இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் பிரித்விஷா தேர்வு செய்யப்படவில்லை. இலங்கைக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். டாப்-3 பேட்ஸ்மேன்களான ரோஹித், விராட் கோஹ்லி மற்றும் கே.எல்.ராகுல் டி20 அணியில் இல்லை. ரிஷப் பன்ன இரு அணிகளிலும் இல்லாத நிலையில், சமீபகாலமாக சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பிரித்வி ஷாவின் பெயர் இல்லாமல் உள்ளது.பிரித்வி ஷா கடைசியாக ஜூலை 2021ல் இலங்கைக்கு எதிரான டி20ல் இந்தியாவுக்காக விளையாடினார். இளம் தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா மும்பைக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில், பிரித்வி ஷா டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 152.97 ஸ்ட்ரைக் ரேட்டில் 10 இன்னிங்ஸ்களில் 283 ரன்கள் எடுத்தார். இருப்பினும் பிரித்வி ஷாவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் கதவுகள் மூடப்பட்டன. இந்நிலையில் இந்த தொடரிலும் மீண்டும் இந்திய அணியில் இல்லாத பிறகு, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரகசிய குறிப்பை பகிர்ந்துள்ளார். அதில் ”எனக்கு மிகவும் தேவைப்பட்டது, யாரோ அவற்றை இலவசமாகப் பெற்றனர்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது உள்ள 2k கிட்ஸ் சண்டை வந்தால் `டிபி’ எடுப்பதை போல, இவரும் தனது புகைப்படத்தை எடுத்துவிட்டார்.
http://dlvr.it/Sg5ytM
Thursday, 29 December 2022
Home »
» எனது தேவையை யாரோ இலவசமாக பெற்றனர்: பிருத்விஷா புலம்பல்







0 comments:
Post a Comment