Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, 23 September 2024

``தோற்றால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்!" - டிரம்பும், அவர் போட்டியிட்ட தேர்தல்களும்!

'ஒருவேளை இந்த தேர்தலில் தோற்றுவிட்டால், இனி எப்போதுமே தேர்தலில் போட்டியிட மாட்டேன்" என்று நேர்காணல் ஒன்றில் டிரம்ப் பேசியுள்ளார்.

வரும் நவம்பர் 5-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸுக்கும், குடியரசு கட்சியின் வேட்பாளரான டோனால்ட் டிரம்புக்கும் தான் டஃப் போட்டி நடந்து வருகிறது. இதனையடுத்து இருவரும் பேட்டிகள், நேர்காணல்கள், பிரச்சாரம் ஆகியவற்றில் மும்முரமாக சுழன்று வருகின்றனர்.Donald Trump: டிரம்பும், அதிபர் தேர்தல்களும்!

சமீபத்தில் டிரம்ப ஒரு நேர்காணலில் கலந்துக்கொண்டு பேசியுள்ளார். அதில், "நான் இந்த தேர்தலில் நிச்சயம் வெல்வேன் என்று நம்புகிறேன். ஒருவேளை வெல்லாவிட்டால், இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

டிரம்பும், அதிபர் தேர்தல்களும்!



2000-ம் ஆண்டு, முதல்முறையாக டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தார். பின்னர், பிப்ரவரி மாதம் போட்டியில் இருந்து விலகிவிட்டார்.

2011-ம் ஆண்டு ஒபாமாவுக்கு எதிராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 'நான் போட்டியிடவில்லை' என்று அவரே 2011-ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார்.

2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மீண்டும் 2020-ம் ஆண்டு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு எதிராக போட்டியிட்டு தோற்றார்.

தற்போது அதே கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிசை எதிர்த்து போட்டியிடுகிறார். US Elections 2024: பதுங்கும் டிரம்ப் சீறிப் பாய்வாரா? கருத்துக்கணிப்பின்படி கமலா ஹாரிஸ் வெல்வாரா?


http://dlvr.it/TDZvKK

15 ஆண்டுகளாக குறையாத கரன்ட் பில்; வெளிவந்த உண்மை... அதிர்ந்துபோன வீட்டு உரிமையாளர்! - என்ன நடந்தது?

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கென் வில்சன் என்ற நபர் 15 ஆண்டுகளாக தனது பக்கத்து வீட்டுக்காரருக்கும் சேர்த்து மின்சார கட்டணம் செலுத்திக்கொண்டிருந்ததை சமீபத்தில் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பசிபிக் கேஸ் அண்ட் எலெக்ட்ரிக் வாடிக்கையாளரான கென் 2006ம் ஆண்டு முதல் அப்பார்ட்மென்ட் ஒன்றில் தனியாக வாழ்ந்துவருகிறார்.

இவர் தனக்கு மின்சார கட்டணம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக வருவதை கவனித்துள்ளார். பல வழிகளில் மின்சார செலவைக் குறைக்க முயற்சி செய்தும் ஏதும் பலனளிக்கவில்லை. இறுதியாக உள்ளூர் மின்வாரிய ஊழியர்கள் நடத்திய விசாரணையில் 15 ஆண்டுகளாக தன்னையறியாமலே பக்கத்து வீட்டுக்காரரின் பணச்சுமையையும் சுமந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

இதைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை மின்சார கட்டணத்தைக் குறைக்க, பொருட்களை குறைவாகப் பயன்படுத்துவது முதல் சாதனங்களில் வாட்டேஜை கண்காணிப்பது வரை பல வழிகளில் முயன்றுள்ளார். ஆனாலும் மீட்டரில் பில் குறைந்தபாடில்லை.

இறுதியாக கென், பசிபிக் கேஸ் அண்ட் எலெக்ட்ரிக் ஊழியர்களை அழைத்துள்ளார். தான் செய்த அனைத்து முயற்சிகளையும் அவர்களிடம் விளக்கிக் கூறியுள்ளார். அவர்கள் விசாரணையில் கென் 2009 முதல் பக்கத்து வீட்டுக்காரரின் இணைப்புக்கும் சேர்த்து பில் கட்டுவது தெரியவந்துள்ளது.

மின்வாரிய ஊழியர்கள் அவரது பிரச்னைகளை தீர்த்துக்கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.ரூ. 9.2 கோடி மதிப்புடைய கல்லை, வாசல் படியாக பயன்படுத்திய மூதாட்டி!


http://dlvr.it/TDZXzS

Sunday, 22 September 2024

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங்

தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர்.

இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட வைத்ததாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். செப்டம்பர் மாதம் பதவியிலிருந்தும், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.ஜாங் யாங்

இது குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில்தான் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு ஜாங் யாங், "என் முன்னாள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், என்னை வளர்த்த தலைவர்களை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. உண்மையில் நான் என் செயலுக்காக வெட்கப்படுகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.ADMK: "அந்தப் பேச்சுக்கே இடமில்லை" - 'அதிமுக இணைப்பு' குறித்துப் பேசிய ஓ.பி.எஸ்-க்கு இ.பி.எஸ் பதிலடி


http://dlvr.it/TDYtmC

Saturday, 21 September 2024

தமிழ்நாட்டை நோக்கிய அமெரிக்க முன்னணி நிறுவனங்களின் வருகை!

தற்போதைய அரசு 2030க்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. மேலும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. இங்கு 48% நகர மயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் அதிகளவு நகரமயமாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு தான். இதனால், அந்நிய நேரடி முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக உலக முதலீட்டார்களும் கருதுகிறார்கள்.

அதன்படி, உலகின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கும் விதமாக தமிழ்நாடு முதல்வர் அரசுப் பயணமாக 14 நாட்கள் அமெரிக்கா சென்று வந்துள்ளார். ஏற்கனவே, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டதன் மூலம் தமிழகத்திற்கு பல்வேறு முதலீடுகள் வந்திருந்திருக்கிறது. இந்தப் பயணங்கள் வாயிலாக 18 ஆயிரத்து 521 நபருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கும் வகையில், 10 ஆயிரத்து 882 கோடி ரூபாய் மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தது.இன்ஸ்பிரேஷன் ஸ்டோரீஸ்!

அந்த வகையில் இந்த அமெரிக்க பயணத்தில் தமிழக முதல்வர் 25 முன்னணி நிறுவனங்களுடன் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறார். இதில், 18 நிறுவனங்கள், பார்ச்சூன் 500 நிறுவனங்களும் ஆகும். இந்த சந்திப்புகளில் இருந்து 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

சான் பிரான்சிஸ்கோவில் 9 சந்திப்புகள் நடைபெற்று, அதில் 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருகிறது. இதன்மூலம் தமிழக இளைஞர்கள் 4,600 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

சிகாகோவில் 16 சந்திப்புகள் நடைபெற்று, அதில் 11 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதன்மூலம் தமிழக இளைஞர்கள் 6,916 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த 19 ஒப்பந்தங்கள் மூலமாக 7 ஆயிரத்து 616 கோடி முதலீடானது தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது.

இந்த முதலீடுகள், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. குறிப்பாக இம்முறை மதுரை போன்ற தென்மாவட்டங்களும் அந்நிய முதலீட்டு பார்வையில் உள்ளது கவனிக்கத்தக்கது.

தமிழ்நாட்டு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைக்கோர்த்த நிறுவனங்கள்…



தரவு: தமிழ்நாடு அரசு இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை - 9.


http://dlvr.it/TDWRgY

Sunday, 15 September 2024

Donald Trump: இரண்டாது முறையாக கொலை முயற்சி.. ட்ரம்பை சுற்றி வரும் மரணம்! - என்ன நடந்தது?

அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப்பை இரண்டாவது முறையாக கொல்ல முயற்சி நடந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக குடியரசுக் கட்சியின் தேர்தல் பிரசார செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அமெரிக்காவின் புளோரிடாவில் இருக்கும் வெஸ்ட் பால்ம் கடற்கரையில் உள்ள டிரம்பின் கோல்ஃப் மைதானத்தில், ட்ரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.டொனால்ட் ட்ரம்ப்

இந்த துப்பாக்கிச் சூட்டில் ட்ரம்புக்கு எந்த பாதிப்பும் இல்லை. தற்போது அவர் பாதுகாப்பாக இருக்கிறார். ட்ரம்ப் செல்லும் வழியில் இருந்த புதரிலிருந்து ஏகே 47 துப்பாக்கியை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு, என்ன நோக்கம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து அதிகாரிகள், ``அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ஃப் கிளப்பில், ட்ரம்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரை குறிவைத்து கிளப்பிற்கு வெளியே இருந்து ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். நாங்கள் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள், அந்த நபர் அங்கிருந்து காரில் தப்பிச்செல்ல முயன்றார். அவரை துரத்திப்பிடித்து கைது செய்திருக்கிறோம். அவர் பெயர் ரியான் வெஸ்லி ரூத் (58) எனத் தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து, சிறப்பு பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்." என தெரிவித்துள்ளனர். ரியான் வெஸ்லி ரூத்

இதே போல இரண்டு மாதங்களுக்கு முன்பு பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ட்ரம்ப் ஈடுபட்டபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் ட்ரம்ப் காயமடைந்தார். இந்த நிலையில், அவர் இருந்த பகுதியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பது, அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.``கமலா, ட்ரம்ப் இருவருமே வாழ்வுக்கு எதிரானவர்கள்" - போப் பிரான்சிஸ் பேசியது என்ன?


http://dlvr.it/TDHFPz

Saturday, 14 September 2024

Hamza bin laden: பின்லேடன் மகன் உயிருடன் இருக்கிறாரா... தாக்குதலுக்குத் திட்டமா? - பரபரக்கும் தகவல்!

ஆப்கானிஸ்தானில் இயங்கிவந்த அல்கொய்தா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன். அமெரிக்காவின் ரெட்டை கோபுரம் மீது 11 செப்டம்பர் 2001 அன்று இவர் நடத்திய தாக்குதலில், கிட்டத்தட்ட 3,000 பேர் கொல்லப்பட்டனர். பிறகு இவர் 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் உள்ள ஒரு வளாகத்தில் அமெரிக்க சிறப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். இவரின் மகன் ஹம்சா பின்லேடன், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் எனப் பேசிய ஆடியோ, வீடியோ செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து, 2019-ல் நடந்த விமான தாக்குதலில் கொல்லப்பட்டார் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அவர் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகி, உலக நாடுகளுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஹம்சா பின்லேடன் தனது சகோதரர் அப்துல்லாஹ்வின் உதவியோடு, ஆப்கானிஸ்தானிலிருந்து அல்கொய்தாவை ரகசியமாக நடத்தி வருகிறார் என "The mirror" உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த அறிக்கையில், NMF, தாலிபன், ஹம்சா மற்றும் அவரது கூட்டாளிகளின் செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்படுகிறது.

மேலும், ``2021-ல் காபூலில் தாலிபன் ஆட்சியை கைப்பற்றியப் பிறகு, ஆப்கானிஸ்தான் பல்வேறு பயங்கரவாத குழுக்களின் பயிற்சி மையமாக மாறியிருக்கிறது. ஹம்சா பின்லேடன், ஆப்கானிஸ்தானின் கேல் மாவட்டத்தில் இருக்கிறார். அங்கு 450 அரேபியர்களும், பாகிஸ்தானியரும் அவரை பாதுகாத்து வருகின்றனர். அவரது கட்டளையின் கீழ், அல் கொய்தா மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு, தாக்குதல்களுக்கு தயாராகி வருகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஹம்சா பின்லேடன் அமெரிக்காவால் அதிகாரபூர்வமாக உலகளாவிய பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. `கடத்தப்பட்ட விமானத்தில் என் அப்பா; மீட்கும் அதிகாரியாக நான்..' - 1984 Hijacking குறித்து ஜெய்சங்கர்


http://dlvr.it/TDDlyf

Friday, 13 September 2024

US Election: தொலைக்காட்சி விவாதத்தில் `வென்ற' கமலா ஹாரிஸ் தேர்தலில் வெல்வாரா?

( கட்டுரையாளர்,  மணிவண்ணன் திருமலை, லண்டன் பிபிசி உலக சேவை, முன்னாள் ஆசிரியர்)

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சுமார் 50 நாட்களே உள்ள நிலையில்,  பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ் - டொனால்ட் ட்ரம்ப்  இருவரும் கலந்து கொண்ட தொலைக்காட்சி விவாதத்துக்குப் பின்,  தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.

சுமார் 67 மில்லியன் மக்கள் பார்த்திருப்பதாகக் கணிக்கப்படும் இந்த ஏபிசி தொலைக்காட்சி சானல் விவாதம்,  ஜூலையில், பைடைன் தேர்தல் களத்தில் இருந்து பின் வாங்கியதும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரிஸின் அரசியல் செல்வாக்கை சற்று உயர்த்தியிருக்கிறது.

கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?



சுமார் 90 நிமிடங்கள் நடந்த இந்த விவாதத்திற்கு பின் , விவாதத்தைப் பார்த்தவர்கள் மத்தியில் சி.என்.என் சானல் நடத்திய கருத்துக்கணிப்பு, மற்றும்  பதிவு செய்த வாக்காளர்கள் மத்தியில் யூகவ் (YouGov) என்ற கருத்தறியும் அமைப்பும் நடத்திய இரு வெவ்வேறு கருத்துக் கணிப்புகளிலும் கமலா ஹாரிஸே வென்றதாக முடிவுகள் சொல்கின்றன.ஆனால் தொலைக்காட்சி விவாதங்களில் பெற்ற வெற்றி, தேர்தல் வெற்றியாக மாறுமா ?  

கடந்த காலங்களில், அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களிடையே நடந்த தொலைக்காட்சி விவாதங்களில் வென்றதாகக் கருதப்பட்டவர்கள் சிலர், தேர்தலில் தோற்றிருக்கிறார்கள்.  

ஆனாலும்,  தொலைக்காட்சி விவாதம் என்பதற்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு முக்கியத்துவம் உண்டு.  

கணிசமான வாக்காளர்கள் அரசியல் கட்சி சார்ந்தவர்களாக அல்லது அனுதாபிகளாக இருக்கும் நிலையில், தொலைக்காட்சி விவாதங்கள் அவர்கள் வாக்களிக்கும் நிலைப்பாட்டை மாற்றுவதில்லை. 

ஆனால் கட்சி சாராதோர் இந்த விவாதங்களைப் பார்க்கும் போது,  அவர்கள் வாக்களிக்கும் முடிவுகளை இந்த விவாதங்கள் ஓரளவுக்கு மாற்றுகின்றன என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

ட்ரம்ப் போன்ற ஏற்கனவே நன்கு அறிமுகமான வேட்பாளர்களுக்கு தொலைக்காட்சி விவாதங்களில் பெரிய பலன் இல்லை;  ஆனால் முதல் முறை போட்டியிடும் புதிய வேட்பாளர்களை வாக்காளர்கள் அறிந்துகொள்ள இந்த விவாதங்கள் உதவுகின்றன என்று கருதப்படுகிறது. US Election: `எலான் மஸ்க்குக்கு அமைச்சர் பதவியா..!' - க்ரீன் சிக்னல் காட்டிய ட்ரம்ப்!US Elections: சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்; ட்ரம்பை தொடர்ந்து கமலாவை நேர்காணலுக்கு அழைத்த மஸ்க்!

தொலைக்காட்சி விவாதத்தில் என்ன நடந்தது ? 



ஆதாரங்கள் இல்லாத பல கருத்துகளை அடித்துவிடுபவர் என்று பரவலான ஒரு இமேஜ் கொண்ட ட்ரம்ப் இந்த விவாதத்திலும் பல சர்ச்சை கருத்துகளை முன்வைத்தார்.  

 அமெரிக்காவின் பல பொருளாதாரப் பிரச்னைகளுக்கு சட்டவிரோத குடியேறிகள்தான் காரணம் என்று நம்பும் வலதுசாரி வாக்காளர்களுக்கு தீனி போடும் வகையில்,  பைடன் ஆட்சியில் இந்தப் பிரச்னை கட்டுக்கடங்காமல் போய்விட்டதாகக் குற்றம்சாட்டினார்.  

ஒஹையோ மாகாணத்தின் ஸ்ப்ரிங்க்ஃபீல்ட் நகரில் , ஹெய்த்தி நாட்டிலிருந்து வந்த குடியேறிகள், நகர மக்களின் நாய்களையும், பூனைகளையும் கொன்று சாப்பிடுகிறார்கள் என்று முன்னதாக சமூக ஊடகங்களில் பரவிய ஆதாரமற்ற செய்தியை ட்ரம்ப் தெரிவித்தது,  பெரும் ஆச்சரியத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தியது.   ட்ரம்ப்

நெறியாளர்கள் சுட்டிக்காட்டியபோதும், ட்ரம்ப் தன் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.  “ நாம் கண்டுபிடிப்போம்" ( “We will find out”)  என்று வழுக்கலாக பதிலளித்தார். 

தொலைக்காட்சி விவாதத்தில் கமலா ஹாரிஸ் காட்டிய ஆக்ரோஷம் மற்றும் ட்ரம்ப்பை அவர் எதிர் கொண்ட விதம் ஆகியவை அவரது தரப்புக்கு பெரும் உத்வேகத்தை அளித்திருக்கின்றன. 

இது விவாதம் முடிந்த அடுத்த 24 மணி நேரங்களில் கமலா ஹாரிசுக்கு குவிந்த நிதியில் அளவிலேயே காணக்கூடியதாக இருந்தது - இந்தக் குறுகிய கால கட்டத்தில் கமலா ஹாரிஸ் சுமார் 47 மிலியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அவரது தேர்தல் பிரசாரக்குழு தெரிவித்திருக்கிறது.மணிவண்ணன் திருமலை, மேனாள் ஆசிரியர், பிபிசி உலக சேவை

பிரகாசமடைந்திருக்கும் வாய்ப்பு



பைடன் களத்தில் இருந்த வரை தொய்வில் இருந்த ஜனநாயகக் கட்சியின் தேர்தல் வாய்ப்புகள் கமலா ஹாரிஸ் வருகைக்கு பின் பிரகாசமடைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.  

அதிபர் ஜோ பைடன் கடந்த ஜுன் மாதம் ட்ரம்ப்புடன் நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் சுணங்கிவிட்டார் என்று கருத்துக் கணிப்புகள் கூறிய நிலையில்,  அவர் போட்டியில் இருந்து விலகவேண்டும் என்று அவரின் கட்சியான ஜனநாயகக் கட்சியின் மூத்த புள்ளிகளே அழுத்தம் தர, அவர் போட்டியில் இருந்து விலகியதுடன், துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிசுக்கு தன் ஆதரவைத் தெரிவித்தார்.கமலா ஹாரிஸ்

இந்த திடீர் திருப்பத்தை ட்ரம்ப் எதிர்பார்க்கவில்லை.  தன்னைவிட வயதில் மூத்தவரான ஜோ பைடனை, வயது,  ஆட்சிக்காலத்தில் அவர் செயல்பாடுகள் ஆகிய இரண்டைக் காட்டியே தோற்கடித்துவிடலாம் என்று அவர் போட்ட திட்டம், ஜனநாயகக் கட்சியின் நடவடிக்கையால் குலைந்து போனதை அவர் ரசிக்கவில்லை. 

பைடனை முன் வைத்து தீட்டப்பட்ட தேர்தல் யுக்திகளை கமலா ஹாரிஸ் வேட்பாளரான நிலையில் மாற்றவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் ட்ரம்ப்.  

தான் ஆட்சியில் இருந்த காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தது,  பைடனின் ஆட்சியில் பொருளாதாரம் வளரவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார் ட்ரம்ப்.  பைடன் மீது வைத்த இந்த குற்றச்சாட்டு அவரது நிர்வாகத்தில் துணை அதிபராக இருந்த கமலா ஹாரிசுக்கும் பொருந்தும் என்பது அவர் வாதம்.  கமலா ஹாரிஸ்

இதே போலத்தான் அமெரிக்காவின் வலது சாரிகள் மையப்படுத்தும்,  சட்டவிரோதக் குடியேற்றங்கள் பிரச்னையும்.  

மெக்சிகோவிலிருந்து குடியேறிகள் அமெரிக்காவுக்குள் வருவதைத் தடுக்க அமெரிக்க மெக்சிகோ எல்லையில் சுவரெழுப்பும் திட்டத்தை நிறைவேற்ற முயன்ற ட்ரம்ப், ஜோ பைடன் நிர்வாகத்தில் அமெரிக்காவுக்குள் சட்டவிரோத குடியேற்றங்கள் அதிகரித்துவிட்டதாக குற்றம் சாட்டி வந்தார்.

அமெரிக்காவுக்கு தெற்கே உள்ள மெக்சிகோ,  மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளான குவாடிமாலா, எல் சால்வடார் மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் தஞ்சம் புகுவதைத் தடுக்க ஜோ பைடன் கமலா ஹாரிசுக்கு வழங்கிய சிறப்புப் பொறுப்பை சரியாக நிறைவேற்ற கமலா தவறிவிட்டதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். 

குடியேற்றப் பிரச்னை அமெரிக்காவில் ஒரு அரசியல் ரீதியாக கொந்தளிப்பை ஏற்படுத்தும் விஷயம். எனவே இதை கமலா உடனடியாக மறுத்து,  அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சியினரின் பல கோரிக்கைகளை ஏற்று ஜனநாயகக் கட்சியினர் கொண்டுவந்த குடியேற்ற  தடை சட்டத்திற்கு டிரம்ப் முட்டுக்கட்டை போட்டதாக பதிலடி கொடுத்தார். 

குடியேற்றம் , பொருளாதாரம், விலைவாசி உயர்வு ,  போன்ற உள் நாட்டுப் பிரச்சனைகள் ஒரு புறம் இருக்க ரஷ்யா - உக்ரெயின் போர்,  இஸ்ரேல் - காசா போர் ஆகியவையும் தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களும் எதிர்கொள்ளும் முக்கிய வெளியுறவுக் கொள்கைப் பிரச்னைகளாக இருக்கின்றன.மணிவண்ணன்இஸ்ரேல் காசா பிரச்னையைப் பொறுத்தவரை,  இரு தரப்பினரின் நிலைப்பாட்டிலும் பெரிய வேறுபாடு இல்லை என்றாலும்,  கமலா ஹாரிஸ் பாலத்தீனர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுப்பார் என்று ஒரு கருத்து நிலவுகிறது.Trump: "இனி கமலா ஹாரிஸுடன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன்" - டொனால்ட் ட்ரம்ப் அதிரடி

புடின் - ட்ரம்ப் நட்பு



ரஷ்ய அதிபர் புடினுடன் ட்ரம்ப்புக்கு உள்ள நெருக்கத்தை சுட்டிக்காட்டும்  ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தால் உக்ரேனுக்கு அமெரிக்கா இது வரை அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்வார்,  ரஷ்யப் படைகள் உக்ரேனின் தலைநகர் கீய்வுக்குள் வந்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள். 

தான் ஆட்சியில் இருந்திருந்தால் புட்டின் மாஸ்கோவிலேயே இருந்திருப்பார், உக்ரேனுக்குள் கால் வைத்திருக்க மாட்டார் என்று ட்ரம்ப் பதிலளித்திருக்கிறார்.

இஸ்ரேல் காசா பிரச்னையைப் பொறுத்தவரை,  இரு தரப்பினரின் நிலைப்பாட்டிலும் பெரிய வேறுபாடு இல்லை என்றாலும்,  கமலா ஹாரிஸ் பாலத்தீனர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுப்பார் என்று ஒரு கருத்து நிலவுகிறது.Kamala vs Trump: விவாதத்தில் `ஆடியோ-காதணிகளை' பயன்படுத்தினாரா கமலா? முத்து கம்மலின் அரசியல் பின்னணி!

கடுமையான களம்



அமெரிக்காவில் அரபு - அமெரிக்கர்கள் அதிகம் வாழும் மிச்சிகன் மாகாணத்தில் பைடனின் இஸ்‌ரேல் ஆதரவுக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல அரபு அமெரிக்கர்கள் பைடனுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்த நிலை, கமலா ஹாரிஸ் களத்தில் வந்த பின்னர் சற்று மாறியிருப்பதாகத் தெரிகிறது.

ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் என்னவோ மிகவும் கடுமையான போட்டியையே இம்முறை சந்திக்கிறது என்றே தெரிகிறது.

கமலா ஹாரிஸ் தற்போதைக்கு கருத்துக் கணிப்புகளில் முன்னணியில் இருக்கிறார் என்றாலும்,  அமெரிக்க அதிபர் தேர்தலில், மொத்த வாக்குகள் அடிப்படையில் மட்டும் தேர்தல் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் பெரும்பான்மையான மாநிலங்களையும் வென்று அதன் மூலம் அந்த மாநிலங்கள் பெற்றிருக்கும் "தேர்ந்தெடுப்போர் அவை"யையும் ( Electoral College)  வெல்ல வேண்டும்.  

இந்தத் தேர்ந்தெடுப்போர் அவை உறுப்பினர்கள்தான்,  தேர்தல் முடிந்த பின் அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கிறார்கள்.  அந்த வகையில் அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு "மறைமுகத் தேர்தல்" ( indirect election) தான். 

இந்த தேர்ந்தெடுப்போர் அவையில் மொத்தம் 538 பேர் உறுப்பினர்கள். அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட ஒரு வேட்பாளர் குறைந்த பட்சம் 270 உறுப்பினர்களை வென்றிருக்கவேண்டும். 

கடந்த 2000 மற்றும் 2016 அமெரிக்க அதிபர் தேர்தல்களில் வென்ற ஜார்ஜ் புஷ் மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவருமே மொத்த வாக்குகளில் குறைவான வாக்குகளையே பெற்றாலும்,  அதிக மாநிலங்களில் வென்றதால்  அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றனர் என்பது தெரிந்த விஷயம்.  இது அமெரிக்க தேர்தல் அமைப்பில் உள்ள ஒரு  அடிப்படை முரண்.

ட்ரம்ப் எதிர்கொள்ளும் வழக்குகள் தேர்தலில் அவரது வாய்ப்புகளைப் பாதிக்குமா ? 



கடந்த சில ஆண்டுகளில் ட்ரம்ப் மீது போடப்பட்ட நான்கு  முக்கிய வழக்குகளில் ஒரு வழக்கில் ஏற்கனவே அவர் குற்றவாளியென்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  2016 தேர்தலுக்கு முன்னர், ஒரு பெண்ணுக்கு அவருடன் பாலியல் தொடர்பு இருந்த விவகாரத்தில் ட்ரம்ப் , அவரை "சரிக்கட்ட"  பணம் கொடுத்து அந்த பணத்தை தன் நிறுவனத்தின் வேறு ஒரு கணக்கில் எழுதிவைத்தார் என்ற வழக்கு அது.  

இவ்வழக்கில் தண்டனைக் காலம் பற்றிய உத்தரவு தேர்தல் முடிந்த பின்னர்தான் அறிவிக்கப்படும் என்று நீதிபதி முடிவு செய்திருப்பது ட்ரம்ப்புக்கு ஆறுதலளிக்கும் ஒரு விஷயம். 

மற்ற மூன்று வழக்கு விசாரணைகளை ட்ரம்ப் தரப்பு வெற்றிகரமாக  தேர்தல் முடியும் வரை தள்ளிப்போட்டிருக்கிறது. 

எனவே தேர்தலுக்கு முன்னர் இந்த வழக்குகளால் ட்ரம்ப் எந்த ஒரு சிக்கலையும் எதிர்கொள்ளப்போவதில்லை. 

தேர்தலுக்கு பின்னர், இந்த வழக்குகளில் அவருக்கு சிக்கல் வருமா, அல்லது தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் அவரே சட்டத்துறையை இந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்ளச் சொல்வாரா என்பதெல்லாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விஷயங்கள்.

தேர்தலில் ட்ரம்ப் வென்று,  வழக்குகள் சிலவற்றில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வந்தால் அவர் பதவியில் நீடிக்க முடியுமா என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.  

ஆனால் அமெரிக்க அரசியல் சட்டத்தில் ஒரு குற்றவாளி  அல்லது சிறைத்தண்டனை பெற்றவர் அதிபர் பதவி வகிக்கமுடியாது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்ற விநோதமான விஷயம் பலரால் சுட்டிக்காட்டப்படுகிறது.   அமெரிக்க அரசியல் சட்டத்தின் பிதாமகர்கள் இந்த நிலையை அமெரிக்கா எதிர்கொள்ளும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY />

http://dlvr.it/TDD3rv

Trump: "இனி கமலா ஹாரிஸுடன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன்" - டொனால்ட் ட்ரம்ப் அதிரடி

கமலா ஹாரிஸுடன் மீண்டும் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஜோ பைடனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்புக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் அந்த விவாதத்தில் ட்ரம்பின் கேள்விகளுக்கு, ஜோ பைடன் பதிலளிக்க முடியாமல் திணறினார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜோ பைடன், கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவித்தார்.ட்ரம்ப்- ஜோ பைடன்

இந்நிலையில், கமலா ஹாரிஸுக்கும் - ட்ரம்புக்கும் இடையேயான விவாத நிகழ்ச்சி கடந்த புதன் கிழமை நடைபெற்றது. கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் இடையே நடந்த அந்த விவாதத்தில், ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே இருந்தனர். அமெரிக்கப் பொருளாதாரம், புலம்பெயர்ந்தோர் சட்டங்கள், கருக்கலைப்புச் சட்டங்கள், இனப் பாகுபாடு, உக்ரைன் - ரஷ்யா போர் எனப் பல்வேறு தலைப்புகளில் சூடான விவாதம் நடைபெற்றது. வெறுப்பு மற்றும் இனப் பாகுபாடுகளை ட்ரம்ப் பரப்புவதாகக் கமல் ஹாரிஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

மறுபுறம், பைடன் நிர்வாகம் பொருளாதாரத்தில் தோல்வியடைந்ததாக ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். இதில் ட்ரம்ப் சிறப்பாகக் கையாண்டதாகச் சில கருத்துக் கணிப்புகளும், கமலா ஹாரிஸ் சிறப்பாகக் கையாண்டதாக வேறு சில கருத்துக் கணிப்புகளும் தெரிவித்திருந்தனர். இதனிடையே மீண்டும் ட்ரம்புடன் மற்றொரு விவாதத்தில் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன் என்று கமலா ஹாரிஸ் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் விவாதத்தில் மீண்டும் பங்கேற்க மாட்டேன் என்று ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாகப் பேசியிருக்கும் அவர், "ஒருவர் சண்டையில் தோற்றால், அவர் மறுப்போட்டி வேண்டும் என்றுதான் கேட்பார்.ட்ரம்ப் - கமலா ஹாரிஸ்

இடதுசாரி வேட்பாளரான தோழர் கமலா ஹாரிஸுக்கு எதிரான விவாதத்தில் நான் வெற்றி பெற்றதாகக் கருத்துக் கணிப்புகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. அதனால்தான் அவர் என்னை இரண்டாவது விவாதத்திற்கு அழைத்திருக்கிறார். ஜோ பைடனுடன் நடந்த விவாதத்தில் மற்ற பிரச்னைகள் அனைத்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில் அவர்கள் எனச் செய்தார்கள் என்பதில் கமலா ஹாரிஸ் கவனம் செலுத்த வேண்டும். மூன்றாவது விவாதம் எல்லாம் இனி கிடையாது. அப்படி நடைபெற்றாலும் நான் அதில் பங்கேற்க மாட்டேன்." என்று தெரிவித்திருக்கிறார்.


http://dlvr.it/TDBCK4

Thursday, 12 September 2024

China-வின் தாக்கம்... இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்துமா? - IPS Finance

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃபைனான்ஸின் இந்த எபிசோடில்," China-வின் தாக்கம்... இந்தியப் பங்குச்சந்தை சரிவுக்கு காரணமா?

வரலாற்று சாதனை படைத்த BAJAJ HOUSING IPO

பொருளாதார விமர்சகர் வ. நாகப்பன் விரிவாக பேசியுள்ளார். அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும். 


http://dlvr.it/TD7dpM

Wednesday, 11 September 2024

`அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல நம் முன்னோர்கள்தான்!' - ம.பி கல்வியமைச்சர் பேச்சு

அமெரிக்காவை முதலில் கண்டுபிடித்தது கொலம்பஸ் என்றே கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் திங்கள் அமெரிக்க நாடுகளில் கொலம்பஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இருப்பினும், அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல என்கிற பேச்சும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக, அமெரிக்கப் பழங்குடியினர், கொலம்பஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல இந்திய முன்னோர்கள்தான் என மத்தியப் பிரதேச பா.ஜ.க அமைச்சர் பேசியிருக்கிறார்.கொலம்பஸ்

பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இதனைத் தெரிவித்த மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர், ``அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ் என்பது இந்தியாவில் தேவையில்லாமல் கற்பிக்கப்படும் ஒரு பொய். இந்திய மாணவர்களுக்கு இது முற்றிலும் பொருத்தமற்றது.

அப்படியிருந்தும், அவர்கள் அதைக் கற்பிக்கப்போகிறார்கள் என்றால், கொலம்பஸுக்குப் பிறகு வந்தவர்கள் அங்கிருந்த பழங்குடியினத்தவர்களை எவ்வாறு அழித்தார்கள், அவர்களை எவ்வாறு மதமாற்றம் செய்தார்கள் என்பதையும் கற்பிக்க வேண்டும். மேலும், இந்திய மாலுமி ஒருவர் 8-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்குச் சென்று சான் டியாகோவில் பல கோயில்களைக் கட்டினார். நம் முன்னோர்கள் அங்கு சென்றபோது மாயா நாகரிகத்தோடு அவர்களின் கலாசாரத்தை வளர்க்க உதவினர்.ம.பி உயர் கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர்

இந்தியாவின் இந்த சிந்தனை முறை மற்றும் தத்துவத்தை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். எதைக் கற்பித்தாலும் அதைச் சரியாகக் கற்பிக்க வேண்டும். எனவே, அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல, நம் முன்னோர்கள்தான். அதேபோல, இந்திய வர்த்தகரான சாந்தனின் கப்பல் தன்னுடைய கப்பலைவிட 2 முதல் 4 மடங்கு பெரியது என்று வாஸ்கோடகாமா எழுதியிருக்கிறார். சாந்தனைப் பின்தொடர்ந்துதான் வாஸ்கோடகாமா இந்தியா வந்தார். ஆனால், இந்தியாவிற்கான கடல் வழியைக் கண்டுபிடித்தவர் வாஸ்கோடகாமா என்று வரலாற்றாசிரியர்கள் இந்திய மாணவர்களுக்குத் தவறாகக் கற்பித்தனர்." என்று கூறினார்.Kashmir: "கடைசி மூச்சுவரை பாஜக-வின் சித்தாந்தத்தை எதிர்ப்பேன்" -பிணையில் வந்த இன்ஜினியர் ரஷீத் உறுதி


http://dlvr.it/TD6QzW

IPS Finance: கச்சா எண்ணெய் விலை குறைவால் உயரப் போகும் பங்குகள் எவை? | Podcast

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃபைனான்ஸ் நிகழ்ச்சியில் இந்த எபிசோடில், இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி நிஃப்டி 122 புள்ளிகள் சரிந்து 24,918 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 398 புள்ளிகள் சரிந்து 81,523 புள்ளிகளோடும் நிறைவடைந்திருக்கின்றன.

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃபைனான்ஸின் இந்த எபிசோடில்,

"China-வின் தாக்கம்... இந்தியப் பங்குச்சந்தை சரிவுக்குக் காரணமா?

வரலாற்றுச் சாதனை படைத்த BAJAJ HOUSING IPO

China தாக்கம் இந்தியப் பங்குச்சந்தையில் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்துமா?

பொருளாதார விமர்சகர் வ. நாகப்பன் விரிவாகப் பேசியுள்ளார். அவற்றை முழுமையாகக் காண லிங்கை கிளிக் செய்யவும். 
https://open.spotify.com/episode/5lZOlU62MRrifbxPy50B0v?si=7bd8bb316e474da3&nd=1&dlsi=5326544c1f084e5f />

http://dlvr.it/TD63KF

Trump Vs Kamala: `புதினுக்கு மதிய உணவு; கிம்-க்கு காதல் கடிதம்' - விவாதத்தில் ட்ரம்பை தாக்கிய கமலா

ட்ரம்ப் vs கமலா

அமெரிக்க அதிபர் தேர்தலில் மோதும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேருக்கு நேர் விவாதம் செய்யும் நிகழ்வு இன்று நடந்தது.

இதில் ஆப்கானிஸ்தான் போர், ரஷ்யா-உக்ரைன் போர் என இரு தரப்பினருக்கும் வெவ்வேறு கருத்து இருக்கும் பல விஷங்களைப் பற்றி வாதிட்டனர்.

ட்ரம்ப் தனது ஆட்சியில் ஒரு சர்வாதிகாரியாக உருவாக நினைத்தார் எனக் குற்றம்சாட்டினார் ஹாரிஸ்.

ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைன் வெற்றி பெற விரும்புகிறீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்ட போது ட்ரம்ப், "நான் போர் முடியவேண்டும் என விரும்புகிறேன்" என்று பதிலளித்தார். "போர் நிறுத்தப்பட வேண்டும். எனக்கு புதினையும் ஜொலன்ஸ்கியையும் நன்றாகத் தெரியும். எனக்கு இருவரிடமும் நல்ல உறவு இருக்கிறது. என்னால் இதை முடிக்க முடியும்" என்றார் ட்ரம்ப்.

ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சு வார்த்தை மூலம் சமாதானத்தை உருவாக்க முடியும் என ட்ரம்ப் தெரிவித்தபோது, ட்ரம்ப் சர்வாதிகாரிகளைப் போற்றுவதாக வாதாடினார் கமலாஹாரிஸ்.trump with kim

"போரின் எதார்த்தத்திலிருந்து திசைதிருப்பப் பார்க்கிறார் ட்ரம்ப். அவர் சர்வாதிகாரிகளைப் போற்றுகிறார். கிம் ஜாங் உன்னுடன் காதல் கடிதங்களைப் பரிமாறினார். அதனால்தான் பல இராணுவத் தலைவர்கள் என்னிடம் `நீங்கள் ஒரு அவமானம்' என்றனர்" என்றார் ஹாரிஸ்.

மேலும், "ட்ரம்ப் அதிபராக இருந்திருந்தால் புதின் இந்நேரம் கீவில் அமர்ந்திருப்பார். ஐரோப்பாவின் மற்ற நாடுகளைக் குறிவைத்திருப்பார். ஒரு சர்வாதிகாரியுடன் நட்பு கொள்வதை நீங்கள் என்னவாக நினைக்கிறீர்கள், புதின் உங்களை மதிய உணவாகச் சாப்பிட்டுவிடுவார்" என ட்ரம்ப்பைத் தாக்கினார்.

இதற்குப் பதிலடி கொடுக்க, "புதின் உங்களை ஆதரித்தார். நான் இருந்திருந்தால் அப்படி நடந்திருக்காது. உங்களால் (கமலா, ஜோ பைடன்) ஐரோப்பிய நாடுகளுடன் என்னைப்போல உறுதியாகப் பேச முடியவில்லை. நாம் மொத்த ஐரோப்பாவையும் விட அதிக டாலர்கள் செலவிட்டுக்கொண்டிருக்கிறோம்" என்றார் ட்ரம்ப்.

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பு கமலா ஹாரிஸ் உக்ரைன் சென்றதையும் குறிப்பிட்டார்.கமலா ஹாரிஸ்

மேலும் அவர், "பைடன் இதுவரை புதினுக்கு ஒரு ஃபோன்கால் கூடச் செய்யவில்லை. நான் வெற்றிபெற்றால் இருவருடனும் பேசுவேன். இது நிறுத்தப்பட வேண்டிய போர், மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர். பைடனுக்குப் போரை எப்படி நிறுத்துவது என்றோ, புதினுடன் எப்படிப் பேசுவது என்றோத் தெரியாது. நாம் உலகப்போருடன் விளையாடிக்கொண்டிருக்கிறோம். நம் அதிபருக்கு (பைடன்) அவர் உயிருடன் இருப்பதேத் தெரியாது" என்றார் ட்ரம்ப்.

அதற்கு பதிலளித்த கமலா ஹாரிஸ், "நீங்கள் மோதுவது பைடனுக்கு எதிராக அல்ல, எனக்கு எதிராக" என்றார் காட்டமாக.

மேலும் ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த கமலா, "நான் என்ன நடந்தது என்று விளக்குகிறேன். உக்ரைனில் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்து உரையாடினேன். பின்னர் நேட்டோவின் கிழக்கு படையைச் சந்தித்தோம். எங்கள் ஆதரவினால்தான் இன்று உக்ரைன் ஒரு சுதந்திர இறையாண்மை கொண்ட நாடாக நிற்கிறது" என்றார்.

"அவர்கள் அவரை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார்கள். அவர் தூதராகச் சென்ற சில நாட்களில் போர் தொடங்கியது. அவர் பேச்சுவார்த்தைகளில் மோசமானவர் போல" எனக் கமலா ஹாரிஸை பதிலுக்கு தாக்கினார் ட்ரம்ப்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...



இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYApple: 'டெக்னாலஜி காட்டாற்றில் அசராத ஆலமரம்' - Steve Jobs சந்தித்த சோதனைகளும், சாதனைகளும்!


http://dlvr.it/TD5MDq

Tuesday, 10 September 2024

Apple: 'டெக்னாலஜி காட்டாற்றில் அசராத ஆலமரம்' - Steve Jobs சந்தித்த சோதனைகளும், சாதனைகளும்!

இன்றைய டெக்னாலஜி உலகின் ஜாம்பவான் ஆப்பிள் நிறுவனம். வெற்றிகரமான ஒரு நிறுவனத்துக்கு உதாரணமாகக் காட்டப்படுகிறது.

"புரட்சி என்பது தானாக மரத்திலிருந்து விழும் ஆப்பிள் அல்ல. அதை நாம்தான் விழச் செய்ய வேண்டும்." என்பார் சேகுவேரா. ஆப்பிள் என்ற டெக்னாலஜி புரட்சியை விழச் செய்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ்!

ஜாப்ஸ் தனது ஐடியாக்களுக்காகவும், அர்ப்பணிப்புக்காகவும் அறியப்படுபவர். ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கியபோது அதன் மார்கெட்டிங்கில்தான் அதிக கவனம் செலுத்தினார். கணினி உருவாக்கத்தைப் பார்த்துக்கொண்டவர் ஸ்டீவ் வோஸ்னியாக்!

ஆப்பிள் நிறுவனம்

ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் இணைந்து ரொனால்ட் வெய்ன் என்பவரின் துணையுடன் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினர்.

எப்போதும் புதுமையான விஷயங்களின் மேல் நம்பிக்கை வைப்பவர் ஜாப்ஸ். ஒரு கண்டுபிடிப்பு உலகை மாற்றிவிடும் என நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது சாகச மனப்பான்மை அவருக்குப் பிரச்னைகளையும் கொடுத்தது.ஆப்பிள் நிறுவனம்

இன்று அமோகமாக விற்பனையாகி வரும் மேக் கணினியின் முதல் வெர்ஷன் The Macintosh computer 1984 இல் வெளியானது. இதுதான் Mouse-ஐ கம்பியூட்டரின் இன்றியமையாத பாகமாக அமைத்தது. ஆனால் விற்பனையில் கோட்டைவிட்டது.

மேக்கின் தோல்வி ஆப்பிளின் இயக்குநர்களை ஸ்டீவ் ஜாப்ஸுக்கு எதிராகத் திருப்பியது. மேலும் ஜாப்ஸின் இயல்பு மற்ற தொழில்முனைவோர்களிடம் இருந்து வித்தியாசமாக இருந்ததாலும், அவரது சாகச மனப்பான்மையாலும் இயக்குநர்கள் அவரை நிறுவனத்திலிருந்து வெளியேற்ற முடிவு செய்தனர்.

ஸ்டீவ் ஜாப்ஸ் நெக்ஸ்ட் என்ற மற்றொரு கணினி நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஜாப்ஸ் தனது நிறுவனத் தயாரிப்புகளை வெறும் கேட்ஜெட்டாக இல்லாமல், கலைப்படைப்பாகப் பார்த்தவர். அதே நேரத்தில் அவர் ஒரு பெர்ஃபெக்‌ஷனிஸ்டும் கூட. தான் களமிறங்கும் இடம் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என நினைத்தார். அப்படியே ஆப்பிளுக்கு 1997ல் சி.இ.ஓவாக ரீ-எண்ட்ரி கொடுத்தார்!

ஆப்பிளின் இரண்டாம் ஆட்டம்

ஜாப்ஸின் வெளியேற்றத்துக்குப் பிறகு ஆப்பிள் நிறுவனம் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் திணறியது. வெற்றியோ, தோல்வியோ, "இதுதான் வழி என் பின்னால் வாருங்கள்" எனச் சொல்லும் தலைவன் இல்லாமல் போனதுதான் காரணம். ஸ்டீவ் ஜாப்ஸ்

மைக்கேல் ஸ்பின்ட்லெர், ஜான் ஸ்கல்லி, கில் அமெலியோ என ஆப்பிளின் சி.இ.ஓ-வாக பதவியேற்றவர்கள் சொதப்பினர். இயக்குநர்களுக்குள்ளேயே யார் ஆதிக்கம் செலுத்துவது என முட்டல் மோதல்கள்.

மைக்ரோசாஃப்ட், டெல், ஐபிஎம் நிறுவனங்கள் அசுர வளர்ச்சி பெற்றன. சந்தையில் ஆப்பிளின் இடம் கேள்விக்குறியானது. திறமையான ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறினர். 1996ம் ஆண்டு ஜாப்ஸின் நெக்ஸ்ட் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் ஜாப்ஸ் மீண்டும் நிறுவனத்துக்குள் வந்தார். ஆப்பிளின் இரண்டாம் ஆட்டம் தொடங்கியது.

புதுமைகளை வரவேற்ற ஜாப்ஸ், நிறுவனத்தின் வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்களுடன் அதிக நேரம் செலவிட்டார். ஐமேக், ஐபுக் என இரண்டு தயாரிப்புகள் சந்தையைத் திரும்பிப் பார்க்க வைத்தன. ஐ-டியூன்ஸ், ஐ-பாட் இளைஞர்களின் உள்ளங்கை அரவணைப்பைப் பெற்றன.

மேக் ஓஎஸ் எக்ஸ் (Mac OS X), ஆப்பிள் ஸ்டோர் அறிமுகப்படுத்தப்பட்டு ஆப்பிள் தயாரிப்புகள் புத்துயிர் பெற்றது. ஃபைனல் கட், லாஜிக் ஆடியோ நிறுவனங்களை ஆப்பிள் கைப்பற்றியது. இதனால் இன்றுவரை பொழுதுபோக்குத் துறை நிறுவனங்களுக்கு ஆப்பிள் கணினி இன்றியமையாததாக விளங்குகிறது.இந்தியாவில் முதல் ஆப்பிள் ஸ்டோர்!

புற்றுநோய்

காலத்தின் வேகத்துக்கும், டெக்னாலஜியின் வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து ஓடும் மாரத்தான் வீரராக மாறினார் ஸ்டீவ் ஜாப்ஸ். அவர் கால்களுக்கு வேகத் தடை போட்டது புற்றுநோய். 2003ம் ஆண்டு ஜாப்ஸின் கணையத்தில் புற்றுநோய் கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்றுச் சிகிச்சை என ஆண்டுகள் கடந்தன. ஆப்பிள் அசைக்க முடியாத விருட்சமாக வளர்ந்திருந்தது. 2011ம் ஆண்டு சி.இ.ஓ பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் ஜாப்ஸ். அக்டோபர் 5, 2011 மரணமடைந்தார்.

டிம் குக்

தனது நிர்வாகத்தில் சி.ஓ.ஓ பதவியிலிருந்த டிம் குக்கை பரிந்துரைத்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். அதனை இயக்குநர்கள் குழுவும் ஏற்றது. ஆப்பிளின் வரலாறு என்பதை ஸ்டீவ் ஜாப்ஸின் கதையிலிருந்து பிரித்துவிட முடியாது. ஸ்டீவைப் போலவே நிறுவனத்துக்காகத் தன்னை ஒப்புக்கொடுத்து வளர்ந்தவர் டிம் குக். ஆனால் இவர் ஸ்டீவைப் போலக் கலை நயமிக்கவரோ, புதுமையை விரும்புபவரோ அல்ல.

டிம் குக் ஒரு ராஜதந்திரி. அமெரிக்காவும் சீனாவும் அரசியல் களத்தில் இரு துருவங்களாக மோதிக்கொண்ட போதும் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு இரண்டு நாடும் ஆதரவளிக்கும்படி பார்த்துக்கொண்டார். டிம் குக் (ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ-)

2000களில் ஆப்பிள் தொழிற்சாலையைச் சீனாவில் அமைத்ததிலும் ஆசியாவில் ஆப்பிள் சந்தையை விரிவுபடுத்தியதிலும் டிம்மின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

நிறுவனர்-தலைவர் என்பவர்தான் ஒரு நிறுவனத்தின் ஆணிவேர். அவருக்குப் பிறகு அது சரிந்துவிடாமல் காத்தவர் டிம். அதற்காக மிகுந்த கண்டிப்புடன் நிர்வாகப் பணிகளை மேற்கொண்டார்.

புதுமைகளை உருவாக்குவதை விட ஜாப்ஸின் சாயலுடன் வெளிவந்த தயாரிப்புகளை மேலும் மேலும் சீர் செய்து மார்கெட்டின் உச்சத்தில் வைத்திருப்பதிலேயே கவனம் செலுத்தினார். ஆப்பிள் தயாரிப்புகள் மினிமலாக, சிம்பிளாக இருப்பதில் உறுதியாக இருந்தார். தங்களால் மிகச் சிறப்பாக வழங்க முடியாத தயாரிப்புகளை வெளியிடாமல் இருப்பது ஆப்பிளின் பாலிசி!

ஆப்பிளின் இன்றைய சந்தை மதிப்பு

அப்படியிருந்தும் குறைந்தபட்சம் தங்கள் போட்டியாளர்களை விட 2 ஆண்டுகள் முன்னதாகக் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நிறுவனமாகத் திகழ்கிறது ஆப்பிள். ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த ஆண்டு ஆப்பிளின் சந்தை மதிப்பு 348 பில்லியன் டாலராக இருந்தது. இன்றைய சந்தை மதிப்பு 3.36 ட்ரில்லியன் டாலர்கள்! இந்த உச்சத்தை எட்டச் செய்தவர் டிம் குக்.

2014ம் ஆண்டு தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்பதைப் பெருமையுடன் அறிவித்தார் டிம். அதற்காக எந்த மோசமான எதிர்வினையும் எழாதபடி பார்த்துக்கொண்டார். எல்.ஜி.பி.டி,க்யூ சமூகத்தின் அளப்பரிய ஆதரவையும் பெற்றார்.

ஆப்பிள் நிறுவனம் தன்னை எப்போதும் ஒரு பிரிமியர் பிராண்டாக நிலைநிறுத்திக்கொள்வதும், எத்தகைய சரிவிலும் பிடிவாதமாகத் தன்னிலை மாறாமல் இருப்பதுமே அதன் வளர்ச்சிக்கு அச்சாணி, இன்றைய உலகில் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒவ்வொன்றும் தொழில்நுட்ப புரட்சிக்கான விதைகள்!


http://dlvr.it/TD3kX9

Monday, 9 September 2024

Rahul Gandhi: 'பாரத் ஜோடோ, ஜி.எஸ்.டி, AI, தமிழ்நாடு' - அமெரிக்க மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக நேற்று (செப்டம்பர் 8) அமெரிக்கா சென்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரானதும் ராகுல் காந்தி மேற்கொள்ளும் முதல் வெளிநாடு பயணம் இது. பயணத்தின் முதல் நாளே, டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடினார். அந்த உரையாடல் இதோ...எதிர்க்கட்சி தலைவரின் அன்றாட பணி என்ன?

எதிர்க்கட்சி தலைவரின் அன்றாட பணி என்ன?

எதிர்க்கட்சியின் 'இதயமே' மக்களின் குரலை எடுத்துச் சொல்வதில்தான் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராகத் தனிநபர், குழு, தொழில்துறை, விவசாயம் ஆகியவற்றின் நலனுக்குக் குரல் எழுப்ப வேண்டும். எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் அதைத் தெளிவாகக் கேட்டு, கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசியலுக்குப் புதிதாக வரும்போது, ஒரு பிரச்னை வந்தால் அது அவ்வளவு தெளிவாகத் தெரியாது. அந்தப் பிரச்னைக்குள் ஆழமாகச் செல்லும்போது, அது சம்மந்தப்பட்ட அனைத்தும் தெரியவரும்.

அடுத்து நாடாளுமன்ற நேரங்களில், அங்கே சொல்ல வேண்டும். அது ஒரு போர்க்களம்... வார்த்தைகளின் போர்க்களம்... ஐடியாக்களின் போர்க்களம். மேலும் தினமும் கட்சி ஆட்கள் தொடங்கி விவசாயிகள், தொழிலதிபர்கள் எனப் பலர் சந்திக்க வருவார்கள். அத்தனை பேர் பேசுவதையும் கவனமாகக் கேட்டு புரிந்துகொள்ள வேண்டும்.

முதல் முறை நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், இப்போதிற்கும் உங்களுக்கும் ஒரு விஷயத்தை அணுகுவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

இப்போது பேசுவதை விட, கவனிப்பது மிக முக்கியம் என்பதை உணர்ந்துள்ளேன். கவனிப்பது என்றால் கேட்பது என்பதில்லை ஒருவர் பேசுவதை அவருடைய இடத்திலிருந்து புரிந்துகொள்வது ஆகும். மேலும் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் முழுவதும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், அனைத்து விஷயங்களுக்கும் போராடாமல் எதற்குப் போராட வேண்டும் என்பதைத் தெரிந்து போராட வேண்டும் என்பதையும் உணர்ந்துள்ளேன்.நீங்கள் விஷயங்களை அணுகுவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

எது முன்னுரிமை?

அரசியலாக இருந்தாலும், பிசினஸாக இருந்தாலும் 'எது செய்யக்கூடாது?' என்பதைத் தெரிந்துக்கொள்வதே சிறந்த தந்திரம்.

'பாரத் ஜோடோ' யாத்திரை பற்றி...

'மக்களுடனான அனைத்து தொடர்புகளும் எங்களுக்கு அடைக்கப்பட்டது. நாங்கள் நாடாளுமன்றத்தில் பேசினோம்; அது ஒளிபரப்பாகவில்லை. மீடியாவுக்கு சென்றபோதும், அது வெளியாகவில்லை. நீதித்துறையில் ஆவணங்களாகச் சமர்ப்பித்தோம், அதுவும் வெளியாகவில்லை. அதனால் எங்களுக்கு எப்படி மக்களை தொடர்புகொள்வது என்றே தெரியவில்லை. அப்போதுதான் மக்களை நேரடியாகச் சந்திக்கலாம் என்ற ஐடியா வந்தது.

எனக்கு முதல் 3-4 நாள்களுக்கு முட்டி வலி இருந்தது. 4,000 கி.மீ என்பது எளிதல்ல... ஆனால் அது எளிதாக முடிந்தது. பாரத் ஜோடோ யாத்திரை பணி, அரசியல், மக்கள் குறித்த என் பார்வையையே மாற்றியது. இந்த யாத்திரை இந்தியாவுக்கு மட்டுமல்ல பல நாடுகளுக்கும் 'அரசியலில் அன்பு' என்ற கருத்தை வெளிக்கொண்டு வந்தது. அது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.பாரத் ஜோடா யாத்திரையும் ஆச்சரிய தருணங்கள்...

பாரத் ஜோடா யாத்திரையில் நடந்த ஆச்சரிய தருணங்கள் பற்றி?

இந்த யாத்திரையில் நான் பேசியதெல்லாம் என்னுடையது அல்ல. மக்கள் என்னிடம் எதைச் சொன்னார்களோ அதைத்தான் பிரதிபலித்தேன். மக்களின் எண்ணங்கள், நாட்டின் எண்ணம் ஆகியவைதான் நான் பேசினேன். அது எதுவும் என்னுடையது அல்ல. ஆரம்பத்தில் சில நாள்கள் நான்தான் பேசுகிறேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு இது போகப் போகத் தான் புரிந்தது.

புத்தர், ராமர், சிவன், மகாத்மா காந்தி போன்றவர்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் 'தாங்கள் யார்' என்பதை மறந்து, மக்களுக்காகப் பணியாற்றினார்கள். இதுதான் இந்திய அரசியல், இவர்கள்தான் இந்தியா தலைவர்கள். இப்படி தான் இந்தியத் தலைவர்கள், அமெரிக்கத் தலைவர்களிடம் இருந்து மாறுபடுகிறார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் பங்கு என்ன?

இங்கிருக்கும் இந்திய இளைஞர்கள்தான் இந்தியாவிற்கும், உலகின் பிற நாடுகளுக்குமான பாலம். அமெரிக்காவில் 'சமத்துவம்' என்பது எங்கும் இருக்கிறது. நான் இங்கு (பல்கலைக்கழகம்) வருவதற்கு முன்பு, ஒரு டிரக் டிரைவரிடம் பேசினேன். அவரிடம், 'உங்களுக்கு இங்கு என்ன பிடித்திருக்கிறது?' என்று கேட்டபோது, 'சமத்துவம்' என்று கூறினார். இது இந்தியாவில் ஒரு டிரக் டிரைவருக்கு சாத்தியப்படாது. அதனால் நீங்கள் (இந்திய இளைஞர்கள்) சமத்துவத்தை இந்தியாவிற்கு எடுத்து வாருங்கள். மேலும் நீங்கள் இருக்கும் நாட்டின் கலாச்சாரம், உங்கள் கலாச்சாரம் ஆகியவற்றை நன்கு தெரிந்துகொண்டு, அதில் நீங்கள் என்ன செய்யலாம் என்பதைத் தெளிவாக யோசியுங்கள்.இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து?

உலகில் எல்லா நாடுகளிலும் வேலைவாய்ப்பு பிரச்னை கிடையாது. மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவில்தான் இந்த பிரச்னை உள்ளது. சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பு பிரச்னை இல்லவே இல்லை.

30, 40, 50களில் அமெரிக்காவிலிருந்து உற்பத்திகள், அதன்பிறகு கொரியா, சீனா போன்ற நாடுகளுக்கு மாற்றப்பட்டது. அதனால்தான் இப்போது சீனாவில் வேலைவாய்ப்பு பிரச்னை இல்லை. எங்கு உற்பத்தி இருக்கிறதோ, அங்குதான் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் நுகர்வுகள்தான் அதிகம் உள்ளது. அதனால்தான் வேலைவாய்ப்பு பிரச்னை இருந்து வருகிறது. இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, இந்தியாவில் உற்பத்தியைக் கொண்டுவர வேண்டும்.

ஏஐ தொழிற்நுட்பம் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் என்று நினைக்கிறீர்களா?

ஒவ்வொரு தொழில்நுட்பம் உருவாகும்போதும் வரும் பேச்சு தான் இது. எந்த தொழில்நுட்பமும் வேலைவாய்ப்புகளைப் பறிக்காது. அது வேறுவிதமான வேலைவாய்ப்புகளைத்தான் உருவாக்கும். அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோமோ, அப்படி அதன் விளைவு நமக்கு கிடைக்கும்.

இந்தியாவில் கல்வியை நவீனமாக்க உங்கள் பிளான் என்ன?

பலரும் இந்தியாவில் திறன் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை, இந்தியாவில் திறனை மதிப்பதில்தான் பிரச்னை உள்ளது. இந்தியாவில் திறன் மற்றும் கல்வி இரண்டும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகிறது. இது இரண்டும் கல்வியை நவீனமாக்க இணைக்கப்பட வேண்டும். இந்தியாவில் கல்வியை நவீனமாக்க உங்கள் பிளான் என்ன?

உற்பத்தி தொழில்துறையில் என்ன முன்னேற்றம் வேண்டும்?

இது அவசியமில்லை என்ற பெரும்பாலான இந்தியர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் வளர்ச்சிக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும். பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவில் எங்குமே உற்பத்தி நடக்கவில்லை என்று கூறமுடியாது. தமிழ்நாடு, கர்நாடகா, பூனா ஆகிய பகுதிகளில் நடந்துகொண்டுதான் உள்ளது. இவை மிகச்சிறந்த உதாரணம்.

இந்தியாவில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு பொருள் பிரபலம். அதை வைத்தே அந்தந்த மாவட்டங்களில் உற்பத்தி மேற்கொண்டால் உற்பத்தித்துறை வளரும். ஜி.எஸ்.டி வரியே இந்தியாவில் உற்பத்திக்கு எதிரானது.

இளைஞர்கள் எப்படி பொது சேவையிலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் பங்கு பெற வேண்டும்?

எங்களுடன் வந்து பணிபுரியுங்கள். இது எப்போதும் எளிதாக இருக்காது. எங்களுடம் பணிப்புரிய இன்டர்ன்ஷிப் திட்டங்கள் உள்ளது.

'பாரத் ஜோடா' யாத்திரையை இன்னும் சிறப்பானதாக மாற்ற, என்ன செய்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

அப்படி எதுவும் நான் நினைக்கவில்லை. நாம் எதை செய்தாலும், அதை விட வேறொன்று சிறப்பானதாகத் தோன்றும். அதனால், சிறப்பானது என்ற ஒன்றை யாராலும் செய்ய முடியாது. ஆனால் நாம் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

இளைஞர்கள் பொதுசேவையில் ஈடுப்பட வேண்டுமா? அரசியலில் ஈடுபட வேண்டுமா?

உங்களுக்கு எது பிடிக்குமோ, அதை செய்யுங்கள். உங்களுக்கு எது பிடிக்குமோ, அதை செய்யுங்கள்.

ஏழ்மை பக்கம் இருக்கும் இந்தியர்களும் வளர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் திறன்களை அழிப்பது அதிகம் நடந்துவருகிறது. அதை நிறுத்த வேண்டும். மேலும் திறன்களை வளர்க்க வேண்டும். நிதி உதவிகள் அவர்களுக்கு செய்ய வேண்டும்.

வேலைவாய்ப்பில் பெண்களின் நிலை?

பெண்களை ஆண்கள் நடத்தும்விதம் மாற வேண்டும். அவர்களும் திறன், நிதி போன்றவற்றில் உதவி செய்ய வேண்டும்.


http://dlvr.it/TD14pY

China: அயர்ந்து தூங்கிய முதியவருக்கு அறுவை சிகிச்சை; கரப்பான் பூச்சி செய்த விபரீதம்!

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 58 வயது முதியவர் ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஏதோ ஒன்று அவரின் மூக்கில் ஊர்ந்து செல்வதை உணர்ந்திருக்கிறார். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் தூங்கத் தொடங்கியபோது அசௌகரியமாக உணர்ந்து திடுக்கிட்டு எழுந்திருக்கிறார். அப்போது, அவரின் தொண்டையின் உள்பகுதியில் ஏதோ ஒன்று ஊர்ந்து சென்றிருக்கிறது. ஆனால், அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இந்தச் சம்பவம் நடந்த இரண்டாவது நாள், அவருக்கு மஞ்சள் நிறத்தில் சளி வந்திருக்கிறது.முதியவர்

மருத்துவ பரிசோதனை

மேலும், சுவாசிக்கச் சிரமப்பட்டிருக்கிறார். உடனே அவர், மருத்துவ நிபுணரைச் சிகிச்சைக்காக அணுகியிருக்கிறார். மருத்துவரும், தொண்டை, மூக்கு போன்ற பகுதிகளைச் சோதனை செய்துவிட்டு, "எதுவும் இல்லை எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது." எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும், "எதோ ஒன்று இருக்கிறது...'' என உணர்ந்த அந்த முதியவர், சுவாசக் கோளாறு தொடர்பான தீவிர சிகிச்சைப் பிரிவு சிறப்பு மருத்துவரை அணுகியிருக்கிறார். அந்த மருத்துவர், முதியவரை சி.டி. ஸ்கேன் செய்து சோதித்திருக்கிறார். அப்போதுதான், வலது மார்பு கூட்டின் உள்பகுதியில், நுரையீரல் அருகில் ஏதோ ஒன்று இருப்பது தெரியவந்தது.

அறுவை சிகிச்சை

இது தொடர்பாக அந்த முதியவருக்குத் தெரிவித்து, உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக ஒரு கரப்பான் பூச்சி, சளியில் சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் உடனே கரப்பான் பூச்சி இருந்த உள்பகுதியைச் சுத்தம் செய்து, சிகிச்சையளித்தனர். தற்போது அந்த முதியவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்.கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சி மூக்கில் நுழைந்து உடலின் உள்பகுதிக்குச் செல்வதைக் கூட அறியாமல் தூங்கிய அந்த முதியவரின் செய்தி அந்தப் பகுதியில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.


http://dlvr.it/TD14JB

Sunday, 8 September 2024

``இந்தியாவில் வாழ்ந்த தாத்தா பாட்டியின் குணம் இன்றும் என்னுள் வாழ்கிறது..."- கமலா ஹாரிஸ்!

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரமும், அதற்கான ஆயத்தப்பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களம் கண்டுவருகிறார். இவரை எதிர்த்துப் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பும் தீவிரப் பிரசாரத்தின் மூலம் கமலா ஹாரிஸுக்கு பெரும் சவாலாகவே முன்நகர்கிறார்.கமலா ஹாரிஸ்

இந்த நிலையில், கமலா ஹாரிஸ் வாய்ப்பு கிடைக்கும்பொதெல்லாம் தான் வளர்ந்த விதம் குறித்தும், தன்னைச் சுற்றி நிகழ்ந்த அரசியல் குறித்தும் பிரசாரக் களத்தில் பேசிவருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேற்று தேசிய தாத்தா பாட்டிகள் தினம் பல்வேறுநாடுகளில் கொண்டாடப்பட்டது. தன் தாத்தா பாட்டியுடனான தன் சிறுவயது நினைவுகளை கமலா ஹாரிஸ் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், ``நான் சிறுமியாக இருந்தபோது, இந்தியாவில் இருந்த என் தாத்தா பாட்டியை காணச் சென்றிருக்கிறேன். இந்திய சுதந்திரப்போருக்கான இயக்கத்தில் ஒரு அங்கமாக இருந்து செயல்பட்ட ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான என் தாத்தா, என்னை காலை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வார். அப்போதெல்லாம் சமத்துவம், ஊழலுக்கு எதிராக போராடுதல் குறித்தெல்லாம் பேசுவார்.கமலா ஹாரிஸ் தன் தாத்தா பாட்டியுடன்

மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து பெண்களிடம் பேசுவதற்காக, என் பாட்டி, கையில் ஒலிபெருக்கியுடன் இந்தியா முழுவதும் பயணம் செய்தவர். அவர்களின் பொது சேவைக்கான அர்ப்பணிப்பும், சிறந்த எதிர்காலத்திற்காக போராடும் குணமும் இன்றும் என்னுள் வாழ்கிறது. அடுத்த தலைமுறையை வடிவமைக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் உதவும் அனைத்து தாத்தா பாட்டிகளுக்கும் தேசிய தாத்தா பாட்டி தின வாழ்த்துக்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.Rohini: `பாலியல் புகாருக்கு உள்ளானவர்கள் 5 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க தடை' - நடிகை ரோகிணி


http://dlvr.it/TD0SXs

Saturday, 7 September 2024

`உடல்நிலை காரணமாக வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறாரா ஸ்டாலின்?' - இபிஎஸ்-ஸைச் சாடும் ஆர்.எஸ்.பாரதி

"உடல்நிலை சரியில்லாததால் தான் முதலமைச்சர் வெளிநாடு சென்றிருக்கிறார். அதை மறைக்க தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருப்பதாக கூறுகிறார்கள்" என்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

கடந்த வெள்ளிக்கிழமை, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தி.மு.க ஆட்சியில் பெண்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களுக்குமே பாதுகாப்பு இல்லை. பேச்சுவார்த்தை நடத்த சென்ற பெண் போலீஸ் அதிகாரி தாக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் போலீஸாருக்கும் பாதுகாப்பு இல்லை. எடப்பாடி பழனிசாமி

துபாய், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் என முதலமைச்சர் முன்பு சென்ற வெளிநாட்டுப் பயணங்களிலிருந்து, எத்தனை முதலீடுகள் கொண்டு வரப்பட்டது என்ற வெள்ளை அறிக்கையை நாங்கள் கேட்டிருந்தோம். அதற்கு எந்த பதிலும் இல்லை. முதலீடுகள் குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் தொழில் நிறுவனங்களை விஸ்தரிப்பு செய்ய தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை. அதற்காக சிகிச்சை எடுக்க அமெரிக்கா சென்றுள்ளார். அதை மறைக்கத்தான் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் நிறைய பிரச்னைகள் உள்ளன. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டி பொழுதை போக்கி வருகிறார்.

அமைச்சர்களுடன் ஆன்மிகச் சொற்பொழிவாளர் நெருக்கமாக இருந்ததால்தான், அவருக்கு அரசுப் பள்ளிகளில் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது.

நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து சென்னையின் மத்திய பகுதியில் கார் பந்தயம் நடத்துவது அவசியம் தானா? அந்தப் பணத்தில் அம்மா உணவகத்தில் தரமான உணவை வழங்கலாம்" என்று பேசினார்.RS Bharathi: ஆர்.எஸ்.பாரதி

இதற்கு பதிலளிக்கும் விதமாக தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்...

"அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்ததால்தான், அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சையாக பேசியவருக்கு அனுமதி கிடைத்துள்ளது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டுபிடித்திருக்கிறார்.

முன்னாள் முதலமைச்சராக இருந்த நீங்கள் வி.ஐ.பி தானே? ஒரு வி.ஐ.பி-யை பார்க்க நிறைய பேர் வருவார்கள் என்பது அடிப்படை தியரி. பார்க்க வரும் அனைவரின் பின்புலத்தை விசாரித்த பின்னர்தான் அனுமதி அளிப்பார்களா? இதுகூட தெரியாத நீங்கள் எப்படி முதலமைச்சராக இருந்தீர்கள்? இப்போது எப்படி எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறீர்கள்?

அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி மீது நடந்த தாக்குதல் மூலம் போலீஸுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெரிகிறது என எடப்பாடி பழனிசாமி புலம்பியிருக்கிறார். கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவுக்கு அழுத்தம் கொடுத்து தற்கொலைக்கு தள்ளியது யார்?

இந்த மாதிரி உங்கள் ஆட்சியில் போலீஸாரால் பெண்களுக்கு மட்டுமல்லாமல், போலீஸாருக்கும் பாதுகாப்பில்லாமல் போனது பற்றி 'செலக்டிவ் அம்னீஷியா' போல் மறந்துவிட்டதா? உடல்நிலை சரியில்லாததை மறைப்பதற்காக முதலமைச்சர் தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றிருப்பதாக கூறுவதாக அவர் உளறியிருக்கிறார். ஸ்டாலின்

ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துக் காப்பாற்ற வக்கில்லாதவர்கள் முதலமைச்சர் குறித்து பேசாமல் இருப்பது நல்லது. 'இட்லி சாப்பிட்டார்...வார்டுக்கு மாறிவிட்டார்...விரைவில் வீடு திரும்புவார்கள்' என்று அவர்கள் கதைக்கட்டியது போல எங்களுக்கு கதைக் கட்ட தெரியாது. தி.மு.க வெளிப்படையான இயக்கம். ஆனால் திரை மறைவாக செயல்படுவதுதான் அ.தி.மு.க கொள்கை.

முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தால் தினமும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆவது பொறுக்கமுடியாமல் தான் வயிற்றெரிச்சலில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு இருக்கும் பொறாமை நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை. தனது ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்து துறையும் பாழ்படுத்திய அவருக்கு பேச எந்த தகுதியும் கிடையாது. 'நானும் இருக்கிறேன்' என்று காட்ட நடத்தும் பேட்டி நாடகத்தை நிறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார். Mahavishnu: 5 பிரிவுகளில் வழக்கு; ஏர்போர்ட்டில் வைத்து கைது... புழல் சிறையில் அடைக்கப்பட்ட மஹாவிஷ்ணு


http://dlvr.it/TCyq3g

Friday, 6 September 2024

Trump: "நான் அமைக்க இருக்கும் கமிஷனுக்கு தலைமை தாங்க மஸ்க் ஒப்புக்கொண்டுவிட்டார்" - டொனால்ட் ட்ரம்ப்

'பதவி காலம் முடியும்போது டிரம்பின் வயது 82 ஆக இருக்கும். இந்த அதிக வயது பிரதமர் பதவிக்கு சரியானது அல்ல' என்று எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தான், யாரும் எதிர்பார்க்காத சமீபத்திய காம்போவாக அமைந்தது 'டிரம்ப் - மஸ்க்' காம்போ. சமீபத்தில் கூட ட்விட்டர் எக்ஸ் தளத்தில் மஸ்க் ட்ரம்பை பேட்டிக் கண்டிருந்தார்,

இந்த நிலையில், "நான் பதவிக்கு வந்தால் நிதி மோசடிகள் தடுக்கும் வகையில் எலான் மஸ்க் தலைமையில் கமிஷன் அமைப்பேன்" என்று டிரம்ப் நேற்று பேசியுள்ளார்.

நேற்று நியூயார்க்கில் உள்ள எக்கனாமிக் கிளப்பில் பேசும்போது, "நான் அதிபரானால் , பொருள்கள் மற்றும் சேவைகளை அமெரிக்காவிலேயே செய்யும் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்படும்.

I look forward to serving America if the opportunity arises.

No pay, no title, no recognition is needed.
https://t.co/5PSNtjBQn7— Elon Musk (@elonmusk) September 5, 2024

2022-ம் ஆண்டு நடந்த பல மோசடி மற்றும் முறையற்ற பரிவர்த்தனைகளால் சரியாக வரி கட்டுபவர்கள் பல நூறு பில்லியன் டாலர்கள் வரி கட்ட வேண்டியதாகி விட்டது. இது தொடரக்கூடாது. அதனால், இதை நடைமுறைப்படுத்த ஒரு கமிஷன் அமைக்கப்படும். இதற்கு தலைமை தாங்க எலான் மஸ்க் ஒப்புக்கொண்டுவிட்டார். இந்த கமிஷன் ஆறே மாதங்களில் மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் பங்கேற்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், மஸ்க் இந்த கமிஷன் ஐடியா குறித்தும், தான் அதை தலைமை தாங்க விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

நேற்று ட்ரம்ப் கமிஷன் குறித்து பேசியப்பிறகு, எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், "அமெரிக்காவுக்காக சேவைப்புரியும் வாய்ப்பு கிடைத்தால் எனக்கு மிக மகிழ்ச்சி. இதற்கென எனக்கு சம்பளம், பதவி, அங்கீகாரம்' என எதுவும் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...



இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY />

http://dlvr.it/TCv942

Tuesday, 3 September 2024

Tamil News Live Today: America: "மாலையின் அமைதியும்... புதிய கனவுகளும்...!" - ஸ்மார்ட் சைக்கிளில் முதல்வர் ஸ்டாலின்

America: "மாலையின் அமைதியும்... புதிய கனவுகளும்...!" - ஸ்மார்ட் சைக்கிளில் முதல்வர் ஸ்டாலின்



Evening’s calm sets the stage for new dreams. pic.twitter.com/IOqZh5PYLq— M.K.Stalin (@mkstalin) September 4, 2024




முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அரசு முறை பயணமாகத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், சிகாகோ நகரில் உள்ள கடற்கரை ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்மார்ட் பை ஓட்டும் காணொளியை அவரது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "மாலையின் அமைதி புதிய கனவுகளுக்கான அடித்தளம்!" எனத் தலைப்பிட்டுள்ளார்.


http://dlvr.it/TCnXMC

Jaguar: டிரைவர் இல்லாத காரில் பயணித்த முதல்வர்; கோடிகளில் விலை; அப்படி என்ன ஸ்பெஷல்?

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிப்பதற்காக அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள நம் தமிழக முதல்வர் ஸ்டாலின், லேட்டஸ்ட்டான ஒரு காரில் பயணம் செய்வது போன்ற வீடியோ வலைத்தளங்களில் படுவைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது. 

‛காரில் பயணிப்பதெல்லாம் ஒரு விஷயமா?’ என்றால், அது ஒரு டிரைவர்லெஸ் கார் எனும்போது, ஒரு எக்ஸைட்மென்ட் இருக்கத்தானே செய்யும். Stalin Enjoying driverless Car in San Francisco என்கிற பதிவுடன், முதல்வர் ஸ்டாலின் அந்தக் காரின் கோ-டிரைவர் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வதுபோல் இருக்கிறது அந்த வீடியோ. அந்தப் பதிவில் சொல்லப்படுவதுபோல், ஸ்டாலின் என்ஜாய் செய்கிறாரோ இல்லையோ, ஹாரர் படங்களில் வருவதுபோல் அந்தக் காரின் ஸ்டீயரிங் தானாகத் திரும்பி, தானாக ஆக்ஸிலரேட்டர் மிதித்து டிராஃபிக்கை மதித்துக் கிளம்புவது - ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு ஜாலியாகத்தான் இருக்கும்.

Tamil Nadu CM MK Stalin enjoying ride in a driverless Jaguar car after signing MoUs with 7 top giants within 5 days

Mass CM, Mass Style #MKStalinInUSA pic.twitter.com/onR9dTGZMe— Ankit Mayank (@mr_mayank) September 2, 2024

ஸ்டாலின் என்ஜாய் செய்த அந்தக் கார் - ஜாகுவார் நிறுவனத்தின் I-Pace எஸ்யூவி கூபே. ஜாகுவார் லேண்ட்ரோவரும், Waymo என்கிற தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி இருந்தன. அதன் அடிப்படையில் உருவானதுதான் - இந்த வேமோ - ஜாகுவார் ஐ-பேஸ் தானியங்கி எலெக்ட்ரிக் கார். 

இதில் இருப்பது Waymo’s செல்ஃப் டிரைவிங் டெக்னாலஜி. காரின் ரூஃபுக்கு மேலே ரேடார் கருவி கொண்டு இயங்கும் இந்த கார், போக்குவரத்து நெருக்கடியையும், சிக்னல்களையும் ரேடார் மூலம் கணித்து, சென்சார் மூலம் இயங்கும் விதம் அற்புதமாக இருக்கும். இது ஒரு முழு எலெக்ட்ரிக் எஸ்யூவி கூபே. ரேடார் மாதிரி, Light Detection மூலம் இயங்கும் லைடார் (Lidar) லேசர் லைட் தொழில்நுட்பமும் இதில் இருக்கிறது. 

மேலும் இந்தக் காரைச் சுற்றிலும் 30 வகையான பெரிமீட்டர் கேமரா எனும் ஸ்மார்ட் புகைப்படக் கருவிகளை இன்ஸ்டால் செய்துள்ளார்கள். அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் குளிரும் பனியும் அதிகமாக இருக்கும். இதுபோன்ற காலநிலைகளில் கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் துல்லியமாக இல்லாத பட்சத்தில், விபத்துகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

அதற்குத்தான் ஸ்பெஷல் தொழில்நுட்பத்துடன் இயங்குகின்றன இந்த பெரிமீட்டர் கேமராக்கள். வாகனத்துக்கு நெருக்கமாக Moving Objects மற்றும் Non-Movable Objects இருக்கும் பட்சத்தில், இது தானாக பிரேக் பிடிக்கும். 

உதாரணத்துக்கு, இந்தக் காரை டெஸ்ட் செய்யும் ஒரு வீடியோவில் - ஒரு கட்டுமானப் பணியாளர் ஒருவர் சிவப்பு நிற ஸ்டாப் சிக்னலை காட்டுகிறார். அப்போது கார் தானாக நிற்கிறது. அந்த சிக்னலை அவர் திருப்பியவுடன் கார் தானாக நகர்ந்து கிளம்புகிறது. அதேபோல் ஜீப்ரா லைன் க்ராஸிங் இருந்தால், அதற்கு 10 மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே கார் தானாக நிற்பதும் அருமை. 

அமெரிக்காவில் செல்ஃப் டிரைவிங் அட்டானமஸ் கார்களுக்கு டெஸ்லா போன்ற நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்க, ஜாகுவாரும் வேமோவும் இதைப் பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு அமெரிக்கச் சாலைகளில் விட்டிருக்கிறது. டிரைவர் சீட்டில் யாருமே இல்லாத இந்த செல்ஃப் டிரைவிங் கார்களில், பொதுப் போக்குவரத்தைக்கூட லாஞ்ச் செய்திருந்தது வேமோ. ஆப் மூலம் மக்கள் இதை புக் செய்து வாடகை கேப் ஆகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் போக வேண்டிய இடத்தை ஆப்பில் மார்க் செய்துவிட்டு - காரில் பேசாமல் உட்கார்ந்து கொண்டால் போதும் - உங்கள் இறக்கத்தில் தானாக கார் பார்க் ஆகிக் கொள்ளும். Waymo இதற்காகவே ஜாகுவாரிடம் இருந்து 20,000 எலெக்ட்ரிக் கார்களை பர்ச்சேஸ் செய்து, செல்ஃப் டிரைவிங் கார்களாக்கி இருக்கிறது. Jaguar I-Pace

ஆனால், சாலையில் இதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். வேமோவில் பயணித்த வாடிக்கையாளர் ஒருவர், ஒரு பார்க்கிங் ஸ்பாட்டில் சிவப்பு நிற கோன்கள் இருந்ததைக் கண்டு குழம்பிப் போனதாகவும், கார் பார்க் ஆக 15 நிமிடம் எடுத்துக் கொண்டதாகவும் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இன்னொரு வாடிக்கையாளர் - சில விளையாட்டு ஆசாமிகள் வேண்டுமென்றே ஸ்டாப் சிக்னலைக் காட்டி காரைக் குழப்பியதாகவும் சொல்லியிருக்கிறார்.ஆனாலும் டெஸ்லாவை முந்திக் கொண்டு செல்கிறது Waymo என்றும் வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள் மக்கள். அது சரி; இதோட விலை என்னனு கேட்கிறீங்களா? ஒரு சாதாரண ஜாகுவார் ஐ-பேஸ் காரின் எக்ஸ் ஷோரூம் விலை 1.25 கோடி வருகிறது. ரேடார், லைடார், பெரிமீட்டர் கேமரா என்று பல சமாசாரங்கள் இருப்பதால் விலை சுமார் ரூ2.25 கோடி வரும். ஆனால், Waymo இதை விற்பனை செய்யவில்லை. அதனால், இது விற்பனைக்கல்ல!


http://dlvr.it/TClW15

Monday, 2 September 2024

வட கொரியா: ஆயுதங்கள் கொடுத்த கிம்... பதிலுக்கு 24 ஸ்பெஷல் குதிரைகள் வழங்கிய புதின்! - என்ன சிறப்பு?

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 24 குதிரைகளை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுவரும் ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதங்கள் வழங்கியதனால் இந்த பரிசை வழங்கியிருக்கிறார் புதின்.

புதின் வழங்கிய வெள்ளை குதிரைகள் ஆர்லோவ் ட்ரோட்டெர் இனத்தைச் சேர்ந்தவை. இது கொரிய அதிபருக்கு பிடித்த இனமாகும். அரிய வகை குதிரைகளான இவை ரஷ்யாவைச் சேர்ந்தவை. இதன் வேகம் (மணிக்கு 45 கிலோமீட்டர் வரை), ஆற்றல், விவேகம், அழகுக்காக சிறப்பை கொண்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்பும் இதேப்போல 30 குதிரைகள் கொரிய அதிபருக்கு வழங்கப்பட்டன. வடகொரியாவின் அழகிய பேக்டு மலையில் பனிப் பொழிவின் இடையே வெள்ளை குதிரையில் கிம் ஜாங் உன் சவாரி செய்வதுபோன்ற புகைப்படத்தை அரசு ஊடகம் வெளியிட்டது. கிம் - புதின் சந்திப்பு!

வட கொரிய புராணங்களில் சிறகுகள் கொண்ட குதிரைகளான் சோலிமா(Chollima) புகழ்பெற்றது. குதிரைகளை அடையாளமாகப் பயன்படுத்துவதில் கிம் குடும்பத்தினருக்கு தனித்த பாரம்பரியம் இருக்கிறது. கொரிய போருக்குப் பிறகு இழந்த பொருளாதாரத்தை மீட்கும் இயக்கத்துக்கு சோலிமா எனப் பெயரிட்டனர். வட கொரியாவின் சக்தி வாய்ந்த ஏவுகணைக்கும் சோலிமா எனப் பெயர் வைத்திருக்கின்றனர்.

வெள்ளை ஸ்டாலியனில் (இளம் ஆண் குதிரை) கிம் அமர்ந்திருப்பது அவரது அதிகாரத்தையும், வல்லமையையும் நிலைநாட்டுவதன் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் ரஷ்யா - வடகொரியா ராணுவ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக 24 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியா சென்றார் ரஷ்ய அதிபர் புதின். அப்போது புதினுக்கு அன்பளிப்பாக புங்சன் நாய்களை வழங்கினார் கிம். இதற்கு பதிலாக 447 ஆடுகளை வட கொரியாவுக்கு அனுப்பி வைத்தார் புதின்.

அமெரிக்காவின் எதிராளிகளான இரண்டு அதிபர்களும் விலங்குகளைப் பகிர்ந்துகொள்வது, இரு நாட்டுக்குமான உறவின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88ரஷ்யாவுடன் ஆயுதப் பேச்சுவார்த்தை, பரிசுகளுடன் நாடு திரும்பிய கிம் - சர்வதேச அரசியலில் புது `புயல்!'


http://dlvr.it/TChW6B

Tuesday, 27 August 2024

Sweet Revenge: ரூ.70 லட்சம்; 2 மணி நேரம் எண்ணிய கடை ஊழியர்கள்; இறுதியில் ட்விஸ்ட் வைத்த பெண் | Viral

சீனாவின் சோங்கிங் பகுதியில் `ஸ்டார்லைட் ப்ளேஸ்' ஷாப்பிங் சென்டர் இருக்கிறது. இந்த ஷாப்பிங் சென்டரில் ஒருவர் தன் நண்பர்களுடன் 6,00,000 யுவான் (ரூ.70 லட்சத்திற்கு மேல்) ரொக்கமாகப் பணம் செலுத்தி, பொருள்களை வாங்கியிருக்கிறார். அந்தப் பணத்தை கடை ஊழியர்கள் சுமார் 2 மணி நேரமாக எண்ணி முடித்திருக்கிறார்கள். அவர்கள் முழு பணத்தையும் எண்ணி முடித்ததும், அந்தப் பெண், பொருள்வாங்கும் எண்ணம் மாறிவிட்டதாகக் கூறி, அந்தப் பணத்தை திரும்பப் பெற்றிருக்கிறார். இது அந்தக் கடைக்காரர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.சீன யுவான்

இது தொடர்பாக அந்தப் பெண், சமூக வலைதளத்தில் எழுதியிருக்கிறார். அதில், ``இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் அந்தக் கடைக்குச் சென்றிருக்கிறேன். அப்போது அந்தக் கடையில் இருந்த ஊழியர்கள் மரியாதையாக நடந்து கொள்ளவில்லை. தண்ணீர் கேட்டதற்குக்கூட தராமல், காலாவதியான பொருள்களைக் காண்பித்து அவமரியாதையாக நடந்து கொண்டார்கள். இது தொடர்பாக மேலாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

எனவே, இதற்குப் பழிவாங்கும் விதமாகவே இது போன்று நடந்துகொண்டேன். இறுதியில், அந்தக் கடை உரிமையாளரைச் சந்தித்துப் பேசியிருந்தேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பெண்ணின் பழிவாங்கும் சதி இணையத்தில் பெரும் விவாதமானது. அதே கடையில் மோசமான அனுபவம் பெற்ற ஒரு பயனர், "இந்த ஆண்டின் மிகவும் திருப்திகரமான பழிவாங்கல்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்... பாராட்டிய ஜோ பைடன் - அமைதி திரும்பும் நடவடிக்கைக்கு உறுதி!


http://dlvr.it/TCQlb7

Thursday, 22 August 2024

1 Hard drive-ல் 13,000 நிர்வாண வீடியோக்கள்; US-ல் கைதான இந்திய மருத்துவர் - `பகீர்' குற்றப் பின்னணி!

அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தின் ஓக்லாண்ட் கவுன்ட்டியில் மருத்துவராகப் பணியாற்றி வந்தவர் ஏஜாஸ் (40). இந்திய குடிமகனான இவர், 2011-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர்மீது பாலியல் தொல்லை ரீதியான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் அடிப்படையில், காவல்துறை விசாரணையை தொடங்கியது. அதில்தான் பல அதிர்ச்சிகர செய்திகள் வெளியாகியிருக்கின்றன.ரகசிய கேமரா

இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான ஏஜாஸ், நீச்சல் குளத்தில் உடை மாற்றும் அறைகள், குளியலறைகள், மருத்துவமனை அறைகள், அலமாரிகள், படுக்கையறைகள், அவரால் இலகுவாக அணுகக்கூடிய குடியிருப்புகளுக்குள் உள்ள குளியலறைகள் ஆகிய பல்வேறு இடங்களில் ரகசிய கேமராக்களை பொருத்தியிருக்கிறார். அதன் மூலம் 2 வயது சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரின் நிர்வணப் புகைப்படங்களையும் சேகரித்திருக்கிறார்.

இது தொடர்பாக விசாரணைய தீவிரப்படுத்திய காவல்துறை, இவர்மீது குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது, மருத்துவமனையில் நோயாளி ஒருவரிடம் அத்துமீறியது, நிர்வாணப் படங்களை சேகரித்து வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதிந்து, அவரைக் கைதுசெய்திருக்கிறது. ஆறு கம்ப்யூட்டர்கள், நான்கு செல்போன்கள், 15 ஹார்டு டிரைவ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர்.மருத்துவர் ஏஜாஸ்

ஒரு ஹார்ட் டிரைவில் மட்டும் 13,000 வீடியோக்கள் இருந்ததாக காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது. மேலும், இந்தச் சாதனங்களில் உள்ள அனைத்தையும், சாத்தியமான கிளவுட் சேமிப்பகத்தையும் ஆய்வாளர்கள் பரிசோதனை செய்துவருகின்றனர். மேலும், இந்த வீடியோக்கள் மற்றவர்களுக்கும் பரப்பப்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, மருத்துவரின் இந்தக் குற்றச் செயல் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.TVK Vijay: `இதுவரை நமக்காக உழைத்தோம், இனி...' - தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுக விழாவில் விஜய் உரை


http://dlvr.it/TCF4zS

Tuesday, 20 August 2024

`78 வயதான கோடீஸ்வரர் ஒருவர், கமலா ஹாரிஸிடம் தோற்றுவிடுவோமோ என்று பயப்படுவதால்..!" - ஒபாமா உரை

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. ஜோ பைடன், கமலா ஹாரிஸை அடுத்த அதிபர் வேட்பாளாராக முன்னிறுத்தியதிலிருந்து, அவருக்கான ஆதரவும் அதிகரித்து வருகிறது. அதே நேரம், கமலா ஹாரிஸை எதிர்த்து களமிறங்கியிருக்கும் டொனால்ட் ட்ரம்பும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

இந்த நிலையில், ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, ``புதிய அத்தியாயத்துக்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது. அதிபர் தேர்தல் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸிடம் கட்சியின் ஜோதி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜனநாயகக் கட்சியினருக்கான வேலை இன்னும் முடியவில்லை.கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தல் மிகவும் கடுமையான போட்டியாக இருக்கும். கடந்த சில வாரங்களாக நம்மால் உருவாக்க முடியாத அளவிலான ஆற்றலை பேரணிகள், பிரசாரங்களுக்காக உருவாக்கியிருக்கிறோம். ஆதனால் தேர்தல் இறுக்கமாக நடக்கலாம். கமலா ஹாரிஸ் வங்கிகளையும், குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களையும் தொடர்ந்து கண்காணித்து பின்தொடர்ந்தார். வீட்டு அடமான நெருக்கடியில் சிக்கிய வீட்டு உரிமையாளர்களுக்கு, நியாயமான தீர்வு கிடைப்பதை உறுதிசெய்ய என்னையும் எனது நிர்வாகத்தையும் மிகவும் கடினமாக செயல்படத் தூண்டினார்.

அதனால், கமலா ஹாரிஸ் மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்துவார் என நம்புகிறோம். தன் சொந்த வாக்காளர்களை மட்டும் திருப்திபடுத்த முயலமாட்டார். தனக்கு கட்டுப்பட மறுப்பவர்களை தண்டிக்கமாட்டார். எனவே, அமெரிக்காவின் எதிர்காலத்துக்காக வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன். அதிபர் தேர்தலில் போட்டியிடும் 78 வயதான கோடீஸ்வரர் ஒருவர், கமலா ஹாரிஸிடம் தோற்றுவிடுவோமோ என்று பயப்படுவதால், அவரின் பிரசார களம் உண்மையில் மோசமாகி வருகிறது.ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை எனது நண்பர் என்று அழைப்பதில் பெருமையடைகிறேன். அரசியலில் மிக முக்கியமான காரியத்தைச் செய்வதில் தன்னலமற்றவர். நாட்டின் நலனுக்காக தனது சொந்த லட்சியத்தை ஒதுக்கி வைப்பவர். பெரும் ஆபத்து நேரத்தில், ஜனநாயகத்தை பாதுகாத்த ஒரு தலைசிறந்த ஜனாதிபதியாக ஜோ பைடனை வரலாறு நினைவு கூறும். அவரை எனது ஜனாதிபதி என்று அழைப்பதிலும், என் நண்பர் என அழைப்பதிலும் நான் பெருமைப்படுகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88`இளம் பெண்கள் பாலியல் விருப்பங்களை அடக்க வேண்டும்’ - உயர் நீதிமன்ற கருத்தை நீக்கிய உச்ச நீதிமன்றம்


http://dlvr.it/TC9jL6

US Democratic Event: `ஜோ, உங்களின் தலைமைக்கும் சேவைக்கும் நன்றி...' - பைடனிடம் கூறிய கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவில் இன்னும் மூன்று மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதேசமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், அவரின் சமீபகால உடல்நல தளர்வு, ஊடக நேர்காணல்களில் உளறுவது போன்ற செயல்கள் விமர்சனத்துக்குள்ளாகவே, துணை அதிபர் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.ஜோ பைடன்

கமலா ஹாரிஸ் Vs ட்ரம்ப் என்ற தேர்தல் களம் சூழலில், கமலா ஹாரிஸ் வெற்றிபெற்று அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபர் என்ற சாதனை படைப்பார் என ஆளும் ஜனநாயக கட்சியினர் நம்புகின்றனர். இந்த நிலையில், நாட்டுக்குப் பணியாற்றியதற்காக பைடனுக்கு கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்திருக்கிறார்.

சிகாகோவில் நேற்று தொடங்கிய ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் முதல்நாளில் உரையாற்றிய கமலா ஹாரிஸ், ``உங்களின் வரலாற்றுத் தலைமைக்கு நன்றி ஜோ. வாழ்நாள் முழுவதும் நம் நாட்டுக்கு சேவை செய்ததற்காக என்றென்றும் உங்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.கமலா ஹாரிஸ்

நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் இங்கு வந்திருக்கிறோம். நவம்பரிலும் நாம் ஒன்று கூடுவோம் நாங்கள் முன்னேறி வருகிறோம் என்பதை ஒரே குரலில் அறிவிப்போம். போராடும்போது வெற்றி பெறுவோம் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்" என்றார்.கமலா ஹாரிஸ்

வழக்கமாக இது போன்ற தேசிய மாநாட்டில் அதிபர் வேட்பாளர்கள் கடைசி நாளில் உரையாற்றுவார்கள் என்ற சூழலில், வழக்கத்துக்கு மாறாக கமலா ஹாரிஸ் இவ்வாறு உரையாற்றியது மக்களிடமிருந்து பெரும் ஆரவாரத்தைப் பெற்றது. இந்த மாநாடு ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.US Election: `எலான் மஸ்க்குக்கு அமைச்சர் பதவியா..!' - க்ரீன் சிக்னல் காட்டிய ட்ரம்ப்!


http://dlvr.it/TC81Jp

Monday, 19 August 2024

ஒலிம்பிக் பதக்கம் வென்ற கையோடு உணவக வேலைக்குத் திரும்பிய வீராங்கனை! என்ன காரணம்?

சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக், நாடு திரும்பியதும் மீண்டும் தனது உணவகப் பணியைத் தொடர்கிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. எப்போதும் போல தடகள போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி பதக்கப் பட்டியலில் முன்னிலை வகிக்கும் சீனா, இம்முறை 2வது இடத்தைப் பெற்றது. அந்த நாடு 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களை அள்ளியது. சீன வீராங்கனை சோ யாக்Doctor Vikatan: கால்வலியைப் போக்குமா MCR செருப்புகள்?

சீனாவைச் சேர்ந்த 18 வயதே நிரம்பிய வீராங்கனை சோ யாக் (Zhou Yaqin), ஜிம்னாஸ்டிக்ஸில் பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பதக்கம் அணிவிப்பு நிகழ்வின்போது போடியத்தில் அதே பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற இத்தாலி வீராங்கனைகள் பதக்கத்தைக் கடித்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க, அதைப் பார்த்து அழகான ரியாக்‌ஷன் கொடுத்திருந்தார் சோ யாக். அந்தக் காட்சிகள் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. சீன வீராங்கனையின் புன்னகையை பலரும் ரசித்து பாராட்டினர்.

இந்த நிலையில், வெள்ளிப் பதக்கத்துடன் நாடு திரும்பிய பின்னர் சோ யாக் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார்.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில், வீராங்கனை சோ யாக்கின் பெற்றோர் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். அந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சோ யாக் உணவு பரிமாறும் காட்சி வெளியாகி இருக்கிறது. ஒலிம்பிக் ஜெர்சியை அணிந்தபடி வாடிக்கையாளர்களுக்கு அவர் உணவு பரிமாறி வருகிறார். தங்கள் குடும்பத்தின் உணவகத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் அவர் இதனைச் செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக X சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் வீடியோவை பகிர்ந்துள்ளார். அத்துடன், "அழகான இந்த சீன ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சோ யாக்கினை நினைவிருக்கிறதா? ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு, விடுமுறைக்காக தன் பெற்றோர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். நிச்சயமாக, நீங்கள் அதை விடுமுறை என்று அழைக்க முடியாது. ஏனென்றால் அவர் தன் பெற்றோர் நடத்தும் உணவகத்தில் வேலை செய்ய உதவுகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பயனர் ஒருவர், "யாகின் தனது ஒலிம்பிக் வெற்றியை குடும்பப் பொறுப்புகளுடன் சமநிலைப்படுத்துவதைப் பார்ப்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. அவர் மிகவும் பணிவானவர்!" என்று புகழ்ந்துள்ளார். 1 மாடித்தோட்ட கிட் 450 ரூபாய்... விற்பனையைத் தொடங்கிய தோட்டக்கலைத்துறை! பெறுவது எப்படி?

மற்றொருவர், "கடினமாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றும் உன்னதமான ஒரு வேலை. இதற்காக அந்த வீராங்கனை பெருமைப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொருவர், " இதை நம்ப முடியவில்லை. அப்பெண் மிகவும் அடக்கமானவர். நான் சாப்பிடச் செல்லும் சீன உணவகங்களில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் நிறைய குழந்தைகள் தங்கள் பெற்றோர்/குடும்பத்திற்கு உதவுவதை நான் காண்கிறேன்" என்கிறார்.

ஆனால், "விளையாட்டு உடை அணிந்து உணவு பரிமாறுவதன் மூலம் இது ஒரு சிறந்த சந்தைப்படுத்தல் உத்தி" என்ற கருத்தையும் சிலர் முன்வைக்கிறார்கள்.

Remember that cute Chinese gymnast Zhou Yaqin?
After winning the Olympic silver medal, she has returned to her parents' home for a vacation.
Of course, you can't call it a vacation.
Because she needs to help work in the restaurant run by her parents.pic.twitter.com/MNy7rHLvh2 pic.twitter.com/r15StYuJTO— ShanghaiPanda (@thinking_panda) August 13, 2024


http://dlvr.it/TC7LTB

USA: பிரமாண்ட அரங்கம்; உற்சாக கமலா ஹாரிஸ்; அசத்தல் ஹிலாரி - தொடங்கியது ஜனநாயக கட்சியின் மாநாடு!

கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடு | பைடன்ஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடு | ஹிலாரி கிளின்டன்ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்கமலா ஹாரிஸ்


http://dlvr.it/TC76yP

Thursday, 15 August 2024

குழந்தை திருமணம்: 2000ம் ஆண்டு முதல் 3,00,000 வழக்குகள்; 37 மாகாணங்களில் இன்னும்..! - அமெரிக்கா ஷாக்

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஆப்பிரிக்கா கண்டத்தின் பல நாடுகளிலும் குழந்தை திருமணம் பெரும் சிக்கலாக தொடர்கிறது. அது குறித்துதான் உலக நாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தப் பட்டியலில் 'வல்லரசு நாடு என அறியப்படும் அமெரிக்காவிலும், குழந்தைத் திருமணம் நடந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.குழந்தை திருமணம்

குழந்தை திருமணம் உலகின் பின்தங்கிய பகுதிகளில் மட்டுமே இருக்கும் பிரச்னை என்று பரவலாக நம்பப்பட்டாலும், அமெரிக்காவில் பெரும்பாலான மாகாணங்களில் குழந்தைத் திருமணங்கள் இன்னும் சட்டப்பூர்வமாக உள்ளது. அமெரிக்காவில் இருக்கும் Unchained At Last எனும் அமைப்பு நடத்திய ஆய்வு முடிவில், ``18 வயது பூர்த்தியடையும் முன்பு நடத்தப்படும் குழந்தை திருமணம், கட்டாய திருமணம் போன்றவை 2017-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் 50 மாகணங்களில் சட்டப்பூர்வமாக இருந்தது.

இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராக 2018-ம் ஆண்டு அமெரிக்கன் சமோவாவும், 2020-ல் அமெரிக்க விர்ஜின் தீவு, பென்சில்வேனியா, மினசோட்டா, 2021-ல் ரோட் தீவு, நியூயார்க், 2022-ல் மசாசூசெட்ஸ், வெர்மான்ட், கனெக்டிகட், மெச்சிகன் 2023-ல் வாஷிங்டன், 2024-ல் நியூ ஹாம்ப்ஷயர் ஆகிய பகுதிகளில் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. இருப்பினும், குழந்தை திருமணம் 37 மாகாணங்களில் சட்டப்பூர்வமாக உள்ளது.குழந்தை திருமணம்

2000-ம் ஆண்டு முதல் தற்போது வரை , அமெரிக்காவில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், உட்பட 300,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் நடந்திருக்கிறது. இன்னும் பல அமெரிக்க மாகாணங்ககளில் சட்டப்பூர்வமாக இருக்கும் குழந்தைத் திருமண அனுமதி சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக சிறுமிகள், அதிக பாலியல் வன்முறை சுரண்டல்களையும், சட்டரீதியான பொருளாதார சுரண்டலை எதிர்கொள்கின்றனர். டெக்சாஸ் மாகாணத்தில், 2000-2018 வரை அதிக எண்ணிக்கையிலான குழந்தை திருமணங்கள் (41,774) நடந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து கலிபோர்னியா, புளோரிடா, நெவாடா மற்றும் வட கரோலினா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் குழந்தை திருமணம் குறித்த இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88``சர்வாதிகாரத்தால் தேச பக்தியை எப்படி சிறையிலடைக்க முடியும்?" - சுனிதா கெஜ்ரிவால் காட்டம்


http://dlvr.it/TBy1Dh

Tuesday, 13 August 2024

US Elections: சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்; ட்ரம்பை தொடர்ந்து கமலாவை நேர்காணலுக்கு அழைத்த மஸ்க்!

இன்னும் மூன்று மாதங்களில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான பிரசாரங்களில் இருவரும் ஒருவரையொருவர் சாடிவரும் அதேவேளையில், பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் உதவி ஆகியவற்றின் காரணமாக இருவருக்கெதிராகவும் கணிசமான மக்கள் குரலெழுப்பி வருகின்றனர்.எலான் மஸ்க் - டொனால்ட் ட்ரம்ப்

இவ்வாறிருக்க, X சமூக வளைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், டொனால்ட் ட்ரம்பை நேற்றிரவு X வலைதள ஸ்பேஸஸில் (X spaces) நேர்காணல் செய்திருந்தார். இதில் கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், அவர் ஒரு மூன்றாம் தர வேட்பாளர் என்றும், ஜோ பைடனை விடவும் திறமையற்றவர் என்றார்.

மறுபக்கம் இந்த நேர்காணலை கமலா ஹாரிஸின் பிரசார தரப்பான ஹாரிஸ்-வால்ஸ், ``ட்ரம்பின் முழு பிரசாரமும், எலான் மஸ்க் மற்றும் அவரைப்போன்ற பணக்காரர்களுக்கானது. ட்ரம்பை மீண்டும் அதிபராக்க உதவுவதற்காக மில்லியன் கணக்கான டாலர்களை நன்கொடையாக வழங்குவதாக எலான் மஸ்க் உறுதியளித்தது போதாது போல. அதனால், உலகின் மிகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றான மற்றும் அவர் வாங்கிய சமூக வளைதளத்தை, ட்ரம்பின் வெறுக்கத்தக்க அஜெண்டாவை மில்லியன் கணக்கான பயனர்களுக்கு பரப்ப பயன்படுத்துகிறார்" என்று விமர்சித்தது.கமலா ஹாரிஸ்

இந்த நிலையில், தன்னுடைய X வலைதள ஸ்பேஸஸில் நேர்காணலில் கலந்துகொள்ள கமலா ஹாரிஸுக்கு எலான் மஸ்க் அழைப்பு விடுத்திருக்கிறார். இருப்பினும், கமலா ஹாரிஸ் இதில் இதில் கொள்வாரா என்பது சந்தேகம்தான் எனக் கூறப்படுகிறது. காரணம், கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக ஒரு நேர்காணலில்கூட அவர் கலந்துகொள்ளவில்லை.Musk - Trump Interview `ரஷ்ய, சீன, வட கொரிய அதிபர்கள் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள்!' - ட்ரம்ப்


http://dlvr.it/TBsTvn

Musk - Trump Interview `ரஷ்ய, சீன, வட கொரிய அதிபர்கள் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள்!' - ட்ரம்ப்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் முழுவீச்சில் நடந்துவருகிறது. ஜோ பைடன் தேர்தல் களத்திலிருந்து பின்வாங்கியதிலிருந்து, பிரசாரத்தின் வேகமும், வார்த்தைப் போர்களும் அதிகரித்திருக்கின்றன. கமலா ஹாரிஸுக்கு ஆதரவான சூழல் நிலவுவதாக கருத்துகணிப்பு முடிவுகள் வெளியானதிலிருந்து டொனால்ட் ட்ரம்ப், தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துவருகிறார். அதில் ஒன்றுதான் எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க்குடன் ட்ரம்ப் நடத்திய நேர்காணல்.பைடன் Vs ட்ரம்ப்?

இந்த நேர்காணலில், கமலா ஹாரிஸ், ஜோ பைடன் ஆகியோரின் நிர்வாக திறன் குறித்து, ட்ரம்ப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். நேர்காணலின் ஒருபகுதியில், ``ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் தங்கள் நாட்டின் சிறப்பான நிர்வாகத்தில் உச்சத்தில் இருக்கின்றனர். இந்த தலைவர்கள் சர்வாதிகாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இதுவும் அந்த தலைவர்களின் அன்பின் வேறு வடிவம். அவர்கள் அனைவரும் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள். எனவே, அவர்களை சமாளிக்கும்படியான வலுவான அதிபர் ஒருவர் அமெரிக்காவுக்கு தேவை.

ஜோ பைடன் தூங்கிக்கொண்டிருப்பவர். ஜோ பைடன் ஆட்சியில் இருந்திருக்காவிட்டால், ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமித்திருக்காது. நான் புதினுடன் நன்றாகப் பழகினேன். அவர் என்னை மதித்தார். நாங்கள் உக்ரைனைப் பற்றியும் பேசியிருக்கிறோம். உக்ரைன் புதினின் கண்ணின் மணி. உக்ரைன் மீது போர்தொடுக்க வேண்டாம் என நான் அவரிடம் கூறியிருக்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.Musk - Trump Interview: ``பைடன் தேர்தலிலிருந்து விலக்கப்பட்டது ஒரு சதி..!" - டொனால்ட் ட்ரம்ப்


http://dlvr.it/TBrm3p