Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, 31 July 2024

US Election:`கமலா ஹாரிஸ் இந்தியரா, ஆப்ரிக்க அமெரிக்கரா?’ - ட்ரம்ப் விமர்சனமும் வெள்ளை மாளிகை பதிலும்

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. ஜனநாயகக்கட்சி தரப்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி தரப்பில் டொனால்ட் ட்ரம்பும் அதிபர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கிடையில், கமலா ஹாரிஸுக்கு மக்கள் மத்தியில் சாதகமான சூழல் நிலவுவதாக சில கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. அதை உறுதிப்படுத்தும் விதமாக, கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக பைடன் முன்மொழிந்த முதல் வாரத்தில் மட்டும், தேர்தல் பிரசார நிதியாக 200 மில்லியன் டாலர் திரண்டது பேசுபொருளானது.கமலா ஹாரிஸ்

இந்த நிலையில், சிகாகோவில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆப்ரிக்க அமெரிக்க பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது அவரிடம் 'நிறவெறி கருத்துகளை வெளிப்படுத்திய அதிபர் வேட்பாளரை எதன்காரணமாக நாங்கள் ஆதரிக்க வேண்டும்?' எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப், ``கமலா ஹாரிஸ் ஆப்ரிக்க அமெரிக்கர் என அவர் தன்னை வெளிப்படுத்தியதை விட இந்திய வம்சாவளி என்றே அடையாளப்படுத்திக்கொண்டார். பின்பு திடீரென தன்னை ஆப்ரிக்க அமெரிக்கர் எனக் காட்டிக்கொள்கிறார். அவரின் இந்த அடையாள மாற்றத்தை நாம் கவனிக்க வேண்டும். நான் அனைவரையும் மதிக்கிறேன், ஆனால் கமலா ஹாரிஸ் இந்தியரா... ஆப்ரிக்க அமெரிக்கரா... என்பதில் வெளிப்படையானவராக இல்லை" எனக் குறிப்பிட்டார்.

டொனால்ட் ட்ரம்ப் இதற்கு முன்பும் இதே போன்ற கருத்துகளை பேசியிருக்கிறார். அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா இருந்தபோது, 'பராக் ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை" எனக் குற்றம்ச்சாட்டி பிரசாரம் செய்திருந்தார். தற்போது அதே போன்ற ஒரு கருத்தை கமலா ஹாரிஸ் மீதும் முன்வைத்திருக்கிறார்.

டொனால்ட் ட்ரம்பின் கருத்தை கடுமையாக கண்டித்து மறுத்த வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர், ``டொனால்ட் ட்ரம்பின் கருத்து அவமதிப்பதாகும். ஒருவரின் அடையாளம் குறித்து அது சம்பந்தப்பட்டவர் மட்டுமே பேச முடியும்.டொனால்ட் ட்ரம்ப்

ஒருவரை, அவர்கள் யார், அவர்கள் தங்கள் அடையாளத்தை எப்படி வெளிக்காட்டுகிறார்கள் என்று சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அது அவரவர்களின் சொந்த முடிவு. அவர்களால் மட்டுமே தன் அனுபவத்தை பேச முடியும். தற்போது விமர்சிக்கப்பட்டவர் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி, அவரின் பெயருக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும்" எனக் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88US Elections: டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ்... இந்தியாவுடனான அணுகுமுறை எப்படி?!


http://dlvr.it/TBLNHp

Monday, 29 July 2024

`5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு' - மத்திய அமைச்சர் `அதிர்ச்சி' தகவல்!

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் உயிரிழப்பு, கொலை போன்ற செய்திகள் அவ்வப்போது தொடர்ச்சியாக வந்த வண்ணமே இருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, நாடாளுமன்றத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில், கடந்த வெள்ளியன்று மக்களவையில் கேரள எம்.பி கே.சுரேஷ், 2019 முதல் வெளிநாடுகளில் உயர் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களின் உயிரிழப்பு பற்றி கேள்வியெழுப்பினார்.உயிரிழப்புகள்

அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் அளித்த பதில் விவரங்களில், `41 நாடுகளில் விபத்துகள், மருத்துவ காரணங்கள் மற்றும் தாக்குதல்களால் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக கனடாவில் 172 மாணவர்களும், அமெரிக்காவில் 108 மாணவர்களும் உயிரிழந்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, இங்கிலாந்தில் 58 மாணவர்களும், ஆஸ்திரேலியாவில் 57 மாணவர்களும், ரஷ்யாவில் 37 மாணவர்களும், ஜெர்மனியில் 24 மாணவர்களும் என அதிகபட்சமாக உயிரிழந்திருக்கின்றனர். அண்டை நாடான பாகிஸ்தானில் ஒரு உயிரிழப்பு பதிவாகியிருக்கிறது.

மொத்தமாக இதில், 19 உயிரிழப்புகள் கொலைகளால் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றில், கனடாவில் 9 கொலைகளும், அமெரிக்காவில் 6 கொலைகளும், ஆஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து, கிர்கிஸ்தானில் தலா ஒரு கொலையும் நடந்திருக்கிறது. இதுமட்டுமல்லாது, கடந்த மூன்று ஆண்டுகளில் 48 இந்திய மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதற்கான காரணங்கள் அமெரிக்க அதிகாரிகளால் அதிகாரபூர்வமாகப் பகிரப்படவில்லை' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங்

பின்னர், வெளிநாடுகளில் இந்திய மாணவர்களுக்கான பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்த கீர்த்திவர்தன் சிங், ``வெளிநாடுகளிலுள்ள இந்திய மாணவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது இந்திய அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று. மேலும், வெளிநாடுகளிலுள்ள இந்திய தூதரகங்கள் அங்கிருக்கும் பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுடன் வழக்கமான தொடர்பைக் கொள்கின்றன" என்று தெரிவித்தார்.``தாமரை வியூகமும் `6' பேரும்... A1, A2 - அதானி, அம்பானி"- காட்டமான ராகுல் காந்தி | Speech Highlights


http://dlvr.it/TBD7Tr

Sunday, 28 July 2024

``இஸ்ரேல் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது..!" - கமலா ஹாரிஸ்

பாலஸ்தீனம், சிரியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் பல பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், சிரியாவில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளில் (Golan Heights) மீது வான்வழித் தாக்குதல் நேற்று நடைபெற்றது. இதில் 11 சிறுவர்கள் உயிரிழந்ததாகவும், 20 போ் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இந்தத் தாக்குதலை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மேற்கொண்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டிய நிலையில், அந்தக் குற்றச்சாட்டை ஹிஸ்புல்லா மறுத்திருக்கிறது.இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு

இதற்கிடையில், அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள கமலா ஹாரிஸ் நேற்று, இஸ்ரேலுக்கான தன் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பக கமலா ஹாரிஸ், வடக்கு இஸ்ரேலில் உள்ள மஜ்தல் ஷம்ஸ் என்ற இடத்தில் கால்பந்து மைதானத்தில் நேற்று ஹிஸ்புல்லா நடத்திய கொடூரமான தாக்குதலில் குழந்தைகள், இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அமெரிக்கா அதை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

இந்த கொடூரமான தாக்குதலை கண்டிப்பதோடு, கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த அனைவருக்காகவும் துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பில் கார்டன், ``இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்கு தொடர்ந்து கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது, மேலும் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்க துணை அதிபரின் ஆதரவு இரும்புக் கவசம் போன்றது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88இஸ்‌ரேல் - ஹமாஸ் யுத்தம் 11: ஹிஸ்புல்லா முதல் இஸ்லாமிக் ஜிகாத் வரை… இஸ்‌ரேலின் எதிரிகள் ஏராளம்!


http://dlvr.it/TBBk8N

"இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு!" - அமெரிக்காவில் படிக்க ஸ்காலர்ஷிப் பெற்ற சலவைத்தொழிலாளியின் மகள்

அமெரிக்க வெளியுறவு துறை நிதி உதவியுடன் அந்நாட்டில் மேற்படிப்பைப் பயிலும் வாய்ப்பைப் பெறுள்ளார் லக்னோவைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியின் மகளான தீபாளி கனோஜ்யா.

16 வயதான தீபாளி கனோஜ்யா லக்னோவைச் சேர்ந்தவர். 10-ம் வகுப்பு படிக்கும் தீபாளியின் அப்பா ஒரு சலவைத் தொழிலாளி. ஆனால் அவளது தந்தை உடல்நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் தீபாளிதான் வீட்டில் டியூசன் நடத்தி தனது அம்மாவிற்கு உதவி செய்து வந்திருக்கிறார். தீபாளி - நண்பர்களுடன்

நலிந்த பொருளாதார பின்னணியைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி வழங்கும் ஸ்டடி ஹால் கல்வி அறக்கட்டளையின் ஒரு பிரிவான பிரேர்னா பெண்கள் பள்ளியில் தீபாலி சேர்ந்து படித்து வந்தார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை நிதி உதவியுடன் அந்நாட்டில் மேற்படிப்பைப் பயிலும் வாய்ப்பை இந்தியாவில் இருந்து 30 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

அந்த 30 மாணவர்களில் 10-ம் வகுப்பு படிக்கும் தீபாளியும் ஒருவர். இது குறித்துப் பேசியிருக்கும் தீபாளி, "இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவர்களில் நானும் ஒருவர் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பல்வேறு கலாசாரங்களைப் பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது ஆசிரியர்களிடமிருந்து அமெரிக்காவைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்வேன்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.தீபாளி கனோஜ்யா

"முதல் முறை அவளைத் தனியாக அனுப்புவதற்குச் சற்று பதற்றமாக இருந்தாலும் நான் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்" என்று தீபாளியின் அம்மா கூறியிருக்கிறார். ஆகஸ்ட் 19-ம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கும் தீபாளி கனோஜ்யாவிற்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


http://dlvr.it/TB9hVC

US Elections: ட்ரம்ப்பை முந்துகிறாரா கமலா ஹாரிஸ்? - அமெரிக்க தேர்தல் நிலவரம் சொல்வதென்ன?

அமெரிக்காவில் நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி, பல அரசியல் நிகழ்வுகள் அரங்கேறிவருகிறது. ஆரம்பத்தில் டொனால்ட் ட்ரம்ப்பை ஜோ பைடன் எதிர்கொள்வார் என்ற நிலை மாறி, ஜோ பைடனே, துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அங்கீகரித்தார். அவரது கட்சியும் முழு ஆதரவளித்து கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவித்து, அதற்கான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் தேர்தலைச் சந்திப்பதற்கான தேர்தல் நிதியும் பெருமளவு திரண்டிருப்பது அவருக்கான ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது. ஜோ பைடன் தேர்தல் வேட்பாளாராக இருந்தவரை, டொனால்ட் ட்ரம்ப்புக்கு இருந்த மக்களின் ஆதரவு நிலைப்பாடு தற்போது சரியத்தொடங்கியிருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) கருத்துக்கணிப்பின் முடிவில், மக்கள் ஆதரவில் கமலா ஹாரிஸ் 49 சதவிகிதமும், டொனால்ட் ட்ரம்ப் 47 சதவிகிதமாகவும் பதிவாகியிருக்கிறது. நியூயார்க் டைம்ஸ்/சியானா கல்லூரி (New York Times/Siena College) நடத்திய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் 48 சதவிகிதமும், ட்ரம்ப் 47 சதவிகிதமும் முன் பின்னாக இருக்கின்றனர்.டொனால்ட் ட்ரம்ப்

நியூயார்க் டைம்ஸ்  (New York Times) கருத்துக்கணிப்பு முடிவில், ஜோ பைடன் கறுப்பின வாக்காளர்களின் 59 சதவிகித வாக்குகளை மட்டுமே பெறுவார் எனத் தெரிவித்திருந்தது. தற்போது அதிபர் வேட்பாளர் மாற்றத்துக்குப் பிறகு, கமலா ஹாரிஸ் 69 சதவிகித வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகளின் அடிப்படையில், அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்பின் வாக்கு சதவிகிதம் சரிவை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் தேர்தல் களம் நொடிக்கு நொடிக்கு மாறும் என்பதால், பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!US Elections: டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ்... இந்தியாவுடனான அணுகுமுறை எப்படி?!


http://dlvr.it/TB9RPW

Friday, 26 July 2024

`திருமணம் செய்வதாக கூறி பலமுறை உடலுறவு கொண்டு ஏமாற்றிவிட்டார்' - வழக்கறிஞர்மீது அமெரிக்க பெண் புகார்

திருமணம் செய்துகொள்வதாக பலமுறை உடலுறவு கொண்டு ஏமாற்றிவிட்டதாக, ராஜஸ்தான் வழக்கறிஞர்மீது அமெரிக்க பெண் பாலியல் வன்கொடுமை புகாரளித்த சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, அமெரிக்காவைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கும், குற்றம்சாட்டப்படும் ராஜஸ்தான் வழக்கறிஞர் மனவ் சிங் ரத்தோருக்கும் முதலில் ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.பாலியல் வன்கொடுமை

அதன்பின்னர், ரத்தோரின் அழைப்பின் பேரில் இந்தியா வந்த அமெரிக்க பெண்ணிடம், திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதியளித்த அவர் ஜெய்ப்பூர் மற்றும் அஜ்மீரிலுள்ள ஹோட்டல்களில் பலமுறை உடலுறவு கொண்டார். பிறகுதான், ரத்தோருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குடும்பம் இருப்பது அமெரிக்க பெண்ணுக்குத் தெரியவந்திருக்கிறது.

அதையடுத்து, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பூண்டி (Bundi) நகர காவல் கண்காணிப்பாளரை அணுகி, ரத்தோர் தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருப்பதை மறைத்து, திருமணத்தின் பேரில் தன்னிடம் உடலுறவு கொண்டு ஏமாற்றிவிட்டதாக, அவர்மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். புகாரின்படி, ரத்தோர் மீது போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர்.காவல்துறை

இதுகுறித்து ஊத்திடம் பேசிய பூண்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் அமர் சிங், ``புகாரளித்த பெண் ஏப்ரல் முதல் ஜூலைக்குள் இரண்டு முறை இந்தியாவுக்கு வந்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில், ரத்தோர் திருமணம் செய்துகொள்வதாக தன்னிடம் பொய் வாக்குறுதியளித்து அஜ்மீர், ஜெய்ப்பூர் ஹோட்டல்களில் பலமுறை உடலுறவு கொண்டதாகவும், பிறகுதான் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி அஜ்மீரில் குடும்பத்துடன் வசித்துவருவது தெரிந்ததாகவும் அந்தப் பெண் புகாரளித்திருக்கிறார். இடையில், அஜ்மீரில் ஒரு கோயிலில் அந்தப் பெண்ணுடன் அவர் திருமண நிகழ்ச்சி நடத்தியதாகவும், ஆனாலும் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்வதை அவர் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. இதில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.கோவை டு காஷ்மீர்... காதலிப்பதாக அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கோவை இளைஞர் கைது!


http://dlvr.it/TB75s6

கார் விபத்தில் இறந்த காதலன்... 3000 ஆண்டுகள் பழைமையான `Ghost Marriage’ சடங்குக்கு தயாராகும் காதலி!

தைவானை சேர்ந்த `யூ’ (Yu)என்றப் பெண் தன் காதலன், நண்பர்களுடன் ஜூலை 15 அன்று காரில் சென்றிருக்கிறார். அப்போது கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியிருக்கிறது. இந்த விபத்தில், காரில் இருந்த நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். யூ-வின் காலிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த மூவர் உயிர் பிழைத்த நிலையில், யூ-வின் காதலன் உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக பேசிய யூ, ``விபத்து நடந்த அந்த நிகழ்வு இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது. என் காதலன், அவனது சகோதரி, எங்கள் நண்பன் மூவரும் இடிபாடுகளில் சிக்கியிருப்பதைக் பார்த்தபோது மனம் உடைந்தேன்.மணமகள்

என் காலில் காயங்கள் இருந்தபோதிலும், அவர்களை மீட்க முயற்சித்தேன். ஆனால் அது முடியவில்லை. இறுதியில் என் காதலனை இழந்துவிட்டேன். ஆனால், எங்கள் காதல் உண்மையானது. அதை கௌரவிக்க வேண்டும் என விரும்புகிறேன். என் காதலனுக்கு வயதான தாயார் மட்டும்தான் இருக்கிறார். எனவே, என் காதலனின் அம்மாவை கவனித்துக் கொள்ளவும், என் அடுத்தகட்ட வாழ்வை அவர்களுடன் வாழவும் விரும்புகிறேன். அதற்காக பேய் திருமண சடங்கை(Ghost Marriage) செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பேய் திருமணம்(Ghost Marriage):

பேய் திருமணம் என்பது சீனாவில் சுமார் 3,000 ஆண்டுகள் பழைமையான பாரம்பரிய முறை. திருமணம் செய்துகொள்ளாமல் இறந்தவர்கள், திருமணம் நிச்சயிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மரணத்துக்குப் பிறகு தனக்காக யாரும் இல்லை என்ற வேதனையை அனுபவிப்பதாகவும், அதனால் இறந்தவரை நேசித்தவர், உறவினர்கள் முன்னிலையில் மானசீகமாக இறந்தவரை திருமணம் செய்துகொண்டு அவர்களுக்காக வாழ்வை அற்பணிக்கும் ஒரு சடங்கு நிகழ்த்தப்படுகிறது. மேலும், பேய் திருமண செய்துகொள்பவர் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு, மீதி வாழ்வை வாழ்வார்கள் எனக் கூறப்படுகிறது.மணமகள்

எப்படி நடக்கும் இந்த திருமணம்:

இறந்தவர்களின் புகைப்படம், அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் பிற கலைப்பொருட்களை பிரதிநிதித்துவப்படுத்தி, இறந்தவரை திருமணம் செய்துகொள்பவர் திருமண உடையில் அலகரித்து திருமணம் போன்றே விமரிசையாக இந்த சடங்கு நிகழ்த்தப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88சிவகாசி: காதல் திருமணம்; மனைவி கண்முன்னே இளைஞர் படுகொலை - பெண்ணின் அண்ணன், தம்பி உள்ளிட்ட மூவர் கைது


http://dlvr.it/TB5HR7

Thursday, 25 July 2024

அதிக மக்கள் தொகை, நிதி நெருக்கடி... ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் சீனா!

சீனாவில் மக்கள் தொகை மற்றும் வயதானவா்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட்டின் நிதி நெருக்கடியைக் கருத்தில்கொண்டு, பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை உயர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. population

இதற்கு முன்பு, சீனாவில் ஆண்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக இருந்தது. அதே போல, அலுவலகப் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு 55, உடலுழைப்பை அதிகமாகச் செலுத்தும் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு 50 என ஓய்வு பெறும் வயது நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பெரிய அரசியல் மாநாட்டை கடந்த வாரம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. அதில், சட்டபூர்வ ஓய்வு பெறும் வயதை அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. சட்டப்பூர்வ ஓய்வு பெறும் வயதை படிப்படியாக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை முதியோர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள முதியோர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், ஓய்வுபெறும் வயது எத்தனை அகவைகள் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. 2023-ம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட ஓய்வூதிய மேம்பாட்டு அறிக்கையின்படி, ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு 65 ஆக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ’இந்த முடிவால் கடினமான உடல் உழைப்பு உள்ளிட்ட வேலைகளில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற விரும்புபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.சீனா (மாதிரி படம்) GM Crops: மக்காச்சோளம், சோயாபீன்.. 81 மரபணு மாற்று விதைகளுக்கு சீனா அனுமதி! சூழலியலாளர்கள் அதிர்ச்சி

மேலும், வசதியான, அதிக லாபம் ஈட்டக்கூடிய வேலைகளில் இருப்பவர்கள் ஓய்வு பெறுவதைத் தேர்வுசெய்ய மாட்டார்கள். எனவே, இளைய தலைமுறையினருக்கு வேலை கிடைப்பது கேள்விக்குறியாகிவிடும். தாமதமான ஓய்வு என்பது அவர்களின் ஓய்வூதியங்களையும் தாமதமாக்கும்’ எனப் பலரும் இணையத்தில் தங்கள் ஆதங்கங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


http://dlvr.it/TB3GqH

’மன்னார்குடியின் மகள் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் ஆவார்’- எதிர்பார்ப்பில் சொந்த ஊர் மக்கள்!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது. இதில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இருவரும் அனல் பறக்க பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராம மக்கள், அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து தெரிவித்து ஃப்ளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அத்துடன் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக வேண்டும் என கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ், துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தாத்தா பி.வி.கோபாலன் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த அரசாங்கத்தில் ஸ்டெனோகிராஃபராக இருந்தவர். அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் அதிகாரியாகவும் பணியாற்றினார். அகதிகளை கணக்கெடுப்பதற்காக ஆங்கிலேய அரசு, பி.வி. கோபாலனை ஜாம்பியா நாட்டுக்கு அனுப்பியது. குடும்பத்துடன் ஜாம்பியா நாட்டுக்குச் சென்றவர் பணி முடிந்ததும் அப்படியே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

பி.வி.கோபாலனின் இரண்டாவது மகள் சியாமளா. இவருடைய மகள் தான் கமலா ஹாரிஸ். வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டே அரசியலில் ஈடுபட்டு வந்தார் கமலா ஹாரிஸ். கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராக பதவி வகித்தது இவருக்கான சிறப்பு. படிப்படியாக அரசியலில் வளர்ந்தவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. துணை அதிபராக திறம்பட செயல்பட்டதாக கமலா ஹாரிஸ் குறித்து அமெரிக்கர்கள் பேசி வருகின்றனர்.மன்னார்குடி, துளசேந்திரபுரம்

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கும் என அறிவிக்கபட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சில காரணங்களால் தற்போதைய அதிரபான ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது. ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளராக அக்கட்சி யாரை அறிவிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அமெரிக்க மக்களிடம் நிலவியது. இந்தச் சூழலில் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கபட்டார். இது கண்டங்கள் கடந்து மன்னார்குடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இது குறித்து துளசேந்திரபுரம் கிராமத்தினர் தரப்பில் பேசினோம், ``இந்தியா வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாலும் பூர்வீக ஊரான துளசேந்திரபுரத்தை மறக்காதவர். எப்போதும் ஊருடன் தொடர்பில் இருப்பவர். அவரது குடும்பத்தினர்களான உறவினர்கள், சென்னை மற்றும் துளசேந்திரபுரத்தில் வசிக்கின்றனர். அவர்கள் மூலமாக ஊர் குறித்த நிகழ்வுகளை கேட்டு தெரிந்து கொள்வார். அவரது குலத்தெய்வமான தர்மசாஸ்தா கோயில் எங்கள் ஊரில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றது இதற்கு கமலா ஹாரிஸ் நன்கொடை வழங்கினார். நன்கொடை வழங்கியவர்களின் பெயர் பட்டியலில் கமலா ஹாரிஸ் பெயர் இடம்பெற்றுள்ளது.கோயில் கல்வெட்டில் கமலா ஹாரிஸ் பெயர்

எங்க மண்ணோட தவப்புதல்வி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் கொடுத்திருக்கிறது. இதை வெளிப்படுத்தும் விதமாக ஃப்ளக்ஸ் பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளோம். மேலும் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறோம். மன்னார்குடியின் மகள் அமெரிக்க அதிபராவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்கள் எண்ணத்தையும், வேண்டுதலையும் உறவினர்கள் மூலமாக அவருக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். கமலா ஹாரிஸ் அதிபராக வெற்றி பெற்ற பிறகு துளசேந்திரபுரத்திற்கு வந்து மக்களை, உறவுகளை சந்திக்க வேண்டும். உலகமே நிமிர்ந்து பார்க்கும் விருட்சமாக வளர்ந்து இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இதுவே எங்களின் ஆசை, விருப்பம்!'' என்றனர் சந்தோஷப் பெருக்கில்.


http://dlvr.it/TB3GQ1

Crypto Scam: ஒரே போன் காலில் ரூ. 3 கோடி அபேஸ்... அமெரிக்க பெண்ணை டெல்லி நபர் ஏமாற்றியதெப்படி?

டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர், அமெரிக்க பெண்ணிடம் ஒரே போன் காலில் மூன்று கோடி ரூபாயைச் சுருட்டிய சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, அமெரிக்காவைச் சேர்ந்த லிசா ரோத் என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஜூலை 4-ம் தேதி மைக்ரோசாஃப்ட் ஏஜென்ட் என்று ஒருவரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பை ஏற்ற அமெரிக்க பெண்ணிடம், `தங்களது வங்கிக் கணக்கு பாதுகாப்பானதாக இல்லை. உடனடியாக க்ரிப்டோகரன்சி வாலட்டுக்கு (cryptocurrency wallet) மாற்றுங்கள்' என்று அந்த நபர் கூறியிருக்கிறார்.க்ரிப்டோகரன்சி

அதோடு, அந்தப் பெண்ணின் கணினியில் அங்கீகரிக்கப்படாத அக்செஸைப் பெற்று, அவரின் பெயரில் ஒரு கிரிப்டோகரன்சி கணக்கை உருவாக்கி அவரின் பெயரில் இருந்த 4,00,000 டாலரை (ரூ.3.3 கோடி) அதற்கு மாற்றுமாறு அந்த நபர் கட்டாயப்படுத்தினார். இதுவொரு மோசடி என்று அறியாத அந்தப் பெண், பின்னர் அந்தக் கணக்கை செக் செய்தபோது தன்னுடைய பணம் மொத்தமும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், சிபிஐ இதில் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது. அதோடு, அமலாக்கத்துறையும் ஒருபக்கம் இதில் விசாரணை மேற்கொள்ள அடுத்தடுத்து முடிச்சுகள் அவிழ்ந்தன.

அந்த விசாரணையில், `அமெரிக்க பெண்ணிடமிருந்து மோசடி செய்யப்பட்ட அந்த க்ரிப்டோகரன்சி , பிரபுல் குப்தா மற்றும் அவரது தாயார் சரிதா குப்தா ஆகியோரின் வாலட்டுகளுக்குச் சென்றிருக்கிறது. பின்னர், கரன் சுக் என்பவர் பிரபுல் குப்தாவிடமிருந்து அந்த க்ரிப்டோகரன்சியைப் பெற்று, வேறு பல வாலட்டுகளில் டெபாசிட் செய்திருக்கிறார். அதையடுத்து, இந்த க்ரிப்டோகரன்சி விற்று பணமாக்கப்பட்டு கரன் சுக் மற்றும் லக்ஷ்ய விஜ் ஆகியோரின் பேரில் வேறு பல வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. இந்தப் பணத்தை அவர்கள் ஆன்லைன் சூதாட்ட செயலிகளிலும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்று தெரியவந்திருக்கிறது.லக்ஷ்ய விஜ்

இந்தத் தகவல்களையெல்லாம் விசாரணை அதிகாரிகள் சேகரிக்க, கடந்த மாதம் பல இடங்களில் சோதனை நடத்தி டிஜிட்டல் ஆதாரங்கள் மீட்கப்பட்டதோடு, மோசடியில் பயன்படுத்தப்பட்ட க்ரிப்டோகரன்சி வாலட்டுகளை வைத்திருந்தவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டது. இறுதியில், லக்ஷ்ய விஜ் தான் இந்த மோசடியில் மூளையாகச் செயல்பட்டவர் எனத் தெரியவந்தது.கைது

பின்னர், கைது நடவடிக்கையில் இறங்கிய அமலாக்கத்துறை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜூலை 22-ம் தேதி அவரைக் கைதுசெய்தது. கிழக்கு டெல்லியின் தில்ஷாத் கார்டனில் வசிக்கும் இந்த லக்ஷ்ய விஜ், கடந்த ஆண்டு மார்ச்சில் ஒருமுறை குஜராத் போலீஸாரால் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் டெல்லி போலீஸின் அதிகாரியொருவர் அவரை விடுவித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர், ஐந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.மத்திய பட்ஜெட்: உரையின் இடையே குறுக்கிட்ட ஓம் பிர்லா... கேள்வியால் வாயடைக்கவைத்த அபிஷேக் பானர்ஜி!


http://dlvr.it/TB2v5y

Monday, 22 July 2024

Kamala Harris Trolls: "இந்தியர்களைவிட அமெரிக்கர்கள் பிற்போக்கானவர்கள்" - கங்கனா ரணாவத் கண்டனம்!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இதில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிலிருந்தார். சில காரணங்களால் போட்டியிலிருந்து விலகுவதாக பைடன் கடந்த ஜூலை 21-ம் தேதி அறிவித்தார். மேலும், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட துணை அதிபர் கமலா ஹாரிஸுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்

இதனால் ஒருதரப்பில் கமலா ஹாரிஸிற்கு ஆதரவுகள் குவிந்து வர, மற்றொருபுறம் ஒருசிலர் கமலா ஹாரிஸை ட்ரோல் செய்து மீம்கள் பதிவிட்டு வருகின்றனர். இது அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும் பேசு பொருளாகியிருக்கிறது.

அதில் பெரும்பாலான மீம்கள் கமலா ஹாரிஸும், முன்னாள் சான் பிரான்சிஸ்கோ மேயர் வில்லி பிரவுனும் 1990 காலத்தில் காதல் உறவிலிருந்ததாகவும், கமலா ஹாரிஸ் 29 வயதாக இருக்கும்போதே 60 வயதிருக்கும் மேயர் வில்லி பிரவுனுடன் பழகி வந்ததாகவும் குறிப்பிட்டு ஏகப்பட்ட மீம்களை வைரல் செய்து வந்தனர். இந்நிலையில் கமலா ஹாரிஸ் பற்றிய இதுபோன்ற வதந்தியான மீம்களுக்குப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 'அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மிகப்பெரிய தலைவரை இப்படி கீழ்த்தரமாக ட்ரோல் செய்வது கண்ணியமான செயலல்ல' என்று பலரும் இது குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.கங்கனாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

இந்நிலையில் நடிகையும், பா.ஜ.க மக்களவை உறுப்பினருமான கங்கனா இது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "ஜோ பைடன் அவர்கள் கமலா ஹாரிஸிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதால் இப்படியான மீம்கள் வைரல் செய்யப்பட்டிருக்கிறது. நான் ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கவில்லை. இருப்பினும் மதிக்கத்தக்க ஒரு பெண் தலைவரை இப்படி கீழ்த்தரமாகப் பேசுவதை, ட்ரோல் செய்வதையும் நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக இருந்த ஒரு வயதான பெண் அரசியல்வாதி இந்த அளவிற்கு பாலியல் ரீதியிலான பாகுபாட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

அதுவும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நவீன நாடுகளில் இதுபோன்ற பிற்போக்குத்தனங்கள் நடப்பதைப் பார்க்கும்போது, அதற்கு இந்தியா எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது. இந்தியர்களை விட அமெரிக்கர்கள் மிகவும் பிற்போக்குத்தனமானவர்கள்" என்று பதிவிட்டு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் தனது கண்டத்தைத் தெரிவித்திருக்கிறார்.


http://dlvr.it/T9xqCB

Agave Cultivation: வறண்ட நிலங்கள்; தண்ணீர் இல்லை... கற்றாழை சாகுபடியில் காசு பார்க்கும் விவசாயிகள்!

நம் ஊர் வேலியோரங்களில் விளைந்து கிடக்கும் நீலக் கற்றாழையில் முள்ளால் பெயரெழுதி விளையாடியது ஒரு காலம். சில நேரங்களில் இந்தக் கற்றாழையை வெட்டி அதிலிருந்து நார்களைப் பிரித்து கயிறு எடுப்பார்கள். ஆனால், இந்தக் கற்றாழையிலேயே காசு பார்க்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் அமெரிக்க விவசாயிகள். நீலக்கற்றாழை சாகுபடி

ஆனைக் கற்றாழை, யானைக் கற்றாழை, ரயில் கற்றாழை என்று பல பெயர்களில் அழைக்கப்படும் நீலக் கற்றாழை (Agave) மருத்துவ குணம் நிரம்பிய ஒரு தாவரம்.  உச்சி முதல் உள்ளங்கால் வரை பயனளியக்கக்கூடிய கற்றாழை. மெக்சிகோவை தாயகமாகக் கொண்ட இந்தக் கற்றாழை  ஆசியா, ஐரோப்பா, அமெரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் கற்றாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சேலம், தூத்துக்குடி மாவட்டங்களில் கற்றாழை வளர்க்கப்படுகிறது.  எனினும், இதில் கணிசமான வருமானம் கிடைக்காது என்ற கருத்து நிலவுகிறது. 

கடும் வறட்சியால் பாதித்த கலிபோர்னியா!

இந்நிலையில் அமெரிக்காவில் கற்றாழை மூலம் விவசாயிகள் பெரும் வருமானம் ஈட்டி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. சோற்றுக்கற்றாழை, செங்கற்றாழை, சிறு கற்றாழை என்று பலவகைகள் இருந்தாலும்,  இதில் நீலக்கற்றாழைதான் லாபம் தரக்கூடிய பயிராக அமெரிக்காவில் இருந்து வருகிறது.காற்றாழை சாகுபடி விவசாயிகள்தலைமுடி முதல்... தாம்பத்தியம் வரை - கணக்கற்ற மருத்துவ குணங்கள் கொண்ட கற்றாழை!

கலிஃபோர்னியா மாகாணத்தில் விவசாய சாகுபடிக்கு அதிகளவு நீரை பயன்படுத்தியதால், அப்பகுதி கிணறுகள் வறண்டு போயின. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்ததால் விவசாயம் செய்ய வழியின்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, பத்தாண்டுகளுக்கு முன்பு அந்த மாகாண அரசு, நிலத்தடி நீர் பயன்பாடு தொடர்பாக ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. எனினும், நிலத்தடி நீர் குறைவது தவிர்க்கப்படவில்லை; புவி வெப்பமயமாதல் அதிகரித்தது.  நீர் இல்லாமல் விவசாய சாகுபடி முடங்கின.

வறட்சிக்கு வரப்பிரசாதம் கற்றாழை!

இதையடுத்து, வறட்சியை தாங்கும் பயிர்களை விவசாயிகள் நாடத் தொடங்கினர். முதலில் 12 விவசாயிகள் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன்பு, நீலக்கற்றாழை சாகுபடியைத்தொடங்கியதோடு இதற்கென கவுன்சிலையும் ஏற்படுத்தினர். விரைவிலேயே இக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 

கலிபோர்னியாவை சேர்ந்த விவசாயி ஸ்டூவர்ட் உல்ப் என்பவர்,  தண்ணீர் பற்றாக்குறையால் 2 லட்சம் நீலக்கற்றாழையை நடவு செய்தார். மற்ற பயிர்களுக்கு தேவைப்படும் நீரில் பத்தில் ஒரு பங்கே இதற்கு தேவைப்பட்டது.  சாகுபடி செழிக்க, ஸ்டூவர்ட்டின் வருமானமும் அதிகரித்தது. காற்றழை சாகுபடியில்கற்றாழை... பாசன வசதி குறைந்த நிலங்களிலும் வருமானத்துக்கு வாய்ப்பு!

மதுபான உற்பத்தியில் கற்றாழை!

எந்தவொரு பயிராக இருந்தாலும் அதற்கு விற்பனை வாய்ப்பு இருந்தால் மட்டுமே தொடர்ந்து சாகுபடி நடக்கும். அந்த வகையில் மருத்துவ குணம் நிறைந்த கற்றாழை அழகு சாதனத்துறையில் பங்களிப்பு செய்து வருகிறது. இதுதவிர மதுபான தயாரிப்புக்கும் இது கைகொடுக்கிறது. மெக்சிகோ நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டகீலா மற்றும் மெஸ்கால் போன்ற மதுபானங்கள் தயாரிப்பில் இவ்வகை நீலக் கற்றாழை பயன்படுகிறது. உயர்தர மதுபானங்கள் தயாரிக்க நீலக்கற்றழையின் தேவை உள்ளதால், இதை சாகுபடி செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

ஒற்றுமையே வலிமை

நீலக்கற்றாழையின் பயன்பாடுகள் குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளது கலிபோர்னியா நீலக்கற்றாழை கவுன்சில் (California Agave Council). அதில், "முழுக்க முழுக்க வறண்ட பகுதிகளுக்கான தாவரம் இது. தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளுக்கு ஏற்றது. மரங்களைப் போன்றே இதுவும் கார்பன் டை ஆக்ஸைடை அதிகளவு ஈர்க்கிறது. 10-12 அடி உயரத்துக்கு வளரும். 25 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். நீரிழிவு நோய்க்கு பயன்படும் இன்சுலின் தயாரிப்பில் பயன்படுகிறது. இதேபோல பயோ டீசல் தயாரிப்பு, பயோ எத்தனால் தயாரிப்பு, கால்நடை தீவனம், ஐஸ் க்ரீம், தேன், கயிறு, நாரிழை. மதுபான தயாரிப்புகளில் பயன்படுகிறது" என்று இதன் பயன்பாடுகளை பட்டியலிட்டுள்ளது.கற்றாழை அறுவடையில் விவசாயிகள்தேகப் பொலிவுக்குத் தினமும் கற்றாழை!

குறைந்த நீர்த்தேவை, கடும் வறட்சியை தாங்கும் தன்மையால் நீலக்கற்றாழை நடவு கலிபோர்னியாவில் ஒரு லாபமீட்டும் பயிராக மாறியுள்ளது. விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து உற்பத்தி செய்து மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நீலக் கற்றாழையை வெட்டி விற்பனைக்கு அனுப்புகிறார்கள். அதேபோல நீலக்கற்றாழையை எப்படி சாகுபடி செய்வது, எந்த ரகங்கள் ஏற்றவை, கன்றுகள் எங்கு கிடைக்கும் உள்ளிட்ட பல தகவல்களை விவசாயிகள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் விதமாக இந்த கவுன்சில் செயல்படுகிறது.

நமது நாட்டிலும் அழகு சாதனத்துறை, மருத்துவப் பயன்பாடுகளுக்கு கற்றாழைத் தேவை அதிகளவில் உள்ளது. தண்ணீர் பிரச்சனை, மழை பொய்த்துப் போகுதல் போன்ற சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதை இங்கு சாகுபடி செய்து வருமானம் ஈட்ட முடியுமா என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்கள் துறையின் தலைவர் முனைவர் சரஸ்வதியிடம் பேசியபோது, "மருத்துவ பயன்பாடுகள் கொண்ட இந்தக் கற்றாழையை சாகுபடி செய்ய முடியும். ஆனால், இதற்கான விற்பனை வாய்ப்பு இங்கு குறைவு. கற்றாழை பதப்படுத்துதல்

காற்றாழை சாகுபடியில் ஆர்வம் இருக்கும் விவசாயிகள் சோற்றுக் கற்றாழையைச் சாகுபடி செய்யலாம். காரணம், சோற்றுக் கற்றாழைக்கு இங்கு மார்க்கெட் இருக்கிறது. ஆனால், Agave என்றழைக்கப்படும் நீலக் கற்றாழைக்கு விற்பனை வாய்ப்பு குறைவு. ஏதாவது நிறுவனங்கள், இதை வாங்கிக் கொள்கிறது என்றால் தாராளமாக சாகுபடி செய்யலாம். இந்த நீலக் கற்றாழை சார்ந்த ஆராய்ச்சிகள் பெருகினால், இந்தப் பயிருக்கும் வருமான வாய்ப்புகள் பெருகும்" என்றார்.

மத்திய அரசின் மருத்துவ மற்றும் நறுமண தாவரங்கள் ஆராய்ச்சி நிறுவனம், இதுகுறித்தான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. விரைவில் இதுசார்ந்த அறிக்கை வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.


http://dlvr.it/T9w8xM

பைடன் வெளியே... கமலா ஹாரிஸ் உள்ளே(?) - ட்ரம்புக்கு சாதகமா, பாதகமா?!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியில் இருந்தார். திடீரென, சில காரணங்களால் போட்டியிலிருந்து விலகுவதாக பைடன் நேற்று (ஜூலை 21-ம் தேதி) அறிவித்தார். டொனால்டு ட்ரம்ப்

வயது முதிர்வு காரணமாக பைடனின் செயல்திறனில் தடுமாற்றம் ஏற்பட்டது. எனவே, போட்டியிலிருந்து அவர் விலக வேண்டுமென்று சொந்தக்கட்சியினரிடம் இருந்து அழுத்தம் வந்தது. இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு ஆளான ஜோ பைடன், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான், அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்திருக்கிறார்.

போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகுவதாக அறிவித்ததால், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு அவர் ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதே என் நோக்கம். ஆனால், ஜனநாயக கட்சியின் நலன், நாட்டின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதிபர் தேர்தலிலிருந்து விலகுகிறேன். எனது முடிவு தொடர்பாக நாட்டு மக்களிடையே விரைவில் உரையாற்றுவேன்’ என்று கூறியிருக்கிறார். கமலா ஹாரிஸ்

ஜோ பைடன் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் போட்டியிட்டபோது, கமலா ஹாரிஸை துணை அதிபராகத் தேர்வுசெய்ய வேண்டும் என்பது என் முடிவாக இருந்தது. தற்போது, அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்க வேண்டும். இதற்கு என் ஆதரவையும், ஒப்புதலையும் வழங்குகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

ஜனநாயக கட்சியின் விதிகள்படி, போட்டியிலிருந்து விலகும் ஜோ பைடனால், அடுத்த அதிபர் வேட்பாளராக யார் இருப்பார் என்பதைக் கூறிவிட்டுச்செல்ல முடியாது. எனவே, அடுத்த வேட்பாளர் யார் என்பதை முடிவுசெய்வதற்காக ஆகஸ்ட் 19 முதல்வர் 22-ம் தேதிவரை சிகாகோவில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவுசெய்யப்படும் என்று ஜனநாயக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ட்ரம்ப், பைடன்

அதிபர் தேர்தலில் வேட்பாளரைத் தேர்வுசெய்ய ஒவ்வொரு மாகாணத்திலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு. அதில், ஜோ பைடனுக்குத்தான் பெரும்பாலான ஆதரவு கிடைத்தது. எனவே, வேட்பாளராக ஜோ பைடன் கைகாட்டும் நபரை அவ்வளவு எளிதாக கட்சி நிர்வாகிகளால் புறந்தள்ளிவிட முடியாது என்றும் சொல்லப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

இந்த நிலையில், ‘நேர்மையிலாத ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லாதவர்’ என்று குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் விமர்சித்திருக்கிறார். மேலும், ‘கமலா ஹாரிஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், பைடனைவிட கமலா ஹாரிஸைத் தோற்கடிப்பது எளிது’ என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார். கமலா ஹாரிஸ்

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக, கமலா ஹாரிஸ் பெயருடன் கலிஃபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், மிச்சிகன் ஆளுநர் கிரேட்சன் விட்மெர் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.Kanwar Yatra: உணவகங்களில் பெயர்ப்பலகை... உ.பி-யில் யோகி சர்ச்சை உத்தரவும் பின்னணியும்!

அதே நேரம், அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு, தெற்கு ஆசியாவைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்ற பேச்சு ஜனநாயக கட்சி வட்டாரத்தில் அடிபடுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ட்ரம்ப்

அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி பார்த்தால், கமலா ஹாரிஸை நிறுத்துவது டொனால்டு ட்ரம்ப்புக்கு சாதகமான சூழலை உருவாக்கலாம். குறிப்பாக, தன் பதவி காலத்தில் கமலா ஹாரிஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் செயல் எதையும் செய்யவில்லை என்ற பேச்சும் நிலவுகிறது. எனினும் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ள சூழலில், பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உள்ளதையும் மறுக்க முடியாது என்கிறார்கள் சர்வதேச அரசியல் விமர்சகர்கள்.

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023 - Part 01 ஐ காண

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />

http://dlvr.it/T9vmcw

US Elections: `ஜோ பைடனை விட கமலா ஹாரிஸைத் தோற்கடிப்பது இலகுவானது!' - டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலிருந்து அதிபர் ஜோ பைடன் விலகிய நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தேர்தலை எதிர்கொள்வார் எனத் தகவல் வெளியானது. ஜோ பைடன் ஆதரவை கமலா ஹாரிஸுக்கு வழங்கும் முடிவும், அதைத் தொடர்ந்து கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற தகவலுக்கும் மத்தியில், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், ``இந்த தேர்தலில் ஜோ பைடனை தோற்கடிப்பதைவிட கமலா ஹாரிஸைத் தோற்கடிப்பது மிகவும் இலகுவானது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.ட்ரம்ப் - கமலா ஹாரிஸ்

அதைத் தொடர்ந்து தன் எக்ஸ் பக்கத்தில், `ஜோ பைடன் நமது நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக மோசமான அதிபராக இருந்து, பதவி இழக்கிறார். அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். தற்போதுவரை பொய்கள், போலிச் செய்திகளால் மட்டுமே தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டவர்.

ஜோ பைடனின் மருத்துவர், ஊடகங்கள் உட்பட அவரைச் சுற்றியுள்ள அனைவரும் அவர் அதிபராக மீண்டும் தொடர முடியாது என்பதை அறிந்திருந்தார்கள். அவரது அதிபர் பதவியால் அமெரிக்கா பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவரால் ஏற்பட்டிருக்கும் சேதத்தை மிக விரைவாகச் சரிசெய்வோம். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக உயர்த்துவோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.`போரை முடிவுக்கு கொண்டுவருவேன்' - உக்ரைன் அதிபரிடம் உறுதியளித்த ட்ரம்ப்... வாழ்த்திய ஜெலன்ஸ்கி!


http://dlvr.it/T9vS0g

பின்வாங்கிய ஜோ பைடன்: `கமலா ஹாரிஸ் டு விட்மர்’ - அதிபர் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் யார் யார்?!

நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. அதைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜோ பைடனை எதிர்த்து தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து, ஜோ பைடனின் வயது மூப்பும், அவருடைய சில பொருத்தமற்ற பேச்சுகளாலும் அவர் அங்கம் வகிக்கும் ஜனநாயகக் கட்சியிலிருந்த அவருக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்ப வழிவகுத்தது. அதைத் தொடர்ந்து, அவருடைய உடல், மனநிலை குறித்து பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.கமலா ஹாரிஸ் - ஜோ பைடன்

ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஜோ பைடன் தேர்தலிலிருந்து விலக வேண்டும் என வெளிப்படையாக பேசத் தொடங்கினர். இந்த நிலையில், அதிபர் தேர்தலிலிருந்து பின்வாங்குவதாக ஜோ பைடன் அறிவித்திருக்கிறார். மேலும், துணை அதிபராக செயல்பட்ட கமலா ஹாரிஸை தான் ஆதரிப்பதாகவும் அறிவித்திருக்கிறார். இன்னும் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், யாரெல்லாம் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த அனுமானம் றெக்க கட்ட பறக்க ஆரம்பித்துள்ளது...

கமலா ஹாரிஸ்:

ஜோ பைடன் பின்வாங்குவதற்கு முன்பே வெளிப்படையாக கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவிக்கலாம் என பேசப்பட்டது. தற்போது ஜோ பைடனும் கமலா ஹாரிஸை ஆதரிப்பதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்படலாம் என எதிர்ப்பார்ப்பு எகிறியிருக்கிறது. ஜோ பைடன் ஜனவரி 2021 பதவியேற்றதிலிருந்து அமெரிக்கத் துணை அதிபராக தன் செயல்பாடுகளால் பெரிதும் கவனம் ஈர்த்தவர் கமலா ஹாரிஸ்.கமலா ஹாரிஸ்

இவருடைய தந்தை ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய தாய் இந்தியாவைச் சேர்ந்தவர். கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றிய முதல் பெண் மட்டுமல்ல முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் என்ற பெருமைக்குறியவர். தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் அமெரிக்க செனட்டர் என்ற புகழும் உண்டு. தடகள வீரரான கமலா ஹாரிஸ், ஒரு வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மிகவும் கண்டிப்பானவர் என்ற பெயரையும் குற்றங்கள், அத்துமீறிய குடியேற்றம் ஆகிய சிக்கல்களில் தனி கவனம் செலுத்துபவர் என்ற பார்வையும் மக்களுக்கு இவர் மீது இருக்கிறது.

ஆனால் முற்போக்கு ஜனநாயகவாதிகள் சிலர் அவரின் நடவடிக்கைகள் சிறுபான்மையினரை கடுமையாக பாதிக்கும் என விமர்சிப்பதோடு, கமலா ஹாரிஸுக்கு மாற்றாக வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனற வாதத்தையும் முன்வைக்கிறார்கள். கவின் நியூசோம்

கவின் நியூசோம்

அமெரிக்க அதிபர் வேட்பாளர் பட்டியலில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் மற்றொரு பெயர், கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம். அமெரிக்காவை புரட்டிப்போட்ட கருக்கலைப்பு விவகாரத்தின் முக்கிய அங்கமாக விளங்கிய சான் பிரான்சிஸ்கோவின், முன்னாள் மேயரான இவர், தொடர்ந்து ஜோ பைடனை ஆதரித்து வந்தார். அதே நேரம் அவர் தேர்தலிலிருந்து விலகினால், தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பதாக வெளிப்படையாகவே பேசி வந்தார்.

சமீப காலமாக அவர் தனது சர்வதேசப் பயணத்தை அதிகரித்தது, தனது சாதனையைப் பற்றி பல விளம்பரங்களை வெளியிட்டது, அரசியல் தொடர்பான நடவடிக்கைக் குழுவில் மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்தது என பல்வேறு செயல்பாடுகளை அதற்காக முன்னெடுத்தார். 2028-ம் ஆண்டுக்கான அதிபர் தேர்தலை நோக்கி கவின் நியூசோம் திட்டமிட்டு செயல்படுகிறார் என ஊடங்கங்களும் இதை கவனித்து செய்தி வெளியிட்டது குறிப்பிடதக்கது. ஆனால், தற்போதே அதிபர் வேட்பாளர் இடம் வெற்றிடமாக இருப்பதால், அதில் தன்னை பொருத்திப்பார்த்துக்கொள்ள முயல்வதில் எந்த தவறும் இல்லை என அவர் கருதக்கூடும். எனவே அதற்கான முன்னெடுப்புகளை அவர் மேற்கொள்வார்.கிரெட்சென் விட்மர்

கிரெட்சென் விட்மர்

அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் மூன்றாவதாக முக்கியமானவராக மெக்சிகன் கவர்னர் கிரெட்சென் விட்மர் கவனம் பெறுகிறார். ஜோ பைடனுக்கு அடுத்து அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பால் அதிகம் விமர்சிக்கப்பட்டவர்களில் ஒருவரான இவர், தொழிலாள வர்க்க மக்களின் பெரிய ஆதரவை பெற்றவர். ஆப்ரிக்க அமெரிக்க இன மக்கள், அரபு சமூக மக்களின் நம்பிக்கைக்குறியவராக கருதப்படும் இவரை, தீவிர வலதுசாரி போராளிக் குழு கடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த விவகாரம் வெளியானதால் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானார். இந்த அதிபர் தேர்தலில் கவனம் பெறும் மாநிலங்களில் ஒன்று மெக்சிகன். எனவே, அந்தப் பகுதியில் வலுவான ஆதரவை கொண்டிருக்கும் கிரெட்சென் விட்மரை தேர்வு செய்வதற்கு சாத்தியங்கள் உண்டு எனவும் பேசப்படுகிறது.

ஜோஷ் ஷாபிரோ

பென்சில்வேனியாவை வழிநடத்தும் கவர்னரான ஜோஷ் ஷாபிரோவும் அதிபர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். 2022-ம் ஆண்டு நடந்த கவர்னர் தேர்தலில், தீவிர வலதுசாரி கட்சியான குடியரசுக் கட்சியுடன் போட்டியிட்டு, பெருவாரியான ஆதரவில் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்பு இரண்டு முறை மாநில அட்டர்னி ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். திறமையான பேச்சாளரான இவர், ஆயிரக்கணக்கான குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த கத்தோலிக்க பாதிரியார்களுக்கு எதிராக நின்றது, ஓபியாய்டு வலி நிவாரணி OxyContin தயாரிப்பாளரான பர்டூ பார்மாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது போன்ற தன் செயல்பாடுகளால் மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்டவர். இவரும் அதிபர் தேர்தல் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் இருக்கிறார்.ஜோஷ் ஷாபிரோ

இவர்கள் தவிர, இல்லினாய்ஸ் கவர்னர் ஜேபி பிரிட்ஸ்கர், மேரிலாந்து கவர்னர் வெஸ் மூர், கென்டக்கி கவர்னர் ஆண்டி பெஷியர், ஆகியோரின் பெயர்களும் அடிபடுகிறது என்றாலும், இவர்களுக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன எனவும் பேசப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88Joe Biden: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் ஜோ பைடன்!


http://dlvr.it/T9vRgp

Sunday, 21 July 2024

US Elections 2024: மீண்டும் ட்ரம்ப்பை எதிர்த்து களம் இறக்கப்படுகிறாரா ஹிலாரி கிளிண்டன்?!

நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் ஜோ பைடனுடனான விவாதத்தில் ட்ரம்ப் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதும், ட்ரம்ப் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடும் ட்ரம்ப்புக்கு ஆதரவான மனநிலையை உருவாக்கியிருக்கிறது. அதே நேரம், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்களே `ஜோ பைடனுக்கு பதிலாக வேறு ஒரு வேட்பாளரைக் களமிறக்க வேண்டும்.டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பைடன்

இதே நிலை நீடித்தால் தேர்தலில் வெற்றிபெறுவது கடினம்' எனக் கூறி வருகின்றனர். இதற்கிடையில், இந்திய வம்சாவளியான துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், ஜோ பைடனுக்கு பதிலாக ஹிலாரி கிளிண்டன் போட்டியிட வாய்ப்பிருப்பதாகத் தகவல் பரவி வருகிறது.

முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான ஹிலாரி கிளிண்டன், 2016-ம் ஆண்டு அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இந்த நிலையில், மீண்டும் அவர் தேர்தலைச் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. 2016 தேர்தலில் நியூயார்க்கில் குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட துணைவேந்தரான மைக் பென்ஸ், 304 தேர்தல் வாக்குகளைப் பெற்று வென்றார். ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கிளிண்டன், 227 தேர்தல் வாக்குகளைப் பெற்றிருந்தார்.ஹிலாரி!

அதே நேரம், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் (62,984,828 வாக்குகள் 46.1%) ஒப்பிடும்போது, ஹிலாரி கிளிண்டன் (65,853,514 அல்லது 48.2%) வாக்குகள் பெற்றபோதும், ட்ரம்ப் எலக்டோரல் காலேஜ் வாக்குகள் (அதாவது, வாக்காளர்கள் தேசிய அளவில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். மாகாண அளவில் போட்டியிடும் வேட்பாளர்களையே தேர்ந்தெடுப்பார்கள்.

இரண்டு மாகாணங்களில் மட்டுமே வெற்றி பெற்றவர் அனைத்து வாக்குகளையும் எடுத்துக்கொள்வார் என்ற விதியின் அடிப்படையில், அந்த மாகாணங்களில் எந்த வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகிறாரோ அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் வழங்கப்படும். அதனால்தான் 2016-ல் ஹிலாரி கிளிண்டன் தேசிய அளவில் மக்களின் வாக்குகளை அதிகம் பெற்றாலும், எலக்டோரல் காலேஜ் வாக்குகளை) குறைவாகப் பெற்றதால் ட்ரம்ப்பிடம் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில்தான் மீண்டும் ஹிலாரி கிளிண்டன் தேர்தலைச் சந்திக்க விருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு; விரைவில் புதிய வேட்பாளர்?! - என்ன சொல்கிறது கட்சி?


http://dlvr.it/T9sxGk

Saturday, 20 July 2024

அமெரிக்காவைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ளாத கர்நாடகம்!

‘தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு’ என்றொரு திட்டத்தைக் கையில் எடுத்து, உலக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அதிர வைத்துள்ளது, அண்டை மாநிலமான கர்நாடகா.

‘நிர்வாகம் சார்ந்த வேலைகளில் 50%, நிர்வாகம் சாராத வேலைகளில் 75%, குரூப் சி மற்றும் டி பிரிவு வேலைகள் 100% கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த மண்ணின் மைந்தர்களுக்கே தர வேண்டும்’ என்கிற மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வரவிருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தது, கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு. எப்போதுமே கர்நாடகாவில் இப்படிப்பட்ட ‘மண்ணின் மைந்தர்’ கோஷங்களுக்கு பெரும்கூட்டமே லாலி பாடுவது வாடிக்கை. ஆனால், இந்தத் தடவை அது ‘பூமராங்’ ஆகிவிட்டது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தொழில் நகரம் எனும் அளவுக்கு உலக அளவில் புகழ்பெற்றிருக்கிறது கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரு. உலகின் பல நாடுகளிலிருக்கும் நிறுவனங்கள் எல்லாம் இங்கே குவிந்து தொழில் நடத்தி வருகின்றன. பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை கொடுத்து வருகின்றன. இதன் காரணமாக, கர்நாடக மாநிலத்தின் பல பாகங்களும் வளம்பெற்று வளர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இப்படிப்பட்ட கோஷத்துக்கு ஆதரவைவிட எதிர்ப்பே அதிக மாகக் கிளம்ப, ஆடிப்போயிருக்கிறது காங்கிரஸ் அரசு. தனியார் நிறுவனங்கள் முக்கியமாக, உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடும் எதிர்ப்பைக் கிளப்பின. மத்திய அமைச்சர் தொடங்கி பலரும் தங்களின் அதிருப்தியைக் காட்டமாக வெளிப்படுத்த... பின்வாங்கியிருக்கிறது கர்நாடக அரசு.

‘மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை’ என்கிற வாதம், ஒரு காலத்துக்கு சரியாக இருந்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு உலகமே ஒரு கூரையின் கீழ் எனும் அளவுக்குத் தொழில்நுட்பப் புரட்சி நடந்துகொண்டிருக்கிறது. உலக மக்கள், எந்தெந்த நாடுகளிலோ பணியாற்றிக்கொண்டுள்ளனர், வாழ்ந்து கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில், இது போன்ற வாதங்களுக்கு வேலையே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

கர்நாடகா என்ன... அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலேயே இத்தகைய வாதங்கள் முன்வைக்கப்படும் கொடுமையும் அவ்வப்போது நடக்கத்தான் செய்கின்றன. அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டினருக்கான பணிநிமித்த விசாவை நிறுத்தி வைக்கத் துடித்தார் அன்றைக்கு ஜனாதிபதியாக இருந்த டெனால்டு ட்ரம்ப். ‘மண்ணின் மைந்தர்களுக்கே வேலை’ என்றபடி வெளிநாட்டினரை வெளியேற்றும் அளவுக்கெல்லாம் கெடுபிடி காட்டினார். ஆனால், உள்நாட்டிலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அமெரிக்காவில் ஜாம்பவான்களாக இருக்கும் பெரும்பெரும் தொழில்நுட்ப நிறுவன அதிபர்களே... ‘தங்களின் அலுவலகங்களை அமெரிக்காவுக்கு வெளியே மாற்ற வேண்டியிருக்கும்’ என்று எச்சரித்தனர். வேறு வழியில்லாமல் ட்ரம்ப் அப்போது பணிந்தார்.

அமெரிக்காவிலேயே இந்த நிலை. ம்... கர்நாடகம்... இன்னும் சுத்த கர்நாடக மாகவே இருக்கிறது!

- ஆசிரியர்


http://dlvr.it/T9rGzp

ஆன்லைனில் வெளியான மார்பக அறுவை சிகிச்சை வீடியோ; மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்த பெண்- நடந்தது என்ன?

சீனாவில், தன்னுடைய மார்பக அறுவை சிகிச்சை வீடியோ ஆன்லைனில் வெளியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, கோவா (Goa) என்ற குடும்பப் பெயர் கொண்ட பெண், கடந்த ஜனவரியில் மத்திய சீனாவிலுள்ள ஒப்பனை சார்ந்த அறுவை சிகிச்சை மருத்துவமனையில் (cosmetic surgery hospital) மார்பக விரிவாக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டார். பின்னர், அடுத்த சில மாதங்களில் சீன சமூக வலைதளப் பக்கமான டூயினில் (Douyin), தன்னுடைய மார்பக அறுவை சிகிச்சை வீடியோ வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.மருத்துவமனை

அதையடுத்து, தன்னுடைய தனியுரிமை மீறப்பட்டிருப்பதாக அந்த மருத்துவமனையைத் தொடர்புகொண்ட பெண், வீடியோ எடுத்த நபரைக் கண்டுபிடித்து அந்த வீடியோவை நீக்குமாறும், பகிரங்க மன்னிப்பு கேட்டு இழப்பீடு வழங்குமாறும் பலமுறை வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத மருத்துவமனை நிர்வாகம், `இந்த வீடியோ வேறு யாரோ ஒருவரால் எடுக்கப்பட்டு சமூக வலைதளத்தில் கசியவிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிசிடிவி கண்காணிப்பு காட்சிகள் நீக்கப்படுகின்றன. எனவே, வீடியோவை யார் எடுத்தார் என்பது கண்டுபிடிப்பது சாத்தியமில்லாத ஒன்று . ஒருவேளை, அந்த வீடியோ மீண்டும் வெளிவந்தால் அதை நீக்க சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளத்தைத் தொடர்புகொள்ளலாம்' என்று தெரிவித்திருக்கிறது.

மருத்துவமனையின் இத்தகைய அலட்சிய பதிலால் அதிருப்தியடைந்த பெண், `ஆபரேஷன் தியேட்டர் மிகவும் தனிப்பட்ட அமைப்பு. அந்த வீடியோவில் டாக்டர்கள், செவிலியர்கள் இருந்தனர். வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைந்து வீடியோ எடுக்க முடியாது" என்று கூறி அந்த நபர் யார் என்பதைக் கண்டுபிடிக்குமாறு மருத்துவமனையை மீண்டும் வலியுறுத்தினார். இதற்கும், வீடியோ எடுத்த நபர் மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டதாகவும், அவர் தொடர்பான தகவல்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும் மருத்துவமனை கூறியிருக்கிறது.வீடியோ

இதனால் விரக்தியடைந்த அந்தப் பெண், அந்த மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். இன்னொருபக்கம், மருத்துவமனையின் இத்தகைய பதிலை இணையதளவாசிகள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அதில் ஒருவர், `வீடியோ எடுத்தவர் வேலையை விட்டுச் சென்றிருந்தால், எந்தவொரு நிறுவனமும் இதை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, தனிப்பட்ட ஊழியர்களே காரணம் விலகிவிடும் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல் மற்றொரு இணையதளவாசி, `ஏதாவது தவறு நடந்தால், உடனே அவர் ஒரு தற்காலிக பணியாளர் அல்லது அவர் வெளிறிவிட்டார் என்று கூறி தங்களின் பொறுப்பை எப்போதும் தட்டிக் கழிக்கிறார்கள்' என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88NITI Aayog: `தமிழ்நாடு... வளர்ச்சியா பின்னடைவா?’ - டீகோடிங் நிதி ஆயோக் ரிப்போர்ட்!


http://dlvr.it/T9r1v8

Friday, 19 July 2024

Trump: `இவான்கா, ட்ரம்ப் முதல் ஹல்க் ஹோகன் வரை..! - குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு க்ளிக்ஸ்

குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு | ட்ரம்ப்JD Vance - Usha Chilukuriகுடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு | ட்ரம்ப்குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு | ட்ரம்ப்Usha Chilukuri | உஷா சில்லுக்குரிJD Vance | ஜெ.டி வான்ஸ்உஷா சில்லுக்குரிஉஷா சில்லுக்குரிJD Vance - Usha ChilukuriJD Vance - Usha ChilukuriJD Vance - Usha ChilukuriJD Vance - Usha ChilukuriJD Vance - Usha ChilukuriJD Vance - Usha ChilukuriJD Vance - Usha Chilukuriகுடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு | ட்ரம்ப்குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு | ட்ரம்ப்குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு | ட்ரம்ப்குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடுகுடியரசுக் கட்சியின் தேசிய மாநாடுகுடியரசுக் கட்சியின் தேசிய மாநாடுகுடியரசுக் கட்சியின் தேசிய மாநாடுகுடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு | ட்ரம்ப்குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு | ட்ரம்ப்ஹல்க் ஹோகன்ஹல்க் ஹோகன்இவான்கா ட்ரம்ப்ஹல்க் ஹோகன்ஹல்க் ஹோகன்ஹல்க் ஹோகன்ட்ரம்ப்ட்ரம்ப்ட்ரம்ப்ட்ரம்ப்ட்ரம்ப்ட்ரம்ப்ட்ரம்ப்ட்ரம்ப்ட்ரம்ப்ட்ரம்ப்ட்ரம்ப்ட்ரம்ப்ட்ரம்ப்ட்ரம்ப்ட்ரம்ப்ட்ரம்ப்குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடுகுடியரசுக் கட்சியின் தேசிய மாநாடுகுடியரசுக் கட்சியின் தேசிய மாநாடுகுடியரசுக் கட்சியின் தேசிய மாநாடுகுடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு


http://dlvr.it/T9p828

Donald Trump: காதில் பேண்டேஜ்... துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு முதன்முறையாக உரையாற்றிய ட்ரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), இந்தாண்டு இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை பென்சில்வேனியாவில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, 20 வயது இளைஞனால் துப்பாக்கிச்சூட்டுக்குள்ளான ட்ரம்ப், அதிர்ஷ்டவசமாக வேறுபக்கமாக தலையைத் திருப்ப தோட்டா காதில் உரசிச் சென்றதையடுத்து உயிர் தப்பினார்.டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump)

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு முதன்முறையாகத் தனது கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ட்ரம்ப், கடவுள் தன் பக்கம் இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.Trump: `இவான்கா, ட்ரம்ப் முதல் ஹல்க் ஹோகன் வரை..! - குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு க்ளிக்ஸ்

மில்வாக்கியில் நேற்று நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் (RNC) நான்காம் நாள் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், ``அமெரிக்க அதிபர் பதவிக்கான உங்கள் தேர்வை மிகுந்த நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஒவ்வொரு மதம், இனம் சார்ந்த குடிமக்களுக்கான பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்துக்கான புதிய சகாப்தத்தை நாம் ஒன்றாகத் தொடங்குவோம். நம் சமூகத்தில் நிலவும் முரண்பாடுகள் மற்றும் பிரிவினைவாதம் களைய வேண்டும்" என்றார்.டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump)

அதையடுத்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசிய ட்ரம்ப், ``அந்த சமயத்தில் கடவுள் என் பக்கம் இருந்தார். அன்று அந்த நொடியில் தலையை நான் திருப்பாமல் இருந்திருந்தால், இப்போது உங்கள் முன் இருந்திருக்கமாட்டேன். மேலும், அப்போது எனக்கு எதுவும் ஆகவில்லை, நன்றாக இருக்கிறேன் என்பதை மக்களுக்குத் தெரிவிக்கவே என் வலதுகையை உயர்த்திக் காட்டினேன். நீங்கள் காட்டிய அன்புக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த சம்பவம் பற்றி பலரும் என்ன நடந்தது... என்ன நடந்தது.... தயவுசெய்து சொல்லுங்கள் என்று பலரும் என்னிடம் கேட்டார்கள். இனி இரண்டாவது முறையாக நீங்கள் அதை என்னிடம் கேட்க மாட்டீர்கள். ஏனெனில் இது உண்மையில் சொல்வது மிகவும் வேதனையானது" என்றார் கூறினார்.அமெரிக்க அதிபராகப் போகிறாரா ட்ரம்ப்? - உளறிக்கொட்டும் பைடன்!


http://dlvr.it/T9p7nH

Microsoft Outage: ப்ளூ ஸ்கீரின் பிரச்னை; விமானநிலையம், வங்கி, ஐடி நிறுவனங்கள் தவிப்பு; காரணம் என்ன?

உலகம் முழுவதும் 1.5 பில்லியன்களுக்கும் மேலான பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் `மைக்ரோசாஃப்ட்' மென்பொருள் (OS) திடீரென முடங்கிப் போனது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று ஜூன் 18ம் தேதி மாலை 6 மணி முதல் மத்திய அமெரிக்காவில் இந்தப் பிரச்னை ஆரம்பமாகியிருக்கிறது. திடீரென மைக்ரோசாஃப்ட் திரையில் ப்ளூ ஸ்கீரின் தோன்றி கணினி இயங்காமல் அப்படியே நின்றுள்ளது. இதனால் அங்கிருக்கும் நிறுவனங்களின் கணினிகள் முடங்கியுள்ளன. இந்தப் பிரச்னை இன்று அமெரிக்காவின் மொத்தப் பகுதிகளிலும் பரவி இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி எனப் பல நாடுகளில் இருக்கும் 'மைக்ரோசாஃப்ட்' ஓஎஸ் கணினிகளைப் பாதித்துள்ளது.Microsoft Outage

இதனால் 'மைக்ரோசாஃப்ட்' ஓஎஸ் கணினிகளைப் பிரதானமாகப் பயன்படுத்தும் பல ஐடி நிறுவனங்கள், வங்கிகள், மீடியா மற்றும் பொதுச் சேவை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் செக்கிங், விமானத்தைக் கண்காணிக்கும் சேவைகள் உள்ளிட்டவை பாதிப்படைந்துள்ளதால் விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

சில விமானச் சேவைகளில் பாதிப்பில்லை என்றாலும் கணினி செயல்படாததால் அங்கிருக்கும் விமான நிலைய அலுவலர்களே கைகளால் அனைத்தையும் எழுதி போர்டிங் விவரங்களை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் சிக்கல்களும், தாமதங்களும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் முக்கியப் பணிகளுக்கு விமானத்தில் செல்லும் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர். அதேபோல வங்கிகளிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த திடீர் 'மைக்ரோசாஃப்ட்' ப்ளூ ஸ்கீரின் பிரச்னை குறித்த தெளிவான காரணம் ஏதும் இன்னும் கண்டறியப்படவில்லை. அமெரிக்காவின் 'CrowdStrike' என்ற சைபர் செக்யூரிட்டி மென்பொருள் தொடர்பான அப்டேட் ஒன்றினால் இது நிகழ்ந்திருக்கலாம் என்கின்றனர். அதனாலேயே சிஸ்டம் பூட் ஆகாமல் மீண்டும் மீண்டும் ரீ-ஸ்டார்ட் ஆகின்றது என்று தெரிவிக்கின்றனர். இந்த அப்டேட்டை மேற்கொள்ளாதவர்களுக்கு எந்தச் சிக்கலும் நிகழவில்லை என்று தெரிவிக்கின்றனர்.Microsoft outage

இது குறித்து அந்த நிறுவனம் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறது. இப்போதைக்குத் தற்காலிகத் தீர்வாக மிகுந்த கவனத்துடன் DATA-களுக்கு சேதாரமின்றி கணினியை 'Boot' செய்யச் சொல்லி வலியுறுத்துகிறது அந்நிறுவனம். அப்படியும் இதே பிரச்னை நேர்ந்தால் இந்தப் பிரச்னை சரிசெய்யப்படும் வரை கணினியை ஆஃப் செய்து வைத்திருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

இது சைபர் தாக்குதலாக இருக்கும் என்று அமெரிக்க அரசு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. அமெரிக்க அரசின் முக்கியமான துறையைச் சேர்ந்த கணினிகள் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


http://dlvr.it/T9p7LV

Thursday, 18 July 2024

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு; விரைவில் புதிய வேட்பாளர்?! - என்ன சொல்கிறது கட்சி?

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்துவரும் நிலையில், ஜோ பைடன் - டொனால்ட் ட்ரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், லாஸ் வேகாஸில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் அதிபர் பைடன் பங்கேற்றார். அதன்பின் அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவரது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.பாரக் ஒபாமா - பைடன்

ஏற்கெனவே ஜோ பைடன் உடல் நிலை குறித்து விமர்சித்து வரும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகித்து வருகிறார். இந்த நிலையில், அதிபர் தேர்தலிருந்து பின்வாங்குமாறு ஜோ பைடனின் நெருங்கிய வட்டாரங்கள் ஜோ பைடனிடம் வலியுறுத்திவருவதாகத் தகவல் வெளியாகிவருகிறது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, `ஜோ பைடன் மீண்டும் தேர்தலில் நிற்கும் முயற்சியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என தன் கூட்டாளிகளிடம் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

ஜோ பைடனின் வயதும், அவருடைய உடல், மனநிலையும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு சரியில்லை என அவருடைய நெருங்கிய வட்டாரங்களே தெரிவித்து வருவதால், அவர் தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டும் எனவும், அவருக்கு பதிலாக வேறு ஒரு வேட்பாளரை களமிறக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் தேர்தலில் வெற்றிபெறுவது கடினம் என எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகிறது. டொனால்ட் ட்ரம்ப்

இதற்கிடையில், ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரசார செய்தி தொடர்பாளர் டிஜே டுக்ளோ தன் எக்ஸ் பக்கத்தில்,``ஜோ பைடன் கட்சியின் வேட்பாளர். அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவார். ஆதாரமற்ற வதந்திகளை நம்ப இது சாதாரண தேர்தல் அல்ல. மோசமான குற்றவாளி தேர்தலில் வெற்றிபெற்றால் மக்களின் வாழ்வை எப்படி மோசமாக்குவார் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். தேர்தலைச் சரியாக அணுகுங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88America: ஆபிரகாம் லிங்கன் `டு' டொனால்ட் ட்ரம்ப்... அமெரிக்காவை அதிரவைத்த தாக்குதல்கள் - ஒரு பார்வை!


http://dlvr.it/T9nTg3

தலைக்கு வைக்கப்பட்ட குறி; Micro நொடியில் திரும்பிய Donald Trump - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கடந்த சனிக்கிழமை பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஒருவர் ட்ரம்ப்பைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாகத் தோட்டா காதில் உரசிச் செல்ல ட்ரம்ப் உயிர் தப்பினார்.டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump)

இருப்பினும், கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஒருவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தார். அதேசமயம், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் ரகசிய சேவை ஸ்னைப்பர்களால் (Secret Service snipers) சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் என்று தெரியவந்தது. அதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

NEW FOOTAGE SHOWS TRUMP DODGED PERFECTLY AIMED SHOT

Close-up footage reveals Thomas Crooks' shot was perfectly centered on Trump's head.

Trump’s 'head tilt' to look at a screen graphic and leaning into the microphone saved his life.

The footage was captured just seconds… pic.twitter.com/PDtNxBaAXy— Mario Nawfal (@MarioNawfal) July 17, 2024

இந்த நிலையில், அந்த சம்பவத்தில் ட்ரம்ப்பின் தலைக்கு குறிவைக்கும் படத்துடன் கூடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அமெரிக்க பத்திரிகையாளர் மரியோ நவ்ஃபல் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அந்த வீடியோவில், தனது ஆதரவாளர்களை நோக்கி பேசிக்கொண்டிருக்கும் ட்ரம்ப்பின் தலைக்கு குறிவைத்திருப்பதும், சுடும் நேரத்தில் மைக்ரோ நொடிகளில் ட்ரம்ப் திரும்பியதும் காட்டப்படுகிறது.ட்ரம்ப் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியின் கணவர் - யார் இந்த Usha Chilukuri Vance?


http://dlvr.it/T9mWNL

Wednesday, 17 July 2024

Trump: `டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல இரான் சதி?' - உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்... அமெரிக்கா விளக்கம்!

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிபா் தோ்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்துவரும் நிலையில், ஜோ பைடன் - டொனால்ட் ட்ரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர், ட்ரம்பை துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.வெள்ளை மாளிகை

பாதுகாவலர்களின் உடனடி நடவடிக்கையால் ட்ரம்ப்பின் உயிர் பாதுகாக்கப்பட்டு, கொலை முயற்சியில் ஈடுபட்ட தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் சம்பவ இடத்தில் வைத்து ஸ்னைப்பர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, ட்ரம்ப் பாதுகாப்பில் மெத்தனம் இருப்பதாக அமெரிக்க அரசின்மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பதிலளித்துப் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரி, ``ட்ரம்ப்பின் உயிருக்கு இரானால் அச்சுறுத்தல் இருப்பது குறித்து அமெரிக்க ரகசிய அமைப்பு தகவலளித்தது.

அதனடிப்படையில், ட்ரம்ப்புக்கு எதிர் தாக்குதல் நடத்தும் பாதுகாப்பு பணியாளர்கள், ட்ரோன் கண்காணிப்பு, ரோபோ நாய்கள் ஆகியவை மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து புதிய அச்சுறுத்தல் தகவல்களால், தேவையான ஆதாரங்களை திரட்டி தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.அமெரிக்கா

2020-ம் ஆண்டு இராக்கில், இரான் குட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்ய உத்தரவிட்டதிலிருந்து ட்ரம்ப் மற்றும் அவரது முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடர் அச்சுறுத்தல் இருப்பதாக இரான் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

ஆனால், ஐ.நா சபையின் இரானிய தூதுக்குழு, ``எங்கள் மீது அமெரிக்காவால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறது. ஆனால், ட்ரம்ப் ஒரு குற்றவாளி, அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்தான்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.அமெரிக்க அதிபராகப் போகிறாரா ட்ரம்ப்? - உளறிக்கொட்டும் பைடன்!


http://dlvr.it/T9hw0y

Tuesday, 16 July 2024

Racism: வெள்ளையினத்தவர் பெயரை வைத்ததும், வேலைக்கு அழைத்த ஹோட்டல்... வழக்கு தொடுத்த கறுப்பின இளைஞர்!

அமெரிக்காவில், ஹோட்டல் நிறுவனமொன்றில் வேலைக்கு ஆள் எடுப்பதில் இனப்பாகுபாடு காட்டப்படுவதாக 27 வயது கறுப்பின இளைஞர் ஒருவர் வழக்கு தொடுத்திருக்கிறார். இது குறித்த தகவலின்படி, அமெரிக்காவின் மிக்சிகன் (Michigan) மாகாணத்தில் டெட்ராய்ட் (Detroit ) நகரத்தில் வசிக்கும் ட்வைட் ஜாக்சன் (Dwight Jackson), ஷினோலா ஹோட்டல் (Shinola Hotel) நிறுவனத்தில் வரவேற்பாளர் (Receptionist ) வேலைக்கு கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை பலமுறை விண்ணப்பித்திருக்கிறார்.ட்வைட் ஜாக்சன் - ஷினோலா ஹோட்டல்

ஆனால், ஒருமுறைகூட ஹோட்டல் தரப்பிலிருந்து இன்டெர்வியூவுக்கு அழைக்கப்படவில்லை. இதில் விரக்தியடைந்த ட்வைட் ஜாக்சன், தான் ஏற்கெனவே விண்ணப்பத்திருந்த படிவங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதே பணி அனுபவம், முகவரி உள்ளிட்டவற்றோடு தனது பெயரை மட்டும் மாற்றி வெள்ளையினத்தவர்களுடன் தொடர்புடைய பெயரில் வேலைக்கு மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார். அடுத்த ஒரே வாரத்தில், இன்டெர்வியூக்கு வருமாறு ட்வைட் ஜாக்சனுக்கு ஹோட்டல் நிறுவனம் தரப்பிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அதன்படி, இன்டெர்வியூவில் பங்கேற்ற அந்த இளைஞனை நேரடியாக அவரின் இனத்தைக் குறிப்பிடாமல், இந்தப் பணிக்குத் தாங்கள் தகுந்த ஆள் கிடையாது என ஹோட்டல் நிர்வாகம் நிராகரித்திருக்கிறது.

இதன்மூலம், இனப்பாகுபாடு காட்டப்படுவதைக் கண்டறிந்த ட்வைட் ஜாக்சன், மிச்சிகனின் எலியட் லார்சன் சிவில் உரிமைகள் சட்டம் மீறப்படுவதாக ஹோட்டல் நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதுகுறித்து பேசிய ட்வைட் ஜாக்சனின் வழக்கறிஞர் ஜான் மார்கோ (Jon Marko), ``2024-ல் உங்கள் சொந்த ஊரில் உங்களின் தோலின் நிறத்தால் வேலை மறுக்கப்படுவது பணத்துக்கு அப்பாற்பட்டது. இது, அவர்களின் எண்ணத்திலிருங்கிது வருகிறது" என்றார். அதோடு, இந்த ஹோட்டல் நிறுவனத்தின் மூலம் இனப்பாகுபாட்டுக்கு ஆளானவராக நம்பும் எவரும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்றும் ஜான் மார்கோ தெரிவித்திருக்கிறார்.இனப்பாகுபாடு - ட்வைட் ஜாக்சன் - ஷினோலா ஹோட்டல்

இன்னொருபக்கம், இதற்குப் பதிலளித்திருக்கும் ஷினோலா ஹோட்டலின் பார்ட்னர் அன்னா ஸ்டான்சியோஃப், ``எந்தவொரு பாகுபாட்டையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். எனவே, இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். அனைவரும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புடைய பணியிடத்தை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், சமூகத்தைப் பிரதிபலிக்கும் பலதரப்பட்ட பணியாளர்களை உருவாக்க எங்களை நாங்கள் அர்ப்பணித்திருக்கிறோம்" என்றார்.Racism: கப்பல் மோதி சரிந்த அமெரிக்க பாலம்... இந்திய பணியாளர்கள் மீது இனவெறி கார்ட்டூன்! - சர்ச்சை


http://dlvr.it/T9gGFY

Trump Rally Shooting: மனைவியைக் காப்பாற்ற, துப்பாக்கிக் குண்டை தன் மீது வாங்கிய கணவர்- நடந்தது என்ன?

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பிரசாரம் செய்த டிரம்பை படுகொலை செய்ய அவர் மீது ஸ்னைப்பர் துப்பாக்கிச் சூடு நடந்தது.

தொடர்ந்து இரண்டு, மூன்று முறை துப்பாக்கிக் குண்டுகள் டிரம்ப்பை நோக்கிப் பாய்ந்தன. நல்வாய்ப்பாக, டிரம்ப் தன் தலையைத் திருப்ப, அவரது தலையை நோக்கி வந்த துப்பாக்கிக் குண்டு டிரம்பின் காதை மட்டும் லேசாகக் கிழித்துச் சென்றுவிட்டது. நூழிலையில் உயிர் தப்பினார் டிரம்ப். துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டு அக்கூட்டத்தில் இருந்த பலரும் அலறி அடித்து ஓட, இந்த நெரிசலில் பலரும் காயமடைந்தனர். குடும்பம், குழந்தையுடன் வந்திருந்த பலரும் பறிதவித்துப் போயினர். இந்த சம்பவத்தில் முதற்கட்ட விசாரணையில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் (20) என்று கூறப்படுகிறது.

இச்சம்பவத்தின்போது குடும்பத்துடன் இப்பிரச்சாத்திற்கு வந்து முதல் வரிசையில் நின்று டிரம்பின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தத் தீயணைப்பு வீரரான கோரி கம்பேரடோரியின் மீது துப்பாக்குக் குண்டு பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தன் மனைவியை நோக்கி வந்த துப்பாக்கிக் குண்டை தன் மீது வாங்கி மனைவியைக் காப்பாற்றிவிட்டு உயிரிழிந்திருக்கிறார் கோரி கம்பேரடோர் (50).

கோரி கம்பேரடோரின் இந்தத் தியாகச் செயலைக் கேட்டு பலரும் அவருக்காக அஞ்சலி செலுத்தி, அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக நிதி திரட்டி வருகின்றனர். கோரி கம்பேரடோரின் குடும்பத்திற்கு அன்பும், ஆதரவும் குவிந்து வருகின்றன. தீயணைப்பு வீரராகப் பணியாற்றி வந்த அவரது இந்தத் தியாகச் செயலைப் பாராட்டி அவர் பயன்படுத்திய பொருட்களைப் பாதுகாத்து நினைவாக என்றும் வைக்கவுள்ளனர் பென்சில்வேனியா தீயணைப்புத் துறையினர்.கோரி கம்பேரடோர் பயன்படுத்தியப் பொருட்கள்

கோரி கம்பேரடோரின் இந்தத் தியாகச் செயல் பற்றிக் கூறும் அவரது மனைவி ஹெலன் கம்பேரடோர், "அவர் என்னுடைய ஹீரோ. குண்டு பாய்ந்து உயிரிழக்கும் முன் அவர் என்னிடம் சொல்லிய கடைசி வார்த்தை, 'நிற்காதே, கீழே உட்கார்ந்து கொள்' என்பதுதான். என்னைக் காப்பாற்றிவிட்டு அவர் உயிரிழந்துவிட்டார்" என்று கூறியிருக்கிறார். மேலும், ஜோ பைடன் பற்றி அதிருப்தியுடன் பேசியிருக்கும் அவர், " ஜோ பைடன் ஆறுதல் கூறுவதற்காக என்னைத் தொடர்பு கொண்டு பேச விரும்புவதாகக் கூறினார்கள். அவருடன் நான் இதுவரை பேசவுமில்லை. பேசப்போவதுமில்லை. என் கணவர் அதை ஒருபோதும் விரும்பமாட்டார்" என்று கூறியிருக்கிறார்.


http://dlvr.it/T9fr3n

ட்ரம்ப் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியின் கணவர் - யார் இந்த Usha Chilukuri Vance?

அமெரிக்காவில் (America) இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆளும் ஜனநாயக கட்சியில் (Democratic Party) அதிபர் ஜோ பைடனுக்கு (Joe Biden) எதிராக எதிர்ப்புக்குரல் எழுந்துகொண்டிருக்க இன்னும் யார் வேட்பாளர் என்பது முடிவாகவில்லை. அதேசமயம், குடியரசு கட்சியில் (Republican Party) முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கூடவே, இந்திய வம்சாவளி உஷா சிலுக்குரி வான்ஸின் (Usha Chilukuri Vance) கணவர் ஜே.டி.வான்ஸ் (JD Vance) குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.JD Vance - Usha Chilukuri Vanceயார் இந்த உஷா சிலுக்குரி வான்ஸ்!

ஒரு தேசிய நிறுவனத்தில் வழக்கறிஞராக இருக்கும் உஷா, ஆந்திராவைப் பூர்விமாகக் கொண்டவர். கலிஃபோர்னியாவில் பிறந்த இவர், சான் டியாகோவின் புறநகர்ப் பகுதிகளில் வளர்ந்தார். தனது பள்ளிப்படிப்பை, Rancho Penasquitos-ல் அமைந்துள்ள Mt Carmel உயர்நிலைப் பள்ளியில் முடித்த உஷா, யேல் பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நவீன வரலாற்றில் M.Phil பட்டமும் பெற்றிருப்பதாகப் பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர், 2013-ல் யேல் சட்டப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது முதல்முறையாக ஜே.டி.வான்ஸை நேரில் சந்தித்தார். அப்போது, `வெள்ளை அமெரிக்காவின் சமூக வீழ்ச்சி (social decline in white America)' என்ற தலைப்பில் கலந்துரையாடல் குழுவை ஏற்பாடு செய்ய இருவரும் ஒன்றாக வேலை செய்தனர். பின்னர், 2014-ல் கென்டக்கியில் திருமணம் செய்து கொண்டனர்.ஜே.டி.வான்ஸ் - உஷா சிலுக்குரி வான்ஸ்

இவர்களுக்கு, மிராபெல் என்ற மகளும், இவான், விவேக் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். உஷா தனது தொழில்முறையைப் பொறுத்தவரையில், 2018-ல் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் சட்ட எழுத்தராகப் பணியாற்றுவதற்கு முன்பு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜான் ராபர்ட்ஸ் மற்றும் பிரட் கவனாக் ஆகியோருக்கு எழுத்தராகப் பணியாற்றியிருக்கிறார்.JD Vance - Usha Chilukuri Vance

இதற்கு முன்பாக, சான் ஃபிரான்ஸிலுள்ள Munger, Tolles & Olson LLP என்ற சட்ட நிறுவனத்தில் 2015 முதல் 2017 வரை பணிபுரிந்திருக்கிறார். இவை மட்டுமல்லாது, யேல் லா ஜர்னலின் (Yale Law Journal) நிர்வாக மேம்பாட்டு ஆசிரியராகவும், யேல் ஜர்னல் ஆஃப் லா அண்ட் டெக்னாலஜியின் (Yale Journal of Law and Technology) நிர்வாக ஆசிரியராகவும் உஷா பணியாற்றியிருக்கிறார்.

கல்வி, அரசு, சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் சிக்கலான சிவில் வழக்குகளில் அனுபவம் வாய்ந்தவராக உஷா அறியப்படுகிறார். இவ்வாறு கல்வி மற்றும் தனது தொழில்முறையில் குறிப்பிடத்தக்க உயரத்தை அடைந்திருக்கும் உஷா, தன்னுடைய கணவரின் அரசியல் வாழ்விலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கிறார். குறிப்பிக்க, 2016, 2022-ல் தனது கணவரின் வெற்றிகரமான செனட் பிரசாரங்களில் இவர் பங்கேற்றிருக்கிறார். தன் மனைவியின் செல்வாக்கு தனக்கு இருப்பதையும் ஜே.டி.வான்ஸ் ஒப்புக்கொண்டிருக்கிறார்.JD Vance - Usha Chilukuri Vance

ஜே.டி.வான்ஸுக்கு உஷா பக்க பலமாக இருப்பது குறித்து பேசியிருக்கும் ட்ரம்பின் நண்பரும், தொழிலதிபருமான ஒருவர், ``இந்தியா மற்றும் இந்திய கலாசாரம் பற்றிய அனைத்தையும் உஷா அறிந்திருக்கிறார். அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான சிறந்த உறவுகளை வழிநடத்துவதற்கு அவர் தனது கணவருக்கு ஒரு பெரிய உதவியாக இருக்க முடியும்" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், ஜே.டி.வான்ஸுக்கு அவர் ஆதரவளிப்பது குறித்து தனியார் ஊடகத்திடம் பேசியிருக்கும் உஷா, ``சில வித்தியாசமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று நான் மதம் சார்ந்த குடும்பத்தில் வளர்ந்தவள். என் பெற்றோர்கள் இந்துக்கள். எங்களை நல்ல பெற்றோராகவும் நல்ல மனிதர்களாகவும் மாற்றியதில் இதுவும் ஒன்று. ஜே.டி.வான்ஸ் எதையோ தேடிக் கொண்டிருப்பதை நான் அறிந்தேன். அதனால், இது அவருக்கு சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது" என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88America: ஆபிரகாம் லிங்கன் `டு' டொனால்ட் ட்ரம்ப்... அமெரிக்காவை அதிரவைத்த தாக்குதல்கள் - ஒரு பார்வை!


http://dlvr.it/T9fRKS

Monday, 15 July 2024

Kat Torres: பெண்களை கடத்திச் சென்று அடிமைப்படுத்திய பிரேசில் முன்னாள் மாடல் கைது - அதிர்ச்சி பின்னணி

பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடவைத்து, அடிமைப்படுத்தியதற்காகப் பிரேசிலின் முன்னாள் மாடலும், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உடல் ஆரோக்கிய இன்ஃப்ளுயன்ஸருமான கேட் டோரஸ் (Kat Torres) என்பவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 2022-ல் கேட் டோரஸிடம் வேலைக்குச் சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போன வழக்கில் அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பான FBI மேற்கொண்ட விசாரணை மூலம், மனித கடத்தல், பெண்களை அடிமைப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களை கேட் டோரஸ் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.Kat Torres

ஒரு காலகட்டத்தில் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவுடன் (Leonardo DiCaprio) டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்பட்டவர் கேட் டோரஸ். அதோடு, பிரேசிலின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி வந்ததன் மூலம் பிரபலமடைந்த கேட் டோரஸ், தனக்கு ஆன்மிக சக்திகள் இருப்பதாக இவரே பல இடங்களில் கூறியிருக்கிறார். கேட் டோரஸின் குடியிருப்புவாசிகள் அவரை பற்றி கூறிய தகவல்களின்படி, அவரின் ஹாலிவுட் நண்பர்கள் ஒரு வகை மயக்க மருந்தை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்தி தன்னை வாழ்க்கை முறை பயிற்சியாளராகவும், ஹிப்னாடிஸ்டாகவும் (hypnotist) காட்டிக்கொண்ட கேட் டோரஸ், உடல்நல ஆரோக்கிய வலைதளப் பக்கத்தை உருவாக்கி, அதற்கு சந்தா சேவையையும் உருவாக்கி தனது வாடிக்கையாளர்களிடம் அன்பு, பணம், தன்னம்பிக்கை வளர்ப்பதாகக் கூறியிருக்கிறார்.

பின்னர், இது தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் வீடியோக்களைத் தயாரித்து, ஒரு வீடியோ ஆலோசனைக்கு 150 டாலர் என ஒவ்வொருவரிடமும் வசூலித்திருக்கிறார். இவற்றையெல்லாம் நம்பி ஏமாந்த அனா (Ana) என்ற பெண், 2019-ல் கேட் டோரஸின் நேரடி உதவியாளராக வேலை செய்ய நியூயார்க்கிற்குச் சென்றிருக்கிறார். குழந்தைப் பருவத்தில் தனக்கு நேர்ந்த வன்முறைகள் மற்றும் மோசடியான ரிலேஷன்ஷிப் போன்றவற்றிலிருந்து வெளிவர வேண்டும் என்ற நம்பிக்கையில் கேட் டோரஸிடம் வேலைக்குச் சேர்ந்த அனாவுக்கு அவர் எதிர்பார்ப்புக்கு மாறாகவே நடந்தது. சில மணிநேர உறக்கம், சம்பளம் தராமல் கொடுமைப்படுத்துதல் போன்றவைகளை அனா சந்தித்தார்.Kat Torres

பின்னர், எப்படியோ கேட் டோரஸிடமிருந்து தப்பித்த அனா, அவரைப் பற்றிய உண்மைகள் வெளிவந்த நிலையில் தான் சிக்கியது குறித்து தனியார் ஊடகத்திடம், ``பத்திரிகைகளின் அட்டைப்படத்தில் கேட் டோரஸ் காணப்பட்டார். லியோனார்டோ டிகாப்ரியோ போன்ற பிரபலங்களுடனும் அவர் காணப்பட்டார். நான் பார்த்த இவையனைத்தும் எனக்கு நம்பத்தகுந்ததாகத் தோன்றியது. அவரிடம் எனக்கு நேர்ந்ததைப் பார்க்கையில் அவர் என்னை அடிமைப்படுத்தியிருந்தார் என்று புரிகிறது" என்று கூறினார். அனா அங்கிருந்து வெளியேறிய பிறகு, டிசைர் (Desirre) மற்றும் லெட்டிசியா (Leticia) ஆகிய இருவரை கேட் டோரஸ் பணியமர்த்த அவர்களுடன் டெக்சாஸிலுள்ள ஒரு வீட்டுக்கு குடிபெயர்ந்தார்.

அங்கு சென்ற சில வாரங்களில், டிசைர் அங்குள்ள ஸ்ட்ரிப் கிளப் (strip club) ஒன்றில் ஆபாச நடனமாட கேட் டோரஸால் கட்டாயப்படுத்தப்பட்டார். அந்தப் பெண்கள் தங்களுக்குள் பேச அனுமதி மறுக்கப்பட்டது. குளியலறைக்குச் செல்வது, தங்கள் அறைகள் விட்டு வெளியேறுவது என அனைத்துக்கும் அனுமதி கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். ஒருகட்டத்தில், பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு டிசைரை கேட் டோரஸ் கட்டாயப்படுத்தினார். இவ்வாறிருக்க, கடந்த செப்டம்பரில் இந்த இரு பெண்களின் நண்பர்களும் குடும்பத்தினரும் அவர்களைக் கண்டுபிடிக்க சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகப் பதிவிடத் தொடங்கினர்.Kat Torres

இதையறிந்த கேட் டோரஸ், ஊடகங்களின் கவனத்திலிருந்து தப்பிக்க அந்தப் பெண்களுடன் டெக்சாஸிலிருந்து மைனேக்கு (Maine) சென்றார். அதோடு, தாங்கள் சிறைபிடிக்கப்படவில்லை என அந்த பெண்களையே வீடியோவும் பதிவிட வைத்தார். இவ்வாறான சூழலுக்கிடையில், கடந்த நவம்பரில் கேட் டோரஸ் ஒருவழியாக கைதுசெய்யப்பட்டார். தற்போது, இதில் FBI-ன் விசாரணை முடிவில் கேட் டோரஸுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இன்னொருபக்கம், கேட் டோரஸால் தாங்களும் பாதிக்கப்பட்டதாக தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைத் தெரிவிக்கும் வகையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் தாமாக முன்வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும், தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களிலிருந்து மீள மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.முரண்டு பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசு... காவிரி பிரச்னையில் திமுக-வுக்கு பின்னடைவா?!


http://dlvr.it/T9cqBx

America: ஆபிரகாம் லிங்கன் `டு' டொனால்ட் ட்ரம்ப்... அமெரிக்காவை அதிரவைத்த தாக்குதல்கள் - ஒரு பார்வை!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பொதுவெளியில் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர்மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த காலங்களில் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் மற்றும் பெரிய கட்சிகளை சேர்ந்த அதிபர் வேட்பாளர்கள் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இது பற்றி 2008-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளது.Donald Trump - டொனால்ட் ட்ரம்ப்

இவற்றில் அமெரிக்க அதிபர்கள், வேட்பாளர்கள் மீது நேரடியாக 15 முறை தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில், 5 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில் அதிபராக பணியாற்றிய 46 பேரில், 13 பேர் மீது கொலை முயற்சி தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றில், ட்ரம்ப் மீது பென்சில்வேனியா துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது சேர்க்கப்படவில்லை.

இவர்களில் கடந்த காலங்களில் 9 அதிபர்களில் 7 பேர் தாக்குதல்கள் அல்லது கொலை முயற்சியை எதிர்கொண்டிருக்கின்றனர்.ஆபிரகாம் லிங்கன்

ஆபிரகாம் லிங்கன்:

அமெரிக்காவின் 16-வது அதிபரான இவர்தான் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய முதல் அதிபர். 1865-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி அன்று ஜான் வில்க்ஸ் பூத் என்பவரால் வாஷிங்டனில் உள்ள ஃபோர்ட் திரையரங்கில் வைத்து சுடப்பட்டார். தலையில் சுடப்பட்ட ஆபிரகாம் லிங்கன் ஒரு நாள் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார். கருப்பர் இன மக்களுக்காக ஆபிரகாம் லிங்கன் இருந்தமைக்காக கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஜேம்ஸ் கார்பீல்ட்:

அமெரிக்காவின் 20-வது அதிபரான இவர், தனது அதிபர் பொறுப்பை ஏற்று ஆறு மாதங்களில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1881-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி இங்கிலாந்து செல்வதற்கான ரயிலில் பயணிக்க வாஷிங்டன் ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்தபோது, சார்லஸ் கிட்டோ என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஜார்ஜ் புஷ்

ஜார்ஜ் W புஷ்:

2005-ல் ஜார்ஜியா நாட்டின் திபிலிசி பகுதியில் அந்நாட்டு மிகைல் சாகாஷ்விலியுடன் அணிவகுப்பின்போது, அவர்கள் சென்ற வாகனத்தின் மீது குண்டு (hand grenade) வீசப்பட்டது. இருவரும் புல்லட் புரூஃப் பாதுகாப்பு கேடயத்திற்குப் பின்னால் நின்று கொண்டிருந்தனர். ஆனால், வீசப்பட்ட குண்டு வெடிக்காததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை

இந்த தாக்குதல்களில் ஜெரால்டு ஆர்.போர்டு (1975-ம் ஆண்டில் இரு முறை), ரொனால்டு டபிள்யூ.ரீகன் (1981-ம் ஆண்டில் நடந்த துப்பாக்கிச்சூடு), பில் கிளிண்டன் (1994-ம் ஆண்டில் வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச்சூடு) மற்றும் ஜார்ஜ் டபிள்யூ.புஷ் (2005-ம் ஆண்டில் கையெறி குண்டு வீசப்பட்டது. ஆனால் அது வெடிக்கவில்லை) ஆகியோர் உயிர் தப்பினார்கள்.

தற்போதைய அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர்களான பராக் ஒபாமா, டொனால்டு ட்ரம்ப் ஆகியோர்மீதும் தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளன.1933-ம் ஆண்டில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் மீது இது போன்று தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், 1912-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் வேட்பாளரான தியோடர் ரூஸ்வெல்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவர்களைத் தவிர, நேரடி தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட 2 அதிபர் வேட்பாளர்கள் ராபர்ட் எஃப்.கென்னடி (1968) படுகொலை செய்யப்பட்டதோடு,  ஜார்ஜ் சி வாலஸ் (1972) காயமடைந்தார்.வெள்ளை மாளிகை

அமெரிக்கா அதிபர்களான ஆபிரகாம் லிங்கன், ஜேம்ஸ் ஏ கார்பீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப்.கென்னடி என 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இவர்களை தவிர அமெரிக்க அதிபராக இருந்த ஹாரி எஸ்.ட்ரூமேன் என்பவரின் தற்காலிக இல்லம்மீது 1950-ம் ஆண்டில் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், இதில் சதித்திட்டம் தீட்டியதற்கான சான்றுகள் எதுவும் வெளிவரவில்லை என்று புலனாய்வு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில் முதன்முறையாக 1835-ம் ஆண்டில் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஆண்ட்ரூ ஜாக்சன் என்பவர் மீது கைத்துப்பாக்கியால் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் அதன் குறி தப்பியது. அப்போது தாக்குதல் நடத்திய, ரிச்சர்ட் லாரன்ஸ் மன நலம் குன்றியவர் என அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அமெரிக்கா அதிபர் தேர்தல் நடைபெறும் சமயத்தில் பொதுவெளியில் மக்களோடு உரையாடிக் கொண்டிருந்த முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.Trump: ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு; Snipers-ன் உடனடி Action - சில வினாடிகளில் கொல்லப்பட்ட நபர்!


http://dlvr.it/T9c2vt

Sunday, 14 July 2024

Trump: ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு; Snipers-ன் உடனடி Action - சில வினாடிகளில் கொல்லப்பட்ட நபர்!

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், குடியரசுக் கட்சியின் சார்பில் இதில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம், அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.Donald Trump

முன்னதாக, அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் நேற்று தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் ட்ரம்ப் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ட்ரம்ப் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் நேராக அவரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது.

இதில் காயமடைந்த ட்ரம்ப் கீழே குனிய அவரின் பாதுகாவலர்கள் உடனடியாக மேடைக்கு அருகில் வந்து அவரை மீட்டு காருக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவரின் காதில் தோட்டா துளைத்து ரத்தம் வழிய, தனது ஆதரவாளர்களை நோக்கி ட்ரம்ப் கையை உயர்த்தினார்.Donald Trump

பின்னர், உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதையடுத்து தற்போது அவர் நலமாக இருக்கிறார். இருப்பினும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பிரசாரத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் பலியானார். அதேசமயம், சம்பவ இடத்தில் போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ALERTE - Tentative d'assassinat sur Donald #Trump lors d'un meeting. pic.twitter.com/tAhxJ7iMvn— Dictavenir (@dictavenir) July 13, 2024

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. மேலும், இந்த சம்பவத்தில் முதற்கட்ட விசாரணையில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் (20) என்றும், சம்பவம் நடந்த இடத்திலிருந்து 70 கி.மீ தொலைவிலுள்ள பகுதியில் வசித்து வந்தார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. மறுபக்கம், பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.Biden Vs Trump: `ட்ரம்ப் குற்றவாளி’ ; `உங்கள் மகன் தான் குற்றவாளி’ - 90 நிமிடங்கள் அனல்பறந்த விவாதம்


http://dlvr.it/T9ZC9P