Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, 28 February 2023

காதலர்களுக்கு குட் நியூஸ்; ரியல் முத்தத்தை உணர்த்தும் Kissing Device - சீனாவில் கண்டுபிடிப்பு!

சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று தொலைதூர காதலர்களுக்கான `முத்த சாதனம்’ (kissing device) ஒன்றை உருவாக்கியுள்ளது. இது மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும், மறுபுறம் சலசலப்பையும் உண்டாக்கி  இருக்கிறது. `நீ கொடுக்கும் முத்தங்கள் அனைத்தையும், போனே வாங்கிக் கொள்கிறது. அந்த முத்தத்தை என்னால் முழுமையாக உணர முடியவில்லை’ எனத் தொலைதூர காதலர்கள் வருத்தம் கொள்வதுண்டு. இவர்களுக்கு உதவும் வகையில், சீன பல்கலைக்கழகம் `Kissing Device’ ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்தச் சாதனம் சிலிக்கான் உதடுகள், பிரஷர் சென்சார் மற்றும் ஆக்சுவேட்டர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.  தொலைதூரக் காதலர்கள், இதற்கான செயலியை தங்களது மொபைலில் முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். செல்போனில் இந்தச் சாதனத்தைப் பொருத்திய பின், பார்ட்னரை ஆப்பில் இணைக்க வேண்டும்.  அதன்பின் சிலிக்கான் உதடுகளில் முத்தமிட்டால், முத்தமிடுபவர் களின் அழுத்தம், வெப்பம் என உண்மையான முத்த உணர்வை, மறுபுறத்தில் இருப்பவரால் உணர முடியும். இதுமட்டுமல்லாமல் இந்தச் சாதனத்தை உபயோகிப்பவர் எழுப்பும் ஒலியையும் மற்றவருக்கு அனுப்ப முடியும் எனக் கூறுகின்றனர்.இசைஞானி என் ஜீவன்! - இசையின் காதலி பகிரும் பாடல் பட்டியல் | My Vikatan இந்தச் சாதனத்தின் முன்னணி கண்டுபிடிப்பாளரான ஜியாங் ஜாங்லி கூறுகையில், ``எனது பல்கலைக்கழகத்தில் நான் என் காதலியுடன் தொலைதூர உறவில் இருந்தேன், எனவே நாங்கள் ஒருவருக்கொருவர் தொலைபேசி மூலம் மட்டுமே தொடர்பு கொண்டோம். இந்தச் சாதனத்தைக் கண்டுபிடிக்கும் உத்வேகம் இங்குதான் உருவானது" எனத் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி வைரலான நிலையில், இதெல்லாம் இப்ப தேவையா என, சிங்கிள்ஸ் ஆதங்கத்துடன் கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
http://dlvr.it/Sk6VsY

Monday, 27 February 2023

அமெரிக்காவில் குடியேற ஆசை; குடும்பத்துடன் சென்று, `ட்ரம்ப்' சுவரிலிருந்து விழுந்து பலியான நபர்!

குஜராத் மாநிலம், காந்தி நகர் மாவட்டம் கலோஸ் பகுதியில் வசித்துவந்தவர் பிரிஜி குமார் யாதவ். இவருக்கு பூஜா என்ற மனைவியும், தன்மென் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில், பிரிஜி குமார் யாதவ் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேற நினைத்திருக்கிறார். இதற்காக கடந்த ஆண்டு அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேற ஏற்பாடு செய்யும், தரகர் குழுவையும் அணுகியிருக்கிறார். அந்தத் தரகர் குழு வழங்கிய ஆலோசனைப்படி, கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி பிரிஜி குமார் யாதவ் தன்னுடைய மனைவி பூஜா, மகன் தன்மென்னுடன் மும்பை வழியாக துருக்கிக்குச் சென்று, துருக்கியிலிருந்து பின்னர் மெக்ஸிகோ சென்றிருக்கிறார். மெக்ஸிகோ அமெரிக்கா எல்லையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆட்சியின்போது கட்டப்பட்ட `ட்ரம்ப் வால்' எனும் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் செல்ல முயன்ற பிரிஜி குமார் யாதவ் பூஜா தம்பதி, தங்கள் மகனுடன் அந்தச் சுவரின்மீது ஏறியிருக்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுவரின் உச்சியிலிருந்து மூன்று பேரும் கீழே விழுந்திருக்கின்றனர். அதில் பிரிஜி குமார் யாதவ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் மனைவி பூஜா அமெரிக்காவிலும், மகன் மெக்ஸிகோவிலும் விழுந்து படுகாயமடைந்தனர்.போலீஸ் இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர், பூஜா, தன்மெனை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். உயிரிழந்த பிரிஜி குமார் யாதவின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது. சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். பிரிஜி குமார் யாதவிடம் பணம் பறிக்கும்நோக்கில், அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றிய ஏழு பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.அமெரிக்கா டு உக்ரைன்: அதிபர் ஜோ பைடனின் ரகசியப் பயணம்; திட்டமிடப்பட்டது எப்படி?
http://dlvr.it/Sk3Zbp

Sunday, 26 February 2023

பைடன் விசிட்... புதின் அதிரடி - ஓராண்டைக் கடந்தும் ஓயாத போர் - பின்னணி என்ன?!

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு, பிப்ரவரி 24 அன்று தொடங்கிய இந்தப் போர் விரைவில் முடிவடைய வேண்டும் என்பதுதான் உலக மக்களின் வேண்டுகோளாக இருந்துவருகிறது. ஆனால், போர் முடிவடைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்பதே உண்மை. என்ன நடக்கிறது உக்ரைன் - ரஷ்யா போரில்? உக்ரைன் சென்ற பைடன்! கடந்த பிப்ரவரி 20-ம் தேதி அன்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், திடீரென உக்ரைனுக்குச் சென்று அதிர்ச்சி கொடுத்தார் பைடன். போலந்து தலைநகர் வார்சாவுக்குச் சென்ற அவர், அங்கிருந்து ரயில் மூலம் 10 மணி நேரம் பயணம் மேற்கொண்டு உக்ரைன் தலைநகர் கீவுக்குச் சென்றார். ஜோ பைடன் - ஜெலன்ஸ்கி``சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன்" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ``ஒரு மாதமாகவே இது தொடர்பான திட்டமிடல் இருந்தாலும், மூன்று நாள்களுக்கு முன்புதான் பைடனின் உக்ரைன் பயணம் உறுதிசெய்யப்பட்டது. இந்தத் தகவல் வெளியே கசிந்துவிடாமல் ரகசியமாக வைத்திருந்தோம். பைடனுடன் சில பாதுகாப்பு அதிகாரிகள், மருத்துவர்கள் மட்டுமே உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்டனர். அவர் உக்ரைனுக்குச் செல்லும் தகவலை, சில மணி நேரங்களுக்கு முன்னரே ரஷ்யாவுக்குத் தெரிவித்தோம்'' என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது. உக்ரைன் தலைநகர் கீவில், போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ஜோ பைடன். பின்னர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் போர் குறித்துப் பேச்சுவார்த்தையும் நடத்தினார். ஜெலன்ஸ்கியுடன் பைடன் பேசிக்கொண்டே நடந்து செல்லும் காட்சிகளும் வெளியிடப்பட்டன. இந்தச் சம்பவம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ``இந்தப் போர் தொடங்கும்போது `உக்ரைன் பலவீனமாக இருக்கிறது; மேற்குலக நாடுகள் பிரிந்து கிடக்கின்றன' என்றுதான் ரஷ்ய அதிபர் புதின் நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், அவர் நினைத்தது இன்று பொய்யாகிவிட்டது'' என்று கூறியிருக்கிறார் பைடன். உக்கிரமான புதின்! அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உக்ரைன் பயணம் ரஷ்ய அதிபர் புதினைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பைடனின் வருகைக்கு முன்னதாகவே நாட்டு மக்களிடம் பேசிய புதின், ``ரஷ்யாவுக்கு எதிராக, உக்ரைனைப் பகடைக்காயாக மாற்றியிருக்கின்றன மேற்கத்திய நாடுகள். இந்தப் போருக்கு முழுப் பொறுப்பு மேற்கத்திய நாடுகள்தான். அவர்கள்தான் போரைத் தொடங்கினர். நாங்கள் போரை நிறுத்தவே எங்கள் பலத்தைப் பயன்படுத்துகிறோம்'' என்று மொத்தப் பழியையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்மீது தூக்கிப்போட்டிருந்தார். புதின் இந்த நிலையில், ஜோ பைடனின் உக்ரைன் வருகை ரஷ்யாவைக் கொதிப்படையச் செய்திருக்கிறது. இதனால், இந்தப் போர் இன்னும் உக்கிரமடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய அதிபர் புதின் தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார். `அமெரிக்காவுடனான New START அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுகிறோம்' என்பதுதான் அந்த அதிரடி முடிவு. New START ஒப்பந்தம்! கடந்த 2010-ம் ஆண்டு, அணு ஆயுத இருப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும், `நியூ ஸ்டார்ட்’ என்ற அணு ஆயுத ஒப்பந்தத்தை அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலக அளவில் அணு ஆயுதங்கள் கட்டுக்குள் இருக்கும் என நம்பப்பட்டது. இந்த ஒப்பந்தம், கடந்த 2021, பிப்ரவரி மாதத்தோடு காலாவதியானது. இதைப் புதுப்பிக்க அமெரிக்கா தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்துவந்தது. ஆனால், உக்ரைன் போர் காரணமாக இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா மறுத்துவந்தது. இந்த நிலையில்தான், அந்த ஒப்பந்தத்திலிருந்து முழுவதுமாக வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது ரஷ்யா. உக்ரைன் - ரஷ்யா ரஷ்யா - உக்ரைன் போர்... ராணி எலிசபெத் மறைவு... மஸ்க் சம்பவங்கள்... | `ரீவைண்ட்’ உலகம் 2022 இது தொடர்பாகப் பேசிய புதின், ``உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். ஆகையால், நாங்களும் இந்தப் போரைக் கைவிடுவதாக இல்லை. அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகுகிறது. ரஷ்யாவின் அணு ஆயுத பலத்தை ஐரோப்பிய நாடுகள் பறிக்க நினைக்கின்றன. இனிமேல் அமெரிக்கா அணு ஆயுத சோதனைகள் மேற்கொண்டால், ரஷ்யாவும் சோதனை மேற்கொள்ளும்'' என்றிருக்கிறார். ``அமெரிக்க அதிபரின் உக்ரைன் வருகையும், ரஷ்ய அதிபரின் அதிரடி அறிவிப்பும், இந்தப் போர் கூடிய விரைவில் முடியாது என்பதையே உணர்த்துகின்றன. ஆனால், இந்தப் போர் விரைவில் முடிந்தால் மட்டுமே உலக நாடுகளுக்கு அது நன்மை பயக்கும்'' என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
http://dlvr.it/Sk1Pvq

Saturday, 25 February 2023

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: ஹாரிபுரூக், ஜோ ரூட் சதம் விளாசல்: இங்கிலாந்து ரன் குவிப்பு

வெலிங்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 267 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் 2வது டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சாக் கிராலி 2, பென் டக்கெட் 9 ரன்னிலும் பின்னர் வந்த ஒல்லி போப் 10 ரன்னிலும் அவுட் ஆகினர். 21 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில் ஜோரூட்- ஹாரி புரூக் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். புரூக் 107 பந்தில் சதம் விளாசினார். தேனீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன் எடுத்திருந்தது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் இருவரும் அதிடியாக ஆடினர். ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை விளாசினார். 65 ஓவரில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன் எடுத்திருந்தபோது மழையால் போட்டி தடைபட்டது. அப்போது புரூக் 184(169பந்து, 24பவுண்டரி, 5 சிக்சர்), ஜோ ரூட் 101 (182பந்து) ரன்னில் களத்தில் இருந்தனர்.
http://dlvr.it/SjzDc5

ஐ.நா அமைதி தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள்... ரஷ்யாவுக்கு உறுதுணையா?!

கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி ரஷ்யா-உக்ரைன் இடையே போர் தொடங்கியது. ஓராண்டாகியும் போர் முடியவில்லை. இரு நாடுகளிலும் பல லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் அப்பாவி மக்கள் பலரும் போருக்கு இரையாகியுள்ளனர். மேலும் பல லட்சம் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.ரஷ்யா - உக்ரைன் போர் இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்ய ராணுவத்தை உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறி  போரை நிறுத்துவது தொடர்பாக  தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியா குட்டரெஸ், ஐ.நா விதிகளை மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் பிற நாடுகளின் அமைதி சீர்குலைந்து இருப்பதாகவும் சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்து இருப்பதாகக் கூறினார். ``போர் என்பது மிகப்பெரிய பிரச்னை. எந்த ஒரு பிரச்னைக்கும் போர் மூலம் தீர்வு காண முடியாது. உக்ரைனிலிருந்து ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்,” என வலியுறுத்தினார்.ஜெனிவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம்ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா சபை தீர்மானம்... வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியா! இந்த நிலையில், மொத்தம் 193 நாடுகள் உள்ளடக்கிய சபையில் தீர்மானத்திற்கு ஆதரவாக  141 நாடுகளும், புறக்கணித்து 37 நாடுகளும் தீர்மானத்திற்கு எதிராக 7 நாடுகள் வாக்களித்துள்ளனர். இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஈரான், ஈராக், மங்கோலியா, வியட்நாம், கசகஸ்தான்  என போரை புறக்கணித்தவர்களில் பெரும்பாலானவை ஆசிய நாடுகள். உக்ரைன் – ரஷ்ய போரை தடுக்கும் தீர்மானத்தைப் புறக்கணிப்பதின் சர்வதேச அரசியல் கணக்கு என்ன? என்னும் கேள்வி எழுகிறது.ஐ.நா சபை இதுபோன்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போதும் 141 நாடுகள் போரை நிறுத்த தங்களின் ஆதாரவைப் பதிவு செய்திருந்தனர். இதில் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தீர்மானத்தைப் புறக்கணித்தனர். போர் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் இருந்து இரு நாடுகளுக்கு இடையே அமைதி நிலவ வேண்டும் என சொல்லும் இந்தியா அமைதியைக் கொண்டுவர தீர்மானத்தை ஆதரிக்காமல் இருப்பது ஏன் என்னும் கேள்வி எழுப்பப்படுகிறது.உக்ரைன் - ரஷ்யா போர் ஆனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து தங்களுடைய மௌனத்தின் மூலம் தன் ஆதரவை மறைமுகமாக ரஷ்யாவுக்கு வழங்குவதாக விமர்சிக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா பொது சபையில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியபோதும், ``உக்ரைன் ரஷ்ய போரில் இந்தியா அமைதி பேச்சுவார்த்தை மட்டுமே நம்புகிறது. அதற்கு மட்டுமே துணை நிற்கிறது” என்றார். எனினும் இதற்கு முன்பு ஐ.நா பொது சபை பாதுகாப்பு கவுன்சில் மனித உரிமை கவுன்சில் என பல அமைப்புகளும் ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வந்தது. அதில் இந்தியா பல்வேறு காரணங்களை முன்வைத்து தீர்மானங்களில் வாக்களிப்பதை தவிர்த்து வந்தது. அதை இந்த முறையும் பின்பற்றி இருக்கிறது. இந்தியா - ரஷ்யா இந்தியாவின் புறக்கணிப்பு யாருக்கு லாபம்?  பல ஆண்டுகளாகவே ரஷ்யா இந்தியாவுக்கு இடையே நெருக்கமான உறவு நிலவி வருகிறது. குறிப்பாக 1955-ம் நாட்டில் காஷ்மீர் மீதான இந்திய இறையாண்மைக்கு ஆதரவாக சோவியத் தலைவர், ``நாங்கள் மிக அருகில் இருக்கிறோம். மலை உச்சியில் இருந்து எங்களை அழைத்தால் நாங்கள் உங்கள் பக்கத்தில் இருப்போம்” என்று கூறியது இந்தியா ரஷ்யாவிற்கு இடையேயான உறவு எவ்வாறு இருந்தது என்பதை உணர்த்தும். 2019 -ம் ஆண்டில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு தளர்த்திபோது பிற நாடுகள்  விமர்சங்களை முன்வைத்தது, ரஷ்யா, `இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்’ என கூறி விமர்சனத்தைத் தவிர்த்தது. இந்தியா ரஷ்யா உறவு தற்போது உண்டானதல்ல பல ஆண்டுகளாக நட்புறவு இருந்து வருகிறது.ரஷ்யா விவகாரம் - மோடிரஷ்யா - உக்ரைன் போரால் உலக நாடுகள் சந்தித்த பாதிப்புகள் என்னென்ன?! ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதில் ரஷ்ய நாட்டையே இந்தியா பெருமளவில் நம்பி இருக்கிறது. எனவே, உக்ரைன் படையெடுப்புக்கு பிறகு இந்தியா ரஷ்யாவை நேரடியாக விமர்சிப்பதை தவிர்த்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மட்டுமே கூறி வந்தது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி படையெடுப்புக்கு பிறகு உயர்ந்துள்ளது.  கச்சா எண்ணெய், எரிவாயு சார்ந்த தொழில்களில் இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக பல பங்களிப்புகளை ரஷ்யா செய்துள்ளது. மேலும் அவர்களின் தொழில்நுட்ப அறிவும் இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. அதேபோல் படைகளுக்கு தேவையான பொருள்கள் அனைத்தையும் பல ஆண்டுகளாக இந்தியாவிற்கு ரஷ்யா வழங்கி வருகிறது . இதில்  விமானம், டாங்கிகள், துப்பாக்கிகள், போர் விமானங்கள், ஏவுகணைகள் அடங்கும்.கச்சா எண்ணெய் 2030 -ம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும் என ஆய்வுகள் குறிப்பிடுகிறது. இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்த இந்தியாவுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தேவை மிகவும் அவசியம் என்பதால் ரஷ்யாவின் தேவை இந்தியாவிற்கு அதிகரித்துள்ளது. இதன் விளைவாகவே, கடந்த ஆண்டை விட ரஷ்யாவின்  எண்ணெய் வர்த்தகம் 33 % உயர்ந்துள்ளது.  இதை அமெரிக்கா விமர்சித்த போதும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடர்ந்தது. இந்திய  மக்களின் தேவையால் இறக்குமதி அவசியமாகிறது என்று இந்தியா வெளியுறவு துறை அமைச்சகம் சொன்ன பதிலை, அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. அதனால் அது பற்றி பின்நாட்களில் அமெரிக்கா பேசவில்லை.பாசிட்டிவ் பொருளாதாரம்... சீனா நிலைபாடு என்ன? உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியதற்கு பிறகு மூன்றாவது முறையாக நடக்கும் வாக்களிப்பில் இருந்து விலகி, சர்ச்சை எழும்பாமல் இருக்க நடுநிலை வகிக்க முயற்சிக்கிறது சீனா. இதை உறுதி செய்யும் வகையில் சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், `உலக நாடுகளின் இறையாண்மை மதிக்கிறோம். ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் முடிவுக்கு கொண்டு வர போர் நிறுத்தம் அவசியம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்க பேச்சுவார்த்தை மட்டுமே சாத்தியமான வழி’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. போரை நிறுத்த மறுக்கும் ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஐக்கிய நாடுகள் பொருளாதார தடையை விதித்திருக்கும் நிலையில் சீனாவுக்கு ரஷ்யாவில் இருந்து வர்த்தக நடவடிக்கைகள் 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ரஷ்யாவில் சீனாவின் இறக்குமதி  13 சதவீதமும், ரஷ்யாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி 43 சதவீதமும் உயர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.ரஷ்யா, சீனா மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பு ஆய்வுகள், ”சீன நிறுவனங்கள் ட்ரோன்கள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளுக்கான மின்னணு பாகங்கள் மற்றும் ரஷ்ய கூலிப்படைகளுக்கு ஆதரவாக செயற்கைக்கோள் படங்களை வழங்கியது” என தெரிவித்தது. அமெரிக்கா குற்றச்சாட்டு வைக்கும் சீன நிறுவனம் மீதும் பொருளாதார தடைவிதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச அர்சியல் இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை குறைந்த விலையில் வாங்குகிறது. பொருளாதாரத் தடைகள் காரணமாக மேற்கு நாடுகளால் ரஷ்யா எண்ணெய் பெற முடியாது. இந்த நிலையில், ரஷ்ய எண்ணெயை இந்தியா சுத்திகரித்து அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்கிறது. எனவே மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெயைப் பெறுகின்றன. ஆனால், அவர்கள் மீது எந்தப் பழியும் இருப்பதில்லை என்கிறார்கள் சர்வதேச அரசியலை உற்றுநோக்குபவர்கள்.`ஓராண்டைக் கடந்தும் ஓயாத உக்ரைன் - ரஷ்யப் போர்!' - தொடக்கம் முதல் தற்போதுவரை | விரிவான அலசல்!
http://dlvr.it/SjzDWF

``சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன்" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ல் உக்ரைன் மீது தொடுக்கப்பட்ட ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் தொடங்கி ஓராண்டு முடிந்துவிட்டது. உக்ரைன், நேட்டோவில் சேர முடிவெடுத்தால் வந்த போரால், அமெரிக்கா இன்றும் தனது நிலையான ஆதரவை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. கடந்த வாரம், உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் பைடன், 500 மில்லியன் டாலர் அளவிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கவிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதற்கடுத்த நாளே, ``உக்ரைனில் நடக்கும் அனைத்துக்கும் மேற்கத்திய நாடுகளே பொறுப்பு, சரியான வழியில் பதிலளிப்போம்" என புதின் கூறியிருந்தார்.ஜெலன்ஸ்கி - பைடன் - புதின் அதேசமயம், ரஷ்யாவுக்குச் சீனா தனது உச்சக்கட்ட ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, நேட்டோ கூறியிருந்தது. ஆனால் சீனாவோ, ``எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரஷ்யாவும், உக்ரைனும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும். இந்தப் பேச்சுவார்த்தைக்கு அனைத்து நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், சீன அதிபரைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். போரின் ஓராண்டு நிறைவையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெலன்ஸ்கி, ``ரஷ்யாவுக்குச் சீனா ஆயுதங்கள் வழங்காது என்று நான் நம்புகிறேன். என்னைப்பொறுத்தமட்டில், இது மிகவும் முக்கியமானது. அதோடு, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நான் சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன். இது நமக்கும், உலகின் பாதுகாப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும்.ஜெலன்ஸ்கி சீனாவுடன் எங்களுக்குப் பெரியளவில் வர்த்தகம் உள்ளது. சீனா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது. உக்ரைனைப் பற்றி சீனா பேச ஆரம்பித்திருப்பது தவறானதல்ல என்று நினைக்கிறேன். ஆனால் அந்த வார்த்தைகளுக்குப் பின் என்ன இருக்கிறது, அதை அவர்கள் எங்கு கொண்டுசெல்வார்கள் என்பதுதான் கேள்வி" என்றார்.`ஓராண்டைக் கடந்தும் ஓயாத உக்ரைன் - ரஷ்யப் போர்!' - தொடக்கம் முதல் தற்போதுவரை | விரிவான அலசல்!
http://dlvr.it/SjzDHR

பெரும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் |அமெரிக்காவில் வீசும் பலத்த பனிக்காற்று - உலகச் செய்திகள்

அமெரிக்காவில் பலத்த பனிக்காற்று வீசி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 1,400 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சீனாவில், நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் பணியில் அந்த நாட்டு தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால், அந்த நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அந்த நாட்டு அமைச்சர்கள் ஸ்டார் ஹோட்டலில் தங்குவது போன்றவற்றைத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. 7 வயது பூட்டான் இளவரசரான ஜிக்மே நம்கெல் வாங்சுக் (Jigme Namgyel Wangchuck) அந்த நாட்டின் முதல் டிஜிட்டல் குடிமகனானார். கம்போடியாவில் 11 வயது சிறுமி பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தார். 2014-க்குப் பிறகு H5N1 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் இவரே. உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில், ஸ்பெயின் நாட்டுப் பிரதமர் பெட்ரோ சான்சஸ் (Pedro Sánchez) உக்ரைன் சென்றடைந்தார். போர் குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக வங்கியின் தற்போதைய தலைவர் டேவிட் மல்பாஸ் விரைவில் பதவி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, முன்னாள் மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாகியான அஜய் பங்காவை உலக வங்கியை வழிநடத்த பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் நேற்று அறிவித்திருக்கிறார். லண்டனிலுள்ள ரஷ்ய தூதரகத்தின் வாசலில் பெரிய வடிவில் உக்ரைன் கொடி வரையப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.டிக் டாக் ஐரோப்பிய ஆணையம் அதன் ஊழியர்களின் கைப்பேசியிலிருந்து டிக் டாக் செயலிகளை அகற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறது. இணைய வழி தரவுகளைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. லெபனன் மத்திய வங்கியின் ஆளுநர் ரியாட் சலாமே (Riad Salameh) பண மோசடி வழக்கில் சிக்கியிருக்கிறார். ஆனால், அதை அவர் மறுத்திருக்கிறார்.
http://dlvr.it/SjzD5F

Friday, 24 February 2023

`நாட்டில் சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருமடங்காகிவிட்டது!' - ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை, அண்ணா சாலையில் இருக்கும் தாஜ் கன்னிமாரா ஹோட்டலில், 'கில்ட் ஆஃப் சர்வீஸ்' என்ற தொண்டு நிறுவனத்தின் நூற்றாண்டு விழா நேற்றைய தினம் நடந்தது. இந்த நிறுவனமானது கல்வியில் பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் ஊனமுற்றோர் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சமூக சேவைகளை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "கில்ட் ஆஃப் சர்வீஸ் தொண்டு நிறுவனம் கல்வி, பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் முன்னேற்றம், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றம் என பல தரப்பட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தச் சேவையை வழங்கும் என நான் நம்புகிறேன். சமூகத்தில் புறக்கணிக்கப்படும் நபர்களுக்கு சேவை நிறுவனங்கள், சேவையை வழங்க வேண்டும்.ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பாக சமூகத்தில் புறக்கணிக்கணிப்படும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள்மீது சேவை நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுடைய முன்னேற்றத்தில் பங்கு வகிக்க வேண்டும். இந்தியாவில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் பேரும், தமிழகத்தில் 40,000 பேரும் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள்கூட தொட்டு சிகிச்சையளிக்க மறுப்பதை நான் பார்த்திருக்கிறேன். புறக்கணிக்கப்பட்ட மனிதர்களாகிய தொழுநோயாளர்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு நாம் உதவ வேண்டும். அவர்களை நோக்கி நாம் நமது சேவைகளை செலுத்த வேண்டும். சேவை என்பது ஆயிரம் ஆண்டு பழைமையான நமது கலாசாரத்தில் ஊறிப்போன ஒன்று. நாம் நமக்காக மட்டுமல்ல பிறருக்காகவும் வாழ வேண்டும் என்பதை நம் மூதாதையர்கள் கற்றுத் தந்திருக்கின்றனர். அந்த பண்பு நம் டி.என்.ஏ-விலேயே இருக்கிறது. இந்த நாகரிக சமூகக் குடும்பத்தைத்தான் நாம் பாரத் என்று அழைக்கிறோம். அமெரிக்கா 2047-ல் நம்முடைய 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகையில் உலகத்துக்கே நற்குணங்களில் தலைசிறந்து விளங்கும் நாடாக நாம் திகழ வேண்டும். இந்தியா உலகிலேயே தலைசிறந்து விளங்கும்போது, உலகமே அதை மிகவும் சவுகரியமாக உணரும். நாம்தான் அதற்கு சான்று. ஐரோப்பிய நாடுகள் உலகிலேயே வலிமையாக இருந்தபோதும், அது காலனியாதிக்கத்துக்குத்தான் வழிவகுத்தது. மிகப் பெரிய அளவில் சுரண்டல்கள் நடந்தன. நாமே நமக்கு சான்று. அமெரிக்காவும், சோவித் ரஷ்யாவும் வலிமையானபோது, இரு நாடுகளும் தங்கள் கொள்கைகளால் வேறுபட்டு, எண்ணற்ற மக்களுக்கு வெறும் துயரத்தை மட்டுமே கொடுக்கின்றன. இதில் ஒன்று ஜனநாயகத்தின் பெயராலும், இன்னொன்று பொதுவுடைமை சிந்தாந்தத்தின் பெயராலும் நடக்கிறது.சீனா சீனா சமீபகாலமாக வலிமையடைவது எத்தகைய பாதிப்புகளை உருவாக்கி வருகிறது என்பதை நாம் கண்கூடாக நம் அருகிலிருக்கும் இலங்கை மூலமே பார்த்து வருகிறோம். நான் பாகிஸ்தான் பற்றி பேசவில்லை. ஆனால், இந்தியா உலக அரங்கில் வலிமை அடையும்போது இவ்வாறெல்லாம் நடக்காது. இந்த கொரோனாவின்போது என்ன நடந்தது என்று எண்ணிப் பாருங்கள். உலகமே செய்வதறியாது திகைத்தபோது, நம் நாடு தடுப்பூசிகளை உருவாக்கியது. பல நாடுகள் தாங்கள் உருவாக்கிய தடுப்பூசிகளின் விலையை ஏற்றிக் கொண்டிருந்தபோது, நாம் சுமார் 150 நாடுகளுடன் தடுப்பூசிகளை பகிர்ந்து கொண்டிருந்தோம். நம்முடைய தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திணறியபோதும், நாம் அதை செய்தோம். இதுதான் இந்தியா. உலகில் 3-ல் 2 பங்கு நாடுகள் குரலற்றவையாக இருக்கின்றன. அவை இந்தியா தங்கள் குரலாக எதிரொலிக்கும் என்று நம்புகின்றன.ரஷ்யா இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் அனைத்து நாடுகளையும் உற்றுநோக்க வைக்கிறது. இந்தியாதான் உலகின் நம்பிக்கை. நாம் இந்த நாட்டைப் பிளவுபடுத்தி, துண்டுகளாக, இடங்களாகப் பார்க்கவில்லை. ஒரு குடும்பமாகப் பார்க்கிறோம். காலனியாதிக்கவாதிகள்தான் நம் நாட்டை பிரித்தார்கள். 1951-ல் இருந்ததைவிட இப்போது சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருமடங்காகிவிட்டது. பழங்குடிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. புது, புது அடையாளங்களுடன் வருவோரின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. சமூகம் பிரிக்கப்படுகிறது. நாம் அடுத்தவர்களின் கண்களாகச் செயல்படும் போதுதான் இத்தகைய பிரிவுகள் உருவாகின்றன. ஆனால் நாம் நம்முடைய கண்களால் பார்த்தோமானால் ஒரு குடும்பமாகத்தான் இருக்கிறோம். இருக்க வேண்டும். இங்கே ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லை. இங்கே இருக்கும் பிரச்னைகளை ஒரு குடும்பத்தின் பிரச்னையாகத்தான் கருதி தீர்க்க வேண்டுமே தவிர, பிரிக்கக் கூடாது" என்றார். ஆளுநர் ரவி: `அரசியல், சரித்திரத்தைக் குறிவைத்து மேடைதோறும் பேசுவதன் தாக்கம் என்ன?!'
http://dlvr.it/SjwJsM

Thursday, 23 February 2023

போலி கொரோனா மருந்து ஏற்றுமதி; ரூ.6 கோடி மோசடி செய்த சென்னை தம்பதி - போலீஸில் சிக்கியது எப்படி?

சென்னை கீழ்கட்டளையில் ஹரிஹர சுப்பிரமணியம் என்பவருக்குச் சொந்தமான முருகப்பா ஹோல்சேல்ஸ் சப்ளையர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தை அவரின் மனைவி காஞ்சனாவும் சேர்ந்து கவனித்து வருகிறார். இந்த நிறுவனத்திலிருந்து அமெரிக்காவில் செயல்பட்டுவரும் டி.யூ.சி.எஸ் ப்ளாரிஸ் என்ற நிறுவனத்துக்கு கொரோனா மருந்து ஏற்றுமதி செய்யப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது.ஹரிஹர சுப்பிரமணியம் முதற்கட்டமாக ஹரிஹர சுப்பிரமணியம் மருந்தின் மாதிரிகளை அனுப்பியிருக்கிறார். அதனடிப்படையில் 6.29 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளுக்கான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அதற்கான தொகையையும் அந்த அமெரிக்க நிறுவனம் ஆன்லைன் மூலமாக இவர்களுக்குச் செலுத்தியிருக்கிறது. இந்த நிலையில், பணத்தைப் பெற்றுக்கொண்ட முருகப்பா ஹோல்சேல்ஸ் சப்ளையர்ஸ் என்ற ஹரிஹர சுப்பிரமணியத்தின் நிறுவனம், போலியான கொரோனா மருந்துகளை ஏற்றுமதி செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் அளித்திருக்கிறது. அந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஹரிஹர சுப்பிரமணியம், அவர் மனைவி காஞ்சனா ஆகிய இருவரையும் நேற்று போலீஸார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.கைது காஞ்சனாவுக்குக் கைக்குழந்தை இருப்பதால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. மேலும், அவர்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி ஹரிஹர சுப்பிரமணியம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிறுவனம் டெல்லியிலிருந்து மருந்தை வாங்கி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இந்த மோசடி குற்றச்சாட்டுத் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.சவப்பெட்டியில் கசிந்த மின்சாரம் தாக்கி இளைஞர் பலி; துக்க வீட்டில் நடந்த சோகம்! - என்ன நடந்தது?
http://dlvr.it/SjsDFT

அரிய மரபுநோய் பாதித்த சிறுவனுக்கு உதவி; ரூ.11.6 கோடி அனுப்பிய பெயர் வெளியிட விரும்பாத நபர்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் நெடும்பாச்சேரி மேய்க்காடு பகுதியை சேர்ந்தவர் சாரங்க். வணிகக் கப்பலில் பணி புரிந்து வருகிறார். இவரின் மனைவி அதிதி. இவர்களின் மகன் நிர்வாணுக்கு ஒன்றரை வயது ஆகிறது. பிறந்து 13 மாதங்கள் ஆன பிறகும் நிர்வாணுக்கு நிற்கவோ, எழுந்து அமரவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்துகடந்த ஜனவரி மாதம், மருத்துவர்கள் மூன்று வாரம் பரிசோதனை நடத்தியதை தொடர்ந்து நிர்வாணுக்கு ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (Spinal Muscular Atrophy - SMA) ) என்ற அரிய வகை மரபணு நோய் பாதித்துள்ளதாகக் கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இரண்டு வயது நிறைவடைவதற்கு முன்பு அதற்கான சிகிச்சை அளிக்காமல் இருந்தால் சிறுவனை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து 17.3 கோடி ரூபாய் மதிப்புள்ள சோல்ஜென்ஸ்மா(Zolgensma) என்ற மருந்தை வரவழைத்து நிர்வாணுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தன் மகன் நிர்வாணுடன் சாரங்க் இதையடுத்து சாரங்க் - அதிதி தம்பதி தங்கள் மகன் சிகிச்சைக்கு உதவி கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். கிரௌடு ஃபண்டிங் ஆப் மூலம் மகனின் சிகிச்சைக்காக உதவுபவர்கள் பணம் அனுப்ப ஒரு வங்கிக் கணக்கு எண்ணும் வெளியிட்டனர். இதுகுறித்து மீடியாக்களும் செய்தி வெளியிட்டன. நிர்வாணின் சிகிச்சைக்காக சில கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் சேர்ந்துள்ளது. இந்த நிலையில், தனது பெயர் உள்ளிட்ட சுய விவரங்களை வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன், வெளிநாட்டில் இருந்து ஒருவர் 1.4 மில்லியன் டாலர் தொகையை நிர்வாணின் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில் 11.6 கோடி ரூபாய். பெரும்தொகை ஒரே தவணையாக வங்கியில் வந்துள்ளது நிர்வாணின் பெற்றோருக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. நிர்வாணின் சிகிச்சைக்காக இதுவரை 16.3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் சேர்ந்துள்ளதாக சாரங்க் - அதிதி தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.சாரங்க் - அதிதி தம்பதிஅரியவகை பிறவிக்கோளாறு, நிரந்தர புன்னகை; சமூக வலைதளத்தில் வைரலாகும் செல்லக் குழந்தை! மொத்த தொகையும் செலுத்திதான் அமெரிக்காவில் மருந்து ஆர்டர் செய்ய முடியும். ஆர்டர் செய்யப்பட்டு 20 நாள்களுக்கு பிறகே அமெரிக்காவில் இருந்து மருந்து இங்கு வந்து சேரும். அதன் பிறகுதான் சிகிச்சை தொடங்க முடியும். எனவே சிகிச்சைக்கான தொகையை விரைந்து திரட்டும் முனைப்பில் இருக்கின்றனர் நிர்வாணின் பெற்றோர்.
http://dlvr.it/SjsD42

Wednesday, 22 February 2023

ஜோ பைடனின் `சர்ப்ரைஸ்’ விசிட் - உக்கிரமாகப் போகிறதா ரஷ்யா - உக்ரைன் மோதல்?!

"கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்..." 'நேட்டோ' படையில் இணையப்போவதாக உக்ரைன் அறிவித்து, மேலும் அதற்கான முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்து வந்தார். அப்போது அவர், "உக்ரைன் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று தெரிவித்திருந்தார். ஆனால், அந்த நாடு தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இதையடுத்து, உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு புதின் உத்தரவிட்டார். ஜோ பைடனின் சர்ப்ரைஸ் உக்ரைன் விசிட் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போர், தொடர்ந்து நடந்துவருகிறது. மறுபுறம் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு நாடுகள், உக்ரைனுக்கு உதவி செய்து வருகிறது. இதனால் இரண்டு தரப்பிலும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில், உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஆயுதங்களை வழங்க அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. மறுபுறம் ரஷ்யாவுடன் சீனா கைகோத்திருக்கிறது. "ஜோ பைடனின் சர்ப்ரைஸ் விசிட்" ரஷ்யாவுக்குத் தேவையான ஆயுத உதவிகளை சீனா விரைவில் வழங்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, வரும் காலங்களில் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் மேலும் உக்கிரமடையும் எனச் சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஜோ பைடனின் சர்ப்ரைஸ் உக்ரைன் விசிட் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த 20-ம் தேதி 'கீவ்' நகருக்கு எவ்விதமான முன்னறிவிப்பின்றி பயணம் செய்தார். அப்போது அவர், "ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான போரின் ஓராண்டு நிறைவுக்கு முன்னதாக உக்ரைனுக்கு வலுவான ஆதரவை அமெரிக்கா வழங்கும்" என ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு உறுதியளித்தார். அப்போது ரஷ்யா ஏவுகணை அல்லது வான்வழித் தாக்குதல்கள் எதுவும் நடத்தவில்லை. 500 மில்லியன் டாலருக்கு உதவி: இருந்தபோதிலும் தலைநகர் முழுவதும் சைரன்கள் ஒலித்தன. அப்போது பேசிய பைடன், "கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்பு புதின் தனது படையெடுப்பைத் தொடங்கியபோது, ​​உக்ரைன் பலவீனமாக இருப்பதாகவும், மேற்கு நாடுகள் பிளவுபட்டிருப்பதாகவும் நினைத்தார். எங்களை மிஞ்சலாம் என்றும் நினைத்தார். ஆனால், அவர் தவறு செய்துவிட்டார். ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்ப்பதில் உக்ரைனியர்கள் துணிச்சலாக இருப்பது பாராட்டுதலுக்குரியது. உக்ரைனின் தியாகங்கள் மிகப் பெரியவை. ஜோ பைடனின் சர்ப்ரைஸ் உக்ரைன் விசிட் கடினமான நாள்கள், வாரங்கள் மற்றும் வருடங்கள் வரவிருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். எனவே, பீரங்கி வெடிமருந்துகள், கவச எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்பு ரேடார்கள் உட்பட மேலும் 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் வழங்கப்படும். ரஷ்யாமீது மேலும் கடுமையான தடைகள் விதிக்கப்படும்" என்றார். பின்னர் ஜெலன்ஸ்கி, "அமெரிக்க ஜனாதிபதி பைடனின் வருகை அனைத்து உக்ரேனியர்களுக்கும் ஆதரவளிப்பதற்கான மிக முக்கியமான அடையாளம்" என்றார். "மேற்குலக நாடுகளின் பினாமி யுத்தம்..." இது குறித்து ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர்கள், "ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஒரு முக்கிய உரையை ஆற்றுவதற்கு ஒரு நாள் முன்னதாக, அமெரிக்க அதிபரின் இந்த திடீர் வருகை நடந்திருக்கிறது. இது மேற்குலக நாடுகளின் பினாமி யுத்தம். எனவே, இரண்டாவது வருடத்துக்கான ரஷ்யாவின் நோக்கங்களை மாற்றி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் மூலோபாயப் போரில் அமெரிக்கா பந்தயம் கட்டியிருக்கிறது. ஜோ பைடனின் சர்ப்ரைஸ் உக்ரைன் விசிட் இந்தப் போரே ரஷ்யாவுக்கும், மேற்கு நாடுகளுக்கும் இடையேயான போராக மாற்ற முடியாத அளவுக்கு மாறியிருக்கிறது என்பதற்கு இது கூடுதல் சான்றாகக் கருதப்படும்" என்றனர். ஏற்கெனவே ரஷ்யாவுடனான மேற்கு நாடுகள் உறவுகளில் ஒரு வெளிப்படையான முறிவை இலக்காகக் கொண்டிருக்கிறது. தற்போது நிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரஷ்யா ஆயிரக்கணக்கான படைவீரர்கள் மற்றும் கூலிப்படையினரைக் கொண்டு குளிர்கால தாக்குதலுக்குத் திட்டமிட்டிருக்கிறது. "ரஷ்யாவுக்கு வரும் சீன வெளியுறவு மந்திரி..." எனவே, இதை போரின் கொடிய கட்டத்துக்கான முக்கிய உந்துதலாக மேற்குலக நாடுகள் கருதுவது குறிப்பிடத்தக்கது. சமீப வாரங்களில் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தியதில் ரஷ்யா மிகக் குறைவான வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கிறது. இதற்கிடையில், ரஷ்ய தலைநகருக்கு சீன வெளியுறவு மந்திரி வாங் யி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ரஷ்யாவுடன் வரம்புகள் இல்லா நட்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட போதிலும், சீனா இதுவரை மோதலில் நடுநிலை வகிக்கிறது. ஜோ பைடனின் சர்ப்ரைஸ் உக்ரைன் விசிட் இருப்பினும் விரைவில் சீனா, ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கத் தொடங்கலாம் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. மேலும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், சீனாவின் உயர்மட்ட ராஜதந்திரி வாங் யீ மாஸ்கோவுக்கு வருகை தரவிருப்பதை உறுதிப்படுத்தினார். ஆனால், பயணத்துக்கான தேதி எதுவும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக மேலும் அவர், "வாங் மற்றும் ஜனாதிபதி புதின் இடையேயான சந்திப்பை நாங்கள் நிராகரிக்கவில்லை. நிகழ்ச்சி நிரல் தெளிவானது மற்றும் மிகவும் விரிவானது. எனவே, பேசுவதற்கு நிறைய இருக்கிறது" என்றார். அமெரிக்காவுக்கு சவாலாக இருக்கும் சீனா, ரஷ்யா: இது தொடர்பாக சீன உயர்மட்ட அதிகாரி ஒருவர், "வாங் விரைவில் மாஸ்கோ செல்வார். உக்ரைன் மோதலுக்கு அரசியல் தீர்வு மற்றும் இருதரப்பு பிரச்னைகளுக்கான சீன யோசனைகள் குறித்து விவாதிப்பார்" என்றும் கூறினார். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை எதிர்த்து, புதினுக்கு ஆதரவாக நின்றார். உக்ரைன் படையெடுப்புக்குப் பிறகு சீன - ரஷ்ய வர்த்தகம் உயர்ந்திருக்கிறது. மேலும் ரஷ்யா, சீனா உட்பட ஆசிய நாடுகளுக்கு அதிக அளவு எண்ணெயை விற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.ஜோ பைடனின் சர்ப்ரைஸ் உக்ரைன் விசிட் கடந்த வாரம் பேசிய வாங், `உக்ரைன் நெருக்கடியின் அரசியல் தீர்வு குறித்த சீனாவின் நிலைப்பாட்டை முன்வைக்கும். சீனா அமைதி மற்றும் பாதுகாப்பின் பக்கம் இருக்கிறது' என்றார். சீனாவையும் ரஷ்யாவையும் தனது பாதுகாப்புக்கு இரண்டு பெரிய அச்சுறுத்தல்களாகக் அமெரிக்கா காட்டுகிறது. தொழில்நுட்பம் முதல் உளவு மற்றும் ராணுவ சக்தி வரை அனைத்திலும் அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு சீனாவும், ரஷ்யாவும் சவால் விடும் வகையில் இருக்கிறது. உக்ரைனுக்கு எதிரான மாஸ்கோவின் நடவடிக்கையை சீனா கண்டிக்கவில்லை. மேலும், அதை ’படையெடுப்பு’ என்றும் அழைக்கவில்லை. மாறாக அதை ரஷ்யாவின் சொந்த பாதுகாப்பை பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட `சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்று விவரிக்கிறது. "நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்..." இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், "உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு சீனா ஆதரவை வழங்கினால், பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று தெரிவித்தார். இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், "சீன-ரஷ்யா உறவுகள்மீது அமெரிக்கா விரல் நீட்டுவதையோ அல்லது எங்களை வற்புறுத்துவதையோ நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.ஜோ பைடனின் சர்ப்ரைஸ் உக்ரைன் விசிட் அமெரிக்கா சர்வதேச விதிமுறைகளை வெறித்தனமாக மீறி வருகிறது. ரஷ்யாவுடனான சீனாவின் விரிவான கூட்டுறவானது அணிசேராமை, மோதாமல் இருத்தல் மற்றும் மூன்றாம் தரப்பினரை இலக்காகக் கொள்ளாதது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. மேலும், இது இரண்டு சுதந்திர நாடுகளின் இறையாண்மைக்கு உட்பட்டது. போரை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்று ஐரோப்பிய நாடுகள் அமைதியாக சிந்திக்க வேண்டும். ஆனால், பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறுவதையோ அல்லது போர் விரைவில் முடிவுக்கு வருவதையோ விரும்பாத சில சக்திகள் இருக்கிறது" என்றார். ரஷ்யாவுக்கு இழப்பு: இதற்கிடையில், உக்ரைனின் டான்பாஸ் சுரங்கம் மற்றும் தொழில்துறை பகுதியை உருவாக்கும் இரண்டு கிழக்கு மாகாணங்களின் முழு கட்டுப்பாட்டைப் பெற ரஷ்யா முயன்று வருகிறது. இதற்காக வடக்கில் கிரெமின்னாவிலிருந்து தெற்கில் வுஹ்லேதார் வரை இயங்கும் இடங்களில் தாக்குதல்களைத் தொடங்கியிருக்கிறது. வரும் மாதங்களில் திட்டமிட்ட எதிர்த்தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கும் உக்ரைன், மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களின் பெரும் வரவுகளை சேகரித்துக்கொண்டிருக்கிறது.ஜோ பைடனின் சர்ப்ரைஸ் உக்ரைன் விசிட் மேலும், சமீபகாலமாக முக்கியமாக போர்க்களத்தில் தற்காப்புப் பணியில் ஈடுபட்டு, தாக்குதல் நடத்தும் ரஷ்யப் படைகளுக்குப் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாகவும் அந்த நாடு தெரிவித்திருக்கிறது. அந்த நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, "நாங்கள் படையெடுப்பாளர்களை உடைத்து, ரஷ்யாவுக்கு அசாதாரணமான குறிப்பிடத்தக்க இழப்புகளை ஏற்படுத்துகிறோம். டான்பாஸில், வுஹ்லேடர், மரிங்கா, கிரெமின்னா ஆகிய பகுதிகளில் ரஷ்யா எவ்வளவு இழப்புகளை சந்திக்கிறதோ, அவ்வளவு விரைவாக, உக்ரைனின் வெற்றியுடன் இந்தப் போரை முடிக்க முடியும்" என்றார். அரசியல் அழுத்தத்தில் ரஷ்யப் படைகள்: மேலும், இது தொடர்பாக பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம், "இந்தப் போரினால் ரஷ்யா பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்து வருகிறது. இதில் இரண்டு உயரடுக்கு படையணிகள் உட்பட ஆயிரக்கணக்கான கடற்படையினர் உக்ரைனிய கோட்டையான வுஹ்லேடரைத் தாக்குவதற்கான முயற்சியில் தோல்வியுற்றிருக்கிறார்கள். எனவே, இந்தப் போர் பயனற்றதாக இருக்கலாம். படையெடுப்பின் ஆண்டுவிழா நெருங்கிவருவதால் ரஷ்யப் படைகள் அரசியல் அழுத்தத்துக்கு உள்ளாகக்கூடும். ரஷ்யா களத்தில் இருக்கும் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் பக்முட்டைக் கைப்பற்றியதாகக் கூறுகிறது.ஜோ பைடனின் சர்ப்ரைஸ் உக்ரைன் விசிட் மேலும் அந்த நாடு குளிர்கால தாக்குதலிலும் வெற்றிபெறத் தவறினால், ரஷ்யா தலைமைக்குள் பதற்றங்கள் அதிகரிக்கும்" எனத் தெரிவித்திருக்கிறது. மேலும் மேற்கத்திய அரசுகள், "கிழக்கு மற்றும் தெற்கு முனைகளின் சந்திப்பில் உக்ரைனியப் படைகள் காத்துக்கொண்டிருக்கும் வுஹ்லேடார் மீதான ரஷ்யத் தாக்குதல்கள் தோல்வியடைந்தது. கண்ணிவெடிகள் வைக்கப்பட்ட வயல்களில் அதைத் தாக்க முயன்ற ஆயிரக்கணக்கான வீரர்களையும், ஏராளமான கவச வாகனங்களையும் ரஷ்யா இழந்திருக்கிறது' என்று தெரிவித்திருக்கிறது. "திடீரென வெடி சத்தம்..." தற்போதைய உக்ரைன் நிலவரம் குறித்து பெண் ஒருவர், "நாங்கள் வீட்டுக்குள் இருந்தபோது திடீரென வெடிச்சத்தம் கேட்டது. அப்போது ஒரு குளிர்சாதனப்பெட்டி என் மேல் விழுந்ததால், அதனால்தான் பிழைத்தேன். பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கண்டுபிடித்து என்னை வெளியே இழுத்துவந்தனர். இங்கு இருப்பதற்கே பயமாக இருக்கிறது. கடந்த ஆண்டு பிப். 24-ம் தேதி முதல் நடந்துவரும் போர் இரு தரப்பிலும் சேதாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜோ பைடனின் சர்ப்ரைஸ் உக்ரைன் விசிட் குறிப்பாக பல்லாயிரக்கணக்கான உக்ரைனிய குடிமக்கள் மற்றும் வீரர்களைக் கொன்றது, மில்லியன் கணக்கானவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து விரட்டியது மற்றும் நகரங்களை இடிபாடுகளாக்கியிருக்கிறது" என்றார். இதற்கிடையில் இந்த ஆண்டின் தொடக்கத்திலிந்து, நூற்றுக்கணக்கான டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் உட்பட உக்ரைனுக்கு அதிக ராணுவ ஆதரவை மேற்கத்திய நாடுகள் வழங்குவதாக உறுதியளித்திருக்கின்றன.'அடுத்த வாரம் தொடங்கும் புதிய தாக்குதல்?' - கிழக்கு உக்ரைனில் ஆயுதங்களைக் குவிக்கும் ரஷ்யா நீண்ட தூர ராக்கெட்டுகள் மற்றும் போர் விமானங்கள் உட்பட பலவற்றை உக்ரைன் விரும்புகிறது. மேற்கத்திய நாடுகள் ஜெட் விமானங்களை அனுப்பும் முடிவின் விளிம்பில் இருப்பதாக உக்ரைன் கூறி வருகிறது. இருப்பினும் இதற்கான முடிவு எப்போது அறிவிக்கப்படும் என்பதும், எத்தனை விமானங்கள் ஒப்படைக்கப்படவிருக்கிறது என்பதும், அவற்றில் என்ன வகையான ஆயுதங்கள் இருக்கும் என்பது முக்கியமான கேள்விகளாக இருக்கின்றன. இந்த நடவடிக்கைகளால் மோதல் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://dlvr.it/Sjp6y6

Tuesday, 21 February 2023

கருக்கலைப்புக்கு அனுமதி மறுப்பு... குழந்தையின் மரணத்தைப் பார்க்க வேண்டிய அவலத்தில் பெற்றோர்!

ஃபுளோரிடாவில் இருக்கிற கருக்கலைப்புத் தடை சட்டத்தால், அம்மாகாணத்தைச் சேர்ந்த தம்பதியர், தங்கள் குழந்தையின் மரணத்தைக் கண்ணெதிரே பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  அமெரிக்காவில் உள்ளமா காணங்களில் ஒன்று ஃபுளோரிடா.  இங்கு வசித்து வருகிறார்கள் டெபோரா டோர்பர்ட் மற்றும் லீ டோர்பர்ட் தம்பதியர். இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு குழந்தையிருக்க, தற்போது இரண்டாவது முறையாக  கருத்தரிக்கிறார் டெபோரா.  சென்ற வருடம் நவம்பர் மாதம் கருவின் வளர்ச்சி நிலையைத் தெரிந்து கொள்ள ஸ்கேன் செய்து பார்த்தபோது, கருவிலுள்ள குழந்தையின் சிறுநீரகங்கள் சரியாக வளர்ச்சி அடையவில்லை என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.கருக்கலைப்புச் சட்டம் இந்தக் குழந்தை பிறந்தால் அதன் சிறுநீரகங்களால் உடலில் உருவாகிற கழிவுகளை வெளியேற்ற முடியாது; கூடிய விரைவில் சிறுநீரகங்கள் செயலிழந்து விடும் என்பதுதான் நிலைமை. தவிர, கர்ப்பப்பைக்குள் நீரின் அளவு குறைவாக இருப்பதால், குழந்தையால் மூச்சு விடவும் முடியாத நிலைமை. இதை பாட்டர் சிண்ட்ரோம் (Potter syndrome) என்பார்கள். இந்தப் பிரச்னை இருக்கிற சிசுக்கள் பெரும்பாலும்  தாயின் வயிற்றுக்குள்ளேயே இறந்துவிடலாம் அல்லது பிறந்த சில நிமிடங்களில் அல்லது சிலமணி நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடையலாம்.  கருவிலிருக்கிற சிசுவின் நிலையை அறிந்துகொண்ட பெற்றோர், உடனடியாக கருவைக் கலைப்பது என முடிவு செய்தனர். மருத்துவரும்,  'கருக்கலைப்பு செய்யலாம். ஆனால் 28-வது வாரத்திலிருந்து 32-வது வாரம் வரைக்கும் கருவைக் கலைக்க முடியாது' என அறிவுறுத்தியிருக்கிறார்.  ஆனால், கடந்த ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் நாடு தழுவிய கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்ததை அடுத்து, ஃபுளோரிடா மாகாணத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, தவிர்க்க முடியாத மருத்துவ காரணங்களைத் தவிர, கரு உருவான 15 வாரங்களுக்குப் பிறகு அதைக் கலைக்க முடியாது. முக்கியமாக கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் கலைப்பதற்கு அனுமதி கிடையாது. இதன் காரணமாக, டெபோராவை 37-வது வாரம் வரைக்கும் காத்திருக்குமாறு பணித்திருக்கிறார்கள்.கருக்கலைப்புச் சட்டம்அமெரிக்கா: கருக்கலைப்பு தீர்ப்பு; பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10 வயது சிறுமி சந்தித்த சிக்கல்! இந்தச் சட்டத்தை மீறும் மருத்துவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்; அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என்பதால் டெபோராவுக்கு எந்த மருத்துவரும் உதவி செய்ய முடியாத நிலைமை. பொருளாதார சூழ்நிலை காரணமாக, வேறொரு மாகாணத்திற்குச் சென்றும் டெபோரா தம்பதியரால், கருக்கலைப்பு செய்துகொள்ள முடியவில்லை.  'என்னுடைய ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் எது சிறந்தது என மருத்துவர்கள் முடிவெடுப்பது எனக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது' என்கிறார் டெபோரா டோர்பர்ட். அவருடைய கணவரோ, 'எங்களுடைய பிரச்னை விதிவிலக்கானது. இதையும் நீங்கள் யோசிக்க வேண்டும்' என்று வருத்தப்பட்டிருக்கிறார். 
http://dlvr.it/Sjl50p

Monday, 20 February 2023

சிவராத்திரியையொட்டி கோயிலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் சாலை விபத்தில் பலி

ஆந்திர மாநிலத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆடங்கி காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருந்தவர் சமாந்தர். இவர் சிவராத்திரியை முன்னிட்டு தனது மனைவி, மகள் மற்றும் இரண்டு பேருடன் காரில் சின்னகஞ்சம் நகரில் இருக்கும் சிவன் கோயிலுக்கு நேற்று இரவு சென்றுள்ளார். கோயிலுக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை அனைவரும் ஊர் திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் பயணித்த கார் மேதர்மிட்லா அருகே வந்தபோது டிவைடர் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரை தொடர்ந்து பின்னால் வேகமாக வந்த லாரி, கார் மீது மோதி காரில் பயணித்த டிரைவர் உள்ளிட்ட ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற ஆடங்கி காவல்நிலைய போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக பாபட்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
http://dlvr.it/SjhF8W

Sunday, 19 February 2023

புற்றுநோய் பாதிப்பு; அதுவரை அறியாத வெளிநாட்டு மொழி உச்சரிப்பில் பேசிய நோயாளி!

மோசமான நோயால் ஒருவர் பாதிக்கப்படுகையில், அவர் உடலளவிலும் மனதளவிலும் சோர்வடைந்து, வெறுப்பு, எரிச்சல், கோபம் என பல்வேறு குணங்களை வெளிப்படுத்துவதுண்டு. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 50 வயது நபர் ஒருவர் தனக்குச் சற்றும் பரிச்சயமில்லாத வேறொரு மொழியைப் பேசியுள்ளார்.புராஸ்டேட் புற்றுநோய் ! அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் வசித்து வரும் 50 வயது நபர், புராஸ்டேட் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். கேன்சரால் பாதிக்கப்பட்ட இவர், அயர்லாந்து மொழியைச் சரளமாகப் பேசியிருக்கிறார். இவரது குடும்பம் அயர்லாந்தில் இல்லை. அந்த மொழி குறித்து அறிந்திராதபோதும், இவரால் அயர்லாந்து மொழியைப் பேச முடிந்துள்ளது. ஆராய்ந்ததில், ஃபாரின் அக்ஸன்ட் சிண்ட்ரோம் (Foreign Accent Syndrome - FAS) என்ற அரிய நிலையால் இவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த அரிய நிலை குறித்து வட கரோலினாவில் உள்ள டியூக் பல்கலைக்கழகமும், தென் கரோலினாவில் உள்ள கரோலினா யூராலாஜிக் ஆராய்ச்சி மையமும் இணைந்து ஆய்வுசெய்து அறிக்கை அளித்தது.  அதில், ``எங்களுக்குத் தெரிந்தவரை புராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி முதன்முறையாக ஃபாரின் அக்ஸன்ட் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவர் தனது 20-களில் இங்கிலாந்தில் வசித்து வந்தார். அயர்லாந்தில் இவருக்கு நண்பர்கள் மற்றும் தொலைதூர குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்படும் வரை, வெளிநாட்டு உச்சரிப்புடன் அவர் பேசியதில்லை.Treatment (Representational Image)`புராஸ்டேட் கேன்சர்... விறைப்புத்தன்மை குறைய காரணமாகுமா?' - காமத்துக்கு மரியாதை | S 3 E 24 அதோடு நரம்பியல் பரிசோதனைகளில் எவ்வித அசாதாரண பாதிப்பும் இல்லை. மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட வரலாறும் இல்லை. புற்றுநோயின் அறிகுறிகளின் தொடக்கத்தில் கூட மூளையில் அசாதாரண பாதிப்புகள் இருந்ததாகத் தெரியவல்லை.   இருந்தபோதும் அவரது உச்சரிப்பு கட்டுப்படுத்த முடியாததாக இருந்தது. அந்த உச்சரிப்பு படிப்படியாகத் தொடர்ந்து மாறியது. இவரின் நிலை மோசமடைந்த போதும், பல மாதங்கள் கழித்து அவர் இறக்கும் வரை இருந்தது. கீமோதெரபி கொடுக்கப்பட்டபோதும், புற்றுநோய் பாதிப்பு அதிகரித்தது. இதனால் பக்கவாதமும், பாராநியோபிளாஸ்டிக் நியூரலாஜிகல் பாதிப்பும் (paraneoplastic neurological disorder) ஏற்பட்டது. இது புற்றுநோயாளிகளின் நோயெதிர்ப்பு அமைப்பு, மூளைப்பகுதி, தசைகள், முதுகுத்தண்டு ஆகியவற்றை பாதிக்கிறது. அதனால் குரலிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்'' எனத் தெரிவித்துள்ளனர். 
http://dlvr.it/Sjf7KT

அமெரிக்கா: `இந்த ஆண்டு மட்டும் 73 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்; போதும்..!' - ஜோ பைடன்

அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்திலுள்ள டேட் கவுன்ட்டியில் இருக்கும் அர்கபுட்லா அணை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. மொத்தம் ஆறு பேர் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சுடும் சத்தத்தைக் கேட்ட சிலர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இந்தத் தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் சோதனை செய்த காவல்துறையினர், சந்தேகத்துக்குரிய நபரைக் கைதுசெய்தனர். இந்த நிகழ்வு அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``இந்த வருடம் தொடங்கி 48 நாள்கள்தான் ஆகின்றன. அதற்குள் 73 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று, ஏராளமானோர் இறந்திருக்கின்றனர்.துப்பாக்கிச்சூடு அதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணமும், பிரார்த்தனைகளும் மட்டும் போதாது. துப்பாக்கி வன்முறை ஒரு தொற்றுநோய். நாடாளுமன்றம் இப்போது இதற்கு எதிராகச் செயல்பட வேண்டும். தற்போது நமக்குத் தேவையானது காமன்சென்ஸ் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்கள்தான்” எனத் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் கடந்த ஆண்டில் துப்பாக்கி தொடர்பான வன்முறையில் 44,000 பேர் உயிரிழந்தனர் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.'கோவையில் துப்பாக்கி கலாசாரம், சினிமா பாணியைப்போல தலைதூக்குகிறது!' - வானதி சீனிவாசன்
http://dlvr.it/Sjf77d

Saturday, 18 February 2023

ஆக்‌ஷன் ஹீரோ புரூஸ் வில்லிஸுக்கு டிமென்ஷியா; சிகிச்சையளிக்க முடியாத அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

அமெரிக்க ஆக்‌ஷன் ஹீரோவான புரூஸ் வில்லிஸ் (Bruce Willis), `டை ஹார்ட்’ படத்தில், தன்னுடைய அபாரமான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இவருக்கு தற்போது 67 வயதான நிலையில், சிகிச்சை அளிக்க முடியாத டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.மறக்கடிக்கும் டிமென்ஷியா! திரைத்துறையை விட்டு கடந்த மார்ச் மாதம் இவர் விலகினார். அதன்பின் அவர் குறித்த எந்தத் தகவலும் பெரிதாக வெளி வரவில்லை. இந்நிலையில், இவர் சிகிச்சை அளிக்க முடியாத டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ``2022 வசந்த காலத்தில், புரூஸ் அஃபேசியா (Aphasia) எனும் நிலையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தோம். (அஃபேசியாவால் பாதிக்கப்படுகையில், பேசவும் எழுதவும், மற்றவர் பேசுவதைப் புரிந்துகொள்ளவும் முடியாது). இதை அறிவித்ததில் இருந்து அவரின் நிலை மோசமடைந்தது. தற்போது அவர் `ஃப்ரன்டோடெம்போரல் டிமென்ஷியா’ (frontotemporal dementia) என்ற மறதி நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார். இதனால் மூளையில் ஆளுமை, நடத்தை மற்றும் மொழி ஆகியவற்றைக் கையாளும் பகுதிகள் பாதிக்கப்படும்.treatmentஇளம் வயதில் தூங்காமல் இருந்தால் டிமென்ஷியா வருமா? - புதிய ஆய்வின் முடிவுகளும் சந்தேகங்களும்! இந்நோயின் அறிகுறிகளில் ஒன்றான பிறரோடு `தகவல் தொடர்பு' கொள்ளும் சவால்களை புரூஸ் எதிர்கொள்கிறார். இன்று இந்நோய்க்கான சிகிச்சை இல்லை; வரும் ஆண்டுகளில் இது மாறக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.   புரூஸின் இந்நிலைக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
http://dlvr.it/Sjc5YP

Friday, 17 February 2023

குடும்ப உறுப்பினர்களைக் கொலைசெய்த வழக்கு; சிறையில் தன் கண்ணையே பிடுங்கி விழுங்கிய கைதி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆண்ட்ரே தாமஸ் என்பவர் குடும்பத்துடன் வசித்துவந்திருக்கிறார். இவருக்கு ஒரு மகனும், வளர்ப்பு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த 2004-ம் ஆண்டு அவர், தன் மனைவி, மகன், வளர்ப்பு மகளைக் கொலைசெய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நடந்துவருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு தொடர்பாக அவரின் வழக்கறிஞர் மவுரி லெவின், ``ஆண்ட்ரே தாமஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதைப் பலமுறை தெரிவித்துவிட்டேன். கொலை நடப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, தாமஸ் தற்கொலைசெய்ய முயன்று, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையிலிருந்து தப்பிய ஆண்ட்ரோ தாமஸ், அதன் பிறகே தங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கொலைசெய்திருக்கிறார். குற்றம் நடந்த ஐந்து நாள்களுக்குப் பிறகு, கைதுசெய்யப்பட்டபோது, ​​அவர் தன் வலது கண்ணைப் பிடுங்கி, பைபிளின் கட்டளையைப் பின்பற்றுவதாகக் தெரிவித்திருந்தார். நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறது. இந்த நிலையில், அவரின் மரண தண்டனையை நிறுத்தக் கோரிவருகிறேன்.சிறை கருணையின் அடிப்படையில் ஒருவரை விடுதலை செய்வதென்றால், அதற்கு முதல் தகுதியான நபராக ஆண்ட்ரோ இருப்பார். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் அவர் தன் இன்னொரு கண்ணையும் பிடுங்கி விழுங்கியிருக்கிறார். அவரின் இந்தச் செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அவர் விடுதலை செய்யப்பட வேண்டும். அதோடு அவருக்கு உரிய சிகிச்சை வழங்க உதவிசெய்ய வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.ஊழல், மோசடி வழக்கில் பாஜக எம்எல்ஏ-க்கள் இருவருக்குச் சிறை, அபராதம்! - கர்நாடக அரசியலில் பரபரப்பு!
http://dlvr.it/SjYPTC

Thursday, 16 February 2023

அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸ்; ட்ரம்ப்பை எதிர்க்கும் இந்திய வம்சாவளிப் பெண்! - யார் இந்த நிக்கி ஹாலே?

அமெரிக்காவில் ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடிய வல்லமை பொருந்திய கட்சிகள் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகியவைதான். கடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றிபெற்று ஜோ பைடன் அதிபரானார். வரக்கூடிய அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே ஆகியோர் அதிபர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.நிக்கி ஹாலே உக்ரைன் போர்: "நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால்; 24 மணி நேரத்தில்..!'' - டொனால்டு ட்ரம்ப் 2016 அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற டொனால்டு ட்ரம்ப், 2020-ல் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில் 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில், `அதிபர் பதவிக்குப் போட்டியிடப்போகிறேன்' என ட்ரம்ப் ஏற்கெனவே அறிவித்திருந்தார். கரோலினா மாகாணத்தில் இரு முறை ஆளுநராக இருந்தவர் நிக்கி ஹாலே. இவரின் தந்தை பஞ்சாப்பைப் பூர்வீகமாகக்கொண்டவர். ட்ரம்ப் பதவிக்காலத்தில் ஐ.நா சபையின் பிரதிநிதியாகவும் இருந்தவர். அமெரிக்காவில் 39 வயதிலேயே மாகாண ஆளுநரான முதல் பெண் நிக்கி ஹாலே என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப், நிக்கி ஹாலே ”வரக்கூடிய அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன். நாட்டின் நிதிப் பொறுப்பை மீட்டெடுக்கவும், எல்லையைப் பாதுகாக்கவும், நமது நோக்கத்தை வலுப்படுத்தவும் புதிய தலைமுறை தலைமை வகிக்கவேண்டிய நேரமிது” எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நிக்கி ஹாலே. அமெரிக்க அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை, அதிபர் வேட்பாளராக நிற்க விரும்புபவர்கள் அரசியல் கட்சியினரின் ஆதரவைப் பெற வேண்டும். தேர்தல் சமயங்களில் இரு கட்சிகளின் சார்பில் மாநாடுகள் நடத்தப்படும். அவற்றில் கட்சியினரின் ஆதரவைப் பெறுபவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். குடியரசுக் கட்சியில் தற்போது இருவர் அதிபர் போட்டிக்குப் போட்டியிடுவதால், தேர்தலுக்குச் சிறிது காலம் இருந்தாலும் அரசியலில் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் மீண்டும் டொனால்டு ட்ரம்ப் - தாக்கங்கள் என்னென்ன?!நிக்கி ஹாலே ஆரம்பத்தில் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராகக் கருதப்பட்டவர் நிக்கி. 2020 தேர்தலில் களத்தில் ட்ரம்ப் வெற்றிபெற உழைத்தவர், மேலும், `ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிடப்போவதில்லை' எனக் கூறிவந்த நிக்கி, தற்போது, `அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போகிறேன்’ எனத் தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறார். குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வில் ட்ரம்ப்பை எதிர்த்து நிற்கும் முதல் நபர் இந்திய வம்சாவளிப் பெண்ணான நிக்கி ஹாலே என்பது குறிப்பிடத்தக்கதுநிக்கி ஹாலே சர்வதேச ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளின்படி 65 சதவிகிதம் பேர், ஜோ பைடனின் ஆட்சிக்கு அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். ஒருவேளை குடியரசுக் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறது என வைத்துக்கொண்டாலும், கொரோனா தொற்று, பொருளாதார நிலையைக் கையாண்டவிதத்தில் ட்ரம்ப் மீதும் அதிருப்திகள் அதிகமாகவே நிலவுகின்றன. ஆகவே, மாகாண ஆளுநர், ஐ.நா பிரதிநிதி என வெற்றிமுகம் கொண்டிருக்கும் நிக்கி ஹாலேவுக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.``தயாராகுங்கள்; 2025-ல் சீனாவுடன் போர் ஏற்பட வாய்ப்பிருக்கிறது'' - அமெரிக்கா எச்சரிக்கை
http://dlvr.it/SjVSK5

Wednesday, 15 February 2023

பறக்கும் தட்டுகள், ஏலியன்கள் நடமாட்டம்; உளவு பார்ப்பது ஏலியன்களா?! - அமெரிக்கா விளக்கம்

கடந்த பிப்ரவரி 3-ம் தேதி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்காவின் மான்டனா மாகாண பகுதிக்கு மேலே மர்ம பலூன் ஒன்று பறந்தது உலகெங்கும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் விசாரணையில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இது சீனாவினுடையது எனக் கண்டுபிடித்து `சீனா, எங்கள் நாட்டை உளவு பார்க்க இந்த பலூனை அனுப்பியிருக்கிறது' என்று குற்றம்சாட்டியிருந்தனர். இதை மறுத்த சீனா, "வானில் பறந்த பலூன் எங்களுடையதுதான். வானிலை ஆய்வுக்காகப் பறக்கவிடப்பட்ட பலூன், காற்றின் வேகம் மாறுபடுதல் காரணமாகத் திசைமாறி அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டது" விளக்கம் அளித்திருந்தனர். இந்த விளக்கத்தை அமெரிக்கா ஏற்கவில்லை.பறக்கும் தட்டுகள்: மாதிரிப் புகைப்படம் இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவின்படி கடந்த பிப்ரவரி 5ம் தேதி அந்த பறக்கும் பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதனால் அமெரிக்கா - சீனா இடையே பனிப்போர் நடக்க, இது உலகநாடுகள் மத்தியில் பேசுபொருளாகி பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தையடுத்து அமெரிக்காவில் இரண்டு, கனடாவில் ஒன்று என வானில் பறந்த மூன்று மர்மப் பொருள்களை (UFO - Unidentified Flying Objects) அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதில் பிரச்னை என்னவென்றால் முன்பு பறந்த பலூன் சீனாவினுடையது என்று கண்டறியப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு வானில் பறந்த இந்த மூன்று மர்மப் பொருள்கள் என்ன, அது யாருடையது என்பது பற்றி இன்னும் கண்டறியப்படவில்லை. இதற்காகச் சுட்டு வீழ்த்தப்பட்ட அதன் பாகங்களைத் தேடிச் சேகரித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது அமெரிக்க ராணுவம்.கரீன் ஜீன்-பியர்இதற்கிடையில் இந்த விஷயங்களைத் திசை திருப்பும் வகையில் இதற்குக் காரணம் ஏலியன்களாக இருக்கலாம், பறக்கும் தட்டில் அவர்கள் பூமிக்கு வந்திருக்கலாம், அமெரிக்காவை உளவு பார்ப்பது அவைதான் என்ற வதந்திகள் மக்களிடையே வேகமாகப் பரவின. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர், "இது பற்றிய உரிய விளக்கத்தை வெள்ளை மாளிகையிலிருந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த விவகாரம் பற்றிய நிறையக் கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கின்றன. ஆனால், இதில் ஏலியன்கள் அல்லது ஏலியன்களின் செயல்பாடுகள் தொடர்பான எந்தவொரு அறிகுறிகளும் இல்லை. இதை அமெரிக்க மக்களுக்கும் அனைவருக்கும் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். இந்த வதந்திகள் மக்களிடையே வேகமாகப் பரவி வருவதால் இதுகுறித்து தெளிவுபடுத்துவது அவசியமான ஒன்று" என்று கூறினார். மேலும் பேசிய அவர், "இருப்பினும், ஏலியன் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்று கிண்டலடித்தபடி கூறிச்சென்றார்.
http://dlvr.it/SjRXDG

Tuesday, 14 February 2023

நடனத்தில் அதீத நாட்டம்; யூடியூபைப் பார்த்து தென்கொரியா செல்ல முயன்ற ஊட்டி சிறுமிகள்!

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 9-ம் வகுப்பு பயின்றுவந்த இரண்டு மாணவிகள் கடந்த வாரம் திடீரென மாயமானதாகச் சிறுமிகளின் பெற்றோர் ஊட்டி காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்த நிலையில், மாயமான சிறுமிகள் இருவரும் கோவையில் இருப்பதைக் கண்டறிந்த காவல்துறையினர், இருவரையும் மீட்டு விசாரித்திருக்கின்றனர். மாயமான காரணத்தைச் சிறுமிகள் தெரிவித்ததைக் கேட்ட, காவல்துறையினர் திகைப்பில் ஆழ்ந்திருக்கின்றனர்.போலீஸ் விசாரணை இது குறித்து நம்மிடம் பகிர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர், " இரண்டு சிறுமிகளின் பெற்றோரும் கூலித் தொழிலாளர்கள்தான். சிறுமிகள் இருவருமே நடனக் கலையில் அளவுக்கு அதிகமாக நாட்டம் கொண்டிருக்கின்றனர். இணையத்தில் நடன நிகழ்ச்சிகள், நடனப் பயிற்சிகளை அதிகமாகப் பார்த்துவந்திருக்கின்றனர். பி.டி.எஸ் என்ற பிரபல தென்கொரிய ஆல்பம் நிகழ்ச்சிகளை செல்போனில் தொடர்ந்து பார்த்துவந்த மாணவிகள் இருவரும் தென்கொரியா சென்று இதேபோல் நடனம் கற்றுக்கொண்டு, மீண்டும் நீலகிரிக்குத் திரும்ப நினைத்திருக்கின்றனர். ஜெராக்ஸ் எடுக்கச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு கிளம்பிய இரண்டு மாணவிகளும் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு சென்னை சென்றிருக்கின்றனர். இருவரிடமும் இரண்டாயிரம் மட்டுமே இருந்ததால், தங்களிடமிருந்த நகைகளை வைத்து 20,000 ரூபாய் பெற்றிருக்கின்றனர். வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் இருப்பதை சென்னை சென்ற பிறகே அறிந்திருக்கின்றனர்.மீட்கப்பட்ட சிறுமிகள் மீண்டும் வீடு திரும்ப பயந்த சிறுமிகள் பாட்டி வீட்டுக்குச் செல்ல முடிவுசெய்து, மீண்டும் கோவை வந்திருக்கின்றனர். பாட்டியிடம் பேசுவதற்காக ஒரு மாணவி செல்போனை ஆன் செய்திருக்கிறார். செல்போன் சிக்னல் மூலம் அவர்கள் இருக்கும் இடம் உடனடியாக எங்களுக்குத் தெரியவந்தது. இருவரையும் மீட்டு அறிவுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தோம்" என்றார்.கோவை: கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய கார் - சைக்கிள் ஓட்டி விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!
http://dlvr.it/SjNdCg

Monday, 13 February 2023

``பிரதமர் மோடியால் புதினைச் சமாதானப்படுத்த முடியும்!" - வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பேட்டி

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி, கிட்டத்தட்ட ஓராண்டுக்காலம் ஆகியும் இன்னும் முடிவுறாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உக்ரைன், நேட்டோவில் சேர விருப்பம் தெரிவித்ததையடுத்து மூண்ட இந்தப் போரில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உட்பட மேற்கத்திய நாடுகள் பல ரஷ்யாவுக்குத் தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவந்தாலும், ரஷ்ய அதிபர் புதின் தன் முடிவை மாற்றிக்கொள்வதாக இல்லை.மோடி - புதின் இந்த நிலையில், `மோடியால் புதினைச் சமாதானப்படுத்த முடியும்' என்று அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியிருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் உக்ரைன் போரை நிறுத்த அல்லது புதினைச் சமாதானப்படுத்த மோடி தாமதமாகிவிட்டாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜான் கிர்பி, ``போரை நிறுத்த புதினுக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். பிரதமர் மோடியால் அவரை சமாதானப்படுத்த முடியும். பிரதமர் மோடி எத்தகைய முயற்சியை மேற்கொள்ளத் தயாராக இருந்தாலும் அதைப் பேச அனுமதிப்பேன்.அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும். இன்றைக்கே போர் முடிவுக்கு வர வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்" என்றார். ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய நாள்முதலே பேச்சுவார்த்தை ஒன்றுதான் இதற்குத் தீர்வு என்ற நிலைப்பாட்டையே இந்தியா கூறிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மீண்டும் பரபரப்பாகும் புதின் உடல்நிலை விவகாரம்: எப்படி இருக்கிறார் ரஷ்ய அதிபர்?
http://dlvr.it/SjKpXM

Sunday, 12 February 2023

இந்தியக் குடியுரிமையைத் துறப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம் என்ன? - ஓர் அலசல்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டவர்கள் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்திருக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 2,25,620 இந்தியர்கள் தங்களது குடியுரிமையைத் துறந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். கடந்த 11 ஆண்டுகளில் 2022-ம் ஆண்டு பதிவாகியிருக்கும் எண்ணிக்கையே மிகவும் அதிகமானது எனத் தெரிவித்திருக்கும் அவர், 2011-ம் ஆண்டு முதல் 2022 வரை 16,00,000-க்கும் அதிகமான இந்தியர்கள் குடியுரிமையைத் துறந்ததாகக் கூறினார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட விவரத்தின்படி, 2015-ம் ஆண்டு 1,31,489 பேரும், 2016-ம் ஆண்டு 1,41,603 பேரும், 2017-ம் ஆண்டு 1,33,049 பேரும், 2018-ம் ஆண்டு 1,34,561 பேரும், 2019-ம் ஆண்டு 1,44,017 பேரும், இந்தியக் குடியுரிமையைத் துறந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையானது, 2020-ம் ஆண்டில் கணிசமாகக் குறைந்திருக்கிறது. 2020-ல் 85,256 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்திருக்கிறார்கள். அந்த ஆண்டில் இந்தியா உட்பட உலக நாடுகளில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பும், அதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கும் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. 2021-ல் 1,63,370 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்திருக்கும் நிலையில், கடந்த ஆண்டு (2022) அதிகபட்சமாக 2,25,620 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்திருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியுரிமைப் பெற்றிருக்கின்றனர். இந்தியக் குடியுரிமையைத் துறந்தவர்கள், உலகில் 135 நாடுகளில் குடியுரிமையைப் பெற்றிருக்கின்றனர். இதில் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், இத்தாலி, நியூசிலாந்து ஆகிய நாடுகளில், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியர்கள் அதிக அளவில் குடியுரிமையைப் பெற்றிருப்பதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரம், நரேன் தாஸ் குப்தாவின் தனி கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் எழுத்துபூர்வமாக அளித்திருக்கும் பதிலில், ``இந்தியக் குடியுரிமையைத் துறந்தவர்களில் சிலருக்கு H-1B, L-1V விசாக்கள் இருக்கின்றன. ஐ.டி வேலைகளை இழந்து தவிக்கும் மக்களின் பிரச்னையை, மத்திய அரசு பலமுறை அமெரிக்க அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது.மத்திய அரசு உலகம் முழுவதுமுள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான தனது ஈடுபாட்டில் அரசாங்கம் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. வெளிநாடுகளில் வெற்றிகரமான, செல்வாக்கு நிறைந்த, செல்வ வளம் மிக்கவர்களாக வலம் வரும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் நாட்டின் சொத்து. அவர்களுடைய செழிப்பும், சக்தியும், இந்தியாவின் உற்பத்திக்கு உதவுகிறது'' எனக் கூறியிருந்தார். இது குறித்து பொருளாதார நிபுணர் சோம வள்ளியப்பனிடம் பேசினோம். ``ஒப்பீட்டளவில் பார்த்தால் இந்தியர்களைவிட சீனர்களே அதிக அளவில் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இந்தியாவிலிருந்து படிப்பதற்காக செல்பவர்கள் வெளிநாடுகளில் வேலை கிடைப்பதால் அங்கேயே தங்கிவிடுகின்றனர். இது தவிர முதல் தலைமுறையாக வெளிநாடுகளில் செட்டிலானவர்களின் குழந்தைகளும், பெரும்பாலும் இந்தியா வர விரும்புவதில்லை. இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை கிடையாது. அதனால் வெளிநாடுகளின் குடியுரிமையைப் பெற விரும்புபவர்கள், இந்தியக் குடியுரிமையைத் துறக்க வேண்டியிருக்கிறது. சமூக பாதுகாப்பு, பொருளாதார சுதந்திரம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை இதன் பின்னணியில் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. கனடா போன்ற நாடுகளெல்லாம் இந்தியர்களை `வாருங்கள்... வாருங்கள்' என அழைக்கின்றன. காற்று மாசு, மேம்படுத்தப்படாத வசதிகள் உள்ளிட்டவற்றை விட்டுச் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது, மக்கள் அதைத் தேர்ந்தெடுக்கின்றனர்.சோம வள்ளியப்பன் இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இது பெரிய எண்ணிக்கை இல்லை. 2011-ம் ஆண்டிலிருந்து கணக்கிடுவதால் பெரிய எண்ணிக்கையாகத் தெரிகிறது. கொரோனா காலத்தில் பல உலக நாடுகள் தடைவிதித்திருந்ததால், 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை குறைந்திருக்கிறது. கொரோனா காலத்தில் விண்ணப்பித்தவர்களையும் சேர்த்துதான் 2022-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பிவைத்த தொகை சுமார் நூறு பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. பொருளாதாரரீதியாகப் பார்த்தால் இதனால் அரசுக்கு இழப்பு ஏதும் இல்லை'' என்றார். `குடியரசு துணைத் தலைவர், மத்திய சட்ட அமைச்சரை டிஸ்மிஸ் செய்யக் கோரிய மனு' - தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
http://dlvr.it/SjHpLn

Saturday, 11 February 2023

பங்குகள் தொடர் வீழ்ச்சி; அதானி குழுமத்தில் என்ன நடக்கிறது… விரைவில் எல்.ஐ.சி விசாரணை!

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அய்வறிக்கை வெளியாகிய நாளிலிருந்தே அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து  சரிவடைந்து வருகிறது. இந்த சரிவினால் அதானி குழுமத்தின் மீது எவ்வளவு பார்வை திரும்பியதோ, அதே அளவு பார்வை எல்.ஐ.சி நிறுவனத்தின் மீதும் திரும்பியது.எல்.ஐ.சிடாப் 20 உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்ட அதானி! அதானி குழுமத்தின் பங்குகளில் அதன் நிறுவனருக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவிலான பங்குகளில் எல்.ஐ.சி நிறுவனம் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அதானி குழும நிறுவனத்தின் மீதான எல்.ஐ.சி முதலீடுகள் குறித்த கேள்விகள் பெருமளவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தன. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக எல்.ஐ.சி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் கடைசியில்  அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "கடந்த ஆண்டுகளில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில், எல்ஐசி நிறுவனம் ரூ.30,127 கோடியை முதலீடு செய்துள்ளது. கடந்த ஜனவரி 27-ம் தேதி நிலவரப்படி, அந்த முதலீடுகளின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.56,142 கோடியாக உயர்ந்துள்ளது.அதானி குழுமம்அதிர்ச்சி கொடுத்த ஹிண்டன்பர்க்... ஆட்டம் கண்ட அதானி... பங்குச் சந்தை பாதுகாப்பாகத்தான் இருக்கிறதா?! இதுவரை எல்.ஐ.சி நிறுவனம் நிர்வாகித்து வரும் ஒட்டுமொத்த பங்குகளில், அதானி குழுமத்தின் பங்குகள் 0.975 சதவீதம் மட்டுமே ஆகும். மேலும் அதானி குழுமத்தின் கடன் பத்திரங்கள் அனைத்திருக்கும் ‘‘ஏஏ’’ மற்றும் அதற்கும் மேலான தர மதிப்பீடுகளே வழங்கப்பட்டுள்ளன. எனவே, இந்த முதலீடுகள் அனைத்தும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) வழிகாட்டுதல்கள்படி தான் உள்ளது" என்று விளக்கம் அளித்திருந்தது. ஆனாலும் அதானி குழும விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன. மத்திய அரசு அதானி விவகாரம் குறித்து பேசவில்லை. ஆனால் தொடர்ந்து அதானி குழுமம் அடுத்தடுத்து சரிவை சந்தித்தன. பல நிறுவனங்கள் பின்வாங்கின. இந்த சூழலில் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. இந்நிலையில்,  இவ்விவகாரம்குறித்து அதானி குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக எல்.ஐ.சி., தெரிவித்துள்ளது.எல்.ஐ.சி., தலைவர் எம்.ஆர்.குமார் அமெரிக்க சந்தை குறியீட்டிலிருந்து அதானி நிறுவனம் நீக்கம்: LIC முதலீடு குறித்து நிதியமைச்சரின் பதில்? இது குறித்து, எல்.ஐ.சி., தலைவர் எம்.ஆர்.குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "நாங்கள் சந்தை மற்றும் அதானி குழுமத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறோம். எங்கள் முதலீட்டாளர் குழு,  ஏற்கனவே அதானி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருந்தது. காலாண்டு முடிவுகளை தயாரிப்பதில் நாங்கள் தீவிரமாக இருந்ததால், எங்களால் அதானி குழுமத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. விரைவில் அவர்களை வரவழைத்து விளக்கங்கள் கேட்க உள்ளோம். அதானி குழுமம் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து விளக்கம் கேட்கப்படும். அதை அவர்கள் எவ்வாறு நிர்வகிக்கிறார்கள், இந்த சிக்கல்களை அவர்கள் எவ்வாறு கையாளப்போகிறார்கள் என்பதையும் கேட்டறிவோம். பின்னர் அது குறித்து விளக்கப்படும். எல்ஐசி மற்றும் அதானி குழும அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு குறித்த காலக்கெடுவை இப்போது கூற முடியாது, விரைவில் சந்தித்து விளக்கம் கேட்போம்" என்று தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/SjFry0

Friday, 10 February 2023

கிராமி விருதில் காஞ்சிபுரம் புடவை; `இது இந்தியாவின் பாரம்பர்யம்' என பெருமிதம்!

இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் 2023-ம் ஆண்டுக்கான 65வது `கிராமி விருதுகள்' வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் பிப்ரவரி 5, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இசைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு, இந்த விழாவில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.கிராமி விருதுகள் கிராமி விருதுகளுக்கு இந்திய பாடகரும், இசைக்கலைஞருமான அனெட் பிலிப் (Annette Philip) பரிந்துரைக்கப்பட்டு இருந்தார். இவர் அமெரிக்காவில் உள்ள பெர்க்லீ இசைக் கல்லூரியில் மாணவர்களுக்கு இசை கற்பித்து வருகிறார்.  இவர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது, அனைவரின் கண்களும் அவர் மீது பதிந்திருந்தன. காரணம் பாரம்பர்ய முறைப்படி, பொட்டு வைத்து, நெற்றிச்சூடி அணிந்து, சேலை கட்டி வந்ததுதான். அனெட் பிலிப் `சிறந்த கைத்தறி நெசவாளர்' - தேசிய விருதைத் தட்டிச்சென்றார் காஞ்சிபுரம் மகேஸ்வரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்கள் அப்போது அவரிடம் ஆடை குறித்து விசாரித்தனர். அதற்கு பதிலளித்தவர், `இது இந்தியாவின் பாரம்பர்ய காஞ்சிபுரம் சேலை. இது எங்களுடைய நாட்டில் உள்ள நெசவாளர்களால் தயாரிக்கப்பட்டது. எனது நாட்டின் கலாசாரத்தை அணிவதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.  பெர்க்லீ இசைக் கல்லூரியில், `Berklee Indian Ensemble' எனத் தொடங்கிய இசைக் குழுமத்தின் முதல் ஆல்பம், 2023-ம் ஆண்டுக்கான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/SjCFTJ

Thursday, 9 February 2023

"இந்தியா உள்ளிட்ட நாடுகளைக் கண்காணிக்க சீன பலூன்கள் இயக்கப்பட்டிருக்கின்றன!" - அமெரிக்க ஊடகம் தகவல்

கடந்த 3-ம் தேதி அமெரிக்காவின் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணு ஆயுதங்களைச் சுமந்துசெல்லும் ஏவுகணைகள் நிறுத்தப்பட்டிருந்த `மான்டனா' மாகாணப் பகுதிக்கு மேலே மர்ம பலூன் ஒன்று பறந்தது. 'அந்த மர்ம பலூன் சீனாவினுடையது. உளவு பார்க்க இந்த பலூனை அனுப்பியிருக்கிறது' என்று அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டியது. சீனாவும், 'வானில் பறந்த பலூன் எங்களுடையதுதான். வானிலை ஆய்வுக்காகப் பறக்கவிடப்பட்ட பலூன், காற்றின் வேகம் மாறுபடுதல் காரணமாக திசைமாறி அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டது' என்று விளக்கமளித்தது. அதன்பிறகு அதிபர் ஜோ பைடன் உத்தரவின்படி சீனாவின் உளவு பலூன் எனக் கருதப்பட்டதை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. ஜோ பைடன் | Joe Biden அதைத் தொடர்ந்து, கடந்த திங்களன்று அமெரிக்க அரசின் தூதரகத் துணைச் செயலர் வெண்டி ஷெர்மன் அமெரிக்காவிலுள்ள சுமார் 40 தூதரகங்களின் அதிகாரிகளுக்கு இது குறித்து விளக்கமளித்திருக்கிறார். இந்த நிலையில் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளைக் குறிவைத்து சீனா உளவு பலூன்களை இயக்கியிருப்பதாக வாஷிங்டனைச் சேர்ந்த செய்தி நிறுவனம், தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ``சீனாவின் தெற்கு கடற்கரையில் ஹைனான் மாகாணத்துக்கு வெளியே பல ஆண்டுகளாக இயங்கிவரும் கண்காணிப்பு பலூன், ஜப்பான், இந்தியா, வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வளர்ந்துவரும் நாடுகளிலுள்ள ராணுவ சொத்துகள் பற்றிய தகவல்களைச் சேகரித்திருக்கிறது. இந்தத் தகவல் பல பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடனான நேர்காணல்களை அடிப்படையாகக்கொண்டது.அமெரிக்கா - சீனா இந்த பலூன்கள் அனைத்தும் (PRC) சீன மக்கள் குடியரசு அமைப்பின் ஓர் அங்கமாகும். People's Liberation Army மூலம் இந்த பலூன்கள் இயக்கப்பட்டு, கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய செயல்கள் பிற நாடுகளின் இறையாண்மையை மீறுவதாகும். சமீபத்திய ஆண்டுகளில் ஹவாய், புளோரிடா, டெக்சாஸ், குவாம் ஆகிய இடங்களில் குறைந்தது நான்கு பலூன்கள் காணப்பட்டிருக்கின்றன. நான்கு நிகழ்வுகளில் மூன்று ட்ரம்ப் நிர்வாகத்தின்போது நடந்தன. ஆனால், அவை சமீபத்தில் சீன கண்காணிப்பு ஏர்ஷிப்களாக அடையாளம் காணப்பட்டன" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.வானில் `பகீர்' கிளப்பிய ராட்சத பலூன்; சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம் - சீனா கடும் கண்டனம்!
http://dlvr.it/Sj8XVg

Wednesday, 8 February 2023

திடீரென 25% உயர்ந்த அதானி குழும பங்குகள்.. காரணம் என்ன தெரியுமா? குஷியில் முதலீட்டாளர்கள்!

அதானி குழும பங்குகள், இன்று திடீரென 25% உயர்ந்திருப்பதைக் கண்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கையடைந்துள்ளனர்.  அதானி குழும பங்குகள் சரிவு அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையால், ஆசியாவிலேயே மிகப் பிரபலமான தொழில் நிறுவனமான அதானி குழுமம் கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. மேலும், உலக அளவில், அதானி விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாய் வெடித்து வருகிறது. இந்தியாவில், நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கப்பட்டு வருவதுடன், அதானி குறித்து பிரதமர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. திடீரென 25% விலை உயர்ந்த பங்குகள் இந்த நிலையில், அதானி குழும பங்குகள் இன்று 25 சதவிகிதம் வரையில் ஏற்றம் கண்டுள்ளன. இது அதானி குழும முதலீட்டாளர்களுக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது. ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால், அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த வேளையில், இன்று 25 சதவீதம் வரையில் ஏற்றம் கண்டுள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 25% அதிகரித்து, 1965.50 ரூபாயாகவும், இதே போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, 9.64% ஏற்றம் கண்டு, 598.70 ரூபாயாகவும், இதே அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலையானது அப்பர் சர்க்யூட் ஆகி, 399.40 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதே அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது அப்பர் சர்க்யூட் ஆகி 1324.45 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. திடீர் விலை உயர்வுக்குக் காரணம் ”அதானி வாங்கிய கடன்களில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவதாகத் தெரிவித்திருந்ததே, இந்த விலையேற்றத்துக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு புத்துணர்வைத் தருவதாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கிறது” என சந்தை வர்ணனையாளர் ஸ்ரீநாத் ஸ்ரீதரன் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். மேலும், அதானி குழும பத்திரங்கள் தகுதியுடையவைதான் என JP Morgan நிறுவனம் கூறியதும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்துதான் அதானி குழும பங்குகள் இன்று ஏற்றத்தினை கண்டுள்ளன. ”தற்போதைய குறியீட்டு விதிகளின்படி, அதானி குழும நிறுவனங்கள் CEMBI, JACI மற்றும் JESG குறியீடுகளில் சேர்ப்பதற்கு தகுதியுடையதாகவே இருக்கும்” என JP Morgan நிறுவனம் நேற்று கூறியிருந்தது. JP Morgan வெளியிட்ட அறிக்கை மேலும் அது தன்னுடைய அறிக்கையில், “அதானி குழுமம் குறித்த பொதுவில் கிடைக்கும் தகவல் மற்றும் பத்திரங்களின் பணப்புழக்கத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதானி குழுமத்தின் முக்கிய வணிகங்களில் துறைமுகங்கள், மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவை அடங்கும், CEMBI மற்றும் JACI குறியீடுகளில் அதானி குழுமம் மொத்தம் 7.7 பில்லியன் டாலரைக் கொண்டுள்ளது” என JP Morgan நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் சந்தை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனை, கார்ப்பரேட் எமர்ஜிங் மார்க்கெட் பாண்ட் இன்டெக்ஸ் சீரிஸும் (CEMBI), ஆசிய நிலையான-விகித டாலர் பத்திரச் சந்தையின் மொத்த வருவாய் செயல்திறனை, JP Morgan ஆசியா கிரெடிட் இண்டெக்ஸும் (JACI) கண்காணிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு இந்த நிலையில், இன்று 25% உயர்ந்திருக்கும் அதானி குழுமத்தின் பங்குகள் மூலம், இந்த வாரம் அவருடைய நிறுவனங்களின் வருவாயையும் முதலீட்டாளர்கள் உற்றுநோக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அதன் FPO விற்பனையைத் திரும்பப் பெறுவதாகவும், ஏற்கெனவே அந்தப் பங்குகளை வாங்குவதற்காகச் செலுத்தப்பட்ட ரூ. 20,000 கோடியைத் திரும்பப் பெறுவதாகவும் அதானி குழுமம் அறிவித்திருந்தது. தவிர, 2024க்குள் கட்டவேண்டிய கடனில் ஒரு பகுதியான 1,114 மில்லியன் அமெரிக்க டாலர்களை முன்கூட்டியே செலுத்தப்படும் எனவும் அதானி குழுமம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதானி குறித்த முழு விவரங்களையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். - ஜெ.பிரகாஷ்
http://dlvr.it/Sj5p68

Tuesday, 7 February 2023

வாடகை வீட்டில் மீன் வளர்க்க 12,000 ரூபாய் கட்டணம் வசூலித்த உரிமையாளர்... வைரலாகும் பதிவு!

வாடகை வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு வீட்டில் ஆணி அடிக்கக்கூடாது, முறை வாசல் செய்ய வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது உண்டு. இன்னும் சொல்லப்போனால் இரண்டு நாள்கள் உறவினர்கள் வந்து தங்கினாலே, அதற்கும் ஒரு சார்ஜ் போட்டு காசு வசூலிப்பது குறித்து கேள்விப்பட்டிருப்போம்… வாடகை... இதற்கு ஒருபடி மேலே போய், வாடகை வீட்டில் மீன் வளர்க்க 12,000 ரூபாய் வரை கட்டணம் வசூலித்த சம்பவம், மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இது தொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த நிக் என்ற பெண், சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், தங்க மீனை (கோல்டன் ஃபிஷ்) வீட்டில் வளர்ப்பதற்கு ஒரு முறை கட்டணமாக, 200 அமெரிக்க டாலர்களும்  (இந்திய மதிப்பில் 12,000 ரூபாய்) மற்றும் மாத கட்டணமாக 15 அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் 1,240 ரூபாய்) கேட்டதாக, கட்டண ரசீதை ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் பதிவிட்டு இருக்கிறார். ரசீது``எல்லா சொந்தமும் இருந்தும் வாடகை வீட்டுல தனியாதான் வாழுறேன்!" - Actress 'Dubbing' Janaki Emotional இவரின் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, `என்னதான் இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா’ என்பது போல மக்கள் ரியாக்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் வாடகை வீட்டில் தேவையே இல்லாமல் வசூலித்த கட்டணங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.  நீங்கள் வாடகை வீட்டில் வசிப்பவராயின், உங்களிடம் வாங்கப்பட்ட கட்டணத்தில் தேவையே இல்லாதது என நீங்கள் நினைப்பது என்ன?
http://dlvr.it/Sj31hS

Monday, 6 February 2023

பாக்., முன்னாள் அதிபர் முஷரஃப் காலமானார்| சிலி காட்டுத்தீ பலி எண்ணிக்கை 23ஆக உயர்வு- உலகச் செய்திகள்

ஜப்பானில் LGBTQ சமூகத்துக்கு எதிராகத் தனது கருத்தை வெளிப்படுத்திய மசயோஷி ஆரை (Masayoshi Arai) என்ற முக்கிய அரசாங்க அதிகாரி ஒருவரை, அந்த நாட்டுப் பிரதமர் ஃப்யூமியோ கிஷிதா (Fumio Kishida) வன்மையாகக் கண்டித்திருக்கிறார். துருக்கியைச் சேர்ந்த 22 வயது யூடியூப் நட்சத்திரமான Tiba al-Ali இராக்கில் அவருடைய தந்தையால் ஆணவக் கொலைசெய்யப்பட்டார். இதை அந்த நாட்டு உள்துறை அமைச்சர் சாத் மான் ட்விட்டரில் தெரிவித்தார். சிலி நாட்டின் வனப்பகுதிகளில் ஆங்காங்கே ஏற்பட்ட காட்டுத்தீயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்திருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அமெரிக்காவில் பறந்த சீன உளவு பலூனை கரோலினா கடற்கரையிலிருந்து அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தின. இதையடுத்து, அமெரிக்காவில் மூன்று விமான நிலையங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டன. உக்ரைனில் Chris Parry (28), Andrew Bagshaw (47) ஆகிய இரண்டு பிரிட்டிஷ் தன்னார்வலர்கள் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டனர். இது ரஷ்யாவுடனான கைதிகள் பரிமாற்றத்தின்போது கண்டறியப்பட்டது. அவர்களின் சடலங்கள் பிரிட்டன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கிப்பீடியா - பாகிஸ்தான் மதம் சார்ந்த சில தரவுகளை அகற்றக் கோரி பாகிஸ்தானில் விக்கிப்பீடியா தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டது. இஸ்லாத்துக்கு எதிரான தரவுகளை நீக்க 48 மணி நேர காலக்கெடு கொடுக்கப்பட்டிருப்பதாக, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்திருக்கிறது. 65-வது கிராமி விருதுகள் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கிறது. அமெரிக்கப் பாடகர் Beyoncé ஒன்பது நாமிநேஷன்களோடு முன்னணியில் நிற்கிறார். இந்த ஆண்டும் காமெடியன் Trevor Noah இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். மேற்கு ஆஸ்திரேலியாவில் 16 வயது சிறுமி, சுறா தாக்கி கொடூரமாகக் கொல்லப்பட்டார். சிறுமி யார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. கனடாவைச் சேர்ந்த ஜூலியட் லாமோர் என்ற 18 வயது பெண் தன் முதல் முயற்சியிலே ஜாக்பாட் அடித்து லாட்டரி வென்றிருக்கிறார். இதில் 48 மில்லியன் டாலர் பரிசை வென்ற கனடாவின் முதல் டீனேஜ் பெண் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதன் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை மார்ச் மாதத்தில் ஏவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவை வெற்றிகரமாக முடிந்தால் மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படும் என்றும் எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப் உடல்நலக்குறைவால் துபாயில் காலமானார். அவருக்கு வயது 79.
http://dlvr.it/Sj0HtS

Sunday, 5 February 2023

அமெரிக்க அமைச்சரின் சீனப் பயணம் தற்காலிக நிறுத்தம் | கின்னஸ் சாதனை படைத்த நாய் - உலகச் செய்திகள்

அமெரிக்காவின் மீது சீன உளவு பலூன் பறந்துவருவதாக அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகன் தெரிவித்திருக்கிறது. ஆனால், அதை வானிலை ஆய்வுக்காகப் பயன்படுத்தியதாக சீனா தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆப்கன் கல்வியாளரான இஸ்மாயில் மஷால் அந்த நாட்டிலுள்ள பெண்களின் கல்வித் தடைக்கு எதிராக தன் கோபத்தை வெளிப்படுத்தியதால், தாலிபன்களால் சிறைப்பிடிக்கப்பட்டார். பாகிஸ்தான் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை டி.என்.ஏ மாதிரிகளைவைத்துக் கண்டுபிடித்துவருவதாக அந்த நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர். 1960-களில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரும், வாசனைத் திரவிய உற்பத்தியாளரான பேகோ ரபன்னே (Paco Rabanne) தன் 88-வது வயதில் காலமானார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி (Antony Blinken) பிளிங்கனின் சீனப் பயணம், சீனாவின் உளவு பலூன் விவகாரத்தால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 30 வருடங்கள், 226 நாள்கள் வயதான பாபி என்ற நாய் உலகின் வயதான நாயாக கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. ஜப்பானில் சுஷி உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சுகாதாரமற்ற முறையில் நடந்துகொள்ளும் வீடியோக்கள் பேசுபொருளாகியிருக்கிறது. இதனால் 'சுஷி' உணவகங்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன. அமெரிக்கா, கனடா வரலாற்றில் இல்லாத அளவுக்கு குளிரைச் சந்தித்துவருகின்றன. பல இடங்களில் -40 டிகிரி செல்சியஸ் நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இரானின் புகழ்பெற்ற இயக்கநர் ஜாஃபர் பனாஹி (Jafar Panahi), அவரைச் சிறைப் பிடித்ததால் தெஹ்ரான் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இதையடுத்து, அவர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஹாலிவுட் நடிகையான பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears) தன்னுடைய ரசிகர்களை அவர் பெரிதும் மதிப்பதாகவும், ஆனால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை ரசிகர்களும் மதிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.
http://dlvr.it/ShyKCx

Saturday, 4 February 2023

கண் சொட்டு மருந்தால் அமெரிக்காவில் உயிரிழப்பு; மருந்துகளை திரும்பப்பெறும் இந்திய நிறுவனம்!

சென்னையைச் சேர்ந்த `குளோபல் பார்மா ஹெல்த்கேர்’ நிறுவனம் தயாரித்து, அமெரிக்கச் சந்தைக்கு விநியோகித்துள்ள செயற்கை கண்ணீர் கண் சொட்டு மருந்து, எஸ்ரிகேர் (EzriCare). Eyes `இம்மருந்து drug-resistant பாக்டீரியாவால் மாசுப்பட்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்துகையில், நிரந்தர பார்வை இழப்பு மற்றும் இரத்த ஓட்டத்தில் உண்டாகும் தொற்று காரணமாக இறப்பு ஏற்படலாம்’ என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. `எனவே எஸ்ரிகேர் ஆர்டிபிசியல் கண் சொட்டு மருந்து அல்லது டெல்சம் பார்மாவின் செயற்கை கண் சொட்டு மருந்தை வாங்கவோ, பயன்படுத்தவோ வேண்டாம்’ என அவ்வமைப்பு எச்சரித்துள்ளது. அதே சமயம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. Eye போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக சானிடைஸர்.. சிகிச்சையில் 12 குழந்தைகள்! - கொடூரம் நடந்தது எப்படி? எஸ்ரிகேர் செயற்கை கண்ணீர் கண் சொட்டு மருந்துகளின் திறக்கப்படாத பாட்டில்களை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பரிசோதித்து வருகிறது.  ’குளோபல் பார்மா ஹெல்த்கேர்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சாத்தியமான மாசுபாடு காரணமாக, எஸ்ரிகேர் ஆர்டிஃபிஷியல் டியர்ஸ் கண் சொட்டு மருந்து, அல்லது டெல்சம் பார்மா மூலம் அனைத்து இடங்களிலும் விநியோகிக்கப்படும் மருந்துகளை தானாக முன்வந்து திரும்பப் பெறுகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளது.
http://dlvr.it/ShwQSz

Friday, 3 February 2023

`ஏதேதோ சொல்றியேண்ணா.. முக்கிய அப்டேட்ட விடுங்க’-7 ஸ்க்ரீன் ஸ்டுடியோவை கலாய்த்த ரத்னகுமார்!

விஜய்யின் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் வேலைகளுக்காக படக்குழு காஷ்மீரில் முகாமிட்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பூஜை நிகழ்ச்சியின் வீடியோக்கள் என அடுத்தடுத்து அப்டேட்டாக விட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ. அதன்படி சஞ்சய் தத், த்ரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மாத்யூ தாமஸ் என பல நட்சத்திர பட்டாளமே லோகேஷ் இயக்கத்திலான தளபதி 67ல் நடிக்கிறார்கள். இதனையடுத்து வெளியிடப்பட்ட பட பூஜையிலும் மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றிருந்தனர். இதனிடையே பிப்ரவரி 1, 2 , 3 ஆகிய தேதிகளில் படத்தின் அப்டேட்கள் ஒவ்வொன்றாக வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. Andha saththam…Indhiya tholaikaaatchigalil mudhal muraiyaaaga Happy to announce that @SunTV is the satellite partner of #Thalapathy67 #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss pic.twitter.com/Qhyzy6m4pk — Seven Screen Studio (@7screenstudio) February 2, 2023 அதாவது தளபதி 67 படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை யார் பெற்றிருக்கிறார்கள் என்பதே அந்த அப்டேட். அதன்படி சன் டிவியும், நெட் ஃப்ளிக்ஸும் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை பெற்றிருக்கின்றன. ஆனால் இந்த அப்டேட் ஏற்கனவே வெளியான தகவல் என்பதால் ரசிகர்களுக்கு சற்று சுணக்கத்தையே கொடுத்திருக்கிறது. இதனை உறுதி செய்யும் விதமாக லோகேஷ் கனகராஜின் நண்பரான இயக்குநரும் வசனகர்த்தாவுமான ரத்ன குமாரும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸை கிண்டலடித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் சாட்டிலைட் உரிமம் குறித்த அப்டேட்டை ரீட்வீட் செய்த ரத்ன குமார், “காஷ்மீரில் டவர் இல்லையா? அப்டேட்லாம் லேட்டா வருது. முக்கிய அப்டேட்ட விடுங்க அட்மின்” என பதிவிட்டு கிண்டலடிக்க, அடுத்த டிஜிட்டல் ரைட்ஸ் பற்றிய அறிவிப்பில் RRR படத்தின் வைரல் வசனமான “அண்ணா ஏதேதோ பேசுறியேனா” என்ற டெம்ப்ளேட்டையும் பகிர்ந்து நக்கலடித்திருக்கிறார். Kashmir la Tower illaiya . Update laam late aa varuthu. Mukkiya update aa vidunga Admin https://t.co/LUt48Vic9h — Rathna kumar (@MrRathna) February 2, 2023 இதன் மூலம் தளபதி 67 படத்தின் முக்கியமான அப்டேட் என்னவாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் குழம்பிப் போய் அதீத ஆவலோடு காத்திருக்கிறார்கள். முன்னதாக, விக்ரம் படத்துக்கு ப்ரோமோ வீடியோ வெளியிட்டதை போல தளபதி 67க்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என தகவல் வந்தது. ஒருவேளை அதுவாக இருக்குமோ என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். https://t.co/EW4q12HmjD pic.twitter.com/s0IB3skipV — Rathna kumar (@MrRathna) February 2, 2023
http://dlvr.it/ShsrLb

Thursday, 2 February 2023

"இந்தியா சர்வதேச சக்தியாக உயர ஆதரவளிப்பதே எங்கள் விருப்பம்" - அமெரிக்கா திட்டவட்டம்!

அமெரிக்காவுக்கு இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதில் அமெரிக்காவுக்கான தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அமெரிக்காவின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர், ``அமெரிக்கா, இந்தியா இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த, வளர்ந்துவரும் தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் அதிபர் பைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தங்களது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு அளித்த வழிகாட்டுதலின்படியே செயல்பட்டுவருகிறது. இரு நாடுகளுக்குள்ளான இந்த நட்புறவு அத்தியாவசியம் வாய்ந்தது. உலகம் எதிர்கொள்ளக்கூடிய பெரிய சவால்களான உணவு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட நெருக்கடியான விஷயங்களைப் பற்றிப் பேசும்போது, அமெரிக்கா, இந்தியாவின் நட்புறவு இல்லாமல் தீர்வு என்பது முடியாதது.மோடி, பைடன் ஜப்பானின் டோக்கியோவில் இரு நாடுகளுக்கான நட்புறவு பற்றி பிரதமர் மோடி கூறும்போதும் நம்பிக்கை, சர்வதேச அமைதி, நிலைத்தன்மைக்கான ஒரு நல்ல சக்திக்கான கூட்டுறவு இது என விவரித்திருக்கிறார். இந்தியா ஒரு சர்வதேச சக்தியாக உருவெடுப்பதற்கு ஆதரவு அளிப்பதே உண்மையில் எங்கள் செயல்திட்டமாகும்" என்று தெரிவித்திருக்கிறார்.தன்பாலின திருமணச் சட்டத்தில் கையெழுத்திட்ட பைடன்|பெருவில் வெடித்த கலவரம்- உலகச் செய்திகள் ரவுண்ட்அப்
http://dlvr.it/Shpz0j

Wednesday, 1 February 2023

`திருமணம் செய்யாமலே குழந்தை பெற்றுக் கொள்ளலாம்' - சீன அரசின் அறிவிப்பும் பின்னணியும்!

திருமணம் செய்து கொள்ளாமலே, ஒன்றாக வாழும் ஜோடிகள் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என சீனாவின் சிச்சுவான் மாகாண அரசு அறிவித்துள்ளது. பல தசாப்தங்களாக சீனாவில் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதி இருந்தது. இதனால் பல கட்டாய கருக்கலைப்புகள் நிகழ்ந்தன. 2016-ல் இந்தக் கொள்கை ரத்து செய்யப்பட்டபோதும், பிறப்பு விகிதத்தில் நிலவிய சரிவைத் அரசால் தடுக்க முடியவில்லை. திருமணமானவர்கள் மூன்று குழந்தைகள் வரை பெறலாம் என 2021-ல் தான் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.  சீனாவில் கடந்த ஆண்டு முதன்முறையாகப் பிறப்பு எண்ணிக்கையைவிட, இறப்புகள் அதிகரித்துள்ளன. சீனாவில் 60 ஆண்டுகளுக்கு இல்லாத அளவு கடந்த ஆண்டு, மக்கள் தொகை குறைந்துள்ளது. மக்கள் தொகையை ஈடுகட்ட அந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.   80 மில்லியன் மக்கள் வசிக்கும் சிச்சுவான் மாகாணத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள இனி திருமணம் அவசியமில்லை. திருமணம் செய்யாமலே இணைந்து வாழும் ஜோடிகள் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். Population``நான் வளர்க்கும் பறவைகள் என் குழந்தைகள் போல..'' பாசம் கொட்டும் காரைக்கால் திருநங்கை ஜெம்சா ராணி! அதேபோல குழந்தைகள் பெற்றுக் கொள்வதிலும் வரம்பு இருக்காது. ஒருவர் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது அம்மாகாண அரசு.  சீன அதிபர் ஜி ஜின்பிங் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளார். வீழ்ச்சி விகிதங்களை மாற்றியமைக்க அல்லது குறைக்க அரசாங்கம் வரிச் சலுகைகளையும் சிறந்த மகப்பேறுகால சுகாதாரத்தையும்  வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
http://dlvr.it/Shm4LR