நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் நிலையில், 2020-ஐ தொடர்ந்து 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரண்டும்தான் பிரதான கட்சிகளாகச் செயல்பட்டுவருகின்றன. தற்போது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் நிறைவுபெறுகிறது. அதனால், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கமலா ஹாரிஸ் - ஜோ பைடன்
இந்தத் அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடனும் (81), குடியரசுக் கட்சி சார்பாக, பல தடைகளைக் கடந்து முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும்(77) போட்டியிட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் அல்லாது முன்னாள் தென் கரோலினா ஆளுநரும், ஐநா சபைக்கான ட்ரம்ப்பின் தூதரும், இந்திய வம்சாவளியுமான நிக்கி ஹேலி (52), அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டீன் பிலிப்ஸ் (55), சுயேச்சை வேட்பாளர் ராபர்ட் எஃப். கென்னடி ஜே.ஆர் (70) உள்ளிட்ட இன்னும் சிலரும் அதிபர் வேட்பாளருக்கான ரேஸில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், அதிபர் வேட்பாளரான நிக்கி ஹேலி தனியார் நிறுவன செய்தியாளரிடம் பேசியபோது,``ட்ரம்ப், பைடன் இருவரும் அதிபராக வேண்டும் என நான் விரும்பவில்லை. அவர்களை எதிர்த்துப் போட்டியிடுவதில் எனக்கு எந்த அசௌகரியமும் கிடையாது. நான் இந்தத் தேர்தலில் போட்டியிட ஒரே காரணம் இவர்கள் இருவரும் மீண்டும் ஒருமுறை வெற்றிப்பெற்றுவிடக் கூடாது என்பதுதான். ஏனென்றால், 70 சதவிகித அமெரிக்கர்கள் ட்ரம்ப், பைடனை மீண்டும் அதிபராக பார்க்க விரும்பவில்லை.டொனால்டு ட்ரம்ப் - நிக்கி ஹேலி
59 சதவிகித அமெரிக்கர்கள் பைடனுக்கும், ட்ரடிரம்புக்கும் வயதாகிவிட்டதாக நினைக்கிறார்கள். ஒரு வேட்பாளர் தன்னை முன்னிலைப்படுத்துவதை விட மக்களுக்கான சேவைகளை முன்னிலைப்படுத்த வேண்டும். அதைத்தான் நான் செய்ய முயல்கிறேன். இந்தத் தேர்தலில் நான் அல்லது அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், எங்கள் இருவரில் யாராவது ஒருவர், முதல் பெண் அதிபராகப் பொறுப்பேற்போம் என நம்புகிறேன்." எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYமாலத்தீவு: `மே 10-ம் தேதிக்குள் இந்தியப் படைகள் முழுமையாக வெளியேறும்!' - அதிபர் முய்ஸு
http://dlvr.it/T2zxg8
Tuesday, 20 February 2024
Home »
» ``நானோ அல்லது கமலா ஹாரிஸோதான் அமெரிக்க அதிபராக இருப்போம்; ஏனென்றால்..!" - நிக்கி ஹேலி சொல்வதென்ன?







0 comments:
Post a Comment