Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, 31 January 2023

உக்ரைன் போர்: "நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால்; 24 மணி நேரத்தில்..!'' - டொனால்டு ட்ரம்ப்

2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் தோல்வியடைந்தார். அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றார். ட்ரம்ப் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து, ட்ரம்ப் சமூக வலைதளங்கள் மூலம் வெறுப்பை விதைப்பதாகக் கூறி, அவரின் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டன. மேலும், 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்காக டொனால்டு ட்ரம்ப் தயாராகிவருகிறார். அமெரிக்காவின், கொலம்பியாவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், உக்ரைன் - ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் நிறுத்தியிருப்பேன். சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் போர் நடக்காமல் செய்திருப்பேன்.ரஷ்யா - உக்ரைன் போர் தற்போதும் பேச்சுவார்த்தையின் மூலம் போரை நிறுத்த முடியும். ஆனால், இங்கு அதைச் செய்ய யாரும் இல்லை. தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பலவீனத்தாலும், திறனற்ற ஆட்சியாலும் நாம் மூன்றாம் உலகப் போரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். அவர் நம்மை மூன்றாம் உலகப் போரின் விளிம்புக்குக் கொண்டுவந்துவிட்டார். நான் அதிபரானால் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 24 மணி நேரத்துக்குள் அமைதி ஒப்பந்தம் செய்து காட்டுவேன்" என்றார். கடந்த வாரம், டொனால்டு ட்ரம்ப் இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்குக் கோரிக்கை வைக்கும்விதமாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அதில், "ரஷ்யா - உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவாருங்கள்... அதை விட்டுவிட்டு, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதால், போர் அடுத்தகட்டத்துக்குத்தான் செல்லும்" என்று பதிவிட்டிருந்தார். அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையில் `ட்ரம்ப் சுவரை' கடக்க முயன்ற குஜராத் நபர் பலி; போலீஸ் விசாரணை!
http://dlvr.it/Shj9JZ

Monday, 30 January 2023

அமெரிக்கா: போலீஸாரால் தாக்கப்பட்டு இறந்த கறுப்பின இளைஞர்; கொதித்துப் போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

அமெரிக்காவில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, கறுப்பின இளைஞர் ஒருவர் ஐந்து போலீஸாரால் சரமாரியாகத் தாக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸாரால் உயிரிழந்த கறுப்பின இளைஞர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து போலீஸாரும் கறுப்பினத்தவர்கள்தான். இது தொடர்பாக வெளியான தகவலின்படி, ஜனவரி 7-ம் தேதியன்று அமெரிக்காவின் மெம்ஃபிஸ் நகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக டயர் நிக்கோல்ஸ் (Tyre Nichols) எனும் கறுப்பின இளைஞரை மடக்கிப்பிடித்த டடாரியஸ் பீன், டெமட்ரியஸ் காலி, எம்மிட் மார்டின், டெஸ்மாண்ட் மில்ஸ் ஜூனியர், ஜஸ்டின் ஸ்மித் ஆகிய ஐந்து போலீஸார், அவரைத் தாக்கத்தொடங்கினர். வலி தாங்கமுடியாமல், கதறிய டயர் நிக்கோல்ஸை போலீஸார் இன்னும் சராமரியாகத் தாக்கினர். இதில் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு போலீஸாரால் தாக்குதலுக்குள்ளான டயர் நிக்கோல்ஸ், ஜனவரி 10-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.கறுப்பின இளைஞரைத் தாக்கிக் கொன்ற ஐந்து அமெரிக்க போலீஸார் இந்த நிலையில், டயர் நிக்கோல்ஸின் மரணத்துக்கு நீதிவேண்டி அமெரிக்காவில் ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதேசமயம், டயர் நிக்கோல்ஸை போலீஸார் தாக்கும் வீடியோ அவர்கள் அணிந்திருந்த போலீஸ் உடை கேமராவில் பதிவாகியிருக்கிறது. அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது. அந்த வீடியோவில் டயர் நிக்கோல்ஸ் `அம்மா' எனக் கதறும் காட்சி பலரையும் பதறவைக்கிறது. Riots breaking in US right now. US police in Memphis brutally murdered Tyre Nichols, a black man (not related to Brian Nichols), killed while calling for his mom. The US is a police state & likes of @SenateForeign don’t care about you Africans. Where is @PastorEvanLive ? pic.twitter.com/l8DS2R7L2k— Mhofu (@mhofela_mhofu) January 28, 2023 இதற்கிடையில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஐந்து அதிகாரிகளும் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது போன்ற சம்பவம் நிகழ்வது இது முதன்முறையல்ல. ஏற்கெனவே 2020-ல் ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பினத்தவர் போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கறுப்பின மனிதர் மீது துப்பாக்கி சூடு :இறக்கும் தருவாயை வீடியோவாக வெளியிட்ட தோழி!
http://dlvr.it/ShfH8R

Sunday, 29 January 2023

காவல் அதிகாரிகள்மீது கொலை வழக்கு முதல் ஜோகோவிக் வேதனை வரை... உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

வடக்கு சோமாலியாவில் அமெரிக்க சிறப்பு நடவடிக்கைக் குழுவால் அந்த நாட்டின் முக்கிய இஸ்லாமிய அமைப்பு அதிகாரியும், 10 பயங்கரவாதச் செயற்பாட்டாளர்களும் கொல்லப்பட்டதாக பைடன் அரசு அறிவித்தது. கொல்லப்பட்ட அதிகாரி உலகளாவிய பயங்கரவாத அமைப்பின் முக்கிய நிதி உதவியாளர் பிலால் அல்-சூடானி என்று கூறப்படுகிறது. டயர் நிக்கோல்ஸ் என்ற ஆப்ரிக்க அமெரிக்க வாகன ஓட்டிக்கும், போக்குவரத்து நிறுத்தத்தின்போது அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது காவலர்களால் அவர் அடித்துக்கொல்லப்பட்டார். இந்த நிலையில், ஐந்து காவல் அதிகாரிகளின்மீது கொலை வழக்கு பாய்ந்திருக்கிறது. முஸ்லிம்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து கனடா, இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான தனது முதல் சிறப்புப் பிரதிநிதியை நியமித்திருக்கிறது. பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் அமிரா எல்கவாபி இஸ்லாமியத்துக்கு எதிரான வெறுப்பைத் தவிர்க்கும் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கொடிய ஆயுதப் படைகளின் (CAF) பட்டியலிலிருந்து உக்ரைனுக்கு நான்கு போர் டாங்கிகளை வழங்குவதாக கனடா பாதுகாப்புத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் அறிவித்திருக்கிறார். இந்த டாங்குகளின் பயன்பாடு குறித்த பயிற்சியும் அளிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார். இந்திய-அமெரிக்க விண்வெளி வீரர் ராஜா சாரியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமானப்படை பிரிகேடியர் ஜெனரல் பதவிக்குப் பரிந்துரை செய்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. ராஜா சாரி தற்போது க்ரூ-3 கமாண்டராக டெக்ஸாஸ் விண்வெளி மையத்தில் பணிபுரிந்துவருகிறார். சமீபத்தில் ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்திலுள்ள ஆர்வலர்களால் இஸ்லாத்தின் புனித நூலான குரான் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து, பாகிஸ்தான், ஈராக் மற்றும் லெபனான் உட்பட பல இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது. ஜெருசலம் ஆலயத்துக்கு வெளியே ஒரு பாலஸ்தீன நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் வெஸ்ட் பாங்கில் பாலஸ்தீனர்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டதையடுத்து, 21 வயது நபர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தகவல் பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிக், ஆஸ்திரேலியா ஓபனில் தன் தந்தை, ரஷ்ய அதிபர் புதின் முகமுடைய கொடியைப் பிடித்து போஸ் கொடுக்கும் படங்கள் தவறாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் கராச்சியின் கெமாரி பகுதியில் மர்மமான நோயால் 18 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. இதில் 14 பேர் குழந்தைகளே. இறப்புக்கான காரணங்களை அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.
http://dlvr.it/ShcBgp

Saturday, 28 January 2023

4,300 ஆண்டுகள் பழைமையான மம்மி கண்டெடுப்பு|சீனா: கோவிட் மரணங்கள் குறித்து புது தகவல்- உலகச் செய்திகள்

2023-ம் ஆண்டு தொடங்கிய பிறகு, சீனாவில் கோவிட் பாதிப்பு மரணங்கள் 80 சதவிகிதம் அளவுக்குக் குறைந்திருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர். ஜப்பானில் கப்பல் ஒன்று மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். இதில் 6 பேர் சீனர்கள். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF ) அதிகாரிகள், பாகிஸ்தானின் ஒன்பதாவது நிதியளிப்பு மறு ஆய்வுக்காக இந்த மாத இறுதியில் பாகிஸ்தான் செல்லவிருக்கின்றனர். ஜானவி கந்துலா என்ற 23 வயது இந்தியப் பெண் அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதியதில் பலியானார். இந்திய வாம்சாவளியைச் சேர்ந்த கணேஷ் தாகூர் என்பவர், டெக்சாஸ் அகாடமி ஆஃப் மெடிசின், இன்ஜினீயரிங், சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் (TAMEST) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜெர்மன் சாஃப்ட்வேர் நிறுவனமான எஸ்.ஏ.பி இந்த ஆண்டு 3,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு அருகில் 4,300 ஆண்டுகள் பழைமையான மம்மி, ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இது உலகின் மிகப் பழைமையான மம்மியாக இருக்கக் கூடும் என்கிறார்கள். வரலாறு காணாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு, 255-ஆகக் குறைந்திருக்கிறது. வெஸ்ட் பாங்க் பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில், ஒன்பது பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் வெற்றிவாய்ப்பை இழந்தது இந்தியாவின் சானியா மிர்சா - போபண்ணா ஜோடி.
http://dlvr.it/ShZBGx

Friday, 27 January 2023

”இந்த விஸ்வாசம் அவங்களுக்கே இல்லாதப்போ” - லே ஆஃபால் கடுப்பான லிங்க்ட் இன் பயனர்!

2023ம் ஆண்டு தொடங்கிய 20 நாட்களுக்குள்ளேயே உலகின் 153 நிறுவனங்களில் இருந்து கிட்டத்தட்ட 50,000க்கும் மேலான ஊழியர்கள் பணி நீக்கப்பட்டிருக்கிறார்கள். இது உலகளவில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதோடு அபாய மணியையும் ஒளிக்கச் செய்திருக்கிறது. ஏதோ சிறு, குறு அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மட்டும் இந்த பணிநீக்கம் நடக்காமல் மெட்டா, மைக்ரோசாஃப்ட், கூகுள், ட்விட்டர், அமேசான் என பல முன்னணி டெக் நிறுவனங்களே இந்த அதிரடி லே ஆஃபை மேற்கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், ஃப்ரஷர் அல்லது கடந்த சில ஆண்டுகளில் பணிக்கு சேர்ந்தவர்களை விட ஐ.டி மற்றும் டெக் நிறுவனங்களில் கிட்டத்தட்ட 10 முதல் 20 ஆண்டுகள் வரை பணியாற்றிய மூத்த அதிகாரிகளே பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 21 ஆண்டுகளாக பணியாற்றியவரை திடீரென அந்த நிறுவனம் வேலையை விட்டு தூக்கியிருக்கிறது. அதேபோல கூகுள் போன்ற உச்சத்தில் இருக்கும் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக வேலையில் இருந்தவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல் வெறுமனே மின்னஞ்சல் வழியாக பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருப்பது ஊழியர்களிடையே கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் பலரும் லிங்க்ட் இன் போன்ற தளங்களில் தங்களது உள்ளக்குமுறல்களை கொட்டித் தீர்த்து வருகிறார்கள். அந்த வகையில், அபிஷேக் கண்ட்டி என்பவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தனது லிங்க்ட் இன் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது பேசுபொருளாகியிருக்கிறது. அதில், “வேறு நிறுவனத்தில் வேலைக்கு செல்வதற்காக ஊழியர்களின் விஸ்வாசத்தை மனிதவள மேம்பாட்டு துறையில் இருப்பவர்கள் ஏளனமாக நினைக்கக் கூடாது. நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விஸ்வாசமாக இருக்காத போது ஊழியர்கள் மட்டும் எதற்காக நிறுவனங்களுக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பி அபிஷேக் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவு வைரலாகவே பலரும் அபிஷேக்கின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார்கள். ஏனெனில் HR துறையில் இருப்பவர்களும் மற்ற ஊழியர்களை போன்றவர்களே. அவர்களுக்கு மேலிருக்கும் நிர்வாகத்தின் முடிவால்தான் இந்த ஆட்குறைப்புகள் நடைபெறுகிறது என்றும் தங்கள் தரப்பு கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு, “நான் HR-களை குறை கூறவில்லை. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் விஸ்வாசம் என்பது முற்றிலும் குறைந்து வருகிறது. ஆகவே ஊழியர்களை பணிக்கும் எடுக்கும் போது அவர்கள் வேறு வேலைக்கு சென்றிடுவார்கள் என்பதற்காக மனிதவளத் துறையில் இருப்பவர்கள் புறக்கணிப்பது நல்லதன்று. அவ்வளவேதான்.” என அபிஷேக் விளக்கியிருக்கிறார். ALSO READ:  mass lay off-ல் இணைந்த மியூசிக் நிறுவனம்.. spotify போல ரெஸ்யூம் தயாரித்த பெண்ணும் டிஸ்மிஸ்
http://dlvr.it/ShWTKq

சானிடரி நாப்கின் ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த பரிசு... ஸ்விக்கி கொடுத்த பதில்! வைரல் பதிவு

ஆன்லைன் டெலிவரி பணிகளில் பல நேரங்களில் பல விதமான குளறுபடிகள் நடைபெறுவதும் அது சமூக வலைதளங்களில் வெளிப்படுவதும் உண்டு. அதனூடே சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் வெளிவருவதும் வாடிக்கையே. அந்த வகையில், இந்தியாவின் பிரபல ஃபுட் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஸ்விக்கி, மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் இன்ஸ்டா மார்ட் என்ற சேவையை தனது செயலியில் வழங்கி வருகிறது. அதன்வழியே தற்போது சிந்தனைமிக்க செயல் ஒன்றை செய்திருக்கிறது ஸ்விக்கி நிர்வாகம். அதன்படி சமீரா என்ற பெண் ஸ்விக்கி இன்ஸ்டா மார்ட்டில் சானிட்டரி நாப்கினை ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அவருக்கு அந்த சானிட்டரி நாப்கினுடன் சில சாக்லேட்களும் சில குக்கீஸ்களும் இருந்ததை கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறார். I ordered sanitary pads from @SwiggyInstamart and found a bunch of chocolate cookies at the bottom of the bag. Pretty thoughtful! But not sure who did it, swiggy or the shopkeeper? — Sameera (@sameeracan) January 25, 2023 இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்த பெண், “மிகவும் சிந்தனைமிக்க செயல் இது. ஆனால் இதனை வைத்தது ஸ்விக்கியா அல்லது கடைக்காரர் என தெரியவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த ட்வீட் ட்விட்டரில் இணையவாசிகளிடையே நல்ல கவனத்தையும் பெற்றிருந்த நிலையில், “உங்களுடைய நாள் நன்றாக அமைய வேண்டும் என்பதே எங்களது விருப்பம் சமீரா” என ஸ்விக்கி கேர்ஸ் சார்பில் பதிலும் அளிக்கப்பட்டிருக்கிறது. We just want you to have a pleasant day ahead, Sameera :)^Ashwin — Swiggy Cares (@SwiggyCares) January 25, 2023 இதனிடையே, “யாராக இருந்தாலும் சரி. இது ஒரு நல்ல செயல்” என்றும், “இது அழகான மற்றும் சிந்தனைமிக்க ஒன்று” என்றும் நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.
http://dlvr.it/ShWSsG

3,900 பேரை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம் | ஜப்பானில் கடும் பனிப்பொழிவு - உலகச் செய்திகள்

ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நிறுவனங்களின் பட்டியலில், தற்போது ஐ.பி.எம் நிறுவனமும் இணைந்திருக்கிறது. 3,900 ஊழியர்களை இந்த நிறுவனம் பணிநீக்கம் செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் நேற்றிரவு சரிவர இயங்காததால் பயனாளிகள் சிரமமடைந்தனர்.டொனால்ட் ட்ரம்ப் டொனால்டு ட்ரம்பின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள்மீது விதிக்கப்பட்ட தடையைத் திரும்பப் பெறுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஸ்பெயினில் மர்ம நபர் இரண்டு தேவாலயங்களின்மீது, தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். நேபாளத்தில் நடந்த விமான விபத்தின் கறுப்புப் பெட்டியை, சிங்கப்பூரில் ஆய்வு செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. உக்ரைனுக்கு 14 `லியோபார்ட் 2' ரக டாங்கிகளை ( Leopard 2 tanks) வழங்க ஜெர்மனி முடிவு செய்திருக்கிறது.மரணம் பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 16 பேர் எரிவாயு கசிந்த விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். ஜெர்மனியில் உள்ளூர் ரயிலில் கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஜப்பானில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால், விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. வட கொரியா, தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் கடந்த ஆண்டு எல்லை ஒப்பந்தத்தை மீறியதாக ஐ.நா தெரிவித்திருக்கிறது.
http://dlvr.it/ShWSqM

Thursday, 26 January 2023

கிராண்ட்ஸ்லாம் பட்டத்தோடு ஓய்வுபெறுவாரா சானியா? ஆஸி. ஓபன் தொடரில் பைனலுக்கு முன்னேற்றம்!

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோகன் போபண்ணா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஜனவரி மாதம் 8ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோகன் போபண்ணா ஜோடி, இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஜோடியான நீல் ஸ்குப்ஸ்கி மற்றும் டெசிரே க்ராவ்சிக் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது. முன்னதாக காலியிறுதிப்போட்டியில் எதிர்த்து விளையாடவிருந்த லாட்வியா மற்றும் ஸ்பானிஸ் நாட்டின் ஜோடியானது போட்டியில் இருந்து விலகியதால் இந்திய ஜோடி எளிதாகவே அரையிறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் அரையிறுதிப்போட்டியில் இந்தியாவின் இந்த ஜோடி எப்படி விளையாடபோகிறது என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஜோடியான நீல் ஸ்குப்ஸ்கி மற்றும் டெசிரே க்ராவ்சிக் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் போபண்ணா ஜோடியானது, 7-6, 6-7 (10-6) என்ற கணக்கில் 3-வது தரவரிசையில் உள்ள பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி-அமெரிக்காவின் டெசிரே க்ராவ்சிக் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருகிறது.இறுதிப்போட்டியானது ஜனவரி 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா டென்னிஸ் உலகில், மகளிர் இரட்டையர் பிரிவில் 3, கலப்பு இரட்டையர் பிரிவில் 3 என 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்றப் பெருமையையும் அவரையே சேரும். மேலும், இரட்டையர் பிரிவில் உலகளவில் நம்பர் 1 வீராங்கனையாகவும் இருந்துள்ளார். அத்துடன் 2021-ல் இரட்டையர் ஆட்டத்தில் 43-வது பட்டம் வென்றவர் என்ற பெருமையையும் கொண்டுள்ளார். இந்நிலையில், சானியா வயது மூப்பு மற்றும் ஓய்வின்மையால் பிப்ரவரி மாதத்தோடு அனைத்து டென்னிஸ் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறப் போவாதாக அறிவித்துள்ளார். இதனால் இந்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தோடு அவர் ஓய்வு பெறவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இந்திய டென்னிஸ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
http://dlvr.it/ShSc8P

நியூசிலாந்தில் 41-வது பிரதமர் பதவியேற்பு | சிகாகோவில் கொல்லப்பட்ட இந்தியர் - உலகச் செய்திகள்

எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் லக்சர் நகரத்தில் 1,800 ஆண்டுகள் பழைமையான சாமான்ய குடியிருப்பு நகரம் ஒன்றைக் கண்டறிந்திருக்கின்றனர். பின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோ கூட்டணியில் சேரத் தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது. எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி (Abdel Fattah El-Sisi) குடியரசு தின அணிவகுப்பில் விருந்தினராகப் பங்கேற்க இன்று இந்தியா வந்தடைந்தார். வட கொரியத் தலைநகர் பியாங்யாங்கில் சுவாச நோய்கள் அதிகரித்துவருவதால், ஐந்து நாள்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. புகழ்பெற்ற பாப் இசைக்கலைஞரான ஜஸ்டின் பீபர் (Justin Bieber) தன்னுடைய இசை உரிமைகளை 200 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது. 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானிடம் கூறியிருக்கிறார். சிகாகோவில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் 23 வயது இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆக்கபூர்வமான ஈடுபாட்டுக்கு அமெரிக்கா ஆதரவு தருவதாக, அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். நியூசிலாந்தின் 41-வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் (Chris Hipkins) இன்று அதிகாரபூர்வமாகப் பதவியேற்றார். லண்டன் அதிக அளவில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அந்த நகரத்தின் மேயர் சாதிக் கான் (Sadiq khan) மக்களை கவனமாக இருக்கும்படி எச்சரித்திருக்கிறார்.
http://dlvr.it/ShSbqY

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் 300வது உலகளாவிய ஷோரூம்!

10 நாடுகளில் 300 ஷோரூம்கள் என்கிற தனது வலுவான நெட்வொர்க்கால் உலகின் 6ஆவது மாபெரும் சில்லறை ஆபரண வர்த்தக நிறுவனமாக விளங்கும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸின் 300வது உலகளாவிய ஷோரூமின் திறப்பு விழாவானது அமெரிக்காவின் டல்லஸ் நகரில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. காலின் நகரின் கவுண்டி கமிஷனரான திருமதி. சூஸன் ஃப்ளெட்சர் மற்றும் டெக்சாஸ் நகரின் மேயர் திரு. ஜெஃப் செனே ஆகிய இருவரும் மலபார் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் (சர்வதேச செயல்பாடுகள்) திரு. ஷாம்லால் அகமது அவர்களின் முன்னிலையில் ஷோருமைத் திறந்து வைத்தனர். மலபார் குழுமத்தின் தலைவர் திரு. எம்.பி. அகமது, துணைத்தலைவர் திரு. கே.பி.அப்துல் சலாம், இந்திய செயல்பாடுகளின் நிர்வாக இயக்குனர் திரு. ஓ. அஷர் மற்றும் குழும நிர்வாக இயக்குனர் & B28 திரு. ஏ.கே. நிஷாத் உள்ளிட்ட பலரும், குழும உறுப்பினர்களும், நலம் விரும்பிகளும் பிற விருந்தாளிகளும் காணொலிக் காட்சி மூலம் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் "அமெரிக்காவின் டல்லஸ் நகரில் 300வது ஷோரூமைத் திறக்கும் இந்த நிகழ்வு எங்களுக்கெல்லம் பெருமை தரும் ஒரு தருணமாகும். இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு நகரில் ஒரு சிறிய ஷோரூமுடன் துவங்கி 30 ஆண்டுகளுக்குள் உலகெங்கிலும் 10 நாடுகளில் 300 ஷோரூம்கள் என்ற அளவில் வலுவானதொரு சில்லறை விற்பனை நிறுவனமாக நாங்கள் உருவெடுத்துள்ளோம். வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், ஊழியர்கள், எம்மோடு தொடர்புடைய மற்றும் பலருடைய உதவியால் தான் இது சாத்தியமாயிற்று. ஏற்கனவே எமது விற்பனை மையங்கள் துடிப்புடன் இயங்கிவரும் பிராந்தியங்களில் எமது வலுவான செயல்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்வோம். மேலும், எமது பல்வேறான பொருட்கள், சேவைகள் மற்றும் உத்தரவாதங்களுடன் புதுப்புது சந்தைகளில் நுழையும் திட்டமும் வைத்துள்ளோம். எமது பிராண்டை மக்கள் ஏற்று அதற்குத் தரும் பேராதரவுதான் உலகின் 'நம்பர் 1' ஆபரண சில்லறை வர்த்தக நிறுவனமாக வேண்டும் என்கிற இலக்கை நோக்கிப் பணிபுரியவும் விரிவாக்கம் செய்யவும் தேவையான பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது," என்கிறார் மலபார் குழுமத்தின் தலைவர் திரு. எம்.பி. அகமது. உலகளாவிய சில்லறை ஷோரூம்கள் விரிவாக்கத் திட்டத்திற்கு உதவும் விதமாக தனது உற்பத்தித் திறன்களை இன்னும் வலுவாக்கும் எண்ணமும் குழுமத்திற்கு உள்ளதாக அவர் மேலும் குறிப்பிடுகிறார். தனது விரிவாக்கத் திட்ட்த்தை இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் அமல்படுத்த உள்ளது; இத்திட்டத்தில் போபால், சூரத் உள்ளிட்ட பெருநகரங்கள் மட்டுமின்றி முக்கியமான 2ஆம் அடுக்கு சந்தைகளான இரிட்டி, அனகாபள்ளி, நான்டெட், வாபி, விழியநகரம் ஆகியவையும் அடங்கும். தனது உலகளாவிய விரிவாக்கல்மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் திட்டத்தின் கீழ் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, எகிப்து, கனடா, துருக்கி மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஸ்டோர்கள் திறக்க மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த எதிர்கால விரிவாக்கல் திட்டத்தினால் சில்லறை வர்த்தகம், உற்பத்தித் துறை, தொழில்நுட்பம் நிர்வாகம் ஆகிய துறைகளில் கிட்டத்தட்ட 6000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது ஆம்னி சேனல் முயற்சிக்கு மெருகூட்டும் விதமாக மைக்ரோசாஃப்ட், IBM, அக்சென்சர், E&Y, டெலாய்ட் போன்ற எமது முக்கிய தொழில்நுட்பக்கூட்டு நிறுவனங்களின் சேவைகளும் கோரிப் பெறப்படுகின்றன. வசதியுடன் கூடிய ஆபரணம் வாங்கும் அதியற்புத அனுபவத்தைத் தருவதில் உலகப்புகழ் பெற்றுள்ள மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்காக '10 மலபார் வாக்குறுதிகள்' என்கிற தலைப்பில் அவர்களுக்கேற்ற கொள்கைகளுடன் ஒப்பற்ற தரம்/சேவை உத்தரவாதமும் தருகிறது. வாழ்நாள் முழுவதற்குமான பாராமரிப்பு, இலவசக் காப்பீடு, உத்திரவாத்த்துடன் கூடியா பை-பேக் வசதி, IGI, GIA - தரச்சான்றிதழ் பெற்று உலகெங்கும் நடத்தப்படும் 28-அம்ச தரச்சோதனைகளில் தேறிய நகைகள், தங்க பரிவர்த்தனையில் ஜீரோ கழிவு, பரிபூான ஒளிவுமறைவின்மை, 916-ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய தூய தங்கம், பொறுப்பான முறையில் தங்கம் பெறுதல், நியாய விலை, நியாயமான தொழிற்பயிற்சி உட்பட அனைத்தும் 'மலபார் வாக்குறுதிகளில் அடங்கும்.மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் பொறுப்பான முறையில் தங்கத்தைக் கொள்முதல் செய்தல், தார்மிக முறையில் தொழில் பயிற்சி செய்தல், ஒளிவுமறைவற்ற, தொழில்முறை நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் விதிமுறைகளை ஒன்று விடாமல் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனம் & பின்பற்றிவருகிறது. வெற்றிகரமாகச் செயல்படும் பெரும்பாலான நிறுவனங்கள் பொறுப்புணர்வு, நீடித்து நிலைக்கும் தன்மையைத் தனது முக்கியத் தொழிற்பயிற்சியாக ஆக்குவதாக மலபார் குழுமம் நம்புகிறது. 1993-இல் தொழில் தொடங்கியது முதல் லாபத்தில் 5%-ஐ இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சமூகத்தின் தேவைக்கு இக்குழுமம் ஒதுக்கி வந்துள்ளது. பசி, சுகாதார நலம், மகளிர் மேம்பாடு, வீட்டு வசதி, சுற்றுப்புறச் சூழல் ஆகிய முக்கியத் துறைகளை குவிமையாமக்கி இக்குழுமம் செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 4.1 பில்லியன் டாலர் வருமானத்துடன் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமாக விளங்கும் மலபார் குழுமத்தின் முக்கிய நிறுவனமாக 1993இல் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டது. தற்போது ஆபரண விற்பனையில் உலகின் 6ஆவது மாபெரும் சில்லறை வர்த்தக நிறுவனம் என்ற பெருமையுடன் விளங்கும் இந்நிறுவனத்தின் வலுவான சில்லறை வர்த்தக நெட்வொர்க்கில் இந்தியா, மத்தியக் கிழக்காசிய நாடுகள், கிழக்காசிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளில் அமைந்துள்ள 300 விற்பனை மையங்கள், பலவித அலுவலகங்கள், டிசைன் சென்டர்கள், உற்பத்திப் பிரிவுகள், தொழிற்சலைகள் ஆகியவை அடங்கும். 4000-க்கும் அதிகமான பங்குதாரர்களுக்குச் சொந்தமான இக்குழுமத்தில் நிறுவனத்தின் தொடர் வெற்றிக்குப் பணியாற்ற தம்மை அர்ப்பணித்துள்ள 26 நாடுகளைச் சேர்ந்த 16,500-க்கும் மேற்பட்ட தொழில்முறைப் பணியாளர்களும் அடங்குவர். www.malabargoldanddiamonds.com என்கிற ஆன்லைன் ஸ்டோரில் மலபார் கோல்டு & டைமன்ட்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்த படியே தமக்குப் பிடித்த ஆபரணங்களை எந்நேரத்திலும் எந்நாளிலும் வாங்கலாம்.
http://dlvr.it/ShSbjr

Wednesday, 25 January 2023

பண்ருட்டியின் வியூகத்தால் அதிரும் அரசியல் களம்!

தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியும், ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகருமான பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரனின் அரசியல் வியூகத்தால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் களத்தில் பல்வேறு தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியும், ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகருமான பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரனின் அரசியல் வியூகத்தால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் களத்தில் பல்வேறு அதிா்வலைகள் எழுந்துள்ளன. திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப். 27-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அமைச்சா்கள் சு.முத்துசாமி, கே.என்.நேரு ஆகியோா் தலைமையில் திமுக கூட்டணியினா் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிவிட்டனா். இபிஎஸ் அணியைத் தடுக்கும் வியூகம்: காங்கிரஸுக்கு எதிராக போட்டியிடக்கூடிய வலுவான எதிா்க்கட்சி வேட்பாளா் யாா் என்பதற்கான விடை இன்னும் கிடைக்கவில்லை. உச்சநீதிமன்றம் வரையில் போராடி வரும் இபிஎஸ், ஓபிஎஸ், இத்தோ்தலில் வேட்பாளா்களை நிறுத்துவாா்களா, நிறுத்தினாலும் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா, பாஜக ஆதரவு யாருக்கு, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு யாருக்கு எனப் பல்வேறு கேள்விகளுக்கு உடனடியாக விடை கிடைக்கவில்லை. இதற்கு பழுத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரனின் வியூகம்தான் காரணம் என்கின்றனா் அரசியல் நோக்கா்கள். இடைத்தோ்தல் அறிவிப்பு வெளியான மறுநாள் தமாகா தலைவா் ஜி.கே.வாசனை சந்தித்தபோது இபிஎஸ் ஆதரவாளா்களின் வேண்டுகோளை ஏற்று இத்தொகுதியை அதிமுகவுக்கு தமாகா விட்டுக் கொடுத்தது. தோ்தல் களத்தில் இபிஎஸ் முந்துவதையும், அவா்களுக்கு பாஜக ஆதரவு கொடுத்துவிட்டால் பிற கூட்டணிக் கட்சிகளும் இபிஎஸ் தரப்பு வேட்பாளரை ஆதரித்துவிடுவாா்கள்; இதனால், ஓபிஎஸ் தரப்புக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பதை அவதானித்த பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ்ஸை அதே நாள் இரவில் அழைத்து ஆலோசனை வழங்கினாா். பாஜகவுக்காக காத்திருப்பு: அதாவது, இடைத்தோ்தலில் தங்களது தரப்பும் போட்டியிடுவதாக ஓபிஎஸ் உடனடியாக அறிவிக்க வேண்டும்; ஒருவேளை பாஜக போட்டியிட்டால் பிரதமா் மோடியின் நலன், மக்களவைத் தோ்தல் ஆகியவற்றை மனதில் கொண்டு விட்டுக்கொடுப்பதாகவும் அறிவிக்க வேண்டும்; இதன்மூலம் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு என பாஜகவால் உடனடியாக அறிவிக்க முடியாது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளும் பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு, தங்கள் முடிவை காலதாமதமாக அறிவிக்கும் என்பதுதான் பண்ருட்டி ராமச்சந்திரனின் நுட்பமான ஆலோசனை. இதன்படியே, ஜி.கே.வாசனை இபிஎஸ் தரப்பினா் சந்தித்த மறுநாள் காலை 8 மணி அளவில் செய்தியாளா்களை ஓபிஎஸ் சந்தித்து, பண்ருட்டி ராமச்சந்திரனின் ஆலோசனைப்படி இடைத்தோ்தலில் தங்கள் அணி போட்டியிடுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டாா். இதனால், பாஜக அலுவலகத்தில் இபிஎஸ் தரப்பு முன்னாள் அமைச்சா்கள் காத்திருந்து மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையை சந்தித்தபோதும் பாஜக உடனடியாக முடிவு எடுக்கவில்லை. அதேபோல, அண்ணாமலை, ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவா்களை ஓபிஎஸ் நேரடியாகச் சென்று தங்கள் தரப்புக்கு ஆதரவு கேட்டாா். பாஜகவை போலவே கூட்டணிக் கட்சிகளும் இரட்டை இலையில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு, அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு என வாக்குறுதி அளித்தாா்களே தவிர, இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல தயக்கம்காட்டி வருகின்றன. புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன் மூா்த்தி மட்டுமே இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு என வெளிப்படையாக அறிவித்தாா். சிறிய கட்சிகளுக்கு முக்கியத்துவம்: இடைத்தோ்தல் களத்தில் முன்கூட்டியே களம் இறங்கி முன்னேறிச்செல்ல எண்ணிய இபிஎஸ் தரப்பினா், இப்போது பாஜகவின் முடிவுக்காக காத்திருப்பதுடன், சிறிய கட்சிகளை தேடிச் சென்று ஆதரவு கேட்க வேண்டிய நிா்ப்பந்த சூழலை உருவாக்கியது பண்ருட்டி ராமச்சந்திரனின் வியூகம்தான். பண்ருட்டி ராமச்சந்திரனின் அரசியல் வியூகம் காரணமாக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்; இல்லையெனில் யாருக்கும் ஆதரவு இல்லை என பாஜக ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. பாஜக நிறுத்தும் பொது வேட்பாளரை ஓபிஎஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆதரிக்கலாம்; ஆனால், தனது சொந்த கொங்கு மண்டலத்தில் வேட்பாளரை நிறுத்தியே ஆகவேண்டிய கட்டாயச்சூழல் இபிஎஸ்ஸுக்கு உருவாகிவிடும். கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ் ஆதரவு குறைவாக இருப்பதால் பாஜக ஒதுங்கிக்கொண்டாலும், மோடி ஆதரவு வாக்குகளும் சோ்ந்து கிடைக்கும்போது ஓபிஎஸ் வேட்பாளருக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்பதும் பண்ருட்டி ராமச்சந்திரனின் கணக்கு. முக்கிய ஆலோசனைகள்: அண்ணா காலத்தில் இருந்து எம்எல்ஏவாக இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆா், பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ், தேமுதிக தலைவா் விஜயகாந்த் ஆகியோருக்கு முக்கிய காலகட்டங்களில் நுட்பமான வியூகங்களை வகுத்துக் கொடுத்து அரசியல் போக்கை மாற்றியவா் என மெச்சப்பட்டவா். இந்திரா காந்திக்கு எதிராக திமுக-அதிமுகவை இணைத்து வைக்கும் முயற்சியில் இப்போதைய ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜு பட்நாயக் இறங்கி இணைப்பு விழாவும் நடத்தும் சூழல் உருவானது. அப்போது எம்ஜிஆருக்கு ஆலோசனை வழங்கியவா் பண்ருட்டி ராமச்சந்திரன். திமுக-அதிமுக ஒன்றிணைந்தால் முதல்வராக எம்ஜிஆா் தொடா்ந்தாலும், ஆட்சி நிறைவடைந்த பின்னா் கட்சி முழுமையாக தலைவரான கருணாநிதியின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிடும்; இதனால் கருணாநிதி தலைமையின்கீழ் எம்ஜிஆா் செயல்பட வேண்டிய கட்டாய நிலை உருவாகிவிடும் என்பதுதான் பண்ருட்டியின் யோசனை. இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட எம்ஜிஆரும் தனது முடிவை கடைசி நேரத்தில் மாற்றி தமிழக அரசியலில் இறுதி நிமிஷம் வரை கோலோச்சினாா். விஜயகாந்தின் அரசியல் குரு: 2006-இல் தேமுதிக சந்தித்த முதல் பொதுத் தோ்தலின்போது விஜயகாந்தை மதுரையில் ஏதாவது ஒரு தொகுதி அல்லது திருமங்கலம், கோவில்பட்டியில் போட்டியிடலாம் என கட்சி நிா்வாகிகள் வலியுறுத்தியபோது, வடதமிழகத்தில் பாமகவின் கோட்டையான விருத்தாசலத்தில் நிற்க வைத்து வெற்றி வியூகம் வகுத்தவா் பண்ருட்டி. தென் மாவட்டங்களில் போட்டியிட்டால் அங்கு ஜெயலலிதா-கருணாநிதி ஆகியோரை மையமாக வைத்து மக்கள் வாக்களிப்பாா்கள். ஆனால், வடதமிழகத்தில் பாமக ஆதரவு, எதிா்ப்பு என்ற புள்ளியில் மக்கள் வாக்களித்து வருவதால் நட்சத்திர வேட்பாளராக விஜயகாந்த் களமிறங்கினால், அது அவரை மையமாக வைத்து நடக்கும் தோ்தலாக மாறி, பாமக எதிா்ப்பு வாக்குகள் குவிந்து எளிதில் வெற்றி பெறலாம் என்பதுதான் பண்ருட்டி ராமச்சந்திரனின் வியூகம். அதன்படி, 8 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றாா். எம்ஜிஆா் காலம் முதல் இதுவரை வெற்றிகரமான அரசியல் ஆலோசனைகளை வகுத்து தமிழக அரசியல் போக்கை தொடா்ந்து மாற்றி வருகிறாா் பண்ருட்டி ராமச்சந்திரன். ஓபிஎஸ்-இபிஎஸ் விவகாரத்தில் அவரது வியூகம் எவ்வாறு வெற்றி பெறப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/3zkNKYI https://ift.tt/WTZH4E0
via IFTTT

93 சதவிகித சொத்து மதிப்பை இழந்த சீன ரியல் எஸ்டேட் தொழிலதிபர்... காரணம் என்ன?

ஆசியாவின் இரண்டாவது பெரிய செல்வந்தராக இருந்தவர், சீனாவைச் சேர்ந்த ஹூய் கா யான். இவரின் சொத்து மதிப்பு தற்போது 93 சதவிகிதம் சரிந்துள்ளது. 93 சதவிகிதம் சரிவு8 முக்கிய நகரங்களில் விற்பனையாகாத 7,85,260 புது வீடுகள்... ரியல் எஸ்டேட் பகீர் நிலவரம்! ஹூய் கா யான் `எவர் கிராண்ட்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர். நிலங்களையும், கட்டிடங்களையும் விற்பது புதுப்பிப்பது என விரைவாக வளர்ந்த இந்நிறுவனத்தின் மதிப்பு, ஒருகாலத்தில் 42 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இந்நிறுவனத்தின் வளர்ச்சியே இவரை 2017-ல் ஆசிய செல்வந்தர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு அழைத்துச் சென்றது.  இந்நிறுவனத்தில் சுமார் 2 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 280 நகரங்களில் 1,300 கட்டட வேலைகளில் ஈடுபட்டுள்ளது இந்நிறுவனம். 2020-ல் இந்நிறுவனத்தின் விற்பனை 110 பில்லியனுக்கும் அதிகமாக இருந்தது.எவர்கிராண்டே குழுமம் ஆனால் 2021-ல் ஏற்பட்ட 300 பில்லியன் கடன் நெருக்கடியை ஈடுகட்ட, தனது வீடு மற்றும் தனியார் ஜெட் மற்றும் விமானங்களை விற்கத் தொடங்கினார். இதனால் இவரின் சொத்து மதிப்பு 93 சதவிகிதம் சரிந்துள்ளது. இதுகுறித்து ஹூய் கா யான் கூறுகையில், `தன்னுடைய நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் எவர்கிராண்டே குழுமம், ஒரு நிறுவனமாகத் தனது கடமையை நிறைவேற்றுவதற்கும், சாத்தியமான எல்லா வழிகளிலும் திட்டங்களை வழங்குவதற்கும் 2023 ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும்' என கூறியுள்ளார்.
http://dlvr.it/ShPjCc

Tuesday, 24 January 2023

”எது குட்கா துப்ப ஜன்னல திறக்கனுமா?” - பயணியின் பேச்சால் ஷாக்கான விமான ஊழியர்கள்!

விமான பயணத்தின் போது நடக்கும் சில அசவுகரியமான செயல்கள் குறித்த பதிவுகளே அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகின்றன. அதே வேளையில் சில உணர்வுப்பூர்வமான, சில நகைச்சுவையான நிகழ்வுகளும் வைரலாவதில் இருந்து தவறுவதில்லை. அந்த வகையில் விமான பணிப் பெண்ணிடம் பயணி ஒருவர் விமானத்தின் ஜன்னலை திறக்கச் சொல்லி கேட்கும் வீடியோ கிட்டத்தட்ட கோடிக்கணக்கானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. அதில், விமானத்தின் asile இருக்கையில் இருக்கும் இளைஞர் ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் உள்ளங்கையை அழுத்தியபடி “ஜன்னலை திறந்துவிட முடியுமா குட்கா மென்றதும் துப்ப வேண்டும்.” என கேட்டிருக்கிறார். இதனை கேட்ட அந்த விமானப் பணிப்பெண் மற்றும் பயணிகள் அதிர்ச்சியுற்று கோபப்படுவதற்கு மாறாக அனைவரும் சிரிப்பு மழையை பொழிந்திருக்கிறார்கள். View this post on Instagram A post shared by Govind Sharma ji  (@govindsharma5906) இந்த கேலியான நிகழ்வு இண்டிகோ விமானத்தில் நடந்திருக்கிறது. இது குறித்த கோவிந்த் ஷர்மா என்ற இன்ஸ்டாகிராம் பகிரப்பட்டு “உங்களுக்கு தெரிந்த குட்கா பிரியரை டேக் செய்யுங்கள்” என கேப்ஷனும் இடப்பட்டிருக்கிறது. 16 மில்லியன் பேரால் பார்க்கப்பட்ட இந்த வீடியோவுக்கு 12 லட்சம் பேர் லைக்கிட்டிருக்கிறார்கள். இதற்கு நெட்டிசன்கள், “பயணிகளை மகிழ்வாக வைத்திருப்பதாக ஒருவேளை அந்த பணிப்பெண் போலியாக சிரித்திருப்பார் போல. க்ரிஞ்ச் போன்று இருக்கிறது.” என்றும், “உத்தர பிரதேசம்/பீகாருக்கு வருவதை வரவேற்கிறோம்” என்றும், “இந்த மாதிரி யார் செய்தாலும் அந்த பழி உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மேல்தான் விழுகிறது” என்றெல்லாம் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
http://dlvr.it/ShLncz

Monday, 23 January 2023

சீன அதிபர் உரை... எல்லையில் தயார் நிலையில் இந்திய ராணுவம் - ஏன் இந்தப் பதற்றம்?!

இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே எல்லைப் பிரச்னை தொடர்ந்து நீடித்துவரும் நிலையிலும், இரு நாடுகளுக்குமிடையே சுமுக உறவு இருந்துவந்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங் 2019-ம் ஆண்டு மாமல்லபுரம் வந்தார். பிரதமர் மோடியும், ஜி ஜின்பிங்கும் சந்தித்து உரையாடினார்கள். அதற்கு முன்பாக, மோடியும், ஜி ஜின்பிங்கும் சீனாவில் சந்தித்து உரையாடினார்கள். இந்தியா - சீனா எல்லை இந்த நிலையில்தான், 2020-ம் ஆண்டு, ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். அப்போது இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அதில், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன வீரர்கள் ஐந்து பேர் உயிழந்ததாக சீனா தெரிவித்தது. ஆனால், சீன ராணுவத்தினர் 38 பேர் உயிரிழந்தனர் என்று ஆஸ்திரேலியாவும், சீன ராணுவத்தினர் 45 பேர் உயிரிழந்தனர் என்று ரஷ்யாவும் கூறின. கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்ததைப் போன்ற ஒரு சம்பவம் அருணாசலப் பிரதேசத்தில் டிசம்பர் 9-ம் தேதி நிகழ்ந்தது. தவாங் செக்டாரில் எல்லைக்கோட்டை ஒட்டிய இந்தியப் பகுதிக்குள் சீனத் துருப்புகள் நுழைந்ததைக் கண்ட இந்திய வீரர்கள், அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது, இரு தரப்பினருக்குமிடையே மோதல் நிகழ்ந்தது. அதில், இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டன. ஆனால், உயிரிழப்பு எதுவும் இல்லை, ஆனாலும், இந்தச் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தது. இந்த மோதல் சம்பவம் குறித்து எந்தவொரு செய்தியையும் மத்திய அரசு வெளியிடவில்லை. ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குப் பிறகுதான் இது வெளியுலகுக்குத் தெரியவந்தது. இது குறித்து ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசை நோக்கி விமர்சனங்களை எழுப்பினர். அதையடுத்து, பா.ஜ.க-வினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே சூடான வார்த்தைப் போர் நடைபெற்றது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தச் சூழலில்தான், இந்திய எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் சீன ராணுவத்தினர் மத்தியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றிய சம்பவம், தற்போது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீன தலைநகர் பீஜிங்கிலுள்ள ராணுவத் தலைமையகத்திலிருந்து காணொளி வாயிலாக, இந்திய பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் ராணுவத்தினர் மத்தியில் ஜி ஜின்பிங் உரையாற்றினார் என்று சீன வானொலி செய்தி வெளியிட்டிருக்கிறது. “சீன எல்லையிலுள்ள குன்ஜிராப் ராணுவத் தலைமையக வீரர்களின் தயார் நிலை குறித்து அதிபர் ஜி ஜின்பிங் கேட்டறிந்தார்” என்றும், அதற்கு “24 மணி நேரமும் எல்லைக் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாக சீன ராணுவத்தினர் அதிபரிடம் தெரிவித்தனர்” என்றும் சீன வானொலி தெரிவித்திருக்கிறது. எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் ராணுவத்தினர் மத்தியில் ஜி ஜின்பிங் உரையாற்றியதையடுத்து, இந்தியாவுடன் சீனா போருக்குத் தயாராகிறதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. சீன எல்லை இந்த நிலையில், அருணாசலப் பிரதேசம், சிக்கிமில் எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தின் தயார்நிலை குறித்து இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து இந்திய ராணுவம் டிசம்பர் 21-ம் தேதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலுள்ள ராணுவத்தின் கிழக்குப்பிரிவு தலைமையகத்துக்கு தளபதி மனோஜ் பாண்டே சென்றார். திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்களில் பாஜக சாதிக்குமா, சறுக்குமா?! - ஒரு பார்வை அப்போது, அருணாசலப் பிரதேசம், சிக்கிமிலுள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தின் தயார்நிலை குறித்து அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டது. அந்தப் பகுதிகளில் சீனாவுடன் பகிர்ந்துகொள்ளப்படும் எல்லையில் நிலவும் சூழல் கண்காணிக்க முடியாததாக இருப்பதாக மனோஜ் பாண்டே அண்மையில் கூறியிருந்தார்.கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நினைவுச் சின்னம் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே நடைபெற்ற மோதலுக்குப் பிறகு, பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மத்தியில் 17 சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றன. அதையடுத்து, சர்ச்சைக்குரிய பகுதிகளில் இரு தரப்பிலும் ராணுவம் குறைத்துக்கொள்ளப்பட்டது. கடந்த டிசம்பரில் தவாங் செக்டாரில் இரு ராணுவத்தினரிடையே நடந்த மோதலுக்குப் பிறகும், பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மத்தியில் பேச்சு நடைபெற்றதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், சீன அதிபரே நேரடியாக எல்லையில் இருக்கும் ராணுவத்தினரிடம் பேசியிருப்பதால், பதற்றம் அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க எப்போதும் தயாராக இருக்கும் பிரதமர் மோடி உள்ளிட்ட ஆளும் தரப்பினர், சீனா விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வியைக் கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர்கள் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/ShHz7v

Sunday, 22 January 2023

காதுகள், மூக்கை அகற்றிய திருநங்கை, ஊர்வன போல நாக்கில் பிளவு; காரணம் என்ன?!

விலங்குகளின் மீது அதீத விருப்பம் கொண்ட பெரும்பாலான மக்கள் விலங்குகளை வளர்ப்பார்கள். அன்பு செய்வார்கள். அரிதாக சிலர், அந்த விலங்காகவே தங்களை பாவித்து, அதனைப் போலவே மாறத்தொடங்குவர். இவர்களை `தெரியன்ஸ்’ (Therians) என்று அழைக்கின்றனர். தங்களை மனிதர்களாக அல்லாமல் விலங்காக இவர்கள் பாவித்துக்கொள்வர்.டியாமட் இவா மெடூஸா அப்படி தன்னை டிராகன் எனப் பாவித்துக் கொண்ட டியாமட் இவா மெடூஸா என்ற திருநங்கை, பெரிய தொகையைச் செலவு செய்து அதற்காக தன்னுடைய உருவத்தை மாற்றி வருகிறார். இதற்காக தன்னுடைய காதுகளையும், மூக்கினையும் அகற்றி, கண்ணிற்குப் பச்சை நிற சாயமும், உடல் முழுதும் பச்சை குத்திக்கொண்டும் தன் தோற்றத்தை மாற்றியுள்ளார். ஊர்வன உயிரினங்களுக்கு இருப்பதைப் போல தன்னுடைய நாக்கை பிளவு படுத்த அதிக செலவு செய்துள்ளார். அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் ரிச்சர்ட் ஹெர்னாண்டஸாக பிறந்த இவர், சமூகத்தில் பல அடக்குமுறைகளையும், பாகுபாடுகளையும், பாலியல் துஷ்பிரயோகத்தையும் எதிர்கொண்ட பின், மனிதர்களோடு மனிதராக வாழ்வதில் விருப்பம் இழந்தார். பாம்புகளை தன் கனவில் கண்ட பின்னர், தன்னை பாதி மனிதராகவும், பாதி ஊர்வனவாகவும் நினைக்க ஆரம்பித்தார். டியாமட் இவா மெடூஸா வளர்ப்பு நாய்க்கு மரண தண்டனை... பாகிஸ்தானில் வினோத தீர்ப்பு! ஒருபுறம் இவரின் உடலியல் மாற்றங்கள் விநோதமாகத் தெரிந்தாலும், சமூகம் தன் மீது செலுத்திய வன்முறையே தன்னை இந்நிலைக்குத் தள்ளியது என்கிறார். சமூக வலைதளத்தில் `டிராகன் லேடி மெடூஸா' என்ற பெயரில் ஆக்டிவ்வாக இருக்கிறார் மெடூஸா. 1990 முதல் 2016 வரை தன்னுடைய உடலில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவுகளாகவும் வெளியிட்டுள்ளார்.    
http://dlvr.it/ShFxMX

Saturday, 21 January 2023

Friday, 20 January 2023

செவித்திறன் குறைபாட்டை சுட்டிக்காட்டி வேலை தரமறுப்பு; மருத்துவமனைக்கு ரூ 1.5 கோடி அபராதம் விதிப்பு!

செவித்திறன் குறைபாடு உடையவர் என்பதால், வேலை தர மறுத்த மருத்துவமனை, அப்பெண்ணிற்கு 180,000 அமெரிக்க டாலரை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மேப்பிள் குரோவ்வில் வசித்து வருபவர் 26 வயதான கைலா வோக்ட். இவருக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. ஜூலை 2020-ல் நார்த் மெமோரியல் ஹெல்த் என்ற மருத்துவமனையில் வரவேற்பாளர் பதவிக்கு இவர் விண்ணப்பித்துள்ளார். மருத்துவமனைக்கு வருபவர்களை வரவேற்பது, முகக்கவசம் அணிவதை உறுதி செய்வது, கோவிட் தொற்று அறிகுறிகளைச் சரிபார்க்க ஸ்கிரிப்டை படிப்பது போன்றவை வரவேற்பாளர் பணியின் தன்மை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேனேஜருடன் இவருக்கான ஆன்லைன் இன்டர்வியூ நடைபெற்றது. செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் 'வீடியோ ரிலே சர்வீஸ்' மூலமாக அமெரிக்க சைகை மொழிப்பெயர்ப்பாளருடன் இவரது இன்டர்வியூ நடந்தது.     இன்டர்வியூவில், `தனக்கு செவித்திறன் குறைப்பாடு இருக்கிறது. காது கேட்கும் கருவிகளை அணிந்திருப்பதால், வாய் மொழி மற்றும் சைகை மொழி மூலமாக என்னால் மற்றவர்களோடு எந்தவித சிரமமும் இன்றி தொடர்பு கொள்ள முடியும்' என்று கைலா வோக்ட் தெரிவித்துள்ளார். court orderகண் தசை பாதிப்பு, செவித்திறன் பிரச்னை... கேட்ஜெட் அதிகம் பயன்படுத்தும் பிள்ளைகளா? அலெர்ட்! ஆள்சேர்ப்பு மேலாளர் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தெரிவித்த பிறகு, அவரது விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள  முடியாது என கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் தன்னுடைய நிலையைக் குறித்து கேள்விப்பட்ட பின், வேலை வழங்குவதில் பாகுபாடு காட்டியதாக நீதிமன்றத்தில் அந்தப் பெண் வழக்குப் பதிவு செய்தார்.  நீதிமன்ற விசாரணையில், மருத்துவமனை நிர்வாகம் அப்பெண்ணின் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்துள்ளது. இருந்தபோதும் இயலாமை பாகுபாடு தொடர்பான அதன் பணியமர்த்த நடைமுறைகளை மருத்துவமனை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கூறி, 180,000 அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ. 1,45,19,214) அப்பெண்ணுக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
http://dlvr.it/Sh9B9Z

Thursday, 19 January 2023

சரிவைச் சந்திக்கும் சீனா... உலகப் பொருளாதாரத்தில் முக்கியமான இடத்தைப் பிடிக்குமா இந்தியா ?

உலகின் இரண்டாவது பெரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடு சீனா. கொரோனாவைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள், சீனப் பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது. சீனா கோவிட்-19 தோற்றம்: தரவுகளைக் கேட்ட உலக சுகாதார நிறுவனம்; பதிலளிக்குமா சீனா? சீனாவில் உற்பத்தி மையங்களாக விளங்கும் பல நகரங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக `ஜீரோ கோவிட் கொள்கை'யால் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளால், தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது, உணவு, பானங்கள், சில்லறை விற்பனை, சுற்றுலா உள்ளிட்டவை முற்றிலும் முடங்கியது. இதனால் பெரும் பொருளாதார பாதிப்பை சந்தித்தன. கடந்த செப்டம்பர் மாதத்தில் சீனாவில் தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பித்தது. என்றாலும், உக்ரைன் போர் பாதிப்பு, சர்வதேச பொருளாதார நிலை காரணமாக சீன தயாரிப்புகள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெரிதாக விற்பனையாகவில்லை. சீனாவின் மொத்த உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ரியல் எஸ்டேட் துறை முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. ரியல் எஸ்டேட், வீட்டுச் சந்தையில் ஏற்பட்டுள்ள நலிவு சீனாவின் வளர்ச்சியை பாதித்தது.சீனா வறட்சிபின்தங்கும் சீனா... இந்தியாவுக்கு 300 பில்லியன் டாலர் வாய்ப்பு..! மேலும், காலநிலை மாற்றத்தால் கடந்த காலங்களில் தென்மேற்கு மாகாணமான சிஷுவான் மற்றும் மத்தியப் பகுதியில் உள்ள சாங்கிங் ஆகிய பகுதிகளில் தீவிரமான வெப்ப அலைகள் வீசியது, வறட்சி அதிகமானது. இதனால், குளிர்சாதனங் களுக்கான தேவை அதிகரித்தது. மின் தேவையும் கடுமையாக அதிகரித்தது. இந்தச் சூழல் முக்கியமான தொழில் நிறுவனங்களான ஃபாக்ஸ்கான், டெஸ்லா போன்ற நிறுவனங்களின் உற்பத்தியைப் பெரிதும் பாதித்தது. டென்சென்ட், அலிபாபா போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் அதன் வருவாயில் முதன்முறையாக  இழப்பைச் சந்திக்க ஆரம்பித்தது. இதனால் பல ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் வேலைகளை இழந்தனர். பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பின்வாங்கினார்கள். அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடும் நடவடிக்கைகளை எடுத்தது.  அமெரிக்க டாலருக்கு நிகரான சீனாவின் யுவான் மதிப்பு மோசமான சரிவை சந்தித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளதால், பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை அதிகரித்தது. இத்தைகைய காரணங்களால் கடந்த 2022-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 3% அளவாக சரிவைக் கண்டது. சீனாவில் 1974-ம் ஆண்டு மிகக் குறைந்த அளவாக 2.3% பொருளாதார வளர்ச்சி காணப்பட்டது. சீனா கடந்த 50 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இந்த  பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. 2022-ம் ஆண்டில் சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு 17.94 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது அதிகாரபூர்வமான இலக்கான 5.5 சதவிகிதத்துக்கும் குறைவு என்று சீனாவின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.ரகுராம் ராஜன் தங்கத்தைவிட விலை அதிகம்... சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீற காரணம் இதுதான்! சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்றார். தற்போதைய சூழலில், சர்வதேச பொருளாதார வளர்ச்சியை தீர்மானிப்பதில் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா என்று அவரிடம் கேட்டனர். அதற்குப் பதிலளித்து ரகுராம் ராஜன் கூறுகையில், ``இந்தியா மிகவும் சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக விளங்கினாலும், உலகப் பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் உள்ளது என்பதால், நிலைமை மாறலாம். சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா என்பதை இப்போதே சொல்ல முடியாது. வளர்ந்துவரும் நாடாக இருக்கும் இந்தியா, மேலும் வளர வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் சீன பொருளாதாரம் மீண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்” என்றார்.  சீனா மற்றும் இந்தியாவில் நடக்கும் மாற்றங்கள் குறித்து உலகமே கவனித்துக்கொண்டிருக்கிறது!
http://dlvr.it/Sh6DdG

Wednesday, 18 January 2023

நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் காயம் காரணமாக இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கம்

பெங்களுரு: முதல் ஒருநாள் போட்டி நாளை ஹைதராபாத்தில் நடக்க உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் காயம் காரணமாக இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கியுள்ளனர். அவருக்கு பதிலாக அணியில் ரஜத் படிதார் சேர்த்துள்ளனர்.
http://dlvr.it/Sh3DpG

Tuesday, 17 January 2023

உலககோப்பை ஹாக்கி இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா

ரூர்கேலா: ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று, இந்தியா தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இதனால் இரு தரப்பிலும் கோல் அடிக்கும் முயற்சியை மாறி மாறி முறியடித்தனர். ஆட்ட நேர இறுதி வரை கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் இப்போட்டி, கோல் இன்றி டிரா ஆனது. இந்த போட்டி டிரா ஆனபோதிலும், கோல்கள் அடிப்படையில் இந்தியாவை விட இங்கிலாந்து முன்னிலையில் இருப்பதால் அந்த அணி டி பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியாவும், இங்கிலாந்தும் முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றன. இங்கிலாந்து அணி, வேல்ஸ் அணியை 5-0 என வென்றது. இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை சந்திக்க உள்ளது. இந்த போட்டி வரும் 19ம் தேதி புவனேஸ்வரில் நடக்கவுள்ளது. இங்கிலாந்து அணி, கடைசி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியுடன் மோத உள்ளது.இன்றைய தினம், 4 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு மலேசியா-சிலி அணிகளும், மதியம் 3 மணிக்கு நியூசிலாந்து-நெதர்லாந்து அணிகளும், மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரான்ஸ்-தென் ஆப்பிரிக்கா அணிகளும், இரவு 7 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அர்ஜெண்டினா-ஆஸ்திரேலியா அணிகளும் மோதவுள்ளன.
http://dlvr.it/Sh0FLl

Monday, 16 January 2023

கடைசி ஒருநாள் போட்டி: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் சதம் விளாசல்

3-வது ஒருநாள் போட்டி: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் சதம் விளாசியுள்ளார். இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 33 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை எடுத்து இந்திய அணி சிறப்பாக ஆடிவருகிறது.
http://dlvr.it/SgxTXJ

Sunday, 15 January 2023

ஹாலிவுட் பாடகி லிசா மேரி திடீர் மரணம் | உக்ரைனுக்கு உதவத் தயாராகும் தைவான் - உலகச் செய்திகள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷா ரெட்டி, அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தின், ஒரு மாவட்ட செனேட்டராகப் பதவியேற்றிருக்கிறார். எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் , அதன் செயற்கைக்கோள்கள் மூலம் இயங்கும் இணையச் சேவையான ஸ்டார்லிங்க் (Starlink) சேவையை, தென் கொரியாவில் தொடங்கவிருக்கிறது. புகழ்பெற்ற ராப் கலைஞரான கேன் வெஸ்ட்(Kayne west), கட்டட வடிவமைப்பாளரான பியான்கா சென்சோரியை (Bianca Censori) திருமணம் செய்தார். கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் கேன் தன் முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சுதந்திரப் போராட்ட வீராங்கனையான ஃப்ரீன் கின்வாலா (Frene Ginwala) தனது 90-வது வயதில் உயிரிழந்தார். 1994-ல் நெல்சன் மண்டேலா ஜனாதிபதியான பிறகு, தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் முதல் உரையாற்றிய சபாநாயகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.டொனால்ட் ட்ரம்ப் தவறான பொருளாதாரத் தரவுகளை வெளியிட்டு, வரி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நிறுவனத்துக்கு, 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. உக்ரைனின் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்தத் தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக தைவான் தெரிவித்திருக்கிறது. ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் கெவின் ஸ்பேஸி தனக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்ட பாலியல் வழக்குகளில், தான் குற்றமற்றவர் என்று லண்டன் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். உலக பொருளாதார மன்றம், ஸ்விட்சர்லாந்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கிறது. இதில் புகழ்பெற்ற தொழிலதிபர்கள் மற்றும் பல நாடுகளின் அரசு அதிகாரிகள் பங்கு பெறவிருக்கின்றனர். அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் அரசுக்குச் சொந்தமான சாதனங்களில் டிக்டாக் செயலி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அந்த நாட்டின் டிக்டாக் தடைசெய்யப்பட்ட மாகாணங்களின் எண்ணிக்கை 20 -ஆக உயர்ந்திருக்கிறது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரும், ஹாலிவுட் சினிமாவில் பிரபல பாடகியுமான லிசா மேரி பிரெஸ்லி (Lisa Marie Presley) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 54 வயதான இவர், சமீபத்தில் நடைபெற்ற கோல்டன் குளோப் விழாவில் பங்கேற்றார்.
http://dlvr.it/SgvNxM

Saturday, 14 January 2023

புவனேஷ்வரில் நடைபெற்று வரும் ஹாக்கி உலகக்கோப்பை போட்டியில் பிரான்சை 8-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

புவனேஷ்வர்: ஹாக்கி உலகக்கோப்பை போட்டியில் பிரான்சை 8-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. 15-வது உலகக் கோப்பை ஹாக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் இன்று முதல் 29-ம் தேதி வரை நடைபெறும். போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றது. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது . 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, பி' பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், 'சி' பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, 'டி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக காலியிறுதிக்கு முன்னேறும். 2 மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் மோதி அதில் இருந்து மேலும் 4 அணிகள் காலியிறுதிக்கு தேர்வாகும். முதல் நாளான இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பகல் 1 மணிக்கு தொடங்கிய அர்ஜென்டினா- தென்ஆப்பிரிக்கா போட்டியில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. அதைத்தொடர்ந்து மதியம் 3 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பிரான்ஸ் அணிகள் மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி 8-0 என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா ஆண்கள் ஹாக்கி அணி உலகின் நம்பர் 1 தரவரிசையில் உள்ள ஆஸ்திரேலியாவும், கோப்பையை கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். 2018-ம் ஆண்டு ஹாக்கி உலகக்கோப்பைக் கனவு கைகூடவில்லை என்றாலும், வெண்கலப் பதக்கத்தைக் ஆஸ்திரேலியா கைப்பற்றியது
http://dlvr.it/SgsPbd

Friday, 13 January 2023

``சீன எல்லையில் நிலைமை கணிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது, ஆனாலும்..!" - ராணுவத் தளபதி சொல்வதென்ன?

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்தினருக்கும், சீன ராணுவத்தினருக்குமிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பேசுபொருளானது. இந்த நிலையில், ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, சீனாவுடனான வட எல்லைப்பகுதியில் நிலைமை கணிக்க முடியாததாக இருப்பதாகவும், அதேசமயம் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.இந்தியா - சீனா டெல்லியில் நடைபெற்ற வருடாந்திர ராணுவ தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மனோஜ் பாண்டே, ``சீனாவுடனான வடக்கு எல்லைப்பகுதியில், அவர்கள் (சீனா) தங்களின் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறார்கள். தொடர்ந்து அங்கு என்ன நடக்கிறது என்பதை நாங்கள் கவனித்துவருகிறோம். மேலும், அங்கு நிலைமை என்னவென்று கணிக்க முடியாததாக இருந்தாலும், நிலைமை கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், எந்தவொரு நிலைமையையும் சமாளிக்க போதுமான இருப்புகள் எங்களிடம் இருப்பதால், சீனாவுடனான ஏழு எல்லைப் பிரச்னைகளில் ஐந்து பிரச்னைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டிருக்கிறோம்.ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே பாகிஸ்தானுடனான எல்லையைப் பொறுத்தளவில் நிறுத்தம் சிறப்பாக இருக்கிறது. ஆனாலும்கூட, பயங்கரவாத உள்கட்டமைப்பு மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கான ஆதரவு இன்னும் அங்கு இருக்கிறது. எனவே, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.``சீனா - பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் இந்தியா மீது போர் தொடுக்கலாம்"- ராகுல் காந்தி எச்சரிக்கை
http://dlvr.it/SgphCR

Thursday, 12 January 2023

ஹிஜாப் சட்டத்தைப் பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை: ஈரான் நீதிமன்றம்

கடந்த மூன்று மாதங்களாக ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் ஈரானிய பெண்களால் வலுவாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஈரான் அரசு தற்போது ஹிஜாப் சட்டத்தை கடுமையாக்கியுள்ளது. ஹிஜாப் சட்டத்தைப் பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக, நியூஸ் ஏஜென்சி ஒன்று நேற்று (10ம் தேதி) தெரிவித்துள்ளது. மஹ்சா அமினி கடந்த 1983- ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், ஈரானிய பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டது. கட்டாயமாக்கப்பட்ட பின்னர் பெண்கள் எவ்வித எதிர்ப்பும் இன்றி பின்பற்றி வந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மாஷா அமினி என்ற பெண், ஹிஜாப் சரியாக அணியவில்லை என்ற காரணத்தால் கைது செய்யப்பட்டார், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர், மூன்று நாள்களுக்கு பின் உயிரிழந்தார். மாஷா அமினியின் இறப்புக்குப் பின்னர் ஈரான் நாடு முழுவதும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். Free hijab என்ற முழக்கத்துடன் பெண்கள் ஹிஜாப்பை தூக்கி எறிந்தும், முடியை வெட்டியும் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்தப் போராட்டம் போலீசாரின் கடுமையான ஒடுக்குமுறைகளைச் சந்தித்தது. தற்போது இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக ஹிஜாப் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் பெண்கள் காரில் கூட ஹிஜாப்பை விலக்கக் கூடாது, ஹோட்டலிலும் இதே கட்டுப்பாடு தான். ஹிஜாப் சட்டத்தை மீறிய பெண்கள் அபராதம் கட்ட வேண்டும், அவர்கள் தொழில், வேலை செய்வதற்கும் தடை விதிக்கப்படும் என்று ஈரான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
http://dlvr.it/SglnTS

Wednesday, 11 January 2023

உள்நாட்டில் 20 சதங்களை அடித்த சச்சினின் சாதனையை சமன் செய்தார் விராட்கோலி

மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரில் 1-2 என்ற கணக்கில்தோல்வியடைந்தது. அதனை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் பகல்-இரவு ஆட்டமாக  இன்று நடைபெற்று வருகிறது.இந்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு இந்த தொடர் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன்ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் தங்களது திறமையை காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக சுப்மன் கில்லும், கேப்டன் ரோகித் சர்மாவும் இறங்கினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். 143 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சுப்மன் கில் 70 ரன்னில்ஆட்டமிழக்க, அதையடுத்து விராட் கோலி களம் இறங்கினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது 73-வது சதத்தை பதிவு செய்தார் கோலி. சதம் அடித்து அசத்திய கோலி 113 ரன்னில் அவுட் ஆனார். இதன் மூலம் உள்நாட்டில் 20 சதங்களை அடித்த சச்சினின் சாதனையை விராட்கோலி சமன் செய்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 45-வது சதத்தை விராட்கோலி அடித்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் கோலி 113 ரன்னும், ரோகித் 83 ரன்னும், கில் 70 ரன்னும் எடுத்தனர்.
http://dlvr.it/Sghw6N

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி சதம் விளாசல்

கவுகாத்தி: இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் விளாசினார். விராட் கோலி 80 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சர்உதவியுடன் சதமடித்தார். சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி அடித்த 45-வது சதம் இதுவாகும். ஒருநாள் போட்டியில் சச்சினின்(49) சதங்கள் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 5 சதங்கள் தேவை.
http://dlvr.it/Sghw1t

ஐபிஎல் போட்டிகளை இலவசமாக 11 மொழிகளில் ஜியோ சினிமா ஒளிபரப்பு

மும்பை: ஐபிஎல் போட்டிகளை இலவசமாக 11 மொழிகளில் ஜியோ சினிமா ஒளிபரப்புகிறது. இதனால் 500 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/SghvxS

போர்ச்சுகல் கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

லிஸ்பன்: போர்ச்சுகல் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ரொபர்ட்டோ மார்ட்டினஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி, காலிறுதியில் எதிர்பாராதவிதமாக மொராக்கோவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இதையடுத்து போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளராக இருந்த பெர்னாண்டோ சான்டோஸ், தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும், இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது.இந்நிலையில் தற்போது ஸ்பெயினை சேர்ந்த ரொபர்ட்டோ மார்ட்டினஸ், போர்ச்சுகல் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பெல்ஜியம் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் ரொபர்ட்டோ மார்ட்டினஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘கிறிஸ்டியானோ ரொனால்டோ மிகச் சிறந்த வீரர். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். போர்ச்சுகல் அணியில் அவரது எதிர்காலம் குறித்து, அவருடன் அமர்ந்து பேசவுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/Sghvh7

நியூயார்க்கில் 7000 செவிலியர்கள் போராட்டம்| இரான் போராட்டத்துக்கு போப் கண்டனம்| உலகச் செய்திகள்

நியூயார்க் நகரில் 7000 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஜெனிவாவில் நடந்த ஐ.நா மாநாட்டில், வெள்ள பாதிப்புக்கு உதவியாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 8 பில்லியன் டாலர்கள் நிதியுதவி கோரியிருக்கிறார். பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய காரணத்துக்காக சிங்கப்பூரில் வாழ்ந்த பிரேமா என்ற இந்திய வம்சாவளிக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இரானில் போராட்டம் செய்பவர்களைத் தூக்கிலிடுவது "மனிதநேயத்துக்கும், இறைவனுக்கும் எதிரான செயல்" என்று போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். வெளிநாட்டிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி சான்றிதழ் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக தாய்லாந்து அரசு தளர்த்தியிருக்கிறது. ஒரு நேர்காணலில் இளவரசர் ஹாரி, தற்போதைய துணை ராணியான கேமில்லாவை 'வில்லன்' என்று கூறியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இரானில் காவலர்களைக் கொன்றதற்காக மேலும் மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். முன்னால் பிரேசில் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் நடத்தியத் தாக்குதல்களை ஆதரிக்கும் வீடியோக்களை அகற்றப்போவதாக மெட்டா மற்றும் யூடியூப் அறிவித்திருக்கிறது.நிலநடுக்க அதிர்வு பதிவு இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவில் பதிவுசெய்யப்பட்டது. பெரு நாட்டில் அந்நாட்டு அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் இதுவரை 17 பேர் கொல்லப்பட்டனர்.
http://dlvr.it/SghvLH

Tuesday, 10 January 2023

வேண்டுமென்றே கொரோனாவை வரவழைத்துக்கொள்ளும் சீனர்கள்... இப்படியொரு காரணமா?

உலக அளவில் கோவிட் தொற்று மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது என்றே கூற வேண்டும். பல அரசுகள் பதைபதைத்திருக்கும் வேளையில், சீனாவின் இளைஞர்கள் பலரும் தவறான கருத்துகளைச் சுமந்துகொண்டு வேறு திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.Quarantine சீனாவில் கோவிட் தொற்றின் தீவிரம் அதிகரித்திருக்கிறது. அந்நாடு பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டு வரும் அதேநேரத்தில், மருத்துவச் சேவைகளின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. போதிய மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில், அங்குள்ள இளைஞர்கள் அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. எந்தவொரு கோவிட் தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாமல், கோவிட் தொற்றை வரவழைத்துக்கொண்டால், 14 நாள்கள் வரை வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள். நோய்த்தொற்றின் பாதிப்புக்குப் பிறகு, அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும் என நம்புகிறார்கள். கொரோனா `இந்த 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சான்று கட்டாயம்!’- மத்திய அரசு இத்தகைய கருத்தால் பீடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், வேண்டுமென்றே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஏற்கெனவே சீன தடுப்பூசிகள் சரியாக வேலை செய்வதில்லை என அந்நாட்டு மக்கள் அவற்றைப் பெரிதளவில் எடுத்துக்கொள்வதில்லை. அதோடு வெளிநாட்டுத் தடுப்பூசிகள் அதிக விலைக்குக் கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதை ஏழைகளால் வாங்கிப் பயன்படுத்த முடிவதில்லை.  இந்நிலையில், இளைஞர்கள் தவறான ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டு வருவது, நிலைமையை மேலும் கவலைக்கிடமாக்கியுள்ளது.     
http://dlvr.it/Sgdz4D

Monday, 9 January 2023

ஆஸி.-தென்ஆப்ரிக்கா கடைசி டெஸ்ட் டிரா

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்ரிக்கா 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 2 டெஸ்ட்டிலும் ஆஸி. வெற்றிபெற்று 2-0 என தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும்கடைசி டெஸ்ட் சிட்னியில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் நாட்அவுட்டாக 195, ஸ்டீவன் ஸ்மித் 104ரன் எடுத்தனர். 2ம் நாள் முடிவில்4 விக்கெட் இழப்புக்கு 475 ரன் எடுத்திருந்த நிலையில் 3வது நாள் ஆட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டதால் 4வது நாளான நேற்று அதே ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்ரிக்க அணியில் கேப்டன் டீன் எல்கர் 15, சாரெல் எர்வீ 18, ஹென்ரிச் க்ளாசென் 2 , தெம்பா பவுமா 35 , காயா ஜோண்டா 39ரன்னில் வெளியேறினர். 4ம் நாள் ஆட்ட நேர முடிவில்தென்ஆப்ரிக்கா  6 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்திருந்த நிலையில்கடைசி நாளான இன்று மார்கோ ஜான்சன் 11ரன்னில் வெளியேற  கேசவ் மகராஜ்-சைமன் ஹார்மர் 8வது விக்கெட்டிற்கு 85 ரன் சேர்த்தனர். உணவுஇடைவேளையின் போது தெ.ஆ.7விக்கெட்டிற்கு 244ரன் சேர்த்திருந்தது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் மகராஜ்   53ரன்னில்  அவுட் ஆனார்.சைமன் ஹார்மர்  47ரன்னில் வெளியேற 108 ஓவரில் 255ரன்னுக்கு தென்ஆப்ரிக்கா ஆல்அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. ஆஸி. பவுலிங்கில் ஹேசில்வுட் 4,  கம்மினஸ் 3 விக்கெட் வீழ்த்தினர்.  பின்னர் 220ரன் பின்தங்கிய 2வது இன்னிங்சிசை தென்ஆப்ரிக்கா ஆடியது. கேப்டன் எல்கர் 10 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் அவுட் ஆனார்.18 ஓவரில் தென்ஆப்ரிக்காஒருவிக்கெட் இழப்பிற்கு 47 ரன் எடுத்திருந்தது. இன்னும் 29 ஓவர்களே  இருந்ததால் போட்டி டிராவை நோக்கிச்சென்றது.
http://dlvr.it/Sgb8Mc

Sunday, 8 January 2023

நேபாள பேருந்து விபத்து, 6 பெண்கள் பலி|ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட 6 வயது மாணவன் - உலகச் செய்திகள்

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணதில் ஆறு வயது சிறுவன் ஆசிரியயை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் படுகாயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகராகக்  குடியரசு கட்சியைச் சேர்ந்த மெக்கார்த்தி (McCarthy)  தேர்வாகியிருக்கிறார். அமெரிக்காவில் கடந்த 163 ஆண்டுகளில் சபாநாயகரை தேர்வு செய்ய முடியாமல் நாடாளுமன்றத்தில் குழப்பமான சூழல் நீடிப்பது இதுவே முதல்முறை. உக்ரைன் ரஷ்யா போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மூன்று பில்லியன் மதிப்பிலான ராணுவ உபகரணங்கள் வழங்க முடிவு செய்திருக்கிறது. மெக்சிகோ நாட்டின் பிரபல போதைப்பொருள் கடத்தல் தலைவன் "எல் சாப்போ" குஸ்மானின் மகனைக் கைது செய்யும் முயற்சியில் 10 காவல் அதிகாரிகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர். நேபாளம் நாட்டின் சல்ஜன்டி - தோர்பட்டான் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சிக்கி 6 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் ராணுவ பயிற்சியின் போது பிரிட்டன் இளவரசர் ஹாரி, 25 பேரைக் கொலை செய்ததுக்கு தாலிபன்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். மாலியின் ராணுவத் தலைவர் கோய்டா, கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த 49 ஐவரி கோஸ்ட் வீரர்களுக்கு மன்னிப்பு வழங்கினார். 2020-ல் அமெரிக்காவில் நடந்த தாக்குதலில் மக்களைக் காக்கச் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். ஃபைசர் நிறுவனத்திடம் கோவிட் தொற்றுக்கான மருந்தைத் தயாரிக்கும் உரிமம் பெறச் சீனா பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. உக்ரைனை கைப்பற்றும் முயற்சி இன்னும் புதினிடம் மாறவில்லை, ஆனால் ரஷ்ய படைகளிடம் உள்ள ராணுவ தளவாடங்கள், வீரர்கள் எல்லாம் பலவீனம் அடைந்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
http://dlvr.it/SgY6p4

Saturday, 7 January 2023

மனைவி, 5 குழந்தைகள் உட்பட 7 பேரைச் சுட்டுக் கொன்ற கணவன்; 8-வது ஆளாக தானும் தற்கொலை - என்ன நடந்தது?

அமெரிக்காவில் நேற்று முன்தினம் மைக்கேல் ஹைட்(42) என்பவர், தன்னுடைய மனைவி விவாகரத்து கேட்டதால் ஆத்திரத்தில் மனைவி, மனைவியின் தாயார், தன்னுடைய ஐந்து குழந்தைகளையும் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.துப்பாக்கிச்சூடு உட்டா (Utah) மாகாணத்தின் ஏனோக் (Enoch) நகரிலுள்ள குடியிருப்பு ஒன்றில் எட்டு பேர் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்துசென்றனர். சம்பவம் நடந்த வீட்டை போலீஸார் பார்த்தபோது, வேறு யாரோ அவர்களைச் சுட்டுக்கொன்றிருக்கலாம் என முதலில் சந்தேகப்பட்டிருக்கின்றனர். பிறகு போலீஸ் விசாரணையில், டிசம்பர் 21-ம் தேதியன்று மைக்கேல் ஹைட்டின் மனைவி, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் இந்த விசாரணையில், மைக்கேல் தன்னுடைய மனைவியை சமாதானப்படுத்த முயன்றும் அவர் தன் முடிவை மாற்ற முன்வராததால், மைக்கேல் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படுகிறது.மரணம் பின்னர் சம்பவம் நடந்த இரவன்று, மைக்கேல் தன்னுடைய மனைவி, மனைவியின் தாயார், தன்னுடைய குழந்தைகளான மூன்று சிறுமிகள், இரண்டு சிறுவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார். அதன் பிறகு இறுதியில் மைக்கேல் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.இத்தாலி பிரதமரின் தோழி உட்பட 3 பேர் சுட்டுக் கொலை: குடியிருப்பாளர் கூட்டத்தில் அதிர்ச்சி!
http://dlvr.it/SgW9c6

Friday, 6 January 2023

``இந்திய சந்தை எங்களுக்கு முக்கியமானது" -குறிவைக்கும் கொரிய நிறுவனத்தின் புதிய எம்.டி

எல் ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் வீட்டு பொழுதுபோக்கு பிரிவில் தொலைக்காட்சிகள், ஆடியோ சிஸ்டம்கள், டிவிடிகள், மானிட்டர்கள், பாதுகாப்பு கேமராக்கள், ஹோட்டல் தொலைக்காட்சிகள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் ஆப்டிகல் டிஸ்க் டிரைவ்கள் போன்ற தயாரிப்புகளை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக இந்தியாவில் உள்ளது. தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எல் ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 1997 -ம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் தனது சேவையை தொடங்கியது.LGஜெர்மனியில் நடைபெறும் உலக ஜவுளி கண்காட்சி... கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்பு! தற்போது, இந்தியாவின் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஹாங் ஜூ ஜியோன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஈராக், லெபனான், சிரியாவில் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இதற்கு முன்பு இப்பதவியை வகித்த யங் லாக் கிம் நிர்வாக துணைத் தலைவராகவும், கொரியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.  தனது நியமனம் குறித்து ஹாங் ஜூ ஜியோன் கருத்து தெரிவிக்கையில், “சந்தையில் புதிய சவால்கள் நிறைந்துள்ளன. அத்துடன் மில்லியன் கணக்கான நுகர்வோர்களுக்கு சேவை செய்வதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக நினைக்கிறன்.. 8 பில்லியனை தொட்ட உலக மக்கள்தொகை; அடுத்தாண்டு சீனாவை முந்தும் இந்தியா- ஐ.நா அறிக்கை சொல்வதென்ன? இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடு, அதிக மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய சந்தை, இந்திய சந்தை சுவாரஸ்யமானது. அதை மேலும் வலுப்படுத்துவதே எங்கள் நோக்கம். எனவே, நுகர்வோரின் நுண்ணறிவு அடிப்படையில், உருவாக்கப்பட்ட போர்ட்ஃபோலியோவை அறிமுகப்படுத்துவதன் மூலம், எங்கள் வணிக தளத்தை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
http://dlvr.it/SgScrM

Thursday, 5 January 2023

``3 குளம்... 600 கோடி லிட்டர் நீர் சேமிப்பு!” அமெரிக்க வாழ் தமிழர்களின் அசத்தல் முயற்சி!

அமெரிக்க வாழ் தமிழர்களான மூன்று பேர், நீரின் அவசியத்தை உணர்ந்து நண்பன் என்ற அமைப்பின் மூலம் ரூ 38 லட்சம் செலவில் புதிய பொக்லைன் இயந்திரம் வாங்கியிருப்பதுடன் 410 ஏக்கர் பரப்பளவிலான குளங்களை தூர் வாரி அழகுபடுத்தும் பணியினை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் 600 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படும் என்கிறார்கள். தமிழகத்தை பத்து மண்டலங்களாக பிரித்து நீர் மேலாண்மைக்கான பணிகளை தொடர இருக்கும் அவர்களது செயல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.அமைச்சர் மெய்யநாதன், நிமல் ராகவன், வேல்காந்த்``நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு யார் காரணம்?'' - விளக்குகிறார் அறப்போர் ஜெயராமன் அமெரிக்காவில் நண்பன் குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் நிறுவனர்களாக தமிழகத்தை சேர்ந்த ஜி.கே, மணி, சக்தி என்ற மூன்று தமிழர்கள் இருக்கின்றனர். அவர்கள் நண்பன் என்ற அமைப்பின் மூலம் உதவி செய்வது என்பதை முதல் கொள்கையாக முன் வைத்து எந்தவித பிரதி பலனும் பாராமல் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நண்பன் அறக்கட்டளையின் கீழ், 'நண்பன் மதர்ஸ் பார் மதர் நேச்சர்' என்ற அமைப்பினை தொடங்கி அதன் மூலம் நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம், விவசாயம் மற்றும் விவசாய பெண்களுக்கான மேம்பாடு உள்ளிட்ட பணிகளை செய்ய முடிவெடுத்தனர். குறிப்பாக நீர் நிலைகளை தூர் வாரி தண்ணீரை சேமித்து வைக்கும் பணிகளில் ஆர்வம் காட்டினர்.நீர் நிலைகள் தூர் வாருவதற்கான விழா"கரூரில் விளையும் நெல்லை, அரிசியாக்கி இந்த மாவட்ட மக்களுக்கே வழங்கப்படும்!" மாவட்ட ஆட்சியர் தகவல்! இதையடுத்து நீர் நிலைகளை தூர்வாருவதற்காக மட்டும் ரூ 38 லட்சம் செலவில் புதிய பொக்லைன் இயந்திரம் ஒன்றை வாங்கியிருக்கும் நண்பன் அமைப்பு, பேராவூரணியை சேர்ந்த நிமல் ராகவன், தங்க கண்ணன், சித்தார்த் ஆகியோர் பங்களிப்புடன் நீர் நிலைகளை தூர் வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை முன்னெடுத்திருக்கிறது. முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 410 ஏக்கர் பரப்பளவில் குளங்களை தூர் வாரும் பணிக்கான பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இதில் சுற்று சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், நண்பன் குழுமத்தினுடைய இந்தியாவின் மேனேஜிங் டைரக்டரான கோவையை சேர்ந்த வேல்காந்த், நிமல் ராகவன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.அமைச்சர் மற்றும் விவசாய பெண்கள்வறண்ட நிலையில் காட்சியளிக்கும் கோவை குளங்கள்! படங்கள்:தி.விஜய் நண்பன் அமைப்பினர், நீர்பாசன குளங்களை பராமரிப்பதற்காக புதிய பொக்லைன் இயந்திரம் வாங்கி குளம் தூர் வாரும் பணியினை தொடங்கியிருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இது குறித்து நண்பன் மதர்ஸ் பார் மதர் நேச்சரின் தலைவர் பிரீத்தாவிடம் பேசினோம். அவர் கூறுகையில், ''அமெரிக்காவில் இயங்கி வரும் நண்பன் குரூப் ஆப் கம்பெனிஸ் நண்பன் என்ற அமைப்பின் மூலம் மக்கள் சேவைக்கான பணிகளில் முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு வருகிறது. நண்பன் குரூப் ஆப் கம்பெனிஸின் நிறுவனர்கள் அமெரிக்க வாழ் தமிழர்கள். அதில் ஒருவரான சக்திவேல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்தவர். விவசாய குடும்பத்திலிருந்த வந்த அவர் நம்மாழ்வாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு, அந்த வழியில் தனது பணிகளைத் தொடர்ந்து வருகிறார்.குளம் தூர் வாருவதற்கான தொடக்க விழா``காடுகளின் அரசன்" முடிவில்லாச் சமவெளியில் ஒரு முடிவற்ற ஊர்வலம் ! இந்நிலையில், நண்பன் அமைப்பும் தமிழகத்தில் விவசாயத்திற்கான முன்னேற்ற பணிகளை செய்வதற்கு களம் காண எண்ணியது. அதற்காக நண்பன் மதர்ஸ் பார் மதர் நேச்சர் என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றையும் தொடங்கினோம். நீர் நிலைகளை மீட்டெடுப்பதில் பெரும் பங்காற்றி வரும் வாட்டர் வாரியரான பேராவூரணி பகுதியை சேர்ந்த நிமல் ராகவன் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் நீர் நிலைகள் மீட்டெடுக்கும் பணிகளை செய்யத் தொடங்கியிருக்கிறோம். இதில் பெரும் அனுபவம் கொண்ட நிமல் ராகவன், குளம், ஏரி உள்ளிட்ட எந்த ஒரு நீர் நிலைகளாக இருந்தாலும் தூர் வாரி செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அந்த கிராமத்தினரின் ஒத்துழைப்புடன் தான் செய்தோம். இதில் நீர் நிலைகளை தூர் வாருவதற்கு பயன்படுத்தப்படும் ஜே.சி.பி இயந்திரத்திற்கு ஆகும் வாடகை செலவு முழு தொகையில் பெரும் தொகை அதற்கே ஆனது.நீர் சேமிப்புக்கான விழாவில் அமைச்சர் மெய்யநாதன்நம்மாழ்வார் நினைவேந்தல்; இயற்கை விவசாயப் பண்ணையில் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி..! ஜே.சி.பி வாடகைக்கென பெரும் தொகை சென்று விடுவதால் நிறைய குளங்களை தூர் வாருவதில் சிரமம் இருக்கிறது. நமக்கென சொந்தமான ஜே.சி.பி இயந்திரம் இருந்தால் நாம் நினைத்ததை விட நிறைய நீர் நிலைகளை மீட்டெடுக்கலாம் செலவும் மிச்சமாகும் என்ற யோசனையினை முன் வைத்தார். முத்தாய்ப்பான அந்த விஷயத்தை கவனத்தில் எடுத்து கொண்ட நாங்கள் புதிய பெரிய பொக்லைன் இயந்திரம் வாங்க முடிவு செய்தோம். அதன்படி ரூ 38 லட்சத்திற்கு பொக்லைன் இயந்திரம் வாங்கி நீர் நிலைகள் தூர்வாருவதற்கு ஒப்படைத்திருக்கிறோம். முதல்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், நாச்சான் குளம், வருசாக்குளம் ஆகிய மூன்று குளங்களை தூர் வாரும் பணியினை தொடங்கியிருக்கிறோம். அதற்கான விழாவில் அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.குளம் தூர் வாரும் பணி தொடக்கம்வெளிநாட்டினர் பாராட்டிய தமிழக விவசாயம்... `இயற்கை விவசாயக் கொள்கை' இப்படித்தான் இருக்க வேண்டும்! அமெரிக்க வாழ் தமிழர்கள் மூலம் தமிழகத்தில் நீர் நிலைகளை தூர் வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வரும் செயல் கண்களில் ஒத்திக்கொள்ள கூடியது என பலரும் பாராட்டினர். 410 ஏக்கர் கொண்ட குளங்களை தூர் வாருவதன் மூலம் 600 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். கிட்டதட்ட 0.65 டி.எம்.சி தண்ணீர் சேமிப்பாகும் என புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது. இதன் மூலம் 12,000 விவசாயிகள் பயனடைவார்கள். சுமார் 500 அடி ஆழத்திலிருக்கும் அப்பகுதி நிலத்தடி நீர் மட்டம் 100 அடிகள் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அனுபவஸ்தர்கள் கணிக்கின்றனர். தூர்வாரும் போது பொக்லைன் இயந்திரத்திற்கு தேவையான எரிபொருள் செலவான சுமார் ரூ 5 லட்சத்தையும் நண்பன் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவர்ன் வரிகளுக்கேற்ப தமிழகத்தின் நீர் தேவை பூர்த்தி செய்யும் விதமாக இதனை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. ஒரு குழந்தைக்கு தாய்பால் எவ்வளவு முக்கியமோ அதே போல் மனித குலத்திற்கு நீரின் தேவை மிக முக்கியம்.விவசாயிகளுக்கான விழா`நீர் வளம் பெருக்கி, விவசாயம் காத்தவன்’ பொன்னியின் செல்வனுக்கு விவசாயி செய்த மரியாதை..! எனவே நீர் நிலைகளை பாதுகாப்பதுடன் நீரை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் கடமை. தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை தூர் வாரி ஆழப்படுத்தி, அழகுப்படுத்தும் பணியினை மேற்கொள்ள இருக்கிறோம். தற்போது ஒரு பொக்லைன் மட்டுமே செயல்பட்டு வருவதால் நம் இலக்கை அடைவதற்கு தாமதமாகும். எனவே விரைந்து நீர் நிலைகள் மீட்டெடுக்க கூடிய பணிகளில் வேகம் காட்ட இருப்பதால் தமிழகத்தினை பத்து மண்டலங்களாக பிரித்து மேலும் பத்து புதிய பொக்லைன் இயந்திரங்களை வாங்கி பயன்படுத்த முடிவு செய்திருக்கிறோம். தமிழகத்தின் உள்ள அனைத்து நீர் நிலைகள் பயன்பாட்டில் இருக்க வேண்டும். நீர் இல்லாத ஏரி, குளங்களே இருக்க கூடாது என்பது எங்கள் கனவு. நீர் நிலை மீட்டெடுத்தல் மற்றும் நீர் மேலாண்மைக்கான உதவி தேவைப்பட்டால் நண்பன் அமைப்பை அனுகினால் வேண்டிய அனைத்தும் செய்து தரப்படும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம். நீரின் தேவையை உணர்ந்து இந்த சேவையினை அமெரிக்க வாழ் தமிழர்கள் மூலம் செய்யப்படுகிறது'' என்று தெரிவித்தார்.
http://dlvr.it/SgPqHl

Wednesday, 4 January 2023

பாகிஸ்தானில் எரிவாயு தட்டுப்பாடு| செவிலியர்களின் போராட்டத்தால் திணறும் ரிஷி சுனக் - உலகச் செய்திகள்

உலகப் பொருளாதாரத்துக்கு இந்த ஆண்டு (2023) மிக சவாலாக இருக்கும் என ஐ.எம்.எஃப் ( IMF) கூறியிருக்கிறது. இங்கிலாந்தில் செவிலியர்கள் அதிக ஊதியம் வழங்கக் கோரிப் போராடி வரும் நிலையில், ரயில் ஊழியர்கள், யூனியன் ஊழியர்கள் உள்ளிட்டோரும் போராட துவங்கியிருக்கின்றனர். இதனால் ரிஷி சுனக் அரசு பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. அமெரிக்காவில் மூன்று இந்திய வம்சாவளியினரான ஜுலி எ மேத்தியூ, கே.பி.ஜார்ஜ், சுரேந்திரன் கே படேல் ஆகியோர் மாவட்ட நீதிபதிகளாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவாகியிருக்கிறது. நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து, ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் நேபாளத்தின் புதிய பிரதமர் பிரசந்தா ஜனவரி 10-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரியிருக்கிறார். சீனாவிலிருந்து வரும் எல்லாப் பயணிகளும் கட்டாயம் கோவிட் பரிசோதனை செய்துவிட்டு வர வேண்டும் என கத்தார் அறிவித்திருக்கிறது.பிலிப்பைன்ஸ் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். பாகிஸ்தானில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக, மக்கள் பிளாஸ்டிக் பலூன்களில் சமையல் எரிவாயுவைச் சேமித்து வைக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தன்னுடைய அமெரிக்கக் குடியுரிமையை புதுப்பிக்கக் கோரியிருக்கிறார். தி அரைவல், அவெஞ்சர்ஸ், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஜெரேமி ரெனர் ( Jeremy Renner) விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
http://dlvr.it/SgLw7j

Tuesday, 3 January 2023

சற்று முன்

காபூலில் பயங்கர குண்டு வெடிப்பு |கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்து வாங்கத் தடை|உலகச் செய்திகள்

காபூல் ராணுவ விமான நிலையத்துக்கு வெளிப்புறத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் படுகாயமடைந்தனர். தைவான் அதிபர் சாய் இங்-வென் ( Tsai Ing-wen) கொரோனாவை எதிர்கொள்ள, சீனாவுக்குத் தேவையான உதவிகளைச் செய்துதரத் தயார் என்று தெரிவித்திருக்கிறார். சீனாவின் உதவியுடன் நேபாளத்தில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை அந்த நாட்டுப் பிரதமர் புஷ்பா கமல் தஹல் (Pushpa Kamal Dahal) திறந்துவைத்தார். உகாண்டாவில் புத்தாண்டு அன்று மாலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். கனடா கனடாவில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சொத்து வாங்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வீடுகளின் மதிப்பு உயர்ந்ததால் இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக கனடா அரசு தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தானில் புத்தாண்டு அன்று நடந்த கொண்டாட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் காயமடைந்தனர். வட கொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணைகள் 400 கி.மீ தொலைதூரம் வரை சென்றடைந்ததாகத் தென் கொரியா அறிவித்திருக்கிறது. சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நெகட்டிவ் கோவிட் பரிசோதனைச் சான்றிதழ்களைக் கட்டாயமாக்கியது ஆஸ்திரேலியா. ஸ்பெயினில் நடந்த கால்பந்து போட்டியில் ரசிகர்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் பொம்மைகளை மைதானத்தில் வீசினர். இது வருடா வருடம் புத்தாண்டன்று நிகழும் பாரம்பர்ய வழக்கம். பிரேசில் அதிபர் லுலா பிரேசில் அதிபராக 3-வது முறையாக நேற்று பதவியேற்றார் லூலா டா சில்வா.
http://dlvr.it/SgJ2Td

Monday, 2 January 2023

சீனாவுக்கு மருத்துவப் பயிற்சிக்குச் சென்ற தமிழக மாணவன்... திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சோகம்!

புதுக்கோட்டை மாவட்டம், போஸ் நகரைச் சேர்ந்தவர் சையது அபுல்ஹாசன் சாதலி. இவரின் மகன் ஷேக் அப்துல்லா. இவர் சீனாவிலுள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு முடித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே உலக நாடுகள் முழுவதும் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு இருந்ததால், வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாகவே மருத்துவக் கல்வியை முடித்து தேர்ச்சியும் பெற்றிருந்தார். இந்த நிலையில்தான், அங்குள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பயிற்சிக்காக சமீபத்தில் அழைப்பு வந்திருக்கிறது. இதையடுத்து கடந்த மாதம் 11-ம் தேதி புதுக்கோட்டையிலிருந்து சீனாவுக்கு அப்துல்லா புறப்பட்டுச் சென்றிருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக, சீனாவின் விதிமுறைப்படி எட்டு நாள்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட ஷேக் அப்துல்லா, அதன் பிறகு பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருக்கிறார். இதற்கிடையேதான், கடந்த வாரம் ஷேக் அப்துல்லாவின் உடல்நிலையில் பிரச்னை ஏற்பட்டு, ஹர்பன் சிட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்ற அதிர்ச்சித் தகவலைப் பல்கலைக்கழகம் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறது. சீனாவில் கொரோனா வேகமாகப் பரவிவரும் நிலையில் பதற்றமடைந்த பெற்றோர், மீண்டும் பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு மகனின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர். அப்போது, ஷேக் அப்துல்லாவுக்கு கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்தாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். மேலும், ஊரிலிருந்து மருத்துவச் செலவுக்கு பணம் அனுப்பிவைக்குமாறும் கூறியுள்ளனர். இதையடுத்து, சையது அபுல்ஹாசன் சாதலி தனது உறவினர்கள், நண்பர்கள் அதுபோக கடன் என ரூ.6,40,000 ஆயிரத்தைத் திரட்டி அங்கு அனுப்பிவைத்திருக்கிறார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்ததாகக் கூறப்பட்ட, ஷேக் அப்துல்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக சீனப் பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் அவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையறிந்த அப்துல்லாவின் பெற்றோர் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றிருக்கின்றனர். ``மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு இறந்த மாணவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உறவினர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து அப்துல்லாவின் உறவினர்களிடம் பேசினோம். ``கூலி வேலை பார்த்து, கடன் வாங்கித்தான் அப்துல்லாவை, சீனாவில் மருத்துவம் படிக்க வச்சாங்க. நல்லா இருந்தவனுக்கு திடீர்னு முடியாமப்போய் இறந்தது அதிர்ச்சியா இருக்கு. கொரோனா இருந்துச்சான்னு தெரியலை. ஆனா, கல்லீரல், கிட்னினு அடுத்தடுத்த பிரச்னைகள் இருந்ததாச் சொல்றாங்க. அனைத்தும் மர்மமாகவே இருக்குது. சிகிச்சைக்குக்கூட இங்கிருந்து பணத்தை அனுப்பிவெச்சுருக்கோம்.``சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு RT-PCR சோதனைகள் கட்டாயம்" - மத்திய அரசு ஆனா, இப்போ அப்துல்லாவின் உடலை, சொந்த ஊருக்குக்கூட கொண்டுவர முடியாத சூழல்தான் இருக்குது. மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு உடனே இறந்த அப்துல்லாவின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கணும். உயிரிழந்த அப்துல்லாவின் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரண உதவி வழங்கணும்" என்றனர்.
http://dlvr.it/SgFZBV

Sunday, 1 January 2023

காலமானார் முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் | சிலிண்டர் விபத்தில் பலியான 7 பேர் | உலகச் செய்திகள்

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கோவிட் பரிசோதனையைக் கட்டாயமாகியிருக்கிறது ஸ்பெயின். ஈரான் போராட்டங்களில் சிறைபிடிக்கப்பட்டவர்களில் சுமார் 100 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. டெக்ஸாஸின் 700-க்கும் மேற்பட்ட காட்டு வௌவால்கள் ஒரு வாரம் கடும் குளிர்கால வெப்பநிலையிலிருந்து பாதுகாக்கப்பட்டபின் ஹவுஸ்டன் நகரில் விடுவிக்கப்பட்டது. இங்கிலாந்தில் சட்டவிரோதமாக போதைப்பொருள்களை விநியோகித்த காரணங்களினால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருந்தாளுனர் துஷ்யந்த் படேல் கைதுசெய்யப்பட்டார். ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆதரவாகப் பச்சை குத்தியிருந்த பாலே நடனக் கலைஞர் செர்ஜி பொலுனின் (Sergei Polunin) நிகழ்ச்சியை இத்தாலி ரத்து செய்தது. துருக்கியில் ஒரு உணவகத்தில் நடந்த சிலிண்டர் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கத் தூதரான குயின் கேங்கை சீனா அந்நாட்டு வெளியுறவு அமைச்சராக நியமித்திருக்கிறது. கடத்தல், பாலியல் கொடுமைத் தொடர்பான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட ஆண்ட்ரூ டேட்டை 30 நாள் காவலில் வைக்க ரோமானிய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மியான்மார் ராணுவ நீதிமன்றம் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது.அதோடு மொத்த சிறைத் தண்டனையையும் 33 ஆண்டுகளாக உயர்த்தியிருக்கிறது. முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் (Benedict XVI) தன்னுடைய 95 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் என வாடிகன் தெரிவித்திருக்கிறது.
http://dlvr.it/SgCmg1