ஷாப்பிங் செய்பவர்களில் பல ரகம் உண்டு. சிலர் தோன்றும் போதெல்லாம் ஷாப்பிங் செய்வார்கள். சிலர் ஆடி ஆஃபர், தீபாவளி ஆஃபர் என ஆஃபர்களின் போது மட்டும் வாங்குவார்கள். சிலர் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மொத்தமாக பர்ச்சேஸ் செய்பவர்களாக இருப்பார்கள்.
இங்கு மட்டுமல்லாமல் ஆஃபர்களுக்கு பல நாடுகளும் பெயர் வைத்துக் கொண்டாடி வருகின்றனர். மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் ஷாப்பிங் செய்வதற்கு என்று தனியாக `பிளாக் ஃப்ரைடே’ கொண்டாடப்படுகிறது. ஷாப்பிங் லஞ்சப் புயல், ஊழல் சூறாவளி: `ஆவினுக்கு சமாதி கட்டிய பெருமைதான் தி.மு.க-வுக்கு மிஞ்சும்!’
அமெரிக்காவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தின் நன்றி தெரிவிக்கும் தினத்திற்கு (Thanksgiving Day) பிறகு வரும், வெள்ளிக்கிழமை `பிளாக் ஃப்ரைடே’ (Black Friday) என கொண்டாடப்படுகிறது.
பிளாக் ஃப்ரைடே என்றால் என்ன, நுகர்வோர் மற்றும் பிசினஸ்களுக்கு இதனால் கிடைக்கும் பலன் குறித்து கேட்டபோது ஐடியா பிளஸ் சேர்மன் கிருஷ்ண வரதராஜன் கூறுகையில்,
``மேலை நாடுகளில் தேங்க்ஸ் கிவ்விங் தினத்திற்கு பிறகு வரும் வெள்ளிக்கிழமை பிளாக் ஃப்ரைடே (கருப்பு வெள்ளி) என்று கொண்டாடப்படுகிறது. ஷாப்பிங் செய்ய மக்கள் அதிகமாக கூடும் போது, கட்டுக்கடங்காத கூட்டத்தால் நகரே திணறுவதால் பிளாக் ஃப்ரைடே என்ற பெயர் வந்ததது.கிருஷ்ண வரதராஜன்!பெரிதாகும் காது துளை... இது மட்டும்தான் நிரந்தர தீர்வு!
நம்முடைய நாட்டில் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் எனக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி சிறப்பு விற்பனை, ஆடி ஆஃபர் இவையெல்லாம் ஒன்று போலத் தான். ஆனால், பிளாக் ஃப்ரைடே மற்றும் ஆடி ஆஃபருக்கு சிறிய வித்தியாசம் இருக்கிறது.
தீபாவளி தினங்களில் நல்ல வியாபாரம் நடக்கும். அதுவே ஆடியில் வியாபாரம் நடப்பதில்லை. அந்த சமயத்தில் ஆஃபர் போட்டால் வியாபாரமாகிறது. நடுத்தர குடும்பத்தில் உள்ள சிலர் தீபாவளிக்குத் தேவையானதை ஆடி ஆஃபரிலேயே வாங்கி விடுவார்கள். ஏனென்றால் தீபாவளியில் விலை அதிகமாகிவிடும்.
வெளிநாடுகளைப் பொறுத்தவரை நம்மை விட அதிக விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்வார்கள். ரியல் ஆஃபர்களை இந்த காலகட்டத்தில் தான் கொடுக்கிறார்கள். இது அப்படியே க்ளியரன்ஸ் சேல் (clearance sale) மாதிரி தான்.
எல்லாவற்றையும் கழித்துவிட்டு புதியதாக ஜனவரியில் இருந்து விற்பனை செய்வது. இதற்காக நிறைய ஆஃபர் அறிவித்து கடையை முழுவதுமாக காலி செய்து, புத்தாண்டில் இருந்து புதியதாக ஸ்டாக் போட்டு வியாபாரத்தைத் தொடங்குவார்கள்.
தீபாவளியில் மக்கள் எப்படி அதிகம் வாங்குகிறார்களோ அதுபோல அமெரிக்காவில் கிறிஸ்துமஸ்க்காக அதிகம் பர்ச்சேஸ் செய்வார்கள். இதுமட்டுமல்லாமல் அவர்களின் கலாச்சாரத்தில் பிளாக் ஃப்ரைடேக்கு பின் டூருக்கு சென்றுவிடுவார்கள். அந்த விடுமுறையை கழிக்கத் தேவையானது, புத்தாண்டுக்கு தேவையானது என அனைத்தையும் இந்த சீசனிலேயே வாங்கி விடுவார்கள்.
நாம் கிறிஸ்துமஸை பெரிதாகக் கொண்டாடுவதில்லை, ஆனால் அடுத்து பொங்கல் வருகிறது, இதனைப் பொங்கலுக்கான ப்ரொமோஷனாக வணிகர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆஃபருக்கான சான்ஸாக இப்போது பிசினஸில் பயன்படுத்தி வருகிறார்கள்.
மக்கள் அதிகம் வாங்கும் இத்தருணத்தை பயன்படுத்திக் கொண்டு விற்பனையை மேம்படுத்த வேண்டும் என்று நிறுவனங்கள் பல சலுகைகளை அள்ளி வழங்குகிறது.
என்னை பொறுத்தவரையில் இதை இங்கே `வெள்ளை வெள்ளி' (White Friday) என்று கொண்டாடலாம். எந்தவொரு உள்நோக்கமும் இல்லாமல் கஸ்டமருக்கு வெள்ளை உள்ளதோடு நாம் ஏதாவது கொடுக்க வேண்டும். கொடுக்கும்போது தான் அதிகமாக கிடைக்கும். வாழ்க்கையின் பெருமை பெறுவதில் அல்ல வழங்குவதில் இருக்கிறது.``இதெல்லாம் அலர்ஜி” லிஸ்ட்டை நீட்டிய கஸ்டமர்... டென்ஷனான ரெஸ்டாரன்ட் ஊழியர்..!
வருடம் முழுவதும் பிசினஸில் எனக்கு என்ன கிடைக்கும் என்றே யோசித்து கொண்டிருப்போம். இந்த ஒரு நாளில் `நான் எனது கஸ்டமர்களுக்கு என்ன கொடுக்கப்போகிறேன்' என்று யோசிக்க வேண்டும். இந்த பிளாக் ஃப்ரைடே விற்பனையில் வாடிக்கையாளர்களிடமிருந்து என்ன சம்பாதிக்கலாம் என்று யோசிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசித்தால் நமக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
வாடிக்கையாளர்களைச் சம்பாதிப்பது தான் இதன் நோக்கம். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை சம்பாதித்தால் வணிகத்தில் வளரலாம்.
கஸ்டமர்களுக்கு ஆஃபரில் வாங்குவதால் பணம் மிச்சமாகும், கம்பெனிகளுக்கு பணமாக தேங்கி கிடந்த ஸ்டாக்குள் எல்லாம் விற்று விடுவதால் லாபம் கிடைக்கும். இதனால் வாடிக்கையாளர்கள், வணிகர்கள் என இருவருமே பயனடைகிறார்கள்.
இருந்தபோதும் இன்னும் நம்முடைய ஊர்களில் நகரங்களில் இருப்பது போல பிளாக் ஃப்ரைடே பிரபலமடையவில்லை'' என்று கூறினார்.
நீங்கள் எப்போதெல்லாம் ஷாப்பிங் செய்வீர்கள்?!... கமெண்டில் சொல்லுங்கள்.
http://dlvr.it/SzdPmc
Saturday, 2 December 2023
Home »
» ஆடித்தள்ளுபடி தெரியும்... `பிளாக் ஃப்ரைடே’ தள்ளுபடி தெரியுமா? எங்கே... எப்போது?







0 comments:
Post a Comment