அமெரிக்க வாழ் தமிழர்களான மூன்று பேர், நீரின் அவசியத்தை உணர்ந்து நண்பன் என்ற அமைப்பின் மூலம் ரூ 38 லட்சம் செலவில் புதிய பொக்லைன் இயந்திரம் வாங்கியிருப்பதுடன் 410 ஏக்கர் பரப்பளவிலான குளங்களை தூர் வாரி அழகுபடுத்தும் பணியினை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் 600 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படும் என்கிறார்கள். தமிழகத்தை பத்து மண்டலங்களாக பிரித்து நீர் மேலாண்மைக்கான பணிகளை தொடர இருக்கும் அவர்களது செயல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.அமைச்சர் மெய்யநாதன், நிமல் ராகவன், வேல்காந்த்``நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு யார் காரணம்?'' - விளக்குகிறார் அறப்போர் ஜெயராமன்
அமெரிக்காவில் நண்பன் குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் நிறுவனர்களாக தமிழகத்தை சேர்ந்த ஜி.கே, மணி, சக்தி என்ற மூன்று தமிழர்கள் இருக்கின்றனர். அவர்கள் நண்பன் என்ற அமைப்பின் மூலம் உதவி செய்வது என்பதை முதல் கொள்கையாக முன் வைத்து எந்தவித பிரதி பலனும் பாராமல் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நண்பன் அறக்கட்டளையின் கீழ், 'நண்பன் மதர்ஸ் பார் மதர் நேச்சர்' என்ற அமைப்பினை தொடங்கி அதன் மூலம் நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம், விவசாயம் மற்றும் விவசாய பெண்களுக்கான மேம்பாடு உள்ளிட்ட பணிகளை செய்ய முடிவெடுத்தனர். குறிப்பாக நீர் நிலைகளை தூர் வாரி தண்ணீரை சேமித்து வைக்கும் பணிகளில் ஆர்வம் காட்டினர்.நீர் நிலைகள் தூர் வாருவதற்கான விழா"கரூரில் விளையும் நெல்லை, அரிசியாக்கி இந்த மாவட்ட மக்களுக்கே வழங்கப்படும்!"
மாவட்ட ஆட்சியர் தகவல்!
இதையடுத்து நீர் நிலைகளை தூர்வாருவதற்காக மட்டும் ரூ 38 லட்சம் செலவில் புதிய பொக்லைன் இயந்திரம் ஒன்றை வாங்கியிருக்கும் நண்பன் அமைப்பு, பேராவூரணியை சேர்ந்த நிமல் ராகவன், தங்க கண்ணன், சித்தார்த் ஆகியோர் பங்களிப்புடன் நீர் நிலைகளை தூர் வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை முன்னெடுத்திருக்கிறது.
முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 410 ஏக்கர் பரப்பளவில் குளங்களை தூர் வாரும் பணிக்கான பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இதில் சுற்று சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், நண்பன் குழுமத்தினுடைய இந்தியாவின் மேனேஜிங் டைரக்டரான கோவையை சேர்ந்த வேல்காந்த், நிமல் ராகவன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.அமைச்சர் மற்றும் விவசாய பெண்கள்வறண்ட நிலையில் காட்சியளிக்கும் கோவை குளங்கள்! படங்கள்:தி.விஜய்
நண்பன் அமைப்பினர், நீர்பாசன குளங்களை பராமரிப்பதற்காக புதிய பொக்லைன் இயந்திரம் வாங்கி குளம் தூர் வாரும் பணியினை தொடங்கியிருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இது குறித்து நண்பன் மதர்ஸ் பார் மதர் நேச்சரின் தலைவர் பிரீத்தாவிடம் பேசினோம். அவர் கூறுகையில்,
''அமெரிக்காவில் இயங்கி வரும் நண்பன் குரூப் ஆப் கம்பெனிஸ் நண்பன் என்ற அமைப்பின் மூலம் மக்கள் சேவைக்கான பணிகளில் முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு வருகிறது.
நண்பன் குரூப் ஆப் கம்பெனிஸின் நிறுவனர்கள் அமெரிக்க வாழ் தமிழர்கள். அதில் ஒருவரான சக்திவேல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்தவர். விவசாய குடும்பத்திலிருந்த வந்த அவர் நம்மாழ்வாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு, அந்த வழியில் தனது பணிகளைத் தொடர்ந்து வருகிறார்.குளம் தூர் வாருவதற்கான தொடக்க விழா``காடுகளின் அரசன்"
முடிவில்லாச் சமவெளியில் ஒரு முடிவற்ற ஊர்வலம் !
இந்நிலையில், நண்பன் அமைப்பும் தமிழகத்தில் விவசாயத்திற்கான முன்னேற்ற பணிகளை செய்வதற்கு களம் காண எண்ணியது. அதற்காக நண்பன் மதர்ஸ் பார் மதர் நேச்சர் என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றையும் தொடங்கினோம். நீர் நிலைகளை மீட்டெடுப்பதில் பெரும் பங்காற்றி வரும் வாட்டர் வாரியரான பேராவூரணி பகுதியை சேர்ந்த நிமல் ராகவன் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் நீர் நிலைகள் மீட்டெடுக்கும் பணிகளை செய்யத் தொடங்கியிருக்கிறோம்.
இதில் பெரும் அனுபவம் கொண்ட நிமல் ராகவன், குளம், ஏரி உள்ளிட்ட எந்த ஒரு நீர் நிலைகளாக இருந்தாலும் தூர் வாரி செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அந்த கிராமத்தினரின் ஒத்துழைப்புடன் தான் செய்தோம். இதில் நீர் நிலைகளை தூர் வாருவதற்கு பயன்படுத்தப்படும் ஜே.சி.பி இயந்திரத்திற்கு ஆகும் வாடகை செலவு முழு தொகையில் பெரும் தொகை அதற்கே ஆனது.நீர் சேமிப்புக்கான விழாவில் அமைச்சர்
மெய்யநாதன்நம்மாழ்வார் நினைவேந்தல்; இயற்கை விவசாயப் பண்ணையில் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி..!
ஜே.சி.பி வாடகைக்கென பெரும் தொகை சென்று விடுவதால் நிறைய குளங்களை தூர் வாருவதில் சிரமம் இருக்கிறது. நமக்கென சொந்தமான ஜே.சி.பி இயந்திரம் இருந்தால் நாம் நினைத்ததை விட நிறைய நீர் நிலைகளை மீட்டெடுக்கலாம் செலவும் மிச்சமாகும் என்ற யோசனையினை முன் வைத்தார்.
முத்தாய்ப்பான அந்த விஷயத்தை கவனத்தில் எடுத்து கொண்ட நாங்கள் புதிய பெரிய பொக்லைன் இயந்திரம் வாங்க முடிவு செய்தோம். அதன்படி ரூ 38 லட்சத்திற்கு பொக்லைன் இயந்திரம் வாங்கி நீர் நிலைகள் தூர்வாருவதற்கு ஒப்படைத்திருக்கிறோம். முதல்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், நாச்சான் குளம், வருசாக்குளம் ஆகிய மூன்று குளங்களை தூர் வாரும் பணியினை தொடங்கியிருக்கிறோம். அதற்கான விழாவில் அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.குளம் தூர் வாரும் பணி தொடக்கம்வெளிநாட்டினர் பாராட்டிய
தமிழக விவசாயம்...
`இயற்கை விவசாயக் கொள்கை' இப்படித்தான் இருக்க வேண்டும்!
அமெரிக்க வாழ் தமிழர்கள் மூலம் தமிழகத்தில் நீர் நிலைகளை தூர் வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வரும் செயல் கண்களில் ஒத்திக்கொள்ள கூடியது என பலரும் பாராட்டினர். 410 ஏக்கர் கொண்ட குளங்களை தூர் வாருவதன் மூலம் 600 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். கிட்டதட்ட 0.65 டி.எம்.சி தண்ணீர் சேமிப்பாகும் என புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது. இதன் மூலம் 12,000 விவசாயிகள் பயனடைவார்கள். சுமார் 500 அடி ஆழத்திலிருக்கும் அப்பகுதி நிலத்தடி நீர் மட்டம் 100 அடிகள் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அனுபவஸ்தர்கள் கணிக்கின்றனர்.
தூர்வாரும் போது பொக்லைன் இயந்திரத்திற்கு தேவையான எரிபொருள் செலவான சுமார் ரூ 5 லட்சத்தையும் நண்பன் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவர்ன் வரிகளுக்கேற்ப தமிழகத்தின் நீர் தேவை பூர்த்தி செய்யும் விதமாக இதனை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. ஒரு குழந்தைக்கு தாய்பால் எவ்வளவு முக்கியமோ அதே போல் மனித குலத்திற்கு நீரின் தேவை மிக முக்கியம்.விவசாயிகளுக்கான விழா`நீர் வளம் பெருக்கி, விவசாயம் காத்தவன்’ பொன்னியின் செல்வனுக்கு விவசாயி செய்த மரியாதை..!
எனவே நீர் நிலைகளை பாதுகாப்பதுடன் நீரை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் கடமை. தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை தூர் வாரி ஆழப்படுத்தி, அழகுப்படுத்தும் பணியினை மேற்கொள்ள இருக்கிறோம். தற்போது ஒரு பொக்லைன் மட்டுமே செயல்பட்டு வருவதால் நம் இலக்கை அடைவதற்கு தாமதமாகும்.
எனவே விரைந்து நீர் நிலைகள் மீட்டெடுக்க கூடிய பணிகளில் வேகம் காட்ட இருப்பதால் தமிழகத்தினை பத்து மண்டலங்களாக பிரித்து மேலும் பத்து புதிய பொக்லைன் இயந்திரங்களை வாங்கி பயன்படுத்த முடிவு செய்திருக்கிறோம். தமிழகத்தின் உள்ள அனைத்து நீர் நிலைகள் பயன்பாட்டில் இருக்க வேண்டும். நீர் இல்லாத ஏரி, குளங்களே இருக்க கூடாது என்பது எங்கள் கனவு. நீர் நிலை மீட்டெடுத்தல் மற்றும் நீர் மேலாண்மைக்கான உதவி தேவைப்பட்டால் நண்பன் அமைப்பை அனுகினால் வேண்டிய அனைத்தும் செய்து தரப்படும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம். நீரின் தேவையை உணர்ந்து இந்த சேவையினை அமெரிக்க வாழ் தமிழர்கள் மூலம் செய்யப்படுகிறது'' என்று தெரிவித்தார்.
http://dlvr.it/SgPqHl
Thursday, 5 January 2023
Home »
» ``3 குளம்... 600 கோடி லிட்டர் நீர் சேமிப்பு!” அமெரிக்க வாழ் தமிழர்களின் அசத்தல் முயற்சி!







0 comments:
Post a Comment