விமான பயணத்தின் போது நடக்கும் சில அசவுகரியமான செயல்கள் குறித்த பதிவுகளே அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகின்றன. அதே வேளையில் சில உணர்வுப்பூர்வமான, சில நகைச்சுவையான நிகழ்வுகளும் வைரலாவதில் இருந்து தவறுவதில்லை.
அந்த வகையில் விமான பணிப் பெண்ணிடம் பயணி ஒருவர் விமானத்தின் ஜன்னலை திறக்கச் சொல்லி கேட்கும் வீடியோ கிட்டத்தட்ட கோடிக்கணக்கானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது.
அதில், விமானத்தின் asile இருக்கையில் இருக்கும் இளைஞர் ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் உள்ளங்கையை அழுத்தியபடி “ஜன்னலை திறந்துவிட முடியுமா குட்கா மென்றதும் துப்ப வேண்டும்.” என கேட்டிருக்கிறார். இதனை கேட்ட அந்த விமானப் பணிப்பெண் மற்றும் பயணிகள் அதிர்ச்சியுற்று கோபப்படுவதற்கு மாறாக அனைவரும் சிரிப்பு மழையை பொழிந்திருக்கிறார்கள்.
View this post on Instagram
A post shared by Govind Sharma ji (@govindsharma5906)
இந்த கேலியான நிகழ்வு இண்டிகோ விமானத்தில் நடந்திருக்கிறது. இது குறித்த கோவிந்த் ஷர்மா என்ற இன்ஸ்டாகிராம் பகிரப்பட்டு “உங்களுக்கு தெரிந்த குட்கா பிரியரை டேக் செய்யுங்கள்” என கேப்ஷனும் இடப்பட்டிருக்கிறது. 16 மில்லியன் பேரால் பார்க்கப்பட்ட இந்த வீடியோவுக்கு 12 லட்சம் பேர் லைக்கிட்டிருக்கிறார்கள்.
இதற்கு நெட்டிசன்கள், “பயணிகளை மகிழ்வாக வைத்திருப்பதாக ஒருவேளை அந்த பணிப்பெண் போலியாக சிரித்திருப்பார் போல. க்ரிஞ்ச் போன்று இருக்கிறது.” என்றும், “உத்தர பிரதேசம்/பீகாருக்கு வருவதை வரவேற்கிறோம்” என்றும், “இந்த மாதிரி யார் செய்தாலும் அந்த பழி உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மேல்தான் விழுகிறது” என்றெல்லாம் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
http://dlvr.it/ShLncz
Tuesday, 24 January 2023
Home »
» ”எது குட்கா துப்ப ஜன்னல திறக்கனுமா?” - பயணியின் பேச்சால் ஷாக்கான விமான ஊழியர்கள்!






0 comments:
Post a Comment