Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, 29 June 2024

விருந்தினர்களுக்கு ரூ.66,000 ரொக்கம், ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம்; அம்பானியை மிஞ்சும் சீனத் திருமணம்!

சீனாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றின் வீடியோக்களும், அதுகுறித்த செய்திகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ஜூலை 12-ம் தேதி ராதிகா மெர்ச்சென்ட்டை கரம் பிடிக்க இருக்கிறார். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகரிலும் வெளிநாடுகளிலும் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. குஜராத்தில் நடைபெற்ற அந்த மூன்று நாள் நிகழ்ச்சிக்கு மட்டுமே கிட்டத்தட்ட ரூ.1,250 கோடி செலவு செய்ததாகத் தகவல்கள் வெளியாகின.சீனத் திருமணம்

திருமண தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அழைப்பிதழ் வழங்கும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் கோயில் வடிவமைப்பு, தங்க மூலாம் பூசிய கடவுள் சிலைகள் என ஆனந்த் அம்பானி - ராதிகா திருமண அழைப்பிதழை அனைவரும் வியக்கும் அளவிற்கு வடிவமைத்திருக்கின்றனர். Anant Ambani: வெள்ளி கோயில்; தங்கச் சிலைகள்; ஆச்சரியப்படுத்தும் அம்பானி வீட்டுத் திருமணம் அழைப்பிதழ்

இப்படி அம்பானி வீட்டுத் திருமணம் இணையத்தில் ஒருபுறம் வைரலாக, அதற்கு இணையாக சீனாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றின் வீடியோக்களும், அதுகுறித்த செய்திகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த சீனத் தம்பதியினர் தங்கள் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் அனைவரையும் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்திருக்கின்றனர். மேலும் அங்கிருப்பவர்கள் வெளியே எங்கேயாவது சுற்றிப் பார்க்க விரும்பினால், ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ட்லி போன்ற சொகுசு காரில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருக்கின்றனர். View this post on Instagram

A post shared by Dana Wang | Solo & Adventure Travel (@bydanawang)


அதே நேரத்தில் அங்குச் செய்யப்பட்ட ஆடம்பரமான திருமண அலங்காரமானது ஆசியாவே ஆச்சர்யப்படும் அளவுக்கு இருந்திருக்கிறது. டெலிபோன் பூத் முதல் அனைத்துமே மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆச்சர்யம் என்னவென்றால் கல்யாணத்திற்கு வந்த ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில் 66,000 ரூபாய் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.


http://dlvr.it/T8xkzk

Thursday, 27 June 2024

Biden Vs Trump: `ட்ரம்ப் குற்றவாளி’ ; `உங்கள் மகன் தான் குற்றவாளி’ - 90 நிமிடங்கள் அனல்பறந்த விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், CNN செய்தி நிறுவனம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-க்கும் இடையே நேரடி விவாதம் நடக்க ஏற்பாடு செய்திருந்தது. அதன் அடிப்படையில், பார்வையாளர்கள் இல்லாத அரங்கில், இரு தலைவர்கள் மட்டுமே சில அடிகள் தூரத்தில் நிறுத்தப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. சுமார் 90 நிமிடங்கள் நடந்த இந்த விவாதத்தில் ஒருவர் பேசும்போது மற்றவருடைய மைக் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. வாய்ப்பு வரும்போதுதான் பேச முடியும் என்ற சூழல் உருவாக்கப்பட்டிருந்தது.டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பைடன்

மேலும், இந்த விவாதம் அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து தளத்திலும் ஒளிபரப்பப்பட்டது. இரு தலைவர்களும் பொருளாதார பிரச்னைகள், வெளியுறவுக் கொள்கை, சர்வதேச நெருக்கடிகள், நாட்டின் குடியேற்ற நெருக்கடி, அமெரிக்க ஜனநாயகத்தின் நிலை என மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டனர். உலக நாடுகளே கூர்ந்து நோக்கிய அந்த விவாதத்தின் முக்கிய அம்சங்கள்...

ஜோ பைடன்: ``2021-ல் அதிபராக பதவியேற்றபோது, ​​பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியில் இருந்தது. அந்த குழப்பத்திலிருந்து பொருளாதாரத்தைக் காப்பாற்றி, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. மருந்து விலைகள் குறைக்கப்பட்டது. நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து வந்தேன்.”டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பைடன்

ட்ரம்ப்: ``என் ஆட்சி காலத்தில் பொருளாதார நிலை சீராகதான் இருந்தது. தற்போது ஏற்பட்டிருக்கும் விலை உயர்வுக்கு யார் காரணம்... பணவீக்கம் நம் நாட்டைக் கொன்று கொண்டிருக்கிறது. பைடன் ஆட்சியில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது உண்மை தான், ஆனால் அது முறைகேடாகக் குடியேறியவர்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது. அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.”

ஜோ பைடன்: ``கருக்கலைப்பு அணுகலைத் தடுப்பதில் ட்ரம்பின் பங்குதான் அதிகம்”

ட்ரம்ப்: ``கருக்கலைப்பு குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டேன். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கருக்கலைப்பு மருந்து விநியோகங்களை தடுக்க மாட்டேன். பைடன் ஆப்கானிஸ்தானிலிருந்து நமது ராணுவ வீரர்களை திரும்பப் பெற்றது நமது நாட்டின் வரலாற்றில் மிகவும் சங்கடமான நாள். உறுதியான தலைவர் இருந்திருந்தால் உக்ரைன் போர் தொடங்கியிருக்காது.”டொனால்ட் ட்ரம்ப்

பைடன்: ``ட்ரம்ப் ஒரு குற்றவாளி அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதலை தடுக்க அவர் எதுவும் செய்யவில்லை. தலைநகரைத் தாக்கியவர்களைக் கண்டிப்பீர்களா?”

ட்ரம்ப்: ``உங்கள் மகனே ஒரு குற்றவாளி. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அது அனைத்தும் எனக்கு எதிராக மோசடியான அமைப்பால் செய்யப்பட்டது. நான் யாருக்கும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. என் மீதான வழக்குகள் மேல்முறையீடு செய்யப்படும். என் நற்பெயரை சேதப்படுத்துவதற்காக இதைச் செய்கிறார்கள். ஆனால் மக்கள் உண்மையைப் பார்க்கிறார்கள்.”

ஆப்கானிஸ்தான் , உக்ரைன், காசா போர் என இரு தரப்பும் மாறி மாறி காட்டமான விமர்சனங்களை முன்வைத்தனர். அதேநேரம் இந்த விவாதத்தில் ட்ரம்ப் ஆதிக்கம் செலுத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்கும் பகுதியில் டிரம்ப் சுமார் 23 நிமிடங்கள் பேசினார். அதேநேரம் பைடன் 18 நிமிடங்கள் மட்டுமே பேசினார். பைடன் பேசும் போது பல இடங்களில் திக்கித் திணறினார். பலமுறை இருமிக் கொண்டே இருந்தார். அவரால் நீண்ட நேரம் தொடர்ச்சியாகப் பேச முடியவில்லை.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88Hunter Biden: `25 ஆண்டுகள் வரை சிறை'- பைடன் மகனைக் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம்! - பின்னணி என்ன?


http://dlvr.it/T8t7qL

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள்.

சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்.

``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை!

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அவரை டிராக் செய்து சில மணிநேரத்திலேயே கண்டுபிடித்தனர். ஷாங்காயில் இருந்து புறப்படும் ரயிலில் திருடனைப் பிடித்து, திருடிய பொருள்களையும் கைப்பற்றினர். 

`திருடியதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம், ஆனா, அந்த அட்வைஸ்தான்' என இந்தச் சம்பவம் பலரிடையே கவனம் பெறத் தொடங்கியது. சிலர் `நல்ல திருடன்' என்றும், `அலுவலகத்தில் செக்யூரிட்டி சிஸ்டத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக பிடிபடாமல் வெளியேறும் உங்களின் திறனை வளர்க்க வேண்டும்' என்று கிண்டலடித்துள்ளனர். 


http://dlvr.it/T8qnPh

Wednesday, 26 June 2024

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில் முடிந்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுகிறது.

மணிப்பூரில் 250 தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கிறது, 200-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 60,000 க்கும் அதிகமானோர் இடப்பெயர்வு, சில இந்திய மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது என இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது. இவை மத சுதந்திர பிரச்னைகள் குறித்து கவலைகளை எழுப்பியிருக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

"இந்தியாவில், மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள், வெறுப்பூட்டும் பேச்சுக்கள், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிப்புகள் அதிகரித்து வருவதைக் காண்கிறோம்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அறிக்கை வெளியீட்டின் போது பேசினார். மோடி

இது தொடர்பாக மூத்த அமெரிக்க அதிகாரிகள், இந்திய சகாக்களுடன் கலந்தாலோசித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த அறிக்கை குறித்து வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் இந்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது. மேலும், இந்தியாவின் மக்கள் நலத் திட்டங்கள், உணவு மானிய திட்டங்கள் மற்றும் மின்மயமாக்கல் போன்ற அனைத்துத் திட்டங்களும் அனைத்து இந்தியர்களுக்கும் பயனளிக்கும் நோக்கத்தையே கொண்டிருக்கிறது எனவும் விளக்கமளித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88‘வெறுப்பு நாக்கு!’


http://dlvr.it/T8qTKm

Heat: துண்டான தலை... சுட்டெரிக்கும் வெப்பத்தால் உருகிய ஆபிரகாம் லிங்கன் மெழுகுச் சிலை!

வழக்கத்திற்கு மாறான வெப்பம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இந்தப் பிரச்னையை கருத்தில் கொள்ளவில்லையெனில் ஆபத்துகள் அதிகமாகலாம் என்பது போன்று பல சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

அந்தவகையில் வாஷிங்டனில் உள்ள கேரிசன் தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச்சிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரித்த வெப்பத்தினால் உருகியுள்ளது. இந்தச் சிலை உள்நாட்டு போரின் விளைவுகளை குறிக்கும் விதமாக சாண்டி வில்லியம்ஸ் IV-ன் கலைநயத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. 

ஆபிரகாம் லிங்கன் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருப்பது போல் இருக்கும் ஆறடி உயரமுள்ள இந்தச் சிலையின் தலை, சுட்டெரித்த வெப்பத்தினால் உருகி, தொங்கத் தொடங்கியது. படிப்படியாக கால்கள் மற்றும் உடலும், நாற்காலியும் உருகியுள்ளன. 

தற்போது லிங்கனின் தலை தனியாக வந்துவிட்டதால் அதனை சரிசெய்யும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தலையில்லாமல் ஒரு கம்பி மட்டும் மெழுகுச்சிலையில் இருக்கிறது.

இது போன்று சிலை உருகுவது முதல்முறையல்ல என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே 2023-ல் செய்யப்பட்ட மெழுகுச் சிலையில் நூறு திரிகள் (wicks) இருந்தன. அது மக்கள் ஏற்றுவதற்காக வைக்கப்படவில்லை.

ஆனால், அதனை கண்ட மக்கள் அனைத்து திரிகளையும் மொத்தமாகப் பற்ற வைத்துள்ளனர். இதனால் சிலை முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. அதனால் இரண்டாவது முறையாக 2024 பிப்ரவரியில் பத்து திரிகளை மட்டும் வைத்து சிலை உருவாக்கப்பட்டது. தற்போது வெப்பத்தினால் உருகிய மெழுகுச் சிலையின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.திரி ஏற்றி சேதமடைந்த மெழுகு சிலைHow to: உடல் சூட்டை குறைப்பது எப்படி? I How To Reduce Body Heat?

இது குறித்து சாண்டி வில்லியம்ஸ் கூறுகையில், ``ஒருவேளை நாம் வாழும் இடத்தில் தட்பவெப்பநிலை மோசமாகிவிட்டால், மெழுகுச் சிலைகள் உருகும். அப்போது இந்த வேலை சுற்றுச்சூழலின் கலைப் படைப்பாக இருக்கும் என்று ஒரு முறை கிண்டல் செய்திருந்தேன். அது இந்தக் கோடையில் நடக்கும் என்று எனக்குத் தெரியாது’’ என்று கூறியுள்ளார். 


http://dlvr.it/T8nZSK

Tuesday, 25 June 2024

Sex Dolls: மனிதர்களைப் போல பேசும், அசையும்... நிஜ அனுபவம் தரும் AI செக்ஸ் பொம்மைகள்!

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. மனிதர்களின் வேலையை AI பறிக்கும் என பல தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரித்தனர். அதற்கேற்ப AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய நிறுவனங்களும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தன. மனிதர்களின் வேலையை AI செய்தாலும் அது ஓர் இயந்திரமே என்ற நிலை இருந்தது.

ஆனால், இப்போது அது உணர்வுகளோடு கூடிய ஒரு ரோபோட்டாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் ஷென்செனை தளமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்பெர்ரி டெக்னாலஜி (Starpery Technology) செக்ஸ் பொம்மைகளைத் (sex dolls) தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனம்.Penis cancer: ``பிரச்னையைச் சொன்னால் ஜோக் அடிப்பார்கள்'' ஆபத்தாகும் ஆண்குறி புற்றுநோய்..!

தற்போது இந்த நிறுவனத்தில் AI-ஆல் இயங்கும் செக்ஸ் ரோபோட் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பொம்மைகள் வழக்கமான செக்ஸ் பொம்மைகளைப்போல அல்லாமல், அட்வான்ஸ் சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதால் பேசவும், நகரவும், தொடுதலைப் புரிந்து கொள்ளவும் செய்கின்றன. 

இதனால் இந்த செக்ஸ் பொம்மைகளை வாங்குபவர்களுக்கு நிஜ அனுபவத்தைக் கொடுப்பது போல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற அட்வான்ஸ் ரோபோட்களை தயாரிப்பதில் ஆரம்பத்தில் சில சவால்களை நிறுவனமும், இன்ஜினீயர்களும் எதிர்கொண்டுள்ளனர். அதன் பேட்டரி, மனிதர்கள் போன்ற வளைந்து கொடுக்கக்கூடிய தன்மைகள், அசைவுகள் போன்றவற்றில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

இந்த பொம்மையை தத்ரூபமாகச் செய்ய வேண்டும் என்பதற்காக அதன் எடையை 40 கிலோவில் இருந்து 29 கிலோவாக குறைத்துள்ளனர். 2023 ஜூலை மாதம் பொம்மையை 172 சென்டி மீட்டர் உயரத்திலும், எடையை 29 கிலோவிலும் வடிவமைத்தனர்.

இந்த செக்ஸ் பொம்மைகளை எளிதாக வாங்கும் வகையில் அதன் விலையையும் குறைத்துள்ளனர். தற்போது இந்த பொம்மை 1.2 லட்ச ரூபாய்க்கு (1,500 அமெரிக்க டாலர்) விற்கப்படுகிறது. அமெரிக்காவில் அபிஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இது போன்ற பொம்மைகள் 5 லட்ச ரூபாய்க்கு (6,000 அமெரிக்க டாலர்) விற்கப்படுகின்றன.

ஆனால், இந்த பொம்மைகள் வெறும் பாலியல் தேவையைத் தாண்டி, 2025-ம் ஆண்டுக்குள் வீட்டு வேலைகளைச் செய்யும்படியும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவக் கூடியவையாகவும், வயதானவர்களை கவனித்துக்கொள்ளவும் உருவாக்கப்பட உள்ளன. Love உடல் மசாஜ் செய்யும் கருவிகளை `செக்ஸ் டாய்ஸ்’ என வகைப்படுத்த முடியாது - மும்பை உயர் நீதிமன்றம்!

2030-ம் ஆண்டுக்குள், ஆபத்தான வேலைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ரோபோக்கள் தயாரிப்பதில் நிறுவனம் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.      

இது குறித்து ஸ்டார்பெர்ரியின் சிஇஓ இவான் கூறுகையில், ``பயனர்களுடன் உடல் ரீதியாகப் பேசவும், தொடர்பு கொள்ளவும் கூடிய அடுத்த தலைமுறை செக்ஸ் பொம்மையை நாங்கள் உருவாக்குகிறோம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் எங்கள் முன்மாதிரிகள் தயாராக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

தொழில்நுட்ப வளர்ச்சி நல்லது தான் என்றாலும், இது பாதகத்தை ஏற்படுத்துவதாக பலர் மனம் வருந்தியுள்ளனர். இது போன்ற செக்ஸ் ரோபோக்கள் ஒருவரின் சம்மதமின்றி உறவு கொள்ளும் (consent) தீங்கான மனப்பான்மையை வலுப்படுத்தலாம். அதோடு உணர்ச்சி மற்றும் பாலியல் தேவைக்காக இவற்றை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை உண்டாகி, பலர் சமூகத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.


http://dlvr.it/T8khKg

WikiLeaks: ஜூலியன் அஸாஞ்சே விடுவிப்பு... சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நபர் - யார் இவர்?!

2010-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான், ஈராக் போரின் போது, அமெரிக்கா ஊழல், மற்றும் மனித உரிமை மீறல்கள் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அது தொடர்பான ஆவணங்களை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜூலியன் அஸாஞ்சே ஹேக் செய்து வெளியிட்டார். அது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்க இராணுவத்தின் தவறுகளை அம்பலப்படுத்தும் ஒரு பத்திரிகையாளராகவே ஜூலியன் அஸாஞ்சே செயல்பட்டதாக ஒரு தரப்பினரும்,ஜூலியன் அஸாஞ்சே

அவரின் நடவடிக்கைகள் முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தும் செயல்பாடுகள், நாட்டின் சட்டங்களை மீறும் செயல் என மற்றொரு தரப்பினரும் வாதிட்டனர். இதற்கிடையில், அமெரிக்கா அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. அதே நேரம் ஜூலியன் அஸாஞ்சே மீது பாலியல் தொடர்பான குற்றம்சாட்டப்பட்டு அவரை கைது செய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனால் அவர் 2012-ம் ஆண்டு லண்டனின் ஈக்வடார் தூதரகம் மூலம் அடைக்கலம் கேட்டு தஞ்சமடைந்தார்.

அவரை அமெரிக்காவிடம் ஒப்படைத்தால் அவர் மீது மனித உரிமை மீறல்கள் அரங்கேற்றப்படக் கூடும் என ஈக்வடார் தூதரகம் அவருக்கு 2019 வரை அடைக்கலம் கொடுத்தது. அதன் பிறகு அவரை பிரிட்டிஷ் காவல்துறை, அமெரிக்காவை உளவு பார்த்தது, ரகசிய ஆவணங்களை வெளிப்படுத்தியது உள்ளிட்ட 17 குற்ற வழக்குகளின் கீழ் கைது செய்ததால், அவர் கடந்த 5 ஆண்டுகளாக லண்டன் சிறையில் இருந்தார்.ஜூலியன் அஸாஞ்சே

இந்த நிலையில், ஜூலியன் அஸாஞ்சே தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. ஆனால் அங்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அமெரிக்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஜூலியன் அஸாஞ்சே தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

மேலும், ஆஸ்திரேலிய அரசுடனான அமெரிக்காவின் ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு, ஜூலியன் அஸாஞ்சேவுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால், ஜூலியன் அஸாஞ்சே தற்போது பிரிட்டன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் செய்யப்பட்டிருக்கிறார்.ஜூலியன் அஸாஞ்சே

நாளை மதியம் அமெரிக்காவில் ஆஜராகவிருக்கும் ஜூலியன் அஸாஞ்சேவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் பிரிட்டனின் லண்டன் சிறையில் 5 ஆண்டுகள் இருந்துவிட்ட நிலையில், அது இந்த தண்டனையிலிருந்து கழிக்கப்படும் எனக் கருதப்படுவதால், அவர் விரைவில் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்குச் செல்வார் எனவும் கூறப்படுகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88``ஜூலியஸ் அசாஞ்சேவை நாடு கடத்தலாம்..!" - இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி


http://dlvr.it/T8kgtL

Monday, 24 June 2024

T20 WC 2024 : "எங்களுக்கு இதுவே பெருசுதான், ஆனாலும்..." - அமெரிக்க அணியின் கேப்டன் நம்பிக்கை

2024 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்கா- இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இங்கிலாந்து அணி

அதுமட்டுமின்றி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவிய அமெரிக்க அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்து டி 20 உலக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.

இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் பேசியிருக்கிறார். " இது எங்கள் முதல் உலகக் கோப்பை. நாங்கள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்று தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள், இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடுவோம் எனப் பலரும் நம்பவில்லை. இந்தத் தொடரில் கற்ற பாடங்களின் மூலமாக அமெரிக்க அணி மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன். அமெரிக்க அணி

ஃபிரான்சைஸ் கிரிக்கெட் மிகவும் நல்லது மற்றும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். எனவே அமெரிக்க வீரர்கள் அதுமாதிரியான கிரிக்கெட் போட்டிகளில் முடிந்தவரை கலந்துக்கொண்டு நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.


http://dlvr.it/T8hGjg

Friday, 21 June 2024

Coca-Cola: `900 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுங்கள்'- பாலியல் வழக்கில் Alki David-க்கு அதிரடி உத்தரவு

கோகோ கோலா நிறுவனத்தின் வாரிசும், கிரேக்க கோடீஸ்வரருமான அல்கி டேவிட், ஹாலோகிராஃப் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் மாடலாக ஜேன் டோ என்ற பெண் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், ஜேன் டோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தொடர்பான மனுவில், ``அல்கிடேவிட் அவர் நிறுவனத்தில் நான் பணிபுரிந்த மூன்று ஆண்டுகளில், என்னைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். அல்கி டேவிட்

இந்த வழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 900 மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக ஜேன் டோவின் வழக்கறிஞர்,`` 2016 - 2019-க்கு இடையில் மூன்று ஆண்டுகளாக அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.

இவர்மீது ஏற்கெனவே பாலியல் தொல்லை தொடர்பான வழக்கு நடந்து வந்த சமயத்தில்தான், என் கட்சிக்காரரையும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பாலியல் வன்கொடுமை வழக்கின் வரலாற்றில் மிகப்பெரிய தீர்ப்புகளில் ஒன்று இது. இவ்வளவு நஷ்ட ஈடு யாருக்கும் கொடுத்தது கிடையாது. அவருக்கு எதிராக தொடரப்பட்ட பல பாலியல் தொல்லை தொடர்பான வழக்குகளை அவர் எதிர்க்கொண்டிருக்கிறார்." எனத் தெரிவித்திருக்கிறார்.பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள குற்றவாளிக்கு ஜாமீன் - கோர்ட் உத்தரவு


http://dlvr.it/T8ZH6D

Thursday, 20 June 2024

Girl Baby: மறுபடியும் முதல்ல இருந்தா?! பெண் குழந்தை ஆசை... அடுத்தடுத்து பிறந்த 9 ஆண் குழந்தைகள்!

ஆண் குழந்தையை எதிர்பார்த்து வரிசையாக பெண் குழந்தைகள் பெற்றவர்கள் உண்டு. ஆனால், இப்போது பெண் குழந்தையை எதிர்பார்த்து வரிசையாக ஆண் குழந்தைகளைப் பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. 

அமெரிக்காவை சேர்ந்த 31 வயதான யலன்சியா ரொசாரியோ தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். தொடர்ச்சியாக 9 முறை கர்ப்பமாகி 9 ஆண் குழந்தைகளைப் பெற்றுள்ளார். 10-வது முறை கர்ப்பமான போதே இவருக்கு ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரட்டையர்கள் பிறந்துள்ளனர். Happy Teeth: கர்ப்ப காலத்தில் பல் சிகிச்சை... குழந்தையை பாதிக்குமா?

இப்போது பெண் குழந்தை பிறந்து விட்டாலும் கர்ப்பமாவதை இவர் நிறுத்தவில்லை. தற்போது தன் மகளுக்கு ஒரு சகோதரி வேண்டும் என 11-வது முறையாக கர்ப்பமாகியுள்ளார். 

யலன்சியா தனது 18-வது வயதில் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார். இவரின் மூத்த மகனுக்கு இப்போது 13 வயதாகிறது. இந்தச் சிறுவன் தற்போது சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சராக இருக்கிறார்.

இவருக்கு பெரிய குடும்பம் வேண்டும் என்று ஆசை. அதனால் தொடர்ச்சியாக குழந்தைகளைப் பெற்றிருக்கிறார். அதோடு தங்களுடைய குழந்தைகளை வைத்து வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.  


http://dlvr.it/T8X6Rq

Wednesday, 19 June 2024

தென்கொரியா: `ஆன்ட்டிகளுக்கு அனுமதியில்லை’ - ஜிம்மில் வைக்கப்பட்ட அறிவிப்பால் அதிர்ச்சி!

தென்கொரியாவில் உள்ள ஒரு ஜிம்மில், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அனுமதிக்கத் தடை விதிப்பதாக அதன் உரிமையாளர் வைத்திருந்த அறிவிப்புப் பலகையால் பெரும் விவாதம் கிளம்பியுள்ளது. தென் கொரியாவின் இஞ்சியோனில் உள்ள ஓர் உடற்பயிற்சிக்கூடத்தின் அறிவிப்புப் பலகையில் 'அஜும்மாக்களுக்கு அனுமதி இல்லை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 'ஆன்ட்டி'களுக்கு தடை...'ஜிம்'மில் வைக்கப்பட்ட அறிவிப்பால் அதிர்ச்சி!மனிதர்களை போலவே சங்கேத மொழியில் பேசும் யானைகள்... ஒரு சுவாரஸ்யமான விஞ்ஞான கண்டுபிடிப்பு!

கொரியா உள்ளிட்ட சில மொழிகளில், 'அஜும்மா' என்பது 30 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களைக் குறிக்கும் ஒரு வார்த்தை. ஆங்கிலத்தில் உள்ள ‘ஆன்ட்டி’ என்ற வார்த்தைக்கு ஒப்பானது. மேலும் இந்த வார்த்தை பொதுவாக, முரட்டுத்தனம் அல்லது முகம் சுழிக்கத்தக்க நடத்தை கொண்டவரைக் குறிக்கும் ஓர் இழிவான வார்த்தையாகக் கருதப்படுகிறது. ஜிம்மில் இதுபோன்ற அறிவிப்பு வைக்கப்பட்ட நிலையில், இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர், "இழிவான மனப்பான்மை உடைய 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களால் எங்கள் உடற்பயிற்சிக் கூடத்தின் வணிகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண்கள் லாக்கர் அறைகளில் உள்ள சலவை இயந்திரங்களை ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் எங்களுக்குத் தண்ணீர் கட்டணம் மிகவும் அதிகரிக்கிறது. gymAI Beauty Pageant: AI மாடல்களுக்கான உலக அழகிப் போட்டி -இந்தியாவின் Zara Shatavari பற்றி தெரியுமா?!

மேலும் உடற்பயிற்சிக் கூடத்தில் உள்ள டவல், சோப்பு மற்றும் ஹேர் டிரையர்கள் உள்ளிட்ட பொருள்களை இவர்கள் திருடிச் செல்கிறார்கள். இந்த ’ஆன்டிகள்’ அனைவரும் ஒன்று சேர்ந்து, உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் இளைய பெண்களை கிண்டல் செய்கின்றனர். மேலும், உடற்பயிற்சி கூடத்துக்குப் புதிதாக வரும் பெண்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள். இவர்களால், பல பெண்கள் இங்கு வருவதை நிறுத்திவிட்டனர்.

வாடிக்கையாளர்களின் இழப்பைத் தடுக்க இந்தப் பெண்களைத் தடை செய்வதாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இவர், 'அஜும்மா' மற்றும் 'பெண்கள்' என்பதை வேறுபடுத்துவதற்கான எட்டு கட்டுப்பாடுகள் அடங்கிய ஒரு பட்டியலைக் குறிப்பிட்டிருக்கிறார். அதில், பிறரைக் கிண்டல் செய்பவர்கள், பொதுப் போக்குவரத்தில் கர்ப்பிணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்வது, தங்கள் சொந்தப் பணத்தைச் செலவழிக்க விரும்பாமல் மற்றவர்களின் பொருளைத் திருடுபவர்கள் உள்ளிட்டோர் அடங்குவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். 'ஆன்ட்டிகளுக்கு அனுமதியில்லை’ - ஜிம்மில் வைக்கப்பட்ட அறிவிப்பால் அதிர்ச்சி!இப்படி கூட Fitness பண்ணலாம்; Gym தான் போகணும்னு அவசியம் இல்ல! - Actress Roshni Haripriyan | Workout

'உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளரின் அம்மாவும் ஆன்ட்டி அல்லவா? உடற்பயிற்சி கூடத்தை மூடுவதே சரி' என்று பலர் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.


http://dlvr.it/T8Tdc7

Monday, 17 June 2024

Pakistan Team: "நாங்கள் ஒரு அணியாகச் செயல்படவில்லை!" - அணியின் தோல்வி குறித்து கேப்டன் பாபர் அசாம்

நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக் போட்டியில் அயர்லாந்து அணியை வென்றிருந்தது.

சூப்பர் 8 வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட நிலையில் போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். அதில் அணியின் மோசமான செயல்பாடு குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். பீல்டிங்கில் சொதப்புவது, பேட்டிங்கில் ரன்களைக் குவிக்கத் தவறுவது போன்ற பிரச்னைகளை தற்போதும், பாகிஸ்தான் அணி எதிர்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது.Pakistan Team

அயர்லாந்து அணி முதலில் களமிறங்கி 106 ரன்களை மட்டுமே அடித்த நிலையில், வழக்கம்போல பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சொதப்பி, ஒரு வழியாக 111 ரன்களைச் சேர்த்து ஆறுதல் வெற்றி பெற்றது. இருப்பினும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறிவிட்டது.

குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா அணியுடன் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்வியே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலிருக்கும் வீரர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல்களும் அணிக்கு பிரச்னையாக இருந்தன. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து கேப்டன் பாபர் அசாம் பேசியிருக்கிறார்.pakistan players

அவர் கூறியதாவது, ''எங்களது அணியின் பந்துவீச்சில் எந்த பிரச்னையும் இல்லை. பேட்டிங்கில்தான் பிரச்னை உள்ளது. சிறப்பாக பேட்டிங் செய்திருந்தால் அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சுலபமாக வீழ்த்தியிருப்போம். அந்த இரு அணிகளுக்கு எதிரான போட்டியில் சில தவறுகளையும் செய்து விட்டோம். விக்கெட்டுகளை இழக்கும்போது அது அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது. எங்களிடம் நல்ல வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் ஓர் அணியாக நாங்கள் இணைந்து செயல்படவில்லை" என்று கூறியிருக்கிறார்.

பாபர் அசாம் சொல்லும் காரணத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.


http://dlvr.it/T8NkMS

Love: ``தாத்தா வயதிருக்கும்" காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்... புலம்பும் நெட்டிசன்கள்!

`காதலுக்கு கண்கள் இல்லை' என்று சொல்வதுண்டு. `காதலுக்கு வயதும் இல்லை' என்பது போல 80 வயது முதியவர் ஒருவர் 23 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.

இங்கு இளம் ஆண்கள் பலரும் திருமணம் செய்துகொள்வதற்கும், காதலிப்பதற்கும் பெண்கள் கிடைக்காமல் மனம் குமுறிக் கொண்டிருக்கும் வேளையில், முதியவர் காதலித்து திருமணம் செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சீனாவின் ஹெபெய் மாகாணத்தை சேர்ந்த 80 வயதான முதியவர் லீ. இவர் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த நிலையில், அங்கு 23 வயதான சியாஃபங் (Xiaofang) பணிபுரிந்து வந்துள்ளார்.  Love வருமானத்தை இதய ஆபரேஷனுக்கு வழங்கும் பாடகி... 3,000 குழந்தைகளுக்கு மறுவாழ்வு!

முதலில் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில், இந்த நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து காதலாக மலர்ந்துள்ளது. அதன்பின் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். 

இது குறித்து அப்பெண் தன் பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோரை கைவிட்டு காதலனின் கரம் பிடித்துள்ளார்.  

முதியவரின் முதிர்ச்சி, ஞானம் ஆகியவற்றால் அந்தப் பெண் ஈர்க்கப்பட்டிருக்கிறார். அதேசமயம் இளமை மற்றும் கருணையின் காரணமாக முதியவர் இளம் பெண்ணை காதலித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.  

சபதம் மேற்கொண்டு எளிய முறையில் தங்களது திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த புது தம்பதியரின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. 

இந்தப் புகைப்படங்களைக் கண்டவர்கள் பலர் பணத்திற்காக அப்பெண் முதியவரை திருமணம் செய்து கொண்டதாக கமென்ட் செய்து வருகின்றனர். வேறு சிலர் அவர்களின் காதல் வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சியாஃபங் முதியோர் இல்லத்தில் வேலை செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறார். அதோடு லீ தனது ஓய்வூதிய பணத்தை நம்பி மட்டுமே வாழக்கையை நகர்த்தியிருக்கிறார். இதையெல்லாம் பொருட்டாக கொள்ளாமல் தன் தாத்தாவின் வயதுடைய ஒருவரை இப்பெண் திருமணம் செய்துள்ளார். Love: வாங்க பழகலாம்... `இந்திய கணவன் வேண்டும்' - காதல் துணை தேடும் ரஷ்ய பெண்புறா!


http://dlvr.it/T8NMj9

Sunday, 16 June 2024

Sunil Gavaskar: ``தயவு செஞ்சு பணம் இல்லைன்னு சொல்லாதீங்க!"- ஐ.சி.சி யை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்

தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் மழை காரணமாக நிறைய போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

மழையின் காரணமாக இந்தியா மற்றும் கனடா விளையாடவிருந்த போட்டி அவுட் ஃபீல்டு பகுதியில் மழைநீர் தேங்கியிருந்ததால் கைவிடப்பட்டது. அதேபோல பாகிஸ்தானின் அடுத்தச்சுற்று வாய்ப்பை நிர்ணயிக்க இருந்த அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியும் மழை நீர் தேங்கியிருந்த காரணத்தால் கைவிடப்பட்டது. இந்த இரண்டு போட்டிகளும் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடாவில் நடைபெற இருந்தது. அங்கு கடுமையான மழை பெய்து வருவதால் இந்த இரண்டு போட்டிகளும் கைவிடப்பட்டன.america vs ireland

தொடர்ந்து முக்கிய போட்டிகள் மழையால் கைவிடப்பட்டு வருவதால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். சரியான வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் குட்டை போல ஆங்காங்கே தேங்கி இருந்தது. அதை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட போதும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் சரியான ஏற்பாடுகளை செய்யாத ஐசிசியை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய கவாஸ்கர்," மொத்த மைதானத்தையும் மூடுவதற்குத் தேவையான கவர் வசதிகள் இல்லாத மைதானத்தில் ஐசிசி போட்டியை நடத்தக் கூடாது. முழு மைதானத்தையும் மூடும் வகையில் கவர்களை வைத்திருக்க வேண்டும். இந்தப் போட்டிகளை நடத்துவதன் மூலம் நிச்சயம் உங்களுக்கு பணம் கிடைக்கும். அதனால் உங்களிடம் பணம் இல்லை என்று சொல்ல முடியாது.ICC

ரசிகர்கள் வெகுதூரத்தில் இருந்து போட்டிகளைக் காண வருகிறார்கள். அவர்களுக்கு நல்ல கிரிக்கெட்டை விருந்தாக்க வேண்டும். அமெரிக்காவில் இத்தனை ஸ்டார் வீரர்கள் ஆடும் தொடரை இனி எப்போது ரசிகர்கள் பார்க்க முடியும்.' என்று கூறியிருக்கிறார்.


http://dlvr.it/T8M2Vf

Friday, 14 June 2024

ஜெய்ப்பூர்: ரூ.300 மதிப்புள்ள நகையை ரூ.6 கோடிக்கு வாங்கிய அமெரிக்க பெண்... நடந்தது என்ன?

ஜெய்ப்பூரைச் சேர்ந்த தந்தை, மகன் இரண்டு வருடங்களுக்கு முன்பு 300 ரூபாய் மதிப்புள்ள போலி நகையை, விலை உயர்ந்த வைர நகை எனக் கூறி அமெரிக்க பெண்னை ஏமாற்றி ரூ.6 கோடிக்கு விற்பனை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

அமெரிக்க குடியுரிமை பெற்ற செரிஷ் என்ற பெண் 2022-ல் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்தபோது, ஜெய்ப்பூர் மாநிலத்தில் வியாபார சந்தைகளுக்கு பெயர் பெற்ற ஜோஹ்ரி பஜார் பகுதிக்கு சென்றிருக்கிறார்.ரூ.300 மதிப்புள்ள நகையை 6 கோடிக்கு வாங்கிய அமெரிக்க பெண்!

அங்கு தந்தை , மகனான கௌரவ் சோனி மற்றும் ராஜேந்திர சோனி நகைக்கடை ஒன்றை நடத்தி வந்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் செரிஷிடம் ஒரு நகையைக் காண்பித்து, 'இது மிகவும் விலை உயர்ந்த வைர கற்களை கொண்டு செய்யப்பட்ட நகை. சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது' என ஆசை வார்த்தைகளைக் கூறி அதை வாங்கும்படி தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் சொன்னதை நம்பி அந்த நகையை ரூ.6 கோடிக்கு விலை பேசி வாங்கியிருக்கிறார் செரிஷ்.

மிகவும் அழகான நகையை வாங்கிய சந்தோஷத்தில் செரிஷும் அமெரிக்கா திரும்பியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நகையை போலி என அமெரிக்க நகை மதிப்பீட்டாளர்கள் உறுதி செய்துள்ளனர். மேலும் அந்த நகையின் மதிப்பு வெறும் ரூ.300 என்றும் தெரிவித்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செரிஷ் இது குறித்து விசாரணை செய்ய மீண்டும் ஜெய்ப்பூர் வந்திருக்கிறார். ரூ.300 மதிப்புள்ள நகையை 6 கோடிக்கு வாங்கிய அமெரிக்க பெண்!Rent: வீட்டு வாடகை 80,000 ரூபாய் பெங்களூரு இன்ஜினீயரின் வைரல் போஸ்ட்; விழிபிதுங்கும் நெட்டிசன்கள்!

தனக்கு நகைகளை விற்பனை செய்த கடை உரிமையாளர்களான கௌரவ் சோனி மற்றும் ராஜேந்திர சோனியிடம் இது குறித்து கேட்டபோது, தங்களுக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் செரிஷ். இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும் நாடியிருக்கிறார். தூதரகத்தின் தலையீட்டால் வழக்கு விசாரணையை ஜெய்ப்பூர் காவல்துறையினர் தீவிரமாக்கினர்.

இது குறித்து பேசிய ஜெய்ப்பூர் காவல் துறை டிஜிபி பஜ்ரங் சிங் ஷெகாவத், "அந்த நகை ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில், நகையில் பதித்திருந்த கற்கள் அனைத்தும் போலியானவை என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணை செய்ய அந்த நகைக்கடைக்கு சென்றபோது, தாங்கள் அதை விற்கவில்லை. அமெரிக்க பெண் தான் அந்த நகையை கடையிலிருந்து எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகத் தெரிவித்தனர் கடையின் உரிமையாளர்கள்.இது குறித்து விசாரணை செய்ய அந்த நகை கடைக்கு சென்றபோது, தாங்கள் அதை விற்கவில்லை. அமெரிக்க பெண் தான் அந்த நகையை கடையிலிருந்து எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகத் ததெரிவித்தனர்.ஒரிஜினல் நகைக்கு பதில் போலி நகை... கோவை கோயிலில் கைவரிசை காட்டி சிக்கிய அர்ச்சகர் - வில்லங்க பின்னணி

சிசிடிவி காட்சிகளை நாங்கள் ஆய்வு செய்கையில், அதுபோன்ற சம்பவம் நிகழவில்லை என்பது தெரிய வந்தது. இதற்கிடையில், கடை உரிமையாளர்களான தந்தையும் மகனும் தப்பிவிட்டனர். செரிஷின் புகாரை தொடர்ந்து பலரும் அந்த நகைக்கடை உரிமையாளர்கள் மீது புகார் அளித்துள்ளனர். தப்பியவர்களைக் கண்டுபிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.


http://dlvr.it/T8HJf8

Thursday, 13 June 2024

T20 World Cup 2024: 75 நாள்கள்; ரூ.250 கோடி; போட்டிகள் முடிந்த பின்னர் இடிக்கப்பட்ட ஸ்டேடியம்!

2024 டி20 உலகக் கோப்பைக்காகக் கட்டப்பட்ட அமெரிக்க ஸ்டேடியம் புல்டோசர்கள் கொண்டு அகற்றப்பட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்துகின்றன. 2024 டி20 உலகக் கோப்பைக்காக அவசர அவசரமாகக் கடந்த 5 மாதத்தில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டது.நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்

இதுவரை அந்த ஸ்டேடியத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி உட்பட எட்டு போட்டிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்டேடியம் டி20 உலகக் கோப்பை நடத்துவதற்காகக் கட்டப்பட்ட தற்காலிக மைதானம் ஆகும். நேற்று நடைபெற்ற இந்தியா - அமெரிக்கா இடையிலான போட்டியே இங்கு இறுதிப் போட்டியாக அமைந்தது.

இதற்குப் பிறகு இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது. அதனால் முழுக்க முழுக்க டி20 உலகக் கோப்பைக்காக மட்டுமே அமைக்கப்பட்ட இந்த ஸ்டேடியம் புல்டோசர்கள் கொண்டு அகற்றப்பட்டு வருகிறது. அந்த வீடியோக்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்

சுமார் 35,000 பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்ட இந்த ஸ்டேடியம் 75 நாள்களில் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


http://dlvr.it/T8DQ4p

Wednesday, 12 June 2024

Hunter Biden: `25 ஆண்டுகள் வரை சிறை'- பைடன் மகனைக் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம்! - பின்னணி என்ன?

அமெரிக்காவின் 46-வது அதிபராக கடந்த 2021-ம் ஆண்டு முதல் பதவியில் இருந்து வருபவர் ஜோ பைடன்.  அங்கு இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் இரு தரப்பும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில், சட்ட விரோதமாகத் துப்பாக்கி வாங்கியது தொடர்பாக தொடரப்பட்ட மூன்று  வழக்குகளில், அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தவரைத் துப்பாக்கிகள் வாங்க நம் நாட்டை போன்று கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. 18 வயது நிறைவடைந்த எவரும்  சட்டபூர்வமாகவே கடைகளில் சென்று துப்பாக்கிகளை வாங்கிக்கொள்ளலாம். அப்போது துப்பாக்கி வாங்குபவர்கள் ஒரு விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதில் வாங்கும் நபரின் தனிப்பட்ட தகவல்கள், போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக சில கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகனான ஹண்டர் பைடன் கடந்த 2018-ல் துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அவர் நிரப்பிக் கொடுத்த விண்ணப்பப் படிவமே அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு, ஹண்டர் பைடன் துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அவர் நிரப்பிக் கொடுத்த விண்ணப்பப் படிவத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த கேள்விக்கு ஹண்டர் பைடன் போதைப்பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்று விண்ணப்பத்தில தவறான தகவல்களை பூர்த்தி செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், ஹண்டர் பைடன் அப்போது போதைப்பொருளைப் பயன்படுத்தி இருக்கிறார்.

இந்த துப்பாக்கியை அவர் சுமார் 11 நாள்கள் தன்வசம் வைத்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாகவே அவர் மீது கடந்த 2023 செப்டம்பர் மாதம் வழக்குகள் தொடரப்பட்டன. போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக அமெரிக்க அரசிடம் பொய் கூறியது, போதைப்பொருள் பயன்படுத்தும்போது துப்பாக்கியை வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

துப்பாக்கியை விற்றது தொடர்பான விவகாரத்தில் பொய் வாக்குமூலம் அளித்தது, துப்பாக்கியை வாங்கும்போது நடந்த பணப் பரிமாற்றம் தொடர்பாக பொய் வாக்குமூலம் அளித்தது, போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தபோது கை துப்பாக்கியை வைத்திருந்தது என மூன்று வழக்குகள் அவர்மீது தொடரப்பட்ட நிலையில், மூன்றிலும் அவர் குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கை விசாரிக்க 12 பேர் கொண்ட தலைமை நிதிபதிகள் (ஜூரிக்கள்) குழு அமைக்கப்பட்டது, அவர்கள் நடத்திய தீவிர ஆலோசனையின் இறுதியில்தான் அவர்கள் ஹண்டர் பைடன் குற்றவாளி என முடிவெடுத்தனர்.

இதில் முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள், மூன்றாவது வழக்கில் 5 ஆண்டுகள் என, அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை அவருக்குத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அதேநேரம் அவரது தண்டனை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க சட்டப்படி குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு 120 நாள்களில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட வேண்டும். அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் நிலையில், அதற்குள் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனவும், "அமெரிக்க அதிபரின் மகன் ஒருவர், குற்ற வழக்கில் தண்டிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்" என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தீர்ப்பு வாசிக்கப்படும்போது ஹண்டர் பைடனின் மனைவி மெலிசா கோஹன் நீதிமன்ற அறையில்தான் இருந்தார். இரு தரப்பு வாதமும் நேற்று நிறைவடைந்து, மூன்று மணி நேர விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனை குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி மேரிலென் நோரிகா அறிவித்துள்ளார். இந்த வழக்கில் தனது மகன் குற்றவாளி என தீர்ப்பு வந்தால், அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது என அதிபர் பைடன் முன்னதாகவே அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகவும், அதேநேரம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.கலப்பு திருமணம் செய்த மகளை கடத்திய தந்தை; இரு மாநில போலீஸார் தேடியும் கிடைக்காததால் கோர்ட் அதிருப்தி


http://dlvr.it/T89W0M

Tuesday, 11 June 2024

ரூ.300 நகையை ரூ.6 கோடிக்கு விற்ற ராஜஸ்தான் நபர்... அமெரிக்கப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் ரூ.300 மதிப்புள்ள போலி நகையை அமெரிக்க பெண்ணிடம் ரூ.6 கோடிக்கு விற்று ஏமாற்றிய சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த செரிஷ் (Cherish) என்பவர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஜோஹ்ரி பஜாரிலுள்ள கடையில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகையை வாங்கியிருக்கிறார்.FRAUD

இந்த நிலையில், கடந்த ஏப்ரலில் அமெரிக்காவில் நடந்த கண்காட்சியில் இந்த நகை காட்சிப்படுத்தப்பட்டபோது ​​அது போலியானது என்று தெரியவந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த செரிஷ், நேராக ராஜஸ்தானுக்கு வந்து கடை உரிமையாளர் கௌரவ் சோனியை சந்தித்தார். ஆனால், கௌரவ் சோனி அவரின் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.

இதனால், செரிஷ் ஜெய்ப்பூர் போலீஸில் புகாரளித்தார். கூடவே, அமெரிக்க தூதரக அதிகாரிகளின் உதவியையும் நாடினார். அதன்பின்னர், போலீஸார் இந்த விஷயத்தை விசாரிக்கத் தொடங்கினர். விசாரணையில் செரிஷ், 2022-ல் இன்ஸ்டாகிராம் மூலம் கௌரவ் சோனியைத் தொடர்புகொண்டதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் செயற்கை நகைகளுக்காக ரூ.6 கோடி வரையில் அவருக்கு பணம் செலுத்தியிருப்பதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார்.Police

அதைத் தொடர்ந்து, விசாரணையின் ஒரு பகுதியாக கௌரவ் சோனியை போலீஸார் தொடர்புகொள்ள முயற்சித்தனர். ஆனால், கௌரவ் சோனி தன்னுடைய தந்தை ராஜேந்திர சோனியுடன் தலைமறைவாகிவிட்டார். தற்போது, தனிப்படை அமைத்து அவர்களைத் தேடிவருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.28 ஆண்டுகால சட்டப் போராட்டம் - அதே பழைய ரூபாய் நோட்டுகள்; லஞ்சப் பணத்தை மீட்ட கோவை சமூக ஆர்வலர்


http://dlvr.it/T87Nz2

Saturday, 8 June 2024

சீனாவின் உயரமான நீர்வீழ்ச்சியில் குழாய் மூலம் தண்ணீர் - வைரலான வீடியோவால் சர்ச்சை

சீனாவின் மிக உயரமான மற்றும் வற்றாத யூண்டாய் நீர்வீழ்ச்சியில் (Yuntai), தண்ணீர் வரத்து முழுவதும் நின்றதால், குழாய் மூலம் தண்ணீர் நீர் அனுப்பப்படும் வீடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹெனான் பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று யூண்டாய் நீர்வீழ்ச்சி‌. இது சுமார் 1,024 அடி உயரம் கொண்டது. இதன் இயற்கை சூழ்ந்த அமைப்புக்கு ஆண்டுதோறும் சுமார் 7 மில்லியன் சீன மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதனாலேயே இந்த பூங்காவிற்கு சிறப்பு தரமதிப்பீடு சீன அரசின் சுற்றுலாத்துறையால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நீர்வீழ்ச்சியில் சமீப காலமாக நீர் வரத்து குறைந்துள்ளது. அதனால் குழாய் மூலம், தண்ணீர் இயற்கையாகவே விழுவதைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் மலையேறும் நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில் "யூண்டாய் நீர்வீழ்ச்சியின் தொடங்கும் இடத்தைப் பார்ப்பதற்காக, கஷ்டப்பட்டு மலையேறிச் சென்றோம். அப்போது சீனாவின் உயரமான நீர்வீழ்ச்சிக்கு, பெரிய குழாய் ஒன்றால் நீர் வழங்கப்படும் காட்சியைப் பார்த்தோம். சில குழாய்கள் தான் யூண்டாய் நீர்வீழ்ச்சியின் ஆதாரம்." என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு வைராலாகியதைத் தொடர்ந்து , இது தொடர்பாக பூங்கா நிர்வாகம், யூண்டாய் நீர்வீழ்ச்சி பதில் கூறுவதைப் போலவே விளக்கம் அளித்தது. அதில்,"உங்கள் எல்லோரையும் இந்த நிலையில் நான் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நீங்கள் என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் நான் மிகவும் அழகான வடிவத்தில் இருப்பேன் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. வறண்ட காலங்களில் மட்டுமே நான் ஒரு சிறிய மாற்று ஏற்பாட்டைச் செய்தேன். அதனால் எனது நண்பர்களான உங்களைச் சந்திக்கும் போது, நான் சிறந்த ஒன்றாக இருப்பேன்" என கூறப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வைரலாகியதைத் தொடர்ந்து அந்த பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />

http://dlvr.it/T80zGb

Thursday, 6 June 2024

Lok Sabha Election 2024: மோடிக்கு வாழ்த்து தெரிவித்த தைவான்; உடனே எதிர்வினையாற்றிய சீனா!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் (Lok Sabha Election 2024), பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மூன்றாவது முறையாக வென்றிருக்கிறது. எனவே, மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராகவிருக்கிறார். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதில், சீனாவிடமிருந்து தனித்து இயங்க முயலும் தைவான் அதிபர் லாய் சிங்-தேவும் ஒருவர்.மோடி - சீனா வரைபடம்

அவரின் எக்ஸ் பக்கத்தில், ``வேகமாக வளர்ந்து வரும் தைவான்-இந்தியா கூட்டாண்மையை மேம்படுத்தவும், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் எங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இந்தோ பசிபிக் அமைதி மற்றும் செழிப்புக்கு பங்களிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியப் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி,``அருமையான செய்திக்கு நன்றி. பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை நோக்கி நாம் பணியாற்றும்போது நெருக்கமான உறவுகளை எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், சீனா அதிபர் ஜீ ஜிங்பிங் இன்னும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காத நிலையில், இந்தியாவில் இருக்கும் சீன தூதரக அலுவலக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், ``மக்களவைத் தேர்தலில் (Lok Sabha Election 2024) வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க மற்றும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாழ்த்துகள். சீனாவுடன் ராஜதந்திர உறவுகளைக் கொண்ட நாடுகள், தைவானுடனான உத்தியோகபூர்வ தொடர்பு கொண்டிருப்பதை சீனா எப்போதும் உறுதியாக எதிர்க்கிறது.சீனா அதிபர் - பிரதமர் மோடி

உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே இருக்கிறது. ஒரே சீனா கொள்கையில் இந்தியா தீவிர அரசியல் ஈடுபாடுகளை கொண்டிருக்கிறது. தைவான் அதிகாரிகளின் அரசியல் திட்டங்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரே சீனா கொள்கையை மீறும் செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். சீனக் குடியரசு என்று அதிகாரபூர்வமாக அறியப்படும் தைவான், கம்யூனிஸ்ட் சீனாவால் அங்கீகரிக்கப்பட்ட நாடு அல்ல." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.அகங்காரம், அராஜகம், அத்துமீறல்; பஞ்சாப், ஹரியானா, உ.பி-யில் மோடி அலையை புஷ்வாணமாக்கிய விவசாயிகள்!


http://dlvr.it/T7xs0Z

Wednesday, 5 June 2024

T20 World Cup 2024: "இது மைதானம் இல்லை... பூங்கா!" - அதிருப்தி தெரிவிக்கும் ராகுல் டிராவிட்

ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில் தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை டி20 உலகக்கோப்பைத் தொடர் பக்கம் திரும்பியிருக்கிறது.

கடந்த 2-ம் தேதி தொடங்கிய இந்த டி20 உலகக்கோப்பைத் தொடர் அமெரிக்காவிலும் மேற்கிந்திய தீவுகளிலும் நடைபெற்று வருகிறது. நியூயார்க் நகரத்தில் இந்திய அணி இன்று அயர்லாந்துடன் தனது முதல் போட்டியை ஆடவிருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவிற்குச் சென்றிருக்கின்றனர். இந்நிலையில் பயிற்சி வசதிகள் குறித்து இந்தியத் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியிருக்கிறார். IND VS IRE

இது தொடர்பாகப் பேசிய ராகுல் டிராவிட், “இங்குள்ள மைதானம் சற்று வித்தியாசமாக இருக்கிறது. வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் உலகக் கோப்பை தொடர் என்றால் நீங்கள் ஒரு பெரிய மைதானத்தில் இருப்பீர்கள், அல்லது பாரம்பரியமான ஒரு மைதானத்தில் இருப்பீர்கள். ஆனால் நாங்களோ ஒரு பூங்காவில் இருக்கிறோம். இங்குதான் பயிற்சி செய்கிறோம்.

அமெரிக்கா போன்ற ஒரு புதிய நாட்டிற்கு வருவது உற்சாகமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த ஒரு நாட்டிற்கு மட்டும் டி20 உலகக் கோப்பையில் 16 போட்டிகள் கொடுக்கப்பட்டிருப்பது சற்று வித்தியாசமாக இருக்கிறது. அதில் 8 போட்டிகள் இந்த நியூயார்க் மைதானத்தில் நடக்கவிருக்கின்றன.ராகுல் டிராவிட்

இந்த நாட்டில் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் இல்லை. நாங்கள் எங்கள் விளையாட்டைத் தொடங்கிய பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வருவார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் போட்டிக்குத் தயாராவது, பயிற்சி செய்வது போன்ற எங்களின் திட்டங்களில் எந்த மாற்றமும் இருக்காது” என்று கூறியிருக்கிறார்.


http://dlvr.it/T7rsQm