ஆசியாவின் இரண்டாவது பெரிய செல்வந்தராக இருந்தவர், சீனாவைச் சேர்ந்த ஹூய் கா யான். இவரின் சொத்து மதிப்பு தற்போது 93 சதவிகிதம் சரிந்துள்ளது. 93 சதவிகிதம் சரிவு8 முக்கிய நகரங்களில் விற்பனையாகாத 7,85,260 புது வீடுகள்... ரியல் எஸ்டேட் பகீர் நிலவரம்!
ஹூய் கா யான் `எவர் கிராண்ட்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர். நிலங்களையும், கட்டிடங்களையும் விற்பது புதுப்பிப்பது என விரைவாக வளர்ந்த இந்நிறுவனத்தின் மதிப்பு, ஒருகாலத்தில் 42 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இந்நிறுவனத்தின் வளர்ச்சியே இவரை 2017-ல் ஆசிய செல்வந்தர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு அழைத்துச் சென்றது.
இந்நிறுவனத்தில் சுமார் 2 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 280 நகரங்களில் 1,300 கட்டட வேலைகளில் ஈடுபட்டுள்ளது இந்நிறுவனம். 2020-ல் இந்நிறுவனத்தின் விற்பனை 110 பில்லியனுக்கும் அதிகமாக இருந்தது.எவர்கிராண்டே குழுமம்
ஆனால் 2021-ல் ஏற்பட்ட 300 பில்லியன் கடன் நெருக்கடியை ஈடுகட்ட, தனது வீடு மற்றும் தனியார் ஜெட் மற்றும் விமானங்களை விற்கத் தொடங்கினார். இதனால் இவரின் சொத்து மதிப்பு 93 சதவிகிதம் சரிந்துள்ளது.
இதுகுறித்து ஹூய் கா யான் கூறுகையில், `தன்னுடைய நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் எவர்கிராண்டே குழுமம், ஒரு நிறுவனமாகத் தனது கடமையை நிறைவேற்றுவதற்கும், சாத்தியமான எல்லா வழிகளிலும் திட்டங்களை வழங்குவதற்கும் 2023 ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும்' என கூறியுள்ளார்.
http://dlvr.it/ShPjCc
Wednesday, 25 January 2023
Home »
» 93 சதவிகித சொத்து மதிப்பை இழந்த சீன ரியல் எஸ்டேட் தொழிலதிபர்... காரணம் என்ன?







0 comments:
Post a Comment