Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, 29 February 2024

3-3-3 Perk: 3 மணிக்கு, 3 பேர் வெளியே சென்று சாப்பிடலாம்... நிறுவனமே காசும் கொடுக்கும்!

சக ஊழியருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தாலே, வேலை செய்யாமல் என்ன பேச்சு என்பது போன்ற கேள்விகள் நிறுவனத்தில் எழும். ஆனால், மதியம் மூன்று மணிக்கு மேல் மூன்று பேராக வெளியில் சென்று சிற்றூண்டி சாப்பிட்டு வாருங்கள், அதற்கு நிறுவனமே காசும் கொடுக்கும் என்று சொன்னால் எப்படியிருக்கும்?!... 

கேட்பதற்கு கதை போல இருந்தாலும், இது நிஜம் தான். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த நிறுவனம், `Verkada'. இந்த நிறுவனத்தில் ஒரு புதுவிதமான "3-3-3 perk’ ஒர்க் கல்சர் இருக்கிறது. இந்த பணி கலாச்சாரம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் செயல்படுத்தப்பட்டது. lunch இந்தியாவிலிருந்து முதல் மருந்து... உலக அளவில் அங்கீகாரம்...
மருத்துவத் துறையில் தமிழரின் சாதனை!

அதாவது மதியம் மூன்று மணிக்குமேல் 3 ஊழியர்கள் வெளியில் சென்று சிற்றுண்டி உண்டு அலுவலக விஷயங்களை பேசலாம். இதற்காக அவர்களுக்கு 30 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 2,486 ரூபாய்) வழங்கப்படுகிறது. ஊழியர்கள் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே இந்த திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

3.5 பில்லியன் மதிப்புள்ள இந்நிறுவனம், அதன் ஊழியர்களில் 1,800 பேர் குறைந்தது ஒருமுறையாவது இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்று கூறியுள்ளது.   

நிறுவனத்தின் சிஎஃப்ஓ கேமரூன் ரெசாய் கூறுகையில், ``யோசனை என்னவென்றால், மதியம் மூன்று பேர் வெளியே சென்று ஒன்றாக ஹேங்கவுட் செய்கிறார்கள். அவர்கள் பொருத்தமான அல்லது வேலை தொடர்பான ஒன்றைப் பற்றி பேசுவார்கள். இறுதியில், அது எங்களுக்கு பயனளிக்கும்’’ என்று கூறியுள்ளார்.

நிறுவனத்தின் சிஇஓ ஃபிலிப் கலிஸ்சான் கூறுகையில், ``இது போன்ற ஹேங்அவுட்களின் மூலம் ஊழியர்கள் பணி தொடர்பாக உரையாடுவது அதிகரிக்கும். இறுதியில், 100 பில்லியன் மதிப்புள்ள போட்டியாளர் நிறுவனங்களுக்கு எதிராக துறையில் போட்டியிட இது எங்களுக்கு பயனளிக்கிறது.colleagues `அம்மாவுடன் நேரம் செலவிடுங்கள், அவர்களின் ஆயுள் அதிகரிக்கும்' - ஆய்வுத் தகவல்!

திட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்கள் அவர்களது புகைப்படத்தை 3-3-3 ஸ்லாக் சேனலில் பகிர்ந்து கொள்ள வேண்டும். பட்ஜட்டை தாண்டி, ஊழியர்களிடையே உற்சாகத்தை உருவாக்குவதுதான் திட்டத்தின் வெற்றி'' என்று கூறியுள்ளார்.   

இந்த திட்டம் தற்போது கவனம் பெற்று வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பணி கலாச்சாரம் இங்கு பொருந்துமா, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், கமென்டில் சொல்லுங்கள்!


http://dlvr.it/T3SDhc

Tuesday, 27 February 2024

அமெரிக்கா: இஸ்ரேல் தூதரகம் முன்பு தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர்! - அதிர்ச்சி வீடியோ

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி முதல் இஸ்ரேல் - காஸா போர் நடந்து வருகிறது. இந்தப் போர் சர்வதேச கவனத்தையும், தொடர் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் சான் அன்டோனியோவைச் சேர்ந்தவர் ஆரோன் புஷ்னெல் (25). அமெரிக்க விமானப்படையில் உயர் பதவியில் இருந்த இவருக்கு, நெருங்கிய இராணுவ தொடர்புகள் இருந்தன.

As people rushed to try and save his life, an Israeli embassy agent held a gun fixed on Aaron Bushnell following his self-immolation.

https://t.co/apVD0joXUH— Lowkey (@Lowkey0nline) February 26, 2024




இந்த நிலையில், ஆரோன் புஷ்னெல் காஸா போர் தொடர்பாக தொடர்ந்து அதிருப்தியில் இருந்துவந்தாகத் தெரிகிறது. அது தொடர்பாக பல்வேறு நிகழ்வுகளையும் முன்னெடுத்திருக்கிறார். இந்த நிலையில், இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வராத நிலையில், வாஷிங்டன் டிசியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் முன்பு ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது இராணுவ சீருடை அணிந்திருந்த ஆரோன் புஷ்னெல்,``பாலஸ்தீனத்தை விடுவித்துவிடுங்கள்" என்று முழக்கமிட்டு தீ வைத்துக்கொண்டார். உடனே பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். மேலும், அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த தற்கொலை தொடர்பாக வாஷிங்டன் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY ‘‘அந்த அங்கிள் பேட் டச் பண்றாரு...’’ - நண்பனின் 8 வயது மகளிடம் பாலியல் சீண்டல்; ராணுவ வீரர் கைது


http://dlvr.it/T3Jzw4

Saturday, 24 February 2024

200 மடங்கு அதிக டிமாண்ட்; இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டிக்கு அமெரிக்காவில் எதிர்பார்ப்பு!

2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

இந்தத் தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்துகின்றன. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. இதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியைக் காண ஏராளமானோர் காத்திருப்பதால் டிக்கெட்டின் தேவை 200 மடங்கு அதிகரித்திருப்பதாக அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரி கூறியிருக்கிறார்.IND vs PAK

இதுதொடர்பாக பேசிய அவர், “ஒவ்வொரு டி20 உலகக்கோப்பைத் தொடரிலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்பது ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கும் ஒரு போட்டி. இதற்கான டிக்கெட் தேவை என்பது அதிக அளவில் இருக்கிறது. 34,000 பேர் அமரக்கூடிய மைதானத்தை கட்டி வருகிறோம். டிக்கெட் இருப்பை விட 200 மடங்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டிருக்கிறது. இந்த இரண்டு நாடுகளும் அமெரிக்காவிற்கு வருகைப் புரிவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

எங்கள் நாட்டில் விளையாட்டுகளின் மீது தீவிர ஆர்வம் கொண்ட ரசிகர்கள் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கிரிக்கெட்டும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு என்பதை இந்தத் தொடர் மூலம் காட்டவுள்ளோம். 2028 மற்றும் 2032 ஒலிம்பிக்ஸ் சார்ந்தும் இது எங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். IND vs PAK

நாங்கள் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது. மக்கள் மத்தியில் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். உலக நாடுகளுக்கு நாங்களும் கிரிக்கெட்டைக் கொண்டாடும் நாடு என்பதை காட்ட விரும்புகிறோம். வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக இருக்கவும் விரும்புகிறோம்" என்றார்.


http://dlvr.it/T3BNdy

Friday, 23 February 2024

USA: போலீஸ் வாகனம் மோதி இந்திய மாணவி பலி: ஆதாரம் இல்லை என விடுவிக்கப்பட்ட அதிகாரி - எழும் கண்டனங்கள்

அமெரிக்காவில் முதுகலை படித்துவந்தவர், இந்திய மாணவி ஜாஹ்னவி கந்துலா (23). ஆந்திராவைச் சேர்ந்தவரான இவர், Northeastern பல்கலைக்கழக்தில் முதுகலைப் படிப்பு படித்துவந்தார். இந்த நிலையில் 2023, ஜனவரி 5 அன்று, கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி போதையில் 120 கி.மீ வேகத்தில் ஓட்டிச் சென்ற போலீஸ் வாகனம், ஜாஹ்னவி கந்துலா மீது மோதியது. இதில், மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து நடந்த பிறகு போலீஸாரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்த வீடியோவைக் கடந்த திங்களன்று, சியாட்டில் (Seattle) காவல்துறை ட்விட்டரில் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில், சியாட்டில் போலீஸ் அதிகாரிகள் குழுவின் துணைத் தலைவர் டேனியல் ஆடரர், குழுத் தலைவரிடம், ``அவர் இறந்துவிட்டார். அவருக்கு 26 வயது இருக்கும். 11,000 டாலர் செக் ஒன்றை இவருக்கு எழுதுங்கள். அவருக்கு அவ்வளவுதான் மதிப்பு'' என்று கேலிசெய்து சிரித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டது. அதைத் தொடர்ந்து, சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள (San Francisco) இந்தியத் துணைத் தூதரகம், மாணவியின் இறப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அரசை வலியுறுத்தியது. இந்த நிலையில், தற்போது விபத்து ஏற்படுத்திய கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரிக்கு எதிரான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அமெரிக்க அரசு அவரை விடுவித்திருக்கிறது.கே.டி.ராமா ராவ்

இது குறித்துப் பேசிய ஜாஹ்னவி கந்துலாவின் குடும்பத்தினர், ``விபத்து ஏற்படுத்தியவர் விடுவிக்கப்பட்ட செய்தி எங்களுக்கு பேரதிர்ச்சி. எங்கள் மகளின் கொலை வழக்கைப் பற்றி நாங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோசமான செய்திகளையே பெறுகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதியின் தலைவர் கே.டி.ராமா ராவ்,``அமெரிக்காவின் இந்த முடிவு அவமானகரமானது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்தியத் தூதரகம் அமெரிக்க அதிகாரிகளுடன் இந்த விஷயம் குறித்து விவாதித்து, மகளை இழந்த குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும். வெளி விவகார அமைச்சர் இந்த விவகாரத்தைத் தனது சக வெளியுறவுத்துறை அமைச்சரிடம் எடுத்துக் கூறி சுதந்திரமான விசாரணையைக் கோரவும் நான் கேட்டுக்கொள்கிறேன். உயர்ந்த லட்சியங்களைக்கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது சோகமானது. ஆனால் அதைவிடச் சோகம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவருக்கு நீதியை அலட்சியம் செய்வது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.அமெரிக்கா: `Please Help Me' - தாக்குதல், ரத்தம் சொட்ட வீடியோ வெளியிட்ட இந்திய மாணவர் - என்ன நடந்தது?

இது குறித்து சியாட்டிலில் இருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகார்பூர்வ ட்விட்டர் பதிவில்,``ஜாஹ்னவி கந்துலாவின் வழக்கு தொடர்பாக அவரின் குடும்பப் பிரதிநிதிகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு நீதியை உறுதிசெய்வதில் தொடர்ந்து அனைத்து ஆதரவையும் வழங்கிவருகிறோம். சரியான தீர்வுக்காக சியாட்டில் காவல்துறை உட்பட உள்ளூர் அதிகாரிகளிடம் இந்த விஷயத்தை வலுவாகப் பேசிவருகிறோம். இந்த வழக்கு இப்போது சியாட்டில் சிட்டி அட்டர்னி அலுவலகத்துக்குப் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. சியாட்டில் காவல்துறையின் நிர்வாக விசாரணை முடிவடையும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். மேலும், வழக்கின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணிப்போம்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY">
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY">
https://bit.ly/47zomWY />

http://dlvr.it/T3B7Nr

பற்றியெரிந்த வீடு; 4 குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர்? - அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவில், செயின்ட் லூயிஸ் கவுண்டியில் உள்ள ஃபெர்குசன் பகுதியில், நான்கு குழந்தைகளுடன் தனியாக வசித்துவந்த ஆசிரியையின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, ஐவர் உயிரிழந்த சம்பவத்தில், திருப்புமுனையாக, அது விபத்து அல்ல `கொலை - தற்கொலை' என போலீஸார் கண்டறிந்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில், `2013-ல் Missouri Teacher of the Year' எனும் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்ற பெர்னாடின் பேர்டி ப்ரூஸ்னர் (Bernadine Birdie Pruessner) என்பவரின் வீட்டில் திங்களன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், பேர்டி ப்ரூஸ்னர் உட்பட அவரின் குழந்தைகளான 9 வயது இரட்டையர்கள் எல்லி ப்ரூஸ்னர் (Ellie Pruessner), ஐவி ப்ரூஸ்னர் (Ivy Pruessner), 5 வயது ஜாக்சன் ஸ்பேடர் (Jackson Spader), 2 வயது மிலி ஸ்பேடர் (MIllie Spader) ஆகியோர் உயிரிழந்தனர்.குழந்தைகளுடன் பெர்னாடின் பேர்டி ப்ரூஸ்னர்

முதலில் இது விபத்து என்றே நம்பப்பட்டது. இருப்பினும், இதில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட செயின்ட் லூயிஸ் கவுண்டி போலீஸ், இந்த சம்பவத்தைக் கொலை - தற்கொலை என்று கூறியிருக்கிறது. இது குறித்து புதனன்று கவுண்டி போலீஸ் அலுவலகம் ஓர் அறிக்கையில், ``பேர்டி ப்ரூஸ்னர் வேண்டுமென்றே படுக்கைக்குத் தீ வைத்ததாக நம்பப்படுகிறது. ஏனெனில், விசாரணையில் தீ படுக்கையிலிருந்துதான் பரவியிருக்கிறது. மேலும், பேர்டி ப்ரூஸ்னர் தனது உயிரையும், தன் குழந்தைகளின் உயிரையும் பறிக்க வேண்டும் என்ற எண்ணம் குறித்தும், ஒரு குறிப்பு வெளியிட்டிருக்கிறார்" என அதன் உள்ளடக்கங்கள் எதுவும் வெளியிடாமல் தெரிவித்திருக்கிறது. போலீஸாரின் இத்தகைய கூற்றுக்கு ஏற்றவாறே, பேர்டி ப்ரூஸ்னர் தனது மூகநூலில் இறுதியாகப் பதிவிட்ட மூன்று பதிவுகள் கவனிக்க வைத்திருக்கிறது.

அதில், ஞாயிறு அன்று ``எல்லா நாளும், கடைசி நாள் என்று வாழக்கூடியவர்களில் ஒருவராக இன்றைய நாளை உருவாக்குங்கள். ஹாப்பி சண்டே" என்று பதிவிட்டிருந்தார். திங்களன்று தன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``இவர்களின் அம்மாவாக இருப்பதில் நான் மிகவும் பாக்யசாலி. இவர்கள் தங்களின் சிறிய வாழ்க்கையில், தாங்கள் எதிர்கொள்ள வேண்டியதைவிட பலவற்றைக் கடந்துவிட்டார்கள்" என்றும், ``என் குழந்தைகள் அனைவரும் ஒன்றாக என் படுக்கையில் நிம்மதியாகத் தூங்குகிறார்கள். அவர்கள் மிகவும் நேசிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து, அவர்களுக்காக நான் எதையும் செய்வேன்" என்றும் பதிவிட்டிருந்தார்.குழந்தைகளுடன் பெர்னாடின் பேர்டி ப்ரூஸ்னர்

இன்னொருபக்கம், பேர்டி ப்ரூஸ்னரிடமிருந்து 2017-ல் பிரிந்த முன்னாள் கணவரும், இரட்டை குழந்தை எல்லி, ஐவி-யின் தந்தையுமான டேவிட் ப்ரூஸ்னரும் (David Pruessner), ஜாக்சன் மற்றும் மிலி-யின் தந்தையும், பேர்டி ப்ரூஸ்னரின் முன்னாள் காதலனுமான ஜாரெட் ஸ்பேடரும் (Jared Spader), குழந்தைகளைப் பராமரிக்க முடியாது என விட்டுச் சென்றதையடுத்து, அதற்கெதிராக நீதிமன்றத்தில் இவர் தொடர்ந்து போராடிவந்தார். இத்தகைய சூழலில்தான் இந்தச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.யூடியூபில் Parental Care... வீட்டில் Child Abuse - அமெரிக்க பெண் யூடியூபருக்கு 60 ஆண்டுகள் சிறை!


http://dlvr.it/T38VdX

Thursday, 22 February 2024

யூடியூபில் Parental Care... வீட்டில் Child Abuse - அமெரிக்க பெண் யூடியூபருக்கு 60 ஆண்டுகள் சிறை!

அமெரிக்காவின் உட்டா (Utah) மாகாணத்தில், குழந்தை வளர்ப்பு குறித்து யூடியூபில் வீடியோ பதிவிட்டு வந்த 42 வயது ரூபி ஃபிராங்க் (Ruby Franke) என்ற பெண்மணி, தன் சொந்த பிள்ளைகளைக் கொடுமைப்படுத்திய வழக்கில், நீதிமன்றம் அவருக்கு 60 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது.

முன்னதாக, கடந்த 2015-ல் `8 Passengers' என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை ரூபி ஃபிராங்க் தொடங்கியிருந்தார். இவருக்கு ஆறு குழந்தைகள் இருக்கின்றன. இவர், குழந்தை வளர்ப்பு பற்றி தனது யூடியூப் சேனலில் பல்வேறு வீடியோக்களைப் பதிவிட்டதன் மூலம் மெல்ல மெல்ல பிரபலமடைந்தார்.ரூபி ஃபிராங்க்

குறுகிய காலத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான subscribers-ஐ பெற்றார். அதேசமயம், இவரின் சேனல் பிரபலமடைந்து வரும்போதே 2022-ல் அந்தச் சேனல் நீக்கப்பட்டது. அதே ஆண்டில், தன் கணவரையும் பிரிந்தார். இப்படியிருக்க, கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரூபி ஃபிராங்கின் 12 வயது மகன், தனது வீட்டிலிருந்து வெளியேறி பக்கத்து வீட்டாரிடம் உணவு, தண்ணீர் போன்றவற்றைக் கேட்டபோது, இவரின் செயல்கள் வெளிவரத் தொடங்கியது.

அப்போது, அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் 911 நம்பருக்கு போன் செய்து, சிறுவன் மிகவும் மெலிந்திருப்பதாகவும், உடலில் காயங்கள் இருப்பதாகவும் கூறினார். அதைத்தொடர்ந்து, ரூபி ஃபிராங்க் மற்றும் அவரின் பிஸ்னஸ் பார்ட்னர் ஜோடி ஹில்டெப்ராண்ட் (Jodi Hildebrandt) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் விசாரணையில், ரூபி ஃபிராங்க் தன்னுடைய மகன் மற்றும் மகளை, கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உட்டாவில் உள்ள வாஷிங்டன் கவுண்டியில் கொடுமைப்படுத்தியது தெரியவந்தது.ரூபி ஃபிராங்க்

கடுமையான வேலைகளைச் செய்ய வைத்தல், வெயிலில் காலணிகள் இல்லாமல் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்தல், ஆரோக்கியமற்ற உணவை அளித்தல், புத்தகம், மின்னஞ்சல் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதி மறுத்தல், தனிமைப்படுத்துதல், காலணி அணிந்தபடி காலால் உதைத்தல், தப்பிக்க முயன்றபோது கை, கால்களை கயிற்றால் இறுக்கிக் கட்டுதல், அதனால் ஏற்பட்ட காயங்களை டேப்பால் மறைத்தல், சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நீருக்குள் தலையை அழுத்துதல் என ரூபி ஃபிராங்க் தன் மகனைக் கொடுமைப்படுத்தியிருக்கிறார்.

மேலும், ரூபி ஃபிராங்கின் ஒன்பது வயது மகளும், இதேபோன்ற கொடுமைகளுக்கு ஆளான நிலையில், ஜோடி ஹில்டெப்ராண்ட் வீட்டிலிருந்து மீட்கப்பட்டார். குறிப்பாக, உணவு, தண்ணீர் தர மறுத்தல், வெறுங்காலுடன் வெளியில் வேலை செய்ய வைத்தல், அசுத்தமான சாலைகளில் நீண்ட நேரம் வெறுங்காலுடன் ஓட வைத்தல் போன்ற கொடுமைகளுக்கு ரூபி ஃபிராங்கின் மகள் ஆளானார். இதனால், அவரின் மகள் உடல் மெலிந்து, உடலில் கொப்புளங்கள், சிரங்கு ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டன.ரூபி ஃபிராங்க்

இந்த நிலையில், ரூபி ஃபிராங்க் மீதான வழக்கு நேற்று முன்தினம் நீதிமன்றத்துக்கு வந்தது. ரூபி ஃபிராங்க் தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட பிறகு, அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து, இருவருக்கும் நீதிபதி 60 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த சிறைத் தண்டனை ஒரு தவணைக்கு 15 ஆண்டுகள் என நான்கு தவணை இருக்கும் என்றும், இந்த வழக்கில் மேல்முறையீட்டுக்குச் செல்ல 30 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து பேசிய ரூபி ஃபிராங்க், ``இருளை ஒளி என்றும், சரியானதைத் தவறு என்றும் நம்பிக்கொண்டிருந்தேன். இந்த உலகமே ஒரு தீய இடம். இது முழுக்க, கட்டுப்பாடுகளை விதிக்கும் போலீஸ், காயம் ஏற்படுத்தும் மருத்துவமனைகள், மூளைச் சலவை செய்யும் அரசு இயந்திரம், பொய் மற்றும் காம எண்ணம் கொண்ட தேவாலய தலைவர்கள், பாதுகாக்க மறுக்கும் கணவர்கள், துன்புறுத்தல்களை அனுபவிக்கத் தகுந்த குழந்தைகள் நிறைந்தவை என்று நம்பிக்கொண்டிருந்தேன்.ரூபி ஃபிராங்க்

உங்களுக்காக (குழந்தைகள்) எதையும் செய்வேன் என்று உங்களுக்கான பாதுகாப்பானவை, நல்லவை அனைத்தையும் பறித்துவிட்டேன். உங்களின் மென்மையான ஆன்மாக்களைப் புண்படுத்தியதற்காக இனி அழுவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன். இப்போது சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன். நீங்கள் குணமடைந்து அழகான வாழ்வை வாழ்வீர்கள் என்று நம்புகிறேன். அதுவே என் பிரார்த்தனையும் கூட" என்று கண்ணீர்விட்டு அழுதார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYதாயின் தன்பாலின உறவைக் கண்டறிந்த 10 வயது மகன்... அச்சத்தில் பார்ட்னருடன் சேர்ந்து மகனைக் கொன்ற தாய்!


http://dlvr.it/T35YkZ

Tuesday, 20 February 2024

Lottery: `ரூ.2,800 கோடி விழுந்தது செல்லாது...' - jackpot என நினைத்தவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்தவர் ஜான் சீக்ஸ். இவர் ஜனவரி 6, 2023 அன்று பவர்பால் டிசி என்ற லாட்டரியை வாங்கியிருக்கிறார். குறிப்பிட்ட நாளில் அவருக்கு லாட்டரியில் 340 மில்லியன் டாலர் (ரூ.2,800 கோடிக்கு மேல்...) பரிசு விழுந்திருக்கிறது. அப்போதே அவர் அதைக் கவனிக்கத் தவறவிட்டாலும், இரண்டு நாள்களுக்குப் பிறகு டிசி லாட்டரியின் இணையதளத்தில், அவருடைய லாட்டரிக்குப் பரிசு விழுந்திருப்பதை அறிந்துகொண்டார்.டாலர் - லாட்டரி

அதையடுத்து அவர் தன் நண்பர் ஒருவரை அழைத்து, சரியாக எண்கள் பொருந்துகிறதா... என்பதை உறுதி செய்துகொண்டார். அதைப் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டார். மேலும், டிசி லாட்டரி நிறுவனத்தை அணுகி தனக்கான பரிசு குறித்து முறையிட்டிருக்கிறார். அப்போது லாட்டரி நிறுவனம், ``குறிப்பிட்ட லாட்டரிக்கு எந்தப் பரிசும் இல்லை. இணையப் பக்கத்தில் அந்தப் பரிசு லாட்டரி எண் தவறுதலாகப் பதிவாகியிருக்கிறது. எனவே, பரிசு எதுவும் கிடையது" என மறுத்திருக்கிறது.

அப்போது லாட்டரி முகவர்களில் ஒருவர், ``இந்த லாட்டரிக்குப் பரிசு கிடையாது. அதைக் குப்பையில் வீசிவிடுங்கள்" எனத் தெரிவித்திருக்கிறார். ஆனால், அதைக் குப்பையில் வீசாமல், பத்திரப்படுத்திய ஜான் சீக்ஸ், நீதிமன்றத்தின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் மனுவில், ``கேமிங் அமைப்பின் OLG விதிமுறைகளின்படி, லாட்டரி பரிசுப் பெற்ற வெற்றியாளர் நான்.டாலர் பணம்

ஆனால், என் லாட்டரி எண் தவறுதலாக இணையத்தில் பதிவேற்றப்பட்டிருப்பதாகவும், அதனால், பரிசு கோரிக்கை மறுக்கப்பட்டதாகவும் லாட்டரி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. எனக்குரியப் பரிசைப் பெற்றுத் தரவேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜான் சீக்ஸின் வழக்கறிஞர், ரிச்சர்ட் எவன்ஸ், ``வெற்றிப் பெற்ற எண்களுக்குரிய லாட்டரி என் தரப்பு வாதியிடம் இருக்கிறது. எனவே, முழு ஜாக்பாட் தொகையையும் அவருக்கு வழங்க வேண்டும். இந்த வழக்கு, லாட்டரி நடவடிக்கைகளின் நேர்மை மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது...காவல்துறை தேர்வில் சன்னி லியோனுக்கு ஹால் டிக்கெட்? - வைரலான புகைப்படம்... விளக்கமளித்த அதிகாரிகள்!


http://dlvr.it/T30KtT

``நானோ அல்லது கமலா ஹாரிஸோதான் அமெரிக்க அதிபராக இருப்போம்; ஏனென்றால்..!" - நிக்கி ஹேலி சொல்வதென்ன?

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் நிலையில், 2020-ஐ தொடர்ந்து 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரண்டும்தான் பிரதான கட்சிகளாகச் செயல்பட்டுவருகின்றன. தற்போது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் நிறைவுபெறுகிறது. அதனால், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கமலா ஹாரிஸ் - ஜோ பைடன்

இந்தத் அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடனும் (81), குடியரசுக் கட்சி சார்பாக, பல தடைகளைக் கடந்து முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும்(77) போட்டியிட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் அல்லாது முன்னாள் தென் கரோலினா ஆளுநரும், ஐநா சபைக்கான ட்ரம்ப்பின் தூதரும், இந்திய வம்சாவளியுமான நிக்கி ஹேலி (52), அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டீன் பிலிப்ஸ் (55), சுயேச்சை வேட்பாளர் ராபர்ட் எஃப். கென்னடி ஜே.ஆர் (70) உள்ளிட்ட இன்னும் சிலரும் அதிபர் வேட்பாளருக்கான ரேஸில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், அதிபர் வேட்பாளரான நிக்கி ஹேலி தனியார் நிறுவன செய்தியாளரிடம் பேசியபோது,``ட்ரம்ப், பைடன் இருவரும் அதிபராக வேண்டும் என நான் விரும்பவில்லை. அவர்களை எதிர்த்துப் போட்டியிடுவதில் எனக்கு எந்த அசௌகரியமும் கிடையாது. நான் இந்தத் தேர்தலில் போட்டியிட ஒரே காரணம் இவர்கள் இருவரும் மீண்டும் ஒருமுறை வெற்றிப்பெற்றுவிடக் கூடாது என்பதுதான். ஏனென்றால், 70 சதவிகித அமெரிக்கர்கள் ட்ரம்ப், பைடனை மீண்டும் அதிபராக பார்க்க விரும்பவில்லை.டொனால்டு ட்ரம்ப் - நிக்கி ஹேலி

59 சதவிகித அமெரிக்கர்கள் பைடனுக்கும், ட்ரடிரம்புக்கும் வயதாகிவிட்டதாக நினைக்கிறார்கள். ஒரு வேட்பாளர் தன்னை முன்னிலைப்படுத்துவதை விட மக்களுக்கான சேவைகளை முன்னிலைப்படுத்த வேண்டும். அதைத்தான் நான் செய்ய முயல்கிறேன். இந்தத் தேர்தலில் நான் அல்லது அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், எங்கள் இருவரில் யாராவது ஒருவர், முதல் பெண் அதிபராகப் பொறுப்பேற்போம் என நம்புகிறேன்." எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYமாலத்தீவு: `மே 10-ம் தேதிக்குள் இந்தியப் படைகள் முழுமையாக வெளியேறும்!' - அதிபர் முய்ஸு


http://dlvr.it/T2zxg8

Monday, 19 February 2024

செய்யாத குற்றத்துக்கு 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை; முதியவருக்கு 14 மில்லியன் டாலர் இழப்பீடு!

1983-ம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் 18 வயது ராபர்ட் டுபோயிஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையில், ராபர்ட் டுபோயிஸ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.க்ரைம் - கொலை

ஏறத்தாழ 37 ஆண்டுக்கால சிறைவாசத்திற்குப் பிறகு, அவர் 2020 செப்டம்பர் 14-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான ராபர்ட் டுபோயிஸ், அவரது வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர்கள், தடயவியல் நிபுணர்கள், பல் மருத்துவர் ஆகியோர்மீது வழக்குத் தொடர்ந்தார். 37 ஆண்டுகள் தண்டனை முடிந்த நிலையிலும், மீண்டும் அந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற ராபர்ட்டின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இந்த வழக்கை விசாரிக்க, காவல்துறையினர், மருத்துவ குழுவினரை உள்ளடக்கி ஒரு விசாரணைக் குழுவையும் நீதிமன்றம் அமைத்து, விசாரணையைத் தொடங்கியது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்ட அந்தப் பெண்ணின் கன்னத்தில் பல் பதிந்த காயம் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, மருத்துவ பரிசோதனைக் குழு கன்னத்திலிருந்த அந்த காயத்தை அடையாளமாகக் கொண்டு,கைது

ராபர்ட் உட்பட இன்னும் பல ஆண்களிடமிருந்து கடித்த பல் அச்சு பதிந்த மாதிரிகளைச் சேகரித்து டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்தியது. அந்த சோதனையின் இறுதியில், "கொலை செய்யப்பட்ட பெண்ணின் கன்னத்தில் பதிந்திருந்த பல் காயங்கள் எந்த வகையிலும் தடயங்களுடன் ஒத்துப் போகவில்லை. 1983-ம் ஆண்டு மருத்துவத் துறையில் பாலியல் வன்கொடுமையை நிரூபிக்கும்படியான உயர்தர கருவியோ, டி.என்.ஏ மூலம் குற்றவாளிகளைக் கண்டறியும் வழிமுறையோ இல்லை என்பதால்,

ராபர்ட் தவறுதலாக, செய்யாத குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட அந்தப் பெண்ணின் மரணத்திற்கும், ராபர்ட் டுபோயிஸ்க்கும் எந்த வித தொடர்பும் இல்லை" எனத் தடயவியல், மருத்துவ சோதனைக் குழு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.நீதிமன்றம் தீர்ப்பு

அதைத் தொடர்ந்து, நீதிமன்றம், ``செய்யாத குற்றத்திற்காக 37 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டு தன் வாழ்க்கையை, இளமையை இழந்த ராபர்ட் டுபோயிஸ்க்கு, இழப்பீடாகத் தம்பா மாநகர நிர்வாகம் $14 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூபாய் 1,16,24,90,700.00) வழங்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருக்கிறது.குண்டு வீசிய வழக்கில் தொடர்புடைய ரௌடி வெட்டிக் கொலை - கரூரில் பட்டப்பகலில் நடந்தேறிய பயங்கரம்!


http://dlvr.it/T2ygyP

9 மில்லியன் டாலருக்காக நெருங்கிய தோழியைக் கொன்ற வழக்கு; இளம்பெண் உட்பட இருவருக்கு 99 ஆண்டுகள் சிறை!

2019-ம் ஆண்டு அமெரிக்காவின் எக்லுட்னா ஆற்றின் கரையில், தலையின் பின்புறத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலைசெய்யப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த அடையாளம் தெரியாத சடலத்தைக் காவல்துறை கைப்பற்றி, தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியது. அந்த விசாரணையின் முடிவில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியான நிலையில், தீர்க்கப்படாத மர்மமும் தொடர்கிறது.காவல்துறை

2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தன் நெருங்கிய தோழியான டெனாலி ப்ரெஹ்மருடன் வெளியே செல்வதாகக் கூறி, சிந்தியா ஹாஃப்மேன் என்ற 19 வயது பெண் வீட்டை விட்டுப் புறப்பட்டிருக்கிறார். ஆனால், அதற்குப் பிறகு அந்தப் பெண் காணவில்லை. இரண்டு நாள்களுக்குப் பிறகு சிந்தியா ஹாஃப்மேனின் சடலம் எக்லுட்னா ஆற்றங்கரையில் கிடைத்திருக்கிறது. முதற்கட்ட விசாரணையில், சிந்தியா கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக சிந்தியா ஹாஃப்மேனின் நெருங்கிய தோழி டெனாலி ப்ரெஹ்மரிடம் காவல்துறை விசாரித்தது. அப்போது அவர், ``டைலர் என்ற சமூக வலைதளப் பயனாளி ஒருவர் என்னையும், என்னுடைய நண்பர்களையும் தொடர்பு கொண்டார். அவர் எங்களிடம் 'நான் டைலர்... பெரும் பணக்காரன்.அமெரிக்கா சிறை

உங்களின் தோழி சிந்தியா ஹாஃப்மேனை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்தால், உங்களுக்கு 9 மில்லியன் டாலர் தருகிறேன். ஆனால், சிந்தியா ஹாஃப்மேன் கொலைசெய்யப்பட்டவுடன் அதை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எனக்கு அனுப்ப வேண்டும்' எனக் கூறினார். நானும் என்னுடைய நண்பர்களும், அந்த நபர் சொன்னதை நம்பினோம். அதற்காக சிந்தியா ஹாஃப்மேனை கொலைசெய்ய நான், என்னுடைய நண்பர் கெய்டன் மெக்கின்டோஷ் உட்பட மூவர் திட்டமிட்டோம்.

எங்கள் திட்டப்படி, சிந்தியா ஹாஃப்மேனிடம் `தண்டர்பேர்ட் அருவிக்குச் செல்லலாம், வா...' எனக் கூறி, கட்டாயப்படுத்தி வரவழைத்தோம். நாங்கள் அங்கே சென்றதும் துப்பாக்கியால் அவரின் பின் தலையில் சுட்டுக் கொன்றோம். அதைப் பல்வேறு வகையில் புகைப்படம் எடுத்து டைலருக்கு அனுப்பினோம். மேலும், சிந்தியா ஹாஃப்மேனின் உடலை எரித்துவிடத் திட்டமிட்டோம். அதற்கான வாய்ப்பு அங்கு இல்லாததால், ஆற்றில் உடலை வீசிவிட்டோம்" என வாக்குமூலம் அளித்திருந்தார்.காவல்துறை

கொலைசெய்து அனுப்பப்பட்ட புகைப்படங்களையும், நிர்வாணப் புகைப்படங்களையும் காவல்துறை கைப்பற்றியது. மேலும், இந்த வழக்கில் கொலைக் குற்றத்தைத் தூண்டிவிட்ட அந்த டைலர் குறித்து காவல்துறை விசாரித்ததில், இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த டேரின் ஷில்மில்லர் (21) என்பவர்தான் டைலராக நடித்து, அந்தப் பெண்களை ஏமாற்றியிருக்கிறார் என்பது தெரியவந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொலைசெய்வதற்குத் தூண்டிவிட்ட டேரின் ஷில்மில்லருக்கும், கொலைசெய்த டெனாலி ப்ரெஹ்மருக்கும் 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. சிந்தியா ஹாஃப்மேனை பணத்துக்காக அவரின் தோழிகள் கொலைசெய்தனர் என்பது புலனாகிறது. ஆனால், அந்த டைலர் என்ற டேரின் ஷில்மில்லர் எதற்காக இந்தக் கொலையைச் செய்ய தூண்டினார் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.காவல்துறை தேர்வில் சன்னி லியோனுக்கு ஹால் டிக்கெட்? - வைரலான புகைப்படம்... விளக்கமளித்த அதிகாரிகள்!


http://dlvr.it/T2xvzG

Saturday, 17 February 2024

சாப்பிட்டது 32.43 டாலருக்கு... டிப்ஸோ 10,000 டாலர்; காரணம் கூறிய வடிக்கையாளரால் நெகிழ்ந்த ஊழியர்!

அமெரிக்காவின் மெக்சிகனில், மேசன் ஜார் கஃபே எனும் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் உணவருந்த வந்த மார்க் என்ற வாடிக்கையாளர், 32.43 டாலர் மதிப்பிலான உணவைச் சாப்பிட்டுவிட்டு, பில் கொடுக்கும்போது அதில் `டிப்ஸ்' எனக் குறிப்பிட்டு 10,000 டாலரைச் சேர்த்து வழங்கியிருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ந்த உணவு பரிமாறிய பெண் ஸ்வீனி, இது உண்மைதானா எனத் திகைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, வெளியே சென்ற மார்க்கிடம் அந்தப் பணியாளர் இது தவறுதலாக எழுதப்பட்டதா... அல்லது உண்மைதானா எனவும், இதற்கான காரணம் குறித்தும் பேசியிருக்கிறார்.10,000 டாலர் டிப்ஸ்

அப்போது மார்க், ``சமீபத்தில் என் நண்பன் இறந்துவிட்டான். அவன் நினைவாகத்தான் இந்த டிப்ஸ் வழங்கினேன். அவனுடைய இறுதிச்சடங்கிற்காகத்தான் இந்த நகருக்கு வந்தேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்த டிப்ஸ் பணம் அன்று பணி செய்த 9 பணியாளர்களுக்கும் 1,100 டாலர் எனப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாகப் பேசிய மற்றொரு பணியாளர் பைஜ் முலிக், ``இது உண்மையில் பலரைப் பாதித்த கருணை செயல். என் கல்லூரி படிப்புக்காக வாங்கிய கடனில் ஒரு பகுதியைத் திரும்பக் கொடுத்துவிட்டேன்.

அந்த நாளில் பணிசெய்த பல பெண்கள், கடின உழைப்பாளி தாய்மார்கள். அந்த தொகைக்குத் தகுதியானவர்கள்" என நெகிழ்ந்தார்.

டிப்ஸ் பெற்றுக்கொண்ட ஸ்வீனி, ``எந்த நேரத்திலும் நீங்கள் கைகொடுத்து உதவி ஒருவரின் வாழ்க்கையை மாற்றலாம். அது ஒரு சிறிய செயலாக இருந்தாலும் சரி, பெரிய செயலாக இருந்தாலும் சரி. இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த 10,000 டாலர் சம்பாதிக்க எனக்குப் பல மாதங்கள் ஆகியிருக்கும்" எனக் கூறினார்.


http://dlvr.it/T2vPw4

Thursday, 15 February 2024

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்... வெள்ளை மாளிகை சொல்வதென்ன?!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி 29-ம் தேதி இந்திய மாணவரான விவேக் சைனி, ஜார்ஜியாவின் லித்தோனியாவில், ஒருவர் சுத்தியலால் தாக்கியதில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். ஜனவரி 30-ம் தேதி, பர்டூ பல்கலைக்கழக மாணவர் நீல் ஆச்சார்யா காணாமல்போன சில நாள்களில், சடலமாக மீட்கப்பட்டார். கடந்த வாரம் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டியில், லிண்டர் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் இந்திய மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி சடலமாக மீட்கப்பட்டார்.அமெரிக்கா - வெள்ளை மாளிகை

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் சையத் மசாஹிர் அலி, கடந்த 4-ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கடும் தாக்குதலுக்கு உள்ளானர் எனத் தொடர்ந்து இந்திய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த விவகாரங்கள் தொடர்பாகச் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய, அமெரிக்கா வெள்ளை மாளிகையில் உள்ள தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பியி,``நிச்சயமாக இனம், பாலினம், மதம் அல்லது வேறு எந்த காரணிகளையும் அடிப்படையாகக் கொண்ட வன்முறைக்கு மன்னிப்பே கிடையாது..ஜான் கிர்பியி

அமெரிக்காவில் இதுபோன்ற தாக்குதல்களை ஏற்றுக்கொள்ளவும் முடியாதது. அந்த வகையான தாக்குதல்கள் நடக்காமல் இருக்கவும், இதுபோன்று சிந்திப்பவர்களின் சிந்தனையைத் தெளிவுபடுத்தவும் அதிகாரிகளுடன் இணைந்து எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவருகிறோம். அதிபர் ஜோ பைடனும் அவரது இந்த நிர்வாகத்தினரும் மிக கடினமாக உழைத்து வருகின்றனர்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYஅமெரிக்கா: `Please Help Me' - தாக்குதல், ரத்தம் சொட்ட வீடியோ வெளியிட்ட இந்திய மாணவர் - என்ன நடந்தது?


http://dlvr.it/T2qGnh

``குழந்தை பெற்றால் 62 லட்சம் பரிசு" மக்கள் தொகையை அதிகரிக்க அரசு நடவடிக்கை... எங்கு தெரியுமா?

தென்கொரியா சியோலை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முக்கிய கட்டுமான நிறுவனம் `Booyoung’. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் 62 லட்ச ரூபாய் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்து ஆச்சர்யப்படுத்தி உள்ளது. work (Representational Image)சுங்கக் கட்டணம் வசூல்: வருகிறது ஜி.பி.எஸ் தொழில்நுட்பம்... பழைய முறைக்கு குட்பை..!

தென்கொரியாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணிபுரியும் ஆண், பெண் என இருவரும் இதில் பயனடையலாம். அதன்படி ஒரு குழந்தைக்கு 62,26,106 ரூபாய் (75,000 அமெரிக்க டாலர்கள்) வழங்கப்படுகிறது.  

2021-ல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 70 குழந்தைகளைப் பெற்ற ஊழியர்களுக்கு மொத்தம் 5.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 43,58,27,437 ரூபாய்) வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைவர் லீ ஜூங்-கியூன் கூறுகையில், ``குழந்தைகளின் பிறப்பு மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்யும் செயலில் ஈடுபடும் நிறுவனமாக `பூயோங்' அங்கீகரிக்கப்படும். குழந்தை வளர்ப்பில் நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் ஊழியர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது.  

மூன்று குழந்தைகள் பெற்ற ஊழியர்களுக்கு ஒரு சிறப்பு தேர்வு வழங்கப்படுகிறது. அவர்கள் மொத்தமாக 300 மில்லியன் கொரியன் வோன் அல்லது 1,86,78,318 ரூபாயை ரொக்கமாகப் பெறலாம். அரசாங்கம் கட்டடத்துக்கு நிலம் வழங்கினால், வாடகை வீடுகளாகப் பெறவும் அவர்கள் தேர்வு செய்யலாம்’’ என்று தெரிவித்தார்.pregnant 100 சிங்கிள்ஸுக்கு டேட்டிங் ஏற்பாடு செய்த தென்கொரியா அரசு... என்ன நடந்தது தெரியுமா..?

தென் கொரியாவின் பிறப்பு விகிதம் 2015-ல் இருந்து குறைந்து வருகிறது. 2022-ல் இந்நாட்டின் கருவுறுதல் விகிதம் 0.78 ஆக இருந்தது. இது உலகிலேயே மிகக் குறைந்த கருவுறுதல் விகிதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2025ல் 0.65 ஆக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கவலையைக் கருத்தில் கொண்ட நிறுவனம் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் உள்ள நிதிச் சுமையைச் சமாளிக்க ஊழியர்களுக்கு பணம் கொடுத்து உதவி வருகிறது.     


http://dlvr.it/T2nXFm

`மெலானியா, இவ்வளவு நடந்தும் என்னை விட்டுவிலகவில்லையே’ - லவ் லெட்டர் வெளியிட்டு நிதி திரட்டிய ட்ரம்ப்

அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன் மனைவி மெலானியாவுக்கு, காதலர் தினத்தை முன்னிட்டு காதல் கடிதம் எழுதியிருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் - மெலானியா இருவரும் 2004-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டு, ஜனவரி 2005-ல் திருமணம் செய்து கொண்டனர். 2006-ம் ஆண்டு அவர்களுக்கு பரோன் என்ற குழந்தை பிறந்தது. பொது நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் தம்பதி சகிதமாகவே கலந்துகொள்வார்கள்.

I don't know if Donald Trump actually wrote this heartfelt fundraising valentine to Melania for sticking by him through his indictments, but signing it "Donald J. Trump" at least makes it plausible. pic.twitter.com/hQrcFIoef5— Kyle Cheney (@kyledcheney) February 14, 2024




ஆனால், கடந்த மாதம் மெலானியாவின் அம்மா அமலிஜா நவ்ஸ் இறந்த பிறகு, மெலானியா பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவித்து வந்தார்.

இந்த நிலையில்தான் டொனால்ட் ட்ரம்ப் தன் மனைவிக்காக எழுதிய காதல் கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். அந்தக் கடிதத்தில்,``அன்புள்ள மெலானியா, I Love YOU! என் மீது எத்தனையோ குற்றச்சாட்டுகள், கைது நடவடிக்கைகள், என்னைச் சுற்றி நடந்த சூழ்ச்சி வேட்டைகள் இத்தனைக்குப் பிறகும் நீ என்னைவிட்டு விலகவில்லை. அதைவிட முக்கியம் எல்லா சூழலிலும் நீ எனக்கு ஆதரவாக இருந்தாய்.

உன் வழிகாட்டுதல், இரக்கம், அரவணைப்பு இல்லாமல் நான் இப்போது இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியாது. எப்போதும் என் உலகம் நீ மெலனியா! இப்படிக்கு அன்புடன் உன் கணவன் டொனால்ட் ஜே டிரம்ப்.'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் கடிதத்தை, இணையத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு நிதி திரட்டும் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார். அதில், தேர்தல் நிதிக்கான நன்கொடை வழங்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த இணையதளத்தில் குறைந்தபட்சம் 20.24 டாலர்களை நன்கொடையாக அளிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவரை எல்லா காலத்திலும் சிறந்த அதிபராக கருதுபவர்கள் $47, $100, $250, $500, $1,000, $3,300 அல்லது அதற்கு மேலான தொகையையும் நன்கொடையாக அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYஅமெரிக்க அதிபர் தேர்தல்: முன்னேறும் ட்ரம்ப்; பின்வாங்கிய விவேக் ராமசாமி - காரணம் என்ன?!


http://dlvr.it/T2nWyr

Wednesday, 14 February 2024

அமெரிக்கா: 2 பில்லியன் டாலர் மாளிகை; மர்மமான முறையில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளிக் குடும்பம்!

கேரளாவைச் சேர்ந்தவர் ஆனந்த் சுஜித் ஹென்றி (42). 9 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த் சுஜித் ஹென்றிக்கும், அலிஸ் பிரியங்காவுக்கும் (40) திருமணம் நடந்தது. இவர்களுக்கு நோவா, நெய்தன் ஆகிய இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். ஆனந்த் சுஜித் ஹென்றி அமெரிக்காவின் மெட்டா மற்றும் கூகுளில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகவும், அலிஸ் பிரியாங்கா ஐ.டி நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர். இதற்கிடையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் மெட்டாவிலிருந்து ஆனந்த் சுஜித் ஹென்றி ராஜினாமா செய்தார்.காவல்துறை

அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நியூ ஜெர்சியின், சான் மேடியோ கவுண்டியில் 2.1 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு மாளிகையை விலைக்கு வாங்கி குடிபெயர்ந்தார். இந்த நிலையில்தான், இந்திய வம்சாவளிக் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரும் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பான காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது குறித்துப் பேசிய காவல்துறை தரப்பு, ``இரண்டு குழந்தைகளும் படுக்கையறைக்குள்ளும், தம்பதி இருவரும் குளியலறையிலும் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தனர்.

அவர்களின் உடல்களை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்திருக்கிறோம். இது கொலையா... தற்கொலையா... என்பது தொடர்பாக விசாரிக்கப்படுகிறது. இவர்கள் அண்டை வீட்டாருடன் நட்புடன் பழகிவந்திருக்கின்றனர். கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் உடையவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது. ஆனந்த் சுஜித் ஹென்றியின் LinkedIn சுயவிவரத்தின்படி, செயற்கை நுண்ணறிவு நிறுவனமான Logits என்பதின் நிறுவனர் எனத் தெரியவருகிறது. ஆனால், தற்போதைய நிலவரப்படி, நிறுவனத்தின் இணையதளம் செயலிழந்திருக்கிறது.ஆனந்த் சுஜித் ஹென்றி குழந்தைகளுடன்

மேலும், ஆனந்த் சுஜித் ஹென்றி மெட்டாவிலிருந்து விலகியதற்கும் புதிய நிறுவனத்தை தொடங்கியதற்கு பின்னணியில் உள்ள காரணங்கள் தெளிவாக இல்லை. மேலும், ஆனந்த் சுஜித் ஹென்றி குழந்தைகள் பிறப்பதற்கு முன்பு, (2016) விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்ததாகத் தெரிகிறது. இருப்பினும், விவாகரத்து நடக்கவில்லை. சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்காததால், இந்தச் சம்பவத்தில் மர்மம் நீடிக்கிறது" எனக் கூறியது.ஜாமீனில் வந்த ரெளடி; சமாதானம் பேச அழைத்து விரட்டிக் கொன்ற கும்பல் - தஞ்சையில் பழிக்குப்பழி கொலை


http://dlvr.it/T2lQSG

China: இத்தனை டிராகன்களா... பிரமாண்ட டிரோன் ஷோ - சீனாவின் `டிராகன் ஆண்டு’ கொண்டாட்டங்கள்!

சீன புத்தாண்டு | டிராகன் சீன புத்தாண்டு | டிராகன் ஆண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டுசீன புத்தாண்டு


http://dlvr.it/T2kYjn

Monday, 12 February 2024

மைக்ரோவேவ் ஓவனில் உடல் கருகி இறந்த ஒரு மாதக் குழந்தை; `தொட்டில் என நினைத்து வைத்தேன்' - தாய் `பகீர்'

அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் உள்ள கேன்சஸ் நகரில் வசிப்பவர் மரியா தாமஸ் (26). இவருக்கு ஒரு மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையைக் கையில் வைத்துத் தாலாட்டித் தூங்க வைத்திருக்கிறார். குழந்தை தூங்கிய பிறகு, தொட்டிலில் வைப்பதற்குப் பதிலாகத் தொட்டில் என நினைத்து  அருகிலிருந்த மைக்ரோவேவ் ஓவனில் வைத்துவிட்டு, வெளியே சென்றுள்ளார் மரியா. பின்னர் வீட்டில் ஏதோ கருகிய நாற்றம் வந்துள்ளது. இதையடுத்து மரியாவின் மாமனார் வீட்டில் ஏதோ கருகிய நாற்றம் வருவதாகக் கூறி, மரியாவை அழைத்திருக்கிறார்.

வீட்டிற்குள் வந்த மரியா குழந்தை மைக்ரோவேவ் ஓவனில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், அவர் குழந்தையை வெளியே எடுத்திருக்கிறார். ஆனால் குழந்தை அசைவு ஏதுமின்றி இருந்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த போலீஸார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.Microwave Oven

அப்போது பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ``மரியா, தொட்டில் என நினைத்து மைக்ரோவேவ் ஓவனில் குழந்தையை வைத்திருக்கிறார். குழந்தை அணிந்திருந்த டைய்ப்பர், குழந்தையைப் படுக்கவைத்திருந்த போர்வை போன்றவை ஓவன் வெப்பத்தால் எரிந்திருக்கின்றன. அதனால் பலத்த தீக்காயங்கள் ஏற்படவே, குழந்தை தீக்காயங்களைத் தாங்க முடியாமல் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறது.

குழந்தை இறப்பிற்குக் காரணமான மரியாமீது `குழந்தை நலனுக்கு ஆபத்து விளைவித்தல்' மற்றும் `குழந்தை இறப்பிற்குக் காரணமானவர்' போன்றவற்றின் அடிப்படையில் வழக்குப் பதிந்து, அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்... வேண்டுமென்றே குழந்தையை ஓவனில் வைத்தாரா அல்லது தவறுதலாகத்தான் குழந்தையை ஓவனில் வைத்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறும். குழந்தை

மிசௌரி மாகாணத்தின் சட்ட வழக்குபடி 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பிற்குக் காரணமான குற்றவாளிகளுக்கு, நீதிமன்றம் 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை  விதிக்கும்" என்று தெரிவித்தார்.

தாயின் கவனக்குறைவால் குழந்தை உடல் கருகிப் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


http://dlvr.it/T2dbJH

Thursday, 8 February 2024

3 விநாடி புரொமோஷன்... வாரத்திற்கு 120 கோடி சம்பாதிக்கும் சீனப் பெண்... எப்படித் தெரியுமா?!

டிஜிட்டல் உலகில் பல யூடிபர்களும், இன்ஃப்ளுயென்சர்களும் அன்றாடம் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். பலரும் தங்களுக்கென சோஷியல் மீடியா பக்கத்தைத் தொடங்கினாலும், வெகு சிலரே நல்ல லாபம் காண்கிறார்கள்.Zheng Xiang Xiang `பொய் கேஸில் சிக்க வைத்தது ஏன்?' - போலி போதை ஸ்டாம்ப் வழக்கில் 72 நாள் சிறையிலிருந்த பெண் கண்ணீர்..!

சீனாவைச் சேர்ந்த Zheng Xiang Xiang என்ற பெண் வாரத்திற்கு 120 கோடி சம்பாதிக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா?... இவர் பல தயாரிப்புகளை புரொமோட் செய்கிறார். மற்றவர்களைப் போல அந்தத் தயாரிப்புகளை குறித்து மணிக்கணக்கில் பேசாமல் வெறும் 3 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்.

அவரிடம் வேலை செய்யும் ஊழியர்கள் அட்டைப் பெட்டியில் தயாரிப்புகளை வைத்து சர்ரென தள்ள அதனைக் கையில் எடுத்து கேமராவில் காட்டி அதன் விலையை மட்டும் கூறி பட்டென மறுபடியும் தள்ளி விடுகிறார்.

அவர் தள்ளிவிடும் அடுத்த விநாடியில் வேறொரு தயாரிப்புள்ள அட்டைப்பெட்டியைத் தள்ளுகிறார்கள். குறுகிய விநாடிகளுக்குள்ளாகவே மின்னல் வேகத்தில் தொடர்ச்சியாக 10 வெவ்வேறு தயாரிப்புகளையாவது காட்டிவிடுகிறார்.

சீனாவின் டிக்டாக் என அறியப்படும் `Douyin’-ல் அவருக்கு ஐந்து மில்லியன் ஃபாலோயர்கள் உண்டு. வாரத்திற்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 120 கோடி ரூபாய்) ஈட்டுகிறார். அவர் புரொமோஷன் செய்யும் பொருள்களுமே அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறியுள்ளனர். அமெரிக்க டாலர்!AI உருவாக்கும் எதிர்கால உலகம்...
கார்கள் காணாமல் போகும்...
ரோபோக்கள் படையெடுக்கும்!

5 நிமிடங்கள் வரை கூட ஒரு பாட்டை முழுமையாகக் கேட்காத மனநிலையில் இன்றைய காலகட்ட டிஜிட்டல் உலகம் ஓடிக் கொண்டிருக்கையில், இப்பெண்ணின் மின்னல் வேக புரொமோஷன் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

டிஜிட்டல் உலகம், டிஜிட்டல் உலகம் தான் பா! 


http://dlvr.it/T2T37f

``அமெரிக்காவை இந்தியா பலவீனமாகப் பார்க்கிறது... அவர்களுக்கு நம்பிகையில்லை!" - நிக்கி ஹேலே

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில், நவம்பரில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயக கட்சியும், குடியரசுக் கட்சியும் தேர்தலுக்கு ஆயத்தமாகிவருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவை இந்தியா பலவீனமாகப் பார்ப்பதாகவும், அமெரிக்காவை நம்பவில்லை என்றும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ரேஸில் இருக்கும் நிக்கி ஹேலே (Nikki Haley) கூறியிருக்கிறார்.நிக்கி ஹேலி

ஃபாக்ஸ் பிசினஸ் நியூஸ் (Fox Business News) ஊடகத்துடனான நேற்றைய நேர்காணலில் பேசிய நிக்கி ஹேலே, ``மோடியிடம் நான் பேசியிருக்கிறேன். இந்தியா எங்களுடன் (அமெரிக்கா) கூட்டாளியாக இருக்க விரும்புகிறது. மேலும், அவர்கள் ரஷ்யாவுடன் கூட்டாளியாக இருக்க விரும்பவில்லை.

ஆனால், இங்கு பிரச்சனை என்னவென்றால், அமெரிக்காவை இந்தியா நம்பவில்லை. அமெரிக்காவை வழிநடத்துவதில் இந்தியாவுக்கு நம்பிக்கையில்லை. அமெரிக்காவை இந்தியா பலவீனமாகப் பார்க்கிறது. அதனால், புத்திசாலித்தனமாக விளையாடுவதாக ரஷ்யாவுடன் நெருக்கமாக இந்தியா இருக்கிறது. ஏனென்றால் ரஷ்யாவிடமிருந்துதான் அதிகப்படியான ராணுவ உபகரணங்களை அவர்கள் பெறுகிறார்கள். எனவே, நாங்கள் எங்கள் பலவீனத்தை துரத்திவிட்டு மீண்டும் அமெரிக்காவை வழிநடத்தத் தொடங்கும்போது, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் அனைத்தும் மீண்டும் வரும்.நிக்கி ஹேலி

உலக பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானும், இந்தியாவும் தற்போது பில்லியன் டாலர்களில் பங்காற்றுகின்றன. அப்படியிருக்க, சீனாவைச் சார்ந்திருக்கக் கூடிய தேவை குறைகிறது. எனவே, அமெரிக்கா தனது கூட்டணிகளை உருவாக்கத் தொடங்க வேண்டும். அதேசமயம், நிதி ரீதியாக அவர்கள் (சீனா) நல்ல நிலையில் இல்லை. அவர்களின் அரசு அதிக கட்டுப்பாட்டில் இருப்பதை நீங்களே பார்க்கிறீர்கள். மேலும், பல ஆண்டுகளாக அவர்கள் எங்களுடன் போருக்குத் தயாராகி வருகின்றனர். அது அவர்களின் தவறு" என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYஅமெரிக்கா: `Please Help Me' - தாக்குதல், ரத்தம் சொட்ட வீடியோ வெளியிட்ட இந்திய மாணவர் - என்ன நடந்தது?


http://dlvr.it/T2SjmG

Wednesday, 7 February 2024

அமெரிக்கா: `Please Help Me' - தாக்குதல், ரத்தம் சொட்ட வீடியோ வெளியிட்ட இந்திய மாணவர் - என்ன நடந்தது?

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த சையத் மசாஹிர் அலி, அமெரிக்காவின் சிகாகோவில் இருக்கும் இந்தியனா வெஸ்லே பல்கலைக்கழகத்தில் ஐ.டி முதுகலைப் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி சையது மசாஹிர் அலி, வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.தாக்கப்படும் இந்திய மாணவர்

இது குறித்து சையது மசாஹிர் அலி, ரத்தம் சொட்ட சொட்ட வெளியிட்ட வீடியோவில், ``நான் எனக்கான பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லவிருந்தபோது, ​4 பேர் என்னைக் கடுமையாகத் தாக்கினர். என்னிடம் இருந்த செல்போனையும் பிடுங்கிக்கொண்டனர். Please help me..." எனப் பதிவிட்டிருக்கிறார். இதற்கிடையில், சமூக ஊடகங்களில் மற்றொரு சிசிடிவி வீடியோ ஒன்று வேகமாகப் பரவியது. அதில், சையது மசாஹிர் அலி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரைத் துரத்துவது,பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் இருக்கும் சையது மசாஹிர் அலியின் மனைவி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் உதவுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``அமெரிக்காவில் படிப்புக்காகச் சென்ற என் கணவர் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவருக்கான உரியச் சிகிச்சையைக்கூட அந்த அரசு வழங்கவில்லை. எனவே, என் கணவரின் சிகிச்சைக்கு இந்திய அரசு உரிய ஆவணம் செய்யவேண்டும்.

CCTV footage of the attack on an Indian student in Chicago pic.twitter.com/tkPTVKvLPm— Sidhant Sibal (@sidhant) February 6, 2024




மேலும், என் கணவரைப் பார்ப்பதற்கு உடனடி விசா வழங்க வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத்துறைக்குக் கோரிக்கை வைக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில், சிகாகோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``பாதிக்கப்பட்ட சையத் மசாஹிர் அலி மற்றும் இந்தியாவில் உள்ள அவரது மனைவியுடன் தொடர்பில் இருக்கிறோம். சாத்தியமான அனைத்து உதவிகளையும் உறுதி செய்வோம்.

வழக்கை விசாரிக்கும் உள்ளூர் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு கவனப்படுத்தி வருகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறது. அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி 29-ம் தேதி இந்திய மாணவரான விவேக் சைனி, ஜார்ஜியாவின் லித்தோனியாவில், ஒருவர் சுத்தியலால் தாக்கியதில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.தாக்கப்படும் இந்திய மாணவர்

ஜனவரி 30-ம் தேதி, பர்டூ பல்கலைக்கழக மாணவர் நீல் ஆச்சார்யா காணாமல்போன சில நாள்களில், சடலமாக மீட்கப்பட்டார். கடந்த வாரம் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டியில், லிண்டர் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் இந்திய மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி சடலமாக மீட்கப்பட்டார். கடந்த ஒரு வாரத்திற்குள் இந்திய மாணவர்கள் சம்பந்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்கா: தாத்தா, பாட்டி, மாமாவைச் சுட்டுக் கொன்ற இந்திய மாணவர் - என்ன காரணம்... போலீஸ் விசாரணை!


http://dlvr.it/T2RQJB

`ரோட்ல போனா தானா சார்ஜ் ஏறும்!' போனுக்கு பாத்துருப்பீங்க; இது வண்டிக்கான வயர்லெஸ் சார்ஜர்!

எல்லாமே லெஸ் ஆகிக் கொண்டே வருவதுதான் டெக்னாலஜிபோல! வயர்லெஸ், ட்யூப்லெஸ், கார்ட்லெஸ், டிரைவர்லெஸ், கீலெஸ், நாய்ஸ்லெஸ்! இவை எல்லாம் ஓகே! வயர்லெஸ் சார்ஜர் வைத்து போன்களை வேண்டுமானால் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஆனால், வண்டிகளுக்கு! அதைப் பற்றித்தான் இந்த நியூஸ். வாகனங்களுக்கே இப்போது வயர்லெஸ் சார்ஜிங் வந்துவிட்டது என்றால், இது வேற லெவல்தானே! அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரத்தின் ஒரு சாலைதான் இந்த வயர்லெஸ் சார்ஜிங் பாயின்ட். இன்னொரு அடுத்த லெவல் என்னவென்றால், இங்கே வாகனங்களை நிறுத்தி சார்ஜ் ஏற்றத் தேவையில்லை; வண்டி போய்க் கொண்டிருக்கும்போதே சார்ஜ் ஏறும் என்பதுதான் சரியான ஹைலைட்! 

வட அமெரிக்காவில் உள்ள டெட்ராய் நகரில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இப்படி ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தி உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இந்த சார்ஜிங் டெக்னாலஜியைக் கண்டுபிடித்திருக்கும் நிறுவனத்தின் பெயர் Electreon. ஏற்கெனவே இந்த நிறுவனம் ஸ்வீடன், இஸ்ரேல் போன்ற ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் இப்படி வயர்லெஸ் சார்ஜிங் சாலையை நிறுவி அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டும் இருக்கிறது. 

டெட்ராய்டில் இந்தச் சாலை ஒரு குவார்ட்டர் – மைல் தூரத்துக்கு நீளமான ஸ்ட்ரெட்ச். இந்தச் சாலையில் வாகனங்கள் ஓடும்போதே சார்ஜ் ஏறிக் கொள்ளும். கஷ்டமான தொழில்நுட்பம் இல்லை; ஆனால், ஸ்மார்ட்டான தொழில்நுட்பம். இந்தச் சாலைக் கட்டுமானத்துக்குப் பெயர் Asphalt. பார்ப்பதற்குச் சாதாரண சாலை போலத் தெரியும் இதற்குக் கீழே எலெக்ட்ரோ மேக்னட்டிக் காயில்களைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள்.Wireless charging

இந்தக் காயில்களுக்குப் பெயர் Magnetic Inductive Coils. இந்த Inductive காயில்களுக்கு ‘பவர் மேனேஜிங் ஹப்’கள் மூலம் ஃப்யூல் செய்கிறார்கள். இந்தக் காயில்கள்தான் எலெக்ட்ரோ மேக்னட்டிக் ஃபீல்டுகளைச் சாலைக்கு மேலே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் வாகனங்கள் பயணிக்கும்போது, சாலையில் உருவாகும் எலெக்ட்ரோ மேக்னட்டிக் ஃபீல்டுகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து, சாலையில் உள்ள ரிசீவர் மூலம் நமது வாகனத்தின் பேட்டரிக்கு டிரான்ஸ்ஃபர் செய்கிறது. இண்டக்டிவ் காயில்கள் மூலம் இது நடைபெறுவதால், இந்த சிஸ்டத்துக்குப் பெயர் இண்டக்டிவ் சார்ஜிங் (Inductive Charging). இதுவும் அப்படியே மொபைல் போன்களுக்கான வயர்லெஸ் டெக்னாலஜிதான். 

அப்புறமென்ன, வண்டி ஓடினா எவ்வளவு சார்ஜ் இறங்குமோ… அதே அளவுக்கு நம் வாகனத்தின் பேட்டரியிலும் சார்ஜ் ஏறும் என்பதுதான் இதன் கான்செப்ட். ஆனால், இப்போதைக்கு குவார்ட்டர் மைல் தூரம்… அதாவது சுமார் 402 மீட்டர் வரைதான் இந்த ஸ்ட்ரெட்ச்சில் முடியும். எலெக்ட்ரிக் வாகனங்களில் இருக்கக் கூடிய Range Anxiety பிரச்னையை இதன் மூலம் கொஞ்சமாச்சும் முடிவுக்குக் கொண்டு வரலாம் என்பது உண்மைதான். 

இருந்தாலும், வயர்லெஸ் சார்ஜிங் ரோடுகள் கேட்க கூலாக இருந்தாலும், இதனால் ஆகும் பொருட்செலவும், கொஞ்சம் பிராக்டிக்கல் சிக்கலும் கொண்டது என்கிற வாதமும் போய்க் கொண்டிருக்கிறது.ஒரு புது முயற்சினா சிக்கல் வர்றது சகஜம்தானே! இந்தியாவுக்கு இது வந்தா எப்படி இருக்கும் என்பதுதான் இப்போதைக்கு நமது சிந்தனை!


http://dlvr.it/T2QcCC

Tuesday, 6 February 2024

தவறி விழுந்த நபர்; உடல்மீது ஏறி இறங்கிய விமானம்! - கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தேறிய விபரீதம்!

சீனாவின் ஹாங்காங் விமான நிலையத்தில் ஜோர்டானிய நாட்டைச் சேர்ந்த 34 வயது நபர், வேலை செய்துவந்தார். அவர் பராமரிப்பு நிறுவனமான சீனா ஏர்கிராஃப்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் ஊழியர். இந்த நிலையில், பழுதான விமானத்தை இழுத்துச் செல்லும் இழுவை டிராக்கில் ஜோர்டான் பணியாளரும் சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்திருக்கிறார். இதை இழுவை வாகனத்தை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் கவனிக்கவில்லை. இந்த நிலையில், கீழே விழுந்த பணியாளர்மீது பழுதான விமானம் ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக ஹாங்காங்கின் விமான நிலைய ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,விமானம்

``பராமரிப்பு நிறுவனமான சீனா ஏர்கிராஃப்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் ஊழியர், இழுவை வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாமல் இருந்திருக்கலாம். அதனால், அவருக்கு மரணம் ஏற்படும் வகையான விபத்து ஏற்பட்டிருக்கிறது. கவனமின்மையுடன் வாகனத்தை ஓட்டிச் சென்ற 80 வயது ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்த விபத்தால் எந்த விமானச் சேவையும் பாதிக்கவில்லை. வழக்கம்போல விமான நிலையம் இயங்கிக்கொண்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.உக்ரைன் எல்லையில் விபத்துக்குள்ளானதா ரஷ்ய போர் விமானம்? - உக்ரைன் கைதிகள் உட்பட 74 பேர் பலி!


http://dlvr.it/T2NW0L

5 வருட கோமா... அம்மாவின் ஜோக் கேட்டு சிரித்தபடி எழுந்த மகள்!

அமெரிக்காவின் மிச்சிகனை சேர்ந்த பெண் ஜெனிஃபர் ஃப்ளெவெல்லன். இவர் 2017 செப்டம்பர் மாதம் எதிர்பாராத விபத்தில் சிக்கியுள்ளார். இதனால் மீள முடியாத கோமா நிலைக்கும் சென்றுள்ளார். 5 வருடங்களாக இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஜெனிஃபர் காய்ந்த மலர்களிலிருந்தும் காசு பார்க்கலாம்... சென்னைக்கு அருகில் வழிகாட்டும் பயிற்சி!

ஜெனிஃபரின் 60 வயது அம்மா பெக்கி மீன்ஸ் தன் மகளை மீட்டெடுக்கும் முயற்சியில் மன உறுதியோடு போராடி வந்துள்ளார். அதோடு இவருக்காக மாற்றுத்திறனாளி வேன் வாங்கவும், வீட்டை மறுசீரமைக்கவும் `GoFundMe' என்ற நிதி திரட்டும் தளத்திலும் உதவி கோரப்பட்டது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 25, 2022 அன்று தன் அம்மாவின் ஜோக்கை கேட்டு சிரித்தபடியே அவர் எழுந்து இருக்கிறார்.

இது குறித்து பெக்கி கூறுகையில், ``இதற்கு முன்பு அவள் அப்படிச் செய்ததில்லை; அவள் முதலில் எழுந்ததும் நான் பயந்துவிட்டேன், ஏனென்றால் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். 

அவளால் முழுமையாக எழ முடியவில்லை, பேசவும் முடியவில்லை. ஆனால், அவள் தலையசைத்தபடி இருந்தாள். அவளுக்கு நினைவு திரும்பிய பின்னும் நன்றாகத் தூங்கி கொண்டே இருப்பாள். மாதங்கள் செல்லச் செல்ல வலுப்பெற்று விழித்திருக்க ஆரம்பித்தாள்.

எல்லா கனவும் நனவாகும். இன்று நான் அதைச் சொல்ல முடியும். எங்களைப் பிரித்திருந்த மூடிய கதவு ஒன்று இன்று திறந்தது. நாங்கள் திரும்பி வந்திருக்கிறோம்’’ என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.அம்மா செய்த குற்றம்! - சிறுகதை

ஜெனிஃபருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ரால்ப் வாங் கூறுகையில், ``இது மிகவும் அரிதானது. மீளமுடியாத கோமாவில் இருந்து எழுவது மட்டுமல்லாமல், இவரது உடல்நலமும் முன்னேறி வருகிறது. இதுபோன்ற நிலையில் ஒன்றிரண்டு சதவிகித நோயாளிகள் எழுந்திருக்கும் அளவுக்கும் முன்னேற்றம் அடையலாம்’’ என்று விளக்கமளித்துள்ளார். 

ஜெனிஃபர் தன் மகன் ஜூலியனின் கால்பந்து விளையாட்டைப் பார்க்கச் சென்றுள்ளார். ஜெனிஃபர் கோமா நிலைக்குச் செல்கையில் அவரின் மகன் ஜூலியனுக்கு 11 வயது இருக்கும். இப்போது தன் மகனின் விளையாட்டைக் காண மைதானம் சென்றுள்ளார். இந்தச் செய்தி மக்களிடையே கவனம் பெற்று வருகிறது.

அவங்க அம்மா என்ன ஜோக் சொல்லி இருப்பாங்கனு நினைக்குறீங்க?!... கமென்ட்டில் சொல்லுங்கள்!  


http://dlvr.it/T2N6Hr

California Storms `பனி; பெருங்காற்று; கனமழை; வெள்ளம்..!’ - கலிபோர்னியாவை புரட்டிப் போட்ட புயல்

கலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Stormsகலிபோர்னியா | California Storms


http://dlvr.it/T2N63X

`நிர்வாணமாக கட்டிலில் அமர்ந்திருந்தார்..' அடுத்தவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து குளித்த நபர்!

அமெரிக்காவின் டென்னசி தென்கிழக்கு நாஷ்வில்லியை சேர்ந்த நார்டியும் அவரின் மனைவி கெரிகன் நார்டியும் சனிக்கிழமையன்று இரவு டேட்டிங்கிற்காக வெளியே சென்றுள்ளனர். இரவு 7 மணியளவில் அவர்களுக்கு செக்யூரிட்டி அலாரம் வந்துள்ளது. அவர்களது வீட்டில் நாய் வளர்ப்பதால் முதலில் அது சென்சார் ஆஃப் செய்யும் தங்களது செல்ல நாய்களில் ஒன்று என்று கருதியுள்ளனர். bathroom (Representational Image) ஸ்ரீதேவி மரணம்: பிரதமர் அலுவலகம் பெயரில் போலி கடிதம்... பெண் மீது குற்றப்பத்திரிகை!

செக்யூரிட்டி கேமராவை ஒருமுறை பார்த்துவிடலாம் என அவர்கள் பார்த்தபோது, அதில் வீட்டில் ஒரு நபரின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. அந்த நபர் முன்பக்க கதவை உதைத்து வீட்டிற்குள் நுழைந்து, குளியலறைக்குச் சென்று குளித்துள்ளார். இதனைக் கண்டு பயந்தவர்கள் உடனடியாக அவசர உதவி எண்ணை டயல் செய்தனர். 

வீட்டில் நாய்கள் இருப்பதாகவும் அத்துமீறி ஒரு நபர் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார் என்றும் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் அங்கு செல்கையில், தம்பதியினரின் அறையில் அந்த நபர் வெறும் டவலை மட்டும் கட்டிக் கொண்டு உட்கார்ந்து இருந்துள்ளார். 

சாமுவேல் ஸ்மித் என அடையாளம் காணப்பட்ட நபர்  போதைப்பொருளைப் பயன்படுத்தியதற்காக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 

இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர், அந்த நபர் பயன்படுத்திய டவலை அப்புறப்படுத்தி அறைகளையும், குளியல் அறையையும் முழுமையாகச் சுத்தம் செய்தனர்.  

``அவர் நிர்வாணமாக எங்கள் படுக்கையில் அமர்ந்திருந்தார். அவர் குளித்துக்கொண்டிருந்தபோது என் வீட்டில், மலம் கழித்துவிட்டும் சென்றிருக்கிறார். வீட்டு உரிமையாளர்களுக்கு இது ஒரு நல்ல பரிசாக இருக்கும் என்று அவர் முடிவு செய்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்.Cleaning (Representational Image)கேள்வி பதில்கள்: வீட்டு வாசலில் கண்ணாடி மாட்டி வைக்கலாமா?

நீங்கள் எந்த மாதிரியான மனநோயில் இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் எந்த வகையான மருந்துகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை அப்படி அச்சுறுத்த வேண்டாம்’’ என்று கெரிகன் மனம் வருந்தியுள்ளார். 

வீட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த கூடுதல் கேமராக்கள் வாங்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், மக்கள் செக்யூரிட்டி கேமராக்களை பயன்படுத்த வேண்டும் எனவும், எப்போது என்ன நடக்கும் என்பது தெரியாததால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர். 

உங்களது வீட்டில் செக்யூரிட்டி கேமரா உள்ளதா? கமென்டில் சொல்லுங்கள்!


http://dlvr.it/T2N5s4

Thursday, 1 February 2024

15-வது மாடியிலிருந்து குழந்தைகளை வீசிக் கொன்ற கொடூரம்; சீனாவில் தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

சீனாவைச் சேர்ந்த ஜாங் போ - சென் மெய்லினை என்ற தம்பதிக்கு, 2 வயது பெண் குழந்தையும், 1 வயது ஆண் குழந்தையும் இருந்தன. இந்த நிலையில், இருவரும் பிரிந்துவிட்டதால், இரண்டு குழந்தைகளும் ஜாங்கிடம் இருந்தன. இதற்கிடையில், ஜாங் போகுக்கு, யே செங்சென் என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், இருவருக்கும் மத்தியில் குழந்தைகள் விவகாரத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது.உயிரிழந்த குழந்தைகள்

இதில், ஆத்திரமடைந்த, யே செங்சென், இரண்டு குழந்தைகளையும் கொலைசெய்துவிடுமாறு வற்புறுத்தியிருக்கிறார். இருவரும் புதிய வாழ்வை தொடங்குவதற்கு இடையூறாக இருந்ததாகக் கருதப்பட்ட இரண்டு குழந்தைகளையும், 2020-ம் ஆண்டில், ஜாங் போ 15-வது அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னலிலிருந்து வெளியே வீசியிருக்கிறார். இதில் இரு குழந்தைகளும், பரிதாபமாக உயிரிழந்தன. இந்தச் சம்பவம் சீனா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், ஜாங் விசாரணையில்போது, ``குழந்தைகள் விழுந்தபோது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். கீழே மக்கள் கூச்சலிட்டதைக் கண்டுதான் விழித்தேன்" எனத் தெரிவித்திருக்கிறார். ஜாங் போ - யே செங்சென்

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சீனா உச்ச நீதிமன்றம், ஜாங் போ - யே செங்சென் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதனடிப்படையில், நேற்று இருவருக்கும் மரண ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவர்களின் மரண தண்டனை செய்தி, பிரபல ஊடக தளமான வெய்போவில் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.1988 கொலை வழக்கு: கைகொடுக்காத ஊசி... உலகின் முதல் 'நைட்ரஜன் வாயு' மரண தண்டனை நிறைவேற்றம்


http://dlvr.it/T29Zlw