Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, 30 March 2024

Racism: கப்பல் மோதி சரிந்த அமெரிக்க பாலம்... இந்திய பணியாளர்கள் மீது இனவெறி கார்ட்டூன்! - சர்ச்சை

கடந்த சில நாள்களுக்கு முன்பு அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்திலுள்ள பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கை நோக்கி சிங்கப்பூர் கொடியுடன் புறப்பட்ட 300 மீட்டர் நீளம் கொண்ட சரக்கு கப்பல், எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து `பிரான்சிஸ் ஸ்காட் கீ இரும்புப் பாலம் (2.6 கி.மீ நீளம்) மீது மோதியது. இந்த விபத்தில், 47 ஆண்டுகால பழமையான இந்தப் பாலம் இடிந்து விழுந்து நீருக்கு மூழ்கியது.சரக்குக் கப்பல் இரும்புப் பாலம் மீது மோதி விபத்து

இருப்பினும், பாலத்தின்மீது கப்பால் மோதுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கப்பலிலிருந்த 22 இந்தியர்கள் அடங்கிய பணியாளர் குழு கடைசி நேர அவசர அழைப்பை (Mayday Call) விடுத்ததால் பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. கப்பலிலிருந்தவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

Wild footage of ship losing power twice, crashing into Baltimore’s Francis Scott Key Bridge, causing it to collapse. footage has been sped up pic.twitter.com/IXeiuGCUkG— Carl Zha (@CarlZha) March 26, 2024

இதனால், சரியான நேரத்தில் சமயோஜிதமாகச் செயல்பட்ட இந்தியர்கள் அடங்கிய பணியாளர் குழுவை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டினார். அதோடு, மேரிலேண்ட் மாகாண ஆளுநர் வெஸ் மூர், இந்தியர்கள் அடங்கிய இந்தப் பணியாளர் குழுவினரை ஹீரோக்கள் என்றும் பாராட்டினர்.

இந்த நிலையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Foxford Comics எனும் வெப்காமிக் நிறுவனம், கப்பல் பாலத்தின் மீது மோதிய சம்பவத்தை சித்தரித்து வெளியிட்டிருக்கும் கார்ட்டூன் வீடியோ பல்வேறு எதிர்ப்பை பெற்றுவருகிறது. காரணம், கப்பலிலிருந்து பணியாளர்கள் இந்தியர்கள் என்பதால் அந்த கார்ட்டூன் வீடியோவில், கப்பலினுள் இருக்கும் இந்தியர்கள் ஒரேயொரு வேஷ்டியை கட்டிக்கொண்டு மேலாடை எதுவும் இல்லாமலிருப்பது போன்றும், பின்னணியில் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் திட்டிக்கொள்வது போன்றும் கார்ட்டூன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

Last known recording from inside the Dali moments before impact pic.twitter.com/Z1vkc828TY— Foxford Comics (@FoxfordComics) March 26, 2024

இதனால், இனவெறி (Racism) நோக்கத்தில் இந்த கார்ட்டூன் சித்தரிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சத்துவருகின்றனர். அதில் இணையதளவாசி ஒருவர், `இந்த துயர சம்பவத்துக்காக இந்தியக் குழுவினரைக் கேலி செய்வது வெட்கக்கேடானது' என விமர்சத்திருக்குகிறார். அதேபோல் மற்றொரு இணையதளவாசி, `சரக்குக் கப்பல்களில் பெரும்பாலும் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு பணியாளர்களே அதிகம் இருக்கின்றனர் என்பது இவர்களுக்குத் தெரியுமா... இல்லையென்றால், அவர்கள் இதுபோன்ற இனவெறி கருத்துக்களை வெளியிட மாட்டார்கள்' என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் இன்னொரு இணையதளவாசி, `இனவெறி அடிப்படையிலான இந்தக் கேலிக்கூத்து மிகவும் மோசமான ரசனையில் இருக்கிறது' என விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYஇனவெறி: ``இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றுவிடு..." - மிரட்டப்பட்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்!


http://dlvr.it/T4qygW

Thursday, 28 March 2024

Virat Kohli: "கோலியின் தேர்வு குறித்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்?" - ஆரோன் பின்ச் காட்டம்

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் வருகின்ற ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடைபெற இருக்கிறது.

இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பங்கேற்பாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.  இந்தியத் தேர்வுக்குழுவினர், இந்தத் தொடருக்கான அணியில் விராட் கோலி இடம் பெறுவதை விரும்பவில்லை என்ற ஒரு கருத்தும் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இந்நிலையில் விராட் கோலியும் இதற்குப் பதிலளிக்கும் விதமாக, “டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரைக்கும் உலகின் பல பகுதிகளிலும் அதை விளம்பரப்படுத்தும் பேச்சுகளில் மட்டுமே என் பெயர் அதிகமாக அடிபடுகிறது. ஆனால், என்னிடம் இன்னமும் தீவிரமாக டி20 கிரிக்கெட் ஆடுவதற்கான திறமை இருக்கிறது” என்று கூறியிருந்தார்.விராட் கோலி

தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆரோன் பின்ச், விராட் கோலிக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். “ஐ.சி.சி தொடர் ஒவ்வொரு முறை வரும்போதும் விராட் கோலியை பற்றி மட்டுமே ஏன் பேசுகிறார்கள்? இந்திய அணியில் அவரது இடத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார்களா என்று எனக்குப் புரியவில்லை.MI vs SRH: "இப்படி நடக்கும் என்று உண்மையில் நினைக்கவில்லை!" - தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா

நான் பார்த்ததில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவர் ஒரு மிகச்சிறந்த வீரர். விராட் கோலி 140 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடட்டும். இன்னொரு வீரர் 160 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக் கூடியவராகக் கூட இருக்கட்டும்.ஆரோன் பின்ச்

ஆனால் அவரை அணிக்குத் தேர்வு செய்யும்போது ஒவ்வொரு முறையும் பெரிய போட்டிகளில் ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்கிறார். இப்படி இருக்கும்போது அவர் தேவையா, தேவையில்லையா என்ற பேச்சுகள் எல்லாம் வேடிக்கையாக இருக்கின்றன" என்று கூறியிருக்கிறார்.


http://dlvr.it/T4lfg4

Wednesday, 27 March 2024

Baltimore bridge collapse: `அவர்கள் சமயத்தில் எச்சரித்ததால்...' - இந்திய மாலுமிகளைப் பாராட்டிய பைடன்

அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின்மீது சரக்கு கப்பல் ஒன்று மோதியதில், பாலம் சீட்டுக்கட்டுப்போல சிதைந்து விழுந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியிருக்கிறது. டாலி என அழைக்கப்படும் அந்தச் சரக்கு கப்பலில் இருந்த 22 பேரும் இந்தியர்கள் என சரக்கு கப்பலை நிர்வகிக்கும் சினெர்ஜி மரைன்டைம் குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கப்பலில் இருந்த இந்திய மாலுமிகளைப் பாராட்டியிருக்கிறார்.ஜோ பைடன்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `கப்பலில் இருந்த பணியாளர்கள் தங்கள் கப்பல் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக மேரிலாண்ட் போக்குவரத்துத்துறையை எச்சரித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் பாலத்தின்மீதான போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி, பாலத்தை மூடுவதற்கு முயன்றனர். அதனால் உயிரிழப்பு வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை நடந்த அனைத்தும் இது ஒரு பயங்கரமான விபத்து என்பதைக் குறிக்கிறது.Maryland Bridge Collapse: பிரமாண்ட சரக்கு கப்பல் மோதி, நொறுங்கி விழுந்த பாலம் - அதிர்ச்சி படங்கள்

இது வேண்டுமென்றே நடந்ததல்ல. இதைவிட நம்புவதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பால்டிமோர் துறைமுகம் அமெரிக்காவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 8,50,000 வாகனங்கள் அந்தப் பாலத்தின் வழியாகச் செல்கின்றன. எனவே கூடிய விரைவில் அதைச் சீரமைத்து, போக்குவரத்தை உறுதிசெய்வோம்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.கெஜ்ரிவால் கைது: `நியாயமாக, வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட ஊக்குவிக்கிறோம்'- அமெரிக்கா வலியுறுத்தல்!


http://dlvr.it/T4gkSc

Tuesday, 26 March 2024

Maryland Bridge Collapse: பிரமாண்ட சரக்கு கப்பல் மோதி, நொறுங்கி விழுந்த பாலம் - அதிர்ச்சி படங்கள்

Maryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge CollapseMaryland Bridge Collapse


http://dlvr.it/T4gDD9

ஆண்டுக்கு ரூ.692 கோடி மதிப்பில் உற்பத்தி; மகனிடம் 20 ஆண்டுகளாக ஏழை நாடகமாடிய தந்தை; காரணம் என்ன?

சீனாவின் ஹுனான் மாகாணத்தின், பிரபல சிற்றுண்டி நிறுவனத்தின் நிறுவனர் கோடீஸ்வரர் ஜாங் யுடொங் (Zhang Yudong). இவரது நிறுவனம் வருடத்துக்கு 600 மில்லியன் யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,92,66,54,358 மதிப்பிலான பொருள்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிலையில், இவருக்கு ஜான்ங் ஜிலோங் (Zhang Zilong) என்ற மகன் இருக்கிறார். அவர் சமீபத்தில் சீன செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி, தற்போது சீனாவில் வைரலாகிவருகிறது.சீன யுவான்

அந்தப் பேட்டியில் பேசிய ஜான்ங் ஜிலோங், ``நான் சிறுவயது முதல் அதாவது எனக்கு 20 வயது ஆகும் வரை நாங்கள் கோடீஸ்வரர்கள் என்பதே எனக்குத் தெரியாது. சாதாரண குடியிருப்பில் வசித்து வந்தோம். சாதாரண பள்ளியில்தான் படித்தேன். எங்களுக்கு ஒரு நிறுவனம் இருக்கிறது என்பது மட்டும் தெரியும். ஆனால், அந்த நிறுவனமும் கடனில் இயங்குவதாக அப்பா தெரிவித்திருந்தார். அதனால், அந்தக் கடன்களையெல்லாம் அடைக்க வேண்டும் எனக் கடுமையாகப் படித்தேன்.

படிக்கும்போதே ஒரு நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தேன். அப்போது மாதம் 6,000 யுவான் சம்பளம் கிடைக்கும். அதை அப்பாவிடம் கொடுத்து கடனை அடைத்துவிடும்படி கூறுவேன். நான் கல்லூரி படிப்பை முடித்த பிறகே அப்பா எங்களின் பொருளாதார நிலை குறித்துத் தெரிவித்தார். அப்பா என்னிடம் எங்கள் சொத்து விவரத்தை மறைத்து பொய் கூறியதால்தான், உழைப்பின் அருமையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதன் பிறகே பெரிய வில்லாவுக்குக் குடிபெயர்ந்தோம்.ஜான்ங் ஜிலோங்

இப்போது நாங்கள் வசிக்கும் வில்லாவின் மதிப்பு மட்டுமே 1.4 மில்லியன் அமெரிக்க டாலர். என் செயல்பாட்டுக்கான நியாயத்தை, உழைப்பைக் கடுமையாக செலுத்தும்போதுதான் என்னிடம் நிறுவனத்தை ஒப்படைப்பேன் என அப்பா கூறிவிட்டார். அதனால், எங்கள் நிறுவனத்தைச் சர்வதேச அளவில் சந்தைப்படுத்த முயன்றுவருகிறேன்" எனத் தெரிவித்தார். தற்போது இந்தப் பேட்டி சீனாவில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.சீனா டு பாகிஸ்தான்... அணுஆயுதம், ஏவுகணை தயாரிக்க உதவும் பொருள்கள் - மும்பையில் தடுத்து நிறுத்தம்!


http://dlvr.it/T4fMLB

காஸா போர்நிறுத்தம்: ஐ.நா-வில் முதன்முறையாக நிறைவேறிய தீர்மானம்; அமெரிக்காவை சாடும் இஸ்ரேல் பிரதமர்!

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கடுத்த நாளே பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உடனடியாகப் போர்தொடுத்த இஸ்ரேல் இன்றுவரை தாக்குதல் நடத்திக்கொண்டு இருக்கிறது. பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி இதுவரை, 32,226-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதோடு, 74,518-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.பைடன் - நெதன்யாகு

இந்தப் போரில் இஸ்ரேலை உலக நாடுகள் பல எதிர்த்தபோதும், தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பிவைத்த அமெரிக்கா ஒரு கட்டத்தில், இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக எதுவும் கூறாமல், வெறுமனே போர்நிறுத்தம் வேண்டும் எனக் கூவியது. தற்போது அதன் நீட்சியாகவே, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட காஸா போர்நிறுத்த தீர்மானத்தின்மீது வாக்களிப்பதிலிருந்து விலகியிருக்கிறது. அமெரிக்கா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் விலகியதால், காஸா போர்நிறுத்த தீர்மானம் ஐ.நா-வில் முதன்முறையாக நிறைவேறியிருக்கிறது.

நேற்று நடந்த இந்த வாக்கெடுப்பில், அமெரிக்காவைத் தவிர ரஷ்யா, சீனா உட்பட 14 நாடுகள் போர் நிறுத்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இதற்கு முன்னரும் இது போன்று தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், அப்போதெல்லாம் `இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான நுட்பமான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் போர்நிறுத்த நடவடிக்கை தவறானது' என்று கூறி, அந்தத் தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் தோல்வியடைய வைத்தது. இப்படியிருக்க, அமெரிக்காவின் இந்த விலகல் இஸ்ரேலுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இதனால் விரக்தியடைந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ``ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சில நாள்களுக்கு முன்பு, பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையிலான போர்நிறுத்த தீர்மானத்தை அமெரிக்கா ஆதரித்தது. ஆனால், அப்போது ரஷ்யாவும் சீனாவும் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தத் தீர்மானத்தைத் தோல்வியடைய வைத்தது.

இப்போது, பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து எதுவும் இடம்பெறாத தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் அல்ஜீரியா உள்ளிட்ட பிற நாடுகளுடன் சேர்ந்து ஆதரித்திருக்கின்றன. ஆனால், இந்தப் புதிய தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி வீழ்த்தவில்லை. இது, போரின் தொடக்கத்திலிருந்த தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து அமெரிக்கா தெளிவாக விலகியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்காமல் போர்நிறுத்தத்தை ஏற்கும்படி இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட்டு கட்டாயப்படுத்துவது, ஹமாஸுக்கு நம்பிக்கையளிக்கும். இதனால், பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சிக்குப் பாதிப்பு ஏற்படும்'' என்று தெரிவித்திருக்கிறார். அதோடு, தெற்கு காஸா நகரமான ரஃபாவில் திட்டமிட்ட இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை குறித்து விவாதிக்க இஸ்ரேலிய தூதுக்குழுவை வாஷிங்டனுக்கு அனுப்பும் திட்டங்களை நிறுத்திவைப்பதாகவும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

இன்னொருபக்கம், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இந்தத் தீர்மானத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்.கொல்லப்பட்ட 30,000 பாலஸ்தீனர்கள்... உடலுறுப்பு திருட்டில் இஸ்ரேல்!


http://dlvr.it/T4d7mx

Sunday, 24 March 2024

40 ஆண்டுகளுக்கும் மேலான கொலை வழக்கு... குற்றவாளியைக் காட்டிக்கொடுத்த சூயிங்கம்!

அமெரிக்காவில் 1980-ல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர், கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகு ஒரு சூயிங்கத்தால் குற்றவாளி என நிரூபணமாகியிருக்கிறார். முன்னதாக, அமெரிக்காவின் ஓரிகான் (Oregon) மாகாணத்தில் சரியாக 1980 ஜனவரி 15-ல், மவுண்ட் ஹூட் சமுதாயக் கல்லூரி (Mt. Hood Community College) மாணவியான பார்பரா டக்கர் (Barbara Tucker) என்ற 19 வயது பெண், வளாக வாகன நிறுத்துமிடம் அருகே அடித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தார்.பார்பரா டக்கர் (Barbara Tucker)

மறுநாள் காலை கல்லூரிக்கு மாணவர்கள் வந்ததையடுத்து பார்பரா டக்கர் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் விசாரணையில், பார்பரா டக்கர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இருப்பினும், யார் இதைச் செய்தார்கள் என்று தெரியவில்லை. பின்னர், பிரேத பரிசோதனையின்போது அவரின் பிறப்புறுப்பு பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், ஒரேகான் மாநில காவல்துறை (OSP) குற்றவியல் ஆய்வகத்துக்கு பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டன. அதைத்தொடர்ந்து, அந்த மாதிரிகளிலிருந்து டி.என்.ஏ விவரம் எடுக்கப்பட்டது.

மேலும், இந்த கொலை தொடர்பாக ராபர்ட் ப்ளிம்ப்டன் (Robert Plympton) என்பவர் மீது சந்தேகம் எழ, க்ரேஷாம் காவல் துறையின் (Gresham Police Department) துப்பறியும் அதிகாரிகள் அவரைத் தேடத் தொடங்கினர். அதையடுத்து, ட்ரூட்டேலில் (Troutdale) அந்த நபர் வசிக்கிறார் என்பதைக் கண்டறிந்த அதிகாரிகள், அவரை கண்காணிக்கத் தொடங்கியபோது, ஒரு இடத்தில் அவர் சூயிங்கம் துப்பியதைக் கண்டனர்.ராபர்ட் ப்ளிம்ப்டன் (Robert Plympton)

உடனடியாக, அந்த சூயிங்கத்தைச் சேகரித்து ஒரேகான் மாநில காவல்துறை (OSP) குற்றவியல் ஆய்வகத்துக்கு அனுப்பினர். 2021-ல் மரபியல் வல்லுநர் ஒருவர், 2000-ம் ஆண்டில் பார்பரா டக்கரின் பிறப்புறுப்பு மாதிரியிலிருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ விவரங்கள், ராபர்ட் ப்ளிம்ப்டனின் சுவிங்கம் மாதிரியிலிருந்து பெறப்பட்ட டி.என்.ஏ விவரங்களுடன் ஒத்துப்போவதைக் கண்டறிந்தார்.குற்றவாளி

இறுதியாக, கடந்த வாரம் நடந்த நீதிமன்ற விசாரணையில், தற்போது 60 வயதாகும் ராபர்ட் ப்ளிம்ப்டன், முதல் நிலை கொலை மற்றும் நான்கு இரண்டாம் நிலை கொலை வழக்குகளில் குற்றவாளி என கண்டறியப்பட்டார். இருப்பினும், தண்டனை குறித்த விவரங்கள் ஜூன் மாதம் நடைபெறும் விசாரணையில் தெரியவரும் என்று கூறப்படுகிறது. அதுவரையில், ராபர்ட் ப்ளிம்ப்டன் காவலில் வைக்கப்படுவார். அதேசமயம், இவரின் வழக்கறிஞர்கள் ஸ்டீபன் ஹவுஸ் (Stephen Houze), ஜேக்கப் ஹவுஸ் (Jacob Houze) ஆகியோர், இந்த வழக்கில் தாங்கள் மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும், அவரது தண்டனைகள் ரத்து செய்யப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.அதானி மீது லஞ்சப் புகார்... அமெரிக்கா தீவிர விசாரணை!


http://dlvr.it/T4YMDJ

Saturday, 23 March 2024

ரயில் விபத்தில் துண்டிக்கப்பட்ட பெண்ணின் கால்; தனியே எடுத்து சென்று சாப்பிட்ட இளைஞர்- பகீர் சம்பவம்!

அமெரிக்காவின் ஆம்ட்ராக் ஸ்டேஷனில் பெண்மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்தப் பெண்ணின் உடலின் கால் பகுதி மட்டும் காணாமல் போனது. இந்த நிலையில், கலிபோர்னியாவின் நடைபாதை ஒன்றில் 27 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கையில் ரத்தம் படிந்த எதோ ஒன்றை வைத்திருப்பதை ஒருவர் பார்த்தார். அதை உடனே வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார். அதில், கையில் ஒரு கால் பகுதியை வைத்துக்கொண்டிருக்கும் அந்த இளைஞர், அந்தக் காலை வீடியோ எடுப்பவர் முன்பு அசைத்துக்காட்டுவதும், அதை நுகர்ந்து பார்த்துக் கடித்துத் தின்பதும் பார்ப்போரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. உடனே இது தொடர்பாக காவல்துறைக்கு தகவலளிக்கப்பட்டது.வீடியோவில் பதிவான இளைஞர்

மேலும், அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், அந்த இளைஞர்மீது வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறது காவல்துறை. அந்த இளைஞர் ரெசெண்டோ டெல்லெஸ்  (27) என அடையாளம் காணப்பட்டிருக்கிறார். ஆனால், ஏன் அந்தக் கால் பகுதியை மட்டும் எடுத்து சென்றார்? அதை சாப்பிடக் காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு காவல்துறை பதில் தேடி வருகிறது. அந்த வீடியோ எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. யோகா மாஸ்டரைக் கொலைசெய்தது ஏன்? - கைதான தம்பதி அதிர்ச்சி வாக்குமூலம்


http://dlvr.it/T4X3dc

ரஷ்யா: இசைக் கச்சேரியில் சரமாரி துப்பாக்கிச்சூடு; 60 பேர் பலி - பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ்

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் பிக்னிக் எனும் இசைக் குழுவினர் நேற்று இரவு இசைக் கச்சேரியை நடத்தினர். அப்போது அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று, நிகழ்ச்சி நடக்கும் அரங்குக்குள் புகுந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கையெறி குண்டுகளையும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர்.மாஸ்கோ தாக்குதல்

தாக்குதலை நடத்திவிட்டு அந்த கும்பல் தப்பித்து சென்றுவிட்டதாகக் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், இரவு முழுவதும் மீட்புப்பணிகள் நடந்திருக்கின்றன. ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா,``கொடூரமான இந்தக் குற்றச்சம்பவத்தை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். இதற்கிடையில், இந்த தாக்குதல் குறித்து டெலிகிராம் குழுவில் அறிக்கை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதக் குழு இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன்,``இந்த மாதத்தின் தொடக்கத்தில், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி போன்ற பெரிய கூட்டங்களைக் குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது என, ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு பொது அறிக்கையை வெளியிட்டிருந்தோம். அமெரிக்க அரசும் இந்தத் தகவலைப் பகிர்ந்தது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY">
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY">
https://bit.ly/47zomWY />

http://dlvr.it/T4VSGV

Friday, 22 March 2024

Kidney: உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதருக்கு மாற்றி சாதனை!

உலகில் முதன்முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு மாற்றி வைத்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் 62 வயதான ரிக் ஸ்லேமேன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மாசசூசெட்ஸ் (Massachusetts) போக்குவரத்துத் துறையின் மேலாளராகப் பணிபுரியும் இவர், பல ஆண்டுகளாக நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். pig's kidney!

ஏற்கெனவே இவர் 2018-ல் மனித நன்கொடையாளரிடமிருந்து சிறுநீரகத்தைப் பெற்றார். ஆனால், அந்தச் சிறுநீரகம் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் செயலிழந்ததற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியது. அதன்பின் 2023-ல் மீண்டும் டயாலிசிஸ் செய்யத் தொடங்கியுள்ளார்.

தற்போது அவர் இறுதி நிலை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை வைக்கப் பரிந்துரைத்துள்ளனர். அவரது விருப்பத்தின்படி, நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பன்றியின் சிறுநீரகத்தை வைத்துள்ளனர். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தப் புதிய சிறுநீரகம் பல ஆண்டுகள் வரை நீடிக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மருத்துவ அறுவை சிகிச்சையில் இது ஒரு மைல்கல் எனப் பலர் தெரிவித்து வருகின்றனர். Organ Donation`ஒரே ஒரு சிறுநீரகத்தோடு பிறந்த பாடிபில்டர்' மாற்று சிறுநீரகத்துக்காகக் காத்திருந்து உயிரிழப்பு!

இது குறித்து ஸ்லேமேன் கூறுகையில், `இதை எனக்கு உதவுவதற்கான ஒரு வழியாக மட்டுமல்லமால், உயிர்வாழ மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை வழங்கும் ஒரு வழியாகவும் பார்த்தேன்’ என்றார். 

மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை 1954-ல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த முதல் மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.  


http://dlvr.it/T4Rr59

Thursday, 21 March 2024

Oprah Winfrey: `என் எடையைக் கேலி செய்வது தேசிய விளையாட்டாக இருந்தது'... வருந்திய டாக் ஷோ ஆங்கர்!

ஓப்ரா எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஓப்ரா கெயில் வின்ஃப்ரே `தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’ (The Oprah Winfrey Show) என்ற அமெரிக்க டாக் ஷோவில் தொகுப்பாளராக இருந்தார். நடிகை, டெலிவிஷன் தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டிருந்தாலும், இந்த ஷோ அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது.

1986-ல் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 2011 வரை 25 ஆண்டுகளாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள், சிறுமிகள் என அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பேசப்படுவதுண்டு. Oprah Winfrey`நான் மதச்சார்பற்ற குடும்பத்தில் பிறந்தவள்'... குடும்ப பெயரை கேட்டதற்கு நடிகையின் பதில்!

இந்த நிலையில் `An Oprah Special: Shame, Blame and the Weight Loss Revolution' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதில் வாழ்க்கைப் பயணத்தில் அவரின் எடையால் அனுபவித்த அவமானங்கள், கேலி கிண்டல்கள் குறித்துப் பேசியுள்ளார். மேலும், உடல் பருமன் குறித்தும், எடை குறைக்கும் மருந்துகளின் வளர்ச்சி குறித்தும் பேசியுள்ளார். 

உடல்பருமனின் அவமானங்கள்...

ஆரம்ப கட்டத்தில் பருமனான உடல் எடையைக் குறித்து பல விமர்சனங்கள் ஓப்ராவிற்கு வந்துள்ளன. பல செய்திகளின் தலைப்புகளில் அவரின் தோற்றத்தைப் புண்படுத்தும் வகையிலும் ஆரோக்கியத்தைக் குறித்தும், ''ஓப்ரா: ஃபேட்டர் தான் எவர்' (Oprah: Fatter than Ever) , ''ஓப்ரா வார்ன்ட் 'டயட் ஆர் டை'' (Oprah Warned 'Diet or Die) எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதன்பின் தனது உடல் எடையைக் குறைக்க மருந்துகளை எடுத்துக் கொண்டார். அதோடு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்துக் கொண்டார். 

இது குறித்து அவர் கூறுகையில், ``உலகம் எனக்குக் கொடுத்த அவமானத்தை நான் ஏற்றுக்கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். 25 ஆண்டுகளாக, என் எடையைக் கேலி செய்வது தேசிய விளையாட்டாக இருந்தது.

1990-ல் ஒரு டிவி கையேட்டின் அட்டைப்படத்தில், `bumpy, lumpy, and downright dumpy’ என்று குறிப்பிடப்பட்டேன். எல்லா அவமானங்களையும் எதிர்த்துப் போராடும் முயற்சியில், நான் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் பட்டினி கிடந்தேன்’’ என்றார்.Oprah Winfreyகுழந்தைகள் எடை அதிகரிக்க...
கொடுக்க வேண்டிய உணவுகள்,
தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்!

எடை குறைக்கும் மருந்துகள்...

மருந்துகள் மூலமாக தனது உடல் எடையைக் குறைத்ததாகக் கூறுபவர் அம்மருந்துகளைப் பாராட்டினார்.

மேலும், ``அதிக எடை அல்லது உடல் பருமனால் பல ஆண்டுகளாகப் போராடும் என்னைப் போன்றவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் மருத்துவத்தை பற்றி பேசுவோம் என்று எனது வாழ்நாளில் நான் கனவிலும் நினைக்கவில்லை.

மற்றவர்கள் அதிக எடையுடன் இருப்பதற்காக அல்லது அவர்கள் எடையைக் குறைக்க அல்லது குறைக்காமல் இருப்பதற்காக அவமானப்படுத்துவதை நிறுத்த வேண்டும். முக்கியமாக நம்மை நாமே அவமானப்படுத்துவதை நிறுத்த வேண்டும்’’ என்றார்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்!


http://dlvr.it/T4PXtD

Monday, 18 March 2024

`Shein பிராண்டில் ஆர்டர் செய்தது உடைகளை; டெலிவரி செய்யப்பட்டதோ...' - வீடியோ வெளியிட்ட இளம்பெண்

(Shein) ஷீன் எனப்படும் பிரபல ஃபேஷன் பிராண்டிலிருந்து உடைகள் ஆர்டர் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா எலியட் என்கிற பெண்மணி, தனது ஆர்டரில் எதிர்பாராதவிதமாக ரத்த மாதிரி குப்பி (Blood Sample) டெலிவரி செய்யப்பட்டதையடுத்து, அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இது தொடர்பாக அவர் பதிவிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த எலியட் என்பவர், பிரபல ஃபேஷன் பிராண்டான ஷீனிடமிருந்து உடைகள் ஆர்டர் செய்திருக்கிறார். ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நிலையில், எலியட்டுக்கு நிறுவனம் தரப்பிலிருந்து அவர் ஆர்டர் செய்த தொகுப்பு வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால், அதில் அவர் ஆர்டர் செய்த உடைகள் இல்லை... மாறாக அதிர்ச்சியூட்டும் வகையில் ரத்த குப்பி (Blood Sample) இருந்திருக்கிறது. எலியட் - ரத்த மாதிரி குப்பி

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த எலியட், அந்த ரத்த மாதிரியில் குறிப்பிடப்பட்டிருந்த `ரத்தப் பரிசோதனை' நிலையத்தை நாடி, இது குறித்துக் கேட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, எலியட் இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.

மேலும், தனக்கு நடந்த அதிர்ச்சிகர சம்பவம் குறித்து டிக்டாக் மற்றும் யூடியூபில் வீடியோவும் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், ``உடைகள் ஆர்டர் செய்த எனக்கு, ரத்த மாதிரி குப்பி கிடைத்தது. அது தொடர்பாக அந்தக் குப்பியில் குறிப்பிட்டிருந்த பரிசோதனை மையத்தை நாடி, விளக்கம் கேட்டேன்.

அவர்கள், `நாங்கள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறோம். பொதுவாக நாங்கள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மையங்களுக்கு மட்டும்தான் ரத்த மாதிரியை அனுப்புவோம். தனி நபர்களுக்கு அனுப்ப மாட்டோம். எனவே, இது தவறாகக் கையாளப்பட்டு, உங்களை வந்து சேர்ந்திருக்கலாம் எனக் கருதுகிறோம்.' எனக் கூறினர். YouTube

எனக்கு நடந்ததுபோலவே என்னுடைய நண்பர் ஒருவருக்கும் இதே ஷீன் பிராண்டிலிருந்து உடைகளுக்குப் பதிலாக, உபயோகிக்கப்பட்ட ஊசி வந்திருந்தது. இது குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.


http://dlvr.it/T4FprL

10 செ.மீ வாலோடு பிறந்த குழந்தை... வாலை அகற்றமுடியாது என மருத்துவர்கள் திட்டவட்டம்: ஏன் தெரியுமா?!

`மங்கியில இருந்து ஒரு மனுஷ பய வந்தாலும் இன்னும் போகலயே வாலு’ என்ற பாடல் வரிகளைக் கேட்டு இருப்போம். பொதுவாகவே மனிதர்கள் குரங்கில் இருந்து வந்தவர்கள் என்றும், பரிணாம வளர்ச்சியின் காரணமாக வால் மறைந்து போனது என்றும் கூறப்படுவதுண்டு. இந்த நிலையில் சீனாவில் பிறந்த குழந்தை ஒன்று நான்கு இன்ச் (10 செ.மீ) வாலோடு பிறந்து மருத்துவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.New born

ஹாங்சோ குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தை நரம்பியல் அறுவை சிகிச்சை துணைத் தலைமை மருத்துவர் டாக்டர் லி வாலோடு பிறந்துள்ள குழந்தையின் வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

`Tethered Spinal Cord’ எனச் சொல்லப்படக்கூடிய நிலையே இதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். முதுகுத்தண்டு வழக்கத்திற்கு மாறாகச் சுற்றியுள்ள திசுக்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்போது முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் இந்த நிலை உண்டாகிறது. இதில் எவ்வித அசைவும் இருக்காது. doctor``குழந்தை பெற்றால் 62 லட்சம் பரிசு" மக்கள் தொகையை அதிகரிக்க அரசு நடவடிக்கை... எங்கு தெரியுமா?

தன் குழந்தையின் வாலை அகற்றும்படி மருத்துவர்களிடம் பெற்றோர்கள் கூறியபோது, அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இந்த வால் குழந்தையின் நரம்பு மண்டலத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதால் அதை அகற்றுவது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர்.

ஏற்கெனவே தென் அமெரிக்கா கயானாவில் கடந்த ஜூன் மாதம் வாலோடு பிறந்த 10 நாள்களேயான குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் வாலை அகற்றி இருந்தனர். அதேபோல தற்போது இக்குழந்தை வாலோடு பிறந்துள்ளது.


http://dlvr.it/T4Dyg7

Sunday, 17 March 2024

அமெரிக்கா: `என்னை அதிபராகத் தேர்ந்தெடுக்காவிட்டால்..!' - எச்சரிக்கும் ட்ரம்ப்

எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருவருக்கும் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று அமெரிக்காவின் ஓஹியோவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டொனால்ட் ட்ரம்ப், ``நினைவில் கொள்ளுங்கள், நவம்பர் 5 அதிபர் தேர்தல் தேதி அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான தேதி என நான் நம்புகிறேன். ஜோ பைடன் மோசமான அதிபர். மெக்சிகோவில் கார்களை உருவாக்கி அமெரிக்கர்களுக்கு விற்கும் சீனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த கார்களை அவர்களால் விற்க முடியாது.அமெரிக்க அதிபர் தேர்தல் | ட்ரம்ப் - ஜோ பைடன்

இந்த முறை நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அது ஒட்டுமொத்த நாட்டையும் மிக மோசமான நிலைமைக்குத் தள்ளி விடும் (Bloodbath). தீவிரவாதம், வன்முறை மீதான ஜோ பைடனின் பாசம், அவரின் பழிவாங்கும் தாகம் அதனால் அமெரிக்க மக்கள் இந்த நவம்பரில் அவருக்கு மற்றொரு தேர்தல் தோல்வியைக் கொடுக்கப் போகிறார்கள். ஏனென்றால் மக்கள் அதைத் தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர். மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு வேலைக்கான அனுமதிகளை வழங்கியதன் மூலம் ஜோ பைடன் ஆப்பிரிக்க - அமெரிக்க வாக்காளர்களை மீண்டும் மீண்டும் சோதனைக்குள்ளாக்கினார்" எனப் பேசினார். ஓயாத போர்: காஸாவில் உணவுக்காக திண்டாடும் மக்கள்... வான் வழியே உதவி பொருள்களை வழங்கிய அமெரிக்கா


http://dlvr.it/T4C3Yl

Thursday, 14 March 2024

TikTok: டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை - காரணம் என்ன..?

உலக அளவில் பொழுதுபோக்கிற்காக அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலி டிக்டாக் (TikTok). இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance) சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. டிக்டாக் மூலம் பயனர்களின் தரவுகளை எடுக்க சீனா,  ByteDance நிறுவனத்தை பயன்படுத்தலாம் என்ற அச்சம் பல நாடுகளுக்கு இருந்து வந்தது. இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக கனடா, நியூசிலாந்து, பிரிட்டன், நார்வே, ஆப்கானிஸ்தான் , பெல்ஜியம், டென்மார்க் ஆகிய நாடுகளில் டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டது.டிக்டாக் (TikTok)`டிஜிட்டல் உலகில் ஏற்பட்ட பெரும் பிளவு!’ - டிக்டாக், வீ சாட் செயலிகளுக்குத் தடைவிதித்த ட்ரம்ப்

தொடர்ந்து, இந்த செயலி பயனர்களின் சம்மதம் இல்லாமலேயே முறைகேடாக தரவுகளை சேகரிப்பதாக குற்றச்சாட்டு அதிகரித்து வந்தது. முன்னதாக, அமெரிக்காவில் மக்களை உளவு பார்த்து அமெரிக்க நாட்டை பற்றிய ரகசிய தகவல்களை சீன அரசுக்கு டிக்டாக் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அமெரிக்கா முழுவதும் டிக்டாக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக, குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.

2020-ல் டொனால்டு டிரம்ப் டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்க முயற்சி மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் அரசுத் துறையில் பணி செய்பவர்கள டிக்டாக் செயலியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அப்போது, டிக்டாக் மீதான குற்றச்சாட்டிற்கு அதன் சிஇஒ சவ் சி சூவ் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவில் ஆஜராகி விளக்கமளித்தார்.

இந்நிலையில், தற்போது 352 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிக்டாக் (TikTok) செயலிக்குத் தடை விதித்து மசோதா நிறைவேறியுள்ளது.


http://dlvr.it/T448zd

Wednesday, 13 March 2024

அமெரிக்காவில் படிக்க ஸ்காலர்ஷிப், உச்ச நீதிமன்ற சமையலர் மகளுக்கு நீதிபதி சந்திரசூட் பாராட்டு!

சுப்ரீம் கோர்ட்டில் சமையலராக வேலை செய்பவர், அஜய் குமார் சமால். இவரின் மகள், பிரக்‌யா(25) இந்தியாவில் சட்டத்தில் இளங்கலை பட்டம் படித்து முடித்துள்ள நிலையில், முதுகலைப் பட்டம் படிக்க அமெரிக்காவில் விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு, அமெரிக்காவில் கலிஃபோர்னியா மற்றும் மிசிகன் பல்கலைக்கழகத்தில் படிக்க இலவச கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.

இலவச கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) கிடைத்திருப்பதை அடுத்து, அஜய் குமார் தன் மகளை தான் வேலை செய்யும் சுப்ரீம் கோர்ட்டிற்கு அழைத்து வந்திருந்தார். கோர்ட் தொடங்கும் முன்பு நீதிபதிகள் கூடும் இடத்திற்கு பிரக்யாவை அஜய் குமார் அழைத்து வந்தார். அங்கு, பிரக்‌யாவிற்கு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் முன்னிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்து, நீதிபதிகள் கையெழுத்திட்ட மூன்று புத்தகங்களை பரிசாக வழங்கினார். `மாணவர்களுக்கு ஆதார் பதிவு, திருத்தம்... இனி பள்ளிகளில் மேற்கொள்ளலாம்’ - வழிமுறைகள் இவைதான்!

அப்போது பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், ''பிரக்யா சாதிப்பார் என்று எனக்குத் தெரியும். அவருக்குத் தேவைப்படுவது கிடைக்க நாங்கள் உதவுவோம். நாட்டிற்கு சேவை செய்ய மீண்டும் இந்தியாவிற்கு வருவார் என்று நம்புகிறோம். பிரக்யா எதைச் செய்தாலும் அதில் அவர் சிறந்து விளங்குவார். 1.4 பில்லியன் மக்களின் கனவுகளை மிக எளிதாக தனது தோளில் சுமந்து செல்வார்'' என்றார்.

பிரக்யாவின் பெற்றோரை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு நீதிபதி சந்திரசூட் சால்வை அணிவித்தார். சந்திரசூட் காலை தொட்டு வணங்கிய பிரக்‌யா, தனக்கு பாராட்டு தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

பிரக்யா பேசுகையில், ’என் பெற்றோரால்தான் இந்த அளவுக்கு உயர முடிந்தது. அவர்களின் மகளாக இருப்பதற்குப் பெருமைப்படுகிறேன். எனது பள்ளி பருவத்தில் இருந்தே எனக்கு என் தந்தை உந்துதலாக இருந்திருக்கிறார். எனக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை எனக்குப் பெற்றுத் தருவதில் உறுதியாக இருந்தார்.

நீதிபதி சந்திரசூட்டை பார்த்துத்தான் வழக்கறிஞராக வரவேண்டும் என்று முடிவு செய்தேன். சுப்ரீம் கோர்ட் நடைமுறைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்போது அவர் பேசுவதை அனைவரும் பார்க்க முடிகிறது. அவர் இளம் வழக்கறிஞர்களை எப்போதும் உற்சாகப்படுத்துவார். அவர் தான் எனது ரோல்மாடல்'' என்று குறிப்பிட்டார்.


http://dlvr.it/T42zCS

`அணு ஆயுதப் போருக்கும் தயாராகவே இருக்கிறோம்...' - அமெரிக்காவை எச்சரிக்கும் புதின்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், `ரஷ்யா, அணுசக்தி யுத்தத்திற்குத் தொழில்நுட்ப ரீதியாகத் தயாராக இருக்கிறது' எனத் தெரிவித்திருக்கிறார். பிப்ரவரி 2022 முதல் உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடந்து வருகிறது. பல்வேறு உலக நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவர முயன்றும், போர் நின்றபாடில்லை. இந்த நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி போரை ஊக்குவிப்பதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.புதின்

இந்த நிலையில், ரஷ்யாவின் தனியார் செய்தி நிறுவனத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் அளித்த பேட்டியில், ``அமெரிக்கா, தன்னுடைய ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பினால், அது போரின் குறிப்பிடத்தக்க விரிவாக்கமாகக் கருதப்படும். எனக்கு இன்னும் ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கான அதிகாரம் கிடைக்கும் என்பது உறுதி. அதனால் தற்போது அவசரமாக அணு ஆயுத யுத்தம் நிகழ்த்துவதற்கான சூழல் இல்லை. உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். எங்களுக்கு எங்கள் சொந்த கொள்கைகள் உள்ளன. அதே நேரம் ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில், நாங்கள் நிச்சயமாக அணு ஆயுதப் போருக்கும் தயாராக இருக்கிறோம். ரஷ்ய எல்லையில் - அல்லது உக்ரைனுக்கு - அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்பினால், ரஷ்யா இதைப் போரில் அமெரிக்காவின் தலையீடு என்றே கருதும்" என எச்சரித்திருக்கிறார்.ரஷ்யா - உக்ரைன் போர்: `ஒருவேளை புதின் பின்வாங்கினால், படுகொலை செய்யப்படுவார்!' - எலான் மஸ்க்


http://dlvr.it/T417s1

8 மில்லியன் டாலர்: மேக்கப் பொருள்களைத் திருடி அமேசானில் விற்பனை! - சிக்கிய Women Gang

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு கும்பல் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, காவல்துறை `கலிபோர்னியா கேர்ள்ஸ்' என்ற ஆப்ரேஷன் மூலம் விசாரணையைத் தொடங்கியது. அப்போதுதான் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கலிபோர்னியா மாகாணத்தில் வசித்தவர் மிச்செல் மேக் (53). இவருக்குக்கீழ் சுமார் 12 பெண்கள் `கலிபோர்னியா கேர்ள்ஸ்' என்ற கேங்கில் இருக்கின்றனர்.அமெரிக்க டாலர்

இவர்களை இயக்கும் மிச்செல் மேக், கலிபோர்னியா கடற்கரை, டெக்ஸாஸ், புளோரிடா, மாசசூசெட்ஸ், ஓஹியோ உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு அந்தப் பெண்களை அனுப்பி, Ulta Beauty, TJ Maxx, Walgreens போன்ற பிரபல கடைகளில் மேக்கப் பொருள்களைத் திருட வைத்திருக்கிறார். அந்தக் கடைகளுக்குச் செல்லும்போது என்ன மாதிரியான உடை, சிகை அலங்காரம், மேக்கப் அணிந்து செல்ல வேண்டும், எந்த மாதிரியான பை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட A - Z திட்டங்களை வகுத்து கொடுத்துவிடுவார்.

மேலும், அந்தப் பெண்கள் செல்வதற்கான விமான டிக்கெட், கார், டாக்ஸி உள்ளிட்டவற்றையும் ஏற்பாடு செய்து கொடுத்துவிடுவார். எனவே, மிச்செல் மேக்கின் திட்டப்படி அந்தப் பெண்கள் நூற்றுக்கணக்கான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். திருடிய பொருள்களை மிக்செல் மேக் அமேசான் மூலம் சலுகை விலையில் விற்று லாபம் சம்பாதித்திருக்கிறார்.காவல்துறை

இது போன்ற திருட்டால் மட்டும், இதுவரை சுமார் 8 மில்லியன் டாலர் சம்பாதித்திருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, கடந்த வெள்ளிக்கிழமை மிச்செல் மேக், மற்றொரு பெண்ணின் வீடுகளில் சோதனையிட்டு 3,00,000 டாலர் மதிப்புள்ள மேக்கப் உள்ளிட்ட பிற பொருள்களைக் கண்டுபிடித்திருக்கிறது. மேலும், மிக்செல் மேக்கைக் கைதுசெய்து விசாரித்து வருகிறது. 100 முறை வாஷ் செய்த நெய் மாய்ஸ்சரைஸர்... வைரல் செய்திக்கு மருத்துவர் விளக்கம்!


http://dlvr.it/T40kH7

Sunday, 10 March 2024

Panama Canal: வறண்டு போகும் பனாமா கால்வாய்; 270 பில்லியன் டாலர் வர்த்தகத்துக்குச் சிக்கல்!

உலகளவில் இரண்டாவது பெரிய கடல் வர்த்தக நீர்வழிகளில் ஒன்றான பனாமா கால்வாய் வறண்டு போகும் நிலை உருவாகியிருப்பதாக, ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு (UNCTAD) சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணரான நெல்சன் குவேரா, ``ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலங்களில் கால்வாயின் நீர்மட்டம் குறைவது இயல்பு என்றாலும், இன்னும் கோடைக்காலம்கூட தொடங்காத நிலையில், இப்போதே ஒரு காடளவிற்கான மரங்கள் நீர் மட்டத்துக்கு மேலே தென்படுகின்றன.பனாமா கால்வாய்

காதுன் ஏரியின் நீர் மட்டம் 5 அடி குறைந்திருக்கிறது. கால்வாயின் 110 வருட வரலாற்றில் இரண்டாவது முறையாக குறைந்த மழையும், வானிலையும் இந்த வறட்சிக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. கடந்த அக்டோபர் மாதம்தான் முதன்முறையாக கால்வாய் வறண்டது. அதைத் தொடர்ந்து, தற்போது இயல்பைவிட 41 சதவிகிதம் குறைவாக மழை பொழிந்திருக்கிறது. இதனால், அமெரிக்க - பசிபிக் வழித்தடத்தில், 270 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்துக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

தற்போது, ஒரு நாளைக்கு கால்வாயைக் கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 36-லிருந்து 24-ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கப்பலும் குறைந்தளவு சரக்கையே கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. இந்தச் சூழல் உலக வர்த்தகத்தில் பெரும் சிக்கலாக மாறியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பனாமா கால்வாய் நிர்வாகம்தான், அந்த நாட்டின் பாதி மக்கள்தொகைக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. எனவே, இதனால், அந்தப் பகுதி மக்களுக்கு இந்த வறட்சி தொடர் தண்ணீர் சிக்கலை ஏற்படுத்தும்." எனத் தெரிவித்திருக்கிறார்.சென்னையின் சிக்கலுக்கு சுரங்கக் கால்வாய் தீர்வு... வழிகாட்டும் சிங்கப்பூர், கோலாலம்பூர்!


http://dlvr.it/T3sT5N

Saturday, 9 March 2024

Gunther VI: மடோனா வீடு, சொகுசு பயணம்... உலகின் பணக்கார நாயும், அதிரவைக்கும் சொத்து மதிப்பும்?!

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களையும் அவர்களின் சொத்து மதிப்புகளைக் குறித்தும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உலகின் பணக்கார நாயும் அதன் ஆடம்பர வாழ்க்கை குறித்தும் உங்களுக்குத் தெரியுமா?!

400 மில்லியன் சொத்து மதிப்புகளோடு ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாயான ஆறாம் குந்தர் (Gunther VI) உலகின் மிகப் பெரிய பணக்கார நாயாகக் கருதப்படுகிறது. ட்ரெக்கிங் விபத்து; உயிரிழந்த எஜமானர்... உடல் அருகே 48 மணி நேரம் காத்து, மீட்க உதவிய நாய்!

இவ்வளவு சொத்துகள் சொந்தமானது எப்படி?!

ஜெர்மனியைச் சேர்ந்த செல்வ சீமாட்டியான karlotta Leibenstein தனது மகனின் மரணத்திற்குப் பிறகு வாரிசு இல்லாமல் இருந்தார். 1992-ல் அவர் இறக்கும்போது தனக்கென்று குடும்பம் இல்லாததால், தனது சொத்து முழுவதையும் பாசத்தோடு வளர்த்த நாயின் மீது எழுதி வைத்துள்ளார். அந்த நாய் குந்தரின் தாத்தா `Gunther III’ என்று கூறப்படுகிறது. 

தன்னிடமிருந்த 80 மில்லியன் டாலர் சொத்து மதிப்புகளையம் மூன்றாம் குந்தருக்கு எழுதி வைத்தார். இந்த சொத்து மதிப்புகள் நான்காம் குந்தருக்கு மாற்றப்பட்ட போது, அந்த சொத்தினை நிர்வகித்த மவுரிசியோ மியான் அதிக முதலீடுகள் செய்தார். இந்த முதலீட்டின் மூலம் குந்தரின் சொத்து மதிப்பு அதிகரித்தது.  

இத்தாலியைச் சேர்ந்த 66 வயதான மியான் லிபென்ஸ்டீனின் மகனின் நண்பர் என்றும், `இஸ்டிடுடோ ஜென்டிலி' என்ற மருந்து நிறுவனத்திற்கு சொந்தமான இத்தாலிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது. 

மடோனாவும் குந்தரும்...

2000- ஆண்டுகளில் குந்தரை பராமரிக்கும் அறக்கட்டளை அமெரிக்க பாப் சிங்கர் மடோனாவின் மியாமி மாளிகையை 7.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. அதன்பின் 2021 நவம்பரில் அதனை 30 மில்லியனுக்கு விற்றது.

அந்த சமயத்தில் மடோனா தனது இன்ஸ்டா பக்கத்தில், ``உங்கள் பழைய வீட்டை ஒரு நாய் நீங்கள் விற்றதை விட 3 மடங்கு விலைக்கு விற்கிறது என்பதை நீங்கள் கண்டறிந்தால்’’... என்று தலைப்பிட்டு பதிவிட்டார். இது பலரின் கவனத்தையும் பெற்றதோடு குந்தரை தலைப்பு செய்திகளில் இடம்பெற வைத்தது.   

51,000 சதுர அடியுள்ள அந்த வீட்டில் ஒன்பது படுக்கையறைகள் மற்றும் 8 குளியலறைகள் உள்ளது. மிகவும் கலைநயத்தோடு கட்டப்பட்ட அந்த வீடு மியாமி கடற்கரையில் இருந்து சில நிமிட தூரத்தில் அமைந்துள்ளது.  Gunther’s Millions.`நாய் வளர்ப்பவர்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் ஆபத்து குறையும்' - ஆய்வுத் தகவல்!

ஆறாம் குந்தர் உலகம் முழுவதும் பயணங்களை மேற்கொள்வதோடு, படகு சவாரியையும், ஆடம்பர டின்னர்களையும் அனுபவிக்கிறார். மிகச்சிறந்த இறைச்சி, காய்கறிகள் மற்றும் அரிசியைக் கொண்டு காலையில் ஒரு தனியார் சமையல்காரரால் சமைக்கப்படும் உணவை உண்கிறார்.  

குந்தரை மையமாக வைத்து `Gunthers Millions’ என்ற ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   


http://dlvr.it/T3qwZf

Tuesday, 5 March 2024

`பெண்களுக்கு பாதுகாப்பற்றதா இந்தியா?' - அமெரிக்க பத்திரிகையாளர் பதிவுக்கு NCW தலைவர் கண்டனம்..!

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு, தன் கணவருடன் சுற்றுலா வந்திருந்த ஸ்பெயின் நாட்டு பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்பெண் தன் கணவருடன் தற்காலிக குடில் ஒன்றில் தங்கி இருந்தபோது இச்சம்பவம் நடந்தது.

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க பத்திரிகையாளர் டேவிட் ஜோசப் தன் சோஷியல் மீடியா பதிவில், தன் பெண் நண்பர்கள் தனியாக இந்தியா செல்வதை தவிர்க்கும்படி எச்சரித்து இருந்தார். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சம்பவங்கள் இந்தியாவில் அதிகம் நடப்பதை தன் இந்திய பயண அனுபவத்தில் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். நீரில் பலியான குழந்தைகள், சிறுத்தை கொன்ற சிறுமி, வைரலாகும் படங்கள், சிக்கிச் சீரழியும் அப்பாவிகள்!

இந்தப் பதிவுக்கு, தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் ரேகா சர்மா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'நீங்கள் இந்தியா வந்தபோது நடந்ததாகக் குறிப்பிட்டிருக்கும், பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான சம்பவங்கள் குறித்து போலீஸில் தெரிவித்தீர்களா? அப்படி தெரிவிக்கவில்லை எனில், உங்களை போன்ற பொறுப்பற்ற ஒருவர் வேறு யாரும் இருக்க முடியாது. சோஷியல் மீடியாவில் மட்டும் எழுதி இந்தியாவை களங்கப்படுத்துவது நல்லதல்ல' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள டேவிட், 'பெண்கள் பொது இடத்தில் நிர்வாணப்படுத்தப்படுவது, அடிப்பது மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது போன்ற பிரச்னைகளை தீர்க்கவில்லையென்று உங்கள் (ரேகா) மீதே விமர்சனம் எழுந்தது. ஆனால், நாங்கள் இந்தியாவை களங்கப்படுத்துவதாக என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள். நான் இந்தியாவை களங்கப்படுத்துவதாக கூறுவது முற்றிலும் தவறு. நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்குப் பிடித்த இடம் இந்தியா. தேசிய பெண்கள் கமிஷன் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு எதையும் செய்யாமல் இருக்கும் நீங்கள்தான் இந்தியாவை களங்கப்படுத்துகிறீர்கள். நாங்கள் இது குறித்து மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தால் எங்களைப் போன்றவர்களை விமர்சனம் செய்கிறீர்கள்' என்று பதிலளித்துள்ளார்.No Dog Breeding: உங்களிடம் இந்த நாய்கள் உள்ளதா?
இனி இனப்பெருக்கத்துக்கு தடை...

இதற்கு தன் பதிவில் பதிலளித்துள்ள ரேகா சர்மா, ’ஒட்டுமொத்த நாட்டை மோசமாக சித்திரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சம்பவம் கண்டிக்கப்பட வேண்டியது. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியதும் அவசியம் என்பதால், சில புள்ளி விவரங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிற்கு வெளிநாட்டில் இருந்து 60 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்களில் தனியாக வரும் பெண்களும் அதிகமாக இருக்கின்றனர். அவர்கள் விடுமுறையை பாதுகாப்புடன் செலவிடுகின்றனர். உங்களது சமூக வலைதள பதிவை நீக்கவும்' என்று குறிப்பிட்டுள்ளார்.


http://dlvr.it/T3dqdf

Monday, 4 March 2024

ஓயாத போர்: காஸாவில் உணவுக்காக திண்டாடும் மக்கள்... வான் வழியே உதவி பொருள்களை வழங்கிய அமெரிக்கா

காஸா | GAZAகாஸா | GAZAகாஸா | GAZAகாஸா | GAZAகாஸா | GAZAஅமெரிக்க ராணுவம்அமெரிக்க ராணுவம்அமெரிக்க ராணுவம்அமெரிக்க ராணுவம்அமெரிக்க ராணுவம்காஸா | GAZAகாஸா | GAZAகாஸா | GAZAகாஸா | GAZAகாஸா | GAZA


http://dlvr.it/T3d59f

Saturday, 2 March 2024

சீனா டு பாகிஸ்தான்... அணுஆயுதம், ஏவுகணை தயாரிக்க உதவும் பொருள்கள் - மும்பையில் தடுத்து நிறுத்தம்!

பாகிஸ்தானும் சீனாவும் நட்பு நாடுகளாக இருக்கின்றன. பாகிஸ்தானுக்கு சீனா அளவுக்கு அதிகமாக கடன் கொடுத்து இருக்கிறது. அதோடு பாகிஸ்தானில் சாலை மற்றும் மேம்பால கட்டமைப்பு பணிகளையும் சீனாவே மேற்கொண்டு வருகிறது.  இதனால் அடிக்கடி சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சரக்கு கப்பல்கள் சென்ற வண்ணம் இருக்கிறது. இக்கப்பல்கள் மும்பை வழியாகத்தான் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். அக்கப்பல்களை இந்திய உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. அது போன்ற ஒரு கப்பலில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு கப்பலில் எடுத்துச்செல்லப்படுவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உளவுத்துறை உடனே இது குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அக்கப்பலை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணிக்க ஆரம்பித்தனர். மால்டாவில் பதிவு செய்யப்பட்ட சி.ஜி.எம்.அட்டிலா என்ற சரக்கு கப்பல் பாகிஸ்தானை நோக்கி சென்றது. அந்த கப்பலை மும்பை அருகில் உள்ள நவசேவா துறைமுகத்தில் வழிமறித்த கடலோர பாதுகாப்பு, சுங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் சோதனை நடத்தினர். இச்சோதனையில் ஏவுகணைகள் தயாரிக்க பயன்படும் கம்ப்யூட்டர் நியுமெரிக்கல் கன்ட்ரோல் மெஷின் இருந்தது கண்டறியப்பட்டது. அதனை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அந்த மெஷின் இத்தாலியில் தயாரிக்கப்பட்டு இருந்தது. இந்த மெஷினை கம்ப்யூட்டர் கொண்டு மட்டுமே இயக்க முடியும். வட கொரியா இதனை ஏவுகணைகள் தயாரிக்க பயன்படுத்தி வருகிறது. இந்த மெஷின் அணு ஆயுத தடுப்பின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது . இதையடுத்து உலகில் 42 நாடுகள் இது போன்ற பொருட்களின் பரிமாற்றம் குறித்த தகவல்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றன. அதிகாரிகள் கப்பலில் முழுமையாக சோதனை செய்த போது அதில் அணு ஆயுதங்கள் தயாரிக்க தேவையான 22180 கிலோ பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. சீனாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற கப்பலில் இது போன்று பறிமுதல் செய்யப்படுவது இது முதல் முறை கிடையாது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகள் இப்பொருட்களுக்கு தடை விதித்து இருப்பதால் பாகிஸ்தான் சீனாவில் இருந்து இதனை வாங்க முயன்றதாக தெரிகிறது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் இதே போன்று நவசேவா துறைமுகத்தில் அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படக்கூடிய தெர்மோ எலக்ட்ரிக் உபகரணங்கள் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு எடுத்துச்செல்லப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ஏவுகணைகள் தயாரிக்க தேவையான பொருட்களை கப்பலில் எடுத்துச்சென்ற போது இந்திய எல்லையில் பிடிபட்டது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிக்க தேவையான பொருட்களை சப்ளை செய்த சீனாவின் 3 நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடந்த ஆண்டு பொருளாதார தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY">
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY">
https://bit.ly/47zomWY />

http://dlvr.it/T3Xhf2

கலாஷேத்ரா முன்னாள் மாணவர், அமெரிக்காவில் கொடூரமாகச் சுட்டுக் கொலை! - அரசிடம் உதவி கோரும் தோழி

அமெரிக்காவில் இந்தியர்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் கொல்லப்படும் சம்பவங்கள், தொடர்கதையாகயிருக்கின்றன. பெரும்பாலும், கல்லூரியில் படிப்பதற்காகச் செல்லும் மாணவர்கள் அதிக அளவில் கொல்லப்படுகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடனத்தில் MFA படித்துக் கொண்டிருந்தவர் அமர்நாத் கோஷ். கொல்கத்தாவைச் சேர்ந்த இவர், குச்சிப்புடி, பரதநாட்டியம் ஆகிய நடனக் கலைகளில் தேர்ந்தவர். சென்னையில் உள்ள கலாஷேத்ரா அகாடமியின் முன்னாள் மாணவர். மேலும், புகழ்பெற்ற நடனக் கலைஞர்களான போபிதா டே சர்க்கார், ஸ்ரீ எம்.வி.நரசிம்மாச்சாரி, பத்மஸ்ரீ அடையார் கே.லக்ஷ்மண் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர். அமர்நாத் கோஷ்

இந்த நிலையில், இவர் அமெரிக்காவின் மிசோரியில் செவ்வாய்க்கிழமை மாலையில் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபரால் பல முறை சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இது தொடர்பான தகவல்களைப் பதிவுசெய்த, அமர்நாத் கோஷின் தோழியும், தொலைக்காட்சி நடிகையுமான தேவோலீனா பட்டாச்சார்ஜி, ``என் நண்பர் அமர்நாத் கோஷ் செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் அகாடமியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது பெற்றோருக்கு இவர் ஒரே மகன்.

சிறுவயதில் தந்தையை இழந்தவர். 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரின் அம்மாவும் இறந்துவிட்டார். யார் கொலைசெய்தது என்பது குறித்த எந்த விவரங்களும் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. அமெரிக்காவில் உள்ள சில நண்பர்கள், அமர்நாத் கோஷின் உடலை மீட்க முயற்சி செய்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் முடிந்தால், எங்கள் நண்பர்களுக்கு உதவுங்கள். குறைந்தபட்சம் அவரது கொலைக்கான காரணத்தையாவது நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.காவல்துறை

அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், ``மிசோரியில் இறந்த அமர்நாத் கோஷின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். நாங்கள் தடயவியல், காவல்துறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். விசாரணைக்கான ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இறந்த அமர்நாத் கோஷின் உறவினர்களுக்குத் துணைத் தூதரகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. துப்பாக்கித் தாக்குதல் தொடர்பான விசாரணையை காவல்துறை கடுமையாக முன்னெடுக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களின் நிலை என்ன? - சாந்தன் இறப்பும்... முகாம் சர்ச்சையும்!


http://dlvr.it/T3W94d

Friday, 1 March 2024

Texas Wildfires: டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத்தீ... பேரழிவின் மிச்சங்கள்! | Photo Album

Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ Texas Wildfires | டெக்சாஸ் காட்டுத்தீ


http://dlvr.it/T3Sv0L