Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, 29 April 2024

மனைவியைக் கொன்று அவரின் இன்சூரன்ஸ் பணத்திலேயே செக்ஸ் டால்; கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்த கோர்ட்!

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில், கணவன் தன் மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடி, பின்னர் அவரின் இன்சூரன்ஸ் பணத்தைப் பெற்ற இரண்டாவது நாளிலேயே செக்ஸ் டால் உட்பட பலவற்றை வாங்கிய உண்மை வெளியில் தெரியவந்திருக்கிறது.

முன்னதாக, கடந்த 2019-ல் கணவன் கோல்பி ட்ரிக்கிள் (Colby Trickle), ஹேஸ் (Hays) நகரிலுள்ள தன்னுடைய வீட்டிலிருந்து 911 என்ற நம்பருக்கு அழைத்து தன்னுடைய மனைவி கிறிஸ்டன் ட்ரிக்கிள் (Kristen Trickle) தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த போலீஸ் அதிகாரியொருவர் அவருடன் பேசிய பிறகு இது கொலையாக இருக்கும் என சந்தேகித்தார்.கோல்பி ட்ரிக்கிள்

இருப்பினும், கிறிஸ்டன் மரணமடைந்து மூன்று நாள்களுக்குப் பிறகு இது கொலையல்ல தற்கொலைதான் என உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் லைல் நூர்தோக் (Lyle Noordhoek) தெரிவித்தார். ஆனாலும், விசாரணை அதிகாரிகள் இந்த சம்பவத்தை விசாரித்துவந்தனர். பின்னர், கிறிஸ்டன் இறந்து 21 மாதங்களுக்குப் பிறகு 2021 ஜுலை மாதம் முதல்நிலை கொலை மற்றும் சட்ட அமலாக்கத்தில் தலையிட்டதாக அவர் கணவர்மீது குற்றம்சாட்டப்பட்டது.கிறிஸ்டன் ட்ரிக்கிள் - கோல்பி ட்ரிக்கிள்

அதிகாரிகளின் விசாரணையில், கிறிஸ்டனின் பெயரிலிருந்த 1,20,000 டாலர் மதிப்பிலான அதாவது சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளை (life insurance policies) கோல்பி பணமாக்கியிருப்பது தெரியவந்தது. குறிப்பாக, இன்சூரன்ஸ் பணம் பெற்ற இரண்டு நாள்களுக்குப் பிறகு ஆள் உயர செக்ஸ் டால் (sex doll) ஒன்றை அவர் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து, அவரின் அத்தை டெலின் ரைஸ் (Delynn Rice), ``கிறிஸ்டனின் இன்சூரன்ஸ் பணத்தை அவர் செக்ஸ் டால் வாங்குவதற்குப் பயன்படுத்தியதைக் கண்டு நான் திகைத்துப்போனேன். இது கிறிஸ்டனுக்கு மாற்றாக அவர் வாங்கியது போல் தெரிகிறது" என்றார். கோல்பி இந்த செக்ஸ் டால் மட்டுமல்லாது கடனை அடைப்பது, இசைக்கருவிகளை வாங்குவது என ஆயிரக்கணக்கான டாலர்களை செலவழித்திருக்கிறார்.நீதிமன்றம் உத்தரவு

இன்சூரன்ஸ் பணம் பெற்ற எட்டு மாதங்களிலேயே மொத்தத்தையும் அவர் செலவழித்துவிட்டதாக எல்லிஸ் கவுண்டி அட்டர்னி ஆரோன் கன்னிகாம் (Aaron Cunnigham) வெளிப்படுத்தினார். 2023 செப்டம்பரில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், கோல்பி செக்ஸ் டால் வாங்கியதை நீதிபதிகளிடம் வழக்கறிஞர்கள் தெரியப்படுத்தினர்.ஆயுள் தண்டனை - சிறை

அதேசமயம், கோல்பிக்காக ஆஜரான அவரின் தாயார் டினா க்ரூட்ஸர் (Tina Kreutzer), கிறிஸ்டனின் மரணத்துக்குப் பிறகு தன் மகன் தூக்கமின்மைக்கு ஆளானதாகவும், ஒரு ஆறுதலுக்காக செக்ஸ் டால் வாங்கியதாகவும் தெரிவித்தார். இறுதியாக, கிறிஸ்டன் மரணமடைந்து நான்காவது ஆண்டான 2023-ல் நவம்பர் மாதம், கோல்பியை குற்றவாளி என உறுதிப்படுத்திய நடுவர் நீதிமன்றம், 50 ஆண்டுகளுக்கு அவர் பரோலில் வெளியே வர முடியாத அளவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.`உடனே கொல்வது எப்படி?' - முன்னாள் காதலியை கத்தியால் குத்துவதற்கு முன் ஆன்லைனில் தேடிய இளைஞர்


http://dlvr.it/T68hpP

Saturday, 27 April 2024

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர்.

சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி

2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet Inc-ன் தலைமை நிர்வாக அதிகாரியானர். இன்று டெக் உலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் தமிழராகப் பலருக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

அவர் கூகுளில் சேர்ந்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இது குறித்து சுந்தர் பிச்சை தனது இன்ஸ்டாகிராமில், "ஏப்ரல் 26, 2004 அன்றுதான் நான் முதன்முதலில் கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த நாள். அதிலிருந்து என் வாழ்க்கையே மாறிவிட்டது. எங்கள் நிறுவனத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. தொழில்நுட்பத்திலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. View this post on Instagram

A post shared by Sundar Pichai (@sundarpichai)


எங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோரும் பல மடங்காக அதிகரித்திருக்கின்றனர். என்னுடைய தலைமுடியும் அப்படித்தான் பல மாற்றங்களைக் கண்டது. ஆனால், வேலையின் மீதுள்ள காதலும், ஆர்வமும் இன்னும் மாறவில்லை. உண்மையில் கூகுள் ஒரு அற்புதமான கம்பெனி. 20 வருடங்கள் கடந்துவிட்டன. நான் அதிர்ஷ்டசாலி என்றே நினைக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கொண்டாடும் விதமாக அவருக்குப் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.


http://dlvr.it/T65WNG

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம்

இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து, தரையில் தள்ளி கழுத்தில் முட்டியால் பலமாக அழுத்தியிருக்கின்றனர். அப்போது பிராங்க் டைசன் மூச்சு பேச்சின்றி சுயநினைவை இழந்தார்.

இந்த தாக்குதல் தொடர்பாக இணையத்தில் பரவி கொண்டிருக்கும் வீடியோ பலரையும் கொதிப்படையச் செய்திருக்கிறது. போலீஸ் அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவில் பதிவான அந்த வீடியோவில், `போலீஸ் அதிகாரிகள் பிராங்க் டைசனை பாருக்குள் துரத்திப் பிடிக்கின்றனர். `என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள்' என்று அவர் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தார். இருப்பினும், பிடியைத் தளர்த்தாத போலீஸார், பிராங்க் டைசனை கீழே தள்ளினர். அதேவேளையில், ஒரு அதிகாரி அவரின் தலையைப் பலமாக தன் முட்டியால் அழுத்திக் கொண்டிருந்தார்.

Canton, Ohio

Bodycam footage of Frank Tyson pic.twitter.com/RvpE4Meuib— The Daily Sneed™ (@Tr00peRR) April 26, 2024

`என்னால் மூச்சு விடமுடியவில்லை, காலை எடுங்கள்' என்று திணறியவாறே அவர் கூறிக்கொண்டிருந்தார். இருப்பினும், அவரின் கைகளைப் பின்பக்கமாக வளைத்து கைவிலங்கு போடும் வரை அந்த அதிகாரி காலை எடுக்கவேயில்லை. இறுதியில் கைவிலங்கு போட்ட பிறகே அந்த அதிகாரி தனது காலை எடுத்தார். பிராங்க் டைசன் மூச்சு பேச்சின்றி தரையில் கிடந்தார்'.ஜார்ஜ் ஃபிளாய்ட்

பின்னர், சில அதிகாரிகள் அவர் மூச்சு விடுகிறாரா... அவருக்கு துடிப்பு இருக்கிறதா... என்று பார்த்தனர். ஆனால், எந்தவொரு ரியாக்சனும் இல்லை. அதையடுத்து அங்கு வந்த துணை மருத்துவர்கள் அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அங்கு, பிராங்க் டைசன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், இறப்புக்கான காரணம் என்னவென்பதை அதிகாரிகள் தரப்பு இன்னும் வெளியிடாமல் இருக்கின்றனர். பிராங்க் டைசனின் இந்த மரணம், இன்னும் எத்தனை ஜார்ஜ் ஃபிளாய்ட்... எனப் பலரையும் கேள்வியெழுப்பவைத்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...



இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
https://bit.ly/3OITqxs />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3OITqxsபோராட்டங்களின் கதை - 26 - ஜார்ஜ் ஃபிளாய்ட்: நிறவெறியின் அழுத்தத்தில் மூச்சுத்திணறி இறந்த மானுடன்!


http://dlvr.it/T65Dkp

Friday, 26 April 2024

பள்ளி ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி; மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்கள்..!

அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிகளுக்குள் துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் மசோதா இயற்றப்பட்டுள்ளது. டென்னிசி, ஐக்கிய அமெரிக்கா நாட்டின் மாநிலங்களில் ஒன்று. இங்கு குடியரசுக் கட்சியின் அரசு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் சட்டமியற்றும் மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிகளுக்குள் நிபந்தனைகளைப் பின்பற்றி துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் சட்ட மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. Schoolமுதலையிடம் தப்பித்து... சிறுத்தையிடம் போராடி உயிர்பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..!

அந்த மசோதாவில், ’துப்பாக்கியை எடுத்துச் செல்பவர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அந்த நபர் பள்ளிகளில் இயங்கும் காவல் அமைப்புகளில் ஆண்டுக்கு ஒருமுறை 40 மணி நேரம் துப்பாக்கியை பாதுகாப்பாக பயன்படுத்தும் பயிற்சி பெறுவது கட்டாயம். பயிற்சிக்கான செலவுகளை அந்த நபரே ஏற்க வேண்டும்.

அரசு அனுமதியளித்துள்ள சுகாதார வல்லுநர்களிடம் உளவியல் பரிசோதனையை மேற்கொண்டு, பிரச்னைகள் எதுவும் இல்லை என சான்றிதழ் பெற வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதா தற்போது குடியரசுக் கட்சி கவர்னர் பில் லீயின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.gunஉடல் பருமன் குறைக்கும் அறுவை சிகிச்சை, உயிரிழந்த புதுச்சேரி இளைஞர்; பெற்றோர் சொல்வது என்ன?

அமெரிக்காவில் பல்வேறு பள்ளிகள், பொது இடங்களில் தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை, 18 வயது நிரம்பாத 436 குழந்தைகள் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி உள்ளதாக அந்நாட்டு தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு தனியார் தொடக்கப் பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று குழந்தைகள் உட்பட மூன்று பணியாளர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பள்ளிகளுக்குத் துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் மசோதா இயற்றப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ’குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் அறிவைப் போதிப்பதற்கு பதிலாக ஆயுதத்தை ஏந்துவதா? ஆயுதம் ஏந்திய ஆசிரியர்களின் வகுப்பறையில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை என்னவாக இருக்கும்? schoolMessi: மெஸ்ஸி பெயரைச் சொல்லி உயிர்தப்பிய மூதாட்டி... துப்பாக்கி கொடுத்து செல்ஃபி எடுத்த ஹமாஸ் குழு!

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர் பயத்துடன் வீட்டில் இருப்பதா?’ என அந்நாட்டு மக்கள் கண்டனங்களைத் தெரிவித்து சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றனர்.

’கவர்னர் இந்த சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், ரத்தக் கறையை ஏற்படுத்தும் இந்தச் சட்டம் அமலுக்கு வந்துவிடும்’ என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.


http://dlvr.it/T62Y54

Thursday, 25 April 2024

``நான் உன்னை காதலிக்கிறேன்..." - எலான் மஸ்க் போல நடித்து மோசடி: 50,000 டாலரை இழந்த பெண்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் நீண்ட காலமாக இருக்கும் பிரபல்யமானவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். அந்த எலான் மஸ்க் போல Deepfake தொழில்நுட்பம் மூலம் கொரியப் பெண் ஏமாற்றப்பட்ட செய்தி ஒன்றை கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டப் பெண் அந்த செய்தி நிறுவனத்திடம்,``இன்ஸ்டாகிராம் மூலம் எலான் மஸ்க் போன்ற அந்த நபர் அறிமுகமானார். ஆரம்பத்தில் நான் நம்பவில்லை. ஆனால், அந்த நபர், டெஸ்லா நிறுவனத்தின் அலுவலகம், அவர் பயணிக்கும் ஹெலிகாப்டர் போன்ற பல இடங்களின் புகைப்படங்களை அனுப்பினார்.டெஸ்லா நிறுவனம்

அவருடைய உண்மையான ஐடியிலிருந்து அவர் அனுப்பியதாகவே நான் நம்பினேன். மேலும், இதுபோல அவருடைய ரசிகர்களிடம் தொடர்ந்து பேசுவது அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அவருடைய குழந்தைகள், டெஸ்லா நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ்க்கான அவருடைய சில திட்டங்கள் போன்றவைகளை பகிர்ந்துகொள்ள தொடங்கினார். மேலும், தென் கொரியாவில் புதிய டெஸ்லா நிறுவனத்தை தொடங்கவிருப்பதாகவும், அது தொடர்பாக தென் கொரிய அதிபரை சந்தித்ததாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் ஒருமுறை, நான் உன்னை காதலிக்கிறேன்...

அது உனக்கு தெரியுமா? எனக் கேட்டார். அந்த சமயத்தில், நான் எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாறை படித்தேன். அப்போது, இவர் எலான் மஸ்க் தானா என எனக்கு மீண்டும் சந்தேகம் வலுத்தது. அது தொடர்பாக அவரிடம் பேசியபோது, அவர் சில மணி நேரங்கள் கழித்து வீடியோ கால் செய்தார். அதில் அவருடைய முகம், குரல், உடல் மொழி என அனைத்தும் அப்படியே இருந்தது. அதனால் அவரை எலான் மஸ்க்தான் என நம்பினேன். அதன்பிறகுதான், அவருடைய தென் கொரியா நிறுவனத்தில் 50,000 டாலர் முதலீடு செய்வதற்கு கேட்டுக்கொண்டார்.மோசடி

மேலும், இந்த முதலீடு என்னை பெரும் செல்வந்தராக்கும் என்றும், அவருக்கு பிடித்தவர்களை செல்வந்தர்களாக்குவது மகிழ்ச்சியான செயல் எனக் கூறினார். தென்கொரிய டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர் வங்கி கணக்கு என ஒரு வங்கி கணக்கை கொடுத்து அதில் பணம் செலுத்தக் கூறினார். நானும் அதுபோலவே செய்தேன். அதற்கு பிறகு அவரை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. அப்போதுதான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். தேர்தல் வரும் பின்னே... டெஸ்லா வரும் முன்னே...' பா.ஜ.க-வுக்குப் பிரசாரம் செய்ய வரும் எலான் மஸ்க்?!


http://dlvr.it/T60PRP

Tuesday, 23 April 2024

Love Brain: ஒவ்வொரு நாளும் 100 முறை போன் கால்; காதலியின் செயலால் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த இளைஞர்

Uசமீபத்தில் இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி நடித்து வெளியான படம் லவ்வர். கலவையான விமர்சனங்களை பெற்ற படத்தில், மணிகண்டன் போல ஒரு பெண் இருந்தால் எப்படி இருக்குமோ, அதுபோல காதலனுக்கு தொல்லை கொடுத்த சீனா பெண் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கிறார்.Stressed woman (Representational image)

இது தொடர்பாக தி சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டிருக்கும் செய்தியில்,``சீனாவை சேர்ந்த 18 வயது பெண் சியாயு (Xiaoyu). பல்கலை கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது ஒருவரை காதலிக்கத் தொடங்கியிருக்கிறார். இவர்களின் காதல் ஆழமாக சென்றபோது, அந்த காதல் ஒருகட்டத்தில் தொல்லையாக மாறியிருக்கிறது. அவர் தனது காதலனை அதிகமாகச் சார்ந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து "எங்க இருக்க... என்ன பண்ற... இப்போ யார் கூட இருக்க..." என்பது போன்ற கேள்விகளுடன் ஒரு நாளுக்கு குறைந்தது 100 முறை தொலைபேசியில் அழைத்து விசாரிப்பாராம். இந்த நடத்தை காதல் உறவில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கறது. இதனால் காதலன் திணற ஆரம்பித்திருக்கிறார். ஒருவேளை காதலன் செல்போன் அழைப்பை ஏற்கவில்லையென்றால், மிகவும், ஆத்திரப்பட்டு, வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.டாக்டர்

மேலும், பால்கனியில் இருந்து குதிக்கப் போவதாகவும், கழுத்தை அறுத்துக்கொள்ளப் போவதாகவும் மிரட்ட தொடங்ககியிருகிறார். இதனால் நொந்துபோன காதலன் இறுதியில் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்திருக்கிறார். காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக பேசிய மருத்துவர் Du Na,``காதல் உறவுகளில் இந்த வகையான வெறித்தனமான நடத்தையை விவரிக்க "love brain" (காதல் மூளை)" என்பது பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது.

இது மருத்துவச் சொல் அல்ல. அவரது எல்லைக்குட்பட்ட இதுபோன்ற ஆளுமைக் கோளாறு, சில நேரங்களில் கவலை, மனச்சோர்வு போன்ற பிற நிலைமைகளுடன் இணைந்து ஏற்படலாம். இத்தகைய நிலைமைகள் ஆரோக்கியமற்ற குழந்தைப் பருவத்தாலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக குழந்தை பருவத்தில் பெற்றோருடன் ஆரோக்கியமான உறவைக் கொண்டிருக்காதவர்களிடம் இது அடிக்கடி நிகழ்கிறது. எனவே, இது போன்ற கடுமையாக நடந்துகொள்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவை" என வலியுறுத்தியிருக்கிறார்.காதல் திருமணங்கள்... பெற்றோரின் மனமாற்றம் எப்படி உள்ளது? #Avaludan


http://dlvr.it/T5wmFw

சீனாவில் மில்லியனுக்கும் அதிகமான உய்குர் மக்கள் சிறையில் அடைப்பு - அமெரிக்கா அதிர்ச்சி தகவல்

கடந்த 1949-ல் சீனா, ஜிங்ஜியாங் பிரதேசத்தை ஆக்கிரமித்தது. இதனால், காலங்காலமாக பாகிஸ்தான் - சீன எல்லையான உய்குர் பகுதியில் சுதந்திரமாக வாழ்ந்துவந்த இஸ்லாமிய மக்கள், தங்கள் உரிமைகளை இழந்தனர். கடந்த 2009-ல் ஏற்பட்ட இனக்கலவரத்துக்குப் பின் அவர்கள் நிலைமை மேலும் பரிதாபமானது. உய்குர் இஸ்லாமியர்களைப் பிரிவினைவாதிகளாக சித்திரித்த சீனா, அவர்கள்மீது அடக்குமுறை களை தீவிரப்படுத்தியது.

இதனிடையே உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த வருடாந்திர அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் உலக நாடுகளின் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான அறிக்கையில், ``சீனாவில் கருத்துச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடுகள், சிறுபான்மை இனக் குழுக்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.உய்குர் மக்கள்

இனப்படுகொலை, மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்கள் பெரும்பான்மையான முஸ்லீம் உய்குர்கள் மற்றும் சின்ஜியாங்கில் உள்ள பிற இன மற்றும் மத சிறுபான்மை குழுக்களுக்கு எதிராக அடக்குமுறை இந்த ஆண்டில் அதிகம் நடந்திருக்கிறது. சீன அரசு 2017 முதல் 2023 வரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர் இன மக்களையும் மற்ற முஸ்லிம் சிறுபான்மை குழுக்களின் உறுப்பினர்களையும் கைது செய்து தடுத்து வைத்திருக்கிறது.

சுதந்திரமான நீதித்துறை இல்லாதது, நீதித்துறை, சட்ட அமைப்பின் மீது கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாடு, அரசியல் கைது நடவடிக்கைகள், பிற நாடுகளில் தனிநபர்களுக்கு எதிரான அடக்குமுறை, தொழில்நுட்ப கண்காணிப்பு உட்படத் மனித உரிமை மீறல் முதல் தனி மனித உரிமை வரைசீன அரசின் தலையீடு அதிகமாக இருக்கிறது. கருத்துச் சுதந்திரம், இணையதளச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மீதான கடுமையான கட்டுப்பாடுகள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், பதிவர்கள், அரசின் மீதான அதிருப்தியாளர்கள் உள்ளிட்டவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் தொடரப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...



இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
https://bit.ly/3OITqxs />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3OITqxs`உய்குர் மக்களை அழிக்க சீனா திட்டம்; இனப்படுகொலை!’- மைக் பாம்பியோ விமர்சனம்


http://dlvr.it/T5tSlc

Monday, 22 April 2024

இஸ்ரேல் படைமீது பொருளாதாரத் தடை விதிக்கிறதா அமெரிக்கா? - எதிர்க்கத் தயாராகும் நெதன்யாகு!

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்குப் பதிலடி என்ற பெயரில் காஸாவில் பொதுமக்களின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இடைவிடாது போர் நடத்திவருகிறது இஸ்ரேல். போரின் தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி செய்தது அமெரிக்கா. அதோடு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.இஸ்ரேல் - ஹமாஸ் போர்

பின்னர், இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரிக்கவே, ஒரு கட்டத்தில் அமெரிக்காவும் பத்தோடு பதினொன்றாகப் போர்நிறுத்தம் வேண்டும் என மேலோட்டமாக வலியுறுத்தியது. பின்னர், ஐ.நாவில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாமல் விட்டதால், இஸ்ரேலுக்கெதிரான போர்நிறுத்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் படை நடத்தும் மனித உரிமை மீறல்கள் முடிவுக்கு வந்த பாடில்லை.

இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இஸ்ரேல் படையால் கைதுசெய்யப்பட்ட பாலஸ்தீன- அமெரிக்க நபர் உமர் அசாத் (78) உறைபனி நடுவே இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் ஒரு பகுதியாகவே இத்தகைய நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கப்போவதாகக் கூறப்படுகிறது. அதன்படி, இஸ்ரேல் படைமீது அமெரிக்கா பொருளாதார தடைவிதிக்கும் பட்சத்தில் அமெரிக்கா ராணுவ உதவியைக் கொண்டு அவர்கள் ஆயுதங்கள் வாங்க முடியாது.பைடன் - நெதன்யாகு

இதற்கு எதிர்முனையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு `இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) மீது யாராவது பொருளாதாரத் தடை விதிக்க நினைத்தால், எனது முழு பலத்துடன் எதிர்த்துப் போராடுவேன்' என்றார். அதேபோல் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கல்லன்ட், `நெட்சா யெஹுடா பட்டாலியன் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் நோக்கத்தை அமெரிக்கா திரும்பப்பெறும் என்று எதிர்பார்க்கிறேன். சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் நடவடிக்கையை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி அமெரிக்கா அரசிடம் பேசுவேன்' என்று தெரிவித்திருக்கிறார்.இஸ்ரேல் - இரான் மோதல்... மூன்றாம் உலகப் போர் வெடிக்குமா?


http://dlvr.it/T5sSBp

Sunday, 21 April 2024

45 மில்லியன் டாலர் நஷ்டஈடு; Johnson & Johnson நிறுவனத்துக்கு அதிரடி உத்தரவிட்ட கோர்ட்.. காரணம் என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பன்னாட்டு நிறுவனமான ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர், சோப்பு, ஆயில் போன்றவை இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளால் புற்றுநோய்ப் பாதிப்பு ஏற்படுவதாக இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், அண்மையில் செய்திகள் வெளிவந்தன. இதனிடையே, இந்த நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர்களைப் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதா அமெரிக்காவில் நீதிமன்றத்தில் 22 வழக்குகள் தொடரப்பட்டன.Baby powder

இது தொடர்பாக அமெரிக்காவின் சிகாகோவில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``ஆறு குழந்தைகளின் தாயான தெரசா கார்சியா, 2020-ல் அஸ்பெஸ்டாஸ்டுடன் தொடர்புடைய ஒரு வகை புற்றுநோயான மீசோதெலியோமாவால் உயிரிழந்திருக்கிறார். டால்கம் அடிப்படையிலான பவுடரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதை அறிந்து விற்றதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருக்கின்றனர். தெரசா கார்சியா மரணத்திற்கு, கென்வியூ ( ஜே&ஜே நிறுவனத்திலிருந்து பிரிந்து உருவான நிறுவனம்) 70 சதவிகிதமும், மீதமுள்ள 30 சதவிகித காரணம் ஜே&ஜே மற்றும் அதன் பிரிவுகளில் ஒன்று பொறுப்பு என்று குழு கண்டறிந்தது.

எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு 45 மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக கென்வியூ, ஜே & ஜே வழக்கு விசாரணையின் தலைவர் எரிக் ஹாஸ், ``நிறுவனம் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீடு செய்யும். சட்டம், அறிவியலில் எந்த அடிப்படையும் இல்லாத, விசாரணை நீதிமன்றத்தின் தவறான தீர்ப்புகளை வழக்கமாக எதிர்கொள்வதைப் போல எதிர்கொள்வோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.``ஜான்சன் பேபி பவுடர் தினமும் சாப்பிடுறேன்; எந்தப் பிரச்னையும் வரலை" - திகிலூட்டும் இளம்பெண்!


http://dlvr.it/T5pD2N

Thursday, 18 April 2024

உலகின் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில்... நடிகை ஆலியா பட், மல்யுத்த வீரர் சாக்‌ஷி மாலிக்!

2024-ம் ஆண்டில் உலகில் செல்வாக்கு மிக்க பெண்கள் 100 பேர் பட்டியலை டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், இந்தியாவில் இருந்து இரண்டு பெண்கள் இடம் பிடித்துள்ளனர். நடிகை ஆலியா பட், மற்றும் மல்யுத்த வீரர் சாக்‌ஷி மாலிக்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள பாலிவுட் நடிகை ஆலியா பட், இந்தி மட்டிமல்லாது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்த ’கங்குபாய் கத்தியாவாடி’ படத்திற்காகப் பல விருதுகளை பெற்றார். ’ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ என்ற ஆங்கிலப்படத்தில் ஆலியா பட் நடித்துள்ளார்.ஆலியா பட் - ரன்பீர்Doctor Vikatan: பின்னோக்கி நடக்கும் retro-walking; எல்லோரும் முயற்சி செய்யலாமா...அதனால் என்ன நன்மை?

’ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ படத்தை இயக்கிய டோம் ஹார்பர், உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் ஆலியா பட் இடம் பெற்று இருப்பது குறித்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டு, ஆலியா பட்டை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். அவர் தனது பதிவில், ’ஆலியா பட் உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பணியாற்றியதற்காகப் பாராட்டப்படுகிறார்.

அவர் ஒரு பெண் தொழிலதிபர்’ என்று பாராட்டியுள்ளார்.

நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டுள்ள ஆலியா பட்டிற்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. குழந்தை பிறந்த சில மாதங்களில் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கிறார்.

100 பேர் பட்டியலில் இடம்பிடித்துள்ள மற்றொரு இந்தியப் பெண், மல்யுத்த வீரர் சால்ஷி மாலிக். சாக்‌ஷி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூசன் மல்யுத்த வீரர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவரை பதவி நீக்கம் செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் டெல்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி ஒட்டுமொத்த இந்தியாவை தன்பக்கம் பார்க்க வைத்தவர்.மல்யுத்த வீரர் சால்ஷி மாலிக்Summer: டீ முதல் மாம்பழம் வரை... கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்றொரு பெண், சமீபத்தில் மறைந்த, ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸின் மனைவி யுலியா. தன் கணவர் விட்டுச்சென்ற பணியை தான் முன்னெடுத்துச்செல்லப்போவதாக கூறி இருக்கும் யுலியா, தொடர்ந்து புடின் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்.

இந்தியாவைச் சேர்ந்த பிரியம்வேதா நடராஜன், அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வானியல் துறை பேராசிரியராக இருக்கிறார். இவரும் 100 பெண்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். அமெரிக்க இயக்குநர் தெல்மா கோல்டன், பிரிட்டன் நடிகை நியோமி வாட்ஸ் உட்பட பல பெண்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


http://dlvr.it/T5g8Qf

Wednesday, 17 April 2024

`பயங்கரவாதிகளை அவர்களது வீடுகளில் வைத்தே கொல்ல இந்தியா தயங்காது'- பிரதமர் பேச்சும் அமெரிக்கா பதிலும்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தொடர்ந்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கடந்த 11-ம் தேதி உரையாற்றிய பிரதமர் மோடி, ``10 ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில் பயங்கரவாதிகள் தங்கள் வீடுகளிலேயே (சொந்த நாட்டிலேயே) கொல்லப்படுகின்றனர். பயங்கரவாதிகளை அவர்களது வீடுகளில் வைத்தே கொல்ல இந்தியா தயங்காது. ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது என்.டி.ஏ ஆட்சியில்தான். இன்று, நாட்டில் வலுவான அரசு இருக்கிறது.மோடி

இந்த நாட்டின் இந்திய மூவர்ணக் கொடி, போர் மண்டலத்திலும் பாதுகாப்பிற்கு உத்தரவாதமாக மாறியுள்ளது. முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது, நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது, பொதுப் பிரிவில் உள்ள ஏழைகளுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது போன்ற திட்டங்களை எங்கள் அரசுதான் கொண்டுவந்தது. அண்டை நாடுகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம். பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்த பயங்கரவாதத்தை ஒதுக்கி வைக்க முடியாது.

பயங்கரவாதம், வன்முறை இல்லாத ஒரு சாதகமான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு இருக்கிறது" எனக் கூறினார். இதற்கிடையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் முயன்றால், அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்.பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

அதை கட்டுப்படுத்த முடியாது என்று பாகிஸ்தான் நினைத்தால், அவர்கள் இந்தியாவின் உதவியைப் பெற விரும்பினால், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கும். இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் செயல்பட அனுமதிக்க மாட்டோம், அதைத் தடுக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம். எல்லை தாண்டி இதுபோன்ற நடவடிக்கை எடுக்க முடியுமா என்றால்... எடுப்போம் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``பயங்கரவாதிகளை அவர்களின் வீடுகளுக்குள்ளேயே கொல்ல இந்தியா தயங்காது எனப் பிரதமர் மோடி, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் பேச்சு என் கவனத்துக்கு வந்தது. நான் ஏற்கெனவே கூறியதுபோல், அமெரிக்கா இந்த விவகாரத்தின் உள்ளே நுழையப் போவதில்லை.மேத்யூ மில்லர்

ஆனால், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னூனை படுகொலை செய்த சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக இந்தியா மீது அமெரிக்கா ஏன் எந்த தடையும் விதிக்கவில்லை எனக் கேட்கிறீர்கள். இதுகுறித்து நாங்கள் இதுவரை வெளிப்படையாக விவாதிக்கவில்லை. மேலும், அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்காது." எனத் தெரிவித்திருக்கிறார்.தேர்தல் 2024: `தமிழ்நாடு டு இந்தியா... களம் யாருக்குச் சாதகம்?' - விவரிக்கும் ரவீந்திரன் துரைசாமி 


http://dlvr.it/T5cfL3

Tuesday, 16 April 2024

Unhappy: "சோகமா? 10 நாள் லீவு எடுத்துக்கோ!" - ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்!

வார விடுமுறைக்குக் காத்திருந்து வேலை நாள்களை நகர்த்தும் நிலை தான் பெரும்பாலான ஊழியர்களின் மனநிலையாக இருக்கிறது. `மனசு சரியில்ல’ என பணிபுரியும் நிறுவனத்தில் விடுப்பு கேட்டால், `எடுத்துக் கொள்ளுங்கள்’ என அனுமதிக்கப்படுவார்களா என்பது கேள்விக் குறிதான். உடலின் பிரச்னைகளை புரிந்து கொள்ளும் பலர் மனதின் பிரச்னைகளை புரிந்து கொள்ளத் தவறிவிடுகின்றனர். 

இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனமான `Fat Dong Lai’ தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோகமாக இருக்கும் (sad leave) நாள்களில் வருடத்தில் 10 நாட்கள் வரை விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. செல்லப்பிராணிமொத்த வாக்காளர்கள் 94 கோடி...
வாக்களிக்காதவர்கள் 30 கோடி...
3-ல் 1 மடங்கு தவிர்க்கக் காரணம்?

வாடிக்கையாளர் சேவை…

யூ டோங் லாய் என்பவர் தனது முதல் கடையை 1995-ல் தொடங்கினார். அதன்பிறகு ஹெனான் மாகாணத்தில் 12 விற்பனை நிலையங்களாகக் கடை விரிவடைந்தது. இந்நிறுவனம் வெறும் சூப்பர்மார்கெட்டாக மட்டுமல்லாமல் ரத்த அழுத்தச் சோதனைகள், செல்லப்பிராணிகளுக்கான உணவு நிலையங்கள் போன்ற தனித்துவமான சலுகைகளை வாடிக்கையாளருக்கு வழங்கி வருகிறது. அதனாலேயே `ஹைடிலாவ் ஆஃப் சூப்பர்மார்க்கெட்டுகள்’ (Haidilao of supermarkets) என்ற புனைப்பெயரோடு மக்களிடையே அழைக்கப்படுகிறது. 

ஊழியர்களுக்கான சேவை…

சீனாவின் சில நிறுவனங்களில் ஊழியர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால், இதற்கு நேரெதிராக இந்நிறுவன ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாள்கள் ஏழு மணிநேரம் மட்டும் வேலை செய்தால் போதும்.  

மேலும், இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது. சீன புத்தாண்டு காலத்தில் இந்நிறுவனம் ஐந்து நாள்களுக்கு மேல் மூடப்படுகிறது. அந்த சமயத்திலும் ஊழியர்கள் நிம்மதியாக இருக்கலாம்.  Maternity Leave: மூன்றாவது குழந்தை பிறந்தால் மகப்பேறு விடுமுறை உண்டா? சட்டம் சொல்வது என்ன?

அதோடு வாடிக்கையாளர் யாராவது பணிபுரியும் ஊழியர்களை அவமதித்தாலோ அல்லது ஏதேனும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தினாலோ 5,000 யுவான் வரை ஊழியர்களுக்கு நிறுவனம் இழப்பீடாக வழங்குகிறது. ஊழியர்களின் மனநிலையை மகிழ்ச்சியாகச் வைக்க சமீபத்தில் அனைத்து ஊழியர்களையும் ஜப்பானுக்கு அழைத்துச் செல்வதாக அறிவித்திருந்தது. தொடர்ந்து தனது ஊழியர்களின் நலனில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.   

"ஒவ்வொருவருக்கும் அவர்கள் சோகமாக இருக்கும் நாள்கள் உண்டு, அதுதான் மனித இயல்பு. ஆனால், சுவாரஸ்யமாக அவர்களுக்குச் சோகமான நாள்களில் விடுப்பு கிடைத்தால், அவர்கள் மீண்டும் மகிழ்ச்சியாக உணர முடியும். இதன் பொருள் அவர்கள் நிறுவனத்தின் புரிதலையும் ஆதரவையும் உணர்கிறார்கள். மேலும், வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையின் சுவையைப் பெறுகிறார்கள். அதோடு, ஊழியர்களுக்கு எப்போது விடுப்பு எடுக்க வேண்டும் என்று திட்டமிடுவதற்கான சுதந்திரம் இருக்கும்’’ என்று யூ டோங் லாய் கூறியுள்ளார்.


http://dlvr.it/T5ZBdH

Monday, 15 April 2024

இரான் Vs இஸ்ரேல்: அதிகரிக்கிறதா மூன்றாம் உலகப் போர் அச்சம்?!

இஸ்ரேல் Vs பாலஸ்தீனம் என்றிருந்த போர்க் களம் தற்போது இஸ்ரேல் Vs இரான் ஆகவும் உக்கிரமடைந்திருக்கிறது. சிரியாவில் உள்ள இரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மீது இரான் வான்வழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு பக்கபலமாக அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதால், மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் மாபெரும் போர்மூளும் அபாயம் அதிகரித்திருக்கிறது. உலகப்போர் போல `இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது' என ஐ.நா.வும் அச்சம் தெரிவித்திருக்கிறது.தாக்குதலுக்குள்ளான இரான் தூதரகம், சிரியா

இஸ்ரேல் Vs பாலஸ்தீனம்:

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 33,091 பாலஸ்தீனியர்கள் உள்பட 34,000 பேர் உயிரிழந்திருக்கின்றனர். போர் நிறுத்தம் கோரி உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வரும் நிலையில், மற்றொரு தாக்குதலை இஸ்ரேல் துணிந்து நடத்தியிருக்கிறது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் மீதான போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இஸ்ரேல் பக்கம் நிற்க, இரான் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகளும், ஹிஸ்புல்லா, ஹைதி போன்ற இஸ்லாமியக் கிளர்ச்சிக் குழுக்களும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருக்கின்றன. இந்த நிலையில், பாலஸ்தீனத்தை தாக்கும் இஸ்ரேலை அச்சுறுத்துவதற்காக, இரானின் ஆதரவுடன் லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா மற்றும் ஏமனிலிருந்து ஹைதி உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக் குழுக்கள் இஸ்ரேல்மீது அவ்வபோது தாக்குதல் நடத்திவருகின்றன.

இரான் Vs இஸ்ரேல்:

ஆகவே, தனக்கு எதிர் முகாமில் இருக்கும் இரானை எச்சரிக்கும் விதமாக, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள இரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில், தூதரகத்தில் தங்கியிருந்த இரானின் முக்கிய ராணுவ கமாண்டர் உள்பட 12 தூதரக அதிகாரிகள் உயிரிழந்தனர். இது இரானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது இஸ்ரேலின் தாக்குதல்தான் என இரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது. அதற்கேற்ப, இஸ்ரேலும் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவும் இல்லை; குற்றச்சாட்டை மறுதலிக்கவும் இல்லை. மேலும், `ஆத்திரத்திலிருக்கும் இரான் நிச்சயமாக இஸ்ரேலைத் தாக்கக்கூடும் எச்சரிக்கையாக இருக்கவும்' என அமெரிக்கா இஸ்ரேலை அலர்ட் செய்தது.இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தும் இரான்

இந்த நிலையில், ஏப்ரல் 13-ம் தேதி இரவில் இஸ்ரேல் மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதலை இரான் நடத்தியது. இஸ்ரேல் மீது சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டன. இருப்பினும், இஸ்ரேலின் அசைக்கமுடியாத அதிநவீன `அயர்ன்-டோம்' பாதுகாப்பு கட்டமைப்பின்மூலம், 300 ஏவுகணைகளில் 99% ஏவுகணைகள் இஸ்ரேல் எல்லையைத் தொடும் முன்பே வழிமறித்து தாக்கி அழிக்கப்பட்டுவிட்டதாக, இஸ்ரேல் கூறியிருக்கிறது. தவிர, இஸ்ரேல் விமானப்படை மட்டுமல்லாமல் அமெரிக்காவும் இணைந்து இரானின் ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியதாகத் தெரிவித்திருக்கிறது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் ஒரு சிறுமி உள்பட 7 இஸ்ரேலியர்கள் காயமடைந்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இரானின் இந்தத் தாக்குதலுக்கு பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு பலத்த வரவேற்பு தெரிவித்திருக்கிறது.இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இரான்; எச்சரிக்கும் அமெரிக்கா- நிலவும் போர்ச்சூழலால் பதற்றம்!

பரஸ்பர எச்சரிக்கை விடுக்கும் நாடுகள்:

அதேசமயம், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இரானுக்கு கடும் கண்டனத்தையும், இஸ்ரேலுக்கான ஆதரவையும் தெரிவித்திருக்கின்றன. இதுகுறித்து பதிலளித்திருக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ``இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இரான் தயாராகியிருக்கிறது. அதேசமயம் நாங்களும் எங்களின் தற்காப்புக்காக எல்லாவிதமான பதிலடிக்கும் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு கெடுதல் செய்பவர்களுக்கு நாங்களும் கெடுதல் செய்வோம். எங்களுக்கு ஆதரவாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் துணை நிற்கின்றன" எனத் தெரிவித்திருக்கிறார்.இரான் ராணுவத் தளபதி முகமது பாகேரி

அதேசமயம், இரான் ராணுவத் தளபதி முகமது பாகேரி, ``இஸ்ரேல் மீதான எங்களின் தாக்குதல் என்பது, சிரியாவில் இரான் தூதரகம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கான பதிலடியே. எங்களின் தற்காப்புக்காக நாங்களும் தாக்குதல் நடத்தினோம். இந்தத் தாக்குதலை நாங்கள் இனியும் நீட்டிக்க விரும்பவில்லை. ஆனால், இஸ்ரேல் எங்களை மீண்டும் தாக்கினால் அதற்காக நாங்கள் கொடுக்கும் பதிலடி இதைவிடப் பெரிதாக இருக்கும். இஸ்ரேலுக்கு ஆதரவாக குறுக்கே அமெரிக்கா வந்தாலும் அவர்களுக்கான பதிலடியைக் கொடுப்போம்!" என எச்சரிக்கை விடுத்தியிருக்கிறார்.ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்

உலகப் போர் மூளும் அபாயம்... ஐ.நா கவலை:

இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல், பல நாடுகளின் ஆதரவுக் கரங்களால் இரு அணிகளுக்கு இடையேயான போராக வெடிக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. இது இப்படியே நீடித்தால் மத்தியக் கிழக்கில் மூன்றாம் உலகப்போரே வெடிக்கும் அபாயத்துக்கு கொண்டுசெல்லும் என உலக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ``இரான், இஸ்ரேல் மீது நடத்தியப் பெரிய அளவிலான தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விரோதங்களை உடனடியாக நிறுத்துமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். இதனால் மத்திய கிழக்கில் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மற்றுமொரு போரை இந்தப் பிராந்தியமோ அல்லது உலகமோ தாங்காது என்பதை நான் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்!" எனத் தெரிவித்திருக்கிறார். ``இரான் மீதான இஸ்ரேலின் எதிர் தாக்குதலில், அமெரிக்கா பங்கேற்காது" - ஜோ பைடன்!


http://dlvr.it/T5X64Y

`உலகின் மிக வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்!'- இரங்கல் தெரிவித்த கின்னஸ் அமைப்பு

உலகின் மிகவும் வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம் அடைந்திருக்கின்றனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் லோரி மற்றும் டோரி என்கிற ஜார்ஜ். 62 வயதுடைய இவர்கள் 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று பென்சில்வேனியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளாகப் பிறந்து இருக்கின்றனர். பகுதியளவு இணைந்த மண்டை ஓடுகள், முக்கிய ரத்த நாளங்கள் மற்றும் 30 சதவிகித மூளையைப் பகிர்ந்தவாறு பிறந்த இவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என டாக்டர்கள் அப்போது தெருவித்து இருகின்றனர்.இரட்டை சகோதரிகள்

இருப்பினும் 62 ஆண்டுகள் வாழ்ந்த இவர்கள் உடல்நலப் பிரச்னையால் தற்போது உயிரிழந்திருக்கின்றனர். இருவரும் பட்டப்படிப்பு படித்து வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்து வந்திருக்கின்றனர். மேலும் கடந்த 2007-ம் ஆண்டில் உலகின் மிக வயதான ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கின்றனர். இவர்களுடைய இறப்புக்கு கின்னஸ் அமைப்பு உட்பட உலக அமைப்புகள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றன. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


http://dlvr.it/T5WjD8

``இரான் மீதான இஸ்ரேலின் எதிர் தாக்குதலில், அமெரிக்கா பங்கேற்காது" - ஜோ பைடன்!

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் தொடர்பாக இஸ்ரேல் - ஹமாஸ் குழுவுக்கு இடையே தொடங்கிய போரில் இரான், பாலஸ்தீனத்துக்கு உதவி வந்தது. இந்த நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி சிரியாவில் இருந்த இரான் தூதரகம்மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ ஜெனரல்கள், ராணுவ அதிகாரிகள் சிலர் உயிரிழந்தனர். இதனால் கடும் கோபமடைந்த இரான், கடந்த 13-ம் தேதி இஸ்ரேல்மீது வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது.இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி - நெதன்யாகு

மேலும், ஐ.நா-வில், ``இரான் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இரானுக்கு முழு உரிமையும் இருக்கிறது. இந்த மோதலில் இஸ்ரேல் மற்றுமொரு தவறு ஏதேனும் செய்தால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது முழுக்க முழுக்க இரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல். இதில் அமெரிக்கா தலையிட வேண்டாம்" என இரான் தெரிவித்தது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் முடிவு செய்தால், இரானுக்கு எதிரான எதிர் தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்காது" என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவுக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.ஜோ பைடன்

இதற்கு முன்னர் வெள்ளை மாளிகையின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி,``இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்கா தொடர்ந்து உதவும், ஆனால் போரை விரும்பவில்லை" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இரான்; எச்சரிக்கும் அமெரிக்கா- நிலவும் போர்ச்சூழலால் பதற்றம்!


http://dlvr.it/T5WM2Y

Sunday, 14 April 2024

இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இரான்; எச்சரிக்கும் அமெரிக்கா- நிலவும் போர்ச்சூழலால் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் தொடர்பாக இஸ்ரேல் - ஹமாஸ் குழுவுக்கு இடையே தொடங்கிய போர் இன்றளவும் நீடிக்கிறது. இந்த போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைபாட்டில் இருந்த இரான், பாலஸ்தீனத்துக்கு உதவி வந்தது. மேலும் போரை நிறுத்தும்படி இஸ்ரேலை எச்சரித்தும் வந்தது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக ஏப்ரல் 1-ம் தேதி சிரியாவில் இருந்த இரான் தூதரகம்மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ ஜெனரல்கள், ராணுவ அதிகாரிகள் சிலர் உயிரிழந்தனர்.இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இதனால் கடும் கோபமடைந்த இரான், இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதாக அமெரிக்கா இஸ்ரேலை எச்சரித்தது. அதைப்போலவே, நேற்று இஸ்ரேல்மீது இரான் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் குறித்து விளக்கமளித்த ஐ.நா சபைக்கான இரானின் நிரந்தர தூதுக்குழு, ``சட்டபூர்வமான பாதுகாப்பு தொடர்பான ஐ.நா சாசனத்தின் 51 வது பிரிவின் அடிப்படையில், இரான் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.

இரான் குடியரசு ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது, அதே நேரம் இரானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, தேசிய நலன்களைப் பாதிக்கும் எந்த ஒரு சட்டவிரோத சக்திகளுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும் எதிராக எங்கள் நாட்டை பாதுகாப்பதற்கான உறுதியையும் வலியுறுத்துகிறது.இரான் தாக்குதல்

இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இரானுக்கு முழு உரிமையும் இருக்கிறது. இந்த மோதலில் இஸ்ரேல் மற்றுமொரு தவறு ஏதேனும் செய்தால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது முழுக்க முழுக்க இரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல். இதில் அமெரிக்கா தலையிட வேண்டாம். விலகி இருப்பதே நல்லது" எனத் தெரிவித்திருக்கிறது.

ஆனால், இரானின் வான்வழித் தாக்குதலை முறியடிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா கூடுதல் ஐயன் டோம் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியிருக்கிறது. அதே நேரம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் இரானைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவாக, ரைப்ரஸ் தீவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டன் போர் விமானங்களை அனுப்பி வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.ஜோ பைடன்

இன்னொரு பக்கம் இரானுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும் போராக மாற அனைத்து சாத்தியக்கூறுகளும் இருப்பதாக வல்லுநர்கள் அஞ்சுகிறார்கள். இந்த நிலையில், இது குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது. இதில், இரானின் பாதுகாப்புப் படையைத் தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தும் எனக் கூறப்படுகிறது.உ.பி: சீருடையில் மாற்றம்; சாமியார்களாக மாறிய போலீஸார்... காவல்துறை முடிவும் எழுந்த விமர்சனமும்!


http://dlvr.it/T5TZwP

Saturday, 13 April 2024

இந்திய மாலுமிகள் 17 பேர் உட்பட 25 பேருடன் சென்ற இஸ்ரேல் சரக்கு கப்பல்... சிறை பிடித்துச்சென்ற ஈரான்!

வளைகுடாவில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதட்டம் அதிகரித்துள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியது. அதனை தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருகிறது. எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அபாயம் இருந்து வருகிறது. இதையடுத்து இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்க போர்க்கப்பல்கள் வளைகுடா பகுதிக்கு விரைந்துள்ளது. வளைகுடா பகுதியில் வரும் சந்தேகத்திற்குறிய கப்பல்கள் மீதும் சமீப காலமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று எம்.எஸ்.சி.ஏரிஸ் என்ற கண்டெய்னர் கப்பல் ஓமன் வளைகுடா அருகே சென்ற போது ஈரான் கடற்படையினர் கப்பலை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஈரான் கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் இறங்கினர்.

அவர்கள் கப்பலை ஈரான் நோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர். அக்கப்பல் இத்தாலி மற்றும் ஸ்விஸ் நாட்டு நிறுவனமான எம்.எஸ்.சி. நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். கப்பலில் 17 இந்தியர்கள் உட்பட 25 பேர் இருந்ததாக அக்கப்பல் கம்பெனி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியர்களை பத்திரமாக மீட்க இந்திய அரசு தூதரகம் வாயிலாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கப்பலை ஈரான் கடற்படை தனது கட்டுப்பாட்டில் எடுத்து இருப்பதை எம்.எஸ்.சி.கம்பெனியும் உறுதிபடுத்தி இருக்கிறது.

ஹெலிபோர்ன் ஆபரேசன் என்ற பெயரில் இந்த கப்பலை ஈரான் கைப்பற்றி இருக்கிறது. கப்பலை எம்.எஸ்.சி.நிறுவனம் பயன்படுத்தி வந்தாலும் அக்கப்பல் இஸ்ரேலில் கோர்டெல் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். எனவேதான் அக்கப்பலை ஈரான் பிடித்துச்சென்றுள்ளது. கப்பலை உடனே விடுவிக்கும்படி அமெரிக்கா தெரிவித்துள்ளது. கப்பலையையும் சர்வதேச மாலுமிகளையும் உடனே விடுவிக்கவேண்டும் என்றும், சரக்கு கப்பலை பிடிப்பது சர்வதேச சட்டத்தை மீறிய செயலாகும் என்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித்தொடர்பாளர் வாட்ஸ்சன் தெரிவித்துள்ளார்.

கப்பலை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதை ஈரானும் உறுதிபடுத்தி இருக்கிறது. கப்பலை பிடித்ததற்கு ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. இச்சம்பவத்தால் இரு நாடுகளிடையான பதட்டம் மேலும் அதிகரித்து இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY">
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY">
https://bit.ly/47zomWY />

http://dlvr.it/T5TNMl

மக்கள் வசிக்காத தனித் தீவில் சிக்கிக்கொண்ட மூவர்... பனை ஓலைகளால் மீட்கப்பட்டது எப்படி?!

மைக்ரோனேசியாவிலுள்ள (Micronesia) அமெரிக்க தீவு பிரதேசமான குவாமிலிருந்து (Guam) 415 மைல் தொலைவில் மேற்கு பசிபிக் பெருங்கடலில் இருக்கும் பிகெலோட் அட்டோல் (Pikelot Atoll) தீவில் சிக்கிக்கொண்ட மூன்று பேர், பனை மர ஓலைகளால் உயிர் பிழைத்திருக்கின்றனர். மக்களே வசிக்காத, பனை மரங்களால் சூழப்பட்ட 32 ஏக்கர் பிகெலோட் தீவிலிருந்து கடந்த செவ்வாய்கிழமை, 40 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களை அமெரிக்க கடலோர காவல் படை கண்டறிந்ததாகக் கூறப்பட்டதையடுத்து இந்த சம்பவம் வெளியில் தெரியவந்திருக்கிறது.பிகெலோட் அட்டோல் (Pikelot Atoll) தீவு

இருப்பினும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று இன்னும் கண்டறியப்படவில்லை என அமெரிக்க கடலோர காவல் படை வியாழனன்று அறிக்கை மூலம் வெளிப்படுத்தியது. அந்த அறிக்கையில், `40 வயதுடைய மூன்று பேர், மார்ச் 31 அன்று மைக்ரோனேசியாவின் கூட்டாட்சி மாநிலங்களின் ஒரு பகுதியான பொலோவாட் அட்டோல் (Polowat Atoll) தீவிலிருந்து, சுமார் 115 மைல் தொலைவுக்கு அப்பால் உள்ள பிகெலோட் அட்டோல் தீவுக்கு, மோட்டார் பொருத்தப்பட்ட 20 அடி நீல ஸ்கிஃப் (Skiff) படகில் புறப்பட்டனர்.

ஆறு நாள்கள் ஆகியும் அவர்கள் திரும்பி வராததையடுத்து, அவர்களின் உறவினர் ஒருவர் குவாமில் உள்ள கடலோர காவல்படையின் கூட்டு மீட்பு துணை மையத்தில் தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, மோசமான வானிலையில் 78,000 சதுர கடல் மைல்களுக்கு மேல் அதிகாரிகள் தேடுதல் பணியை மேற்கொண்டனர்.பிகெலோட் அட்டோல் (Pikelot Atoll) தீவு - பனை ஓலை

அதைத் தொடர்ந்து, அமெரிக்க கடற்படையின் P-8 Poseidon விமானத்தில் சென்ற மீட்புப் பணி அதிகாரிகள், அந்தத் தீவில் பனை ஓலைகளால் எழுதப்பட்டிருந்த `HELP' அடையாளத்தைக் கண்டறிந்து மீட்புப் பணியைத் தொடங்கினர். பின்னர் இறுதியாக, அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டனர் (ஏப்ரல் 9). பனை ஓலைகளால் அவர்கள் செய்த புத்திசாலித்தனமான செயல்தான் அவர்கள் இருக்கும் இடத்தை நெருங்க எங்களுக்கு உதவியது' என அமெரிக்க கடலோர காவல் தெரிவித்திருந்தது.

இவ்வாறு, அந்தத் தீவிலிருந்து மீட்கப்படுவது இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்பாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மூன்று மாலுமிகள் மணலில் `SOS' என்று எழுதிவைத்த அடையாளத்தின் மூலம் மீட்கப்பட்டனர். Katchatheevu row: கச்சத்தீவு அரசியல் நமக்கு என்ன கொடுக்கும்? - ஒரு விரிவான அலசல்!


http://dlvr.it/T5SLgy

Friday, 12 April 2024

`இரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் தற்போது செல்ல வேண்டாம்' - வெளியுறவுத்துறை அறிவிப்பின் பின்னணி என்ன?

பாலஸ்தீனம் மீது கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர்தொடுத்து வரும் இஸ்ரேல், போர்நிறுத்தம் வேண்டுமென்று தொடர்ச்சியாகக் கூறிவரும் நாடுகளில் ஒன்றான இரான் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது. அந்த வரிசையில், ஏப்ரல் 1-ம் தேதி சிரியாவிலிருக்கும் இரான் தூதரகம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இரான் ராணுவத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி - நெதன்யாகு

இந்தத் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் தான் எனக் குற்றம்சாட்டிய இரான், பதிலடி தருவோம் என பகிரங்கமாக அறிவித்தது. இதற்கு எதிர்வினையாற்றிய இஸ்ரேல், இரான் அவ்வாறு தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தது. இதனால், இரு நாடுகளுக்குமிடையே பதட்டமான சூழல் உருவாகியிருக்கிறது. மேலும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், அடுத்த 48 மணிநேரத்தில் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாகவும், அதனை எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராகிவருவதாகவும், இரானிய தலைமையால் விளக்கப்பட்ட ஒரு நபரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.

இந்த நிலையில், இரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் தற்போது செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து, மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அறிக்கையில், ``இஸ்ரேல், இரான் பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் இரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Travel advisory for Iran and Israel:
https://t.co/OuHPVQfyVp pic.twitter.com/eDMRM771dC— Randhir Jaiswal (@MEAIndia) April 12, 2024

தற்போது இரான் அல்லது இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் அங்குள்ள இந்தியத் தூதரகங்களைத் தொடர்பு கொண்டு தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தங்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறும், தங்களின் இயக்கங்களை குறைந்தபட்சமாக கட்டுப்படுத்துமாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.உ.பி: சீருடையில் மாற்றம்; சாமியார்களாக மாறிய போலீஸார்... காவல்துறை முடிவும் எழுந்த விமர்சனமும்!


http://dlvr.it/T5Qklk

Wednesday, 10 April 2024

துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவன்... பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்!

நான்கு மாணவர்களை சுட்டுக் கொன்ற மாணவரின் பெற்றோருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது…

2021-ல் ஈதன் க்ரம்ப்ளே என்ற 15 வயது மாணவன் ஆக்ஸ்ஃபோர்டு உயர்நிலைப் பள்ளியில் தன்னோடு படிக்கும் சக மாணவர்கள் 4 பேரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் இன்றளவும் பலராலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக உள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 7 மாணவர்கள் காயமடைந்தனர். 

துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் மற்றும் அவரின் பெற்றோர்கள் ஜேம்ஸ் மற்றும் ஜெனிபர் க்ரம்ப்ளே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.நமக்குள்ளே- போக்ஸோ: குற்றங்கள் வெளிச்சத்துக்கு வருவது அதிகரித்திருக்கின்றது; ஆனால், விசாரணை, தண்டனை?

இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று, இறந்த மாணவர்களின் பெற்றோர்கள், தங்களின் உணர்வுபூர்வ அறிக்கைகளை கலிஃபோர்னியா ஓக்லாண்ட் நீதிமன்றத்தில் அளித்தனர். 

ஜேம்ஸ் மற்றும் ஜெனிபர் க்ரம்ப்ளே தன் மகனின் மோசமான மனநிலையை கவனிக்கத் தவறியதாகவும், மேலும் 2021 தாக்குதலில் அவர் பயன்படுத்திய துப்பாக்கியை பெற்றோர்கள் வாங்கியதாகவும், அதோடு அந்தத் துப்பாக்கியை சரியாகப் பதுக்கி வைக்காமல் அலட்சியமாக இருந்ததாக குற்றம் சாட்டினர். 

குற்றங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் சிறுவனுக்கு பரோல் இல்லா சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மகனின் மனநிலையை கவனிக்கத் தவறிய அலட்சிய போக்கிற்காக பெற்றோர்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 


http://dlvr.it/T5K7Xq

Monday, 8 April 2024

Solar Eclipse: சூரியனை மறைத்த சந்திரன்... அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், முழு சூரிய கிரகணம்! | Album

Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்Solar Eclipse | முழு சூரிய கிரகணம்


http://dlvr.it/T5G46H

GM Crops: மக்காச்சோளம், சோயாபீன்.. 81 மரபணு மாற்று விதைகளுக்கு சீனா அனுமதி! சூழலியலாளர்கள் அதிர்ச்சி

மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் (Genetically Modified crops) பயன்பாட்டிற்கு இந்திய விவசாயிகள், சூழல் ஆர்வலர்கள் தங்களுடைய கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால், உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்கா, கனடா, தென் அமெரிக்கா மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகள் மரபணு மாற்று தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சில விதைகளைப் பயன்படுத்தி வருகிறது. maize field (Representational Image)மரபணு மாற்றப்பட்ட கடுகு... ஆதரவும் எதிர்ப்பும் - ஆர்வலர்கள் சொல்வதென்ன?

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு இந்தியாவோடு சேர்ந்து தொடர்ந்து பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வந்த சீனா, தற்போது தனது நிலைப்பாட்டிலிருந்து மாறியுள்ளது. மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளோடு கைகோர்த்துள்ள சீனா, 2023 அக்டோபர் முதல் மக்காச்சோளம் மற்றும் சோயாபீன் ஆகியவற்றின் பல மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அங்கீகரித்துள்ளது.

அக்டோபர் முதல், சீனா 64 வகையான மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளத்திற்கும், 17 வகையான மரபணு மாற்றப்பட்ட சோயாபீனுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

அக்டோபர் 2023-ல் சீன அரசு, 37 மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோள வகைகள் மற்றும் 14 மரபணு மாற்றப்பட்ட சோயாபீன் வகைகளுக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது. 2024 மார்ச் மாதத்தில் கூடுதலாக மரபணு மாற்றப்பட்ட 27 மக்காச்சோளம் மற்றும் 3 சோயாபீன் வகைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.விதைகள்எத்தனால் பயன்பாடு...அடிக்குது ஜாக்பாட்... கரும்புக்கு மாற்றாக மக்காச்சோளம்!

மக்காச்சோளம் மற்றும் சோயாபீன் விளைச்சலை அதிகரிக்க இதுவரை 81 மரபணு மாற்றப்பட்ட விதைகளைச் சீனா அங்கீகரித்துள்ளது. இந்தியாவின் பி.டி கத்தரி (India’s Bt brinjal) மற்றும் மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புக் குரலாலும், இதுசம்பந்தமாக தொடரப்பட்ட வழக்குகளாலும் இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் அண்டை நாடான சீனா மரபணு மாற்று பயிர்களுக்கு அனுமதி அளித்திருப்பது சூழலியலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


http://dlvr.it/T5Dmll

Saturday, 6 April 2024

ஹிஜாப்பை கழற்ற சொன்ன போலீஸ்; வழக்கு தொடர்ந்த பெண்கள் - 17.5 மில்லியன் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு!

அமெரிக்காவின் நியூயார்க் நகர நிர்வாகத்தின் மீது 2018-ம் ஆண்டு ஜமிலா கிளார்க், அர்வா அஜீஸ் ஆகிய இரு பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், ``2017-ம் ஆண்டு பாதுகாப்பு நடவடிக்கையை மீறியதாக எங்களைக் கைது செய்தார்கள். ஆனால் அப்படி ஒன்று நடக்கவில்லை. எங்களைக் கைது செய்தபோது புகைப்படம் எடுக்க எங்களின் ஹிஜாபை அகற்ற வற்புறுத்தினார்கள். அப்போது எங்களின் தனிமனித உரிமைகள் மீறப்பட்டதாக உணர்ந்தோம்.Women wearing Hijab (Representational Image)

ஹிஜாப்களை அகற்றுமாறு எங்களைக் கட்டாயப்படுத்திய சம்பவம் எங்களை அவமானப்படுத்தியதாகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் உணர்ந்தோம். ஹிஜாப் அகற்றுமாறு கட்டாயப்படுத்தியது, முழு உடல் சோதனைக்கு உட்படுத்தியது போன்ற வலியைத் ஏற்படுத்தியது. நாங்கள் அனுபவித்த அந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்கவும் முடியவில்லை. எனவே இது தொடர்பாக விசாரித்துத் தீர்வு தரவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இதே காரணத்தை முன்வைத்து சுமார் 3,600 பேருக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனலிசா டோரஸின், ``காவல்துறையின் ஆவணங்களுக்காகப் புகைப்படம் பதிவு செய்யும் போது, ஹிஜாப் அணிந்திருக்கலாம் என 2020-ல் நியூயார்க் காவல்துறை அனுமதி அளித்தது. ஆனால் முகம் வெளிப்படையாகத் தெரியும்படி மட்டும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 17.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.145 கோடியே 75 லட்சம்) இழப்பீடாக வழங்க வேண்டும்" எனத் தீர்ப்பளித்தார்.ஹிஜாப்

இந்த தீர்ப்பை நியூயார்க் நகர நிர்வாகம் நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டது. இந்த இழப்பீட்டுத் தொகையில், 13.1 மில்லியன் சட்ட விவகார கட்டணமாக வசூலிக்கப்படும். 2014 மார்ச் முதல் 2021 ஆகஸ்ட் மாதம் வரை பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 7,824 டாலர் முதல் 13,125 டாலர் வரை இழப்பீடாக வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.கெஜ்ரிவால் கைது: `நியாயமாக, வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட ஊக்குவிக்கிறோம்'- அமெரிக்கா வலியுறுத்தல்!


http://dlvr.it/T58K02

Friday, 5 April 2024

Taiwan: 660 டன் எடை; பயங்கர நிலநடுக்கத்திலும் உயரமான கட்டடத்தைக் காத்த Pendulum - எப்படி சாத்தியம்?

தீவு நாடான தைவானில் (Taiwan) நேற்று முன்தினம் காலை 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், மொத்த நாடும் கடும் பாதிப்புக்குள்ளானது. கடற்கரையோர சுரங்கப் பாதைகள், சாலைகள், உயர்ந்த கட்டடங்கள் பெரும் சேதமடைந்தன. குறிப்பாக, ஒன்பது பேருக்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்னொருபக்கம், இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட 600-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.பெண்டுலம்

இதற்கு முன், 1999-ல் தைவானை 7.6 ரிக்டர் அளவிலான அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. இதில் 2,400 பேர் உயிரிழந்தனர். 5,000 கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அதன்பிறகு, 25 ஆண்டுகளுக்குப் பின் தற்போது 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. 1999-ல் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் காட்டிலும் தற்போதைய நிலநடுக்கத்தால், குறைவாகவே பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில், பெரும்பாலான கட்டடங்கள் கடும் சேதமடைந்த நிலையில், தைவானின் மிக உயரமான கட்டடமான தைபே 101 (Taipei 101) கட்டடம் பெரிய அளவில் சேதம் ஏற்படாமல் தப்பித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், அதனுள் வைக்கப்பட்டிருக்கும் 660 மெட்ரிக் டன் எடை கொண்ட எஃகு உருண்டையே. இந்த எஃகு உருண்டையானது, 1,600 அடிகொண்ட இந்தக் கட்டடத்தில், தரையிலிருந்து மேலே 1,000 அடி உயரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது.தைவான் பூகம்பம்

`டேம்பர் பேபி (Damper Baby)' என்று அழைக்கப்படும் இந்தப் பெண்டுலம், கட்டடத்தின் 87-வது தளத்துக்கும 92-வது தளத்துக்கும் இடையில் 42 எஃகு அடுக்குகளிலிருந்து கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கிறது. இந்த பெண்டுலனமானது, நிலநடுக்கமோ அல்லது புயல் வீசும்போதோ கட்டடத்தின் இயக்கத்தை எதிர்க்கும் வகையில், 40 சதவிகிதம் வரை கட்டடம் ஊசலாடுவதைக் குறைக்கிறது.

அதாவது, இயற்கை சீற்றத்தின்போது கட்டடம் ஒருபக்கமாக சாய்ந்து விபத்துக்குள்ளாகும் சூழலில் அதைத் தடுக்கும் விதமாக, கட்டடத்துக்கு எதிர்திசையில் இந்தப் பெண்டுலம் ஊசலாடி விபத்து ஏற்படுவதை 40 சதவிகிதம் வரை குறைக்கும். கிட்டத்தட்ட 18 அடி விட்டம் கொண்ட இந்த பெண்டுலம், அதிகப்படியான இயக்கத்தைத் தடுக்க 59 அங்குல வரம்புக்குள் ஊசலாடுகிறது. இதன் தொழில்நுட்பப் பெயர் டியூன்டு மாஸ் டேம்பர் (Tuned Mass Damper). இது கட்டடத்தின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ஒரு செயலற்ற அமைப்பாகும்.``இது எங்கள் தெய்வப்பூ... காலநிலை மாற்றத்தால் காணாமல் போகிறது" - தைவான் பழங்குடி மக்களின் ஆதங்கம்!


http://dlvr.it/T5617Z

Thursday, 4 April 2024

Alan ritchson: `பல ஆண்டுகள் பாலியல் துன்புறுத்தல்; தற்கொலைக்கும் முயன்றேன்!' - ஹாலிவுட் நடிகர் வேதனை

Fast X, Agent Aimes, Ordinary Angels, Ed Schmitt, The Ministry of Ungentlemanly Warfare, போன்ற படங்களில் நடித்து பிரபலமான திரைப்பட நடிகர் ஆலன் ரிட்ச்சன் (Alan ritchson - 41). அமெரிக்காவைச் சேர்ந்த இவர், மாடல், பாடகர், பாடலாசிரியர் எனப் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவின் தனியார் செய்தி நிறுவனத்துக்கு இவர் அளித்தப் பேட்டியில், ``நான் மாடலிங் துறையில் இருந்தபோது பல ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்தேன்.ஹாலிவுட் நடிகர்
ஆலன் ரிட்ச்சன் - Alan ritchson

மாடலிங் துறை சட்டபூர்வமாக்கப்பட்ட பாலியல் கடத்தல் போன்றது. அந்தத் துறை இன்றும் ஒழுங்குபடுத்தப்படவில்லை. பாலியல் துஷ்பிரயோகமே குறிக்கோளாக இருந்த கொடூரமான சூழலில்தான், நான் என் வாழ்வை கழிக்கவேண்டியிருந்தது. அப்போதுதான் மாடலிங்கிலிருந்து முற்றிலும் விலகும் ஒரு துரதிஷ்ட சம்பவம் நடந்தது. மிகவும் பிரபலமான புகைப்படக்காரர் ஒருவர் என்னைப் புகைப்படம் எடுக்க பதிவு செய்தார்.

மேலும், அவருடைய புகைப்படத்தில் போஸ் கொடுப்பவர்களை பல்வேறு பத்திரிகை, ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள் அணுகும் எனக் கூறினார். அதனால் அவருக்கு நேரம் கொடுக்க ஒப்புக்கொண்டேன். ஒரு ஹோட்டல் அறைக்குள் நிர்வாணமாக நடிக்க அனுப்பப்பட்டேன். அப்போது அந்த நபரால் நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். இந்தச் சம்பவத்தால் கடுமையாக மனச்சோர்வடைந்தேன்.ஹாலிவுட் நடிகர்
ஆலன் ரிட்ச்சன் - Alan ritchson

அதைத் தொடர்ந்து அந்தத் துறையைவிட்டு வெளியேறி, தொலைக்காட்சி, திரைப்படத் துறைக்கு மாறினேன். ஆனால், அந்த பாலியல் தொல்லை இந்தத் துறையிலும் தொடர்ந்தது. ஒரு திரைப்படத்தின் நிதிக்காக என்னுடைய தொழில்முறைக் கூட்டாளியாக இருந்த ஒரு பெண்ணுடன் வணிக சந்திப்புகளை நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பெண் அவரது அறைக்கு வரும்படி வற்புறுத்தினார். அதை மறுத்தபோதெல்லாம் என்னை இந்தத் தொழில்துறையிலிருந்து அழித்துவிடுவதாக மிரட்டத் தொடங்கினார்.

நான் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் புகார் அளிப்பதாகக் கூறினார். இந்தத் துறையில் காலடி எடுத்து வைத்த நேரம் அது. இப்படியான சூழல்களை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல், தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். ஒருமுறை தூக்கில் தொங்கவும் செய்தேன். ஆனால், என் மரணத்துக்குப் பிறகு என் குழந்தைகள், மனைவியின் நிலையை நினைத்துப் பார்த்து அதை தவிர்த்தேன்.ஹாலிவுட் நடிகர்
ஆலன் ரிட்ச்சன் - Alan ritchson

ஆனால், இது போன்ற பாலியல் அத்துமீறல்களால் bipolar எனும் மனநோய்க்கு ஆளானேன். ADHD எனும் நரம்பியல் நோயால் துன்புற்று வருகிறேன். இப்போதுவரை மனநல மருத்துவருடன் தொடர்ந்து ஆலோசனை பெற்று வருகிறேன். படைத்தவன் இருக்கிறான். நாம் அவனால் படைக்கப்பட்ட உயிரினங்கள்.

எனவே, நம் வாழ்க்கையின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் புரிந்துகொள்ள முயல்கிறேன். உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதும், மற்றவர்களுக்கு சேவை செய்வதும்தான் நமது வாழ்க்கையின் நோக்கமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.தருமபுரி: 10 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறல், பின் கொலை... 12 ம் வகுப்பு மாணவன் கைது!


http://dlvr.it/T534Fs

Tuesday, 2 April 2024

கச்சத்தீவு தொட்ட `பாஜக’... பதிலுக்கு சீன ஆக்கிரமிப்பை கிளறும் எதிர்க்கட்சிகள்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கையையோ, ஜி.எஸ்.டி-யையோ, ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரைவார்த்தது உள்ளிட்ட தனியார்மய நடவடிக்கைகளையோ கடந்த பத்தாண்டுகால மோடி அரசின் சாதனைகள் என்று பா.ஜ.க-வினர் பேசவில்லை. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க அரசின் சாதனைகள் என்று அண்ணாலை உள்ளிட்ட பா.ஜ.க-வினர் எவரும் ஏன் பேசவில்லை என்று தெரியவில்லை.கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயம்

தற்போது, பா.ஜ.க-வுக்கு எதிராக தேர்தல் பத்திரங்கள் திட்டம் உள்பட ஏராளமான பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கின்றன. இந்த நிலையில், தனக்கு எதிரான பிரச்னைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக புதிய புதிய பிரச்னைகளை பா.ஜ.க கிளப்பிவருகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதில் ஒன்றுதான் கச்சத்தீவு விவகாரம்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, கச்சத்தீவை 1974-ம் ஆண்டு இலங்கைக்கு கொடுத்தது. கச்சத்தீவுக்கு மாற்றாக, வாட்ஜ் பேங்க் என்ற கடல் பகுதியை இலங்கையிடமிருந்து இந்தியா பெற்றுக்கொண்டது. ஆனாலும், கட்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒலித்துவருகிறது. பிரதமர் மோடி

இந்த நிலையில், கச்சத்தீவு, இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது தொடர்பான தகவல்களை இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து ஆர்.டி.ஐ மூலமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பெற்றிருக்கிறார்.

‘1961-ம் ஆண்டு, குட்டித் தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை. கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கைக்கு விட்டுத்தர தயார்’ என்று அப்போதைய பிரதமர் நேரு கூறியதாக ஆர்.டி.ஐ தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், கொழும்பு நகரில் 1973-ம் ஆண்டு நடைபெற்ற வெளியுறவுத்துறை அதிகாரிகளின் கூட்டத்தில், கச்சத்தீவை இலங்கைக்கு தர முடிவெடுக்கப்பட்டதாகவும், அடுத்த ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக ஒப்புதல் பெறப்பட்டதாகவும் ஆர்.டி.ஐ தகவலில் கூறப்பட்டிருக்கிறது. அண்ணாமலை

இதைத் தொடர்ந்து, கச்சீத்தீவை காங்கிரஸ் அரசு அலட்சியத்துடன் தாரைவார்த்தது அம்பலமாகியிருக்கிறது என்று இந்த ஆர்.டி.ஐ தகவல்களைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இதனால், தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்படும் பிரச்னையாக மாறியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் காங்கிரஸையும், தி.மு.க-வையும் குறிவைத்த பா.ஜ.க-வினர் விமர்சித்த நிலையில், பா.ஜ.க-வுக்கு பதிலடி கொடுப்பதற்காக சீன விவகாரத்தை காங்கிரஸ் கையிலெடுத்திருக்கிறது. இதனால், கச்சத்தீவு விவகாரம் பா.ஜ.க-வுக்கு பேக்ஃபயர் ஆகியிருக்கிறது. ஏற்கெனவே, மோடி ஆட்சிக்காலத்தில், எல்லைப்பகுதியில் இந்தியாவுக்குச் சொந்தமான நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. பாகிஸ்தான், மாலத்தீவு போன்ற சிறிய நாடுகளுடனான பிரச்னையில், அதிரடி காட்டும் பிரதமர் மோடியும், பா.ஜ.க-வினரும், சீனாவுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. இந்தியா - சீனா

கச்சத்தீவு விவகாரத்தை அண்ணாமலையும், மோடியும் எழுப்பிக்கொண்டிருந்த நேரத்தில், அருணாச்சலப்பிரதேசத்திலுள்ள 30 இடங்களுக்கு சீனா அவர்கள் மொழியில் பெயர்சூட்டியிருக்கிறது. முதன்முறையாக, 2017-ம் ஆண்டு அருணாச்சலப்பிரதேசத்திலுள்ள ஆறு இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியது. அதைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு 15 இடங்களுக்கும், 2023-ம் ஆண்டு 13 இடங்களுக்கும் புதிய பெயர்களைச் சூட்டிய சீனா, தற்போது 30 இடங்களுக்கு பெயர் சூட்டியிருக்கிறது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாச்சலப்பிரதேசத்தை கபளீகரம் செய்ய சீனா மேற்கொள்ளும் முயற்சிக்கு உரிய முறையில் பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்கவில்லை. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது தொடர்பாக அமெரிக்காவும், ஜெர்மனியும் கருத்து தெரிவித்ததற்கு, ‘உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதீர்கள்’ என்று கண்சிவந்த இந்தியா, ஜெர்மனி தூதரை வரவழைத்து தனது கண்டனத்தைத் தெரிவித்தது. மல்லிகார்ஜுன கார்கே

ஒரு கருத்து சொன்னதற்காக இவ்வளவு கோபப்பட்ட மத்திய பா.ஜ.க அரசு, நம் நாட்டை ஆக்கிரமிக்க முயலும் சீனாவுக்கு எதிராக ஏன் கொந்தளிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கிடுக்கிப்பிடி போடுகின்றன.தேர்தல் களத்தில் தகிக்கும் கச்சத்தீவு விவகாரம்... பிரச்னையின் வேர் எது?!

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், ‘இந்திய நிலப்பரப்பை சீனா சொந்தம் கொண்டாடும் நேரத்தில், கச்சத்தீவு குறித்து பொய்க்கதைகளைக் கட்டவிழ்த்து தன்னை தற்காத்துக்கொள்ள பிரதமர் மோடி முயல்கிறார். எல்லைப் பிரச்னையைத் தீர்க்க சீனத் தரப்புடன் 19 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும், பிரதமர் மோடியால் சீனாவின் மீது ராஜாங்க ரீதியில் செல்வாக்கை செலுத்த முடியவில்லை. இந்திய பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டுவதை பிரதமர் மோடியால் தடுத்துநிறுத்த முடியவில்லை’ என்று விமர்சித்திருக்கிறார்.பிரதமர் மோடி

மேலும், ‘டோக்லாம் மற்றும் கல்வான் பிரச்னைகளுக்குப் பிறகு லடாக்கில் 2000 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த சீனா, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் பல அத்துமீறல்களில் ஈடுபட்டது. இவ்வளவு நடந்தும், எதுவும் நடக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார்’ என்று விமர்சித்திருக்கிறார் கார்கே.

சீனா விவகாரத்தை காங்கிரஸ் கையிலெடுத்த நிலையில், அதற்கு உரிய பதிலைத் தரமுடியாமல் பா.ஜ.க-வினர் தவிக்கிறார்கள். வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர், ‘உங்கள் வீட்டின் பெயரை நான் மாற்றினால் அது என்னுடையதாகிவிடுமா? பெயர்களை மாற்றுவதால் எதுவும் மாறிவிடாது’ என்று கூறியிருக்கிறார். ஒரு வீட்டின் பிரச்னையையும், ஒரு தேசத்தின் இறையாண்மையையும் சமதளத்தில் வைக்க முடியுமா?! காலம் தான் பதில் சொல்லும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY">
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY">
https://bit.ly/47zomWY />

http://dlvr.it/T4yDYC

America: பெற்றோர் தற்கொலை... 2 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு தமிழகம் வந்த 4 வயது குழந்தை!

America-வில் பெற்றோர் தற்கொலை:



தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும் தமிழ்ச்செல்வி இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய இருவரும் திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். இருவரும் அமெரிக்காவில் மிஸிசிப்பி மாகாணத்தில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு அமெரிக்காவிலேயே ஆண் குழந்தை பிறந்தது. Boy child

விஸ்ருத் என்று பெயரிடப்பட்ட இந்தக் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும்போது அமெரிக்காவில் (America) பெற்றோர் தற்கொலை செய்துகொண்டனர். பெற்றோரை இழந்து தவித்த குழந்தையை, அவர்களுக்கு அருகில் வசித்து வந்த பஞ்சாபை சேர்ந்த தம்பதியர் தத்தெடுத்துக்கொண்டனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் வசித்து வரும் குழந்தையின் பாட்டி மற்றும் சித்தி குழந்தையைத் தாங்கள் வளர்க்க விருப்பம் தெரிவித்தனர்.

குழந்தையை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்திடம் முறையிட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்னை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதியை உடனடியாக அமெரிக்கா சென்று இப்பிரச்னைக்குத் தீர்வு காண உத்தரவிட்டார். சென்னை விமான நிலையத்தில் மீட்கப்பட்ட குழந்தையுடன் கார்த்திகேய சிவசேனாபதிபெண் கல்வி அதிகம் உள்ள மாநிலங்களில் குழந்தைத் திருமணங்கள் மிகவும் குறைவு... | Child Marriage

அயலக தமிழர் நல வாரியம்:



கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா சென்ற கார்த்திகேய சிவசேனாபதி மிஸிசிப்பி மாகாணத்தின் இந்திய தூதரக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் அயலகத் தமிழர் நல வாரியத்தின் சார்பில் குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி மிஸிசிப்பி மாநில ஆளுநர் டேட் ரிவிஸுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மிஸிசிப்பி நகர தமிழ் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், அமெரிக்காவுக்கான அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர்கள் ஆகியோரும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இந்திய வெளியுறவு அமைச்சகமும் குழந்தையை மீட்பதற்கான முயற்சிகளுக்குப் பங்களித்தது.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தெற்கு பகுதியிலுள்ள டென்னசி மாகாணத்தில் குழந்தையை மீட்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. அயலகத் தமிழர் நல வாரியத்தின் அமெரிக்க உறுப்பினர் கால்டுவெல் வேள்நம்பி, அட்லாண்டா இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், மிட் சௌத் தமிழ்சங்க உறுப்பினர்கள், அயலகத் தமிழர்களுக்காகச் செயல்பட்டு வரும் REACTION அமைப்பின் பிரதிநிதிகள், குழந்தையின் சித்தி, அபிநயா ஆகியோர் கலந்துகொண்டனர். அமெரிக்கா I AmericaFord: அமெரிக்கா என்னும் போக்குவரத்துப் பொன்னாடு! - ஒரு கவிஞரின் வெளிநாட்டுப் பயணம்!

இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த சட்ட போராட்டங்களைக் கடந்து நேற்று (ஏப்ரல் 1), நான்கு வயதாகும் குழந்தை விஸ்ருத் தன் சித்தி மற்றும் பாட்டியுடன் தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அபிநயா, "என் அக்காவும் மாமாவும் இறந்த செய்தி எங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. அவங்களுடைய 17 மாத குழந்தையை வேறொருத்தர் தத்தெடுத்துக்கிட்டாருன்னு கேள்விப்பட்டதும் எங்களால தாங்கவே முடியல.

அயலக தமிழர் நல வாரியம் மூலமா தமிழக அரசு எங்களுக்கு இவ்ளோ பெரிய உதவி செய்ததுக்கு மனமார்ந்த நன்றி. அமெரிக்காவுல சட்ட ரீதியான அனைத்து பிரச்னைகளும் தீர்வு காண கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் அவருடன் இணைந்து செயல்பட்ட குழு எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தாங்க. இவங்க உதவி இல்லைன்னா குழந்தை எங்ககிட்ட வந்து சேர்ந்திருக்காது. சித்தி அபிநயா மற்றும் உறவினர்களுடன் குழந்தைகொடை தந்த வடக வியாபாரி, கண்களைக் குளமாக்கிய வாச்சாத்தி- வாசகரைக் கவர்ந்த விகடன் நம்பிக்கை விருதுகள்!

ஊர்ல எங்க சொந்த வீட்டை வித்துதான் அமெரிக்காவுக்குப் போனோம். அமெரிக்காவில ஒரு வருஷத்துக்கும் மேலா தங்கியிருந்தோம். அதுக்கான உதவிகளை அமெரிக்க தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தமிழ் சங்கங்கள்தான் செய்துகொடுத்தாங்க. அக்கா, மாமா இல்லாத குறை தெரியாம குழந்தையை வளர்க்கணும்ன்றது மட்டும்தான் எங்க ஆசை" என்றார்.

அமெரிக்க சட்டம் சொல்வதென்ன..?



இதற்கான முயற்சிகளை எடுத்த கார்த்திகேய சிவசேனாபதி கூறுகையில், "அமெரிக்காவில் ஓராண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே தங்க முடியும். ஆனாலும், இந்தப் பிரச்னைக்காக இவர்கள் தங்குவதற்கு அந்நாட்டில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. குழந்தை தற்போது அவரின் சித்தியின் பராமரிப்பில் வளர வேண்டும். இந்தக் குழந்தை அமெரிக்காவில் பிறந்ததால் அவர் அமெரிக்க குடிமகன். சட்டம்மும்பை டு அமெரிக்கா... புல்லாங்குழல் வகுப்புகளில் கலக்கும் கல்லிடைக்குறிச்சி ஹேமா

எனவே, ஒவ்வோர்ஆண்டும் குழந்தையின் நிலை குறித்து அமெரிக்க அரசாங்கத்துக்கு அபிநயா தகவல் அளிக்க வேண்டும். குழந்தை மேஜர் ஆன பிறகு எந்த நாட்டின் குடிமகனாக வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார். அதுவரை அமெரிக்க அரசாங்கத்துக்கு குழந்தையின் நிலை குறித்து தெரிவிக்க வேண்டும். குழந்தையின் பள்ளிப் படிப்புக்கு தமிழக அரசு உதவி செய்வது குறித்து நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு ஆலோசிக்கப்படும்" என்றார்.


http://dlvr.it/T4xrCr

Monday, 1 April 2024

Virat Kohli: `டி20 உலகக்கோப்பை அணியில் விராட் கோலி இடம்பெறுவாரா?- பிசிசிஐ அதிகாரி கூறுவதென்ன!

அமெரிக்காவில் நடைபெறும் டி 20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இடம்பெறுவார் என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.

2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. ஐசிசி நடத்தும் இந்தப் போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பங்கேற்பாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்தியத் தேர்வுக்குழுவினர், இந்தத் தொடருக்கான அணியில் விராட் கோலி இடம் பெறுவதை விரும்பவில்லை என்ற ஒரு கருத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. விராட் கோலி

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டி 20 உலகக்கோப்பையில் இடம்பெறுவார் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். 

இதுதொடர்பாக பேசிய அவர், “ 2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் விராட் கோலி நன்றாக விளையாடி வருகிறார். இனி வரும் போட்டிகளில் தனது ஸ்ட்ரைக் ரேட்டை மேம்படுத்துவார். விராட் கோலி

அவர் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவார். தேர்வாளர்கள் சமூக ஊடகங்களில் பரவும் கருத்துக்களுக்கு செவி சாய்க்க மாட்டார்கள். கிரிக்கெட் சமூக வலைதளங்களில் அல்ல மைதானத்தில் விளையாடப்படுகிறது” என்று கூறியிருக்கிறார். 


http://dlvr.it/T4xW8N

அருணாச்சலப் பிரதேசம்: 4-வது முறை; 30 இடங்களுக்கு பெயர் மாற்ற அறிவிப்பு; தொடரும் சீனாவின் அத்துமீறல்!

இந்தியா - சீனா எல்லையில் அமைந்திருக்கும் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை, சீனா உரிமைக் கொண்டாடி வருகிறது. சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட சேலா சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் வருகைக்கு சீன அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதை இந்திய அரசும் கண்டித்திருந்தது.மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

அதைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் மார்ச் 9-ம் தேதியன்று, ``அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பிரதேசமாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது, சீன ராணுவமோ அல்லது அந்நாட்டு மக்களோ.... அத்துமீறல்கள் மூலம் பிராந்திய உரிமைகோரல்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை, நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த மார்ச் 23-ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ``அருணாச்சலப் பிரதேசத்துக்கு உரிமைக் கொண்டாடும் சீனா... இது புதிய பிரச்னை அல்ல. அந்நாடு தனது கோரிக்கையை தற்போது விரிவுபடுத்தியுள்ளது. ஆனால், அது முற்றிலும் நகைப்புக்குரியதாக இருக்கிறது. எனவே, நாங்கள் இதில் மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.அருணாச்சலப் பிரதேசம்

இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை சீனாவின் மாண்டரின் மொழியிலும், திபெத்திய மொழியிலும் மாற்றியிருக்கும் சீன அரசு, அதைத் தனது அமைச்சகத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்னர் மூன்று முறை இது போன்ற பெயர்மாற்ற நடவடிக்கையில் சீனா ஈடுபட்டிருக்கிறது.

2017-ம் ஆண்டில் ஜாங்னானில் உள்ள ஆறு இடங்களின் பெயர்களின் முதல் பட்டியலையும், 2021-ம் ஆண்டு 15 இடங்களின் இரண்டாவது பட்டியலையும், 2023-ல் 11 இடங்களுக்கான பெயர் மாற்றப் பட்டியலையும், சீனா வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் 4-வது பட்டியலை தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்தப் பெயர் பட்டியல் மே 1 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அருணாச்சலப் பிரதேசம்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 2 பேர் பலி


http://dlvr.it/T4vqL2