்தோம். சாதனாவுக்கு இப்போ கிடைச்சிருக்கிற வாய்ப்பு, எங்க பள்ளிக்கூடத்துக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். சாதனா எப்பவும் நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கணும்னு ஆர்வத்தோட இருப்பாங்க. இப்ப கூட எங்க பள்ளியோட பாலர் சபை தேர்தல்ல ஜெயிச்சு பள்ளியோட செயலாளரா இருக்காங்க. அந்த நிர்வாகப் பொறுப்பை நல்லா செஞ்சுகிட்டு வர்றாங்க. தலைமை ஆசிரியருடன்புதுச்சேரி: `ஆட்சியருடன் ஒருநாள்’ - அரசின் அசத்தலான முயற்சிக்கு தேர்வான அரசுப் பள்ளி மாணவி! எங்க பள்ளி சார்பா `பெண்மையைப் போற்றுவோம்' என்கிற தலைப்புல பேசி, மாவட்ட அளவுல முதலிடம் வாங்குனாங்க. தொடர்ந்து சென்னைக்கு போய், இப்போ அமெரிக்கா போவதற்கான வாய்ப்பையும் பெற்று இருக்காங்க. அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களோட அறிவையும் திறமையையும் வளர்த்துக்கிட்டு சமூகத்துல மிகப்பெரிய உயரத்துக்கு போகணும்னுங்கிறதே எங்க ஆசை" என்றார் வாழ்த்தி! சாதனை பல படைக்க வாழ்த்துகள் சாதனா!
http://dlvr.it/Sp9GbP

Monday, 15 May 2023

கர்நாடக முதல்வர் சித்தராமையா?

முதல்வா் பதவிக்காக போட்டிபோடும் சித்தராமையா, டி.கே.சிவகுமாா் ஆகிய இருவரின் பலம், பலவீனம் என்ன என்பது பற்றி அறிய பலரும் ஆா்வமாக இருக்கிறாா்கள். கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் 135 இடங்களைப் பிடித்து அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு காங்கிரஸுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், அந்த அரசை தலைமையேற்று நடத்தும் முதல்வா் யாா் என்ற கேள்வி காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளதால், அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. முதல்வா் பதவியை குறிவைத்து சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் காய்களை நகா்த்தி வருகிறாா்கள். காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி மட்டுமல்லாது, கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏ-க்கள் சித்தராமையா முதல்வராவதை விரும்புகிறாா்கள். ஆனால், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே, அவா் சாா்ந்திருக்கும் ஒக்கலிகா் சமுதாயம், அச்சமுதாயத்தின் மடங்களின் பீடாதிபதிகள் டி.கே.சிவகுமாா் முதல்வராவதையே விரும்புகிறாா்கள். இந்த குழப்பத்திற்கு ஓரிரு நாள்களில் கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்ற எதிா்பாா்ப்பு காங்கிரஸ் தலைவா்கள், தொண்டா்களிடையே காணப்படுகிறது. இந்நிலையில், முதல்வா் பதவிக்கு ஆசைப்படும் சித்தராமையா, டி.கே.சிவகுமாரின் பலம், பலவீனங்கள் என்ன என்பது குறித்து கட்சி அளவில் விவாதங்கள் நடந்து வருகின்றன. இருவரின் பலம், பலவீனம், வாய்ப்பு, அச்சுறுத்தல் என்ன? சித்தராமையா: பலம்: அண்மைகால அரசியலில் கா்நாடக முழுவதும் அறியப்பட்ட மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவா்களில் முக்கியமானவா். காங்கிரஸ் எம்எல்ஏ-க்களிடையே அதீதமான ஆதரவு பெற்றவா். 2013 முதல் 2018-ஆம் ஆண்டு 5 ஆண்டுகாலம் முழுமையாக முதல்வராக இருந்து ஆட்சி நடத்தியவா். ஆட்சிக்காலத்தில் மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தியவா். நிதி குறித்து ஆழ்ந்த அறிவுபடைத்தவா். நித்துறையின் பொறுப்பு வகித்து 13 முறை நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்தவா். பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டவா், பழங்குடியினா், மதசிறுபான்மையின சமுதாயத்தவரிடம் செல்வாக்கு பெற்றவா். பாஜக, மஜத ஆகிய கட்சிகளை தவிர, பிரதமா் மோடி மற்றும் அவரது அரசை அரசியல் ரீதியாக எதிா்கொள்ளும் ஆற்றல் படைத்தவா். ராகுல் காந்திக்கு நெருக்கமானவா் என்பது மட்டுமல்ல, அவரது ஆதரவை பெற்றவா். சட்டப் பேரவைக்கு உள்ளே, வெளியே வாதங்களை முன்வைக்கும் சிறந்த பேச்சாளா். பலவீனம்: அமைப்புரீதியாக கட்சியினரோடு அதிகம் தொடா்பில்லாதவா். 2018-ஆம் ஆண்டு தனது தலைமையில் நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு வெற்றியைத் தேடி தரமுடியவில்லை. ஆரம்பகாலத்தில் இருந்து காங்கிரஸ்காரராக இருந்ததில்லை. காங்கிரஸ் கட்சியை எதிா்த்து அரசியல் நடத்திவிட்டு, கட்சியில் இணைந்ததால் பழைய கட்சிகாரா்களிடையே போதுமான ஆதரவு இல்லை. 75 வயதாகிவிட்டதால், துடிப்பாக செயல்பட முடியாத நிலை. வாய்ப்புகள்: அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கவிருப்பதால், துணிந்து முடிவெடுக்கும் வாய்ப்பு. அரசு நிா்வாகத்தில் எல்லா தரப்பினரையும் எளிதில் கையாளும் ஆளுமைத்திறன். தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள 5 வாக்குறுதிகளை செயல்படுத்தும் ஆற்றல். இவரது ஆட்சித்திறனால் 2024-ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு வெற்றியைத் தேடி தரக்கூடியவா். இத்தோ்தலுடன் தோ்தல் அரசியலில் இருந்து விலக இருப்பதால், முதல்வராகும் கடைசி வாய்ப்பு. அச்சுறுத்தல்: முதல்வராகும் வாய்ப்பை இழந்த மல்லிகாா்ஜுன காா்கே, ஜி.பரமேஸ்வரா ஆகியோா் ஒன்றிருந்து சித்தராமையாவுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு. கா்நாடகத்தில் பி.கே.ஹரிபிரசாத், கே.எச்.முனியப்பா போன்ற முன்னணித் தலைவா்கள் சித்தராமையாவுக்கு எதிராக இருக்கிறாா்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை முதல்வாக்கும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. டி.கே.சிவகுமாரின் கட்சி அமைப்பை கட்டமைக்கும் ஆற்றல், பிரச்னைகளை தீா்க்கும் ஆற்றல்வாய்ந்தவா் என்ற நற்பெயா் மட்டுமல்லாது, சோனியா காந்தி, பிரியங்கா காந்திக்கு நெருக்கமானவா் என்பது சித்தராமையாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். டி.கே.சிவகுமாா்: பலம்: கட்சியை அமைப்புரீதியாக அமைக்கும் ஆற்றல்வாய்ந்தவா். அதன் பலனாக சட்டப் பேரவைத் தோ்த்லில் கட்சியை ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியை ஈட்டித்தந்தவா். இக்கட்டான காலகட்டங்களிலும் கட்சிக்கு என்றைக்கும் விசுவாசமாக செயல்பட்டு வந்தவா். பாஜகவுக்கு இழுக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு இரையாகாதவா். கட்சியை எதிா்பாா்க்காமல் தாராளமாக செலவழிக்கும் அளவுக்கு பணபலம் கொண்டவா். பெரும்பான்மையாக வாழும் ஒக்கலிகா் சமுதாயத்தின் செல்வாக்கான தலைவா். ஆளுமை நிறைந்த ஒக்கலிகா்கள் மடங்கள் மட்டுமல்லாது, வேறுசில சமுதாய மடங்களின் பீடாதிபதிகள், தலைவா்களின் ஆதரவு பெற்றவா். 60 வயதே ஆகியிருப்பதால், இன்னும் 15 ஆண்டுகள் அரசியலில் தாக்குப்பிடிக்கக் கூடியவா். சோனியா காந்தியின் குடும்பத்திற்கு நெருக்கமானவா். 33 ஆண்டுகால அரசியல் அனுபவமும், அமைச்சா் போன்ற நிா்வாக பதவிகளை திறம்பட கையாண்ட அனுபவமும் கொண்டவா். பலவீனங்கள்: வருமானவரி, அமலாக்கத் துறை, சிபிஐ தொடுத்திருக்கும் வழக்குகளை எதிா்கொண்டிருக்கிறாா். பணப் பதுக்கல் வழக்கில் கைதாகி திஹாா் சிறையில் இருந்தவா். சித்தராமையாவை போல அனைத்து தரப்பு மக்களிடையே செல்வாக்கு குறைவானவா். சித்தராமையாவை போல நிதித்துறையை கையாளும் திறன் குறைவானவா். பழைய மைசூரு பகுதியில் மட்டுமே செல்வாக்கு மிகுந்தவா். அதிக மக்கள் எண்ணிக்கை கொண்ட லிங்காயத்துகள், தாழ்த்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா் போன்ற சமுதாய மக்களிடையே செல்வாக்கு இல்லாதவா். வாய்ப்புகள்: பழைய மைசூரு பகுதியில் டி.கே.சிவகுமாரின் செல்வாக்கு பெருகும். அதன் மூலம் காங்கிரஸின் செல்வாக்கும் உயரும். எஸ்.எம்.கிருஷ்ணா, வீரேந்திர பாட்டீலை போல, கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பதால் முதல்வா் பதவி வாய்க்கலாம். பழைய காங்கிரஸ்காரா்களின் ஆதரவு கிடைக்கும். மக்களவைத் தோ்தல் உள்ளிட்ட அடுத்த தோ்தல்களில் ஒக்கலிகா்களின் ஆதரவு காங்கிரஸுக்கு கிடைக்கும். புதிய தலைமுறை தலைவா்களை உருவாக்க வாய்ப்பு கிடைக்கலாம். அச்சுறுத்தல்: சித்தராமையாவின் அரசியல் அனுபவம், மக்கள் செல்வாக்கு ஆட்சி நடத்துவதில் தடைகற்களாக மாறலாம். பெரும்பாலான எம்எல்ஏ-க்களின் ஆதரவு சித்தராமையாவுக்கு கிடைக்கலாம். வருமானவரி, அமலாக்கத் துறை, சிபிஐ போன்றவற்றின் வழக்குகள் எந்நேரமும் தீவிரமடையலாம். அந்த வழக்குகளில் தண்டனை கிடைத்தால், அது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக மாறலாம். தாழ்த்தப்பட்டோா் அல்லது லிங்காயத்து சமுதாய முதல்வா் தேவை கூக்குரல் எதிராக மாறலாம். ராகுல் காந்தியின் ஆதரவு சித்தராமையாவுக்கு இருப்பதால், டி.கே.சிவகுமாருக்கு பாதகமாக அமையலாம்.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/vI8yL4Z https://ift.tt/u5EOCQb
via IFTTT

செயற்கை நுண்ணறிவால் வேலையிழப்பு ஏற்படாது:ஐஐடி இயக்குநா் காமகோடி உறுதி

செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று சென்னை ஐ.ஐ.டி., இயக்குநா் வி.காமகோடி உறுதி அளித்துள்ளாா். ஐ.ஐ.டி. வளாகத்தில் செயற்கை நுண்ணறிவுக்கான மையம் ஏற்கெனவே உள்ளது. இதன் முதல் பயிலரங்கம் இந்தியாவுக்கான பொறுப்பான செயற்கை நுண்ணறிவு எனும் தலைப்பில் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. பயிலரங்கில் ஐ.ஐ.டி., இயக்குநா் காமகோடி பேசியதாவது: தற்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு அதில் உள்ள குறைபாடுகளை களைவதும் மிக அவசியம். மனிதா்களால் ஆறாவது அறிவுடன் செய்யப்படும் சிந்தித்து எடுக்கப்படும் முடிவுகளை கணிப்பொறி மூலம் செயற்கை முறையில் செயலாக்கம் செய்வது செயற்கை நுண்ணறிவின் பிரதான செயல்பாடாக உள்ளதால், இதன் வளா்ச்சி வருங்காலத்தில் மனிதா்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் என்ற அச்ச உணா்வு மேலோங்கி உள்ளது. அது தேவையற்ற அச்சமாகும் என்றாா் அவா். இப்பயிலரங்கத்தில் காணொலியின் மூலம் சிறப்புரையாற்றிய எண்ம இந்திய கழக நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரியான அபிஷேக் சிங் ‘அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கிறது. செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டிற்குச் சமமாக அதிலுள்ள சிக்கல்கள் மற்றும் சவால்களையும் ஆராய வேண்டும். ஏனென்றால் கல்வி, மருத்துவம், விவசாயம் போன்ற பல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்றாா் அவா். இப்பயிலரங்கத்தில் நாஸ்காம் உள்பட பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/vI8yL4Z https://ift.tt/AlCbOPQ
via IFTTT

Sunday, 14 May 2023

இம்ரான் கைதால் பாகிஸ்தானில் கலவரம் | Twitter-க்கு புது CEO - உலகச் செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அவரின் ஆதரவாளர்களால் கலவரம் ஏற்பட்டது. தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கும் இம்ரான் கான், நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ட்விட்டரின் புதிய சி.இ.ஓ-ஆக நியமிக்கப்பட்டிருக்கும் லிண்டா யக்கரினோ, பதவியேற்ற பிறகு முதல் ட்வீட்டாக, ``ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பார்வையால், நான் ஈர்க்கப்பட்டிருந்தேன். அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார். வங்கதேசத்தில் `மோச்சா சூறாவளி' தீவிரமடைந்துவருகிறது. அதன் காரணமாக, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். உக்ரைனுக்கு உதவும் வகையில் மூன்று பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக ஜெர்மனி அறிவித்திருக்கிறது. இரு நாடுகளுக்கிடையேயான உறவைப் பலப்படுத்தவும், நம்பிக்கையை அதிகரிக்கவும், தாலிபன் தலைவர்களை கத்தார் பிரதமர் சந்தித்திருக்கிறார். பல ஆண்டுக்கால கோரிக்கையை ஏற்று போர்ச்சுக்கலில் 18 வயதுக்கு மேற்பட்ட, தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கருணைக் கொலை செய்வதற்கு அந்த நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. உக்ரைன் முன்னிலையில் நடத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய இசைப் போட்டியான `யூரோ விஷன்' டைட்டிலை ஸ்வீடன் வென்றது. ஸ்வீடனைச் சேர்ந்த லொரீன் 25 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு வென்றிருக்கிறார். நேபாளத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மலையேறும் வீரர்களில் 11 பேர், இமயமலை உச்சியை அடைந்திருக்கின்றனர். தெற்காசியத் தடகள போட்டியில் பங்கேற்ற கம்போடியாவைச் சேர்ந்த பொவ் சம்நங், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். போட்டியில் இறுதியாக வந்தபோதிலும், அவரின் துணிச்சலான செயலால் அந்த நாட்டின் பிரதமர் உட்பட அனைவரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கிடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
http://dlvr.it/Sp1CQQ

Saturday, 13 May 2023

கலிபோர்னியாவில் `சாதி' பாகுபாட்டுக்குத் தடை | கென்யாவில் கொல்லப்பட்ட ஆண் சிங்கம் - உலகச் செய்திகள்

துருக்கியில் அதிபர் தேர்தலில் போட்டியிடவிருந்த முஹர்ரம் இன்ஸ் (Muharrem Ince), தற்போது தேர்தலிலிருந்து பின் வாங்கியிருக்கிறார். பிறகட்சியைச் சேர்ந்தவர்கள், அவர் ஒரு பெண்ணுடன் சந்தித்ததைத் தவறாகச் சித்தரித்த நிலையில், அவர் இந்த முடிவை அறிவித்தாக கூறப்படுகிறது. ஆசியன் (ASEAN) நாடுகளின் சந்திப்பு ப்ளோர்ஸ் தீவில் நிறைவடைந்த நிலையில், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ (Joko Widodo), மியான்மாரில் அமைதியை நிலைநாட்டுவதில் எந்த முன்னேற்றமும் கொண்டுவரப்படவில்லை என்று கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் வர்த்தகதுறை அமைச்சர் சீனாவுக்குப் பயணம் செய்தார். சீனா - ஆஸ்திரேலியாவின் உறவுகளை சரிசெய்வதற்கான கூட்டு முயற்சியின், ஒரு பகுதியாக இந்தப் பயணம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். பிரான்ஸ், ஜெர்மனி, ஜார்டன், எகிப்து ஆகிய நாடுகள் இந்த வன்முறையை உடனடியாக நிறுத்த வலியுறுத்தினர். லிண்டா யக்காரினோ ட்விட்டரின் அடுத்த சிஇஓ -வாக செயல்படுவார் என்று எலான் மஸ்க் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். லின்டா யக்காரினோ பிஸினஸ் செயல்பாடுகளைப் பார்த்துக் கொள்வார் என்றும், தொழில்நுட்ப ரீதியான செயல்பாடுகளை எலான் மஸ்க் கண்காணித்துக் கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. போர்சுகல் நாட்டைச் சேர்ந்த உலகின் வயதான நாய் போபி , அதன் 31-ம் வயதைக் கொண்டாடியது. உலகின் வயதான நாய் என்ற கின்னஸ் சாதனையையும் இந்த நாய் படைத்திருக்கிறது. பாப் பாடகரான Dolly Parton புகழ்பெற்ற ஏசிஎம் விருது வழங்கும் விழாவில், அவரின் நண்பர்களான Loretta Lynn, Naomi Judd ஆகிய இருவரையும் நினைவு கூர்ந்து மேடையில் மரியாதை செய்தார். இருவரும் 2022-யில் முதிர்ச்சியின் காரணமாகக் காலமானார்கள். 'தி வாய்ஸ்' நிகழ்ச்சியின் 23 -வது சீசனின் இறுதி எபிசோடில் புகழ்பெற்ற பாடகர்கள் Adam Levine மற்றும் இசைக்குழு Maroon 5-யின் கலைநிகழ்ச்சி இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதை தடை செய்வதற்கான புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. Loonkiito என்ற 19 வயது ஆண் காட்டுச் சிங்கம் கென்யாவில் கொல்லப்பட்டது. இது ஆப்ரிக்காவின் வயதான ஆண் சிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/SnzsB7

Friday, 12 May 2023

`எல்லாம் வியூஸுக்காகத்தான்' - நடுவானில் குதித்துவிட்டு, விமானத்தை நொறுங்கச் செய்த யூடியூபர்!

அதிகமான வீடியோ வியூஸுக்காக, வேண்டுமென்றே தனது விமானத்தைத் தரையில் விழுந்து நொறுங்கவைத்த யூடியூபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்தவர் ட்ரெவர் ஜேக்கப். பிரபல யூடியூபரான இவர், கடந்த டிசம்பர் மாதம் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார்.விபத்துக்குள்ளாக்கப்பட்ட விமானம் அதில் ஒற்றை இன்ஜின் விமானத்தில் பறந்துகொண்டிருந்த  ட்ரெவர் ஜேக்கப், திடீரென விமானத்தின் கதவைத் திறந்து, விமானத்தை மட்டும் தனியே பறக்கவைத்துவிட்டு விமானத்திலிருந்து பாராசூட் உதவியுடன் குதிக்கிறார். விமானம் தனியே சிறிது தூரம் பறக்கிறது. இறுதியில் அந்த விமானம் ஒரு பகுதியில் விழுந்து நொறுங்கிவிடுகிறது. விமானத்தின் பல பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள், விமானம் விழுந்து நொறுங்கும் காட்சியைப் பதிவுசெய்திருக்கின்றன. விமானம் விழுந்த பிறகு தரையிறங்கும் ஜேக்கப், விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தை அடைந்து வீடியோ எடுத்துவிட்டு அங்கிருந்து நடந்தே பயணிக்கிறார். இந்த வீடியோவைத் தற்போதுவரை, 3 மில்லியனுக்கும் அதிகமானோர் யூடியூபில் பார்த்திருக்கின்றனர். தெற்கு கலிஃபோர்னியாவிலுள்ள லோம்போக் விமான நிலையத்திலிருந்து சியரா நெவாடா மலைகளிலுள்ள மம்மத் ஏரிப்பகுதியில் இந்த விமான விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ ஆரம்பத்தில் விமான ஆர்வலர்களிடம் `இது உண்மையான விபத்தா அல்லது வீடியோ சித்திரிக்கப்பட்டிருக்கிறதா?' என்ற கேள்வியை எழுப்பியது. ஆனால், ஜேக்கப் அது உண்மையான வீடியோதான் எனவும், அதிக பார்வையாளர்களைக் கவர அப்படிச் செய்ததாகவும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த வீடியோ பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன்  (FAA) ஜேக்கப்பின் விமானி சான்றிதழை ரத்துசெய்திருக்கிறது. மேலும், ஜேக்கப்பின் இந்தக் குற்றத்துக்காக அவருக்கு 20 ஆண்டுகள் வரையிலான சட்டபூர்வ சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.ராஜஸ்தான்: பயிற்சியின்போது திடீரென வீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய போர் விமானம்; 3 பேர் பலி!
http://dlvr.it/Snxb3S

Thursday, 11 May 2023

கணவரை விவாகரத்து செய்யும் பின்லாந்து பிரதமர் | இரானில் ஏழு பேருக்கு மரண தண்டனை - உலகச் செய்திகள்

ரஷ்யாவின் காலினின்கிராட் பகுதியை போலாந்து இனி அதிகாரபூர்வமாக கோனிக்ஸ்பெர்க் (Konigsberg) என்று அழைக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இது ரஷ்ய மயமாக்குதலுக்கு (Russification) எதிரான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஹாங் காங் அதன் தேசியப் பாதுகாப்பு குறித்த வழக்குகளில், வெளிநாட்டு வழக்கறிஞர்கள் வாதாடவும், பங்கெடுத்துக்கொள்ளவும் தடை விதித்து, அதன் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரான சர்ஜி லாவ்ரோவ், நேற்று துருக்கி, சிரியா, இரான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சிரியா, துருக்கி நாடுகளின் மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இரான் நேற்று மேலும் ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்தது. மது, பாலியல் குற்றங்களுக்காக அந்த ஏழு பேர் தெஹ்ரானில் தூக்கிலிடப்பட்டதாக நார்வேயை மையமாகக்கொண்ட மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்தது. முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கில் எட்டு நாள் ரிமாண்டில் வைக்கப்பட்டிருக்கிறார். அங்கு கலவரம் வெடித்திருப்பதால், தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வீடு தாக்கப்பட்டிருக்கிறது. Jaish -e-Mohammad அமைப்பின் மூத்த தீவிரவாதியான அப்துல் ரவுஃப் அசாரை கறுப்புப் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று ஐ.நா-வில் இந்தியா கோரிக்கை விடுத்தது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. அப்துல் ரவுஃப் என்பவர் 1999-ம் ஆண்டு நிகழ்ந்த இந்தியன் ஏர்லைன்ஸ் கடத்தல் வழக்கில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மெக்சிகோவின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான அன்டோனியோ கர்பஜல் (Antonio Carbajal) தனது 93-ம் வயதில் காலமானார். ஐந்து முறை பிஃபா உலகக் கோப்பை போட்டியில் கலந்துகொண்ட முதல் நபர் இவரே. Writers Guild of America (WGA) அமைப்பிலுள்ள ஹாலிவுட் எழுத்தாளர்கள் ஊதிய உயர்வைக் கோரியும், நிலையான வேலையைக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். புகழ்பெற்ற பிளாகரான (Famous blogger) Heather Armstrong தன்னுடைய 47-வது வயதில் காலமானார். இவர் மக்களிடையே Dooce என்ற பெயரில் பரிச்சயமாக அழைக்கப்பட்டார். பின்லாந்து நாட்டின் பிரதமர் Sanna Marin தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யப்போவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். "நாங்கள் நண்பர்களாகத் தொடர்வோம்" என்று பதிவிட்டிருக்கிறார்.
http://dlvr.it/SnthrS

``என் குழந்தைகள்மீது சத்தியமாக...!'' - பாலியல் புகார் குறித்து மனம் திறந்த டொனால்டு ட்ரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் 1990-களில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் டிரஸ்ஸிங் அறையில் அமெரிக்க எழுத்தாளர் ஈ ஜீன் கரோல் என்பவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், நீதிமன்றம் டொனால்டு ட்ரம்ப் மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண் எழுத்தாளர் ஈ ஜீன் கரோலுக்கு ரூ.41 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்தது.இ.ஜீன் கரோல் - டொனால்டு ட்ரம்ப் இந்தத் தீர்ப்பை வரவேற்ற எழுத்தாளர் ஈ ஜீன் கரோல் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "இன்று, உலகம் இறுதியாக உண்மையை அறிந்திருக்கிறது. இந்த வெற்றி எனக்கு மட்டுமல்ல, அவரால் பாதிக்கப்பட்டு, நம்பப்படாமல் அவதிப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து டொனால்டு ட்ரம்ப்பின் செய்தித் தொடர்பாளர், "ட்ரம்ப் மீதான இந்தத் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்வோம். அதுவரை நஷ்டஈடு வழங்க மாட்டோம்" எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், டொனால்டு ட்ரம்ப் தனியார் செய்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்திருக்கிறார். அதில்,"என்மீது குற்றம்சாட்டிய பெண், யாரென்றே எனக்குத் தெரியாது. நான் அவரைச் சந்தித்ததே இல்லை. என் குழந்தைகள்மீது சத்தியம் செய்கிறேன்.டொனால்ட் ட்ரம்ப் நான் ஒருபோதும் அந்தப் பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்யவில்லை. என்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஒரு போலிக் கதை. உருவாக்கப்பட்ட கதை. என் வழக்கை விசாரித்த நீதிபதி எங்கள் தரப்பு கருத்தைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் அனுமதித்தார்" எனத் தெரிவித்திருக்கிறார்.களத்தில் டொனால்ட் ட்ரம்ப்... `2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார்’ என அறிவிப்பு!
http://dlvr.it/SntBsv

Wednesday, 10 May 2023

கணவர் இறந்தது பற்றி புத்தகம்; 2 மாதங்களில் கணவர் கொலை வழக்கில் கைதான அமெரிக்க பெண் - திடுக் சம்பவம்

மேற்கு அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தை சேர்ந்தவர்கள் கூரி ரிச்சின்ஸ் (33) மற்றும் அவரின் கணவர் எரிக் ரிச்சின்ஸ் (39). கூரி ரிச்சின்ஸின் கணவர், கடந்த வருடம் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மூன்று ஆண் குழந்தைகளுக்கு தாயான கூரி ரிச்சின்ஸ், ‘குட் திங்ஸ் யூட்டா’ என்ற தலைப்பில் தந்தை இல்லாத துக்கத்தை கையாள்வது தொடர்பாக குழந்தைகளுக்கான ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அந்தப் புத்தகத்துக்கான விற்பனை மற்றும் புரமோஷன்களில் கலந்துகொண்ட ரிச்சின்ஸ் தன் வாழ்க்கை பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.கூரி ரிச்சின்ஸ் - எரிக் ரிச்சின்ஸ் இந்நிலையில், தற்போது தன் கணவர் உயிரிழந்த வழக்கில் கூரி ரிச்சின்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். `2022-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி கமாஸில் உள்ள வீட்டில் எரிக் மற்றும் கூரி ஆகிய இருவரும் வீடு விற்றதை கொண்டாடும் வகையில் தங்கள் வீட்டிலேயே இரவு விருந்து தயார் செய்து மகிழ்ச்சியுடன் இருந்துள்ளனர். இந்தக் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் மனைவி கூரி, கணவர் எரிக்கிற்கு கலவையான ஓட்கா பானத்தை கொடுத்துள்ளார். பின்னர் தன் குழந்தை அழுததால் அவரை சமாதானப்படுத்தி தூங்க வைக்க, அவர் வேறு ஓர் அறைக்குச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது தங்கள் பெட்ரூமின் கட்டிலுக்கு அருகில் எரிக் சுயநினைவின்றி உடல் மிகவும் குளிர்ச்சியாகிக் கிடந்ததை பார்த்து அதிர்ந்து, அவசர உதவி எண்ணான 911-க்கு அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவலர்கள் எரிக் உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதி செய்தனர்’ எனக் காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், எரிக் உயிரிழந்ததற்கு கூரி ரிச்சின்ஸ்தான் காரணம் என அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். எரிக்கின் பிரேத பரிசோதனை மற்றும் நச்சுயியல் அறிக்கையில், அவர் ஃபென்டானிலின் என்ற வலி நிவாரணி மருந்தை ஐந்து மடங்கு அதிகமாக உட்கொண்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. கைதுகணவரை இழந்த 45 வயது அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்த மகன்; கிராமத்தில் நெகிழ்ச்சி! மேலும் கூரி, தன் குழந்தையை சமாதானப்படுத்த சென்றதாகக் கூறிய அந்த நேரத்தில் அவரது போனில் இருந்து ஒருவருக்கு தொடர்ந்து செய்திகள் அனுப்பப்பட்டு பின்னர் அவை அனைத்தும் டெலீட் செய்யப்பட்டுள்ளன. ஆனால் விசாரணையில், தன்னிடம் போன் இல்லை கணவர் இருந்த அறையிலேயே போனை விட்டு சென்றதாக கூரி சொல்லியதில் சந்தேகம் அடைந்து அவர் மீதான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அடையாளம் தெரியாத ஒருவர் தடை செய்யப்பட்ட ஃபென்டானிலின் மருந்தை, கூரி ரிச்சின்ஸுக்கு விற்றுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
http://dlvr.it/SnqW5Z

கடலுக்கு அடியில் சுற்றுலா பயணியை முத்தமிட்ட டைவிங் பயிற்சியாளர்; கைது செய்து விசாரிக்கும் போலீஸ்!

24 வயது சீன பெண் சுற்றுலா பயணியை, மலேசிய டைவிங் பயிற்சியாளர் கடல் நீருக்கு அடியில் முத்தமிட்டு இருக்கிறார். அதனைத் தொடர்ந்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், 27 வயதான ஃப்ரீலான்ஸ் பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மலேசியாவின் செம்பொர்னா (Semporna) மாவட்டத்தில், வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் பெற்றது. அந்தப் பதிவில், சீனப் பெண்ணும், டைவிங் பயிற்சியாளரும் பேசிக் கொள்ளும் புகைப்படங்களும், பயிற்சியாளர் முத்தமிட்ட புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.சீனா: 'ஜாக் மா ரிட்டர்ன்ஸ்' - இனி என்ன?! ``பாதிக்கப்பட்ட பெண் சீனாவில் உள்ள தனது சொந்த ஊருக்குச் செல்வதற்கு முன்பு, செம்போர்னா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் அந்நபர் அவரின் வீட்டில் கைது செய்து செய்யப்பட்டார். அவர் மீது குற்றவியல் தண்டனைச் சட்டம் 354 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காக ரிமாண்ட் செய்யப்பட்டிருக்கிறார்'' என உதவி காவல் கண்காணிப்பாளர் ஆரிப் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். ``சுற்றுலாத்துறை கோவிட் -19 தொற்றில் இருந்து மீண்டு வருகிறது. இந்தச் சமயத்தில் இது போன்ற சம்பவங்கள் குறிப்பாக செம்போர்னா மாவட்டத்தின் சுற்றுலா பிம்பத்தைப் பெரிதும் பாதிக்கின்றன'' என சபா (Sabah) மாநிலத்தின் சுற்றுலா, கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிறிஸ்டினா லியூ திங்களன்று தெரிவித்துள்ளார்.     
http://dlvr.it/Snpc43

Tuesday, 9 May 2023

China: போலி ரயில் விபத்து வீடியோ; ChatGPT பயன்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட முதல் சீன நபர்!

`ChatGPT' தொழில்நுட்பம் டெக் உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. டிஜிட்டல் கார்ட்டூன்கள் வரைவது, கட்டுரைகள் எழுதுவது, போலியான வீடியோக்கள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவது எனப் பல கிரியேட்டிவான வேலைகளை இந்த `AI' தொழில்நுட்பம் எளிதாகச் செய்து வருகிறது. இதில் பல நன்மைகள் இருந்தாலும், இந்த 'ChatGPT' தொழில்நுட்பத்தால் பல்வேறு ஆபத்துகள் இருப்பதாகவும், இதன் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் ரஷ்யா, சீனா, தென் கொரியா, கியூபா, ஈரான், சிரியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இதன் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்துள்ளன.Open AI - ChatGPT இந்நிலையில் சீனாவில் பெரும் ரயில் விபத்து ஏற்பட்டு பலர் படுகாயமடைந்து உயிரிழந்திருப்பதாகப் போலியான வீடியோ ஒன்று இணையதளங்களில் வேகமாகப் பரவி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம், அப்பகுதியில் அசாதாரண சூழலை ஏற்படுத்த வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணக் காவல்துறை இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தியுள்ளது. அதில், இந்த வீடியோவை 'Baijiahao' என்ற பிரபல இணையதளம் வெளியிட்டிருப்பதாகவும், இதைக் குறுகிய நேரத்தில் 15,000க்கும் மேற்பட்டோர் பார்த்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், 'ஹாங்' என்று அறியப்படும் நபர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.பின்னர் காவல்துறை ஹாங்கைக் கண்டுபிடித்து அவரது வீட்டையும், கணினியையும் சோதனை செய்து பார்த்துள்ளனர். அதில், ஹாங், 'VPN' செயலியைப் பயன்படுத்தி 'ChatGPT' மூலம் இந்த ரயில் விபத்து வீடியோவை உருவாக்கியுள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். சீன அரசு, இது போன்ற தவறான செய்திகளைப் பரப்புவதைத் தடுக்க 'Deep Synthesis' என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற குற்றங்களைக் கண்டறிந்து வருகிறது. இந்தக் குற்றங்களுக்கு சுமார் பத்து ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.Chat GPTமேலும், `AI' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காக, சீனாவில் கைது செய்யப்பட்ட முதல் நபர் இவர்தான் என்றும் அறியப்படுகிறது. 'AI' தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் இந்த நவீனக் காலத்தில் பல போலியான செய்திகள் மற்றும் சித்திரிக்கப்பட்ட வீடியோக்கள் பரவத் தொடங்கியுள்ளன. டெக்னாலஜி துணையுடன் வளர்ந்து வரும் இந்தக் குற்றங்களைத் தடுக்க சீனா போல உலகெங்கிலுமுள்ள பல நாடுகள் பிரத்யேக சட்ட வரையறைகளைக் கொண்டுவரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் சீனாவும் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
http://dlvr.it/Snm48r

Monday, 8 May 2023

Motivation Story: `1,500 புஷ்அப்ஸ், 2,000 சிட்அப்ஸ்'- அமெரிக்க ராக்கி பாய் ஹெர்ஸ்செல் வாக்கரின் கதை!

`ஏதாவது ஒன்றை அர்ப்பணிப்பு உணர்வோடு பின்பற்றினால், உங்களாலும் சாதிக்க முடியும்.’ - ஹெர்ஸ்செல் வாக்கர் (Herschel Walker). குறைகளில்லாத மனிதர்களே இல்லை. சிலருக்கு உடல் குறைபாடு இருக்கும். அவர்களில் பலர் அதை நினைத்துக் குமைந்துபோவார்கள்; பிறரின் கேலியைத் தாங்க மாட்டார்கள். மன உறுதியும், விடா முயற்சியும் இருக்கும் சிலரால்தான் அது போன்ற சூழ்நிலைகளைக் கடந்து வர முடியும். அப்படித் தன் குறைபாடுகளையெல்லாம் பொருட்படுத்தாமல், அமெரிக்காவின் என்.எஃப்.எல் அணியில் (National Football League) விளையாடி கால்பந்தில் பல சாதனைகளைச் செய்தவர் ஹெர்ஸ்செல் வாக்கர். இன்று அமரிக்காவின் ரிபப்ளிக் கட்சியின் மிக முக்கியமான அரசியல் பிரமுகராகவும் உயர்ந்திருக்கிறார். ஆனால், அந்த உயரத்தை அவ்வளவு எளிதாக அடைந்துவிடவில்லை. 1962-ம் ஆண்டு ஜார்ஜியாவிலுள்ள அகஸ்டாவில் பிறந்தவர் ஹெர்ஸ்செல் வாக்கர். வளர்ந்ததெல்லாம் ரைட்ஸ்வில்லியில் (Wrightsville). கீழ்நடுத்தரக் குடும்பம். கூடப் பிறந்தவர்கள் ஆறு பேர். சிறு வயதிலேயே உடல்பருமன் பிரச்னை. கூடவே திக்குவாய் வேறு. கேட்க வேண்டுமா... சக சிறார்களின் கேலிக்கு ஆளானார் வாக்கர். ஒவ்வொரு நாளும் பள்ளிக்குப் போவதும் வருவதும் அவரைப் பொறுத்தவரை நரக வேதனை. அவர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அதனாலேயே வெள்ளையின மாணவர்கள் அவரைச் சீண்டினார்கள்; அவருடைய குண்டு உருவத்தைக் கேலி செய்தார்கள்; அவரைப்போலவே திக்கித் திக்கிப் பேசி வெறுப்பேற்றினார்கள். மனதளவில் மிகவும் குமைந்துபோயிருந்த வாக்கரை தலை நிமிரச் செய்தவர் அவருடைய அம்மா. `நான் என்னைப் பற்றி நல்லவிதமாக உணரும்போதுதான் எனக்கான நல்ல விஷயங்கள் நிகழத் தொடங்குகின்றன. நீங்கள் உயரே பார்க்கும்போதுதான், நீங்களும் உயரத் தொடங்குவீர்கள்.’ - ஹெர்ஸ்செல் வாக்கர்.ஹெர்ஸ்செல் வாக்கர் (Herschel Walker). சக மாணவர்கள் கேலி ஒருபக்கம் இருக்கட்டும். ஆசிரியர்களுமேகூட வாக்கரைக் கொண்டாடவில்லை. கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை... அக்கறையோடு அவரின் படிப்பு குறித்துப் பேசவோ, அவரைப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவைக்கவோ ஓர் ஆசிரியர்கூட அவருக்கு வாய்க்கவில்லை. அதனாலேயே `மிக மோசமான ஸ்டூடன்ட்’, `மக்குப் பையன்’, `இவனுக்கெல்லாம் படிப்பு எங்கே மண்டையில ஏறப்போகுது?’ போன்ற விமர்சனங்களை எதிர்கொண்டார். அவர்மேல் வீசப்பட்ட சுடுசொற்கள் அவரை மேலும் மேலும் நோகச் செய்தன. திக்கித் திக்கிப் பேசுவது இன்னும் அதிகமானது. தன் மீதிருந்த நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தார் வாக்கர். அது ஒரு கோடைக்காலம். பள்ளியிலிருந்து வீடு திரும்பினார் வாக்கர். தூரத்திலேயே தன் மகன் வருவதைப் பார்த்துவிட்டார் அம்மா கிறிஸ்டின் (Christine). வயதுக்குப் பொருந்தாத குண்டு உருவம். தளர்ந்த நடை. அந்த சின்னஞ்சிறு வயதிலேயே பெரிதாக எதையோ பறிகொடுத்தது போன்ற முகத்தோற்றம். அம்மா கிறிஸ்டினுக்கு, வாக்கரைப் பார்க்கப் பார்க்க என்னவோ செய்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் வாக்கரிடம் பேச்சுக்கொடுத்தார். ``வாக்கர்... ஏன் டல்லா இருக்கே... என்ன நடந்துச்சு?’’ ``அம்மா... நான் இனிமே ஸ்கூலுக்குப் போகலைம்மா.’’ வாக்கரின் கண்களில் நீர் திரண்டது. ஹெர்ஸ்செல் வாக்கர் (Herschel Walker). ``தினம் தினம் வெளியில போறதே அவஸ்தையா இருக்கும்மா. என் வயிறை, என் நடையை, என் உடம்பைப் பார்த்து எல்லாரும் சிரிக்கிறாங்கம்மா. என்னை மாதிரியே திக்கித் திக்கிப் பேசிக் காட்டி கிண்டல் பண்றாங்கம்மா. அதுவுமில்லாம... அதுவுமில்லாம...’’ ``அதுவுமில்லாம... என்ன... சொல்லு?’’ ``நான் கறுப்பினத்தவன்கிறதுனாலேயே நிறைய பேர் ஒதுக்கிவைக்கிறாங்கம்மா...’’ துடித்துப்போனார் அம்மா. ஆனால், சிறுவன் வாக்கரிடம் என்ன பேச வேண்டும், எப்படி அவரை ஆற்றுப்படுத்துவதென்பது அந்தத் தாய்க்குத் தெரிந்திருந்தது. `வெற்றி என்பது எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது... அவ்வளவுதான்.’ - ஹெர்ஸ்செல் வாக்கர். அம்மா ஹெர்ஸ்செல் வாக்கரைக் கூர்ந்து பார்த்தார். ``முதல்ல ரெஃப்ரெஷ் பண்ணிக்கிட்டு வந்து டீ சாப்பிடு. உனக்கு ஒரு விஷயம் சொல்றேன்’’ என்றார். வாக்கர் டீ சாப்பிட்டு முடித்ததும் அம்மா பேச ஆரம்பித்தார். ``இப்போ உனக்கு முன்னால இருக்குற பிரச்னையெல்லாம் ஒண்ணுமேயில்லை’’ என்றார். வாக்கர், அம்மாவை ஆச்சர்யமாகப் பார்த்தார். ``ஆமாண்டா கண்ணு. வாழ்க்கையில நீ இன்னும் என்னென்னவோ பார்க்கவேண்டியிருக்கு. முதல்ல இந்தப் பிரச்னைகள்ல இருந்து உன்னை மாத்திக்க, திசைதிருப்பிக்கப் பழகிக்கோ. உன்னுடைய உடல்பருமனைக் குறைக்க என்ன செய்யலாம்னு பாரு. திக்குவாய் சரியாக ஏதாவது வழியிருக்கான்னு யோசி... அதையெல்லாம் விட்டுட்டு, `அவங்க கிண்டல் பண்றாங்க... இவங்க கேலி பேசுறாங்க’ன்னு காரணம் எதையும் சொல்லாத. புரிஞ்சுச்சா?’’ தலையில் அடித்ததுபோல் அம்மா சொன்ன வார்த்தைகள் வாக்கரின் மனதில் ஆழமாகப் பதிந்துபோயின. அன்று இரவெல்லாம் யோசித்தார். அடுத்த நாள் தன்மேல் அக்கறைகொண்ட வயதில் மூத்த உறவினர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். அதற்குப் பிறகு அவர் மேற்கொண்டதெல்லாம் அசாத்தியமான உடற்பயிற்சிகள்! புஷ்அப், சிட்அப் இரண்டு பயிற்சிகளையும் தீவிரமாகச் செய்ய ஆரம்பித்தார். வெறித்தனமான பயிற்சி. ஒருகட்டத்தில் ஒரு நாளைக்கு 1,500 புஷ்அப்ஸ், 2,000 சிட்அப்ஸ் என அசுரத்தனமான பயிற்சிகள். `அந்த நேரத்துல எக்சர்ஸைஸ் பண்றது எனக்கு ஒரு போதையாவே ஆகிடுச்சு’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் வாக்கர். அதன் பிறகு உடல்பருமன் குறைந்து காணாமலேபோனது. உடம்பு கட்டுக்கோப்பாக மாறியது. அம்மாவின் அறிவுரைப்படி தடகள விளையாட்டுகளிலும், கால்பந்து விளையாட்டிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார் வாக்கர். பள்ளியில் அதற்காகவே இருந்த அணிகளில் சேர்ந்தார். ஹெர்ஸ்செல் வாக்கர்`நீங்கள் கடினமாகப் பயிற்சி செய்தால் உங்கள் உடல் மட்டும் கடினமாக இருக்காது; உங்களைப் பிறர் வெல்வதும் கடினமாக இருக்கும்.’’ - ஹெர்ஸ்செல் வாக்கர். உடலை மட்டும் சரிப்படுத்த நினைக்கவில்லை வாக்கர். தன் திக்குவாய் போகவும் கடுமையாகப் பயிற்சி செய்தார். ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஓர் இடத்தில் உட்கார்ந்துகொள்வார். சத்தம்போட்டுப் படிப்பார். சுற்றுச்சூழல், யார் அருகிலிருக்கிறார்கள் என்பதையெல்லாம் கவனிக்கவே மாட்டார். முடிந்தவரை சத்தமாகப் படிப்பார். படிக்கப் படிக்க நாக்குக் குழறுவது கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. சரளமாகப் படிக்க முடிந்தது. மற்றவர்களிடம் பேசும்போது சாதாரணமாகப் பேசவும் முடிந்தது. அமெரிக்காவின் நேஷனல் ஃபுட்பால் லீக் அணிக்காக, கால்பந்து விளையாட ஆரம்பித்தார். 1980-ம் ஆண்டு கல்லூரியில் தொடங்கிய அவருடைய கால்பந்து விளையாட்டுப் பயணம், 1997-ம் ஆண்டுவரை தொடர்ந்தது. பிறகு அரசியலில் ஆர்வம் பிறந்தது. 2022-ம் ஆண்டு ஜார்ஜியாவில் ரிபப்ளிக் கட்சி சார்பாக செனட் சபை உறுப்பினருக்குப் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்தார். அதில் தோற்றுவிட்டாலும், அமெரிக்கா முழுவதும் ஒரு பிரபலமாக அடையாளம் காணப்பட்டார். செனட் தேர்தலில் போட்டியிட்டபோது அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஹெர்ஸ்செல் வாக்கர் (Herschel Walker). `ரொம்ப வயலன்ட்டான ஆள்...’, `நடத்தை சரியில்லாதவர்...’ என்றெல்லாம் கொட்டித்தீர்த்தன எதிர்க்கட்சிகளும் சில பத்திரிகைகளும். அவையெல்லாம் அதிகம் விவாதிக்கப்படவேண்டியவை; ஆராயப்படவேண்டியவை. அவை ஒருபுறம் இருக்கட்டும். நமக்கு ஹெர்ஸ்செல் வாக்கரின் வாழ்க்கை உணர்த்தும் செய்தி ஒன்றுதான். `எவ்வளவு இடர்வரினும் துணிந்து நில். துன்பம் ஓடிப்போகும்!’
http://dlvr.it/Snl1bn

Saturday, 6 May 2023

கருவில் இருக்கும் குழந்தையின் மூளையில் அறுவை சிகிச்சை - ஆச்சர்யப்படுத்திய அமெரிக்க மருத்துவர்கள்!

அமெரிக்காவின் பாஸ்டான் மாகாணத்தை சேர்ந்தவர்கள் லெனாக்ஸ் மற்றும் லீட்டா தம்பதி. இவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் அதன் பிறகு இரண்டு முறை கருத்தரித்தும் அந்தக் கரு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே கலைந்துள்ளது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் லீட்டா மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். குழந்தை, மூன்று மாதங்களைக் கடந்து வளர்ந்து கொண்டிருந்ததால் தம்பதி மிகவும் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர். குழந்தையின் வளர்ச்சியை பற்றி தெரிந்துகொ ள்ள ஏழாவது மாத கர்ப்பத்தின்போது மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் லீட்டா. அங்கு அவருக்கு நடந்த சோதனையில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கர்ப்பிணி பெண் | மாதிரிப்படம்ஆசியாவின் முதல் முழுமையான கைகள் மாற்று அறுவை சிகிச்சை - சாதித்த மும்பை மருத்துவர்கள்! குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், குழந்தையின் மூளையில் உள்ள ரத்தநாளம் சரியாக வளர்ச்சி அடையாததால், அங்கிருந்து இதயத்துக்கு அதிகப்படியான ரத்தம் செல்வதை கண்டறிந்துள்ளனர். இந்த அரிய மூளை நிலையை `வீனஸ் ஆஃப் கேலன் குறைபாடு’ என்பர். இதேநிலை தொடர்ந்தால் கருவில் இருக்கும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அல்லது குழந்தை பிறக்கும் போதே இதயம், மூளை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி இதயம் மற்றும் மூளை பாதிப்பினால் பிறக்கும் குழந்தையும் சில காலமே உயிர்வாழும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் லெனாக்ஸ் - லீட்டா தம்பதி உடைந்து அழுதுள்ளனர். இவர்களின் நிலை அறிந்த மருத்துவர்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் ரத்த நாளத்தை சரி செய்யும் முயற்சியை கையில் எடுத்தனர். தாங்கள் மேற்கொள்ள உள்ள அறுவை சிகிச்சை பற்றி அந்தத் தம்பதியிடம் மிகவும் தெளிவாகவும் விளக்கினர். கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தால் ஒருவேளை குழந்தை நல்லபடியாக உயிர்பிழைக்கலாம் அல்லது உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளனர். குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றாலும் உயிரிழக்கத்தான் போகிறது, அறுவை சிகிச்சை செய்தால் உயிர் பிழைக்க சிறிய வாய்ப்பாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டுள்ளனர் தம்பதி.அறுவை சிகிச்சை5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை! - டெல்லி மருத்துவர்கள் புதிய சாதனை அறுவை சிகிச்சையின் போது, தாய் லீட்டாவின் வயிற்றில் ஒரு சிறிய துளையிட்டு அதன்மூலம் ஊசி போன்ற மிக சிறிய கருவியின் மூலமாக கருவில் இருக்கும் குழந்தையின் தலையில் துளையிட்டுள்ளனர். பின்னர் எலக்ட்ரிக் காயில் போல இருக்கும் ஒரு கருவியின் மூலமாக, ஊசி மூலம் குழந்தையின் மூளையில் இருக்கும் ரத்த நாளத்தை சரி செய்துள்ளனர். அறுவை சிகிச்சையின் முடிவில் குழந்தையின் மூளையில் இருந்து இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்து சரியான விகிதத்தில் செல்ல ஆரம்பித்தது. இனி குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை, வளர்ந்த பிறகும் இதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்க மருத்துவர்களின் இந்த சாதனை மருத்துவ வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாக ஆச்சர்யப்படவைத்துள்ளது.
http://dlvr.it/Sncc9z

வெள்ளை மாளிகைக்கு சென்ற சுந்தர் பிச்சை, சத்ய நாதெள்ளா... AI-ன் ஆபத்துகள் குறித்து கேள்வி!

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது, தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல் எனக்கூறிக் கொண்டாலும், அதன் ஆபத்து விளைவிக்கும் நாசகர செயல்கள் குறித்த அச்சம், தொழில்நுட்ப வல்லுநர்களிடம் பரவலாக இருக்கிறது. ஏஐ-ன் வளர்ச்சியில் அரசு தலையிட்டு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனப் பலர் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு குறித்த ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள, வெள்ளை மாளிகையில் பைடன் அரசு கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளது. Google CEO Sundar Pichai இந்த கூட்டத்திற்கு, கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்யா நாதெள்ளா, OpenAI நிறுவனத்தின் சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் Anthropic நிறுவனத்தின் சி.இ. ஓ டேரியோ அமோடி ஆகியோர் வரவழைக்கப்பட்டனர்.  இந்த கூட்டத்தில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், பைடனின் தலைமை பணியாளர் ஜெஃப் ஜியண்ட்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், வர்த்தகச் செயலர் ஜினா ரைமொண்டோ மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை இயக்குனர் ஆரத்தி பிரபாகர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நம்பகமான ஏஐ நிறுவனங்களை நிறுவ, 140 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிடவும் நிர்வாகம் உறுதியளித்துள்ளது. அதேநேரத்தில் ஜனநாயக நிறுவனங்கள், அமெரிக்கர்களின் வேலைகளைப் பாதிக்கும் அபாயங்களை கருத்தில் கொள்ளுமாறு தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Artificial Intelligenceபங்குச் சந்தையையும் விட்டுவைக்காத ஏ.ஐ... இந்தியாவில் 'ஆல்கோ' நிலை என்ன? `ஏஐ நம் காலத்தின் மிகவும் சக்திவாய்ந்த தொழில்நுட்பங்களில் ஒன்று. ஆனால் அது வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கு, முதலில் அதன் அபாயங்களைக் குறைக்க வேண்டும்.  செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்புகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதி செய்யும் பொறுப்பு தனியார்த்துறை நிறுவனங்களுக்கு உண்டு' என, அதிபர் பைடன் ஆலோசனை வழங்கினார். அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இந்த அவசர கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.    
http://dlvr.it/Sncc2J