ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி முகத்தில் உள்ள தசைகள் செயலிழக்கும் முகவாதத்தால் (Facial Paralysis) தான் அவதிப்பட்ட சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
48 வயதாகும் ஏஞ்சலினா ஜோலி, நடிகரும், கணவருமான பிராட் பிட்டை 2016-ல் சட்டபூர்வமாகப் பிரிந்தார். விவாகரத்துக்குப் பிறகும் ஆறு குழந்தைகளின் கஸ்டடி குறித்து நீண்ட காலமாகவே இவர்களுக்குள் சட்டபூர்வ தகராறு இருந்தது. Brad Pitt.``பசியில தவிக்கிற மக்களைப் பார்த்து கண்ணீர் முட்டுது" - டான்ஸ் மாஸ்டர் கலாவின் மனித நேயம்..!
தனது உடல்நல சிக்கல் குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழில் பேசியுள்ள ஏஞ்சலினா ஜோலி, ``மன அழுத்தம் எனது உடலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனது உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகி குறைந்தது.
விவாகரத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு `Bell’s palsy’ என்றழைக்கூடிய முகத்தில் உள்ள தசைகள் செயலிழக்கும் முக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டேன். 2016-ம் ஆண்டிலிருந்து குழந்தைகள், திரைப்படத் திட்டங்களில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அதன்பின் நான் டேட்டிங் செய்யவில்லை, சோஷியல் வாழ்க்கையிலும் குறைவாகவே ஈடுபட்டேன்.
என் குழந்தைகளுடன் மட்டுமே நேரத்தைச் செலவிடுகிறேன். அவர்கள் எனக்கும் என் வாழ்க்கைக்கும் மிக நெருக்கமானவர்கள், அவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர்கள், இதுவே எங்கள் பலம்.
என் குடும்பத்தினரைத் தவிர, என் நெருங்கிய நண்பர்கள் அகதிகள். நான் நெருங்கிப் பழகும் ஆறு பெண்களில் நால்வர் போரை எதிர்கொண்டவர்கள்.விவாகரத்து... கொண்டாடப்பட வேண்டியதா?
வாழ்வதற்கும் தனியாகப் பயணம் செய்வதற்குமான எனது திறனில் விவாகரத்து தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் ஆழமற்ற இடத்தில் (shallow place) வளர்ந்தேன். ஹாலிவுட் ஆரோக்கியமான இடம் அல்ல. எனவே நீங்கள் நம்பகத்தன்மையைத் தேடுங்கள். இந்தத் துறையின் ஆழமற்ற தன்மையிலிருந்து விலகிச் செல்ல விரும்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
http://dlvr.it/SzsMFg
Thursday, 7 December 2023
Home »
» ``முகத் தசைகள் செயலிழக்கும் பாதிப்பு" - ஹாலிவுட்டில் இருந்து விலக ஏஞ்சலினா ஜோலி முடிவு..!






0 comments:
Post a Comment