Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Monday, 17 June 2024

Pakistan Team: "நாங்கள் ஒரு அணியாகச் செயல்படவில்லை!" - அணியின் தோல்வி குறித்து கேப்டன் பாபர் அசாம்

நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக் போட்டியில் அயர்லாந்து அணியை வென்றிருந்தது.

சூப்பர் 8 வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட நிலையில் போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். அதில் அணியின் மோசமான செயல்பாடு குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். பீல்டிங்கில் சொதப்புவது, பேட்டிங்கில் ரன்களைக் குவிக்கத் தவறுவது போன்ற பிரச்னைகளை தற்போதும், பாகிஸ்தான் அணி எதிர்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது.Pakistan Team

அயர்லாந்து அணி முதலில் களமிறங்கி 106 ரன்களை மட்டுமே அடித்த நிலையில், வழக்கம்போல பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சொதப்பி, ஒரு வழியாக 111 ரன்களைச் சேர்த்து ஆறுதல் வெற்றி பெற்றது. இருப்பினும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறிவிட்டது.

குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா அணியுடன் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்வியே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலிருக்கும் வீரர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல்களும் அணிக்கு பிரச்னையாக இருந்தன. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து கேப்டன் பாபர் அசாம் பேசியிருக்கிறார்.pakistan players

அவர் கூறியதாவது, ''எங்களது அணியின் பந்துவீச்சில் எந்த பிரச்னையும் இல்லை. பேட்டிங்கில்தான் பிரச்னை உள்ளது. சிறப்பாக பேட்டிங் செய்திருந்தால் அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சுலபமாக வீழ்த்தியிருப்போம். அந்த இரு அணிகளுக்கு எதிரான போட்டியில் சில தவறுகளையும் செய்து விட்டோம். விக்கெட்டுகளை இழக்கும்போது அது அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது. எங்களிடம் நல்ல வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் ஓர் அணியாக நாங்கள் இணைந்து செயல்படவில்லை" என்று கூறியிருக்கிறார்.

பாபர் அசாம் சொல்லும் காரணத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.


http://dlvr.it/T8NkMS

0 comments:

Post a Comment