Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Sunday, 31 December 2023

அமெரிக்கா: விலையுயர்ந்த மாளிகையில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்! - போலீஸ் விசாரணை

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா வம்சாவளி தம்பதியான ராகேஷ் கமல் (57), டீனா (54), 2019-ம் ஆண்டு EduNova என்ற கல்வி அமைப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, நடத்தி வந்தனர். இவர்களுக்கு அரியானா (18 ) என்ற மகள் இருந்தார். டோவர் நகரில் 11 படுக்கையறைகள் உடன் 19 ஆயிரம் சதுர அடி பரப்பில், 5 மில்லியன் டாலர், அதாவது 41 கோடி ரூபாய் மதிப்புடைய ஒரு மாளிகையை 2019-ம் ஆண்டு இந்தத் தம்பதி வாங்கினர். அதில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்த நிலையில், அவர்கள் மூவரும் அந்த மாளிகையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றனர்.காவல்துறை விசாரணை

இதற்கிடையில், டிசம்பர் 2021-ல் அந்த நிறுவனம் திவால் ஆவதாக அறிவித்தனர். இது குறித்துப் பேசிய காவல்துறை, ``இந்தக் குடும்பம் கடந்த 2 நாள்களாக யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அழைத்தபோதும் யாரும் அழைப்பை ஏற்கவில்லை என்பதால், உறவினர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு நிதி சிக்கல்களை தம்பதி எதிர்கொண்டதாகத் தெரியவருகிறது.

இந்தச் சூழலில்தான் குடும்ப வன்முறை காரணமாக இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பிட்டிருக்கின்றன" எனத் தெரிவித்திருக்கிறது. வழக்கறிஞர் மோரிஸ்ஸி என்பவர் கூறுகையில், ``காவல்துறை சொல்வதுபோல குடும்ப வன்முறையாக இது இருக்க வாய்ப்புகள் குறைவு.காவல்துறை

இதற்கு முன்பு இங்கே சண்டை, அடிதடி என எந்தவொரு புகாரும் வந்ததே இல்லை. இங்கே குடும்ப வன்முறைக்கான அறிகுறி எதுவுமே இல்லை. விசாரணை மிகவும் ஆரம்பக் கட்டத்திலிருந்தாலும், தற்போது கிடைத்துள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, யாரும் வெளியே இருந்து வந்து தாக்கியதாகத் தெரியவில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, கடன் தொல்லையால் அவர்கள் இந்த மோசமான முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.பூட்டப்பட்ட வீட்டில் 5 எலும்புக்கூடுகள்... அதிர்ந்த காவல்துறை! - `பகீர்' தகவல் கூறும் உறவினர்கள்!


http://dlvr.it/T0nvxN

Saturday, 30 December 2023

``ஆண் ஊழியர்களை மோட்டிவேட் செய்ய பெண் ஊழியர்கள் மேக்கப் போட்டு வர வேண்டும்" தனியார் நிறுவனம் அடாவடி

`ஆண் ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்காக பெண் ஊழியர்கள் மிதமாக மேக்கப் போட்டு வர வேண்டும்’ என கூறிய நிறுவனம் ஒன்று கண்டனங்களைப் பெற்று வருகிறது. 

சீனாவின் ஷென்சென் நகரைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும்  நிறுவனம் ஒன்றில், நவம்பர் 30 அன்று குரூப் சாட் ஆப் `WeChat’-ல், லுவோ என்ற நிர்வாக அதிகாரி மெசேஜ் செய்யத் தொடங்கியுள்ளார். அந்த குரூப்பில் ஐந்து பெண் ஊழியர்களும் இருந்துள்ளனர்.'We Chat'Doctor Vikatan: எடையைக் குறைத்ததால் ஏற்பட்ட ஸ்ட்ரெச் மார்க்ஸ்... நிரந்தரமாக நீக்க வாய்ப்பு உண்டா?

`குழுவை ஊக்கப்படுத்தும் வகையில், பெண்கள் டிசம்பரில் இருந்து வேலை செய்ய வருகையில், லைட்டாக மேக்கப் அணிந்து வர வேண்டும்.

இந்தக் கோரிக்கையை ஏற்பதற்காக பெண்களுக்கு மதியம் டீ குடிப்பதற்கு, எங்கள் ஆண்கள் க்ரவுட் ஃபண்ட் செய்வார்கள்' என்று மெசேஜ் செய்துள்ளார்.

குழுவில் உள்ளவர்கள் இதற்கு சில நிமிடங்கள் வரை ஏதும் ரிப்ளை செய்யாமல் இருந்துள்ளனர். அந்தச் சமயத்தில், `இது முக்கியமான விஷயம், இந்த மெசேஜை பார்த்தவர்கள் உடனடியாக பதிலளிக்க வேண்டும்; இல்லையென்றால் உங்களது பர்ஃபார்மென்ஸுக்கான போனஸ் குறையும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் நண்பரும், சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சருமான ஒருவர் இதனைத் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் போஸ்ட் செய்ய, இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

பலரும் கண்டங்களைத் தெரிவித்த நிலையில் அவரிடம் கேள்வியெழுப்பப் பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை லுவோ மறுக்கவில்லை. அதனை ஒப்புக்கொண்டவர், `அது ஒரு ஜோக், அதனை ரிமூவ் செய்துவிட்டேன்’ என்று அலட்சியமாகக் கூறியுள்ளார். `வேலையா, குற்ற உணர்ச்சியா..?' வாழ்வின் 3 கட்டத்தில் வேலையை விடும் பெண்கள்: ஏன் இந்த நிலை?!

அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 300 ஊழியர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள். இந்த ஊழியர்கள் தங்கள் வேலையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதால் பெண் ஊழியர்களின் தேவையை நிறுவனம் பெரும்பாலும் புறக்கணிக்கிறது.

`ஊழியர்கள் நேரிலும், குரூப் சாட்டிலும் அடிக்கடி நகைச்சுவையாகப் பேசுவது நிறுவனத்தின் கலாசாரத்தை  உள்ளடக்கியது தான்’ என்று லுவோ கூறியிருக்கிறார்.

தன் தரப்பு வாதத்தை லுவோ கூறினாலும், `ஆண்கள் மேக்கப் போட்டு வந்து குழுவை மோட்டிவேட் செய்யலாமே'? என நெட்டிசன்கள் கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.

ஆண் ஊழியர்களை மோட்டிவேட் செய்ய பெண் ஊழியர்கள் லைட் மேக்கப் போட்டு வர வேண்டும் என்பது குறித்து உங்களின் கருத்தென்ன? கமென்டில் சொல்லுங்கள்!


http://dlvr.it/T0nXv0

Friday, 29 December 2023

100 பில்லியன் டாலருக்கு உரிமையாளரான முதல் பெண்; யார் இந்த ஃபிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ்?!

100 பில்லியன் டாலருக்கு உரிமையாளரனா முதல் பெண் என்ற பெருமையை ஃபிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் (Francoise Bettencourt Meyers) என்பவர் பெற்றுள்ளார். 

ப்ளூம்பெர்க் வியாழன் அன்று வெளியிட்ட பில்லியனர்கள் இன்டெக்ஸ் அறிக்கையின்படி, உலகின் பில்லியனர்கள் பட்டியலில் 12-வது பணக்காரராக ஃபிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் இடம்பிடித்துள்ளார்.

சமீபத்தில் இவரது சொத்து மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்துள்ளது.DollarHappy Teeth: பற்களின் நிறம் திடீரென்று மாறுகிறதா?

யார் இந்த ஃபிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ்?

ஃபிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸுக்கு 70 வயது ஆகிறது. 114 வருடங்களாக இயங்கி வரும்  `L'Oreal SA’ நிறுவனத்தை 1909-ல் இவரின் தாத்தா யூஜின் ஷுல்லர் தொடங்கினார். 1998-ல் இருந்து இந்நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிறுவனத்தின் தலைவராக இப்போது ஃபிராங்கோயிஸ் இருக்கிறார். இவரின் குடும்பத்தினர் இந்த அழகு பிராண்ட் வர்த்தகத்தில் 35% பங்குகளை வைத்திருந்தனர். ஃபிராங்கோயிஸ் ஒரே மகள் என்பதால் அவரின் அம்மா லிலியன் பெட்டன்கோர்ட் 2017-ல் இறந்தவுடன் அவரது சொத்துகளை ஃபிராங்கோயிஸ் பெற்றார்.

ஃபிராங்கோயிஸ் தன் அம்மாவுடன் இணக்கமாக இருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருவருக்குமான மனக்கசப்பு நீதிமன்ற சண்டையாக வலுத்தது. ஏனெனில் அவர் அம்மா தன் நண்பருக்குப் பரிசளிக்க, சுமார் 1.3 அமெரிக்க டாலர்கள் திருடியதாக ஃபிராங்கோயிஸ் குற்றம் சாட்டியிருந்தார். தன் அம்மாவினால் குடும்ப பணத்தைக் கையாள முடியுமா என்ற கேள்வியையும் நீதிமன்றத்தில் எழுப்பி இருந்தார்.

இவர்களின் குடும்ப தகறாரை நெட்ஃப்ளிக்ஸ் `The Billionaire, The Butler, and The Boyfriend’ என்ற பெயரில் வெளியிட்டு இருந்தது.  Piano (Representational Image)1 பில்லியன் டாலர் சொத்து;
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்த லலித் கைதான்... யார் இவர்?

ஃபிரான்கோயிஸ் ஓர் எழுத்தாளரும் கூட. இவருக்கு பியானோ இசைப்பது மிகவும் பிடித்த ஒன்று. மணிகணக்கில் பியானோவை தினம் வாசிப்பாராம்.

பிற பில்லியனர்களை போல அல்லாமல் தேடப்படும் முகமாகவே ஃபிராங்கோயிஸ் இருக்கிறார். சமூக வாழ்வை தவிர்த்து, பர்சனலாக வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு 37 மற்றும் 35 வயதில், ஜீன் விக்டர் மேயர்ஸ் மற்றும்  நிக்கோலஸ் மேயர்ஸ் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவருமே இயக்குநர்கள்.

வாழ்த்துகள் ஃபிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ்!


http://dlvr.it/T0m8WR

Rewind 2023 உலகை அதிரவைத்த நிகழ்வுகள்: துருக்கி, சிரியா நிலநடுக்கம் டு ஒடிசா ரயில் விபத்து..!

ஜனவரி 5: உடல்நலக்குறைவால் உயிரிழந்த கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் தலைவர், போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்கின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜனவரி 15: நேபாளத்தில் உள்நாட்டு சேவைகளை வழங்கி வரும் எட்டி ஏர்லைன்ஸ் 691, என்ற விமானம் ஆற்றின் கரையில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 72 பேர் பலியானார்கள்.

பிப்ரவரி 5: தென்னாப்பிரிக்கா பகுதியில் 37 நாட்கள் மையம் கொண்ட மிக நீண்டக்கால தீவிரமான வெப்பமண்டல சூறாவளி, 'ஃப்ரெடி சூறாவளி" உருவாகியது. இந்த சூறாவளிக்கு 1,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பிப்ரவரி 6: துருக்கி மற்றும் சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இரு நாடுகளைச் சேர்ந்த 50,000- க்கும் அதிகமானோர் பலியாகினர்.

மார்ச் 10: அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான‌ சிலிக்கான் வேலி வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டது.

மார்ச் 17: உக்ரைன் ராஷ்யா போரின் போது போர்க்குற்றம் புரிந்ததாக, ரஷ்யா அதிபர் புதினை கைது செய்ய ஆணைப் பிரப்பித்தது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.

ஏப்ரல் 15: கென்யா நாட்டில் மத போதகர் பேச்சைக்கேட்டு இயேசு கிறிஸ்துவை பார்க்க தீவிர உண்ணாவிரதம் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

மே 3: மணிப்பூரில் மெய்தி இன மக்களுக்கும் - குக்கி இனி பழங்குடி சமூகத்தினற்குமிடையே வன்முறை வெடித்தது.

ஜூன் 2: ஒடிசாவில் 3 இரயில்கள் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 296 பேர் பலியாயினர்.

ஜூன் 18: பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா - கனடா இடையே நல்லுறவில் விரிசல் ஏற்பட வழிவகுத்தது.

ஜூன் 18: டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்கு அடியில் வெடித்து சிதறியது. இதில் பயணம் செய்த 5 பேர் உடல் சிதைந்து பலியானார்கள்.

ஜூலை 13: இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பெரும் சீற்றத்துடன் பேரழிவை ஏற்படுத்தியது. இதில் 260 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 5: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 8: அமெரிக்காவின் ஹவாய் காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 97 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 11: திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் 12-ம் வகுப்பு மாணவரும், அவரது தங்கையும் வீடு புகுந்து வெட்டப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 3 மாணவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆகஸ்ட் 24: தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

செப்டம்பர் 4: கிரேக்கம், பல்காரியா, துருக்கி ஆகிய நாடுகளில் டேனியல் புயலால் உருவாகிய வெள்ளத்துக்கு பலர் பலியானார்கள்.

செப்டம்பர் 8: மொராக்கோவில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,960 பேர் பலியானார்கள்.

அக்டோபர் 4: சிக்கிம் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு வரலாறு காணாத அளவு கனமழை கொட்டிதீர்த்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி 56 பேர் உயிரிழந்தனர்.

அக்டோபர் 7 : இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும்‌ இடையே போர் துவங்கியது. தற்போதுவரை நடந்துவரும் இப்போரில் இரு நாடுகளைச் சேர்ந்த 20,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

நவம்பர் 12 : உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்க தொழிலின் போது ஏற்பட்ட விபத்தில் 41 தொழிலாளர்கள் 17 நாட்கள் சிக்கியிருந்தனர்.

டிசம்பர் 4: 2015 வெள்ளத்துக்குப் பிறகு சென்னையை பெருமளவு பாதித்த மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது.

டிசம்பர் 16: குவைத் மன்னர் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா உடல் நலக்குறைவால் காலமானார்.


http://dlvr.it/T0kD2s

Thursday, 28 December 2023

``அமெரிக்கா வேலை வேண்டாம்..." - இயற்கை ஆடைத் தொழிலில் அசத்தும் தற்சார்பு தம்பதி!

கோவிட் தொற்று பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு இருந்தாலும், சிலருக்கு பாதையமைத்து கொடுத்துள்ளது. அமெரிக்கா சிகாகோவில் பல வருட டெக் ஊழியர்களாக அலங்க்ருதா சந்திரா என்பவரும் அவரது கணவர் மெஹர் குண்டவரும் பணிபுரிந்து வந்துள்ளனர்.

2020 கோவிட் தொற்றின் சமயம் இந்தியாவுக்கு அலங்க்ருதா சந்திரா திரும்பினர். ஒரு வருடம் கழித்து  மெஹரும் இந்தியா வந்துள்ளார்.

மனிதர்களுக்கு பெரிய தேவையெல்லாம் வேண்டாம். அவர்களால் சுற்றியுள்ள அடிப்படைத் தேவைகளை வைத்தே நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும். அதற்கு இயற்கையின் துணை மட்டும் இருந்தால் போதுமென தற்சார்பு வாழ்வியலை (Sustainable Living) நோக்கி இவர்கள் நகரத் தொடங்கினர். இயற்கை சாயம்புற்றுநோயை விரட்டும் கேழ்வரகு;
ரத்தசோகையை போக்கும் தினை... கவனம் ஈர்த்த சிறுதானிய விழா!

அடிப்படை தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம், இவையனைத்தையும் ஒருசேரக் கொடுப்பதே இவர்களின் இலக்காக இருந்தது. 

அலங்க்ருதா சந்திரா இந்தியா வந்தவுடன் ஆடைகளில் பயன்படுத்தப்படும் இயற்கை சாயங்கள் (Natural Dyes) குறித்து கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.

சில மாதத்திலேயே நன்கு கற்று தேர்ந்தவர், `Elephant In You’ என்ற பெயரில் ரசாயனங்கள் பயன்படுத்தாத `ரெடி டு வியர்’ ஆடைகளை விற்கத் தொடங்கினார்.

உடையைத் தொடர்ந்து உணவில் கவனம் செலுத்தத் தொடங்கிய இந்த தம்பதியினர், மெஹரின் சொந்த மாநிலமான தெலங்கானாவில் விவசாயம் செய்யத் தொடங்கினர். 8 ஏக்கர் குடும்ப நிலத்தில் 4 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்தனர். Elephant In You models உலகின் மிகப்பெரிய பாம்புப் பண்ணை; ஒரே இடத்தில் 400 விஷப்பாம்புகள்; ஏன் தொடங்கப்பட்டது தெரியுமா?

இப்போது அந்த பண்ணையில் 40 வகையான பழ மரங்கள் உள்ளன. 10 வகையான மாம்பழங்கள், மூன்று வகையான கொய்யா பழங்கள், மாதுளை, சப்போட்டா, எலுமிச்சை, அவக்கடோ, சிங்கப்பூர் செர்ரி போன்றவற்றை வளர்த்து வருகின்றனர்.

இந்த பண்ணையைக் காண பார்வையாளர்களும் வந்து செல்கின்றனர். பார்வையாளர்கள் வந்து தங்கிச் செல்ல மண் வீட்டைக் கட்ட திட்டமிட்டுள்ளனர். அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. இதன்மூலம் இயற்கைக்கு அருகில் வாழும் அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

இயற்கையை நோக்கி நகர்வோம்!


http://dlvr.it/T0hQpB

Wednesday, 27 December 2023

கொலையா, தற்கொலையா... `Parasite' பட நடிகர், லீ சன் கியூன் காரில் இறந்த நிலையில் கண்டெடுப்பு'!

`பாராசைட்' (Parasite) பட நடிகர், லீ சன் கியூன் காரில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்...

ஆஸ்கர் விருது வென்ற பாங் ஜூன் ஹோ இயக்கத்தில் வெளியான `பாராசைட்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர், லீ சன் கியூன் ( Lee Sun-kyun).

48 வயதான லீ சன் கியூன் புதன்கிழமையன்று மத்திய சியோலில் ஒரு பூங்காவில் காரின் உள்ளே போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவரை அருகே உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.Parasite``தமிழ்நாட்டுக்கு 10 லட்சம் கோடி..." உதயநிதி Vs அண்ணாமலை சர்ச்சை... பி.டி.ஆர் சொல்லும் கணக்கு...

காரின் உள்ளேயே அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதில் மர்மங்கள் நீடிக்கின்றன. இதுவரையில் தென் கொரிய அரசும் நடிகரின் இறப்புக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் லீ சன் கியூன் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக போலீஸாரின் விசாரணையில் இருந்தார். தென் கொரியாவைப் பொறுத்தவரையில் சட்டவிரோத போதைப் பொருள்கள் மீதான சட்டங்கள் மிகவும் கடுமையானவை.

மரிஜூவானா போன்ற போதைப்பொருள்களை வெளிநாட்டில் எடுத்துக் கொள்ளும் தென்கொரியர்கள் கூட தங்களது நாட்டிற்கு வந்தால் அவர்கள் மீது வழக்கு தொடரும் அளவிற்கு, போதைப் பொருளுக்கு எதிரான சட்டம் அங்கு கடுமையாக இருக்கிறது.death இயற்கைப் பொருள் தயாரிப்பு...
இழப்பிலிருந்து மீட்ட பிசினஸ்! - ஆர்த்தியின் அசத்தல் வெற்றி

`போதைப்பொருள் பயன்படுத்திய சம்பவத்தால் குடும்பத்தினருக்கும், பலருக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கிறேன்' என லீ சன் கியூன் அப்போதே கூறியிருந்தார்.

இவரின் மனைவி நடிகை ஜியோன் ஹை ஜின். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இறப்பு ரசிகர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை என்பது தீர்வல்ல. அனைத்தும் இறுதியில் மாறும் என்று நம்புங்கள்; மாறாவிடின் அது இறுதியல்ல என்று நம்புங்கள்… உறுதியாக இருங்கள்! 


http://dlvr.it/T0fJhk

Monday, 25 December 2023

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: அட்டாக் செய்த அமெரிக்கா; ஜெர்மனி சரணடைய இது மட்டும்தான் காரணமா?

அரசியல் கோணத்திலும் ஜெர்மனியின் நிலை ஆட்டம் கண்டு கொண்டிருந்தது. 1918 நவம்பர் 9 அன்று இரண்டாம் கைஸர் வில்ஹெல்ம் தன் பதவியைத் துறக்க, அது அரசாட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஜெர்மனி குடியரசானது. குடியரசுக்குப் போரில் நாட்டமில்லை.

1918 தொடக்கத்தில் மேற்கு முனையில் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லை என்ற நிலை நிலவியது. தொடர்ந்து நான்கு வருடங்களாகத் தன்னை முழுமையாகப் போரில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தது ஜெர்மனி. இதனால் அதன் ராணுவ வீரர்கள் களைப்படைந்து போயிருந்தார்கள். ஏப்ரல் 1917ல் அமெரிக்கா முழுமையாகப் போரில் இறங்கும் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

தொடக்கத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது என்றால் அதற்கு அதன் கொள்கை மட்டுமே காரணமல்ல. வர்த்தக உறவுகளும் காரணம். நேச நாடுகள், மைய நாடுகள் அனைத்தோடும் வணிகப் பரிவர்த்தனைகளைச் செய்து வந்தது அமெரிக்கா. என்றாலும் நேச நாடுகளிடம் அதிகப் பரிவு காட்டியது. ஒரு கட்டத்தில் ஜெர்மனி மீது பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்த போது அமெரிக்கா பிரிட்டனுக்குத் தகுந்தாற்போல் நடந்து கொண்டது. ஆக மெல்லமெல்ல அமெரிக்கா ராணுவமும் நேச நாடுகளின் சார்பில் களத்தில் இறக்கி விடப்படும் என்ற நிலைமை உண்டானது.அமெரிக்க ராணுவ வீரர்கள்

1917 பிப்ரவரி 3 அன்று ஜெர்மனியுடனான தனது தூதரக உறவை முறித்துக்கொண்டது அமெரிக்கா. ஏப்ரல் 6 அன்று ஜெர்மனியின் மீது போர் என்று அறிவித்தது. அந்த ஆண்டு ஜூன் 7ம் தேதி அமெரிக்கப் பயணப் படையின் தலைவரான ஜெனரல் ஜான் பெர்ஷிங் தலைமையில் இங்கிலாந்தை அடைந்தது அமெரிக்க ராணுவம். அந்த ராணுவத்தின் மற்றொரு பகுதி ஜூன் 24 அன்று பிரான்ஸை அடைந்தது.

முதலாம் உலகப்போரில் முக்கிய பங்கு வகித்த ராணுவத் தலைவர்களில் ஒருவர் ஜான் பெர்ஷிங். செல்லமாக 'பிளாக் ஜாக்' என்று அழைக்கப்பட்டவர். போரில் நேச நாடுகள் வென்றதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒருவர். இவர் மிகவும் பிடிவாதக்காரர். தங்களுடன் ஒன்றிணைந்து அமெரிக்க ராணுவம் போரில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றன பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ராணுவங்கள். அதை மறுத்தார் பெர்ஷிங். நேச நாடுகள் சார்பில் போரிட்டாலும் அமெரிக்க ராணுவம் தனியாகவே போரில் பங்கெடுத்துக் கொள்ளும் என்றும் தன் தலைமையில் மட்டும்தான் அது இயங்கும் என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

வடக்கு பிரான்ஸிலிருந்த ஒரு நகரம் ஹாமெல். அங்கு நடைபெற்ற போரில் ஆஸ்திரேலிய ராணுவமும் அமெரிக்க ராணுவமும் மிக வெற்றிகரமான தாக்குதல்களை ஜெர்மனிக்கு எதிராக நிகழ்த்தின. இங்குதான் முதன்முதலாக அமெரிக்கா முதலாம் உலகப்போரில் பங்கேற்றது எனலாம். இதில் மட்டும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அல்லாத வேறு அதிகாரிகளுடன் அமெரிக்க ராணுவம் இயங்கியது. முக்கியமாக ஆஸ்திரேலிய ராணுவத்துடன்!அமெரிக்க ராணுவ வீரர்கள்

அளவில் சிறியதாகவும் முன்னனுபவம் அதிகமற்றதுமான ராணுவத்துக்குத் தலைமை தாங்கிய பெர்ஷிங்கிற்கு இதில் சவால்கள் காத்திருந்தன. கடுமையான பயிற்சியை வழங்கியதன் மூலம் அமெரிக்க ராணுவத்தை பலம் உள்ளதாக ஆக்கியதில் அவர் பங்கு மகத்தானது. முக்கியமாக 'Meuse-Argonne Offensive' என்பதில் அமெரிக்க ராணுவம் மிக முக்கிய பங்கு வகித்து வெற்றியை ஈட்டித் தந்தது. மியூஸ் நதி பள்ளத்தாக்கு மற்றும் வட கிழக்கு பிரான்ஸில் அமைந்த அர்கோன் காடு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தாக்குதலைத்தான் Meuse-Argonne Offensive என்பார்கள். இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்தினார் ஜான் பெர்ஷிங். ஜெர்மன் ராணுவத்துக்குப் போர்த் தளவாடங்களை எடுத்துச்சென்ற பகுதியைத் துண்டிக்க வேண்டும் என்பதுதான் இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம். இப்படிச் செய்தால் ஜெர்மனியின் நிலை பலவீனமாகிவிடும்.

தொடக்கத்தில் அமெரிக்க ராணுவத்தின் தரப்பில் பல இழப்புகள் நேரிட்டன. 26,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் இதில் இறந்தனர். சுமார் ஒரு லட்சம் ராணுவ வீரர்களுக்குப் பலத்த காயம். என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அது தன்னைப் பலப்படுத்திக் கொண்டது. முதலாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் மிக முக்கியமாக அமைந்தது இந்தத் தாக்குதல். போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் இது முக்கிய பங்கு வகித்தது. அமெரிக்கப் பயணப் படையின் வலிமையை அழுத்தம் திருத்தமாக இது காட்டியது. ஜெர்மனிக்குப் பயத்தை மூட்டியது. முதலாம் உலகப் போர் முடிந்த பிறகு அமைதி உடன்படிக்கை உருவாக்கத்திலும் பங்கு வகித்தார் பெர்ஷிங்.

இதற்குச் ​சற்று முந்தைய காலகட்டத்தில் அமெரிக்க ராணுவம் முழுமையாகக் களத்தில் இறங்குவதற்குள் வெற்றியைச் சுவைத்து விட வேண்டும் என்று தீர்மானித்தார்கள் ஜெர்மானியர்கள். எதிரிகளின் முக்கியமான சில பகுதிகளை மட்டும் கைவசம் கொண்டு வந்தால் கூட அமைதி பேச்சுவார்த்தை நடத்தும்போது அது தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று கருதியது ஜெர்மனி. இது தொடர்பாக ராணுவ தளபதி ஜெனரல் எரிச் லுடென்டார்ஃப் என்பவர் பல திட்டங்களைத் தீட்டினார்.President Wilson before Congress, announcing the break in official relations with the German Empire on February 3, 1917.

முதலில் 1918 மார்ச் இறுதியில் வடக்கு பிரான்ஸிலிருந்து ஸோம்மா பகுதி எப்படியாவது தங்கள் வசம் கொண்டுவந்து பிரிட்டிஷ் ராணுவத்தைப் பின்வாங்கச் செய்ய வேண்டும் என்பது திட்டமாக இருந்தது. இதற்கு 'ஆபரேஷன் மைக்கேல்' என்று பெயரிடப்பட்டது.

அடுத்து பெல்ஜியம் பகுதியிலிருந்து பிளாண்டர்ஸ் பகுதி வரை உள்ள முக்கிய துறைமுகங்களை தங்கள் வசம் கொண்டு வந்தால் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு அளிக்கப்பட்டு வந்த உணவு ராணுவத் தளவாடங்கள் போன்றவை நின்றுவிடும் என்பது ஜெர்மனியின் நிலைப்பாடாக இருந்தது. இந்தத் திட்டத்தை அவர்கள் 'ஆபரேஷன் ஜார்ஜெட்' என்று அழைத்தனர்.முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: போரிலிருந்து பின்வாங்கிய பல்கேரியாவும், அது ஏற்படுத்திய தாக்கமும்!

ஆஸ்னே நதி பகுதியை தங்கள் வசம் கொண்டு வருவதற்காக அவர்கள் போட்ட திட்டத்தின் பெயர் ஆபரேஷன் 'ப்​ளூச்செர் யார்க்' (Operation Blücher-Yorck).

இறுதியாக அவர்கள் போட்ட திட்டம் என்று ஆபரேஷன் க்னெஸெனுவைச் (Operation Gneisenau) சொல்லலாம். இது 1918 ஜூன் 9 அன்று நடைபெறத் தொடங்கியது.Wilson-war-message-1917ஆனால் இவை எல்லாவற்றிலுமே வெற்றிகள் மிகக் குறைவாகவே கிடைத்தன. கிடைத்த வெற்றிகளையும் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. இதன் பின்னர், அதுவும் அமெரிக்கா முழு ​மூச்சாக எதிரணியில் இறங்கிய பிறகு, தங்களுக்கு (மேலும்) தோல்வி முகம்தான் என்பதை ஜெர்மனி உணர்ந்து கொண்டது. ஒருவழியாகச் சரணடையத் தீர்மானித்தது.

- போர் மூளும்...


http://dlvr.it/T0ZzwL

எகிறும் இந்தியாவின் கடன் சுமை... IMF கணிப்பை மறுக்கும் இந்திய அரசு..!

2027-க்குள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 100% அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் இந்திய அரசின் கடன் சுமை குறித்து சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடன்இந்தியாவின் மொத்தக் கடன் ரூ.205 லட்சம் கோடி... மத்திய அரசு கடன் மட்டும் இவ்வளவா?

மேலும் காலநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ள நிலையில், நீண்ட கால கடன்கள் அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள, தனியார் துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் , சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்திய அரசாங்கம் வெளியிட்டிருக்கும் விளக்க அறிக்கையில், "இந்திய அரசின் கடன், உள்நாட்டு உற்பத்தியை விட 100% அதிகரிக்கும் என்று கூறும் ஐ.எம்.எஃப்-ன் மதிப்பீடு தவறானது. 2020-21ஆம் ஆண்டு சுமார் 88%- ஆக இருந்த பொது அரசாங்கக் கடன், அதுவே 2022-23ஆம் ஆண்டு சுமார் 81%- ஆக குறைந்துள்ளது. பொது அரசாங்கக் கடனில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடனும் அடங்கும். இந்தியாவை பொறுத்தவரை மாநிலங்கள் தனித்தனியாக தங்கள் நிதி பொறுப்புச் சட்டத்தையும் இயற்றியுள்ளன. அவை அந்தந்த மாநில சட்டமன்றங்களால் கண்காணிக்கப்படுகிறது.மத்திய நிதி அமைச்சகம்வருமான வரித் தாக்கல்... புதிய படிவங்கள் அறிமுகம்.. மாற்றங்கள் என்ன?

மேலும், உலகளாவிய நிதி நெருக்கடி, கோவிட்-19, ரஷ்யா-உக்ரைன் போர், போன்ற அசாதாரண சூழ்நிலைகள் உலகப் பொருளாதாரம் ஒரே மாதிரியாக பாதிப்படைந்துள்ளது. அவற்றில் இந்தியா போன்ற சில நாடுகள் விதிவிலக்காக திகழ்ந்தன. இங்கிலாந்தின் கடன் அளவு அதன் ஜி.டி.பி-யில் 140 சதவிகிதமாகவும், அமெரிக்காவிற்கும் 160 சதவிகிதமாகவும் மற்றும் சீனாவிற்கு 200 சதவிகிதமாகவும் உள்ளது. இவற்றை இந்தியாவின் நிலையோடு ஒப்பிடுகையில் மிக மோசமான நிலை" என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


http://dlvr.it/T0ZzmN

Saturday, 23 December 2023

``இந்திய கடற்பகுதியில் கப்பல் மீதான டிரோன் தாக்குதல்; இரானில் இருந்து நடத்தப்பட்டது” - பென்டகன்

அரபிக்கடலில் நேற்று எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் கப்பல் மீது திடீரென்று டிரோன் மூலம் வானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதில் வெடிவிபத்து ஏற்பட்டு கப்பல் தீப்பிடித்துக் கொண்டது. இந்த கப்பல் இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் என்ற தகவல் வெளியானதால் அதன் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த தாக்குதல் இரானில் இருந்து நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் போர்பந்தர் கடற்பகுதியில் நேற்று, 20 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது இரானில் இருந்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அது ஜப்பானுக்கு சொந்தமான கப்பல் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி 10 மணிக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அறிவித்தது.

நெதர்லாந்து இயக்கி வரும் ஜப்பானுக்கு சொந்தமான CHEM PLUTO என்ற இக்கப்பல் இந்தியக் கடலோரப் பகுதியில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் தாக்கப்பட்டது. இரானில் இருந்து டிரோன் மூலம் ஏவப்பட்ட ஒரு வழி தாக்குதல் என்று என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.கப்பல் மீது தாக்குதல்

கடந்த அக்டோபர் 7 -ம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அதிகரித்து வரும் பிராந்திய பதற்றங்களையும் கப்பல் வழித்தடங்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆபத்தையும் இந்த சம்பவம் குறிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அமெரிக்க கடற்படை அந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இரானிய அரசாங்கமும், ஏமனில் உள்ள அதன் கூட்டணி ராணுவப்படையும் காஸாவில் இஸ்ரேலிய அரசாங்கத்தின் ராணுவ நடவடிக்கையை பகிரங்கமாக விமர்சித்துள்ளன. தற்போது நடைபெற்று வரும் மோதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

2021-ம் ஆண்டுக்குப் பிறகு வணிகக் கப்பல் மீது இரான் நடத்தும் ஏழாவது தாக்குதல் என்று பென்டகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இரானிய தூதுக்குழுவின் செய்தித் தொடர்பாளர் இது குறித்த கருத்துக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

செங்கடலில் ஒரு முக்கியமான கப்பல் பாதையில் ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கர் நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

தாக்குதலுக்கு உள்ளான MV Chem Pluto என்ற வணிகக் கப்பலுக்கு உதவ இந்தியக் கடற்படையும் இந்திய கடலோரக் காவல்படையும் விரைந்தது. அந்த கப்பல் சவூதி அரேபியாவின் ஜுபைல் துறைமுகத்தில் இருந்து மங்களூருக்கு சரக்கை ஏற்றிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது போர்பந்தரில் இருந்து 217 கடல் மைல் தொலைவில் காலை 11.30 மணியளவில் தாக்கியதாக யு.கே கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.

நள்ளிரவில் இந்திய கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில், கப்பல் அதன் மின் உற்பத்தி அமைப்புகளில் சேத மதிப்பீடு மற்றும் பழுதுபார்ப்புகளை மேற்கொள்வதற்காக மும்பை போஸ்ட் நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும் "இந்திய கடலோர காவல்படை கப்பல் விக்ரம், அதனை அழைத்துச் செல்லும். இந்திய கடலோர காவல்படை செயல்பாட்டு மையம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது" என்றும் தெரிவித்துள்ளது.


http://dlvr.it/T0Xblb

Friday, 22 December 2023

Vin Diesel: Fast & Furious நடிகர் வின் டீசல் மீது பாலியல் புகார்; அதிர்ச்சி வாக்குமூலம் அளித்த பெண்!

ஹாலிவுட் இயக்குநர் ஜஸ்டின் லின் இயக்கத்தில் வெளியான படம் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’. இதில் கதாநாயகனாக வின் டீசல் நடித்திருந்தார். உலகளவில் பெரும் வரவேற்புப் பெற்ற இந்தப் படத்தின் நாயகன் வின் டீசல் மீது, அவரின் உதவியாளர் ஆஸ்டா ஜோனாசன் என்ற பெண் பாலியல் வழக்கு ஒன்றை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கிறார். நடிகர் வின் டீசல்

அந்த வழக்கில், `ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' நிறுவனத்தால் நான் பணியமர்த்தப்பட்ட பிறகு, செப்டம்பர் 2010-ல் `ஃபாஸ்ட் ஃபைவ்' படப்பிடிப்பின்போது அட்லாண்டாவுக்குச் செல்லவேண்டியதிருந்தது. அவர் தங்கியிருந்த அறையிலிருந்து அவரை மகிழ்வித்தப் பல பெண்கள் சென்றனர். அவரைப் புகைப்படம் எடுக்க பல நிறுவனத்தாரும் காத்திருந்தனர். அப்போது, நடிகர் வின் டீசலுக்கு உதவுவதற்குப் பணிக்கப்பட்டேன். அப்போது அவரது அறையில் தனியாக இருந்தவருக்கு உதவுவதற்காகச் சென்றேன்.

அப்போதுதான் அவர் என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தார். அவரது பிடியிலிருந்து எவ்வளவோ விடுபட முயன்றும் தோற்றுப்போனேன். எனது ஆடைகளைக் கழற்ற முயன்றார். நான் அவரிடமிருந்து தப்பி, குளியலறைக்குச் சென்று கதவைத் தாழிட முயன்றேன். ஆனால், அங்கும் வந்த அவர் என்னைக் கட்டாயப்படுத்தி, வன்கொடுமை செய்தார். நடிகர் வின் டீசல்

அதைத் தொடர்ந்து சுய இன்பம் செய்துவிட்டு, என்னைத் தள்ளிவிட்டுச் சென்றுவிட்டார். அவரது ஆசைக்கு இணங்காததால் அடுத்தநாள், நான் பணிநீக்கம் செய்யப்பட்டேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கால், நடிகர் வின் டீசல், அவர் பணிபுரியும் நிறுவனம் ஆகியவற்றின் சந்தைமதிப்பு குறையும் எனக் கூறப்படுகிறது. அமெரிக்கா: `டொனால்டு ட்ரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்!' - நீதிமன்றம் அதிரடி


http://dlvr.it/T0TJ1y

Wednesday, 20 December 2023

அமெரிக்கா: `டொனால்டு ட்ரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்!' - நீதிமன்றம் அதிரடி

அமெரிக்காவில் 2021-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜோ பைடனிடம் டொனால்டு ட்ரம்ப் தோல்வியுற்றிருந்தார். அதன் பின்னர், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதில், ஐந்து பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் கொலம்பியா நீதிமன்றமும், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்ற வழக்கில் ஜார்ஜியா நீதிமன்றமும் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்தன.டொனால்ட் ட்ரம்ப்

இது தொடர்பான வழக்கின் விசாரணை கொலராடோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ``அமெரிக்காவில் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்கும் அமெரிக்க அரசியலமைப்பின் அரிதாகப் பயன்படுத்தப்படும் விதியின்கீழ், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகுதியற்றவராகக் கருதப்படுகிறார்.

அமெரிக்க வரலாற்றில் அதிபராகப் பதவி வகித்த ஒருவர், அதிபர் தேர்தலில் போட்டியிட தடைசெய்யப்படுவது, இதுவே முதன்முறை. இந்தத் தீர்ப்பு கொலராடோவில் மார்ச் 5-ல் நடைபெறும் தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்" எனத் தெரிவித்திருக்கிறது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.``போலிச் செய்திகள் இரக்கமின்றி அவரைப் பின்தொடர்ந்தன" - சகோதரியின் மறைவு குறித்து ட்ரம்ப் வேதனை


http://dlvr.it/T0NX6g

Tuesday, 19 December 2023

சீனாவில் குழந்தைகளைக் குறிவைக்கும் சுவாசத் தொற்று... இந்தியாவையும் பாதிக்குமா..?

சீனாவில் கடந்த சில தினங்களாக குழந்தைகளிடம் தீவிர சுவாசப்பாதை தொற்று அதிகரித்துவருகிறது. இதையடுத்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் பரிசோதனைகளை உறுதிசெய்யவும் மற்ற நாடுகளுக்கும் மத்திய அரசு  அறிவுறுத்தி இருக்கிறது. சீனாவின் பாதிப்பு மற்றும் அவற்றுக்கான நடவடிக்கைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. சீனாவில் அதிகரித்துவரும் இந்த பாதிப்புக்கு புதிய வைரஸ் காரணமில்லை என்றும், ஏற்கெனவே அறியப்பட்ட நோய்க்கிருமிகள்தான் காரணம் என்றும் சீனாவின் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் குழந்தைகளிடம் தீவிர சுவாசத் தொற்று பாதிப்புக்கான அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொள்ள ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.  இதை எப்படிப் புரிந்துகொள்வது... இந்தியாவிலும் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமா....?சீனா - கொரோனா``ஜெ.என்-1 கொரோனா... சிங்கப்பூருக்கு முன்பே கண்டுபிடித்துவிட்டோம், பீதி வேண்டாம்!" - கேரள அமைச்சர்

சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பூங்குழலியிடம் பேசினோம். அவர் கூறுகையில்,

 ''சீனாவில்  பொருளாதாரம், ஆரோக்கியம் என எந்த விஷயத்தில் பிரச்னை ஏற்பட்டாலும் அது உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.  கடந்த மே மாதம் தொடங்கி சீனாவில் ஒருவித நிமோனியா காய்ச்சல் பரவல் அதிகரித்துக்கொண்டே வருவதாக ஐசிஎம்ஆர் ஓர் அறிக்கை தந்திருக்கிறது.  குறிப்பாக இது அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிகரித்திருப்பதையும் பார்க்க முடிகிறது. இதனால் குழந்தைகளும் முதியவர்களும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலும் இது குழந்தைகளையே பாதிக்கும் ஒருவகை நிமோனியாவாக அறியப்படுகிறது. எல்லா மருத்துவமனைகளிலும் குழந்தைகளின் கூட்டம் நிரம்பி வழிவதாகவும், ஆறு மணி நேரமெல்லாம் காத்திருந்து மருத்துவரைப் பார்ப்பதாகவும்கூட செய்திகள் கேள்விப்படுகிறோம்.

இந்தத் தகவல்களுக்கு உலக சுகாதார நிறுவனமும் சீன அரசும் விளக்கங்கள்  கொடுத்துள்ளன. இன்னொரு பக்கம், இது எந்தக் கிருமியால் ஏற்படும் நிமோனியா என்றே தெரியாத அளவுக்கு மர்மத் தொற்றாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதிகமான காய்ச்சலும், காய்ச்சல் குணமானாலும், அடுத்த சில நாள்களுக்கு இருமல் தொடர்வதாகவும், சில குழந்தைகளுக்கு மருத்துவமனையில் அட்மிஷன் தேவைப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  சில குழந்தைகளுக்கு நோயின் தீவிரம் அதிகமாக இருப்பதாகவும் தெரிகிறது.

 சீனாவில் பரவும் இந்த நிமோனியா பாதிப்பு, ஏற்கெனவே அங்கிருந்து பரவிய கோவிட் தொற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. மைக்ரோ பிளாஸ்மா எனப்படும் ஒருவித பாக்டீரியாவாலும் சில வகை வைரஸாலும் குழந்தைகளிடம் இந்த பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் சீன அரசுத் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இது ஏற்கெனவே வந்த வைரஸ்தான், புதிதல்ல என்றும் சொல்கிறார்கள்.தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி`அம்மாவுடன் நேரம் செலவிடுங்கள், அவர்களின் ஆயுள் அதிகரிக்கும்' - ஆய்வுத் தகவல்!

அப்படி இருந்தால் ஏன் இத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட வேண்டும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. பெரியவர்களுக்கு இருக்கும் எதிர்ப்புசக்தி குழந்தைகளுக்கு இருப்பதில்லை. ஸீரோ கோவிட் என்ற இலக்கை எட்ட, சீனாவானது தொடர்ந்து பல மாதங்களுக்கு கட்டுப்பாடுகளைத் தொடர்ந்தது. அப்படிப் பார்த்தால் கோவிட் கட்டுப்பாடுகள் இல்லாத முதல் குளிர்காலம் குழந்தைகளுக்கு சீனாவில் இதுதான் என்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே இருந்ததால் இந்தக் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

 அடுத்தது சுற்றுச்சூழல் மாசின் காரணமாகவும் இந்தத் தொற்று அதிகரித்திருக்கலாம். கோவிட் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வருடம்வரைகூட அதன் தாக்கம் தொடர்கிறது. அதில் நுரையீரல் பாதிப்பும் முக்கியமானது.தொற்றுப் பரவலுக்கு அதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஐசிஎம்ஆரின் அறிக்கை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் பார்ப்போம். ஏஐ உருவாக்கிய சில டேட்டாக்களின் படி, சில இடங்களில்  ஹெச்9 என் 2 என்ற ஃப்ளு சற்று அதிகரித்திருப்பதாக உறுதிசெய்யப்படாத சில தகவல்கள் சொல்கின்றன. சீனா தரப்பிலிருந்து இது குறித்து எதுவும் சொல்லாவிட்டாலும், ஐசிஎம்ஆரின் தகவலின்படி, இதையும் கருத்தில்கொண்டு பயணிகளைத் தீவிரமாகக் கண்காணிப்பதாகச் சொல்லியிருக்கிறது.  ஐ.சி.எம்.ஆர்`கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்களில் 6% மக்கள் இறந்துவிட்டனர்' - திகில் கிளப்பும் ரிப்போர்ட்!

மற்ற நாடுகளிலுள்ள மருத்துவமனைகளும் தயாராக இருப்பதற்கு அறிவுறுத்தியிருப்பதாக ஐசிஎம்ஆர் சொல்கிறது. ஹெச்9 என் 2 என்பது கோழிப்பண்ணையிலிருந்து பரவி நோயை ஏற்படுத்தக்கூடிய ஒருவகை ஃப்ளூ. கோழிப்பண்ணையிலிருந்து அங்கே வேலை பார்ப்பவர்களுக்குப் பரவ வாய்ப்புகள் அதிகம். மற்றபடி இது மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவும் வாய்ப்பு ரொம்பவும் குறைவு. கோழிகளுக்கு முறையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டு, அதன் விளைவாக தொற்றுப் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.  இந்தத் தடுப்பூசியானது கோழிகளுக்கு நிரந்தரப் பாதுகாப்பை அளிப்பதில்லை. மீண்டும் மீண்டும் செலுத்தவேண்டிய தடுப்பூசியாக இருக்கிறது. அதனால் அங்கே வேலை பார்ப்பவர்களுக்குப் பரவுகிறது.

 இது குறித்தெல்லாம் கவலைப்படாமல், நாம் கோவிட் தொற்றுக்குப் பின்பற்றிய எச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதுதான் புத்திசாலித்தனமானது.

 ஃப்ளூ வராமல் தடுக்க தடுப்பூசிகள் இருக்கின்றன. அவை வருடந்தோறும் அப்டேட் செய்யப்படுகின்றன. இணைநோய்கள் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், வயதானவர்கள் என ரிஸ்க் பிரிவில் உள்ளவர்கள் இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம். இந்தத் தடுப்பூசி மேற்குறிப்பிட்ட  ஹெச்9 என் 2 தொற்றுக்கு உதவாது என்றாலும் குளிர்காலத்தில் பரவும் ஃப்ளூ தொற்றின் பாதிப்பிலிருந்து காக்கும். '' என்றார்.

 - ராஜலட்சுமி


http://dlvr.it/T0L4V8

Monday, 18 December 2023

சீனாவில் நிலநடுக்கம்: 116 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆறுதல்

சீனாவின் வடமேற்குப் பகுதியான கன்சு மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஜோவிலிருந்து தென்மேற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளப் பகுதிகளிலும், வடக்கு ஷான்சி மாகாணத்தில் உள்ள ஜியானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. இது குறித்து கன்சு மாகாண நிலநடுக்க நிவாரணத் தலைமையகம், "திங்கள்கிழமை இரவு 11:59 மணிக்கு கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியிருக்கிறது. வடக்கு ஷான்சி மாகாணத்தில் உள்ள ஜியானில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியிருக்கிறது. இதனால், பல கிராமங்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் தடைப்பட்டிருக்கிறது. ஹைடாங் நகரில் மட்டும் 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். அதிகாலை முதல் மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இந்த நிலநடுக்கத்தில் சுமார் 116 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பல கட்டடங்கள் இடிந்து கணிசமான சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. மேலும், நிலநடுக்கத்தின் போது பாதுகாப்புக்காக மக்கள் தெருவில் இறங்கித் தஞ்சமடைந்த வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பகிரப்படுகிறது. இந்த நிலநடுக்கம் குறித்துப் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.சீன நிலநடுக்கம்

அத்துடன் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் மாதம், கிழக்கு சீனாவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், 23 பேர் காயமடைந்தனர். பல கட்டடங்கள் இடிந்து சேதம் ஏற்பட்டது. செப்டம்பர் 2022-ல், சிச்சுவான் மாகாணத்தில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் உயிரிழந்தனர். 2008-ல் 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 5,335 பள்ளி மாணவர்கள் உட்பட 87,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
`14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம்' - அவசரநிலையை அறிவித்த ஐஸ்லாந்து அரசு!


http://dlvr.it/T0KQB9

`அமெரிக்காவின் குற்றச்சாட்டில் ஆதாரமிருக்கிறது, ஆனால், கனடா..!' - அமைச்சர் ஜெய்சங்கர் சொல்வதென்ன?

கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும், அமெரிக்காவில் சீக்கியத் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலைசெய்யச் சதித்திட்டம் நடைபெற்ற சம்பவமும், பெரும் பேசுபொருளாகின. அமெரிக்கா வழக்கில், இந்திய அரசு அதிகாரி நிகில் குப்தா என்பவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனால், அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளுடனான இந்தியாவின் உறவில் புகைச்சல் ஏற்படுத்தியிருக்கிறது.இந்தியா- கனடா

இதில், கனடா - இந்தியாவுக்கு மத்தியிலான உறவு பெருமளவு பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின், ``ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் தொடர்பு இருக்கிறது" என்ற விமர்சனமும், அதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்தியாவால் தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் கனடாவில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?" என்ற கேள்வியும் காரசாரமான விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ``இந்தியா மிகவும் பொறுப்புள்ள நாடு என்பதை அனைவரும் அறிவார்கள் என்று நான் நினைக்கிறேன். இந்தியா என்ன செய்கிறது என்பதில் இந்திய அரசு மிகவும் கவனமாக இருக்கிறது. எனவே, கனடா மட்டுமல்ல, எந்த நாடும், இந்தியாமீது காட்டும் அக்கறையை நாங்கள் எப்போதும் பராமரித்து வருகிறோம். அந்த அக்கறை மட்டுமல்ல, அவர்கள் முன்வைக்கும் விமர்சனங்களையும், அதன் சில அடிப்படைகளையும் , எப்போதும் கவனிக்கத் தயாராக இருக்கிறோம்.ஜெய்சங்கர்

சர்வதேச உறவுகளில் இவ்வாறான சவால்கள் அவ்வப்போது எழலாம். இந்தியாவுக்கு எதிராக அமெரிக்காவும் கனடாவும் எழுப்பியிருக்கும் சமீபத்திய பிரச்னைகள் அவசியம் இல்லாதவை. மேலும், அமெரிக்கா - கனடா முன்வைக்கும் இரண்டு பிரச்னைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. அமெரிக்கா முன்வைத்த விமர்சனத்துக்கு சில குறிப்பிட்ட தகவல்களையும், ஆதாரங்களையும் அளித்திருக்கிறது. ஆனால், கனடாவின் குற்றச்சாட்டு அப்படியல்ல. எனவே, இந்தச் சிக்கலை மேலும், தொடர விரும்புகிறதா... இல்லையா என்பது கனடாவின் விருப்பம்" எனக் குறிப்பிட்டார்.இந்தியா - கனடா: `நான் பிரதமரான பிறகு, உறவை மீட்டெடுப்பேன்’ - ட்ரூடோவைச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்


http://dlvr.it/T0HJG8

Saturday, 16 December 2023

அமெரிக்க சீக்கியர் கொலை முயற்சி; `கட்டாய பன்றி இறைச்சி, சித்ரவதை...' - கைதானவர் தரப்பு குற்றச்சாட்டு

காலிஸ்தான் எனும் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து `சீக்கியர்களுக்கான நீதி’ எனும் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருப்பதால், அமெரிக்கா, கனடாவில் இந்த அமைப்பு தீவிரமாகச் செயல்படுகிறது. சீக்கியர் கொலையைத் தொடர்ந்து, அமெரிக்காவில், காலிஸ்தான் ஆதரவுத் தலைவரும், அமெரிக்கா - கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்றவருமான குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவரைக் கொலைசெய்யச் சதித்திட்டம் நடைபெற்றதாக, அமெரிக்கா கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தது.Sikhs for Justice (SFJ)-யின் பொது ஆலோசகர் குர்பத்வந்த் சிங்

அந்தச் சதித்திட்டத்தில், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை உள்ளிட்ட பொறுப்புகளை வகிக்கும் இந்திய அரசு ஊழியர் நிகில் குப்தா (52) என்பவரை அமெரிக்கக் காவல்துறை கைதுசெய்து, சிறையில் வைத்திருக்கிறது. இந்த நிலையில், நிகில் குப்தாவின் குடும்பத்தினர், தனிமைச் சிறையில் இருக்கும் நிகில் குப்தா மனித உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டி செக் குடியரசு Czechia நாட்டின் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். அந்த மனுவில், ``கொலை சதித்திட்டம் குற்றச்சாட்டில் தனிமை சிறையில் இருக்கும் நிகில் குப்தா சைவ உணவு உண்பவர் என்று அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும், அவருக்கு மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டன. அதையே உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். பலமுறை அவர் சைவம் எனத் தெரிவித்தும், கடந்த 11 நாள்களாக அவருக்கு உணவு வழங்க மறுத்துவிட்டனர். மேலும், அந்த சிறையில், காவல்துறை அதிகாரிகளால் சித்ரவதை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், உண்ண உணவும் தண்ணீரும் கொடுக்கப்படவில்லை.காவல்துறை

மேலும் இந்தியத் தூதரக அணுகல், இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொள்வதற்கான உரிமை, சட்டபூர்வ பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான சுதந்திரம் ஆகியவையும் மறுக்கப்படுகின்றன. அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்த பிறகே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கிறார்கள். இது எங்களுக்கு வேதனை அளிக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நிகில் குப்தாவுக்குரிய உணவை வழங்க அனுமதித்தார். மேலும், ``குப்தாவின் குடும்பத்தினர் தூதரக அணுகல் மற்றும் வழக்கின் நிலையை அறிய ஐரோப்பிய நாட்டில் உள்ள இந்தியத் தூதருக்கு உத்தரவிட முடியாது. என்றாலும், இந்த வழக்கின் நிலையை அறிய இந்த நீதிமன்றத்தை அணுகவும்" எனத் தீர்ப்பளித்திருக்கிறார்.கோத்தகிரியை ஆட்டுவிக்கும் 3 நம்பர் லாட்டரி விற்பனை - அதிரடிகாட்டும் காவல்துறை!


http://dlvr.it/T0F5lM

Friday, 15 December 2023

சென்னை புத்தகக் காட்சி ஜன. 5-ல் தொடங்குகிறது!

 

சென்னை புத்தகக் காட்சி வரும் ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தொடங்கி, 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா்  சங்கத்தின் (பபாசி) சார்பில் நடத்தப்படும் இந்தப் புத்தகக்  காட்சி, வழக்கம்போல இந்த ஆண்டும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில்  நடைபெறவுள்ளது.

கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/C1yEafJ https://ift.tt/Hqn4y1v
via IFTTT

திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்பு! - புளோரிடா பயணக்கதை-1 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

பயணங்கள் எப்பொழுதுமே இனிமையானவை! அதிலும்,புது இடங்களில் நமது இளவல்கள் இருக்கும் இடங்களுக்குப் பயணிக்கையில் இரட்டைச் சந்தோஷமே!ஒன்று,புது இடங்களைக் கண்டு களிப்பது!இரண்டாவது,இளவல்களுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பது!

இரும்புக் குதிரையில்…அதாங்க,சைக்கிளில் குரங்குப் பெடலில் ஆரம்பித்த பயணம்,பஸ்,கார்,ரயில் என்று வளர்ந்து,இன்று விமானத்தில் வந்து நிற்கிறது.சிறு வயதில் ஓடும் பஸ்ஸில் போவதே உற்சாகமானதாக இருந்தது.ரயிலின் சன்னல் பக்கம் அமர்ந்து,அருகிலுள்ள மரங்கள் தலைதெறிக்கப் பின்னோக்கி ஓடுவதையும்,தூரத்தில் தெரிபவை மெல்ல நம்மை நோக்கி வருவது போலவும் மாயத் தோற்றம் காட்டி,மனதை மகிழ்வித்ததை மறக்க முடியாதே!

மெதுவாக வளர்ந்து விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டி வந்தபோது,விண்டோ பக்கம் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது சுவாரசியம் மிகுந்ததாக இருந்தது.ரன் வேயில் அந்த ராட்சதப்பறவை வேகமெடுக்கும் வேளையில்,இரு பக்கமும் உள்ள நீல விளக்குகள் அசுரவேகத்தில் பின்னோக்கி ஓடுவதைப் பார்க்கையில் உள்ளத்தில் பீறிடும் உற்சாகத்திற்கு அளவே இருக்காது.அது வானத்தில் நிலையாகப் பறக்க ஆரம்பித்ததும்,வீட்டின் உள்ளே இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவதை என்னென்பது!

இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளெல்லாம் மகத்தானவை மட்டுமல்ல!-மனிதனின் மூளை வளர்ச்சிக்குச் சான்று! இதுவே இப்படி என்றால் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஏஐ(AI)இன்னும் என்னென்ன அற்புதங்களை நிகழ்த்தப் போகிறதோ! என்ற ஆவல் நம்மைத் தூங்க விடாமல் செய்கிறது!representational image

ஆகாயத்தில் பறப்பது ஆரம்பத்தில் ஆனந்தம் தரக் கூடியதாகவே இருந்தது.அரை மணி ஒரு மணி நேரப் பயணம் தந்த ஆனந்தம் அளவிடற்கரியது! அப்புறம் அதுவே ஆறு மணி நேரம்,10 மணிநேரம்,18 மணி நேரம் என்று ஆகிய பிறகு ‘பழகப் பழகப் பாலும் புளிக்கும்’என்பது போல,உற்சாகம் குறைய ஆரம்பித்தது.எதிரே இருக்கும் சின்னத்திரையில் திரைப்படங்கள்,விளையாட்டுக்கள்,செய்திகள்,விமான வழி விபரங்கள் என்று ஏகப்பட்டவை இருந்தாலும்,தொடர்ந்து அவற்றையே பார்ப்பது அலுப்பு தரும் நிகழ்வே.பஞ்சுப் பொதியைப்போல் அந்தரத்தில் தொங்கும் மேகக் கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு மேலே போய்விட்டால்,அப்புறம் தெரிவதெல்லாம் நீல வானம் மட்டுமே! சரி! நாம் பயணத்தைத் தொடங்கலாமே!

சென்னை விமான நிலையத்தின் புதிய பன்னாட்டு முனையம் விஸ்தாரமானது.இரவு 9.40 க்குப் புறப்படும் துபாய் விமானத்தில் எங்கள் முதல் பயணம்.சுமார் 4.15 மணி நேரம்.அங்கு இறங்கி,அடுத்து அர்லாண்டோ விமானத்தைப் பிடிக்க 2 மணி நேரம் 20 நிமிட இடைவெளி. அர்லாண்டோ விமானத்தில் ஏறி 15.35 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, அமெரிக்க மண்ணின் அர்லாண்டோவில் கால் பதிக்கலாம்.

சென்னையிலேயே அரை மணி நேரத் தாமதம்.எங்கே அது அடுத்த விமானத்தைப் பிடிப்பதில் சிரமம் ஏற்படுத்தி விடுமோவென்ற பயம் வேறு மனதில்.ஆனாலும் துபாய் விமான நிலையத்தில் உள்ள வீல் சேர் உதவியாளர்கள் மிகவும்உதவி கரமானவர்கள்.

பெரும்பாலானவர்கள் நம் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.எந்தப் பிரதிபலனும் எதிர்பாராது,பொறுப்புடனும்,புரிதலுடனும் பயணிகளுக்கு உதவுபவர்கள்.

அர்லாண்டோ விமானம் களைப்பேயடையாமல் சுமார் 15.30 மணிநேரம் பறந்து,அமைதியான அர்லாண்டோ விமான நிலையத்தில் எங்களை இறக்கி விட,வீல் சேர் உதவியாளர் உதவியுடன் பேக்கேஜ்களை எடுத்துக் கொண்டு ‘போர்ட் ஆப் என்ட்ரி‘ சென்றோம்.எமது அனுபவத்தில் இங்கு மட்டுந்தான் நமது லக்கேஜ்களுடன் போர்ட் ஆப் என்ட்ரி செல்ல வேண்டியிருந்தது. மற்ற எந்த விமான நிலையத்திலும் இந்த முறை இல்லை. பார்மாலிட்டிகளை முடித்துக்கொண்டு அப்புறந்தான் ‘லக்கேஜ் க்ளைம்’ ஏரியாவுக்கே வருவோம்.வீட்டிலிருந்து அரை மணி நேரக் கார்ப்பயண தூரத்தில் டாம்பா விமான நிலையம் இருந்தும்,ஒன்றரை மணி நேரப் பயண தூரத்தில் இருக்கும் இந்த விமான நிலையத்திற்கு வரக் காரணம் உண்டு.Dubai

டாம்பா வரும் விமானங்கள்,ஒவ்வொரு பயணிக்கும் 23 கிலோ லக்கேஜை மட்டும் அனுமதிக்கின்றன.அர்லாண்டோ வரும் விமானங்களோ 46 கிலோ லக்கேஜை எடுத்து வரச் சந்தர்ப்பம் அளிப்பதே இதற்குக் காரணம்.எல்லா விமான நிறுவனங்களும் ஒரே மாதிரியான விதிமுறைகளைப் பின்பற்றினால் பயணிகள் பயன்பெறுவார்களே!

அப்புறம், யாம் கவனித்தவரை,துபாயிலிருந்து புறப்படும் விமானம் நேராக வடக்கே சென்று,வட துருவ எல்லையையடைந்து, கிரீன் லாண்டில் புகுந்து அங்கிருந்து நேராகத் தெற்கு நோக்கிப் பயணித்து அர்லாண்டோவை அடைகிறது.அதாவது தலைகீழான ‘ப’ வடிவிலான பயணம்.துபாயிலிருந்து வடமேற்கு நோக்கி குறுக்காகப் பறந்தால்,பயண நேரத்தில் பாதி குறைவான காலத்திற்குள்ளாகவே அர்லாண்டோவை அடைய முடியும்.அப்படிச் செய்ய முடியாததற்கான காரணங்கள் நிறைய இருக்கலாம்.ஆனாலும் விஞ்ஞான முன்னேற்றங்கள் அதற்கு வழி வகுக்கவில்லையா என்பது எம் மனத்தில் ஊறும் எண்ணம்.விபரம் தெரிந்தவர்கள்தான் விடை பகர வேண்டும்.விரைவில் குறுக்கு வழியில் செல்ல உபாயம் கூற வேண்டும். நேரம்,எரிபொருள்,செலவு என்று அனைத்தும் மிச்சமாகும்.

புளோரிடா, அமெரிக்காவின் தென் கிழக்குக் கடற்கரையில்,மியாமியை உள்ளடக்கிய ஒரு மாகாணம்.உலகின் நம்பர் ஒன் கடற்கரை மியாமி.இரண்டாவது பெரியது நமது சென்னை மெரினா கடற்கரை என்பதில் நமக்கெல்லாம் பெருமையே!அமெரிக்கா,கிழக்கு மேற்கில் வியாபித்துள்ளதால்,ஒரே நாட்டிற்குள் நேர வித்தியாசம் உண்டு.பருவ நிலை மாற்றங்களும் உண்டு.வடக்கிலுள்ள மாநிலங்கள் வாட்டும் குளிரைக் கொண்டவையாக உள்ள நிலையில்,புளோரிடா மாநிலம் ‘Sun Shine State’என்றே அழைக்கப்படுகிறது.

அதாவது ‘சூரிய ஒளி மிளிரும் மாநிலம்!’ இங்கு மிதமான வெப்ப நிலையே ஆண்டு முழுவதும் நிலவுவதால், மற்ற மாநிலங்களில் வசிக்கும் அமெரிக்கர்களே கூட அடிக்கடி இங்கு படையெடுத்து விடுகிறார்கள். தென் இந்தியாவிலிருந்து வந்த பெரும்பாலானவர்கள் இங்குதான் வசிக்கிறார்கள். நம்மூர் பணக்காரர்கள் ஊட்டியிலோ அல்லது கொடைக்கானலிலோ ஒரு வீடு வைத்திருப்பதைப்போல இங்குள்ள பலரும் புளோரிடாவிலும் ஒரு வீடு வைத்துள்ளார்கள் - இதமான பருவ நிலையில் வாழ!அமெரிக்காவின் பல நகரங்கள் பனியில்நடுங்க, புளோரிடாவோ பகலவன் ஒளியில் பாங்காய் மிளிர்கிறது!Florida

நம் சென்னை மாநகரமும்,தற்போது வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதிகளும்கூட எந்த அறிவார்ந்த திட்டமிடலும் இன்றி அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உருப்பெற்று வருவதாலேயே, இயற்கைப் பேரிடர்கள் நம் மக்களைச் சொல்லவொண்ணா துயரத்திற்கு ஆளாக்குகின்றன. இருக்கின்ற நீர் நிலைகளையெல்லாம் மனையாக்கி மாளிகைகளை உருவாக்கி விட்டு, மழைத் தண்ணீர் வந்து விட்டதென்று ஒப்பாரி வைப்பதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை.மாறாக இங்கோ,ஆங்காங்கே செயற்கை நீர் நிலைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.அவற்றில் ‘அலிகேட்டர்’என்றழைக்கப்படும் முதலைகளும் நிறைய வாழ்கின்றன.நம் கண்களுக்கும் அடிக்கடி விருந்து படைக்கின்றன.

பெரிய வீடுகளாயினும்,திட்டமிடப்பட்டு ஒரே உயரத்துடன் ஓர் ஒழுங்குடன் கட்டப்பட்டிருப்பதே அழகாய் இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் 2 கார்கள் வைத்திருந்தாலும் பார்க்கிங் வசதிகளுக்கும், கரேஜ்களுக்கும் பஞ்சமில்லை..

சென்னைவாசிகளைப் போல் கார்களை வாங்கிச் சாலைகளில் பார்க்கிங் செய்யும் வழக்கம் இங்கில்லை! முறையான பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தாமல் கார்களை வாங்கிக் கொள்ள மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு கடன் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.நம் நாடு எப்பொழுதுதான் இவற்றில் கவனம் செலுத்தப் போகிறதோ தெரியவில்லை.

வீடுகளில், ஹாலோவின் திருவிழா தொடங்கி,தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பிறப்பு என்று வரிசையாக வரும் அத்தனை விழாக்களையும் கொண்டாடும் விதமாக மின் விளக்குகளால் அலங்காரம் செய்கிறார்கள். முன்னிரவில் ஒவ்வொரு நாளும் காரில் தெருக்களில் வலம் வந்து, மக்கள் அந்த மின் விளக்கு அலங்காரத்தை ரசிப்பது இங்கு ஒரு வாடிக்கையாக உள்ளது.Florida

விளையும் பயிர் முளையிலே!’என்றொரு பழமொழி நீண்ட காலமாக நம் மண்ணில் உள்ளது.ஆனாலும் சின்னஞ் சிறுவர்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை.இங்கோ…வளரும் குழந்தைகளுக்கென்று நீச்சல்,ஜிம்,தற்காப்பு என்று எல்லாத் துறைகளிலும் ஏகப்பட்ட பயிற்சிகளை அளிக்கிறார்கள். சிறுவர்களுக்கான நம் கல்வி முறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென்றே தோன்றுகிறது.

நம்மூர் திருவிழாக்களைப்போல் இங்கும் விழாக்கள் உண்டு.புத்தாண்டை வரவேற்கும் விதமாக அருகிலுள்ள ‘லார்கா’சிட்டியில் விளக்கு அலங்கார விழா ஒன்றை நடத்துகிறார்கள்.மாலையில் ஆரம்பித்து இரவு 10 மணிக்கு முடிவடையும் இந்த விழா ஏராளமான மக்களை ஈர்க்கிறது.டிசம்பர் மாதம் முழுவதும் இது நடக்குமாம்.வார இறுதி நாட்களில் கூட்டம் அலை மோதுகிறது.பெரிய திடலில் மரங்களுங்கூட ஒளி விளக்குகளில் மிளிர,பொழுது போக்கு விளையாட்டுக்களும்,சிற்றுண்டிக் கடைகள் மற்றும் பல் பொருட்கள் அங்காடிகளுடன் அந்த மைதானமே ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.சிறியவர்களும் பெரியவர்களும்,வயது வித்தியாசமின்றி இங்குள்ள விளையாட்டுச் சாதனங்களில் ஏறி உற்சாகத்தில் மிதக்கிறார்கள்.

நாமும் உற்சாகம் கொள்வோம்! ஏனெனில் அது வெளியே இல்லை.நம் உள்ளேதான் உள்ளது.

-இன்னும் நிறையச் சொல்கிறேன்…

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...



உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.


http://dlvr.it/T09YqK

Wednesday, 13 December 2023

"சர்வதேச நாடுகளின் ஆதரவு இருந்தாலும்... இல்லாவிட்டாலும் காஸா போர் தொடரும்" - இஸ்ரேல் திட்டவட்டம்

கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடங்கியது. இதில் இஸ்ரேல் குடிமக்கள் 1200 பேரும், பாலஸ்தீன குடிமக்கள் 18,500-க்கும் மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், ஐ.நா சபையில் 153 நாடுகளின் ஆதரவுடன் போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஜோ பைடன் - காஸா

ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதற்கிடையில், 4 நாள் போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்தது. அதன் அடிப்படையில், ஹமாஸ் குழு கைது செய்து வைத்திருந்த இஸ்ரேல் பிணைக்கைதிகளையும், இஸ்ரேல், பாலஸ்தீன கைதிகளையும் பரஸ்பரமாக விடுவித்தனர். ஆனால், இன்றளவும் தாக்குதல்கள் தொடர்ந்துவருகிறது.

இந்தப் போரின் ஆரம்பத்தில் 'இஸ்ரேலை உலகின் பெரும்பகுதி ஆதரித்துவருகிறது" எனப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஒருகட்டத்தில், "இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமான குண்டுவெடிப்பால், தாக்குதலால் உலகின் ஆதரவை இழக்கத் தொடங்குகிறது" எனக் கண்டனம் தெரிவித்தார். போர் நிறுத்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கூட்டறிக்கையிலும், "காஸாவில் குடிமக்களுக்கான பாதுகாப்பான இடம் குறைந்து வருவதைக் கண்டு பீதியடைந்துள்ளோம்" என எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன.காஸா

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். ஐ.நா-வின் தகவலின்படி, பாலஸ்தீனத்தின் 2.4 மில்லியன் மக்களில் 1.9 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். பாதுகாப்பற்ற இடங்களில் பிளாஸ்டிக் கவர்களால் கூடாரங்களை அமைத்துத் தங்கிவருகிறார்கள். நாளொன்றுக்கு சுமார் 100 உதவி வாகனங்களிலிருந்து மட்டுமே அவர்களுக்கான அடிப்படைத் தேவைக்கானப் பொருட்களைப் பெறுகிறார்கள்.

காஸாவில் 60 சதவிகித தகவல் தொடர்பு உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டிருக்கிறது. சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இணையில்லாத சேதத்தை இஸ்ரேல் ஏற்படுத்தியிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

மத்திய காஸாவில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் மைதானத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் முகாமிட்டிருக்கிறார்கள். கடும் குளிரிலும், மழையிலும், குழந்தைகளுடனும், போரால் ஏற்பட்ட காயங்களுடனும், போதிய மருத்துவச் சிகிச்சையோ, மருந்தோ, உணவோ, தண்ணீரோ இல்லாமல் தவித்து வருகிறார்கள். குழந்தைகளுக்கான தடுப்பூசிகளும் தீர்ந்துவிட்டதாக காஸா சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.வடக்கிலிருந்து தெற்கு காஸா நோக்கிப் பயணப்படும் பாலஸ்தீனர்கள்

தொடர்ந்து ஒலிக்கும் சைரன் சப்தத்தால் பதற்றத்துடன் நாட்களை நகர்த்துகிறார்கள். இதைத் தொடர்ந்து, உலக வங்கி நடத்திய ஆய்வில், "காஸாவில் உயிர் இழப்புகளின் எண்ணிக்கையின் வேகமும், சேதங்களின் அளவும் தொடர்ந்து இணையற்ற அளவில் அதிகரித்து வருகிறது" என எச்சரித்திருக்கிறது.

ஐ.நா-வின் செயற்கைக்கோள் பகுப்பாய்வு நிறுவனமான UNOSAT,'காஸாவின் உள்கட்டமைப்பில் 18 சதவிகிதம் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுப்பாய்வு இரண்டு வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட விண்வெளிப் புகைப்படத்த அடிப்படையாகக்கொண்டது' எனக் குறிப்பிட்டும் எச்சரித்திருக்கிறது.

இந்த நிலையில், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன் (Eli Cohen)," எங்களின் முக்கியக் கூட்டாளிகள் எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும், சர்வதேச ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஹமாஸுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடரும். தற்போதைய நிலையில் போர்நிறுத்தம் என்பது பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கு ஒரு பரிசாகும். அதனால், அது திரும்பவும் இஸ்ரேலில் வசிப்பவர்களை அச்சுறுத்த வாய்ப்பிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கணவர், குழந்தையுடன் உயிரிழந்த உலக சுகாதார அமைப்பின் ஊழியர்; WHO இரங்கல்!


http://dlvr.it/T06p7c

Monday, 11 December 2023

சிறையில் இருக்கும் நர்கேஸ் முகமதி; அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக்கொண்ட பிள்ளைகள்..!

இரான் பெண்களின் உரிமைக்காக அந்நாட்டின் அரசை எதிர்த்துப் போராடி சிறையில் அடைக்கப்பட்டவர், நர்கேஸ் முகமதி.

வாழ்நாளில் பத்துக்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு, டெஹ்ரானின் எவின் சிறைச்சாலையில் 2012 முதல் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.பர்தாஇந்தியாவில் பாதுகாப்பான நகரம் கொல்கத்தா; தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பட்டியலில் இடம்!

இவர் சிறையில் இருக்கும் நிலையில் அமைதிக்கான நோபல் பரிசை பாரிஸில் இருக்கும் முகமதியின் டீனேஜ் பிள்ளைகள் அலி, கியானா மற்றும் முகமதியின் கணவர் தகி ரஹ்மானி டிசம்பர் 10 அன்று பெற்றுக் கொண்டனர்.

இந்த விருது நார்வே ஓஸ்லோவின் சிட்டி ஹாலில் வழங்கப்பட்டது. விழாவில் ஒரு நாற்காலி நர்கேஸ் முகமதிக்காக காலியாக விடப்பட்டது. அந்த நாற்காலியில் முகமதியின் உருவப்படம் காட்டப்பட்டது.

122 ஆண்டுக்கால அமைதிக்கான நோபல் பரிசு வரலாற்றில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, இந்த விருதைப் பெறும் ஐந்தாவது நபர் முகமதி என்று கூறப்படுகிறது.   

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் தாயைக் கடைசியாகப் பார்த்த கியானா கூறுகையில், `ஒருவேளை நான் என் அம்மாவை 30 அல்லது 40 ஆண்டுகளில் பார்க்கலாம். ஆனால், நான் அவரை மீண்டும் பார்க்க மாட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் அது ஒரு பொருட்டல்ல, ஏனென்றால் என் அம்மா எப்போதும் என் இதயத்திலும் என் குடும்பத்திலும் வாழ்வார்.

`இரானிய மக்கள் தங்கள் விடாமுயற்சியின் மூலம் தடைகளையும் சர்வாதிகாரத்தையும் அகற்றுவார்கள்’ எனச் சிறையின் உயரமான குளிர்ந்த சுவர்களுக்குப் பின்னால் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார் என்று கூறி இருக்கிறார்.கியானா, அலி மற்றும் அவர்களது தந்தை தாகி ரஹ்மானி!அமைதிக்கான நோபல் பரிசு: ``வெற்றி நிச்சயம் கிடைக்கும்” சிறையிலிருந்து நர்கஸ் முகமதி எழுதிய கடிதம்...

முகமதியின் மகன் அலி, `சிறுவயதிலிருந்தே குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்வதை ஏற்றுக்கொண்டேன். ஆனால், அவரை மீண்டும் பார்ப்பேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாங்கள் அவரை மீண்டும் பார்க்கவில்லை என்றால், நாங்கள் எப்போதும் அவரை பற்றி பெருமைப்படுவோம், மேலும் எங்கள் போராட்டத்தைத் தொடர்வோம்’ என்றார். 

முகமதியின் கணவர் தகி ரஹ்மானி, `அவரின் நிலைமை மிகவும் கடினமாக இருந்தாலும் கூட, இந்த விருது அவருக்குப் பெரிய குரலைக் கொடுக்கும்.

இது ஓர் அரசியல் பரிசு; எனவே நர்கேஸ் மீது அதிக அழுத்தம் இருக்கும். ஆனால், அதே நேரத்தில் இது மக்களின் குரலை எதிரொலிப்பதற்கான இடத்தை உருவாக்கப் போகிறது’ என்றார்.

போரட்டம் வெற்றி பெறட்டும்!


http://dlvr.it/Szzlcf

Thursday, 7 December 2023

``முகத் தசைகள் செயலிழக்கும் பாதிப்பு" - ஹாலிவுட்டில் இருந்து விலக ஏஞ்சலினா ஜோலி முடிவு..!

ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி முகத்தில் உள்ள தசைகள் செயலிழக்கும் முகவாதத்தால் (Facial Paralysis) தான் அவதிப்பட்ட சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். 

48 வயதாகும் ஏஞ்சலினா ஜோலி, நடிகரும், கணவருமான பிராட் பிட்டை 2016-ல் சட்டபூர்வமாகப் பிரிந்தார். விவாகரத்துக்குப் பிறகும் ஆறு குழந்தைகளின் கஸ்டடி குறித்து நீண்ட காலமாகவே இவர்களுக்குள் சட்டபூர்வ தகராறு இருந்தது.  Brad Pitt.``பசியில தவிக்கிற மக்களைப் பார்த்து கண்ணீர் முட்டுது" - டான்ஸ் மாஸ்டர் கலாவின் மனித நேயம்..!

தனது உடல்நல சிக்கல்  குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழில் பேசியுள்ள ஏஞ்சலினா ஜோலி, ``மன அழுத்தம் எனது உடலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனது உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகி குறைந்தது.

விவாகரத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு `Bell’s palsy’ என்றழைக்கூடிய முகத்தில் உள்ள தசைகள் செயலிழக்கும் முக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டேன். 2016-ம் ஆண்டிலிருந்து குழந்தைகள், திரைப்படத் திட்டங்களில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அதன்பின் நான் டேட்டிங் செய்யவில்லை, சோஷியல் வாழ்க்கையிலும் குறைவாகவே ஈடுபட்டேன். 

என் குழந்தைகளுடன் மட்டுமே நேரத்தைச் செலவிடுகிறேன். அவர்கள் எனக்கும் என் வாழ்க்கைக்கும் மிக நெருக்கமானவர்கள், அவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர்கள், இதுவே எங்கள் பலம். 

என் குடும்பத்தினரைத் தவிர, என் நெருங்கிய நண்பர்கள் அகதிகள். நான் நெருங்கிப் பழகும் ஆறு பெண்களில் நால்வர் போரை எதிர்கொண்டவர்கள்.விவாகரத்து... கொண்டாடப்பட வேண்டியதா?

வாழ்வதற்கும் தனியாகப் பயணம் செய்வதற்குமான எனது திறனில் விவாகரத்து தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் ஆழமற்ற இடத்தில் (shallow place) வளர்ந்தேன். ஹாலிவுட் ஆரோக்கியமான இடம் அல்ல. எனவே நீங்கள் நம்பகத்தன்மையைத் தேடுங்கள். இந்தத் துறையின் ஆழமற்ற தன்மையிலிருந்து விலகிச் செல்ல விரும்புகிறேன்’’ என்று கூறியுள்ளார். 


http://dlvr.it/SzsMFg

ஹண்டர் பைடன்: வரி ஏய்ப்பு செய்த அமெரிக்க அதிபரின் மகன்?! - தொடர் குற்றச்சாட்டுகளால் சிக்கலில் பைடன்

அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பலமுனை போட்டிகளையும் எதிர்கொண்டு வருகிறார். இதற்கிடையில், உலகளவில் பல சலசலப்புக்கும் பெயர்போனவராகவே வலம் வருகிறார். இந்த நிலையில், தற்போது அவரது மகன் ஹண்டர் பைடன் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்.

ஜோ பைடனின் மகனான ஹண்டர் பைடன் ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞர். அவரின் தனிப்பட்ட ஈடுபாட்டால் பரப்புரையாளர்-கலைஞராக மாறினார். ஆனால், குடிப்பழக்கம், கோகோயின் போதைப் பழக்கத்தால் அவரது வாழ்க்கை சிதைந்ததாகக் கூறப்படுகிறது.ஹண்டர் பைடன்

இதற்கிடையில், சிறப்பு ஆலோசகர் டேவிட் வெயிஸ், அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 56 பக்க குற்றப்பத்திரிகையில், ``ஹண்டர் பைடன் 2016 - 2020 வரை 7 மில்லியனுக்கும் அதிகமான டாலர் சம்பாதித்ததாகவும், இந்தப் பணத்தைப் போதைப்பொருள், எஸ்கார்ட், தோழிகள், சொகுசு ஹோட்டல்கள், வாடகை பொருள்கள், கவர்ச்சியான கார்கள், ஆடைகள் என ஆடம்பரமாக செலவழித்துள்ளார். ஆனால், 2016 - 2019 வரையிலான ஆண்டுகளில் செலுத்த வேண்டிய குறைந்தபட்சம் 1.4 மில்லியன் டாலர் வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கிறார்" குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக 9 குற்றச்சட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்குக்கு முன்னர் 2018-ம் ஆண்டில் 38-காலிபர் கோல்ட் கோப்ரா ரிவால்வரை வாங்கியது தொடர்பாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதும், அது விசாரணையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கட்சி தேர்தலுக்கான களத்தைத் தயார் செய்துகொண்டிருக்கும்போது, அவரது மகன் மீதான தொடர் குற்றச்சாட்டுகள் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
`ஹமாஸ் மீது நம்பிக்கையில்லை... நெருக்கடிக்குப் பயந்தே பிணைக்கைதிகளை விடுவிக்கிறது!' - ஜோ பைடன்


http://dlvr.it/SzsM37

Tuesday, 5 December 2023

வட கொரியா: ``அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்!" - உணர்ச்சிவசப்பட்டு அழுத கிம் ஜாங் உன்

வடகொரியாவில் 1970 முதல் 1980 காலகட்டங்களில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1990- களில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தால் வடகொரியாவில் மக்கள் தொகை கணிசமான அளவு குறைந்தது. அதற்குப் பிறகு, மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு வீட்டு வசதிகள், மருத்துவ உதவிகள், கல்வி மற்றும் உணவு போன்றவை இலவசமாக வழங்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்

ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் அறிக்கையின் படி, 2023-ம் ஆண்டு வரை, வட கொரியாவின் கருவுறுதல் விகிதம் 1.8 எனக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், வட கொரியாவின் சில அண்டை நாடுகளைக் கவனிக்கும் போது இது அதிகம். குறிப்பாக தென் கொரியாவின் கருவுறுதல் விகிதம் கடந்த ஆண்டு 0.78 என்றும், ஜப்பானின் கருவுறுதல் விகிதம் 1.26 எனவும் குறைந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பியாங்யாங்கில் தேசிய தாய்மார்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன், "என் அன்புத் தாய்மார்களே... நமது நாட்டின் பிறப்பு விகிதம் குறைவதைத் தடுப்பதும், குழந்தைகளை நல்லமுறையில் பராமரிப்பதும் நமது அடிப்படை கடமைகள். எனவே, ஆரோக்யமான குழந்தைகளை வளர்ப்பதும், அவர்கள் மூலம் நமது கருத்துக்களை உறுதியாக முன்னெடுத்துச் செல்வதின் தேவையும் அதிகரித்திருக்கிறது.ரஷ்ய அதிபர் - வடகொரிய அதிபர்

சமீபகாலமாக அதிகரித்து வரும் சோசலிசமற்ற பழக்கவழக்கங்களை ஒழித்து, குடும்ப நல்லிணக்கம், சமூக ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும். அதன் மூலம், பண்பாடு, ஒழுக்கம் நிறைந்த வாழ்விற்கான சிறந்த வழியை உருவாக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் உதவி, முன்னோக்கிச் செல்வதும் அவசியம். எனவே, நமது நாட்டில் குறையும் பிறப்பு விகிதத்தைத் தடுத்து, குழந்தைகளை நன்றாகக் கவனித்து, அவர்களுக்குத் தேவையான கல்வி வசதிகளை ஏற்படுத்தித் தருவதே நமது முக்கிய கடமையாகும்" எனக் கூறி, கண்ணீர் விட்டு அழுதார். அதைப் பார்த்த மற்றப் பெண்களும் கண்கலங்கினர்.

Kim Jong Un just started crying on national TV because people are not having enough babies pic.twitter.com/IJd3u2M6An— Matt Wallace (@MattWallace888) December 5, 2023




இதற்கு முன்னர் இதே கோரிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் தனது நாட்டு மக்களுக்கு முன்வைத்தார் என்பது குறிப்பிடதக்கது. ``ரஷ்யப் பெண்கள் 8 குழந்தைகள் வரை பெற்று, பெரும் குடும்பத்தை உருவாக்க வேண்டும்!" - புதின் வேண்டுகோள்


http://dlvr.it/SzmMQK

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை மிகவும் அவசியம்: ஆம் ஆத்மி

அதிகரித்துவரும் விலைவாசி, வேலையின்மைப் பிரச்னைகளுக்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது  என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதி தில்லியில் வரும் டிச. 6 ஆம் தேதி, புதன்கிழமை இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போன்றோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இயலாதெனத் தெரிவித்துள்ள நிலையில் ஒற்றுமைக்கான அழைப்பை ஆம் ஆத்மி விடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான உத்திகள் தொடர்பாக விவாதிப்பதற்காகக் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து, மூன்றாவது வாரத்தில் அடுத்த சுற்றுக் கூட்டம் நடைபெறும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்குமா என்று கேட்டபோது, அனேகமாகக் கூட்டம் ஒத்திவைக்கப்படலாம். இதுவரையிலும் தகவலேதுமில்லை. ஆனால், ஒனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதில் ஆம் ஆத்மி உறுதியாக இருக்கிறது என்று கட்சியின் எம்எல்ஏ துர்கேஷ் பாதக் தெரிவித்துள்ளார்.



from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/68N3LTG https://ift.tt/dw1Aang
via IFTTT

Monday, 4 December 2023

மிக்ஜம் புயல்... 90% மாநகரப் பேருந்துகள் நிறுத்தம்

சென்னை: சென்னையில் பெய்த பலத்த மழையால் திங்கள்கிழமை மாலை நேரத்துக்குப் பிறகு 90 சதவீத மாநகரப் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்தே தொடா்ந்து பலத்த மழை பெய்து வந்ததால் பெரும்பாலான இடங்களில் மழைநீா் தேங்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மாநகரப் பேருந்து ஓட்டுநா்கள் தங்கள் பணிகளுக்கும், பணி முடித்தவா்கள் தங்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இது ஒருபுறமிருக்க 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை விடப்பட்டிருந்ததாலும், பலத்த மழை தொடா்ந்து பெய்ததாலும், பேருந்துகளில் பயணிப்பவா்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. எனவே, காலை முதல் மாலை வரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் குறைவான பேருந்து சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டன. குறிப்பாக பிரதான சாலைகளில் வெகு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

இந்த சேவையும் பிற்பகலுக்குப் பிறகு படிப்படியாக குறைக்கப்பட்டு, மாலையில் 90 சதவீதம் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. மழை தொடா்ந்து பெய்து வருவதால் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்குமாறு ஓட்டுநா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து மழை பாதிப்புகள் சரி செய்யப்பட்ட பின்னா், செவ்வாய்க்கிழமை காலை முதல் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் எனவும், தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/68N3LTG https://ift.tt/JDHh7TF
via IFTTT

இன்று (டிச.5) ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணைப் படி மெட்ரோ ரயில் இயக்கப்படும்

சென்னை: மிக்ஜம் புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச.5) ஒரு நாள் மட்டும் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணைப் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை (டிச.5) காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 முதல் 10 மணி வரை 10 நிமிஷங்கள் இடைவெளியிலும், மதியம் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிஷங்கள் இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிஷங்கள் இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/68N3LTG https://ift.tt/Kg0OEdq
via IFTTT

மிக்ஜம் புயல்...சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு கூடுதலாக குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம்

 

மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்கென சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு கூடுதலாக மூத்த குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிக்ஜம் புயல் திங்கள்கிழமை பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில் சென்னைக்கு வடக்கு வடகிழக்கில் சுமார் 100 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து 5.12.23 செவ்வாய்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு மூத்த குடிமைப் பணி அதிகாரியும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு குடிமைப் பணி அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத மழை பொழிவு ஏற்பட்டுள்ளதால்,புயல் கரையைக் கடந்த பிறகு உடன் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தவும், மழை நீர் விரைவில் வடிவதை உறுதி செய்யவும், வெளி மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கில் சிறப்பு பணிக்கென வரவழைக்கப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களின் பணியினை ஒருங்கிணைக்கவும், சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு களத்தில் பணிபுரிந்து வரும் குடிமைப் பணி அதிகாரிகளுடன் கூடுதலாகப் பின்வரும் மூத்த குடிமைப் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மண்டலங்களின் வாரியாக பெயர் மற்றும் பதவி கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் மற்றும் பதவி விவரம்:

1. கே.எஸ். கந்தசாமி,மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் டி.ஜெகந்நாதன், ஆணையர், வணிகவரித் துறை.

2. எஸ். திவ்யதர்ஷினி, மேலாண்மை இயக்குநர்,தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம்.

3. சந்தீப் நந்தூரி, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு அரசு தொழில் .வளர்ச்சிக் கழகம் மற்றும் தர்மேந்திர பிரதாப் யாதவ், அரசு முதன்மைச் செயலாளர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை

4. டாக்டர். எஸ். பிரபாகர்,திட்ட இயக்குநர், தமிழ்நாடு நகரப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்.

5. டாக்டர்.கே. விஜய கார்த்திகேயன்,இணை மேலாண்மை இயக்குநர், மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் ஜெ. குமரகுருபரன், செயலாளர், பள்ளிக் கல்வித் துறை

6. பி. கணேசன்,இயக்குநர், நகர ஊரமைப்பு இயக்ககம்

7. டாக்டர். எஸ். சுரேஷ் குமார், முதன்மைச் செயல் அலுவலர் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்.

இதையும் படிக்க | சென்னையைவிட்டு விலகத் தொடங்கியது மிக்ஜம் புயல்!

8. எஸ். பழனிச்சாமி,மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் மற்றும் குமார் ஜயந்த், அரசுகூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை.

9. எம்.பிரதாப், துணைச் செயலாளர், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மற்றும் பூஜா குல்கர்னி,ஆணையர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை.

10. எஸ். அருண்ராஜ், நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு மிண்ணணு கழகம்

11. இ. சுந்தரவள்ளி, ஆணையர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ககன்தீப் சிங் பேடி,முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை.

12. ஏ.கே. கமல் கிஷோர், இயக்குநர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

13. எம்.எஸ். பிரசாந்த்,கூடுதல் இயக்குநர் (பொது) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

14. வி.ஆர். சுப்புலட்சுமி,இணை ஆணையர், வணிக வரித் துறை டாக்டர் தரேஷ் அகமது,  செயலாளர், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை

15. கொ. வீரராகவ ராவ், ஆணையர், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தாம்பரம் மாநகராட்சி மற்றும் ஜான் லூயிஸ், மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்

எஸ். நாகராஜன்,நில நிர்வாக ஆணையர், ஆவடி மாநகராட்சி, ஏ.சண்முக சுந்தரம், போக்குவரத்து ஆணையர், அன்சுல் மிஸ்ரா, உறுப்பினர்-செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்.

மீட்புப் பணிகள் மற்றும் பிற உதவிகளுக்கென 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1913, 25619206/207/208 (சென்னை மாநகராட்சி), 18004254355, 18004251600 (தாம்பரம் மாநகராட்சி) மற்றும் 18004255109ஐ (ஆவடி மாநகராட்சி) தொடர்பு கொள்ளுமாறும், இந்த எண்களைத் தொடர்புகொள்வதில் ஏதேனும் சிரமமிருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 102 மற்றும் 104-ஐ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 



from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/68N3LTG https://ift.tt/7PU2azc
via IFTTT

Saturday, 2 December 2023

ஆடித்தள்ளுபடி தெரியும்... `பிளாக் ஃப்ரைடே’ தள்ளுபடி தெரியுமா? எங்கே... எப்போது?

ஷாப்பிங் செய்பவர்களில் பல ரகம் உண்டு. சிலர் தோன்றும் போதெல்லாம் ஷாப்பிங் செய்வார்கள். சிலர் ஆடி ஆஃபர், தீபாவளி ஆஃபர் என ஆஃபர்களின் போது மட்டும் வாங்குவார்கள். சிலர் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மொத்தமாக பர்ச்சேஸ் செய்பவர்களாக இருப்பார்கள்.

இங்கு மட்டுமல்லாமல் ஆஃபர்களுக்கு பல நாடுகளும் பெயர் வைத்துக் கொண்டாடி வருகின்றனர். மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் ஷாப்பிங் செய்வதற்கு என்று தனியாக `பிளாக் ஃப்ரைடே’ கொண்டாடப்படுகிறது. ஷாப்பிங் லஞ்சப் புயல், ஊழல் சூறாவளி: `ஆவினுக்கு சமாதி கட்டிய பெருமைதான் தி.மு.க-வுக்கு மிஞ்சும்!’

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தின் நன்றி தெரிவிக்கும் தினத்திற்கு (Thanksgiving Day) பிறகு வரும், வெள்ளிக்கிழமை `பிளாக் ஃப்ரைடே’ (Black Friday) என கொண்டாடப்படுகிறது. 

பிளாக் ஃப்ரைடே என்றால் என்ன, நுகர்வோர் மற்றும் பிசினஸ்களுக்கு இதனால் கிடைக்கும் பலன் குறித்து கேட்டபோது ஐடியா பிளஸ் சேர்மன் கிருஷ்ண வரதராஜன் கூறுகையில்,

``மேலை நாடுகளில் தேங்க்ஸ் கிவ்விங் தினத்திற்கு பிறகு வரும் வெள்ளிக்கிழமை பிளாக் ஃப்ரைடே (கருப்பு வெள்ளி) என்று கொண்டாடப்படுகிறது. ஷாப்பிங் செய்ய மக்கள் அதிகமாக கூடும் போது, கட்டுக்கடங்காத கூட்டத்தால் நகரே திணறுவதால் பிளாக் ஃப்ரைடே என்ற பெயர் வந்ததது.கிருஷ்ண வரதராஜன்!பெரிதாகும் காது துளை... இது மட்டும்தான் நிரந்தர தீர்வு!

நம்முடைய நாட்டில் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் எனக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி சிறப்பு விற்பனை, ஆடி ஆஃபர் இவையெல்லாம் ஒன்று போலத் தான். ஆனால், பிளாக் ஃப்ரைடே மற்றும் ஆடி ஆஃபருக்கு சிறிய வித்தியாசம் இருக்கிறது. 

தீபாவளி தினங்களில் நல்ல வியாபாரம் நடக்கும். அதுவே ஆடியில் வியாபாரம் நடப்பதில்லை. அந்த சமயத்தில் ஆஃபர் போட்டால் வியாபாரமாகிறது. நடுத்தர குடும்பத்தில் உள்ள சிலர் தீபாவளிக்குத் தேவையானதை ஆடி ஆஃபரிலேயே வாங்கி விடுவார்கள். ஏனென்றால் தீபாவளியில் விலை அதிகமாகிவிடும். 

வெளிநாடுகளைப் பொறுத்தவரை நம்மை விட அதிக விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்வார்கள். ரியல் ஆஃபர்களை இந்த காலகட்டத்தில் தான் கொடுக்கிறார்கள். இது அப்படியே க்ளியரன்ஸ் சேல் (clearance sale) மாதிரி தான்.

எல்லாவற்றையும் கழித்துவிட்டு புதியதாக ஜனவரியில் இருந்து விற்பனை செய்வது. இதற்காக நிறைய ஆஃபர் அறிவித்து கடையை முழுவதுமாக காலி செய்து, புத்தாண்டில் இருந்து புதியதாக ஸ்டாக் போட்டு வியாபாரத்தைத் தொடங்குவார்கள்.  

தீபாவளியில் மக்கள் எப்படி அதிகம் வாங்குகிறார்களோ அதுபோல அமெரிக்காவில் கிறிஸ்துமஸ்க்காக அதிகம் பர்ச்சேஸ் செய்வார்கள். இதுமட்டுமல்லாமல் அவர்களின் கலாச்சாரத்தில் பிளாக் ஃப்ரைடேக்கு பின் டூருக்கு சென்றுவிடுவார்கள். அந்த விடுமுறையை கழிக்கத் தேவையானது, புத்தாண்டுக்கு தேவையானது என அனைத்தையும் இந்த சீசனிலேயே வாங்கி விடுவார்கள். 

நாம் கிறிஸ்துமஸை  பெரிதாகக் கொண்டாடுவதில்லை, ஆனால் அடுத்து பொங்கல் வருகிறது, இதனைப் பொங்கலுக்கான ப்ரொமோஷனாக வணிகர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆஃபருக்கான சான்ஸாக இப்போது பிசினஸில் பயன்படுத்தி வருகிறார்கள்.

மக்கள் அதிகம் வாங்கும் இத்தருணத்தை பயன்படுத்திக் கொண்டு விற்பனையை மேம்படுத்த வேண்டும் என்று நிறுவனங்கள் பல சலுகைகளை அள்ளி வழங்குகிறது.

என்னை பொறுத்தவரையில் இதை இங்கே `வெள்ளை வெள்ளி' (White Friday) என்று கொண்டாடலாம். எந்தவொரு உள்நோக்கமும் இல்லாமல் கஸ்டமருக்கு வெள்ளை உள்ளதோடு நாம் ஏதாவது கொடுக்க வேண்டும். கொடுக்கும்போது தான் அதிகமாக கிடைக்கும். வாழ்க்கையின் பெருமை பெறுவதில் அல்ல வழங்குவதில் இருக்கிறது.``இதெல்லாம் அலர்ஜி” லிஸ்ட்டை நீட்டிய கஸ்டமர்... டென்ஷனான ரெஸ்டாரன்ட் ஊழியர்..!

வருடம் முழுவதும் பிசினஸில் எனக்கு என்ன கிடைக்கும் என்றே யோசித்து கொண்டிருப்போம். இந்த ஒரு நாளில் `நான் எனது கஸ்டமர்களுக்கு என்ன கொடுக்கப்போகிறேன்' என்று யோசிக்க வேண்டும். இந்த பிளாக் ஃப்ரைடே விற்பனையில் வாடிக்கையாளர்களிடமிருந்து என்ன சம்பாதிக்கலாம் என்று யோசிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசித்தால் நமக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

வாடிக்கையாளர்களைச் சம்பாதிப்பது தான் இதன் நோக்கம். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை சம்பாதித்தால் வணிகத்தில் வளரலாம்.

கஸ்டமர்களுக்கு ஆஃபரில் வாங்குவதால் பணம் மிச்சமாகும், கம்பெனிகளுக்கு பணமாக தேங்கி கிடந்த ஸ்டாக்குள் எல்லாம் விற்று விடுவதால் லாபம் கிடைக்கும். இதனால் வாடிக்கையாளர்கள், வணிகர்கள் என இருவருமே பயனடைகிறார்கள்.

இருந்தபோதும் இன்னும் நம்முடைய ஊர்களில் நகரங்களில் இருப்பது போல பிளாக் ஃப்ரைடே பிரபலமடையவில்லை'' என்று கூறினார்.

நீங்கள் எப்போதெல்லாம் ஷாப்பிங் செய்வீர்கள்?!... கமெண்டில் சொல்லுங்கள்.


http://dlvr.it/SzdPmc

`ஆட்டுக்கு வந்த வாழ்வு'... ஆடுடன் பல நாடுகளுக்கு பயணம் செய்யும் அமெரிக்கத் தம்பதி!

பல நாடுகளைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அப்படிச் சுற்றிப் பார்க்க நேரும் போது, தான் வளர்க்கும் செல்ல பிராணிகளை தங்களது வீட்டிலேயே விட்டுவிட்டு பலரும் செல்வதுண்டு.

அப்படியில்லாமல் அமெரிக்காவின் வட கரோலினாவில் வசித்து வரும் கேட் பேட்டல்ஸ் மற்றும் அவரது கணவர் சாட் தாங்கள் வளர்க்கும் ஆட்டை தங்களது பயணத்தின் போதும் கூட்டிச் செல்கின்றனர். கேட் பேட்டல்ஸ் மற்றும் அவரது கணவர் சாட், ஃபிராங்கி! 70 வயதில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த பெண்... ``குழந்தை இல்லாததால் கேலிக்கு உள்ளானேன்" என உருக்கம்

கேட்டிற்கு நீண்ட நாள்களாக ஆட்டை செல்லப்பிராணியாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவரது நண்பர் டென்னசியில் உள்ள ஒரு பண்ணைக்கு அவளை அழைத்துச் சென்று ஆட்டை பரிசாக அளித்துள்ளார். 

இந்த ஆட்டிற்குச் செல்லமாக `ஃபிராங்கி’ (Frankie) என்ற பெயரும் வைக்கப்பட்டது. வட கரோலினாவின் ஆஷெவில்லில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஃபிராங்கி குழந்தைகளுடன் சேர்த்து ஒரு குடும்ப உறுப்பினராகவே வளர்க்கப்பட்டது. 

அடுத்த வருடத்திலேயே கேட்டின் கணவர் பேட்டல்ஸ் தான் நடத்தி வந்த பாரை (Bar) விற்றுவிட்டார். பிள்ளைகளும் எதிர்காலத்தை தேடி வீட்டை விட்டு சென்றுவிட்டனர்.

அடுத்ததாக என்ன செய்வது, வாழ்வின் அடுத்த அத்தியாயம் என்னவாக இருக்கும்  என யோசித்த இந்த தம்பதி,  பிளான் போட்டு புதிய நகரம் மற்றும் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து பயணம் செய்ய முடிவு செய்துள்ளனர். 

முன்பு இவர்கள் ஒன்றாக டிராவல் செய்யும் போது கூட இந்த சவாலை எதிர்கொள்ளவில்லை. ஏனெனில் இப்போது அவர்களுடன் ஃபிராங்கியும் உள்ளது. ஆடுபெரிதாகும் காது துளை... இது மட்டும்தான் நிரந்தர தீர்வு!

ஃபிராங்கியையும் கூட கூட்டிச் செல்ல முடிவு செய்தவர்கள், வீட்டை விட்டு வெளியேறினர்.

2016-ல், 1976 மாடல் செகண்ட் ஹாண்ட் டிராவல் வாகனத்தை (Airstream Argosy) வாங்கினர். வாகனத்தை அழகாக தங்களுக்கேற்றாற் போல மாற்றி பெயின்ட் அடித்து தங்குவதற்கேற்ப வசதிகளை அதில் செய்துகொண்டு தங்களது பயணத்தைத் தொடங்கினர்.    

குறைந்தபட்சம் 25 மாநிலங்கள் மற்றும் 50,000 மைல்கள் பயணித்துள்ளனர். தென்மேற்கு, மத்திய மேற்கு, மொன்டானா, வயோமிங் மற்றும் இடாஹோ போன்ற பாலைவனங்களுக்குப் பயணம் செய்துள்ளனர். போகும் இடங்களுக்கெல்லாம் தங்களது ஆட்டையும் கூட்டிச் செல்கின்றனர். சிறிது காலத்திற்கு பின் வீட்டையும் விற்றுவிட்டனர்.

`` ஃபிராங்கி ஒரு சிறந்த பயண நண்பர். அவள் பயணத்தை எவ்வளவு சிறப்பாகச் செய்யப் போகிறாள் என்று எங்களுக்குத் தெரியாது. பயணத்தை தொடங்கும்போது, அவள் உடனே அதை ஏற்றுக் கொண்டாள். இவளுக்குக் கண்டங்களைத் தாண்டிய ஃபாலோவர்கள் சமூக வலைதளங்களில் உண்டு.

இருப்பினும், செல்லப்பிராணியுடன் பயணம் செய்வது, குறிப்பாகச் செல்லப்பிராணி ஆடாக இருக்கும் பட்சத்தில் சில சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஃபிராங்கி மனஅழுத்தம் போக்கும் செல்லப்பிராணி வளர்ப்பு... மருத்துவர் விளக்கம்!

 ஃபிராங்கிக்கு இடமளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காகச் செல்லப்பிராணி நட்பு இடங்கள், முக்கியமாக உணவகங்கள், பார்கள் மற்றும் ஹைகிங் பாதைகள் போன்றவற்றை ஆய்வு செய்வதில் அதிக நேரம் செலவிட வேண்டி உள்ளது. ஆடுகளை அனுமதிக்காத இடங்களில் இருந்து நாங்கள் திரும்பி விடுவோம்’’ என்று கேட் கூறியுள்ளார். 

`ஆட்டிற்கு வந்த வாழ்வென' பலரும் இதனை கண்டு வியந்து வருகிறார்கள்! உங்களுக்கு என்ன தோன்றுகிறது?!... கமெண்டில் சொல்லுங்கள்.


http://dlvr.it/Szc7gm