பல நாடுகளைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அப்படிச் சுற்றிப் பார்க்க நேரும் போது, தான் வளர்க்கும் செல்ல பிராணிகளை தங்களது வீட்டிலேயே விட்டுவிட்டு பலரும் செல்வதுண்டு.
அப்படியில்லாமல் அமெரிக்காவின் வட கரோலினாவில் வசித்து வரும் கேட் பேட்டல்ஸ் மற்றும் அவரது கணவர் சாட் தாங்கள் வளர்க்கும் ஆட்டை தங்களது பயணத்தின் போதும் கூட்டிச் செல்கின்றனர். கேட் பேட்டல்ஸ் மற்றும் அவரது கணவர் சாட், ஃபிராங்கி! 70 வயதில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த பெண்... ``குழந்தை இல்லாததால் கேலிக்கு உள்ளானேன்" என உருக்கம்
கேட்டிற்கு நீண்ட நாள்களாக ஆட்டை செல்லப்பிராணியாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவரது நண்பர் டென்னசியில் உள்ள ஒரு பண்ணைக்கு அவளை அழைத்துச் சென்று ஆட்டை பரிசாக அளித்துள்ளார்.
இந்த ஆட்டிற்குச் செல்லமாக `ஃபிராங்கி’ (Frankie) என்ற பெயரும் வைக்கப்பட்டது. வட கரோலினாவின் ஆஷெவில்லில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஃபிராங்கி குழந்தைகளுடன் சேர்த்து ஒரு குடும்ப உறுப்பினராகவே வளர்க்கப்பட்டது.
அடுத்த வருடத்திலேயே கேட்டின் கணவர் பேட்டல்ஸ் தான் நடத்தி வந்த பாரை (Bar) விற்றுவிட்டார். பிள்ளைகளும் எதிர்காலத்தை தேடி வீட்டை விட்டு சென்றுவிட்டனர்.
அடுத்ததாக என்ன செய்வது, வாழ்வின் அடுத்த அத்தியாயம் என்னவாக இருக்கும் என யோசித்த இந்த தம்பதி, பிளான் போட்டு புதிய நகரம் மற்றும் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து பயணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
முன்பு இவர்கள் ஒன்றாக டிராவல் செய்யும் போது கூட இந்த சவாலை எதிர்கொள்ளவில்லை. ஏனெனில் இப்போது அவர்களுடன் ஃபிராங்கியும் உள்ளது. ஆடுபெரிதாகும் காது துளை... இது மட்டும்தான் நிரந்தர தீர்வு!
ஃபிராங்கியையும் கூட கூட்டிச் செல்ல முடிவு செய்தவர்கள், வீட்டை விட்டு வெளியேறினர்.
2016-ல், 1976 மாடல் செகண்ட் ஹாண்ட் டிராவல் வாகனத்தை (Airstream Argosy) வாங்கினர். வாகனத்தை அழகாக தங்களுக்கேற்றாற் போல மாற்றி பெயின்ட் அடித்து தங்குவதற்கேற்ப வசதிகளை அதில் செய்துகொண்டு தங்களது பயணத்தைத் தொடங்கினர்.
குறைந்தபட்சம் 25 மாநிலங்கள் மற்றும் 50,000 மைல்கள் பயணித்துள்ளனர். தென்மேற்கு, மத்திய மேற்கு, மொன்டானா, வயோமிங் மற்றும் இடாஹோ போன்ற பாலைவனங்களுக்குப் பயணம் செய்துள்ளனர். போகும் இடங்களுக்கெல்லாம் தங்களது ஆட்டையும் கூட்டிச் செல்கின்றனர். சிறிது காலத்திற்கு பின் வீட்டையும் விற்றுவிட்டனர்.
`` ஃபிராங்கி ஒரு சிறந்த பயண நண்பர். அவள் பயணத்தை எவ்வளவு சிறப்பாகச் செய்யப் போகிறாள் என்று எங்களுக்குத் தெரியாது. பயணத்தை தொடங்கும்போது, அவள் உடனே அதை ஏற்றுக் கொண்டாள். இவளுக்குக் கண்டங்களைத் தாண்டிய ஃபாலோவர்கள் சமூக வலைதளங்களில் உண்டு.
இருப்பினும், செல்லப்பிராணியுடன் பயணம் செய்வது, குறிப்பாகச் செல்லப்பிராணி ஆடாக இருக்கும் பட்சத்தில் சில சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஃபிராங்கி மனஅழுத்தம் போக்கும் செல்லப்பிராணி வளர்ப்பு... மருத்துவர் விளக்கம்!
ஃபிராங்கிக்கு இடமளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காகச் செல்லப்பிராணி நட்பு இடங்கள், முக்கியமாக உணவகங்கள், பார்கள் மற்றும் ஹைகிங் பாதைகள் போன்றவற்றை ஆய்வு செய்வதில் அதிக நேரம் செலவிட வேண்டி உள்ளது. ஆடுகளை அனுமதிக்காத இடங்களில் இருந்து நாங்கள் திரும்பி விடுவோம்’’ என்று கேட் கூறியுள்ளார்.
`ஆட்டிற்கு வந்த வாழ்வென' பலரும் இதனை கண்டு வியந்து வருகிறார்கள்! உங்களுக்கு என்ன தோன்றுகிறது?!... கமெண்டில் சொல்லுங்கள்.
http://dlvr.it/Szc7gm
Saturday, 2 December 2023
Home »
» `ஆட்டுக்கு வந்த வாழ்வு'... ஆடுடன் பல நாடுகளுக்கு பயணம் செய்யும் அமெரிக்கத் தம்பதி!







0 comments:
Post a Comment