Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Friday, 14 June 2024

ஜெய்ப்பூர்: ரூ.300 மதிப்புள்ள நகையை ரூ.6 கோடிக்கு வாங்கிய அமெரிக்க பெண்... நடந்தது என்ன?

ஜெய்ப்பூரைச் சேர்ந்த தந்தை, மகன் இரண்டு வருடங்களுக்கு முன்பு 300 ரூபாய் மதிப்புள்ள போலி நகையை, விலை உயர்ந்த வைர நகை எனக் கூறி அமெரிக்க பெண்னை ஏமாற்றி ரூ.6 கோடிக்கு விற்பனை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

அமெரிக்க குடியுரிமை பெற்ற செரிஷ் என்ற பெண் 2022-ல் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்தபோது, ஜெய்ப்பூர் மாநிலத்தில் வியாபார சந்தைகளுக்கு பெயர் பெற்ற ஜோஹ்ரி பஜார் பகுதிக்கு சென்றிருக்கிறார்.ரூ.300 மதிப்புள்ள நகையை 6 கோடிக்கு வாங்கிய அமெரிக்க பெண்!

அங்கு தந்தை , மகனான கௌரவ் சோனி மற்றும் ராஜேந்திர சோனி நகைக்கடை ஒன்றை நடத்தி வந்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் செரிஷிடம் ஒரு நகையைக் காண்பித்து, 'இது மிகவும் விலை உயர்ந்த வைர கற்களை கொண்டு செய்யப்பட்ட நகை. சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது' என ஆசை வார்த்தைகளைக் கூறி அதை வாங்கும்படி தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் சொன்னதை நம்பி அந்த நகையை ரூ.6 கோடிக்கு விலை பேசி வாங்கியிருக்கிறார் செரிஷ்.

மிகவும் அழகான நகையை வாங்கிய சந்தோஷத்தில் செரிஷும் அமெரிக்கா திரும்பியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நகையை போலி என அமெரிக்க நகை மதிப்பீட்டாளர்கள் உறுதி செய்துள்ளனர். மேலும் அந்த நகையின் மதிப்பு வெறும் ரூ.300 என்றும் தெரிவித்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செரிஷ் இது குறித்து விசாரணை செய்ய மீண்டும் ஜெய்ப்பூர் வந்திருக்கிறார். ரூ.300 மதிப்புள்ள நகையை 6 கோடிக்கு வாங்கிய அமெரிக்க பெண்!Rent: வீட்டு வாடகை 80,000 ரூபாய் பெங்களூரு இன்ஜினீயரின் வைரல் போஸ்ட்; விழிபிதுங்கும் நெட்டிசன்கள்!

தனக்கு நகைகளை விற்பனை செய்த கடை உரிமையாளர்களான கௌரவ் சோனி மற்றும் ராஜேந்திர சோனியிடம் இது குறித்து கேட்டபோது, தங்களுக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் செரிஷ். இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும் நாடியிருக்கிறார். தூதரகத்தின் தலையீட்டால் வழக்கு விசாரணையை ஜெய்ப்பூர் காவல்துறையினர் தீவிரமாக்கினர்.

இது குறித்து பேசிய ஜெய்ப்பூர் காவல் துறை டிஜிபி பஜ்ரங் சிங் ஷெகாவத், "அந்த நகை ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில், நகையில் பதித்திருந்த கற்கள் அனைத்தும் போலியானவை என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணை செய்ய அந்த நகைக்கடைக்கு சென்றபோது, தாங்கள் அதை விற்கவில்லை. அமெரிக்க பெண் தான் அந்த நகையை கடையிலிருந்து எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகத் தெரிவித்தனர் கடையின் உரிமையாளர்கள்.இது குறித்து விசாரணை செய்ய அந்த நகை கடைக்கு சென்றபோது, தாங்கள் அதை விற்கவில்லை. அமெரிக்க பெண் தான் அந்த நகையை கடையிலிருந்து எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகத் ததெரிவித்தனர்.ஒரிஜினல் நகைக்கு பதில் போலி நகை... கோவை கோயிலில் கைவரிசை காட்டி சிக்கிய அர்ச்சகர் - வில்லங்க பின்னணி

சிசிடிவி காட்சிகளை நாங்கள் ஆய்வு செய்கையில், அதுபோன்ற சம்பவம் நிகழவில்லை என்பது தெரிய வந்தது. இதற்கிடையில், கடை உரிமையாளர்களான தந்தையும் மகனும் தப்பிவிட்டனர். செரிஷின் புகாரை தொடர்ந்து பலரும் அந்த நகைக்கடை உரிமையாளர்கள் மீது புகார் அளித்துள்ளனர். தப்பியவர்களைக் கண்டுபிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.


http://dlvr.it/T8HJf8

0 comments:

Post a Comment