Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, 31 December 2022

எங்கெல்லாம் அனுமதி இல்லை, எதற்கெல்லாம் கட்டுப்பாடு - புத்தாண்டு கொண்டாட்ட வழிகாட்டுதல்கள்!

புத்தாண்டு கொண்டாட்டத்தை எந்தவித அசம்பாவிதங்கள் மற்றும் பிரச்சனைகள் இன்றி கொண்டாடுவதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன அந்தந்த மாநகராட்சியின் காவல்துறையினர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக கோவில் செல்லுதல், கேக் வெட்டி கொண்டாடுதல், இருசக்கர வாகனங்களில் கொண்டாட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல் என வாழ்த்துக்களை பகிர்ந்து மக்கள் புது வருட பிறப்பை கொண்டாடுவது வழக்கம். அப்படி கொண்டாடும் போது விபத்துகள், அசம்பாவிதங்கள் போன்ற தவறான நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு அந்தந்த மாநகராட்சி காவல்துறையினர் வழிகாட்டு நெறிமுறைகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மதுரை: புத்தாண்டில் பைக்ரேசில் ஈடுபவர்களை கண்காணிக்க தனிப்படைகள், வழிபாட்டுத்தலங்களில் குழப்பம் விளைவிக்க முயல்வோர் கைது செய்யப்படுவர் என புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மதுரை மாநகர காவல்துறை. புத்தாண்டு தினத்தையொட்டி 31ஆம் தேதி இரவு பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட மதுரை மாநகர காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதன்படி, 31ஆம் தேதி இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், வீடுகளிலேயே புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. *நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. 1300 காவல்துறையினர் மற்றும் 100 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, மதுரை மாநகர் முழுவதும் வாகன சோதனை செய்யப்பட உள்ளது. *இரவு பொதுமக்கள் யாரும் தேவையின்றி மோட்டார் வாகனங்களில் சுற்றுவதைத் தவிர்க்கவும், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். *அனைத்து முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள். வெளியூர்களுக்கு செல்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் பூட்டிய வீட்டருகில் காவல் ரோந்து ஏற்பாடு செய்யப்படும். *கேளிக்கை விடுதிகளில் நடைபெறும் கொண்டாட்டங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வோர் காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். *பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கபடும். மற்றும் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் பற்றி காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க மதுரை மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது காவல்துறை. மேலும் 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள், நாளை மாலை முதல் அனைத்து வழிபாட்டு தலங்கள், மாநில மற்றும் மாவட்ட எல்லைகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். *வேகமாக வாகனங்களை இயக்குபவர்கள், மது அருந்தி வாகனங்களை ஓட்டுபவர்கள், சாகச பயணம் மற்றும் பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதோடு வாகனம் பறிமுதல் செய்யப்படும். *குழந்தைகள் மற்றும் பெண்கள் எதிரான குழந்தைகள் மற்றும் சட்ட விதி மீறல் குறித்து பொதுமக்கள் 9655220100 எண்ணில் புகார் தெரிவிக்கலாம்-மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரண டவுன் பஜார் வீதிகளில் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாலைகளை ஆக்கிரமித்த சாலையோர கடைகளை போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். பஜாஜ் வீதிகளில் உள்ள கடைகளில் இருக்கும் பொருள்களை கடைகளின் முன்பாக தரையில் வைத்து விற்பனை செய்தும், தங்களுடைய இருசக்கர வாகனங்களை கடைகளில் முன்பாக நிறுத்தியும் ஆக மொத்தம் 10 அடி தூரத்திற்கு குறைவில்லாமல் சாலைகளை ஆக்கிரமித்து வருவதால், பஜார் வீதிகளில் அன்றாடம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடந்து செல்லும் பாதசாரிகள் உள்பட இரு சக்கர வாகன ஓட்டிகள் பஜார் வீதிகளில் பயணிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக, மேலும் பண்டிகை கால திருவிழாக்கள் வருவதையொட்டி சாலை ஓர ஆக்கியிருப்பு கடைகளுக்கு அபராதம் அளித்து, ஆக்கிரமித்த சாலையோர கடைகளை முற்றிலுமாக அகற்றிய போக்குவரத்து போலீசாரை பொது மக்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.
http://dlvr.it/Sg9yX1

கோவிட்: பீதியில் தொடங்கி பிஎஃப் 7-ல் நிறைவடைந்த 2022 !

உலகம் உருண்டை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறது கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியான கொரோனா வைரஸ். கோவிட் பாதிப்பை பொறுத்தவரையில் தொடங்கிய இடத்துக்கே அது மீண்டும் வந்துள்ளது. 2020-ம் ஆண்டு உலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் மெள்ள கொண்டு வரத் தொடங்கியது கொரோனா வைரஸ். 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் ஏற்பட்ட அலைகள் உலக அளவில் கோடிக்கணக்கானவர்களை பாதித்ததோடு, லட்சக்கணக்கில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. தடுப்பூசிகளின் வரவாலும், ஏற்கெனவே நோய் பாதித்ததால் உருவான நோய் எதிர்ப்பு சக்தியாலும், வைரஸின் வீரியம் குறைந்து காணப்பட்டதாலும் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை மெள்ள குறையத் தொடங்கியது.கோவிட்தமிழகம் வந்த 4 பேருக்கு கொரோனா... ரேண்டம் டெஸ்ட் செய்வது சரியா? சுகாதாரத்துறை விளக்கம் 2022-ம் ஆண்டு தொடங்கியபோதே இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் பரவலாகக் காணப்பட்டது. இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய டெல்டா மற்றும் புதிய வரவான ஒமிக்ரான் வேரியன்ட்டும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தன. 2021-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட, பலமுறை உருமாறிய ஒமிக்ரான் என்ற வைரஸ் பரவத் தொடங்கியது. ஒமிக்ரானுக்கு பரவும் தன்மை அதிகமாக இருந்ததால் பிற வேரியன்டுகளைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து அந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிப்பு பதிவானது. இதையடுத்து இந்தியாவில் மூன்றாம் அலை ஏற்படலாம் என்றும், ஒமிக்ரான் வேரியன்ட் குறித்த கணிப்புகளும், எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஜனவரி 6-ம் தேதி முதல், இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. ஆனால், முதல் இரண்டு அலைகளைக் காட்டிலும் ஒமிக்ரான் பாதிப்பால் ஏற்பட்ட மூன்றாம் அலையில் பாதிப்புகள் குறைவாகவே காணப்பட்டன. உயிரிழப்புகளும் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தன. Covid-19 Vaccination மூன்றாவது டோஸ்! பாதிப்பு குறைவாக இருந்தாலும் நோய்ப்பரவல் தொடர்ந்து காணப்பட்டதால் மூன்றாம் டோஸ் கோவிட் தடுப்பூசி எடுக்க அரசு வலியுறுத்தி வந்தது. முதற்கட்டமாக முதியோர் மற்றும் முதல்நிலைப் பணியாளர்கள் அதை எடுத்துக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் நோய்ப் பாதிப்பு சற்று அதிகரித்து குறைந்தது. அதே சமயத்தில் ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மூன்றாம் அலை ஏற்படத் தொடங்கியிருந்தது. ஒமிக்ரான் BA.2, BA.4 மற்றும் BA.5 வேரியன்டுகளின் தாக்கம் காணப்பட்டன. 4-ம் அலை கணிப்பு இந்தியாவில் கோவிட் 4-ம் அலை ஜூன் மாதம் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் மாத இறுதியில் உச்சம் தொடும் என்று ஐஐடி கான்பூர் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்தக் கணிப்பு மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனம் மூன்றாம் அலை குறித்த வெளியிட்டிருந்த கணிப்பு சரியாக இருந்ததால், நான்காம் அலை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. 3rd WAVE `பி.எஃப் 7 கொரோனா பாதிப்புக்கு இலவச சிகிச்சை!’ - வழிகாட்டலை வெளியிட்ட கர்நாடக அரசு அந்தச் சமயத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், ஒமிக்ரான் கொரோனா வைரஸின் இறுதி வேரியன்டாக இருக்காது. அடுத்தடுத்து அது உருமாறிக்கொண்டே இருக்கும். அப்படி உருமாறும் வைரஸானது அதீத தொற்றை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கலாம். மேலும் தற்போது பரவும் உருமாறிய வைரஸானது முந்தைய வைரஸின் தன்மையைக் காட்டிலும் வேகமாகப் பரவும் வகையில் உள்ளது என்று எச்சரித்திருந்தது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை நான்காம் அலை ஏற்படவில்லை. டெல்லி, மகாராஷ்டிரா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் BA.4 மற்றும் BA.5 வகை வைரஸ் பாதிப்பு காணப்பட்டது. ஜூலை மாதம் முதல் இந்தியா உள்ளிட்ட பிற உலக நாடுகளிலும் கோவிட் பாதிப்பு குறையத் தொடங்கியது. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கினர். பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் வலுவிழக்கத் தொடங்கின. பொதுமக்கள் மாஸ்க் அணிவதைத் தவிர்க்கத் தொடங்கினர். கோவிட் சிகிச்சைக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்ட சிகிச்சை மையங்கள், பராமரிப்பு மையங்களிலும் சில மாதங்களாக ஒரு நோயாளிகூட அனுமதிக்கப்படாத நிலை இருந்தது. ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை கோவிட் பாதிப்புகள் மிகக் குறைந்தே காணப்பட்டன.கொரோனா பரிசோதனை முதன்முதலில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கோவிட் தொற்று பரவத் தொடங்கியது. அந்த முறையைப் போன்றே 2022-ம் ஆண்டும் சீனாவில் டிசம்பர் மாதம் கோவிட் பரவல் தொடங்கியுள்ளது. ஒரு நாளில் மட்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 9,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. ஒமிக்ரானின் உருமாறிய பிஎஃப்7 வைரஸ் இந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு விமான நிலையங்களில் ரேண்டம் முறையில் கோவிட் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. டிசம்பர் 24, 26 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வந்த சர்வதேச பயணிகளில் 6,000 பேருக்கு ரேண்டம் முறையில் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டதில் 39 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த அறிவுறுத்தலை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அடுத்த 40 நாள்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. chinaகோவிட் பிஎஃப்7: அடுத்த 40 நாள்கள் கவனம்... அரசு எச்சரிக்க என்ன காரணம்? தமிழகத்தில் பிஎஃப்7 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பின் தீவிரம் அதிக அளவில் இல்லை என்றும், நிலை குறித்து தொடர் கண்காணிப்பு செய்யப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது. 2022-ம் ஆண்டை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஒமிக்ரான் பீதியில் தொடங்கி ஒமிக்ரான் பிஎஃப்7-ல் நிறைவடைந்திருக்கிறது.
http://dlvr.it/Sg9yM7

Thursday, 29 December 2022

எனது தேவையை யாரோ இலவசமாக பெற்றனர்: பிருத்விஷா புலம்பல்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் பிரித்விஷா தேர்வு செய்யப்படவில்லை.  இலங்கைக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.  ​​டாப்-3 பேட்ஸ்மேன்களான ரோஹித், விராட் கோஹ்லி மற்றும் கே.எல்.ராகுல் டி20 அணியில் இல்லை. ரிஷப் பன்ன இரு அணிகளிலும் இல்லாத நிலையில், சமீபகாலமாக சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பிரித்வி ஷாவின் பெயர் இல்லாமல் உள்ளது.பிரித்வி ஷா கடைசியாக ஜூலை 2021ல் இலங்கைக்கு எதிரான டி20ல் இந்தியாவுக்காக விளையாடினார். இளம் தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா மும்பைக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில், பிரித்வி ஷா டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 152.97 ஸ்ட்ரைக் ரேட்டில் 10 இன்னிங்ஸ்களில் 283 ரன்கள் எடுத்தார். இருப்பினும் பிரித்வி ஷாவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் கதவுகள் மூடப்பட்டன.  இந்நிலையில் இந்த தொடரிலும் மீண்டும் இந்திய அணியில் இல்லாத பிறகு, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரகசிய குறிப்பை பகிர்ந்துள்ளார்.  அதில் ”எனக்கு மிகவும் தேவைப்பட்டது, யாரோ அவற்றை இலவசமாகப் பெற்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.  மேலும் தற்போது உள்ள 2k கிட்ஸ் சண்டை வந்தால் `டிபி’ எடுப்பதை போல, இவரும் தனது புகைப்படத்தை எடுத்துவிட்டார்.
http://dlvr.it/Sg5ytM

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிக்கு ரூ.206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சி.எம்.பி.டி. முதல் மாதவரம் வரை 10.1 கி.மீ. தூரத்துக்கு இருப்புப் பாதை, இதர பணிகள் நடைபெற உள்ளன.



from Dinakaran.com |29 Dec 2022 https://ift.tt/wjqK8Vs
via IFTTT

திருச்சி: திருச்சி, சன்னாசிபட்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்து பெட்டகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திட்டத்தின் மூலம் பயனடையும் ஒரு கோடியே 1வது பயனாளி மீனாட்சிக்கு முதல்வர் மருந்து பெட்டகம் வழங்கினார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இயன்முறை சிகிச்சை பெறும் மீனாட்சியின் கணவரிடம் முதல்வர் நலம் விசாரித்தார்.



from Dinakaran.com |29 Dec 2022 https://ift.tt/HjIDgvk
via IFTTT

மதுரை : கரூர் காவிரிப் படுக்கையில் அமைந்துள்ள வீடுகளை அகற்ற வனத்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் மனுதாரரின் விளக்கத்தை பரிசீலனை செய்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குளித்தலை தாலுகாவுக்கு உட்பட்ட காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள வீடுகளை விட்டு வெளியேற வனத்துறை உத்தரவிட்டுள்ளது.



from Dinakaran.com |29 Dec 2022 https://ift.tt/3ERirjH
via IFTTT

சென்னை: சென்னை டாஸ்மாக் அலுவலக உயரதிகாரிகளை சந்திப்பது தொடர்பான சுற்றறிக்கை பற்றி பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட மேலாளரிடம் இருந்து அனுமதி பெற்ற பின்பே உயரதிகாரிகளை சந்திக்க வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.



from Dinakaran.com |29 Dec 2022 https://ift.tt/UunHlOE
via IFTTT

புதுச்சேரி: புதுச்சேரியில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.34ல் இருந்து ரூ.37-ஆக உயர்த்தப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.470 மதிப்பில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |29 Dec 2022 https://ift.tt/tyBwYI3
via IFTTT