மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரில் 1-2 என்ற கணக்கில்தோல்வியடைந்தது. அதனை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் பகல்-இரவு ஆட்டமாக இன்று நடைபெற்று வருகிறது.இந்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு இந்த தொடர் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன்ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் தங்களது திறமையை காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக சுப்மன் கில்லும், கேப்டன் ரோகித் சர்மாவும் இறங்கினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். 143 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சுப்மன் கில் 70 ரன்னில்ஆட்டமிழக்க, அதையடுத்து விராட் கோலி களம் இறங்கினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது 73-வது சதத்தை பதிவு செய்தார் கோலி. சதம் அடித்து அசத்திய கோலி 113 ரன்னில் அவுட் ஆனார். இதன் மூலம் உள்நாட்டில் 20 சதங்களை அடித்த சச்சினின் சாதனையை விராட்கோலி சமன் செய்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 45-வது சதத்தை விராட்கோலி அடித்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் கோலி 113 ரன்னும், ரோகித் 83 ரன்னும், கில் 70 ரன்னும் எடுத்தனர்.
http://dlvr.it/Sghw6N
Wednesday, 11 January 2023
Home »
» உள்நாட்டில் 20 சதங்களை அடித்த சச்சினின் சாதனையை சமன் செய்தார் விராட்கோலி







0 comments:
Post a Comment